Tuesday, June 17, 2008

ஷிவ்ஜி வாயிலே ஜிலேபி:-)

"யே ஷிவ்ஜிகா மந்திர் ஹை"



"ஓ... ஷிவாஜி கா மந்திர்?"


"நைநை....யே தோ பர்மேஷ்வர் ஷிவ்ஜி கா மந்திர்"


கொஞ்ச நேரத்துக்கு முன்னால் ஷிவாஜி மஹ்ராஜின் கோட்டை இருந்த 'ஷனிவார்வாடா' வைச் சுத்திக் காமிச்சது இதே கைடுதானே.


சுத்திக்காமிக்கன்னு அங்கே ஒன்னும் இல்லை. கோட்டைக்குள்ளே நுழைஞ்சால் வெறும் அஸ்திவாரம் போட்டுவச்சமாதிரி இருந்துச்சு.




அரைநாள் டூர்ன்னு பூனாநகரைச் சுத்திப்பார்த்துக்கிட்டு இருந்தோம். இந்த ஷிவ்ஜி கா மந்திரை சத்ரி மந்திர்ன்னு சொல்றாங்க.மராட்டியப் படைகளின் தலைவரா இருந்த Shindyanchi Chhatri என்றவர் கட்டிய கோயில் இது. வானவரி என்ற இடத்தில் இருக்கு. (இதையே வானவெடின்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன்)



முழுக்கமுழுக்கப் பளிங்குக்கற்களால் கட்டி வழுவழுன்னு இருக்கு. பலவர்ணக் கண்ணாடிக்கூடுகளில் இருக்கும் தொங்குவிளக்குகள். ஜொலிப்பு அட்டகாசம். சிவலிங்கம் வச்சு பூசை நடக்குது. 1794லே கட்டுனதாம்.




ஷிவ்ஜி, ஷிவாஜின்னு மாறிமாறிக்கேட்டே ரொம்ப கன்ஃப்யூஸ் ஆகிப்போச்சு. ஹிந்தி அவ்வளவாத் தெரியாது பாருங்க அப்ப.





இப்ப நம்ம வல்லி என்னை ஜிலேபித் திங்கக் கூப்புட்டாங்களா ஓடி வரணுமுன்னு பார்த்தா என் ஜிலேபி இன்னும் வந்து சேரலையே...... காத்திருந்தேன். பலன் கிடைச்சது.



நம்ம சுதந்திர இந்தியாவுக்கும் சிங்கைக் கோமளவிலாஸுக்கும் ஒரே வயசு.



சிங்கை ஜிலேபியை சிவாஜி வாயிலே கொண்டு வைக்கணுமா என்ன? இல்லே ஷிவ்ஜி வாயில் வைக்கணுமா?



அவ்வளவுக்குப் பெருந்தன்மை இல்லாததால் இதோ
துளசி வாயிலே ஜிலேபி.:-))))



பி.கு: சரித்திர டீச்சர் என்றதால் புள்ளிவிவரம் இல்லாம ஒன்னும் சொல்ல முடியாது. ஹிஸ்ட்ரி சிவாஜிக்கு மட்டுமா? இந்தத் தட்டுலே இருந்த ஜிலேபிக்கும்தான்!!

60 comments:

said...

டீச்சர்...டீச்சர்... நீங்க போட்டுருக்குறது ஜாங்கிரி. ஜிலேபி இல்ல... யாரும் பாக்குறதுக்கு முன்னாடி படத்த மாத்தீருங்க... :D

said...

வாங்க ராகவன்.

புளிச்சுக்கிடக்கும் வட இந்திய ஜி(ஜ)லேபி யாருக்கு வேணும்? நம்ம பக்கம் ஜிலேபின்னா(வே) ஜாங்கிரிதான்:-)))

வேணுமுன்னா 'ஷிவ்ஜி வாயிலே ஜாங்கிரி'ன்னு தலைப்பை மாத்திப்புடலாமா:-))))

said...

தசாவதாரம் படம் பார்த்தா குத்தம் கண்டுபிடிக்க வேண்டியது.

