Wednesday, April 22, 2020

வாவ்.... வாட் அ ப்ளஸன்ட் சர்ப்ரைஸ் !!! (பயணத்தொடர் 2020 பகுதி 42 )

ஜாலியாக் கிளி போன பாதையில்....  நாமும் போவோமுன்னு எதிர்பார்க்கலை.... என்ன ஒன்னு கிளி போனது இப்படி.....

அப்ப  நாம்.... போனதோ......

ம்யூஸியத்துலே இருந்து கிளம்பி  வண்டிக்குள் நுழைஞ்சவுடன் செஞ்ச முதல்வேலை பவர் பேங்கை எடுத்து செல்லுக்கு உயிர் கொடுத்ததே !  பைக்குள் இருந்த கெமெராவும் வெளியில் வந்தது.   ஒரு  காமணியில் படகுத்துறைக்கு வந்திருந்தோம்.
நைல்நதி அதுபாட்டுக்கு நகரத்துக்குள்ளே நீண்டு போய்க்கிட்டு இருக்குது  பாருங்க. அதுலே அங்கங்கே இப்படிப் படித்துறைகள்  இருக்கு.

 இந்தப் படகுப்பயணமும் நம்ம டூரில் சேர்ந்தே இருக்கு என்பதால்....  ரெய்னா போய், அங்கே இருக்கும் ஒரு நபரிடம்  எந்தப் படகுன்னு விசாரிச்சுக்கிட்டு வந்தாங்க. இவுங்க டூர் கம்பெனி அவுங்க  வாடிக்கையாளர்களில் ஒன்னு !



போய்ப் படகில் ஏறினோம். பாய்மரப்படகு. படகுக்காரர் பெயர்  அலி.  நாம் போய் உக்கார்ந்ததும்  படகை மெல்ல நகர்த்தியதும் பாயை விரிக்க ஆரம்பித்தார்.....  'அதோ அந்தப் பறவை போல வாழவேண்டும்.... லலா லா.... லா  ' மனசுதான் பாட்டை எடுத்துவிடுது :-)

நம்ம சீனப்பயணத்துலே  பேலஸ் டூர் போனப்ப, அழகழகான படகுகள் இருந்தனதான். ஆனால் அதுலே போக பெரிய க்யூ இருந்ததால் போகலை. அங்கே போகாததை....  இங்கெ  ஈடுகட்டியாச்சு.
மூணு பக்கங்களிலும் இருக்கைகள் போட்டு நடுவில் ஒரு மேஜையுமா நல்லாத்தான் இருக்கு.  ஆளுக்கொருபக்கம் உக்கார்ந்தாச் :-)
படகின்  முன்பக்கத்துக்குப் போயிட்டார் அலி.  மெள்ள நதியில் போய்க்கிட்டு இருக்கோம். இயற்கைக் காட்சிகளா ஒன்னும் இல்லை....  ரெண்டு கரைகளிலும் இருக்கும் கட்டடங்கள் (அதுலே நம்ம ஹொட்டேலும் ஒன்னு ) நதியில் போகும் மற்ற படகுகள் இப்படித்தான்.







ஆனாலும்  நல்ல இதமான காற்று !  எதையும் ஆழமாச் சிந்திச்சு மண்டையை உடைச்சுக்காம , நிம்மதியா வேடிக்கை பார்த்துக்கிட்டே  க்ளிக்ஸும் ஆச்சு.  ஒரு அரைமணி நேரம் உல்லாசமாச் சுத்திட்டு, படகுத்துறைக்குக் கொண்டு வந்து சேர்த்தார் அலி.  நன்றி சொல்லிட்டுக் கொஞ்சம் டிப்ஸும்  கொடுத்துட்டுக் கிளம்பினோம்.




படியேறி மேலே சாலைக்குப் போனால் குதிரை வண்டி ஒன்னு. பயணிகள்  ஜட்கா சவாரி செய்யலாம்.  ஆனால் நாம் போகலை. வண்டி   பார்க்க நல்லாவே இருக்கு!
நாலரைக்கு ஹொட்டேலுக்கு வந்துட்டோம்.   அஞ்சே காலுக்குத் திரும்பக் கிளம்பணுமாம்.  அஸீஸ் வந்து கூட்டிப்போவாராம்.   மறுநாளைக்கான  ஏற்பாடுகள் என்னன்னு ரெய்னா சொல்லிட்டு அவுங்களும்  வீட்டுக்குக் கிளம்பினாங்க.  பொதுவா ராத்திரி நேரத்தில் பெண்கைடுகள் வேலை செய்யறதில்லை. அதனால் மாற்று ஏற்பாடுகள் செஞ்சுருது  டூர் கம்பெனி.

நாங்களும் அறைக்குப்போய்  முக்கிய வேலையைச் செஞ்சோம். என்ன....  செல், கெமெரா எல்லாத்தையும் சார்ஜ் பண்ணறதை விட வேறென்ன முக்கியம் சொல்லுங்க :-)

கொஞ்சம் ஓய்வு, 'நம்மவர்' தயாரிக்கும் காஃபியைக் குடிப்பதுன்னு இதர வேலைகள்.


நாலரைக்கே சூரியன் மறைய ஆரம்பிக்குது. குளிர்காலம் இல்லையோ !   தகதகன்னு இருந்த ஜொலிப்பெல்லாம் போய்  வானம் மட்டுமே  ஆரஞ்சு....

இதுகூட அழகுதான் இல்லே?

நைல்நதிப் பாலத்துலே ட்ராஃபிக் ஆரம்பிச்சுருச்சு.....

அஞ்சு பத்துக்குக் கிளம்பிக் கீழே போனோம். அஸீஸ் காத்துக்கிட்டு இருந்தார்  லாபியில்!

போலாமா ?

தொடரும்....... :-)


10 comments:

said...

நைல் ந்தி படகுப் பயணம் அழகுதான். துபாய் க்ரீக் படகுப் பயணம் போல இருக்கும் போலிருக்கு... (நைல் ந்தி அகலமாக இருந்திருக்கும்)

said...

அருமை நன்றி

said...

படகுப் பயணம் அழகு.

said...

அனைத்தும் இயந்திரமாகிப் போன இந்த காலகட்டத்திலும் பாய்மரபடகு இருக்கிறதா? ஆச்சரியமாக இருக்கிறது... நன்றி !!! >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

said...

நைல் நதியில் படகுப் பயணம் - ஆஹா... இந்தியாவில் என் பயணங்களில் இப்படிப் படகுப் பயணங்கள் அமைந்தது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம்.

தொடரட்டும் பயணம். நானும் தொடர்கிறேன்.

said...

வாங்க நெல்லைத்தமிழன்,

நல்ல அகலம்தான். நாம் போன பகுதியில் கிட்டத்தட்ட ரெண்டு கிமீ அகலம் !

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !

said...

வாங்க மாதேவி,

அருமையாத்தான் இருந்ததுப்பா !

said...

வாங்க சிவா,

எல்லாம் டூரிஸ்ட் அட்ராக்‌ஷன்தான்.

நாம் ஃபிஜியில் இருந்த காலத்தில் பக்கத்தில் இருந்த தீவுக்கு எக்ஸ்கர்ஷன் போய்வர பெரிய பாய்மரக்கப்பல் பயணம் செஞ்சுருக்கோம்.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

உங்க அனுபவங்கள் கணக்கில்லாதவைகளாச்சே ! சமீபத்து அந்தமான் பயணங்களை ரொம்பவே ரசிச்சு வாசிச்சேன் !