Thursday, June 26, 2008

ஹனிமூனுக்குத் தனியா.....

இங்கே பக்கத்துலே ஒரு தீவுக்கு நாலுநாளைக்குப் போறோம். நீங்களும் வர்றீங்களான்னு கேட்டாங்க தோழி. நினைச்சவுடனே கிளம்புற கதியிலா இருக்கேன்? மொதல்லே இவர் டூர் கிளம்பாம இருக்கணும். அப்புறம் ஆஃபீஸ்லே லீவு..... எல்லாத்துக்கும் மேலா கோகிக்கு இடம் கிடைக்கணும். சட்னு ஏர்லைன்ஸ் டிக்கெட் கிடைச்சாலும் கிடைக்குமே தவிர இவனுக்கு இடம் கிடைக்கறது கஷ்டம்(-:


ஆஸ்தராலியாவுக்கும் நியூஸிக்கும் இடையில் வடக்கே இருக்கும் நார்ஃபோ(ல்)க் தீவு. தனி அரசாங்கமுன்னு சொன்னாலும் ஆஸ்தராலியாவின் ஆதரவுடன் ஆஸிக் கரன்ஸியை வச்சுச் சமாளிக்கிறாங்க.நியூஸியைக் 'கண்டுபிடிச்ச' கேப்டன் குக் தான் இதையும் கண்டு பிடிச்சார். வர்ற வழியில் இருக்கேன்னு பார்த்துவச்சுக்கிட்டார். பிரிட்டனில் இருக்கும் குற்றவாளிகளை வேற எங்கியாவது வச்சுத் தண்டிக்கறதுக்கு அவுங்களுக்கும் இடம்வேணுமே. எத்தனையோ இடங்களைக் காலனிகளாப் பிடிச்சாச்சு, இதுவும் இருந்துட்டுப் போகட்டும். என்னா கொறைஞ்சுறப்போகுதுன்னு....... 1788லே இந்தத் தீவைக் கவனிச்சுக்கன்னு ஒரு 7 பேர் பிரிட்டிஷ் காரங்க ஆஸியில் இருந்து வந்தாங்க. இவுங்களுக்குச் சேவகம் செய்ய 9 ஆம்பிளைங்களும் 6 பொம்பளைங்களுமா ஒரு 15 பேர். இந்தப் பதினைஞ்சும் ஆஸியில் தண்டனை அனுபவிக்கும் குற்றவாளிகள்.


இப்ப இங்கத்து மக்கள் தொகை 2114. எல்லாருக்கும் எல்லாரையும் தெரியும்!!!ஒரு பதினைஞ்சு சதுரமைல் தான் இந்தத் தீவு. ஒரு ஆறுகிலோ மீட்டர் தூரத்துலே இருக்கும் இன்னொருதீவும் இதைச் சேர்ந்ததுதான். (பக்கத்துவீடு?)


வேலையில்லாத் திண்டாட்டம் அறவே இல்லை!!!!! அனாவசியமா ராணுவம் ஏதும் வச்சுக்கலை. பாதுகாப்பு வேணுமுன்னா ஆஸ்தராலியா கொடுக்கணுமுன்னு அம்மா (மாட்சிமை தாங்கிய மஹாராணியம்மா) சொல்லிட்டாங்க.


காலநிலை அருமையா இருக்கு. சப் ட்ராப்பிகல் க்ளைமேட். வாழை, மா, பப்பாளி எல்லாம் எக்கச்சக்கம். முக்கிய தொழில் சுற்றுலாப் பயணிகளை வரவேற்று உபசரிச்சு ஆனந்தப்படுவது.


வாரத்துக்கு ரெண்டு ஃப்ளைட் ஞாயிறும் வியாழனுமா, இங்கே ஏர்நியூஸிலாந்து, ஆக்லாந்துலே இருந்து போய்வருது. 95 நிமிசப் பயணம். 660 மைல்தான்.