சி.வா.ஜி பதிவு படிச்சா குத்தம் கண்டுபிடிக்க வேண்டியது.

இந்த ஜிறா நிலமை வர வர மோசமயிக்கிட்டே வருதே. சீக்கிரமா அப்பா அம்மா கிட்ட சொல்லி ஒரு டச்சு பொண்ணைக் கட்டி வைக்க வேண்டியதுதான். அப்போ தெரியும் குத்தம் கண்டுபிடிச்சா என்ன நடக்குமுன்னு.

said...

cute post. luved it

said...

வாங்க கொத்ஸ்.


அச்சச்சோ....
டச்சுப் பொண்கள் மேல் ஏனிந்தக் கொலைவெறி?


டிஸ்கி:
:-)

said...

வாங்க ராப்.

வருகைக்கு நன்றி.

எந்த ஊரில் வாசம்?

said...

டீச்சர்,

மூனுநாளைக்கு முந்தின ஜிலேபி போலிருக்கே ?

இப்ப இருக்குமா ?

(போட்டோவுல டைம் இருக்கு)

ஜிலேபி வடமொழி. தேன் குழல் என்று சொல்லுவது தான் சரி என்று உள்ளிருக்கும் தமிழ் அறிஞர் அறிவிக்கிறார்.

Anonymous said...

ஷிவ்ஜி, ஷிவாஜி வித்தியாசம் தெரியும், ஜிலேபி ஜாங்கிரி என்ன வித்தியாசம், வடக்கத்தவங்க பண்ணற ஜிலேபிக்கு ஜாங்கிரின்னு பேரா?

said...

வாங்க செந்தழலே.

நலமா? ரொம்ப நாளா இந்தப் பக்கம் ஆளையே காணோம்?

இப்போ இருக்கும் 'நாட்டில்' எல்லாரும் நலமா?

சிலேபின்னு சொல்லிட்டாத் தமிழ் ஆகிறாதா?
'ஜி' எப்பவோ தமிழில் சேர்ந்துருச்சாமே!

மூனு நாள்தானே ஆகி இருக்கு?
சனிக்கிழமை சிங்கையில் வாங்கி ஞாயித்துக்கிழமை நியூஸி வந்து திங்கக்கிழமைப் படம் எடுத்துவச்சுட்டுப் புதன்கிழமைப் பதிவு போட்டது:-)))

ஒரு வகை முறுக்குக்குத் தேன்குழல்ன்னு பெயர் ஏற்கெனவே இருக்கு:-)ஆனா அது உப்புப் பலகாரம்!

said...

வாங்க சின்ன அம்மிணி.

நம்ம சமையல் வகுப்புலே ஒரு ரெஸிபி போட்டுறவா?

சுருக்கமாச் சொன்னா.....
வட இந்திய சிலேபி - மைதா மாவு

தென் இந்திய சாங்கிரி - உளுத்தம் பருப்பு ஊறவச்சு அரைச்சது.

பி.கு:

பெயர் சரியாவந்துருக்கா ரவி?

said...

///ஷிவ்ஜி, ஷிவாஜி வித்தியாசம் தெரியும், ஜிலேபி ஜாங்கிரி என்ன வித்தியாசம், வடக்கத்தவங்க பண்ணற ஜிலேபிக்கு ஜாங்கிரின்னு பேரா?///

என்ன கொடுமையான் ஒரு டவுட் ?? ஜாங்கிரி என்பது குஜராத்தி மொழியில் ஜிலேபி..ஜிலேயத்தான் பஞ்சாப்புல வேற கலர்ல ( மஞ்ச கலர்) சுடுறானுங்க...அது பேரு...அது பேரு...இருங்க கேட்டு சொல்றேன்..

said...

அது ஒத்துக்க முடியாது...செல்லாது செல்லாது...

சமீபத்துல 1985ல நாலாவது படிக்கும்போது படிச்ச சமையல் குறிப்பு புத்தகம் ஒன்னுல தேன்குழல் செய்வது எப்படின்னு ஜிலேபி படம் போட்டிருந்தாங்க...

