Wednesday, April 08, 2020

பேட்டை சுற்றல் ! (பயணத்தொடர் 2020 பகுதி 37 )

இந்த பெரிய பிரமிட் இருக்கும் ஊருக்குப் பெயரே Giza  தான்.  இங்கேயே நல்ல நல்ல ஹொட்டேல்ஸ் இருக்கு.  பிரமிட் வியூ இருக்குன்னே விளம்பரப்படுத்தி இருக்காங்க.  முதலில் எனக்கு இந்த ஊரில் தங்க ஆசையாத்தான் இருந்தது. காலையில் பிரமிடு முகத்தில்  கண் விழிக்கலாமே!
'நம்மவர்'தான்  ப்ராக்டிக்கலா இருக்கணும்.  வெறும் பிரமிட் மட்டும் பார்க்கணுமுன்னா இது ஓக்கே. மத்த இடங்களையும் கொஞ்சம் சுத்திப் பார்த்துட்டுப் போகணுமுன்னா சிட்டிக்குள்ளே தங்குவது பெட்டர்னு ட்டார். சரி... போகட்டும்....
பகல் ரெண்டு மணியாகுது. போய் லஞ்ச் முடிச்சுக்கலாமுன்னதும்  அங்கே அதே ஏரியாவில் இருக்கும் ரெஸ்ட்டாரண்ட்க்குப் போனோம்.  ஒரே ஒரு கண்டிஷன்தான் ஓரளவுக்கு நல்ல ரெஸ்ட் ரூம்.  அடிஷனல் பாய்ன்ட்டா வெஜிடேரியன் சாப்பாடு.  ரெய்னாவும்  நாலைஞ்சு இடத்துக்குப் ஃபோன் பண்ணிக் கேட்டுட்டு, El Dar Darak Restaurant க்குக் கூட்டிப்போனாங்க. இங்கேயும்  நாம் சாப்பாட்டுக்குத்  தனியா  காசு கட்ட வேணாம். டூர் கம்பெனியே  லஞ்ச்க்குப் பணம்  கொடுத்துரும்.  ட்ரிங்க்ஸ் நாம்  வாங்கிக்கணும்.

இவுங்க  கடல் உணவு ஸ்பெஷலிஸ்ட்தான். ஆனாலும்  வெஜ் சாப்பாடும்  நல்லாவே இருக்குமாம்.  சூப், அப்புறம் என்னென்னவோ கொண்டு வந்து வச்சாங்க முதலில்.  கண்ணால் தின்னேன். அப்புறம் மெயின்ஸ்.  அவரவருக்கு வேண்டியது வாங்கிக்கலாம். ஆச்சு.

அடுத்துப்போனது ஒரு பெர்ஃப்யூம் கம்பெனி.  Siwa oasis essence makers. சிவா என்ற பெயர் பிடிச்சுப்போச்சு!  அழகழகான கலர்களில் சென்ட் பாட்டில்கள்  வரிசைகட்டி நிக்குது . இங்கேயே செய்யும் பாட்டில்கள்!  எனக்கு இதெல்லாம் கொஞ்சம் பிடிக்கும் (எதுதான் பிடிக்கலை? அத்தனைக்கும் ஆசைதான் ) நம்ம வீட்டுலேயே கலர்க்கலரா கண்ணாடி இருக்கும் குட்டிச் சிம்னி விளக்குகள் வச்சுருக்கேன்.

ஏற்கெனவே நம்ம வெனிஸ் டூரில்  கண்ணாடி ஜாடிகள் செய்யும் இடத்துக்குப் போயிருக்கோம். பெரிய பெரிய ஃப்ளவர்வாஸ்கள்  செய்யறதைப் பார்த்திருக்கோம். உங்க நல்லகாலம்... அப்போ நான் பதிவர் இல்லையாக்கும்!  இங்கே சென்ட் பாட்டில் செய்யறதைச் சின்ன வீடியோ க்ளிப் எடுத்தார் 'நம்மவர்'. ஆனா அது பக்கவாட்டில் காமிக்குது.... ப்ச்...



