Saturday, September 22, 2007

வீடு 'வா வா'ங்குது ! பகுதி 25

கிங் ( கிச்சன்) சாயந்திரம் 7 மணிக்கு அடுக்களை பெஞ்சுங்களையெல்லாம் கொண்டு வரார்ன்னு சொன்னாரு.

நமக்கு மகளோட புதுவீட்டுச் சொந்தக்காரரைப் பார்க்க வேண்டியிருந்தது, காசு கொடுக்கறதுக்கு. அந்த வீடு ரொம்ப சுமார்தான். ஆனா, இவ மகிழ்ந்துபோய் இருக்கா! எலிவளையானாலும் தனி வளை:-))) $720 கொடுத்தோம். 4 வார வாடகை. 2 வாரம் அட்வான்ஸ், ரெண்டுவாரம் பாண்டு!


அங்கிருந்து 7.30க்கு 29 போனா, அதுக்குள்ளே கிங் கொஞ்சம் சாமான்களை வச்சிட்டுப் போயிருக்காரு. தரையெல்லாம் அழுக்கு. அதுலேயெ அடுக்களைக் கேபினெட்டை வச்சிருவாங்களோன்னு நாங்க ஒரு பக்கெட்டும் மோப்பும் கொண்டு போய் துடைச்சோம். அப்புறம் கிங் இன்னும் ரெண்டு ட்ரிப் அடிச்சாரு. நாங்க வீட்டுக்கு வந்து சாப்பிட்டுட்டுப் போனோம். இருட்ட ஆரம்பிச்சுடுச்சு. லைட் போட்டுக்கலாம்ன்னு பார்த்தா அங்கெ இருக்கற டெம்ப்ரரி போர்டுலெ எல்லா ப்ளக்கையும் உடைச்சு வச்சிருக்காங்க!


கிங் கடைசியா 4 வது ட்ரிப் போயிட்டு வந்தார். கூடவே ஒரு லாந்தர். அதை வச்சு, ஒரு வழியா சமாளிச்சோம். எல்லாம் நல்ல கனம்! சாமான்கள் எல்லாம் இருக்குதே என்று வீட்டைப் பூட்டிக்கொண்டு வந்தோம். காலையிலே போய் திறந்து வைக்கணும்!


30/11
இவர் காலையிலே சீக்கிரமாகப் போய் கதவைத் திறந்து வைக்கணும் என்று போனபோது, அங்கே இவருக்கு முன்னாலேயே வெளியே சிமெண்ட் பூசற ஆட்கள் வந்து வேலையை ஆரம்பிச்சு இருந்தாங்களாம்! சிமெண்டு மூட்டையெல்லாம் உள்ளெ இருக்கே, எப்படி உள்ளே வந்தீங்கன்னு கேட்டதுக்கு, ஜன்னல் வழியான்னு சொன்னாங்களாம்! அதுவும் சரி. ஜன்னலுக்குத்தான் இன்னும் கண்ணாடி வரலையே. நாங்க மட்டும் மறக்காமக் கதவைப் பூட்டிக்கிட்டு வர்றோம்:-))))


நான் இன்னைக்கு லைப்ரரி போறதுக்கு முன்னாலே அங்கே போனேன். நம்ம கிங்கும், கிங்கோட தம்பி 'போ'வும் வேலை செஞ்சுகிட்டு இருந்தாங்க. பெயிண்டர்ங்களும் அவுங்க வேலையைப் பார்த்துக்கிட்டு இருந்தாங்க. வெளியிலே பூசற ஆளுங்க 'காஃபி ப்ரேக்' எடுத்துகிட்டு இருந்தாங்க. வேலை ஏறக்குறைய இருந்தாலும் இந்த வெள்ளைக்கார ஆளுங்க டைம் டைமுக்கு சாப்பிட உட்கார்ந்துடுவாங்க. ஒரு மினிட் இப்படி அப்படி போயிடக்கூடாது! அது ஒரு நல்ல பழக்கம்தான். நம்மைப் போல வேலையே கதின்னு சோறு தண்ணியில்லாம இருக்கறது நல்லாவா இருக்கு?


அங்கேயிருந்து லைப்ரரி வேலைக்குப் போயிட்டேன். 12 மணிக்கு மறுபடி அங்கெ போனேன். நம்ம பிள்ளையாருங்களை இன்னும் ஒட்டலையே. அதுக்காகத்தான் திரும்பத் திரும்பப் போய்கிட்டு இருக்கேன். அதைச் சரியானபடி ஒட்டறாங்களா, நேரா இருக்கான்னு பார்க்கணுமே! அடுக்களை வேலை நடக்குது, ஆனா, நாம கஷ்டப்பட்டுப் போட்ட கார்நீஸ் கீழே கிடக்குது! எனக்கு ஐய்யோன்னு போச்சு. அடுக்களைப் பான்ட்ரீ அங்கே இடிக்குதுன்னு எடுத்துட்டாங்களாம்!