1856 வது வருசம் பக்கத்துலே இன்னொரு தீவில் Pitcairn Island கலகம் நடந்து அங்கே உயிரோடு பாக்கி இருந்தவங்க அஞ்சுவாரம் கப்பல் பயணம் செஞ்சு இங்கே வந்து தங்கிட்டாங்க. 193 பேர் கப்பல் ஏறுனாங்க. இங்கே வந்து இறங்கும்போது 194 பேரா இருந்தாங்க. ஒரு குழந்தை இந்தப் பயணத்துலே பிறந்துருச்சு:-)))) இவுங்க வந்ததை நினைவுகூரும் விதமா ஜூன் மாசம் 8 இங்கே தேசிய விடுமுறை.எல்லாருக்கும் செய்யறதுக்குன்னு ஒரு வேலை இருப்பதால் குற்றங்களின் எண்ணிக்கை ரொம்பக் குறைவு. இதுவரை நடந்த குற்றமுன்னு சொன்னால் ரெண்டு கொலை. அதுலே ஒருத்தரை அவர் மகனே சுட்டுட்டார். (குடும்பத் தகராறு?) இன்னொருத்தரைக் கார் ஏத்திக் கொன்னுட்டாங்கன்னு போனவருசம் தீர்ப்பு ஆகி இருக்கு. இப்ப அது கொலை இல்லை. விபத்துன்னு மனு கொடுத்துருக்கு. பார்க்கலாம், என்ன தீர்ப்புச் சொல்லப்போறாங்கன்னு.திருடு, பிக்பாகெட்ன்னு ஒன்னுமே இல்லை. திருடிட்டு வேற எங்கே தப்பிச்சுப் போக முடியும்? இல்லே..... திருடுன காசைத்தான் எங்கேன்னு போய் செலவழிக்கிறது?ஆங்.... சொல்ல மறந்துட்டேனே....... இங்கே வருமான வரிகூட கட்டவேண்டியதில்லையாம். சுற்றுலாப் பயணிகள் மூலமாக வரும் வருமானமே அரசாங்கம் நடத்தப் போதுமானதா இருக்காம். வரிச் சுமையும் இல்லை. வேலை இல்லாமையும் இல்லை. க்ரேட்......!!!!


நார்போ(ல்)க் பைன் மரம் ரொம்பவே பேர் போனது. தீவு முழுக்க எக்கச் சக்கமா விளைஞ்சு நிக்குதாம். இந்த 'நாட்டு'க்கொடியிலும் இதுவே இடம் பிடிச்சிருக்கு. இங்கே நியூஸியிலேயும் இந்த மரக்கன்று வாங்கலாம்.


தோழி ஊரில் இல்லாத சமயம் தோழியின் ரங்கமணி நல்ல ஆஃபர்லே வந்துருக்கேன்னு பயணத்துக்கு புக் செஞ்சுட்டார். இவர் ஒரு ஒர்க்கஹாலிக். லீவு எடுப்பதே ரொம்ப அபூர்வம். சொந்த பிஸினெஸ். பயணம் போறதுக்கே பிடிக்காது. எல்லாருக்கும் உதவி செஞ்சாகணும். நண்பர்கள் இவருக்குச் சொல்லாம வீடு மாத்துனா அவ்ளொதான்.....வீடு மாத்தச் சாமான்செட்டுகளை எடுத்துப்போய் அங்கே இறக்கிவைக்க ரெடியா இருப்பார்.(இந்தக் காலத்துலே..... இப்படி ஒரு மனுசன்)

இவர் ஏற்பாடு பக்காவாச் செஞ்சுட்டார். ஒருவாரம் இவரோட வேலையைப் பார்க்க மாற்று ஆளை ரெடி பண்ணியாச்சு. ஃபுட்(food) டிஸ்ட்ரிப்யூஷன் என்பதால் நிறுத்தி வைக்க முடியாது. இன்னொரு ஜோடியும்( நம்ம நண்பர்கள்தான்) இவுங்ககூடப் போறாங்க. அந்த ரங்கு, தோழியின் ரங்குவின் நெருங்கிய நண்பர்.

