Sunday, June 01, 2008

யாம் செய்த 'யாம்'.

இன்னிக்கு 'நம்ம வகுப்புக் கண்மணிகளுக்காக என்ன சமைக்கலாமு'ன்னு யோசனையா இருக்கும்போது 'யாம் இருக்க பய(யா)ம் ஏன்?' ன்னு கேட்டுகிட்டேச் சிவந்த கண்ணோடு என்னைப் பார்த்துச்சு இந்த யாம்.


இது இங்கிலந்துப் பக்கம் இல்லையோ என்னவோ? நமக்குத் தெரிஞ்ச ஒருத்தர்,
(இங்கிலாந்துப்பெண்மணி) வீட்டுக்கு வந்தப்ப இங்கத்துக் காய்கறிகளைப் பத்திப் பேச்சுவந்துச்சு. அவுங்க வந்து ஒரு ரெண்டுவாரம்தான் ஆகி இருந்துச்சு அப்ப. இந்த 'யம் எனக்கு ரொம்ப யம்மியா இருக்கு'ன்னு சொன்னாங்க. முதன்முதலா இங்கேதான் இதைப் பார்த்தாங்களாம்.

New Zealand Yam ன்னு பொதுவா இங்கே சொன்னாலும் நம்ம விக்கியண்ணன் சொல்லும் பெயர் Oca.


நம்மூர்லே பச்சை மஞ்சள் இருக்கு பாருங்க ஏறக்கொறைய அப்படியான வடிவம். சிவப்பும் மஞ்சளுமான நிறம். உள்ளே இளமஞ்சளா இருக்கு.
இங்கே உள்ள மக்களுக்கு எதையெடுத்தாலும் அவனுக்குள்ளே(எவன்?) போட்டு 'பேக்' பண்ணித் தின்னணும். நமக்கு? எதையெடுத்தாலும் தாளிச்சுக்கொட்டிக் கறியாப் பண்ணிக்கணும்.
இது ரெண்டுக்கும் இடைப்பட்டதா எதாவது செய்யணுமுன்னு தோணிப்போச்சு. ஒரு நாள் 'நம்வழி'யில் செஞ்சதை மகளுக்குப் பரிமாறுனப்ப நல்லா இருக்குன்னு சொல்லிட்டாள். காய்கறிகள் எதைக் கொடுத்தாலும் 'யக்கி யக்கி'ன்னு சொல்லும் பெண் 'இதை யம்மி'ன்னு சொன்னதும் பிடிச்சுக்கிட்டேன்.


இவள்தான் நம் வீட்டின் சுவை 'மானி.'


இதுலே சிகப்பு நிறம் இல்லாமலும் இளமஞ்சளா ஒரு வகை சமீபத்தில் வர ஆரம்பிச்சிருக்கு. அதுக்குப்பெயர் கோல்டன் யாம்! தங்கத்தை விடமாட்டேங்கறாங்கப்பா:-))))

'கோல்டன் கூமரா'ன்னு இருப்பது என்ன தெரியுமா? நம்மச் சக்கரைவள்ளிக் கிழங்குதான். வெள்ளைத்தோலா(??) இருக்கும் மண்கலரில்:-)


சீஸன் வந்து எப்ப இது கிடைக்குதோ....அப்பெல்லாம் யாமே யாம். நம்ம ரெஸிபியைப் பார்க்கலாம் வாங்க.