அப்புறம் மாடிக்குக் கூட்டிப்போய்,  விதவிதமான  வாசனை காமிச்சாங்க. இதுலே  நமக்குப் பிடிச்ச வாசனையை டிக் செஞ்சுக்கணுமாம்.  நூத்துக்கணக்குலே வாசனை பிடிக்கும்போது ஒன்னுக்கொன்னு மிக்ஸ் ஆகிருதுல்லே.... கலந்து கட்டியா ஒரு வாசனை.   இங்கே இன்னொரு திரவம் இருக்கும் பாட்டிலை  அப்பப்ப முகர்ந்துக்கச் சொல்லி நீட்டுனாங்க.  பொதுவா ஒவ்வொரு மணம் பிடிக்குமுன்பும்,  வறுத்த காஃபிக் கொட்டையை மோந்து பார்த்துக்கணும். அப்பதான் ஒன்னோடு ஒன்னு கலக்காது. இது நம்ம மூக்குக்குப் புரியலையே...


கொஞ்சநேரம் இப்படியே போய்க்கிட்டு இருந்தது. இதென்னடா  வம்பாப்போச்சு. அதான்  வாங்கறதில்லைன்னு ஏற்கெனவே முடிவு பண்ணி 'நம்மவரிடம்' ரகசிய மொழியில்  உள்ளே நுழையும்போதே சொல்லி இருந்தேனே!   இதுவரை முகர்ந்தது போதுமே.  எதுவும் வேணாமுன்னு 'தைரியமாச் சொல்லிட்டு' கிளம்பிட்டோம்.

பொதுவா டூர் கைடுங்க இப்படிப்பட்ட கடைகளுக்கெல்லாம் கூட்டிப்போவாங்கதான். நமக்கு ஒரு பொழுது போக்காவும், நாம் அப்படி எதாச்சும் வாங்குனா அவுங்களுக்கு ஒரு கமிஷன் கிடைக்கிறமாதிரியும்தான் எற்பாடு.

இந்த வாசனைகளைப் பொறுத்தவரை  ஏகப்பட்டவை வாங்கி வச்சுருக்கேன்.  அதுலே முக்காவாசியை மகள் மெள்ளக் கிளப்பிக்கிட்டுப் போயிருவாள்,  ச்சும்மாதானே கிடக்கு?ன்னு.  கடந்த சிலவருஷங்களா  சென்னையில் இருந்து ஜவ்வாது அத்தர் வாங்கியாறேன்.  அஞ்சே மில்லி.  நியூஸியில் யாரும் பயன்படுத்தாதது.  கடைகளில், என்ன பெர்ஃப்யூம்? னு கேட்காதவர்கள் குறைவு. நண்பர் 'மந்திர் கா குஷ்பூ' ன்னுவார்.

ஒரு முறை ஃப்ரான்ஸ் பயணத்துலே, டூர் கைடு  ஒரு பெர்ஃப்யூம் ஃபேக்டரிக்குக் கூட்டிப்போனார்.  ஹைய்யோ !  இதெல்லாம் முதல் முறை நமக்கு.  அஞ்சு பாட்டில்கள் உள்ள ஒரு செட் வாங்கினோம். செலக்‌ஷன் நம்ம விருப்பம்தான். அதுலே ஒன்னு இன்னும் வச்சுருக்கேன்.  அருமையான மணம்.  ஆச்சு 21 வருஷம் !
அடுத்து இன்னொரு கடைக்குள்  கூட்டிப்போனாங்க ரெய்னா.  என்ன இருக்கப்போகுதுன்னு அஸ்வாரஸ்யமா உள்ளே போனால்............  யப்பா.... கடையின் பெயர் டோபாஸ் பஸார். Topaz Bazaar.





எல்லாமே நல்ல தரமான பொருட்கள். ரொம்ப ரொம்ப அழகு !  கண்கள் விரியப் பார்த்துக்கிட்டு இருந்தேன்.  ஆனால் ஒன்னும்  வாங்கிக்கக்கூடாதுன்ற மன உறுதியுடன்தான்! அப்படியும்....