இப்படித் தடாலடியாத் தன்னைக் கேக்காம பயண ஏற்பாடு செஞ்சுட்டாரேன்னு ஒரு பக்கம் இருந்தாலும், அட்லீஸ்ட் இப்பவாவது ரெண்டுபேருமாச் சேர்ந்து போக ஒரு வாய்ப்பு கிடைச்சுதேன்னு தங்குவுக்கு மகிழ்ச்சி. ரெண்டாவது தேனிலவா இருக்கட்டுமுன்னு நானும் சொல்லிவச்சேன்.ஞாயிறு காலை 5.45க்கு இங்கிருந்து ஆக்லாந்துக்கு விமானம் ஏறணும். இது 70 நிமிஷப் பயணம். பிறகு அங்கேயிருந்து தீவுக்கு 95 நிமிஷம். சனிக்கிழமை இரவு இங்கே பயங்கரமான பனி. ஸ்நோ விழுந்து ஊரெல்லாம் வெள்ளை. ஷட்டில் புக் பண்ணி காலையில் 4.45க்கு ஏர்ப்போர்ட்ப் போய்ச் சேர்ந்தாச்சு.
கூட வரும் இன்னொரு ஜோடி ஏற்கெனவே செக் இன் செஞ்சுட்டுக் காத்துருக்காங்க. இங்கேயே ரெண்டு ப்ளைட்டுக்கும் போர்டிங் பாஸ் கொடுத்துருவாங்க. தோழியோட டிக்கெட்டு, பாஸ்போர்ட் எல்லாம் ஸ்கேன் செஞ்சு போர்டிங் பாஸ் கையில் வந்துருச்சு. இப்ப தோழியின் ரங்குவின் முறை.


ஸ்கேன் செஞ்சால்....... ஐயகோ...... பாஸ்போர்ட் காலாவதி ஆகி இருக்கு!!!!!!
ஞாயித்துக்கிழமையாப் போச்சு. இல்லேன்னா அவசரகாலக் கடவுச்சீட்டுன்னு 100 டாலர் கட்டி எடுக்கலாமாம். குறைஞ்சபட்சம் ஸ்கேன் செய்யுமுன் பார்த்திருந்தா வேற எதாவது செஞ்சுருக்கலாம்.ஒரு தடவை ஸ்கேன் செஞ்சுட்டா அது பதிவாகிரும். இப்ப ஒன்னும் செய்ய முடியாதுன்னுட்டாங்க.
தோழி மட்டும் இன்னைக்குப் போகட்டும். அடுத்த ப்ளைட்டுக்கு இவர் போய்ச் சேர்ந்துக்கலாமுன்னா..... அது வியாழக் கிழமைதான். ஏற்கெனவே செஞ்ச பேக்கேஜ் டீல் படி இவர் போய் இறங்கும் ப்ளைட்டில் தோழி கிளம்பி வந்துறணும்.


அப்புறம்?தோழியை வற்புறுத்தி 'நீயாவது போயிட்டுவா இல்லேன்னா கட்டுன காசு பாழாகிருமு'ன்னு அனுப்பி வைச்சுருக்கார்.இதனால் அறியப்படும் நீதி என்ன?


கடவுச் சீட்டுக் காலாவதியாகும் நாளைக் கணக்கு வச்சுப் புதுசு வாங்கிக்கணும்.


நம்ம வகுப்புக்கு ஒரு இன்ப அதிர்ச்சி:

இந்த வாரம் முழுசும் பயணம் செஞ்சு அலுத்துப்போன வகுப்புக் கண்மணிகளுக்கு ஒரு 10 நாள் விடுமுறை விட்டுருக்கேன். நல்லா ஓய்வெடுங்க.


நானும் அப்படியேப் பொடிநடையா ஃபிஜித் தீவுகளுக்குப் போயிட்டு வாரேன். அங்கே ஒரு கல்யாணம். ரங்குவும் கூட வருகிறார். ரெண்டு பேருக்கும் கடவுச் சீட்டு காலாவதி ஆகலை. ஆனால்....... ரங்குவின் சீட்டில் இன்னும் ஒரு தாள் (அதுவும் ஒரே ஒரு பக்கம்)தான் பாக்கி இருக்கு. பின்னே மாசம் நாலுமுறை நாட்டைவிட்டுப் போனா எப்படி?


எஞ்சாய் த ப்ரேக். பை பை. ஸீ யூ !!

57 comments:

said...

ரீச்சர்! 10 நாளா சந்தோஷம் மகிழ்சி!!

பலபேர் பின்னூட்டத்தை சாப்பிடுறீங்களே ரீச்சர்!!! இந்த 10 நாள்குள்ளே 10 பதிவு போட்டுட வேண்டியத்து தான்:-))))

said...

ரீச்சர், எங்களுக்கு சம்மர் லீவா. நல்லா போயிட்டு வாங்க.

said...

துளசி தளத்துல,பச்சை பசேல் தீவு பத்தி, ஹனிமூனா தனிமூனான்னு ரொம்ப அழகா எழுதியிருக்கீங்க டீச்சர்..

இங்கே சவுதியிலே, 50 டிகிரியில வெயில் மண்டைய பிளக்குது.. அங்கே நியூசி பக்கம் ஸ்னோ அப்டினு படிக்கவே குளிர்ச்சியா இருக்கு..

