Friday, February 09, 2024

பேய் பிசாசையும் விட்டுவைக்கறதில்லையாக்கும் !

நம்மூர்லே இருந்தால் உள்ளூர் விழாக்கள் மட்டும்தானே நமக்கு?  இப்படி வெளியே வந்துட்டோமுன்னால்  ஒரு சில விழாக்களில் நமக்கும் ஒரு ஈடுபாடு வந்துருதுல்லே.....  ஊரோடு ஒத்துவாழ்ன்னு சும்மாவாச் சொல்லி வச்சுருக்காங்க நம் முன்னோர்கள் ?  
வீட்டுக்கு இப்படின்னா நாட்டுக்கும் இப்படி ஆகிவருது. எதுக்கெடுத்தாலும் க்ளோபல்னு....அக்டோபர் மாசக்கடைசின்னா..... பேய் பிசாசுகளுக்கெல்லாம் கொண்டாட்டமாம்!   அமெரிக்கப் பண்டிகை இப்போ உலகின் தென்கோடிவரை வந்ததுக்கு என்ன காரணமுன்னா.... காசு பணம் துட்டு ! வியாபாரத் தந்திரம்!

கடைகளில் எல்லாம்  கிறிஸ்மஸ் கொண்டாட்டத்துக்கான சமாச்சாரங்கள் ஒருபக்கமுன்னா....  பேய் பிசாசு ஐட்டங்கள் இன்னொரு பக்கம் குமிஞ்சு கிடக்கு!

நம்ம வீட்டிலும் குழந்தைகள் இருக்கும்போது கொண்டாடாமல் இருக்கலாமோ ?
1.2 KM நீளத்தில் 120+ வீடுகள், ஒரு ஹைஸ்கூல், ஒரு ஸீனியர் சிட்டிஸன்ஸ் ஹோம், ஒரு ஸ்போர்ட்ஸ் க்ரௌண்ட், ஒரு Bபேலே ஸ்கூல்னு இருக்கும் நம்ம தெருவில் கிறிஸ்மஸ் காலத்தில் அலங்கார  விளக்குகள் போட்டு வைக்கிறது எனக்குத் தெரிஞ்சு ரெண்டே வீடுகள்தான்.  நாம் இங்கே  இந்த வீட்டுக்கு வந்த சில வருஷங்களில் அந்த இன்னொருத்தரும் வீட்டை வித்துட்டுப்போயிட்டாங்க.  
இனி அலங்காரவிளக்குக்கு அத்தாரிட்டியா இருப்பது ஒரே ஒரு வீடுதான்.  அந்த வீட்டிலும் க்றிஸ்மஸ் மட்டுமில்லாமல்,  வருஷத்துக்கு நூத்துக்கணக்ககில் (ச்சும்மா ஒரு பேச்சுக்குத்தான் ஹிஹி )  பண்டிகை கொண்டாடும் மக்கள்  இருப்பதால், ஆன்னா ஊன்னா.... ஒரு அலங்கார விளக்கைப் போட்டுருவாங்க :-) இதுக்காகவே ஒரு ஜன்னல் தொகுப்புக்கு  விளக்குச் சரத்தை நிரந்தரமாப் போட்டு வச்சுருக்காங்கன்னு சொன்னா..... அது யாருன்னு உங்களுக்கு இன்னுமாத் தெரியாம இருக்கும் ?
இப்ப சிலவருஷங்களா எதிர்வீட்டுக்கு வந்தவர், வீட்டு வாசலில் கொடிமரம் நட்டுவச்சு நிரந்தரமா ஒரு  அமைப்பும் செஞ்சுருக்கார். பில்போர்டு மாதிரின்னு வச்சுக்கலாம்.  அதிலும்  மதரீதியான பண்டிகைகள் எதுவும் இருக்காது. அவர் ஆதரிக்கும் சமாச்சாரம் சொல்லும் கொடி அப்பப்ப பறக்கும். இப்பப் பறக்கும் கொடி இது !  அவரவருக்கு அவரவர் நியாயம், இல்லையோ !!!!  
பேய் பிசாசு விழா வர்றதுக்கு ஒரு மாசம் இருக்கும்போதே.... கட்டியம் கூறுவதைப்போல 'பேய் சமீபிச்சுக்கிட்டு இருக்கு' என்னும் விளம்பரமும், பதாகையும்  போட்டு வச்சுருவாரு.  கூடவே இதுக்கான அலங்காரத்தையும்  கொஞ்சம் கொஞ்சமாச் செய்யத்தொடங்கிருவாரு.
நம்ம வீட்டில் விழாநாளில்  வெளியே  'பேய்க்காத்து' இல்லைன்னா மட்டும்  ஜன்னு கொஞ்ச நேரம்  பேய் வேஷம் போட்டுக்கிட்டுப் போய் நிற்பாள். 
விழா நாளில் பேய் அலங்காரத்துக்கு என்னென்ன  சமாச்சாரங்கள் வீட்டுலே இருக்குன்னு எடுத்துப் பார்த்துக்கிட்டு இருந்தாள்.  புதுசா ஏதாவது வாங்கணுமா, இல்லை இருப்பதே போதுமான்னு இன்னும் முடிவு பண்ணலை.  நேத்துதான் ஒரு   சத்தம் போடும் பூசணிக்காய் விளக்கு  வாங்கிவந்திருந்தோம். 
எதிர்வீட்டில்   அலங்காரங்கள் எல்லாம் பூர்த்தி ! உச்சியில் பிசாசு ஆடிக்கிட்டு இருக்கு !
நம்ம கொலு சமயத்தில்,  கவுன்ஸிலராக (உள்ளூர் சிட்டிக்கவுன்ஸில் ) இருக்கும் தோழி வந்து போனாங்கன்னு சொல்லியிருந்தேனில்லையா...  அவுங்க ஒரு பத்திரிகை நிருபருக்கு  நம்ம வீடு பத்திச் சொல்லியிருந்தாங்கன்னு அந்த நிருபர் ஒரு நாள்  நம்மை செல்லில் கூப்பிட்டு, என்றைக்கு வரலாமுன்னு கேட்டு, இன்று வர்றதுன்னு  முடிவாகி இருந்தது. 

