Friday, February 23, 2024

விடாது இந்த திவாலி........

இங்கே க்றிஸ்மஸ் கொண்டாட்டங்கள் கூட   நவம்பர் மாசமே ஆரம்பிச்சுரும்.  பண்டிகைக்குச்  சர்ச்சுக்குப் போறாங்களோ இல்லையோ.... பார்ட்டி பார்ட்டின்னு க்றிஸ்மஸ் பார்ட்டிகளா  நடந்துக்கிட்டு இருக்கும். நம்மவர் வேலையில் இருந்தப்ப .... ஆஃபீஸ் பார்ட்டின்னே ஒரு ஏழெட்டு இருக்கும். மொத்தமாக் கொண்டாடப்டாதா?  ஒவ்வொரு டிபார்ட்மென்டுக்கும் தனித்தனியா..... அப்புறம் க்றிஸ்மஸ் & கோடை விடுமுறைன்னு  கடைசியா ஒன்னு.....  
இதே நிலைதான் இந்த தீபாவளிப் பண்டிகைக்கும் ! வீக்கெண்ட் வந்தால் விழா!
இந்த வீகெண்ட் முடிஞ்சுருச்சு. இனி அஞ்சு நாட்கள் நம்ம வேலைகளைப் பார்க்கணும்.




இதோ வசந்தகாலத்தின் கடைசி மாசம் நவம்பர் என்பதால்  செடிகொடிகள் எல்லாம் ரொம்பவே சந்தோஷமா இருக்காப்ல எனக்கொரு தோணல். அந்த சந்தோஷம் கொடுக்க , நாம் நம் உழைப்பைக் கொஞ்சம் தரணும். புதுசா ஒன்னும் செடிகள் வாங்கிக்கலை.  இருப்பதைப் பார்த்துக்கிட்டாலே போதும்.  சீஸன் முடிஞ்சாட்டு, ரூத்லெஸ்ஸா இருக்கப்போறேன்.  தோட்டச் சீரமைப்பு செஞ்சாகணும்.  வீடு முழுக்க ஒரே வீடு !



மகளும் பேரனும் வந்தாங்க. நம்மவன் உடனே மூஞ்சைத்தூக்கி வச்சுக்கிட்டான்.  அவுங்க கிளம்பும்போது எட்டிப் பார்த்தான்.  மகள் தூக்கினதும் கொஞ்சம் சமாதானமாச்சு. 
நான் என்ன வேலை செய்தாலும்  உடனே அதை எப்படியாவது தடுக்க நினைக்கிறான் போல.  புடவை முந்தானைக்கு சுஷ்ருஷை செய்யலாமுன்னு எடுத்தால்  அதில் படுத்துக் குறட்டை விட்டால் நான் என்ன செய்ய ? 

லுக் ஷார்ப்னு  இங்கே ஒரு கடை இருக்கு.  முக்கியமா பார்ட்டி சம்பந்தப்பட்ட சமாச்சாரங்களே ! சின்னச்சின்ன  க்ராஃப்ட்  வேலைகளுக்கான அலங்காரப்பொருட்களும் கிடைக்கும். என்னோட ஃபேவரிட் கடையா இதை  ஆக்கியாச்சு.  ஒருநாள் வேற வேலையா அந்தப் பக்கம் போனவள்,   'கவனமாப் பார்க்க'  இதுக்குள் போனால்.... 

க்றிஸ்மஸ்ஸுக்கான சமாச்சாரங்கள்  ஒருபக்கம் குமிஞ்சு கிடக்க, நம்ம தீபாவளி விழாவுக்கான  அலங்கார விளக்குகள், தோரணங்கள்,   பார்ட்டிக்கான  தட்டுமுட்டு சாமான்னு இருக்கு!   இந்த 36 வருஷத்துலே முதல்முறையா இப்படிப் பார்த்ததும்  விடமுடியுமா ?  பேரனுக்குத் தலைதீபாவளி வேற !  ஆனா ச்சும்மாச் சொல்லக்கூடாது..... சீனர்களுக்குத்தான் நம்மேல் எவ்ளோ அன்பு !!!! சிந்திச்சுச் சிந்திச்சு நமக்காக உழைக்கிறாங்க, இல்லே!!!! 
உள்ளுர் நண்பர் வீட்டுக்குக் கொலு பார்க்கப்போனப்ப, அந்த கொலுப்படிகள் நல்லா இருக்கேன்னு விவரம் கேட்டுட்டு வந்தேன்.  கிரியில் வாங்கியதாம். வலையில் பார்த்தப்ப நல்லாதான் இருக்கு. இப்பதான் நமக்குக் கொஞ்சம் பெரிய பொம்மைகள் வந்துருக்கே...... நம்ம வீட்டுக் குட்டிக் கொலுப்படிகளில் நிக்க வைக்க முடியாதுதான்.  அதான் எப்படி வரவழைக்கணுமுன்னும் தெரிஞ்சுபோச்சே. அப்பப்பக் கொஞ்சம் வாங்காமயா இருக்கப்போறோம் ?  மெட்ராஸ் கொலு டால்ஸ் நினைவு வச்சுக்கணும்.

