Wednesday, September 26, 2007

இன்னும் வால் மட்டும் நுழையலை(-:

ஒருவாரமா முட்டி மோதி, முங்கியெழுந்து விஸ்ட்டாவை புரிஞ்சு(???)க்கிட்டு ஒருவழியா பின்னூட்டம் மட்டும் தமிழில் போடப் படிச்சேன்.

இந்த விஸ்ட்டா ரொம்பவும் 'நோஸி''யா இருக்கோன்னு ஒரு பயம் வந்துருக்கு. அப்படியெ கண் குத்திப் பாம்பாட்டம் நம்மையே கவனிக்குது.
ஒருவிதத்தில் வேண்டாத யாரையும் வீட்டு வாசலைக் கடக்க விடலைன்றது நல்லாத்தான் இருக்கு. ஆனா வீட்டு முன்னாலெ கூட்டம் சேருதோன்னும் கவலை.

கலப்பையை அப்பப்ப எடுத்து வச்சுரணும் இல்லேன்னா தமிழ் வராது. பாதிவேலையில் இருக்கும்போது எல்லாத்தையும் மூடுன்னதும் ‘கப்சுப்’ன்னு மூடிக்கணும்!


நம்ம கணினியில் கைரேகை அடையாளம் வச்சாப் போதுமாம். அதுக்குக்கூட நான் கைநாட்டுன்னு தெரிஞ்சுருக்கு:-) ஆனா நாம் என்ன லேசுப்பட்ட ஆளா? கட்டைவிரல் வச்சாத்தானே கைநாட்டு? நான் மத்த விரலை வச்சுட்டேன். தப்பித்தவறி நான் ‘சடார்’னு மண்டையைப் போட்டுட்டா, கோபாலுக்குக் கஷ்டம். அண்டர்டேக்கர்கிட்டெ சொல்லி என் அடையாள விரலை எடுத்துப் பாடம் பண்ணிக்கணும். அப்ப நினைவிருக்குமான்னு தெரியலை(-:

சாப்புடறப்ப மட்டும் ரேகை வைக்கமுடியலை. எச்சக் கையில் *** ஓட்டமாட்டேனோ என்னவோ?

அதுவுமில்லாம ஒரு வாரமா கைரேகைக் கொஞ்சம் தேஞ்சமாதிரி வேற இருக்கு(-:

நம்ம இளாவோட ஐடியா நல்லா வொர்கவுட் ஆகுது.


செய்யவேண்டியது எல்லாம் கணினி தொறந்ததும் தானே வர்ற ‘தமிழா’வை போயிட்டு அப்புறம் வாப்பான்னு அனுப்பிட்டு, நம்ம கலப்பை ஃபைலைத் தொறந்து இப்ப நிறுவுன்னு ஒரு உத்தரவு போட்டால் அது சொல்லும் பேச்சுக்கு ,’உம்’ கொட்டிக்கிட்டெ இருந்தால், அது கட்டக் கடைசியாக் கேக்கும், பழைய ‘கீ போர்டை’ கடாசவான்னு. அதுக்கும் ஒரு ‘உம்’ போட்டா வேலை முடிஞ்சது. யூனிகோடில் சிகப்பு ‘அ’ வந்து வயித்துலே காஃபி வார்க்கும் (காலையில் பால் ஆவறதில்லை)


அப்படியே தமிழ்மணத்துலே ஒரு உலாத்தல். பின்னூட்டம் கொடுக்க நினைச்சா............ மஜாவா அங்கே தமிழில் எழுதலாம்.


எல்லாஞ்சரி. நோட்பேடு மட்டும் நம்மைப் பார்த்தாவே பதுங்குது. அங்கேதான் நுழையமுடியலை. அதுக்காக நாம் ஆத்தும் தமிழ்ச்சேவையை
விட்டுற முடியுமா? உனக்காச்சு எனக்காச்சுன்னு இப்ப மைக்ரோசாஃப்ட் வேர்டுலே புழங்கறேன். அதுவும் ரெண்டு மாசத்துக்கு ஓசியாம். அப்புறம் ?


அந்தப் பாலம் வரும்போது அதைக் கடக்கலாம். இது என்ன பெரிய ராமர் பாலமா?