  'த இண்டியன் வீக்கெண்டர்'னு பத்திரிகைக்குப் பெயர்.  சொன்ன நேரத்துக்கு நம்ம ஊருக்கான நிருபர் , மஹேஷ் வந்துட்டார்.
அன்றைக்கு  ஹாலோவீன் ஸ்பெஷலா நம்ம பெருமாளுக்கு 'ஸ்பூக்கி ஹல்வா' தான் நைவேத்யம் . வீட்டுக்குள் வந்ததும்  கொஞ்சம் ப்ரமிச்சது கண்ணில் தெரிஞ்சது.   நம்ம நியூஸி 'சரித்திரத்தை'க் கேள்விகளாக் கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டார். கூடவே நிறைய க்ளிக்ஸ். 

எல்லோருமா ரோடைக் கடந்து எதிர்வீட்டுக்குப் போனோம். நாங்களுமே முதல்முறையாத்தான்  அவுங்க காம்பவுண்டுக்குள் போறோம்.  வழியெங்கும்  பழுத்துக்கிடக்கும் பூசணிக்காய்கள்,  எலும்புக்கூடுகள் னு அட்டகாசமா இருக்கு !


கதவைத்தட்டினதும்,  முட்டாய்வாளியோடு கதவைத் திறந்தவருக்கு  ஒரே வியப்பு!  வழக்கமா வெளிவாசலில் பார்க்கும்போது ஹலோ சொல்லும் மக்கள் வீட்டுவாசலில் நின்னால் ..............  !    மஹேஷை அறிமுகம் செஞ்சுட்டு, அலங்காரங்களைப் பார்த்துட்டு கொஞ்சம் க்ளிக்கிட்டு வந்தோம்.  நம்ம வாசலில் அலங்காரம் வைக்கலையான்னார்.  ரொம்பக் காத்து. குழந்தை விழுந்துருவாள்னு  சொன்னேன்.  அப்பதான் ட்ரிக் ஆர் ட்ரீட்க்கு ரெண்டு பேய்கள் வந்தன.
ஒரு தனிமனுஷனா இவ்ளோ அலங்காரத்தைச் சோம்பல் படாமல் செஞ்சது பாராட்டப்படவேண்டியதுதான் ! 
மனசை உற்சாகப்படுத்திக்க இப்படி சிலபல விழாக்கள் தேவையாத்தான் இருக்குல்லே !

