Friday, February 16, 2024

திவாலி # 2

வருஷா வருஷம் தீபாவளி இந்தியாவில் கொண்டாடறதுக்கு முன்னேயே,(ஒரு ரெண்டு , ரெண்டரை வாரத்துக்கு முன்னாலேயே)  நியூஸியில் நாங்க கொண்டாட ஆரம்பிச்சுருவோம். இருக்கும் ஆயிரத்தெட்டு க்ளப்புகளில் ஆயிரத்தெட்டு தீவாலி ! ஒரு வருஷம் பதிமூணு முறை கொண்டாட வேண்டியதாப் போச்சு. பதிமூணு புதுப்புடவைகள் இல்லாம நான் பட்ட கஷ்டம், எனக்குத்தான் தெரியும்! ஹூம்............ :-)
இப்போ 2023 நவராத்ரியில் முதல் தீவாலி ஆச்சா... இன்றைக்கு ரெண்டாம் தீவாலிக்குப் போறோம்.  இடம் அதே லைப்ரரி ஹால்தான். நம்ம சநாதன் தரம் ப்ரதிநிதி சபாவின் கொண்டாட்டம்.  இன்று வெள்ளிக்கிழமையா இருந்ததால்  (வேலைநாள் ) சாயங்காலம்  ஆறரைக்கு விழா ஆரம்பம்.
பொதுவா ஃபிஜி இந்தியர்களின் விழாக்கள் எல்லாமே  அனைவரும் வருக என்ற வகைதான். முற்றிலும் இலவசமே ஒரு சிலவற்றைத் தவிர.  அவை உள்ளூர் கோவில், ஃபிஜியில் இயற்கை அழிவு ஏற்பட்டால் ( வருஷத்துக்கு ரெண்டு புயல் கேரண்டீ ) அங்கே உதவும் வகை என்பதற்கான  நிதி வசூலாக  இருக்கும். அதுவும் எப்பவாவதுதான்.
விழாவுக்குப் போனோம் என்றால்  உள்ளே போனதும்  சில நொறுக்குஸ் &  டீ , ஜூஸ். மேடை நிகழ்ச்சிகள் முடிவடையும் போதே  டின்னர் ரெடியாகிரும்.  தட்டில் எடுத்துவந்து சாப்பிட்டுக்கிட்டே கூடப் பார்க்கலாம். ரொம்ப ஃபார்மாலிட்டி எல்லாம் கிடையாது.

மேடை நிகழ்ச்சிகளில்  பஜன், நடனம் (எல்லாம் சினிமாப் பாட்டுக்குத்தான்)என்று அமர்க்களப்படுத்திருவாங்க. ஃபிஜி போனபுதிதில் இந்த மாதிரி சினிமாப்பாட்டுக்கு ஆடும் நடனத்தைப் பார்க்க எனக்குப் பிடிக்கவே பிடிக்காது.  சம்ப்ரதாய நடனங்களின் ரசிகை நான்.  இப்பெல்லாம் மனசுலே பொறுமை கூடிப்போச்சு.  இந்தியா எங்கேயோ... ஃபிஜி எங்கேயோ......   விட்டுவந்த நாட்டுடன் மக்களுக்குத் தொடர்பே சினிமா மூலம்தான் என்பதே உண்மை! 

இப்ப  இங்கே நடனப்பள்ளிகள்  ஆரம்பிச்சதால்  சம்ப்ரதாய நடனங்களையும் கத்துக்கச் சான்ஸ் கிடைச்சிருக்கு நம்ம பிள்ளைகளுக்கு !
கலைஞர்கள் எண்ணிக்கை குறைவு என்பதால்  கலைநிகழ்ச்சிகளில் பங்கெடுப்பவர்களுக்கு  டிமாண்ட் அதிகம்.  எல்லா க்ளப்பும்  'எங்கள் நிகழ்ச்சியில் ஆடுங்க'ன்னு எல்லோரையும் வேண்டுவதால்.... ஒரு சீஸனில் ஆடும்  ஒரு நடனத்தைப் பல  மேடைகளில் பார்க்கும்படி இருக்கும். போயிட்டுப்போகுதுன்னு இருக்க வேண்டியதுதான், இல்லையோ ?ஆனால் ஒன்னு... ரொம்ப ஆர்வமா அலங்காரம் செஞ்சுக்கிட்டு ஆடுவாங்க பசங்க.  அப்பப்ப ட்ரெஸ் சேஞ்ச்  முக்கியம் !