தேன் குழல் எப்படிங்க டீச்சர் உப்புப்பலகாரமாவும் ?

பாருங்க...பேருலயே தேன் இருக்கே...

குழல் அப்படீங்கறாங்க...

அதனால அது முறுக்கா இருக்க முடியாது என்று என்னுடைய ஆராய்ச்சி சொல்கிறது...

சோ ( So ங்க...'அவரை' நெனைச்சுடாதீங்க...) சோ, தேன்குழல் ஈஸ் இனிப்பு பலகாரம், வித் ஹனி ஆர் ஸ்வீட்...

அதனால அதுக்கு இணையான பண்டம் ஜிலேபி அல்லது ஜிலேபி மாதிரி ஏதோ ஒன்று...

இது எப்படி இருக்கு (ரஜினி ஸ்டைலில் படிக்கவும்)

!!!..எல்லோரும் நலம் நலம்..!!!

said...

// துளசி கோபால் said...

வாங்க ராகவன்.

புளிச்சுக்கிடக்கும் வட இந்திய ஜி(ஜ)லேபி யாருக்கு வேணும்? நம்ம பக்கம் ஜிலேபின்னா(வே) ஜாங்கிரிதான்:-)))

வேணுமுன்னா 'ஷிவ்ஜி வாயிலே ஜாங்கிரி'ன்னு தலைப்பை மாத்திப்புடலாமா:-)))) //

ஹிஹி எனக்கும் ஜிலேபியை விட ஜாங்கிரிதான் பிடிக்கும். :) நல்லா செவசெவன்னு ஜிராவுல ஊறிக்கெடந்த ஜாங்கிரிதான் பெஸ்ட். அதோட முழுப் பேரு ஜஹாங்கிரி :-) முகலாயர் காலத்துல உருவான பண்டம்.

said...

// இலவசக்கொத்தனார் said...

தசாவதாரம் படம் பார்த்தா குத்தம் கண்டுபிடிக்க வேண்டியது.

சி.வா.ஜி பதிவு படிச்சா குத்தம் கண்டுபிடிக்க வேண்டியது. //

இலவசக் கொத்தனாற் அவற்களே...குத்தம் கண்டுபிடிக்கிறோம்னா சொல்றீங்க? எங்க தப்பு இருக்குன்னு சொல்லித் திருத்துறோம்னு எடுத்துக்கலாமே! ;-) நீங்களும் அந்தக் கண்ணபிறான் றவிசங்கற் கூடச் சேந்துக்கிட்டு எனக்கு எதிறாப் பேசத் தொடங்கீட்டீங்களே!

// இந்த ஜிறா நிலமை வர வர மோசமயிக்கிட்டே வருதே. சீக்கிரமா அப்பா அம்மா கிட்ட சொல்லி ஒரு டச்சு பொண்ணைக் கட்டி வைக்க வேண்டியதுதான். அப்போ தெரியும் குத்தம் கண்டுபிடிச்சா என்ன நடக்குமுன்னு. //

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.... பாவங்க இந்த ஊர்ப் பொண்ணுங்க... நாளோரு பாய்பிரண்டுன்னு நிம்மதியா இருக்காங்க. விட்டுருங்க அவங்கள.

said...

டீச்சர்,தட்டை இப்படிக் கொடுங்க..ஒண்ணை நான் எடுத்துக்குறேன்.. :)

Anonymous said...

ஆஹா டீச்சர், போற போக்குல ஜிலேபியா, ஜாங்கிரியா
தேன்குழலா, முறுக்கா
ஜிராவா, ஜிறாவா இப்படி விவாதம் தீவிரமாகிட்டே இருக்கே

said...

டீச்சர் நான் இப்பதான் பஷ்ட் டைம் இங்க வரேன்.. ஒரு குட்டி யானை zooவில் இருந்து தப்பிச்சு உங்க பிளாக்ல டான்ஸ் ஆடிண்டு இருக்கு பாருங்க... இத யாரும் உங்ககிட்ட சொல்லலையா??

said...