எளிமையா, இனிமையா, நிறைய படங்களோட எழுதுறீங்க.. படிக்கும் போதே நேரிலே பாக்குறது போல இருக்கு!

என்றும் அன்புடன் -தமாம் பாலா

said...

பிஜி போய் பழைய இடங்களையும் பார்த்திட்டு வாங்க.

said...

////இந்த வாரம் முழுசும் பயணம் செஞ்சு அலுத்துப்போன வகுப்புக் கண்மணிகளுக்கு
ஒரு 10 நாள் விடுமுறை விட்டுருக்கேன். நல்லா ஓய்வெடுங்க.////

ஆகா, நல்லபடியாப் போயிட்டு வாங்க டீச்சர்!
எங்களுக்கும் ஒரு சந்தோசம் இருக்கு! ஹோம் ஒர்க் கொடுக்காம போறீங்கள்ள
அதுனாலதான் அந்த சந்தோசம்!:-))))
நீங்க லீவில போறது மானிட்டருக்குத் தெரியமா?

said...

3-வது படம் ரொம்ப சூப்பர்! விடுமுறையை ஜாலியா கழிச்சுட்டு வாங்க!

said...

விடுமுறைக்கு வாழ்த்துகள். பிஜி தீவுகளை பத்தி அடுத்த பதிவு தொடரா? :-))

உங்க பதிவைப் படிக்கும்போது தோணிண கேள்வி. உங்ககிட்டதானே கேக்கனும். நீங்கதானே ரீச்சர் :-))

//நியூஸியைக் 'கண்டுபிடிச்ச' கேப்டன் குக் தான் இதையும் கண்டு பிடிச்சார்.//

அப்ப இந்த ரெண்டையும் முதல்ல தொலைச்சது யாரு?????

said...

தலைப்புல இருக்குற 'தனியா'-வை, தனியாப்பொடின்னு நெனச்சிட்டேன்...ரொம்ப சமையல் க்ளாஸ் எடுக்காதீங்க:-)))

said...

தலைப்பை வச்சு, உள்ள படிக்க இழுக்கிற வித்தையை உங்ககிட்டதான் கத்துக்கணும் டீச்சர்.. நல்லா போயிட்டு வாங்க

said...

வாங்க அபி அப்பா.

10 என்ன? 100 ஆப் போட்டா வேணான்னா சொல்லப்போறேன்?

ஜமாய்ங்க :-))))

said...

வாங்க கொத்ஸ்.

உங்க சம்மருக்கும் எங்க விண்டருக்கும் சேர்த்து ஒரு லீவு:-)

இங்கேயும் குளிர்காலத்துக்கு ரெண்டு வாரம் பள்ளிக்கூட லீவு உண்டு:-)

said...

வாங்க பாலா.

வணக்கம். நலமா?

மொதல்முறை வருகையா?

இன்னும் 3 மாசம் குளிர் விடாது.

50 ஆனாலும் மோசம். இங்கே நல்ல வெய்யல் காலம்(??) வந்தாலும் 30 தாண்டாது.

வெய்யிலோ குளிரோ எதுவுமே மிதமா இருந்தாத்தான் ரசிக்க முடியும்.

said...

வாங்க குமார்.

சரியா 21 வருசமாகுது. பழைய இடங்கள் மட்டும்தான் அங்கே. பழைய நண்பர்கள் பலர் நியூஸியிலேயும் ஆஸியிலேயும்தான்.

said...

வாங்க வாத்தியார் ஐயா.

மானீட்டருக்கும் லீவு கொடுத்தாச்சு.
கோடை விடுமுறையை அனுபவிக்கட்டுமே.
அவருக்கும் வகுப்பை மேய்ச்சக் களைப்பு இருக்காதா? :-))))

said...

வாங்க கவிநயா.

பதிவுக்கு மேட்டர் சிக்குதான்னு பார்த்துக்கிட்டும் வருவேன்:-)

said...

வாங்க ஸ்ரீதர்.

பதிவு எழுத ஆரம்பிச்ச காலத்தில் ஃபிஜித் தீவு தொடர் (21 பகுதிதாங்க) ஒன்னு எழுதினேன். அதோட ரெண்டாம் பகுதியையும் இனி எழுதுனா ஆச்சு:-)

//அப்ப இந்த ரெண்டையும் முதல்ல தொலைச்சது யாரு?????//


யார் கண்டா? ஒருவேளை நானாகவும் இருக்கலாம் த்ரேதாயுகத்தில்!!!

said...