வலையில் நீள அகல உயர விவரங்கள் எல்லாமும் கொடுத்துருக்காங்கன்னு  அந்த அளவு நமக்குச் சரிப்படுமான்னு  பார்த்தேன்.  ஒன்பது படிகள்தான் லக்ஷியம். ஆனால் ஸீலிங் வரை போகுது.  ஏழே இருக்கட்டுமுன்னு முடிவு செஞ்சுக்கிட்டு, குடும்ப நண்பரிடம்  கொஞ்சம் விசாரிக்கச் சொன்னதும், அவர் போய்ப் பார்த்துட்டு நல்லாவே இருக்குன்னார்.  வாங்கி அனுப்பறேன்னு வாங்கி ரெண்டு பொட்டிகளில் நிரப்பியும்  அனுப்பிட்டார்.   பொட்டிகளும் பத்திரமா வந்து சேர்ந்தன.கஸ்டம்ஸ்லே பிரிச்சுப் பார்த்துட்டு அனுப்பியிருக்காங்க.  எதுக்குன்னு தலையைப் பிச்சுக்கிட்டாங்கன்னு நினைக்கிறேன் :-)
ஒரு பொட்டியைத் திறந்து பார்த்தால்..... மஹாலக்ஷ்மியும் ஆண்டாள் கிளியும், நம்ம சுஜாதா தேசிகனின் திருப்பாவை புத்தகமாய், தீபாவளிப் பரிசுகளை நண்பர் அனுப்பி இருந்தார். இன்னொரு பொட்டியைத் திறக்க நல்ல நேரம் கிடைக்கலை.




வீட்டுக்கு வந்த மஹாலக்ஷ்மியைக் கொஞ்சூண்டு அலங்கரிச்சு,  நைவேத்யமா, நமக்காகி வந்த கேஸரி !


உள்ளூர்தோழி ஒருவர் புடவை வியாபாரம் ஆரம்பிச்சுருக்காங்க. 'ஊக்குவித்தல் நம் கடமை'ன்னு ஒரு புடவை வாங்கினேன். அப்படியே  குட்டனுக்கும் ஒரு ராம்ராஜ் வேஷ்டி & சட்டை செட்.  மறுநாள் எங்க யோகா வகுப்பில் திவாலி கொண்டாடறோம்.  முக்கிய பண்டிகைகளைக் கொண்டாடாமல் விடமாட்டோமே ! ஆளாளுக்கு ஒரு பலகாரம் கொண்டு போனால்  விழா அமர்க்களமாக  அமைஞ்சுறதா என்ன ? 



ஐ டிக்ளேர் த  திவாலி செலிப்ரேஷன் ஒப்பன் !!!!




புதுப்புடவையுடன், அலங்கார விளக்கையும் கொண்டுபோய்க் கொண்டாடியாச்சு :-)   கர்பா ஆட்டமும், பாட்டமும் இல்லாமலா ! 

4 comments:

said...

மகாலக்ஷமி, திருப்பாவை இரண்டும் இல்லம் வந்துவிட்டார்கள் மங்களகரமாக இருந்திருக்கும்.

புதுப்புட வையும் படங்களும் அழகு. நல்ல தீபாவளிக் கொண்டாட்டம்.

said...

ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் - தொடரட்டும் திருவிழா கொண்டாட்டங்கள்.

said...

வாங்க மாதேவி,

மஹாலக்ஷ்மி, ஆண்டாள் கிளியோடு வந்துட்டாள்னு சந்தோஷமாக இருந்ததுப்பா !

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

தொடர்ந்து கிட்டேதான் இருக்கு ! நானும் அவைகளைப் பதிஞ்சுக்கிட்டேதான் இருக்கேன் :-)