என்னது ஜாங்கிரி ஜி.ராவுல ஊறுதா ? ஜீரா என்ன ஜீனிச்சக்கரையா ? முதல் கமெண்டு போட்டதுக்காக இப்படியா :)))

ரவியை மாதிரி டயபட்டீஸ் காரங்க எல்லாம் வெறும் பேச்சோட நிறுத்திக்கவேண்டியது தான் ஹும்ம்ம்...

said...

சிங்கையிலிருந்து ஜிலேபி வருதுன்னதும்
நினைச்சேன் பதிவும் வருதுப்பான்னு.:)

ஷிவ்ஜி சாப்பிட்டா என்ன சிவாஜி சாப்பிட்டா என்ன, நம்ம துளசிதான் சாப்பிட்டா என்ன. மவுசு கூடியில்ல போயிடுச்சு.

ஷிவ்ஜி
வாங்ரார்
ஜாங்ரி அப்டினு புது முழக்கம் போடலாமா:)
நன்றி துளசி.

said...

அங்கேயும் சிவலிங்கமா? பறந்தாமன் இல்லையா? :))


//தேன் குழல் எப்படிங்க டீச்சர் உப்புப்பலகாரமாவும் ?
//

@ravi, தேங்குழல் உப்பு பலகாரம் தான்.

உளுத்தம்மாவை கொஞ்சம் அரிசிமாவோட பதமா தண்ணி விட்டு கலந்துகிட்டு, கொஞ்சம் ஜீறா (பதிவர் ஜிரா இல்லைங்க) தேவையான உப்பு எல்லாம் கலந்து பிசைந்து அதுக்குன்னு இருக்கற குழல் அதான் வடாம் பிழியற குழல்ல விட்டு சன் பிளவர் ரீபைண்டு ஆயிலை வாணலியில் விட்டு சூடானவுடன் புழிஞ்சு பாருங்க, வெந்தவுடன் எடுத்தா வருவது தேங்குழல்.

பிகு: மாவோட கொஞ்சம் வெண்ணெய் விட்டு பிசைஞ்சா தேங்குழல் மிருதுவா வரும். :))

ஜிலேபி பாடம் அடுத்த பதிவுல. :p

said...

என்ன ரவி, புதுசா கல்யாணம் ஆனவரோ? வீட்ல ஆராய்ச்சி அது இதுனு வாய தொறக்காதீங்க.

அப்புறம் தேங்குழல் எது? ஜிலேபி எது?னு நீங்களும் பக்குவம் சொல்லி பதிவு போட வேண்டிய நிலைமை வந்து விடும். :)))

said...

செந்தழல்,


எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்.

இப்படி எல்லாம் எதுக்கு? இப்ப என்ன நடந்துபோச்சுன்னு இந்தப் பதற்றம்.

அம்பி சொன்னமாதிரி கல்யாணம் ஆகிருச்சா என்ன? யாருக்கும் சொல்லவே இல்லையா?

அப்படி ஆகி இருந்தால்.....

முக்கிய 'சீன்'லே சிலேபி என்றச் செல்லப்பெயருடைய சாங்கிரி
செட் ப்ராப்பர்ட்டியா வந்துருக்குமே!

எல்லாம் தமிழ்ச் சினிமாவில் பார்த்துத் தெரிஞ்சுக்கிட்டதுதான்:-)

said...

ராகவன்,

இந்த ஜீரா, ஜீறா நிலமை இப்படி ஆகுமா? !!!!!!

நம்ம ரவிக்கு என்னமோ ஆகிப்போச்சு. எல்லாரும் கொஞ்சம் கவனிங்கப்பா:-)

said...

வாங்க ரிஷான்.

நடக்குற கலாட்டாவில் தட்டு தொலைஞ்சுபோச்சு:-))))

said...

சின்ன அம்மிணி,

கொளுத்திப்போட்ட பட்டாஸ் வெடிக்க ஆரம்பிச்சுருக்கு. போய்ச் சீக்கீரம் கொண்டாடுங்க. உங்க ஊருக்கு ரெண்டு ஷோ தசாவதாரம் வருது:-)

said...