வாங்க தங்ஸ்.

ஒரு பத்து நாளைக்கு 'ஆக்குவதை' விடலாமுன்னு நினைச்சாலும்,நீங்க விடமாட்டேங்கறீங்க:-)))))

said...

வாங்க நட்சத்திரமே.

திடீர்ன்னு நம்ம வீடு ஜொலிச்சதும் திகைச்சு நின்னுட்டேன்.

தலைப்புக் கயமைன்னா சொல்றீங்க????

இல்லைதானே?

முதல் நாலுவரிதான் முக்கியமாம்:-)

said...

நல்லா சுத்திட்டு பதிவுகள் தேத்திட்டுவருவீங்க .. சரி சரி.. :)

said...

ஃபிஜி கல்யாண போட்டோக்கள் வேணும்.

எனக்கு லீவெல்லாம் விட்டாப் பிடிக்காதுப்பா.:)
அதால அங்க போயும் ஒரு பதிவாவது போடுங்க.
துளசி மணமக்களுக்கு எங்க வாழ்த்துகளைச் சொல்லுங்க.

said...

//நானும் அப்படியேப் பொடிநடையா ஃபிஜித் தீவுகளுக்குப் போயிட்டு வாரேன். அங்கே ஒரு கல்யாணம். //

பிஜில தானே ஒரு மொட்டயன் புரட்சி பண்ணினான்? மறக்காம கேமிரா கொண்டு போங்க. அங்கயும் கல்யாண டிபன்ல கேசரி தானா?னு மறக்காம எழுதவும். :p

இந்த கட்டுரையும் ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க.

said...

அழகானத் தீவு... அங்கு போய் வர வேண்டும்... இந்த வருட இறுதியில் வழி இருக்கிறதா என பார்க்க வேண்டும்....

said...

ஐய்யா ஜாலி...என்ஜாய் பண்ணிட்டு வாங்க ;))

said...

ரீச்சர்ர்ர்ர்,

இப்டி விட்டுட் போறீங்களே... (ஐயா.....ரீச்சர் போயாச்சி.....இனி ஜாலியா தூங்கலாம்....)அட சே...மறந்தே போச்சே....மானிட்டர் வேலைய வேற பாக்க சொன்னாங்களே....நாம என்னாதான் வேணாஆம்.னாலும் கடம..நம்பளை தேடி வருதுப்பா....

கயலக்கா பழய(முந்தைய) பதிவெ(பதிவின் பின்னூட்டத்த) கண்டுக்காம இங்க தனியா வந்து பின்னூட்டமா? விட்ருவோமா....ம்ம்...

வல்லிஹிம்மன் வேற சொல்லி இருக்காங்க...அவங்களுக்கு லீவு விட்டா பிடிக்காதாம்...:-P. ஸோ..நானு மானிட்டர் வேலை பாக்கறதுங்கறது காலத்தினோட கட்டாயம் ஆகுது..:D..அதுக்காக பதிவு எல்லாம் எழுதி மக்களை துன்புறுத்தமாட்டேன்..(ஹி..ஹி..அந்த அளவுக்கெல்லாம் சரக்கு இல்லியே). ஜஸ்டு....பேசினவங்க பேரு எல்லாம் ஒரு சீட்ல எழுதி (பேசினா பேரு மட்டும், ரொம்ப பேசினா "அ" போட்டு,(அதாங்க "அதிகம்") பேரு......ரோஓம்ம்ப பேசினா மிக (அ) போட்டு பேரு எழுதி ரீச்சர் கிட்ட குடுத்துருவேன்..ஆமாஆ...

said...

N JOY-

CAPITAL LETTERSLA SOLLIRUKEN ANTHA ALAVUKU ENJOY PANNITU VAANGA.

:))))))))))))))))))

said...

அம்மாவுக்கு ஆசை காட்டி அய்யா கவுத்திட்டாரா.. பாவம் உங்க தோழி.
அழகிய தீவைப் பற்றிய விவரங்கள் அருமை.
Have a nice time madam!

said...

Very nice post, my friend, very nice!
Happy weekend

said...

Happy Holidays Teacher!

Ensoooooooyyyyyyyyyy!:)))

said...

வாங்க கயலு.

