இந்த உலகத்தில் ஏது கலாட்டா?
யானையும் மனுசனும் ஒரே நிறம்.
'கோட்டி வித்தலு கூட்டுக் குறக்கு'ன்னு எங்க பாட்டி சொல்வதுதான் நினைவுக்கு வருது.
கோடிக்கணக்கான வித்தைகள் செய்வது எல்லாம் சாப்பாட்டுக்காகத்தான் என்பது பொருள்.
தேரடி வீதி தேவதன்?
பதிவர் ஆகணுமுன்னு இப்படி ஒத்தைக்காலில் நின்னா எப்படி?
கிட்டே வந்தா போட்டுத் தள்ளிருவேனாக்கும். நானும் தமிழ்ப்படங்கள் பார்க்க ஆரம்பிச்சதால் வந்த வினை.
டப்பாவுலே டப்பு போடுங்கப்பா. நேரா அது என் தலைக்குள்ளே போயிரும்!
சீக்கிரம் பின்னூட்டுங்க. எவ்வளோ நேரம் இப்படியே நிக்கிறது?
எங்கே போறேனா? தங்கமரம் தேடி:-)
பட்டாம்பூச்சிகள்.
கடன் கொடுத்தவர் வரார். கொஞ்சநேரம் காணாமப் போகட்டா?
ஏங்க....தமிழ்மணத்துக்குப் போகும் வழி இதா?
அதோ அங்கேபோய்க் கேளுங்க.
காலங்காலமாய்க் காத்திருந்ததுக்கு இப்பத்தான் சைக்கிள் சவாரி கிடைச்சது.
கால் வலிக்குதுப்பா. கொஞ்சம் உக்காந்துக்கவா?
பார்ஸிலோனா நகரில் படங்களை எடுத்தவர் நம்ம பதிவர் பயிற்சிப் பள்ளியின் புது மாணவர்.:-))))