வாங்க விஜய்.

இப்படி எங்களைக் கருத்து 'கந்த மாமி'களா ஆக்கியிருக்க வேணாம்.

மொய் எழுதிட்டு வந்தாச்சு:-))))

ச்சும்மா..... ஒரு கலாட்டா.

ஜாய்ன் த ஃபன்:-)))

said...

வாங்க விக்னேஸ்வரன்.

இப்படி முதல் பெஞ்சுலே முன்னாலே வந்து உக்காருங்க.

கொத்ஸ், வகுப்பு லீடரா இருந்துக்கிட்டுப் புது அட்மிஷனைக் கவனிக்கிறதில்லையா?

என் அருமை மாணவ/மாணவிகளே,

புதுசா பஷ்ட் டைம் இங்க வந்த விக்னேஸ்வரனுக்கு ஒரு 'ஓ' போடுங்க. அப்படியே அரியர்ஸ் எல்லாம் எடுத்துச் சொல்லுங்க:-)))))

said...

ரவி,

கொரியாவுக்குப் போனதும் சக்கரையைக்கூட மறந்துட்டீரா? :-))))

இல்லே 'எல்லாரும்' ஜீராவுலேயே நனைஞ்சமாதிரி இருக்காங்களா? :-))))

said...

/அரியர்ஸ் எல்லாம் எடுத்துச் சொல்லுங்க//


புரியலையே.. அப்படி என்றால்??? 'அரியர்ஸ்???

said...

வாங்க வல்லி.

கூப்பிட்டக் குரலுக்கு ஓடிவரலாமுன்னா எங்கே? அதான் ஜாங்கிரி வரட்டுமுன்னு இருந்தேன்:-))

ஆரம்பிச்சுவச்ச மகராசனுக்கு இருக்காமே ஆப்பு:-)))

said...

வாங்க அம்பி.

குழந்தை, குட்டின்னு ஆனதும் பொறுப்பா எப்படி ரெஸிபி எல்லாம் தானா வருதுன்னு பாருங்க:-))))

ஒரு பங்கு உளுந்து மாவு, 4 பங்கு அரிசின்னு திவ்யமாச் சொல்லக்கூடாதா?

said...

விக்னேஸ்வரன்,

இது துளசிதளத்தின் 716 வது பதிவு.

இப்பக் கணக்குப் போட்டுக்குங்க.
இதுலே ஒன்னு(இங்கெ இருக்கு) இது. மீதி எத்தனை? :-))))

said...

சரிதான், சிங்கை ஜாங்கிரி ஜிலேபியாகி விட்டதா? தலைப்பை மாத்திக்கலாம்னு சமாளிச்சுட்டீங்க. ஆனால் பலரும் பார்க்காத இடங்களின் படங்களைத் தந்து, தெரியாத தகவல்களை விவரித்து சமாளிப்பை ஈடு செய்து விட்டீர்கள் மேடம்.

உங்களுக்கு மட்டும்தான் ஜிலேபி...இல்ல... ஜாங்கிரியா? தட்டி நிறைய அழகா அடுக்கி வச்சிருக்கீங்களே. ஆளுக்கொண்ணா போகையிலே வாயிலே போட்டுக்கலாம்தானே:)!

said...

ஓகே ஓகே புரிகிறது...


716-1=715

இந்த விடைய சரிய சொல்னதினால் மீத பின்னூட்டம் டிஸ்கவுண்டு...

said...

என்ன கொடுமை சரவணன் ?

எதுவுமே சொல்லலைன்னாலும் எல்லாமே தெரிஞ்சுரும் போலிருக்கே

நான் ஊரை விட்டு ரயில்வே ட்ராக்ல ஓடிப்போயி கல்யாணம் பண்ணதெல்லாம் தெரியாதா உங்களுக்கு ?

:))

லவ் மேரேஜ் வேற. அதனால ஒரு டபரா செட் கூட கிடைக்கல ஹி ஹி :)))

@ அம்பி..