என்னத்தை சுத்தறது? இதுவும் சின்னத் தீவுதான். ஆனா அந்த நாட்டின் தீவுக்கூட்டத்துலே பெருசு இது. காரில் போனா முழுசா ஒரு வட்டம் போட 12 மணி நேரம் போதும்:-)

said...

வாங்க வல்லி.
லீவு பிடிக்காதுன்னு சொல்லும் ஒரே மாணவி நீங்கதான்:-)))))

சமீபத்துலே ஒரு நியூஸ்கூட வந்துச்சே 10 வருசமா பள்ளிக்கூடத்துக்கு லீவே போடலை ஒரு பொன்ணுன்னு. அது நீங்கதானா? :-))))

கல்யாணப்போட்டோ போட்டுறலாம். பிரச்சனை இல்லை:-)

said...

வாங்க அம்பி.

அந்த 'மொட்டையருக்கு' இப்பத் தலை நிறைய முடி வளர்ந்துருச்சாம்:-)))))

கல்யாணத்துலே கேசரி இருந்தா உங்களை நினைச்சுக்கிட்டு இன்னும் கொஞ்சம் கூடத் தின்னுக்கவா?

இது குஜ்ஜு கல்யாணம். இனிப்புகள் எல்லாம் வேறுவகை.

said...

வாங்க விக்கினேஷ்வரன்.

தீவுதான் உங்க ஹாலிடே டெஸ்டினேஷன்ன்னு இருந்தா நியூஸிக்கு வாங்க. இதுவும் தீவுதான்:-)

வந்தாத் தெற்குத்தீவுக்கு வாங்க.

said...

வாங்க கோபி.

ஜாலிதான். எட்டுநாளில் என்ன மாதிரி ஜாலின்னு பார்க்கணும்:-)))

said...

வாங்க விஜய்.

நீங்க மானீட்டரா? தனக்குத்தானேத் திட்டமா?

கொத்ஸ்கிட்டே கேக்கணும். அவர்தான் வகுப்புத் தலைவர்.

மொதல்லே நீங்க அரியர்ஸ் எல்லாம் வைக்காமப் படிச்சுப் பின்னூட்டுங்க.

கிளாஸ் லீடருக்குன்னு சில கட்டுப்பாடுகள் & கடமைகள் இருக்கு.

said...

வாங்க புதுகைத் தென்றல்.

கூடியவரை முயற்சிக்கிறேன்:-)

said...

வாங்க ராமலக்ஷ்மி.

அவருக்குப் புது பாஸ்போர்ட் வந்துருச்சு. அவரோட மகள் ஒரு ட்ரிப் (அம்மா அப்பா ரெண்டு பேருமா) போகச் சொல்லி ஸ்பான்ஸார் செஞ்சுருக்காங்க இப்ப:-)

said...

வாங்க புதுவண்டு.

மேட்டர் தேறுதான்னு பார்க்கணும்.

நான் விடுமுறைக்குப் போறென்னதும் பாருங்க போர்ச்சுகல் நாட்டுக்காரர் கூட வந்து வாழ்த்தறார்:-))))))

said...

ரீச்சர்,

நீங்க இன்னும் போகலையா? சே....போய்ட்டிங்கன்னு நெனச்சி.....ஹி..........ஹி.....ஹி...சாரி...ரீச்சர்...(இனிமே ஜாக்கிரதையா இருந்துகணும்....ம்ம்..ம்...)

ரிச்சர், இருந்தாலும் இந்த உள்குத்து அநியாயம் . அது என்னா

// கிளாஸ் லீடருக்குன்னு சில கட்டுப்பாடுகள் & கடமைகள் இருக்கு.//

அப்போ "கண்ணியம்"..... அது வேணாமா....இல்ல...உனக்கு எல்லாம் அது எங்க வரபோகுதுன்னு என்னை நினைச்சி எழுதாம விட்டுடிங்களா? :((((((

சரி ரீச்சர்,

நீங்க வரதுக்குள்ள பழைய பாட(பதிவு)மெல்லாம் படிச்சி ஒழுங்கா பின்னூட்டம்(இம்போசிஷன்?) எழுதி வக்கிறேன்ங்க....:(

said...

///துளசி கோபால் said...
வாங்க பாலா.

வணக்கம். நலமா?

மொதல்முறை வருகையா?///

வணக்கம், டீச்சர்.நலம் விசாரித்ததுக்கு நன்றி.நீங்களும் நலம் தானே? :-) ஆமாம், முதல் முறை தான்.