இன்றைய தீவாலி விழாவில்  நம்ம சநாதன் சபா பண்டிட் திரு ரூப் ப்ரகாஷ் அவர்கள்  எல்லோரையும் வரவேற்று வாழ்த்தி நிகழ்ச்சியைத் தொடங்கி வச்சார்.  பஜனைப்பாடலுடன்,  லக்ஷ்மிக்கு ஆரத்தி ! இங்குள்ள  நம்ம ஃபிஜி இந்தியர்களில் மூத்தவரான  கமலாம்மா அவர்கள் முதலில் ஆரத்தி எடுத்தாங்க. இவுங்க நல்லா அதிரசம் செய்வாங்க !  ஒரு சமயம் செஞ்சு எனக்கும் 'ஊர்க்காரி தின்னு பார்த்துட்டுத் தீர்ப்பு சொல்லட்டும்'னு அனுப்புனாங்க ! 



ஜய் பவானி ம்யூஸிகல் க்ரூப், க்றைஸ்ட்சர்ச் சத்சங் பாய்ஸ் என்றெல்லாம்  டீ ஷர்ட்லே ப்ரிண்ட் போட்டு, யூனிஃபார்ம் அணிஞ்ச குழுக்களா மேடையில்  பஜனை !  வேற வேற ஆட்கள் இல்லையாக்கும்.  இவுங்களேதான் எல்லாமே ! யஹாங் ஸே வஹாங், வஹாங் ஸே யஹாங்தான் ! 

ரஜ்நீல் நாராயண் என்ற  இளைஞர்  ரொம்ப நல்லாவே நடனம் ஆடுறார்.  நீங்க பார்க்கணுமுன்னா கீழே சுட்டியில்....

https://www.facebook.com/1309695969/videos/24281760811469251/

சின்னப்பெண்கள் நடனங்களும்  அருமை. நம்ம மிஷலின் நடனமும் இல்லாமலா !!!

நேடிவ் ஃபிஜி பாய்ஸின்  பாரம்பரிய நடனமும் இருந்தது.  இங்கே நம்மூரில் முதல்முறையாகப் பார்த்தேன்.

https://www.facebook.com/1309695969/videos/1492999858190801/

விழாக்கள் என்றாலே ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம்தானே !  பெரியவர்களும்    முன்னால் போய் கொஞ்சநேரம் ஆடிட்டு வருவாங்கதான். 


மொத்த நிகழ்ச்சியும் நல்லாவே இருந்துச்சு. இதற்குப்பின்னால்  எத்தனை பேரின் உழைப்பு இருக்குன்னு நினைக்கும்போதே  பாராட்டும் மனசு இயல்பாக வந்துருதுல்லே !  நம்ம தமிழ்ச்சங்க கலைகலாச்சாரப் பொறுப்பாளரா பதிமூணு வருஷம் செயல்பட்ட அனுபவம் நமக்கிருக்கே !



6 comments:

said...

தீபாவளியை இப்படி எல்லாம் கூட கொண்டாடலாமா?!

said...

தீபாவளி கொண்டாட்டங்கள் வெவ்வேறு கலாச்சார மக்களின் நடனம் என அனைத்தும் சிறப்பாக நடப்பது அருமை.

பதின்மூன்று புதுச்சேலை.......ஹா....ஹா.

விழாக்கள் .....சிறப்பாக நடக்கட்டும்.

said...

திவாலி/தீபாவளி கொண்டாட்டங்கள் அனைத்தும் நன்று. இப்படியான கொண்டாட்டங்கள் தேவை தான் என்றாலும், அதிகமாக ஆனால் சற்றே சிரமம் தான்.

said...

வாங்க ஸ்ரீராம்,

இதுக்கே ஆச்சரியப்பட்டால் எப்படி ? இன்னும் விதவிதமாகக் கொண்டாடலாமே !

said...

வாங்க மாதேவி,

மனிதனின் மகிழ்ச்சிக்குத்தானே கொண்டாட்டங்கள் ! அதை முழுவதுமாகப் பயன்படுத்திக்கிறோம்ப்பா !

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

உண்மையை உரக்கச் சொன்னீர்கள் ! சின்ன சமூகமா இருப்பதால், அவரவர் அவர்வழின்னுதான் இருக்கு ! எல்லாத்துக்கும் போகவும் நம்மால் இயலாதுதான், என்றாலும் மூத்ததலை என்பதால் போய்த் தலையைக் காமிச்சுதான் ஆகணும்.