‘ராவணனிடம்’ தஞ்சம் புகுந்தேன்.................


சுரதா இருக்குன்னாலும், ‘கிழ நாய்க்குப் புது வித்தையைக் கத்துக்குடுக்கறது ரொம்பக் கஷ்டமாமே.’..............பழமொழி சொல்லுது.


இப்ப வாலை நுழைக்க எதாவது குறுக்குவழி இருக்கான்னு தெரிஞ்சவுங்க சொல்லுங்க.


காத்துருக்கேன்.................

33 comments:

said...

விஸ்டா கணினியை தேடிட்டு இருக்கேன்.

said...

எப்படித்தான் எழுதுறீங்களோ :-)

said...

நம்ம கணினியில் கைரேகை அடையாளம் வச்சாப் போதுமாம். அதுக்குக்கூட நான் கைநாட்டுன்னு தெரிஞ்சுருக்கு:-)

அக்கா!
இந்தச் சுயகிண்டல் நல்லாத் தான் இருக்கு...

said...

துளசி, இதையேதான் தினம் துபாயில செய்து கிட்டே இருந்தேன்:))
எப்ப பார்த்தாலும் கைநாட்டு, ரேகை, அடுத்தாப்புல கோபாலுக்குத் தெரிய வேண்டாமானு சொல்லாதீங்க.
வேற வேலை இல்லை????????
எல்லாம் நல்லா வந்துடும்.
வாலை விட்டுட்டுத் தலையை விட்டுப் பாருங்களேன்:))))))

said...

//நம்ம கணினியில் கைரேகை அடையாளம் வச்சாப் போதுமாம். அதுக்குக்கூட நான் கைநாட்டுன்னு தெரிஞ்சுருக்கு:-) ஆனா நாம் என்ன லேசுப்பட்ட ஆளா? கட்டைவிரல் வச்சாத்தானே கைநாட்டு? நான் மத்த விரலை வச்சுட்டேன். தப்பித்தவறி நான் ‘சடார்’னு மண்டையைப் போட்டுட்டா, கோபாலுக்குக் கஷ்டம். அண்டர்டேக்கர்கிட்டெ சொல்லி என் அடையாள விரலை எடுத்துப் பாடம் பண்ணிக்கணும். அப்ப நினைவிருக்குமான்னு தெரியலை(-://

ச்சொ... ச்சொ.. ச்சொ.. பாவமாத்தான் இருக்கு நீங்க சொல்றதைப் பார்த்தா..

பரவாயில்லை.. நாங்க இருக்கோம்ல.. பார்த்துக்குறோம்..

ஆமா எப்ப டீச்சர் அந்த 'சடார்'?

said...

துளசி உங்க பிரச்சனை என்னன்னு எனக்கு தெளிவா புரியலை.
விஸ்டாவில் ஒரு பிரச்சனையும் இல்லை. 'தமிழா'அழகாக வேலை செய்கிறது.

said...

ஹா ஹா ஹா

என்னடா ஒங்க பதிவுகளையெல்லாம் இப்பப் படிச்சிப் பின்னூட்டம் போட முடியுதேன்னு யோசிச்சேன். ஒருவேளை விஸ்வாவோட வேலையா இருக்குமோ.

காலைல பால் ஆகுறதில்லைன்னு படிச்சி விழுந்து விழுந்து சிரிச்சேன்.:))))))))))

said...

வாங்க குமார்.

தேடுங்கள். கண்டடைவீர்கள்:-)

said...

வாங்க மதுரையம்பதி.

//எப்படித்தான் எழுதுறீங்களோ //

அதேதாங்க. எப்படி நோட்பேடுலே எழுதறதுன்ற தடுமாற்றம்தான்:-)

said...

வாங்க யோகன்.

இந்த சுயக்கிண்டலும், நகைச்சுவை உணர்வும் இல்லேன்னா அக்கா எப்பவோ காலி:-)))))))

said...

வாங்க வல்லி.

//வாலை விட்டுட்டுத் தலையை விட்டுப் பாருங்களேன்//

மாட்டேன். தலையைச் சிந்திக்கவும் வாலை எழுதவும் மட்டும்தான் பயன்படுத்துவேன்னு வாக்குக் கொடுத்துட்டேன்:-))))

said...