கொஞ்ச நாள் முன்னாடிலேர்ந்து உங்க பதிவெல்லாம் படிக்கிறேன். இப்போதான் நம்ம வகுப்பு அறை சுப்பையா வாத்தியார் வழிகாட்டுதலில் பின்னூட்டம் போடவும் கத்துகிட்டு இருக்கிறேன்.

நமக்கு தெரிஞ்சதை நாலு பேரோட பகிர்ந்து கிட்டா எவ்வளவு நல்லதுனு உங்க பதிவை பார்க்கும் போது தோணுது. நன்றி !!!

said...

துளசி டீச்சரம்மா ! வணக்கம்.

இவரு உலகம் முழுக்க டான்ஸ் ஆடரவறு
உங்க ந்யூ சீ க்கு வரும்போது நீங்க இல்லையாமே !

இங்க வந்தாவது பாக்கச்சொல்றாரு.

அது சரி !

சொர்கமே என்றாலும் அது நம்மூர் போலாகுமா

http://www.youtube.com/watch?v=iwnsDAgRe9U
இத மனசிலே வச்சுன்டு
" சிறு முயற்சி " மேடம் ஒரு பாட்டு போட்டு இருக்காங்க பாருங்க.
சும்மாச்சும் சொல்லக்கூடாது.
சூபர்.
அதையும் இங்கே பாருங்க.

http://ceebrospark.blogspot. com

சுப்பு ரத்தினம்.
தஞ்சை.

said...

சந்தோஷமா போய்ட்டு வாங்க.

said...

மேடம்,
புதுப் பதிவு போட்டு இருக்கேன், நேரம் கிடைக்கும்போது வந்து பாருங்க

said...

போயிட்டு வாங்க, ம்ம்ம்ம்ம்ம்ம்ம்., முன்னால் கொடுத்த கமெண்ட் பப்ளிஷ் ஆச்சா புரியலை!! எர்ரர் வந்துடுச்சு, வழக்கம்போல்,
வெளிநாடுகளிலேயே சுத்திட்டு இருக்கீங்க, ம்ம்ம்ம்ம்ம் பெருமூச்செல்லாம் ஒண்ணும் இல்லைங்க, சும்மா, கொஞ்சம் தலைசுத்தல், அவ்வளவு தான்!

said...

டீச்சர்,

இந்நேரம் பிஜி தீவுகளில் இருப்பீர்கள். விடுமுறையை நன்றாக என்ஜாய் பண்ணி கல்யாணத்தையும் கலக்கலாய் முடித்து வாருங்கள்.

said...

துளசி மேடம்,

எங்க உங்களை ரொம்ப நாளா ஆளை காணோம்..ஒரு வாரம்னு சொனீங்க ..நீங்க இல்லாம என்னவோ போல இருக்கு :-(

நீங்கள் உங்களுடைய டெம்ப்ளட் ல் இருக்கும் தேன்கூடு நிரலியை நீக்கி விட்டால் ..மிக மெதுவாக திறக்கும் பின்னூட்ட பகுதி பிரச்சனை சரி ஆகும்..ஒவ்வொரு முறை வரும் போதும் கூற வேண்டும் என்று நினைப்பேன் இப்போது தான் நினைவாக கூறினேன்

said...

அடடே!!!நான் ஒரு நாலுநாள் வெளியூர் போனப்ப இவ்ளோ சமாச்சாரம் நடந்துடுச்சா? வழக்கம்போல் கடைசி பெஞ்ச்தான்!!!
ப்ரவாயில்லை.
நல்ல அனுபவித்துவிட்டு வாருங்கள்! துள்சி! நிறைய படங்களோடு பதிவிடுங்கள். ஹுக்கும்! உங்களுக்கு
சொல்லிக் கொடுக்கணுமாக்கும்!

said...

விஜய்,

பின்னூட்டங்கள் எல்லாம் ரெடியா? :-))))

said...

தமாம் பாலா,

இப்படிப் பதிவுகளில் எழுதுவது நமக்கே ஒரு நினைவுப் பெட்டகம்தான். சில வருசங்கள் கழிச்சுப் பார்க்கும்போது நாமா? இப்படி? ன்னு இருக்கும்.

நான் இங்கே வந்தபிறகு இன்னும் விவரமானவளா மாறிட்டேன்:-))))
அதான் நிறையப் படிக்கறொமுல்லெ?

said...