யாம் :285 கிராம்

பச்சை மிளகாய் : 2

மிளகாய்ப்பொடி : அரைத்தேக்கரண்டி

கறிமாப் பொடி : 1 தேக்கரண்டி

உப்பு : அரைத் தேக்கரண்டி

பெருங்காயம் : ஒரு சிட்டிகை

எண்ணெய் : ரெண்டு தேக்கரண்டி

யாமைக் கழுவி எடுத்துக்கணும். மண்ணெல்லாம் இருக்காது.
தலை & கால் பக்கம் ( எது தலை எது காலுன்னே புரியாமல் இருந்தாலும்!!)
லேசாக் கத்தியால் சுரண்டிறணும்.
இப்ப வட்டவட்டமா அரை செ.மீ தடிமனில் ஸ்லைஸ் செஞ்சுக்குங்க.
ஒரு கண்ணாடிப் பாத்திரமோ இல்லை மைக்ரோவேவில் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பாத்திரமோ எடுத்து அதில் நறுக்கிய துண்டங்களைப் போட்டு, ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீர் தெளித்து 4 நிமிசம் மைக்ரொவேவ் அவனில் 100 % பவரில் வச்சு எடுத்துக்கணும். அடுத்து ஒரு ஃப்ரையிங் பேன் ( குழியான அடிப்பாகம் இல்லாமல் தட்டையா இருந்தால் ரொம்ப நல்லது) அடுப்பில் வச்சு(அடுப்பு எரிய வேணாம்) ரெண்டு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதில் மி. & க.பொடிகளையும் உப்பு & பெருங்காயத்தையும், நறுக்கிய ப.மிளகாயையும் சேர்த்துட்டு அடுப்பை எரிய விடுங்க. சிம்மிலே இருக்கட்டும் தீ.



எண்ணெய் சூடாக ஆரம்பிச்சதும் அதில் சேர்த்த மசாலாக்களை ஒரு கிளறு கிளறிட்டு, வெந்த யாம் துண்டங்களை மட்டும் பரவலாக அதில் சேர்க்கணும்.
யாமில் கொஞ்சூண்டு தண்ணீர், பாத்திரத்தின் அடியில் இருக்கும். அது வேணாம். கொஞ்சம் கொளகொளன்னு வெண்டைக்காய்த் தண்ணீர் போல இருக்கும்.


அப்பப்பக் கொஞ்சம் பிரட்டிவிட்டால் போதும். துண்டங்களில் எல்லாம் மசாலா சரிசமமா ஒட்டிப்பிடிக்குதான்னு பாருங்க. லேசா பாத்திரத்தைக் குலுக்குனாவே போதும். அஞ்சு நிமிசத்தில் கொஞ்சம் கிரிஸ்ப்பா வந்துரும். அவ்வளோதான்.

அடுப்பு ஆஃப்.

இந்தக் கறிமாப்பொடி இல்லைன்னா குடி முழுகிறாது. இருக்கவே இருக்கு கடலை மாவு. மிளகாய்ப்பொடியை இன்னும் ஒரு அரைக்கரண்டி கூடுதலாச் சேர்த்துட்டு அதில் ஒரு டீஸ்பூன் கடலைமாவையும் போட்டால் ஆச்சு. எல்லாம் ஒரு லேசான மொறுமொறுப்பு வர்றதுக்குத்தான்.



இல்லே....எனக்குக் கறிமாப்பொடிதான் வேணுமுன்னு அடம் பிடிச்சா......


இதோ அதுக்குண்டான செய்முறை. (துள்சியின் வழக்கப்படி, "செய்யறது செய்யறோம் கொஞ்சம் கூடுதலாச் செஞ்சு, பாக்கியை ஃப்ரிட்ஜில் வச்சுக்கிட்டா வேற சமையலுக்கு ஆச்சு". இல்லை?)

கடலைப்பருப்பு : ரெண்டு மேசைக்கரண்டி

உளுத்தம் பருப்பு : உ. பருப்பு ரெண்டு மேசைக்கரண்டி

சீரகம் : 1 மேசைக்கரண்டி

மிளகு : 1 மேசைக்கரண்டி

விரும்பினால் மட்டும் : துளி எண்ணெயில் வறுத்த மிளகாய் வத்தல் 4



இது எல்லாத்தையும் வெறும் வாணலியில் நல்லா வாசனை வர வறுத்து, ஆறுனதும் பொடிச்சு வச்சுக்கணும்.

மிளகாய் வத்தல் வேணுமுன்னா ரெண்டு மூணு சேர்த்துக்கலாம். இதை மட்டும் கொஞ்சம் எண்ணெயில் லேசா வறுத்துக்கணும். வேலை மெனெக்கடணுமா இதுக்குன்னு? வேணாம். வேற சமயலுக்கு எதாவது தாளிக்க வேண்டி இருக்குமுல்லே....அப்ப நாலைஞ்சு காய்ஞ்ச மிளகாயைக் கிள்ளாம முழுசா அந்தத் தாளிப்பில் சேர்த்துட்டு, உடனே அதை மட்டும் தனியா எடுத்து வச்சுக்கிட்டா ஆச்சு.