வாங்க உண்மைத்தமிழரே.

பார்த்தீங்கல்லே..... அவரவர் 'கவலை' அவரவருக்கு.

'சடார்' வந்ததும் சொல்லி அனுப்பவா? :-))))

said...

வாங்க சத்யா.

பாருங்க நீங்கமட்டும்தான் எனக்குப் பிரச்சனை இருக்குன்றதையே புரிஞ்சு பதில் சொல்லி இருக்கீங்க. மத்தவங்களைப் பார்த்தீங்களா............

தமிழன் உங்களுக்கு அழகனா இருக்கான். எனக்கும் அப்பப்பக் கொஞ்சம் 'அழகு' காட்டிடறாங்க.

கணினி தொறந்தவுடன் வர்றவனை உடனே துரத்திட்டு, பின்னாலயே போய் 'வா வா'ன்னு வெத்தலைபாக்கு வச்சுக்கூப்புட்டு இன்னொருக்கா நிறுவினா யூனியில் பின்னூட்டம், வேர்டு எல்லாம் தமிழ் வருதுங்க. இப்பப் பாருங்க 'ஸல்'ன்னு பின்னூட்டம் தமிழில் தட்டச்சுக்கிட்டு இருக்கேன்:-)

உண்மையான பிரச்சனை, நம்ம
நோட்பேடு' இருக்கு பாருங்க அங்கெதான் தமிழை வரவழைக்க முடியலை.

ஃபாண்ட் ஸ்க்ரிப்ட்லே வெறும் வெஸ்ட்டர்ன் மட்டும் காமிக்குது.

விஸ்ட்டன் மகா துஷ்டனா இருக்கானே!!!!

said...

வாங்க ராகவன்.

உங்களுக்குச் சிரிப்பாணி?

என்னை இப்படிப் புலம்ப வச்சுட்டானே.....

விஸ்ட்டா இது உனக்கே நல்லா இருக்கா?

இந்த 'ஏழை'யின் கண்ணீர் உன்னைச் சும்மா விடாது!!!!

said...

துளசி, எனக்கு விஸ்தா நிறைய விஷயத்துல Unicode support நல்லா பண்ணும். XP வரையிலும் நோட்பேட்ல எல்லாம் கலைப்பைய ஓட்ட முடியாது. பூச்சி பூச்சியா வரும். விஸ்தால அந்தப் பிரச்சினையே இல்லே. உண்மைய சொல்லனும்னா இந்த விஸ்தா நிறைய Memory தின்னாலும் தமிழுக்கு(யுனிகோடுக்கு) நல்லாவே ஊக்கம் தரும்.

புதுசா கட்டுன பொண்டாட்டி அப்படித்தான் முரண்டு புடிப்பா. சரியா புரிஞ்சுகிட்டா பொண்டாட்டி மாதிரி யாரும் இல்லேன்னு சொல்லிடுவாங்க.

said...

வாங்க இளா.

//புதுசா கட்டுன பொண்டாட்டி//

நம்ம கதையிலெ இது புதுசாக் கட்டுன புருஷன்னு வரனுமோ?:-)))))

நம்ம XP யிலே நோட்பேடைத் தொறந்துட்டு ஆல்ட்+2 போட்டுட்டா ஒரு பூச்சியும் வராது. அருமையான பூச்சிமருந்தா இருந்துச்சு.

இதுலேதான் ஒரு பூச்சி புழுவும் வரலை (-:

இந்த விவசாயம் புரியலைப்பா எனக்கு(-:

said...

எப்படித்தான் இவ்வளவு விவகாரமாக எழுதுகிறீர்களோ!
நானும் ஒரு மடி கணினி வாங்கலாமான்னு நினைக்கிறேன். இந்த சோனி வையோ(sony vaio) நம்பள ரொம்ப இழுக்குது....

said...

http://raviratlami1.blogspot.com/2007/02/windows-vista-first-indic-review.html
இது உதவுதா? என்று பாருங்கள்.
நான் இன்னும் 98யில் இருக்கிறேன்,விஸ்டா உள்ள ஆட்களை தேடிக்கொண்டு இருக்கிறேன்.

said...