மறுபடியும் ஜீரா வந்திருச்சே...ஜீரான்னாலே சக்கரை. அது எப்படி உப்புப்பலகாரம் ? இந்த உண்மை உடனே தெரிஞ்சாவனும்...

:))

said...

hello thulasi akka,
மோகனோட ப்ளோக்ல என்னோட புதுப் பதிவு வந்திருக்கு, வந்து பாருங்க.
http://mohankandasami.blogspot.com/

said...

டீச்சர்! கிளாசுக்கு லேட்டா வந்தா இரண்டு ஜாங்கிரி பார்சல்ன்னு! ஒரு செய்தி வந்த்தே! உண்மையா????????????????????????

:D :D :D :D

கரக்ட்...ஜாங்கிரி தான் நல்லா இருக்கும்.அந்த ஜிலேபி புளிக்கும்...:P

said...

வாங்க ராமலக்ஷ்மி.

கோபால் சிங்கை வழியா வரும்போதெல்லாம் கொண்டுவரவேண்டிய ரெகுலர் ஷாப்பிங் லிஸ்ட்லே இது இருக்கு.

முந்தியெல்லாம் ஒரு கிலோவா இருந்த்தை இப்போ (வயசானதன் காரணம்) அரைக்கிலோவா ஆக்கிட்டேன்.

கூடவே (கொஞ்சநாளா)அடையார் ஆனந்தபவன் சீடையும், தேன்குழலும் லிஸ்ட்டுலே இருக்கு.

உப்புப் பலகாரத்துக்குக் கோமளவிலாஸில் இருந்து கட்சி மாறியாச்சு.

நம்மூரில் இதொன்னும் கிடைக்கறதில்லைப்பா(-:

said...

ரவி,

நீங்க எங்க கட்சியா? எங்களுக்கு ஒரு ஸ்பூன் கூட கிடைக்கலை, நீங்க என்னன்னா டபரா செட் கிடைக்கலைங்கறிங்க!

போகட்டும், இந்தப் பக்கம் வரும்போது நம்மைக் கண்டுக்குங்க...உங்களுக்காக ஒரு டபரா செட் எடுத்துவச்சுருக்கேன்:-))))

said...

ரவி,

அம்பி சொன்ன ஜிரா jeera சீரா என்னும் சீரகம்:-))))

said...

வாங்க கோபி.

சிரிப்பா இருக்கு உங்களுக்கு:-)

said...

வாங்க ராப்.

உங்க வீடு என்னாச்சு? வெள்ளையடிக்கிறீங்களா? :-)

said...

வாங்க புதுவண்டு.

உங்க்ஜளுக்குத் தப்பானத் தகவல் யாரு கொடுக்கறாங்க?

லேட்டா வந்தால் ரெண்டு ஜாங்கிரி நீங்க கொண்டு வரணும்:-)))

said...

@செந்தழல் ரவி, அப்படியா சங்கதி? அத சொல்லுங்க முதல்ல. சரி, சரி, சட்டு புட்டுனு ஆக வேண்டிய காரியத்தை பாருங்க. இங்க வந்து என்ன வெட்டி பேச்சு? ஒரு ஜுனியர் ரவி வந்தா டபரா செட்டு இல்லாடியும், டயப்பரோட தாத்தா பாட்டிஸ் வந்து சேருவாங்க.

//நீங்க எங்க கட்சியா? எங்களுக்கு ஒரு ஸ்பூன் கூட கிடைக்கலை//

@டீச்சர், உங்களதும் ஏ 1947 லவ் ஸ்டோரியா? :)))

அதை கொஞ்சம் பிளாகினா, நாளைக்கு வர போற சந்ததியினர் படிச்சு தெளிவு பெறுவாங்க இல்ல? :p

said...

@டீச்சர், உங்களதும் ஏ 1947 லவ் ஸ்டோரியா? :)))
///

அதானே ? அதெப்படி விடுவோம்..

சொல்லியே ஆவனும் :))

said...