வாங்க கீதா.

சிலசமயம் இப்படித்தான் படுத்துது. நல்ல நல்ல பின்னூட்டங்கள் எழுதி போஸ்ட் பண்ணதும் எர்ரர் வரும்போது ச்சீன்னு போகுது. திரும்ப எழுதும்போது முதல்தடவை வந்த ஃப்ளோ வர்றதில்லை(-:

அதனால் எனக்கே நல்லதாத்ன் தெரியும் பின்னூட்டத்தை காபி செஞ்சுக்கிட்டுப் பப்ளிஷ் செய்யறதுண்டு.

தலைசுத்தல் எனக்கும்தான். ப்ரெஷர் மருந்து ஒரு வருசமா எடுத்துக்கறேன்.

said...

வாங்க தமிழ் பையன்.

நீங்க சொன்ன தளத்தை இன்னும் பார்க்கலை. பார்த்துடறேன்.

said...

வாங்க சதங்கா.

பயணத்தை முடிச்சுட்டு வந்தாச்சு.
இனி நம் பணி தொடரணும்:-)))))

said...

கிரி,

வந்துட்டேன். தேன்கூடு நிரலி என் டெம்ப்ளெட்லெ சேர்க்கவே இல்லையேப்பா.

ஆனாலும் ப்ளொக்கர் சில சமயம் படுத்துதே(-:

said...

வாங்க நானானி.

திரும்பிப் பார்க்கரதுக்குள்ளே சரசரன்னு பதிவுகள் வெளிவந்துக்கிட்டு இருக்கு பார்த்தீங்களா? நம்ம மக்கள் எழுதிக் குவிக்கிறாங்க. படிக்கத்தான் நாம் நேரம் திருடணும்:-))))

said...

அது....அது.... வந்தூஊஉ.... ம்ம்.... எல்லாம் படிச்சிட்டன் டீச்சர்....ஆனா பின்னூட்டம்லாம் எழுதி எடுத்துட்டு வரப்போ ரொம்ப மழை,காத்தா? அப்பிடியே காணா பூட்சி டீச்சர்.

சாரிங்க மேம், நிஜமாவே இப்போதா படிச்சிட்டு இருக்கேன். நான் கொஞ்சம் ஸ்லோ ரீடர்தான். பட், ரொம்ப பீல் பண்றேன். இது எவ்ளோ பெரிய விசயம்னு. வால எல்லாம் சுருட்டி வச்சிட்டேங்க. சீக்கிறமே நல்ல புள்ளன்னு பேரு எடுக்குறென் பாருங்க.

said...

வாங்க சுப்பு ரத்தினம்.

உங்க பின்னூட்டம் ஏனோ பப்ளிஷ் ஆகமாட்டேங்குதே.

அதனால் இங்கே காபி & பேஸ்ட் செஞ்சுருக்கேன்.

//துளசி டீச்சரம்மா ! வணக்கம்.

இவரு உலகம் முழுக்க டான்ஸ் ஆடரவறு
உங்க ந்யூ சீ க்கு வரும்போது நீங்க இல்லையாமே !

இங்க வந்தாவது பாக்கச்சொல்றாரு.

அது சரி !

சொர்கமே என்றாலும் அது நம்மூர் போலாகுமா

http://www.youtube.com/watch?v=iwnsDAgRe9U
இத மனசிலே வச்சுன்டு
" சிறு முயற்சி " மேடம் ஒரு பாட்டு போட்டு இருக்காங்க பாருங்க.
சும்மாச்சும் சொல்லக்கூடாது.
சூபர்.
அதையும் இங்கே பாருங்க.

http://ceebrospark.blogspot. com

சுப்பு ரத்தினம்.
தஞ்சை. //


இந்தப் பாட்டுக்காகவே படம் வாங்கி வச்சுருக்கேன்.

தாமதமாக் கவனிச்சதுக்கு மன்னிக்கணும்.

said...

வாங்க சாமான்யன் சிவா.

உங்க பின்னூட்டமும் பப்ளிஷ் ஆகமாட்டேங்குது.

//சந்தோஷமா போய்ட்டு வாங்க.//

நன்றிங்க. போயிட்டு வந்துட்டேன்:-)

said...

விஜய்,

// சீக்கிறமே நல்ல புள்ளன்னு பேரு எடுக்குறென் பாருங்க.//

அது :-))))