வாங்க டெல்ஃபீன்.

ஹைய்யா .............ஹை.

சீக்கிரம் வாங்கிருங்க. அப்புறம் நாம் ரெண்டுபேரும் சேர்ந்து 'தேடிப்பிடிச்சு' விளையாடலாம்:-))))

ஆனா ஒண்ணு, இந்தம் மடிக்கணினி இப்ப bed கணினியா மாறிக்கிட்டு இருக்கு:-)

said...

குமார்,

ரொம்ப நன்றிங்க.

எதோ செட்டிங்க்லே ஒரு ச்சின்ன அட்ஜஸ்மெண்ட்தான் இருக்கும் போல.
நான் ககைநா என்றதால் தவிச்சுக்கிட்டு இருக்கேன்.

hp help lineலேயும் மனுப் போட்டுருக்கேன்:-))))

said...

விஸ்ட்டன் மகா துஷ்டனா இருக்கானே!!!!

அய்யோ துளசி...
வையோ (sony vaio) வாங்கலாம்னு இருக்கேனே! நீங்க துஷ்டன்ங்கிறீங்களே.

said...

ஸார் ஃபார் லேட் ஆஜர். இந்த விஸ்டா கிஸ்டா கீ போர்ட் பத்தியெல்லாம் எனக்கு ஒரு மண்ணும் தெரியாததால் நான் மூச். மன்னிச்சுக்குங்க.

said...

உடனடியாக பதில் கூறமுடியவில்லை மன்னிக்க..

இராவணன் சேது இராமர் பாலம் போல் நீண்ட ஒரு திட்டம் .அது பெரிய ப்றொஜேக்ற்..அதில் இன்னமும் செய்ய நிறைய இருக்கிறது.

இனி உங்கள் பிரச்சனை

நான் வின் 98 பாவித்தபோது இதன் மூலம்தான் கலப்பை பாவித்து யூனிகோட் அடித்தேன்

இப்போது விஸ்ராவுக்கும் விட்டிருக்கிறார்கள்.முயற்சித்துபார்த்து சொல்லவும்.எழுத்துருவை தெரிந்தெடுத்துவிட்டு கலப்பை பாவிக்கவும்.

http://www.babelstone.co.uk/Software/BabelPad_1_10_1.zip

said...

வாங்க சுரதா.

வணக்கம். நலமா? உங்களை இங்கே பார்த்ததும் ரொம்ப ஆச்சரியமாப் போச்சு!

நீங்க கொடுத்தச் சுட்டிக்கு நன்றி. எதாவது 'எனக்கு'ப் புரியுதான்னு பார்க்கணும்.

ராவணனில் எழுத்துருவைத் தெரிவு செஞ்சபிறகு தமிழ் நல்லாவே வருது.


வருகைக்கும், கருத்துக்கும் நன்றிங்க.

said...

இல்ல டீச்சர் அவன் செம சமத்து, இப்போ என்கிட்ட என்னமா ஒட்டிகிட்டான் தெரியுமா, ஆனா அவனை பழக்கறத்துகுள்ள தமிழ் மனத்துக்கு மெயில் அனுப்பிடலாம்ன்னூ பார்த்த்ஹேன்"எனக்கு சொந்த வேலை இருப்பதால் நானா சொல்லும் வரை ஸ்டார்க்கு கூப்பிடாதீங்க"ன்னு! இப்ப நாய் மாதிரி ஸாரி பூனை மாதிரி காலை சுத்துகிட்டே கிடக்கான் நம்ம விஸ்டா பையன்:-))

said...

டெல்ஃபீன்,

சோனி வையொ ரொம்ப நல்லா இருக்குன்னு கோபால் சொல்றார். முக்கியமா கனம் குறைவாம். அவரோட மடிக்கணினி போலவே இருக்குமாம். (பயணத்துக்குக் கொண்டுபோறதாலெ அவரோடது கனம் இல்லாம இருக்கு)

வாங்குனதும் சொல்லுங்க. கூட்டாவந்து பார்க்கறோம்.