பிகு: நம்ம வீட்டுச் சமையலில் காரம் உப்பு எல்லாம் வழக்கத்தைவிடக் கொஞ்சம் குறைவுதான். அதனால் உங்க இஷ்டத்துக்கு இவைகளை 'இப்போதைக்குச்' (ஆடும்வரை ஆட்டம்) சேர்த்துக்குங்களேன்:-)))

38 comments:

said...

//இங்கே உள்ள மக்களுக்கு எதையெடுத்தாலும் அவனுக்குள்ளே(எவன்?) போட்டு 'பேக்' பண்ணித் தின்னணும். நமக்கு? எதையெடுத்தாலும் தாளிச்சுக்கொட்டிக் கறியாப் பண்ணிக்கணும்.//

இது டாப்பு டீச்சர். இன்ச் பை இன்ச் வாழ்க்கையை கூர்மையாக கவணிக்கிறீர்கள் போங்க.

புகைப்படங்களும் அருமை. ரங்கமணிக்கு வாழ்த்துக்கள். :))

said...

சூப்பர். செஞ்சு பார்த்திருவோம்.

said...

வாங்க சதங்கா.

வாழ்க்கையை அனுபவிக்கணுங்கறதுக்கு அதைக் கூர்ந்து பார்க்கணும்தானே?

ஆமாம். இப்போ எதுக்கு 'ரங்கமணி'க்கு வாழ்த்து?

எது செஞ்சாலும் வாயைத் திறக்காமல்( ஒரு பாராட்டுக்கும்கூட!) வெட்டறதுக்கா? :-)))

said...

வாங்க பிரேம்ஜி.

'ப்ராக்டிக்கலில் பாஸ் மார்க்' வருதான்னு பாருங்க!

Anonymous said...

முயற்சிக்க்கிறேன்..:)நன்றி

said...

பாவம் ரங்கமணி. இவ்ள அருமையா ஃபோட்டா புடிச்சிருக்காருனு சொல்ல வந்தேன் :))

said...

வாங்க தூயா.

இப்போதான் அங்கே உங்க வீட்டில் மிளகு ரசம் 'பார்த்துட்டு' வந்தேன்:-)

said...

சதங்கா,

//பாவம் ரங்கமணி. இவ்ள அருமையா ஃபோட்டா புடிச்சிருக்காருனு சொல்ல வந்தேன் :))//

இருக்குமுல்லெ?

நம்ம வீட்டில் எல்லாம் 'ஒன் வுமன் ஷோ'தானப்பு:-)

Anonymous said...

//
வாங்க தூயா.

இப்போதான் அங்கே உங்க வீட்டில் மிளகு ரசம் 'பார்த்துட்டு' வந்தேன்:-)
//

உங்க வீட்டில் பல அருமையான செய்முறைகள்...பார்க்கவே பசி வருது..

உங்க வீட்டு ரசம் செய்முறையையும் பகிர்ந்துகொள்ளுங்களேன். :)

said...

ஹலோ! வுமன் ஆப் ஒன் வுமன் ஷோ!
காணாத காயெல்லாம் கொண்டு வந்து
தாளிச்சு கொட்டித்தரும் துள்சி!!
'யாமெல்லாம்' எங்குபோவது?
பேசாம சேப்பங்கிழங்கில்
செய்து பாத்துரவேண்டியதுதான்!
என்ன நாஞ்சொல்றது? சேரிதானே?

said...

தூயா,

நம்ம வீட்டுலே 'ரசம்' கொஞ்சம் தலையைச் சுத்தி மூக்கைத் தொடும் ரகம்.

எங்க மாமியார் போற்றும் ரசம் அது:-))))

நான் சமையல் ரொம்ப நல்லாச் செய்யறதாக அவுங்களுக்கு ஒரு நினைப்பு.:-))))

அதையும் ஒரு நாள் செஞ்சாப்போச்சு.

said...

வாங்க நானானி.

இப்ப எதுக்கு 'அனாவசியமாச் சேப்பக்கிழங்கு' பேரை இழுத்தீங்க?