தப்பா நினைச்சிக்காதீங்க,

ஒங்க பதிவ விட ஜிரா, கொத்தனார், ரவி இவங்களோட பின்னூட்ட சண்டை நல்லாவே ரசிக்கும்படியா இருக்கு.

2006லருந்து இன்னைக்கி வரைக்கும் இந்த குழு மட்டும்தான் அதேபோல கலக்கிக்கிட்டு இருக்கு. ஒங்களையும் சேர்த்து. ஜமாய்ங்க.

said...

தமிழ் வலைப் பதிவுலக

சான்றோர்களுக்கும்,
பெரியோர்களுக்கும்,
அறிஞர்களுக்கும்,
சகோதரர்களுக்கும்,
சகோதரிகளுக்கும்,
நண்பர்களுக்கும்,
தோழர்களுக்கு,
தோழியர்களுக்கும்

என் பணிவு கல்ந்த வணக்கங்கள்.

புகைப்பேழையில் படம் பிடித்த புகைப்டங்களை பதிந்து வந்த என்னை செய்தியுடன் பதிவு செய்ய அறிவுறுத்திய

டோண்டு ராகவன் ஐயா அவர்களுக்கு என் முதல் நன்றி.

எனது அன்பு அழைப்பை ஏற்று
வருகை புரிந்து
வாழ்த்துரை வழங்கியும்,
மேம்படுத்த ஆலோசனகள் தந்தும்
பேருதவி புரிந்திட்ட

அன்புகளுமிய அன்பர்கள்

திருநெல்வேலி கார்த்திக்
அதிஷா
VSK
dondu(#11168674346665545885)
லக்கிலுக்
ajay
துளசி கோபால்
உண்மைத் தமிழன்(15270788164745573644
VIKNESHWARAN
சின்ன அம்மிணி
VIKNESHWARAN
ஜமாலன்
உறையூர்காரன்
மதுரையம்பதி
கிரி
ambi
ஜீவி
வடுவூர் குமார்
செந்தில்
SP.VR. SUBBIAH
தமிழரசன்
cheena (சீனா)
சிறில் அலெக்ஸ்
வால்பையன்
வெட்டிப்பயல்
பினாத்தல் சுரேஷ்
இலவசக்கொத்தனார்
அகரம்.அமுதா
குசும்பன்
கயல்விழி முத்துலெட்சுமி
சென்ஷி
தருமி
தமிழன்
செந்தில்
மனதின் ஓசை
கானா பிரபா
Kailashi
மாதங்கி
முகவை மைந்தன்

அனைவருக்கும்
நெஞ்சுநிறை
நன்றிகள்
கோடான கோடி

என்றும் உங்கள்
விஜய்
கோவை.

http://pugaippezhai.blogspot.com

said...

அய்யோ தாங்கலையே !!!!

தமிழ் ஹிப்பலாக் நன்பர் வேற ரூபத்துல வந்துட்டாரா ?

முடியல முடியல !!!!!!!!

said...

///எனது அன்பு அழைப்பை ஏற்று
வருகை புரிந்து
வாழ்த்துரை வழங்கியும்,
மேம்படுத்த ஆலோசனகள் தந்தும்
பேருதவி புரிந்திட்ட

அன்புகளுமிய அன்பர்கள்

திருநெல்வேலி கார்த்திக்
அதிஷா
VSK
dondu(#11168674346665545885)
லக்கிலுக்
ajay
துளசி கோபால்////


இப்ப என்ன ஆகிப்போச்சுன்னு இவ்ளோ டென்சன்ஸ் மிஸ்டர் கோவை விஜய்...

ஒரு பின்னூட்ட மொய்தான வெச்சாங்க :)))

said...

அம்பி,

//அதை கொஞ்சம் பிளாகினா, நாளைக்கு வர போற சந்ததியினர் படிச்சு தெளிவு பெறுவாங்க இல்ல? :p//

எங்கே ரொம்பத் தெளிவு பெற்றுருவாங்களொன்னு பயப்பட வேண்டி இருக்கேப்பா:-)))

டீச்சர் இதுலே மட்டுமில்லை இன்னும் பலவிஷயங்களில் தெளிவாத்தான் இருக்கேன்:-)

said...