இதுவே பல விலைகளில் இருக்கு போல!

said...

வாங்க ஆடுமாடு.

இதென்னங்க கம்ப சூத்திரமா? நாலுபேருகிட்டேக் 'கேட்டு'த் தெரிஞ்சுக்கலாம்.. பிரச்சனை இல்லை.

இங்கே மட்டும் என்ன வாழுதாம்? நான் ககைநான்றது வலை உலகில் எல்லாருக்கும் தெரியும்:-)

said...

வாங்க நட்சத்திரமே.

இந்த பிஸியான நேரத்திலும் வந்ததுக்கே முதல் நன்றி.

உடனே அந்த பூனையை இங்கே அனுப்புங்க. நம்ம ஜிகேவை ட்ரெயின் பண்ணிட்டு போகட்டும்.

ஆமாம்.........'பழக' நாள் செல்லுமோ?

said...

துளசியம்மா,
இதையே நோட்பேடுல தட்டச்சித்தான் உங்களுக்கு பின்னூட்டமா போடறேன்.
வெஸ்ட்டர்ன் எல்லாம் ஒரு பிரச்சனையும் இல்லை
Tscu_Paranar font இருந்தா அத select பண்ணி தட்டச்சி பாருங்க.
இல்லைன்னா latha font முயற்சி பண்ணுங்க


இது சரிவரலைன்னா help அடிச்சு அதுல change to open regional and language options போய் எல்லாத்தையும் English US தேர்ந்தெடுத்து
ஒரு தடவை restart பண்ணி பாருங்க
அதுவும் சரி ஆகலைன்னா உங்க கீபோர்ட் ஆப்ஷன்ஸ்ல என்னன்னு இருக்குன்னு பாக்கலாம்.

பாத்துட்டு சொல்லுங்க பிரச்சனை சரியாப்போச்சான்னு.

said...

'கணினி தொறந்தவுடன் வர்றவனை உடனே துரத்திட்டு,'

இதுக்கு பதிலா தமிழா->right click-> keyboard configuration-> Options->Start Keyman with Windows இத select
பண்ணி இருப்பீங்க. அத தூக்கிட்டா ஒவ்வொரு தடவையும் தொறந்தவுடன் தமிழா வராது

அதுல check file associations enable ஆகி இருக்கான்னு பாத்துடுங்க. அதுனால எதுனா பிரச்சனையா இருக்கப்போகுது

said...

ரொம்ப நன்றி சத்தியா.

நீங்க சொன்னபடி செஞ்சு பார்த்துட்டு
மறுபடி வந்து பதில் சொல்றேன்.

இன்னிக்கு எனக்கு இதுதான் அஸைன்மெண்ட்.

said...

அடேங்கப்பா! இத்தனை பேர் வடம் பிடிக்கிறாங்க... இன்னும் சப்பரம் நிலைக்கு வந்த மாதிரி தெரியல.

மொத்தத்தில் விஸ்டா வேஸ்ட் மேடம். எதுக்கெடுத்தாலும் லோடிங்... லோடிங்... லோடிங்... சே... சே... இந்த பழம் புளிக்கும்னு பழசுக்கே மாறிடுங்க. (நானும் கொஞ்சம் குழப்புறேனே... ப்ளீஸ்!)

said...

வாங்க கவுதமன்.

தேர் ஒருவழியா நிலைக்கு வந்தமாதிரிதான். நோட்பேடைக் கடாசிட்டு, இப்ப வேர்ட் பேட் வந்துருக்கேன். 'அருமை அட்டகாசம்'ன்னு அடுக்கிச் சொல்லலாம்.:-))))

விஸ்ட்டா இந்த கணினியோடயெ பாக்கெஜ்லே வந்தது. இதை ஒண்ணும் செய்யமுடியாது. ஆனது ஆச்சு .இனி அதுக்காச்சு நமக்காச்சுன்னு ஒரு கை பார்க்கவேண்டியதுதான்.

ஆனா நம்மில் இத்தனைபேர் உதவ முன்வந்தாங்களேன்னு நினைக்கும்போது நம்ம பதிவர்களைப் பத்திப் பெருமையாத்தான் இருக்கு.