மொறுமொறுன்னு சேம்பு ரோஸ்ட் இந்தக் க்ஷணமே வேணும்.....ஊம்ம்.....ஊம்......

அதுவும் கோமளா மாமி செய்யும் ரோஸ்ட்....ஆஹா......



இங்கே ஃப்ரோஸன் கிடைக்குது. ஒண்ணும் வேலைக்காகாது(-:

மோர்க்குழம்புக்கு மட்டும் சேரி!

said...

யேம் என்றால் சேனக்கிழங்கு இல்லையா? இது என்ன சிறு கிழங்கு மாதிரி என்னத்தையோ காமிக்கறீங்க?

சேப்பங்கிழங்கை குக்கரில் வேக வைச்சுக்கிட்டு இப்படி வட்ட வட்டமா நறுக்கி, கறிப்பொடியில் நல்லா பிசிறி அப்புறம் அவனில் வைத்தா வருது மொறு மொறு சேப்பங்கிழங்கு ரோஸ்ட். இதையும் அப்படியே செய்யலாம் போல இருக்கே!! :))

said...

"யம்மி யம்மி யாம் யாம்!"

கடைசிப் படத்தைப் பார்த்ததும் தோன்றியது!

said...

ரங்கமணி சார் பாவம்!
இப்படிப் புதுசு புசுசா செஞ்சு
டெஸ்டிங்கிற்கு அவரைத்தான் பயன் படுத்துகிறீர்கள் போலிருக்கிறது:-))))

said...

அட! இக்கரையிலும் பச்சை...அக்கரையிலும் பச்சை!!!!
யாம் 'யாம்'க்கு ஏங்கினால்
நீவீர் 'சேப்பங்கிழங்குக்கு' ஏங்குவீரோ?
கூட்டி கழிச்சுப் பாத்தால் கணக்கு சரியாத்தான் வெருது!!!!!
அப்ப சேரி!!
ஏன்னோட சேப்பு ரோஸ்டும் சூ..ப்பராயிருக்கும்மாக்கும்!!

said...

இன்னக்கி எஞ்சமையலறையில்
'சேம்பு ரோஸ்ட்!!' சாப்பிட வாங்க துள்சி!

said...

ஸ்ஸ்ச்ச்ச்ச்... சூப்பரு,.. படங்களை பார்த்தாலே நாக்குல தண்ணி வருது:))

said...

//ஆமாம். இப்போ எதுக்கு 'ரங்கமணி'க்கு வாழ்த்து?

எது செஞ்சாலும் வாயைத் திறக்காமல்( ஒரு பாராட்டுக்கும்கூட!) வெட்டறதுக்கா?//

செஞ்சதே அவர் தானே?னு சதங்கா சொல்ல வந்தாங்க. மை டாடி நாட் இன் குதிர்னு நீங்க முந்திகிட்டீங்க டீச்சர். :)

சக்கரவள்ளி கிழங்கு எல்லாம் இங்க வரதே இல்லையே. சேம்புல டிரை பண்றேன். :)

said...

செக்கச்செவந்த பயம்..இது தேனாட்டம் இனிக்கும் பயம்...

said...

yaam yaam யாம் யாம் யும்மி யும்மி

நாங்க எல்லாம் சேந்து சொல்றோம் - எவன் இல்லாமல் அவன் காலந்தள்ள முடியாது அங்கே

ஆமா இவ்ளோ நகச்சுவை ( நகம் கடிப்பீங்களோ ) எப்படி வருது - பலவகையிலே பாவம் கோபால்

said...

வாங்க கொத்ஸ்.

யானைத் தும்பிக்கை தடிமன் 'யாம்'கூட ஆப்பிரிக்க நாடுகளில் கிடைக்குது. ஃபிஜியில் இன்னும் சில வகை (உள்ளே நீலக் கலரா இருக்கும்)களும் உண்டு. இதில் எல்லாம் தோல் தடிமனா இருக்கும்.

நம்மூர் சிவப்பனுக்கு மட்டும் தோலே கிடையாது. வேலை மிச்சம்:-)

said...