அங்கே இருந்த cartouche பார்த்ததும்,  மகளுக்கு ஒன்னு வாங்கலாமேன்னு தோணுச்சு. Hieroglyphic சித்திர எழுத்துகள். பென்டென்டா, செயினில் மாட்டிக்கலாம். மகள் மருமகன் பெயர்  ரெண்டும் சேர்த்துக்கலாமுன்னா... நாம் சொல்லும் அளவுக்குள் முடியாது. அதனால் மகளின் பெயரில் பாதியும் மருமகனின் பெயரில் முதல் எழுத்துமா ஒன்னு செய்யச் சொல்லி நம்ம எழுத்துகளை இங்லிஷில் எழுதிக் கொடுத்தோம். ஒரு முறைக்கு இரு முறையா சரியான  எழுத்தான்னு  நாமே செக் பண்ணிட்டு, எந்த டிஸைன் வேணுமுன்னும் சொல்லியாச்சு.
கடை ஓனர் Ramy வந்து நம்மாண்டை பேசினார். தன்மையான மனிதர்.  காஃபி உபசாரம் வேற !  நாங்கதான் வேணாமுன்னுட்டோம். கடை மேனேஜரும் மற்ற பணியாளர்களும் அன்பாகவே பழகுறாங்க. கொஞ்சம் க்ளிக்ஸும் ஆச்சு.   சில கடைகளுக்குப் போனால்... இனி வரவே கூடாதுன்னு தோணும் இல்லையா? இந்தக் கடை அந்த வகையில் இல்லை!


முக்கால் மணி நேரம் ஆகுமாம்.  அதுவரை.... கொஞ்ச தூரத்துலே இருக்கும்  பாபிரஸ் இன்ஸ்டிட்யூட் போகலாமுன்னு போனோம்.
இந்த பாபிரஸ் செடிகள் நைல்நதிக் கரையோரம்  வளர்ந்து வந்துருக்கு.  இதோட தண்டுகளைச் சேர்த்துக்கட்டித்தான் படகு செஞ்சுருக்காங்க அந்தக்  காலத்தில்.  காலையில் சுவர் சிற்பம் பார்த்தோமே... அதுலே  காமிச்சுருக்கும் படகுகள், இந்த வகைதான்.
இதோட தண்டில் இருந்து காகிதம் போல ஒன்னு செஞ்சுருக்காங்க.  உலகின் முதல் பேப்பர்!  நம்ம பக்கங்களில் அப்பெல்லாம்  பனையோலை  நறுக்கைப் பதம் செஞ்சு ஓலைச்சுவடியாப் பயன்படுத்திக்கிட்டு இருந்தோம்!

இந்த பாபிரஸ் பேப்பரை எப்படிச் செய்வாங்கன்னு ஒரு டெமோ காமிச்சாங்க.    உள்ளே இருக்கும் தண்டை நறுக்கி எடுத்து  சுத்தியல் வச்சுத் தட்டித்தட்டி மிருதுவாக்கிட்டு,  அதுலே இருக்கும் தண்ணியை எடுக்க  பூரிக்கட்டையால்  அழுத்தித் தேய்க்கறாங்க.  அதை  தண்ணீரில் ஊறப்போடறாங்க. ஆறுநாள் ஊறணுமாம். அப்பதான் அதுக்குள்ளே இருக்கும்  இனிப்பு சுவை எல்லாம் போகுமாம். அதைத் திரும்பவும் சுத்தமான தண்ணியில் ஒரு பனிரெண்டுநாள் ஊறப்போடணுமாம்.  அப்படி மொத்தம் பதினெட்டுநாட்கள் ஊறவச்ச பட்டைகள்  டெமோ காட்ட ரெடியா இருந்துச்சு.  அப்புறம் ஒரு  கனமான துணியில்  பட்டைகளை  எடுத்து குறுக்கும் நெடுக்குமா அடுக்கறாங்க.  என்ன சைஸ் வேணுமோ அந்த சைஸ்.  அப்புறம் இன்னொரு கனமான துணியை அதுக்கு மேலே வச்சுட்டு அதை ரெண்டு இரும்புதட்டுக்குகளுக்கு இடையில் வச்சு டைட்டா ப்ரெஸ் பண்ண விட்டுடறாங்க. பழைய காலத்துலே  மேலே கனமான கற்கள் வைப்பாங்களாம்.  இப்படியே இன்னும் ஒரு ஆறுநாள்.  அப்புறம் வெளியே எடுத்தால்  வெளிர் நிறமா ஒரே ஷீட் பேப்பரா  மாறி இருக்கு.  இன்னும் கொஞ்சம்  டார்க் கலர் வேணுமுன்னா இன்னொரு ஆறுநாள் சேர்த்துக்கணும்.
ரொம்ப லாங் ப்ராஸஸ்தான் இல்லையா ?  நல்ல உறுதியான பேப்பரா இருக்கு,  கையால் கிழிக்க முடியாது.

அதுக்குப்பிறகு  அந்த பாபிரஸ் பேப்பர்லே வண்ணம் கொண்டு வரைய வேண்டியதுதான்.