PIN குறிப்பு: 

ரெண்டு வாரம் கழிச்சு பத்திரிகையில்  NewZealand the Tamil couple building a cultural treasure trove  என்ற தலைப்பில் ஒரு  கட்டுரை நிறையப்படங்களோடு வந்தது.  அதுக்கப்புறம் நிறையப்பேர் அதைப் பார்த்துட்டு நம்மாண்டை சொன்னாங்க. ஊஞ்சலாப் போட்டுருக்கீங்கன்னு ஆச்சரியம் வேற !   என்ன ஒன்னு....  அவர் அனுப்பிய லிங்கை நாந்தான்  அதை உடனுக்குடன்  டவுன்லோடு  செய்யாம விட்டுட்டேன்.  ஃபிஸிக்கல் பேப்பரைக்கூட  எடுத்துவைக்க மறந்துட்டேன். ப்ச்....

10 comments:

said...

Don’t worry. https://indianweekenderlive.azurewebsites.net/Pages/ArticleDetails/7/22806/new-zealand/the-tamil-couple-building-a-cultural-treasure-trove This is the link for the article in Indian Weekender Live - Viswanathan

said...

அடடே...  விசேஷம்!  அதுசரி, எதிர்வீட்டுக்காரர் போட்டோ போடவில்லையே...   திரு விஸ்வநாதன் தந்துள்ள லிங்க் மூலம் சென்று அக்கட்டுரையும் பார்த்தேன்.  அதில் உங்கள் படம் போடவில்லையே...!

said...

வாங்க விஸ்வநாதன்,

மிகவும் நன்றி !

said...

வாங்க ஸ்ரீராம்,

நம்ம கீதாப்ரியன் கார்த்திகேயன் வாசுதேவன் அனுப்பிய சுட்டி முகப்பில் ஊஞ்சல் படம் வந்துருக்கே !

இதுதான் அந்தச் சுட்டி,

வேலை செய்யுதான்னு பாருங்க

https://indianweekenderlive.azurewebsites.net/Pages/ArticleDetails/7/22806/new-zealand/the-tamil-couple-building-a-cultural-treasure-trove?fbclid=IwAR0LqXqyb3CYReuJtfqg8dmxXoKgwOIBu2PMVx4GFOhz9VgttuajsiUxVu0

said...

இந்தப் பக்கத்துக்குதான் சென்றேன்.  மொழு படங்கள் இரண்டு இருக்கின்றன.  முகப்புப் படம் என்னும் முதல் படம் எவ்வளவு நேரம் காத்திருந்தும் திறக்கவில்லை போலும்!

said...


//மொழு படங்கள் இரண்டு இருக்கின்றன. //

மன்னிக்கவும்.  தூக்கக்கலக்கம்!  கொலு படங்கள் என்று படிக்கவும்!

said...

ஆஹா... கொண்டாட்டங்கள் நிறைந்த வாழ்க்கை மனதுக்கு நிம்மதி தருபவை. உங்கள் கொண்ட்டாட்டங்கள் தொடரட்டும்.

முதல் கருத்துரையில் இருக்கும் சுட்டி வழிச் சென்று படித்தேன். சிறப்பாக எழுதி இருக்கிறார். வாழ்த்துகள்.

தொடரட்டும் பதிவுகள்.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

மனநிம்மதிக்காகவே கொண்டாட்டங்கள் ஏற்பட்டவை என்றாலும், பல சமயங்களில் மன அழுத்தத்துக்கும் இவையே காரணமாகவும் ஆகிவிடுகின்றனவே......

நம்மால் முடிஞ்ச அளவு கொண்டாடினால் போதும் என்ற மனநிலை அமைவது முக்கியம், இல்லையோ !

மஹேஷுக்கு இங்கேயும் நன்றி சொல்லிக்கறேன் !

said...

பத்திரிகை கட்டுரை நன்றாக இருக்கிறது பாராட்டுகள்.

கலோவின் விழா எங்கும் களைகட்டுகிறது.

said...

வாங்க மாதேவி,

நன்றிப்பா !