வாங்க ராமலக்ஷ்மி.
ஜாம் ஜாமுன்னு (யாம் யாமுன்னு)

'உள்ளதைக் கொண்டு ஓணம்' கொண்டாடிக்கிட்டு இருக்கேன்:-)

said...

வாங்க வாத்தியார் ஐயா.

ரங்கமணி பாவம்தான். என்ன செய்ய?

இந்த கோபால கிருஷ்ணன் உதவிக்கு வரலாம்தான். ஆனா......

ஒன்னும் சொல்லிக்க முடியாது:-)

said...

நானானி.
எம்பேரைச்சொல்லி இன்னும் நாலு கிழங்கு ரோஸ்டை உள்ளே தள்ளுங்க.

அரைச்சுப் பிசறிய மசாலா தானே?

ஹூம்.........

(அதெல்லாம் கண்டுக்காதீங்க. மூச்சுக் கொஞ்சம் சத்தமா வந்துருச்சு)

said...

வாங்க ரசிகன்.

உங்க பாராட்டுப் பார்த்து இப்ப என் கண்ணுலே தண்ணி:-)))

said...

வாங்க அம்பி.

டாடி நிஜமாவே நாட் இன் குதிர்.

அன்னிக்கு, அந்த சமயம் அவர் ஃப்ளைட்லே 'வெல்கம் ட்ரிங்' குடிச்சுக்கிட்டு இருந்துருப்பார்.

இது சக்கரைவள்ளி வகை இல்லை. ஆனாலும் இதை வச்சுக் கேசரி செய்ய முடியுமான்னு தெரியலை:-)

said...

வாங்க தங்ஸ்.
இது ஏயைக்குன்னு பொறந்த ப'யம்':-)

said...

வாங்க சீனா.

ஒரு ஆசைக்குக்கூட நகம் கடிக்க முடியாது..... எங்க பாட்டி (பார்த்தா) கொன்னே போட்டுருவாங்க.

எச்சில் ஆகுமோ? ம்....ஊஹூம்......

தரித்திரமாம்.

சரியாச் சொன்னேனா அம்மம்மா?

(கரெக்ட்டாம். பாட்டி மேலே இருந்து புன்முறுவல் காமிக்கிறாங்க.)

said...

இப்படீஈஈஈஈஈஇ சாப்பிட முடியாத சமாசாரமாப் படம் போட வேண்டியது. நாங்க பார்த்து அய்யோடா அப்பாடானு கிடக்கணும். :)

கைக்கு கை, எழுத்துக்கு எழுத்து. என்னய்யா எல்லாரும் சமையல்ல இறங்கிட்டீங்க இப்படி??
உம்ம் உம்ம் நடக்கட்டும். நீங்கள்ளாம் சமைங்க. நான் சரியா இருக்கானு சாப்பிட்டு சொல்றேன்:))

said...

இதில பாட்டி வேற வலம் வராங்க. அவங்க எல்லாம் ப்ளாக் போட்டா எப்படி இருக்கும் துளசி:)

said...

வாங்க வல்லி.

எழுத மேட்டர் இல்லைன்னா மனக்கவலை எதுக்கு?

இருக்கவே இருக்கு கைவண்ணம். அதான் சமையலறைக்குள்ளே புகுந்துக்கறது:-)))

அந்தக் காலத்துலே இருந்து சாப்பாடே ஒரு முழுநேரத்தொழிலா இருக்கேப்பா:-)

பாட்டி இருந்துருக்கணும்? நான் பார்க்கும் சினிமாக்களைப் பார்த்தே எனக்கு மண்டகப்படி நித்தியம்:-)))

எப்படியெல்லாம் பாதுகாத்து வளர்த்தேன்....இப்படிச் சீரழிஞ்ச சினிமாவா பார்க்கறே.... இரு உன்னை. போடு ....

தொடை பெல்லம் கூட உண்டுப்பா(-:

ஆனா இப்ப அது செல்லாது. சைல்ட் அப்யூஸ்லே பாட்டியை புக் பண்ணிருவாங்க!

said...

////ஆமாம். இப்போ எதுக்கு 'ரங்கமணி'க்கு வாழ்த்து?