விதவிதமான சைஸில் அழகழகான படங்கள்  விற்பனைக்கு வச்சுருக்காங்க.  இதுலே மாடர்ன் ஆர்ட் வேற !  ஒன்னு நல்லா இருந்ததே வாங்கலாமுன்னு பார்த்தால்... விற்பனைக்கு இல்லையாம்  !  ( ஹாஹா  நல்லதாப்போச்சு )
கொஞ்சம் க்ளிக்ஸ் ஆச்சு. கூடவே பாபிரஸ் தண்டுடன் துல்ஸியும் :-)

முக்காமணி ஓடியே போச்சுன்னு திரும்ப டோபாஸ் பஸார் போனோம்.  ரெய்னா மட்டும் இறங்கிப்போய் மகளுக்கான பென்டன்ட்டை வாங்கிட்டு வந்தாங்க.  காலையில் இருந்து சுத்திக்கிட்டே இருக்கோமேன்னு  Giza விலிருந்து கிளம்பினோம்.  இங்கிருந்து நம்ம ஹொட்டேல் பத்தொன்பது கிமீதூரம்தான்.  முந்தி தனியா இருந்த ஊர்,  இப்போ கய்ரோ ஸிடி கூடச் சேர்ந்தாச்சு.

அரை மணியில் போய்ச் சேர்ந்தோம்.  மணி இப்போ அஞ்சு. இன்னும் ஒருமணி நேரத்தில் வெளியே கிளம்பணும்.   கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கிட்டு ரெடியா இருங்கன்னு சொல்லிட்டு ரெய்னா கிளம்பிப் போனாங்க.

நாங்களும் அறைக்குப் போனதும் முதல் வேலையாக் கெமெரா பேட்டரி, செல்ஃபோன்ஸ் எல்லாம் சார்ஜர்லே போட்டோம்.
மகளுக்குக் காலையில்  Mereruka Tomb பார்க்கப்போன இடத்துலேயே ஒரு ஸ்கார்ஃப் வாங்கி இருந்தேன்.  பயணத்திலே எதாவது வாங்கிக்கணுமுன்னு  தோணுச்சுன்னா, சட்னு பார்க்கும் இடத்துலேயே வாங்கிக்கணும் என்ற ஞானம்  கொஞ்சநாளாவே வந்துருக்கு. அப்புறம் வேற இடத்துலே விலை விசாரிச்சுட்டுப் பார்க்கலாமுன்னா... அது நடக்கறதுல்லை.  ரெண்டு மூணுமுறை அப்படி ஆனதால்....  உடனுக்குடன்தான் இப்பெல்லாம். ஆனாலும் வேற இடத்தில் கண்ணுலே பட்டால் விலை என்னன்னு பார்க்கும் பழக்கமும் இருக்கு :-)

ஸ்கார்ஃப், பென்டென்ட்  படங்களை மகளுக்கு அனுப்பினேன்.  ரொம்பப் பிடிச்சுப் போச்சாம்!  அப்பாடா... நிம்மதி !

தொடரும்........ :-)


11 comments:

said...

நல்ல அனுபவங்கள்.

பெண்டெண்ட், ஸ்கார்ஃப் - அழகாக இருக்கின்றன.

said...

மிகச் சிறப்பு; அருமை; நன்றி ;

said...

பாபிரஸ் பேப்பர் செய்முறை அருமை

said...

நிறைய தெரிந்துகொள்ள முடியுது. எதை வாங்கறது எதை விடறது என்று சந்தேகம் வந்துவிடும் போலிருக்கு.

அருமை...தொடர்கிறேன்.

said...

நாங்களும் சுற்றி வந்தோம்.
கார்ஃப் ,பெண்டன் அழகு.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

வாழ்க்கை முழுசும் அனுபவங்கள்தானே!!!

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !

said...

வாங்க கிருஷ்ணமூர்த்தி,

ஆமாங்க. நானும் முதல்முறையாத்தான் தெரிஞ்சுக்கிட்டேன் !

said...

வாங்க நெல்லைத்தமிழன்,

வாங்குறதைவிட, இந்த எடைப்பிரச்சினைதான் ரொம்பவே பயமுறுத்திருது.... ப்ச்....

said...

வாங்க மாதேவி,

இன்னும் கொஞ்சம் சுத்தப்போறோம். கூடவே வாங்க :-)

said...

அடடா .. நம்ம ஊரு கொலு பொம்மைகள் அங்கேயும் இருக்கே.!!! >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<