ரவி,

ஸ்டோரியை மெகா சீரியலுக்குக் கொடுத்துருக்கேன்.

காலம்வரும்போது அது வெளிவரும்:-)))

கண்டு களிக்கலாம்:-)

said...

வாங்க டிபிஆர்.

கொண்டாடத்தானே வலையும், குழுவும், நட்பும். இல்லீங்களா?

அதான் கூடிக் கும்மி:-))))

said...

விஜய்,

அச்சச்சோ..........

எதுக்கு இப்படி ஒரேடியா 'உணர்ச்சி'வசப் பட்டுருக்கீங்க.

போய் அடுத்த பதிவுக்கு மேட்டர் ரெடி பண்ணுங்க:-))))

said...

ரவி,

இந்த விஜய் நெசமாவே வலைக்குப் புதுசுதாம்போல!

போய்ச் சொல்லுங்கப்பா........

போதுமுன்னு:-)

said...

டீச்சர் வணக்கம்.

புனே வரை போனவங்க, ஓளரங்காபாத் போய், அங்கே இருக்கிற தாஜ்மஹாலையும் பார்த்துட்டு வந்திருக்கலாமே...

ம்ம்...நான் பொறந்த ஊரு!

said...

ருசியான ஜிலேபி தான்! துளசி மேடம் அளவுக்கு உலகம் சுற்றி பார்க்க முடியுமா?

said...

வாங்க ஆடுமாடு.

பூனாவில் ஒரு அஞ்சு வருசம் குப்பை கொட்டியும் அக்கம்பக்கம் வேற எந்த ஊருக்கும் போகலை. ஐவேஜு ஏது?

கோபால்தான் இப்ப சில வருசங்களுக்கு முன்பு ஔரங்காபாத் போயிட்டு வந்தார். நிறையப் படங்கள் அங்கத்து தாஜ் மஹால் எல்லாம் கெமெராவில் புடிச்சுக்கிட்டு வந்தார்.

இந்தியாவில் ஒரு ஆறு மாசமாவது சுத்தணுமுன்னு ஒரு திட்டம் வச்சுருக்கேன். பார்க்கலாம் எப்ப அமையுதோன்னு.

ஆமாம். அங்கே பிறந்து, அப்புறம் தென்கோடிக்கு எப்ப, எப்படிப் போனீங்க?

'மேஞ்சுக்கிட்டே அப்படியே'...ன்னு சொல்வீங்களா?:-)))

said...

வாங்க பிரேம்ஜி.

கோபால்மட்டும் ஒரு ப்ளாக் ஆரம்பிக்கணும். அவ்ளோதான்.

சரியான 'ஊர் சுத்தி':-))))

வீக் எண்ட் மட்டும் நியூஸிக்கு வர்றாருன்னா பாருங்க:-))))

said...

டீச்சர்,

இந்த விஜய்ய நினைச்சா கொஞ்சம் பயமாக்கூட இருக்கு. இவர் உண்மையிலயே இவர்தானா இல்ல இவர் பேர்ல வேற யாராச்சும்?

அவர் எல்லா பதிவுலயும் போயி விளம்பரம் ரேஞ்சுக்கு பின்னூட்டம் போடறதா பார்த்தா கொஞ்சம் பயமாத்தான் இருக்கு.

இது 2008 ட்ரெட்ண்ட் போலருக்கு.

said...

வாங்க டி பி ஆர்.

விஜய் ரொம்பப் புதுசுன்னு நினைக்கிறேன்.

இல்லேன்னா எதாவது தெலுகு ப்ளொக் பார்த்துட்டு இப்படிச் செஞ்சுட்டாரான்னு தெரியலை.

அதெல்லாம் பயப்படாதீங்க. நாம் ஒரு வழி பண்ணிறலாம். பின்னெ எதுக்கு இருக்கொம்?:-)))