எது செஞ்சாலும் வாயைத் திறக்காமல்( ஒரு பாராட்டுக்கும்கூட!) வெட்டறதுக்கா?//

அதற்கும் நாமெல்லாம் கொடுத்து வச்சிருக்கணுமே மேடம். அந்த விஷயத்தில் என் வீட்டிலும் டபுள் ஓகேதான். ஆனால் நல்லாயிருந்தா மட்டும் வாய் திறந்து சொல்லுவார். [அப்போ, மற்ற நேரங்களில் வாயில் வைக்க விளங்காதா...?-னு யாரும் கமெண்ட் போட்டிர வேண்டாம்,ப்ளீஸ்(குறிப்பாக அம்பி):-)!

said...

வல்லியம்மா வலைக்குள் (பெரியவங்க பேச்சைக் கேக்கலாமா!) அவங்க பாட்டி வந்தாலும் வந்தாங்க..அவரவருக்குப் பாட்டி நினைப்பு வந்து பாடாய் படுத்துகிறதோ மேடம்.

said...

வல்லியம்மா said://இதில பாட்டி வேற வலம் வராங்க. அவங்க எல்லாம் ப்ளாக் போட்டா எப்படி இருக்கும் துளசி:)//
பாட்டிகளை நினைத்தாலே இனிக்கும். அவர்களது ப்ளாக்குகள் கசக்குமா என்ன? என்ன ஒண்ணுன்னா, அவங்களுக்கு எழுத மேட்டருக்குப் பஞ்சமே இருக்காது:-)!

said...

ராமலக்ஷ்மி.

எல்லாத்துக்கும் என்னைத்தான் சொல்லணும். வாயைத் திறக்கவிட்டாலும்......

'நல்லா இருக்கறதாலேதான் தின்னறேன்' ன்னு சொல்வார் (என் பிடுங்கல் தாங்க முடியலைன்னா)


பாட்டிகள் தான் வாழ்வில் மறக்கமுடியாத அம்சம். அது அவுங்க போனபிறகுதான் தெரியும்.

ஒரு சினிமாவுக்குப் போறதுன்னாகூட..... ஐயோன்னு பண்ணிருவாங்க.

இப்ப நான் வீடியோ லைப்ரரி நடத்துறேன்.

தினம் எனக்கு 'ஆசி'கள்தான் மேலே இருந்து:-)

said...

//ஒரு சினிமாவுக்குப் போறதுன்னாகூட..... ஐயோன்னு பண்ணிருவாங்க.
இப்ப நான் வீடியோ லைப்ரரி நடத்துறேன்.
தினம் எனக்கு 'ஆசி'கள்தான் மேலே இருந்து:-)//

நல்லாசிகளுடன் நடக்கட்டும். நடக்கட்டும்:))).

said...

ராமலக்ஷ்மி,

நீங்க 'இங்கே' புதுசுல்லே? அதான்.....

இங்கே நான் ஒருவிதமா 'தமிழ்ச் சேவை' ஆத்திக்கிட்டு இருக்கேன்ப்பா:-)))

தமிழ்ப்படங்கள் லைப்ரரியில் வரும் 100% லாபத்தை தர்மக் காரியங்களுக்குன்னு செலவு செய்யறோம்.
முந்தியெல்லாம் எப்பவும் சிவானந்தா குருகுலம். இப்ப அவுங்க நல்லபடியா
எஸ்டேபிளிஷ் ஆகிட்டாங்க.
அதனால் கடந்த சிலவருசங்களா ஹோப் ஹோம் ( சில்ட்ரன் வித் எய்ட்ஸ்) குழந்தைகளுக்கு அனுப்பறோம்.

இன்னிக்குத்தான் சுநாமி பாதிச்ச ஏரியாவில் ஆரம்பிச்ச ஒரு பள்ளிக்கூடத்துக்கு ஸ்டூடண்ட்ஸ் டெஸ்க் ப்ராஜெக்ட்டுக்கு ஒரு செக் அனுப்பினோம்.

செஞ்ச தர்மத்தை வெளியில் சொல்லக்கூடாதுன்னாலும், சிலசமயம் இப்படி வெளியே சொல்றதன் பயன், அவுங்களும் இதில் ஈடுபட்டு உதவலாமுன்னுதான்:-)