நம்ம அடுக்களையிலே டபுள் பாண்ட்ரீ வைக்கறோம். ஸ்டேண்டர்ட் அளவுன்னா ரெண்டு மீட்டர் உயரம்வரை வைக்கறாங்க. அதுக்கும் சீலிங்குக்கும் இருக்கும் இடைவெளியில் எதாவது சாமான்கள் டிஸ்ப்ளே செஞ்சுக்கலாம். இல்லேன்னா இன்னும் சாமான்கள் வைக்கலாம். அதான் மாடுலர் கிச்சன் டிஸைனில் பார்த்துருப்பீங்களே. இதுலே ஒரு பெரிய தொந்திரவு என்னன்னா, அந்த இடைவெளியில் இருக்கும் கேபினெட் மேல் பலகையில் அழுக்கு சேர்ந்துருது. வெறும் அழுக்குன்னாக்கூடக் கொஞ்சம் கஷ்டப்பட்டு மாசம் ஒருநாள் துடைச்சு விட்டுறலாம். நம்ம சமையலில்தான் இந்த தாளிக்கும் சமாச்சாரங்கள் கூடுதலா இருக்கே. அந்த எண்ணெய்ப் பிசுக்கெல்லாம் காத்துலே பரவி அப்படியே மேலே போய் அந்தத் தட்டுலே படிஞ்சுருது. கிச்சன் ஹூட் ( சிம்னி) வச்சும் இப்படித்தான் ஆகுது. சுத்தம் செய்யறதுக்குள்ளெ தாவு தீர்ந்துரும்.


அதனால், இங்கே நம்ம பேண்ட்ரீயைத் தரையில் இருந்து சீலிங் தொடும் உயரத்துக்கு வச்சுட்டோம். அங்கே பை ஃபோல்ட் கதவு போட்டதாலே, ஒரே இழுவையிலே முழுசும் திறந்துரும். தட்டுகள் போட்டப் பிறகும் ஒரு ரெண்டு ஆள் நிக்கறமாதிரி இடம் இருக்கு. ச்சும்மாக் கவுத்துப் போட்ட 'ப' வடிவம் வைக்காம கொஞ்சம் சுவாரசியமா இருக்கட்டுமேன்னு ஒரு வளைவு நெளிவோட இடைவெளி விட்டுருக்கு. சீலிங் வரை இருக்கறதாலே ஒரு தட்டுக் கூடுதலாவும் போடமுடிஞ்சது. இதைத் தொட்டடுத்து இன்னொரு பேண்ட்ரீ இதே மாதிரிதான், ஆனா சாதாரணமாப் பலகைகள் மட்டும். ரெண்டுக்குமே கதவைத் திறந்தவுடன் உள்ளெ விளக்கு எரியறமாதிரி வச்சுருக்கு.அடுக்களை மேடையில் மைக்ரோவேவ் வைக்க ஒரு இடம். அங்கேயே பவர் ப்ளக். இந்தப் பக்கம் வேலை செய்யும் மேசையிலேயே , அந்தப் பக்கம் உக்கார்ந்தா ப்ரேக்ஃபாஸ்ட் பார். அங்கே மொட்டையா மரம் தெரியாம ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் தகடு முழுசுக்கும் போட்டுருக்கு.


இதையொட்டி, கிச்சன் பெஞ்சு மேலே இன்னொரு கப்போர்ட் சீலிங் தொடும்படிஇருக்கு. இதுதான் கிச்சன் காட்ஜெட்(gadget) கராஜ். அதுலெ அடித்தட்டு கிச்சன் பெஞ்சுதான். அங்கே நம்ம ஆட்டுக்கல், அம்மிக்கல்,ப்ரெட் டோஸ்ட்டர், ஃபுட் ப்ராஸசர், எலெக்ட்ரிக் கெட்டில் இத்தியாதிகளை ஒளிச்சுவச்சுக்கலாம். உள்ளேயே ப்ளக் பாயிண்ட்ஸ் வச்சுருக்கு. கதவைத் திறந்து கொஞ்சம் இதுகளை வெளியே இழுத்து அரைக்க வேண்டியதை அரைச்சுக்கிட்டு, அப்புறம் உள்ளே தள்ளிவிட்டுறலாம். கதவை மூடுனா கண்ணுலே இருந்து காட்சி மறைஞ்சுரும்:-) மேல்தட்டுகளில் நமக்கு வைக்கவா சாமான்கள் இல்லை?


அடுக்களை சிங்கின் தண்ணீர் தெறிச்சாலும் சுலபமாத் துடைக்க பெஞ்சு டாப் சுவரோடு சேரும் பகுதியில் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பட்டி சுவரில் சுத்திவரப் பதிச்சிருக்கு. சமையல் செய்யும்போது குழம்பு கொதிச்சுத் தெறிக்கும் இடத்துலே Splash Guard அடுப்புக்குப் பின்னால் வரும் சுவரில் அடுப்பு அகலத்துக்கு ஒரு கண்ணாடி. ஒரு ஈரத்துணியால் துடைச்சாப் போதும். அடுக்களையில் இருக்கும் மற்ற சாமான்களுக்குப் பொருத்தமா இதுக்கு என்ன கலர் வேணுமுன்னாலும் மறுபக்கம் ஒட்டிக்கலாம். நமக்கு ஸ்டீல் க்ரே. தரையிலும் கிக் போர்டு வர்ற இடத்தில் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் போட்டுட்டா, தரையைத் துடைக்கும்போது ஈரம் கப்போர்டுலே படியாது. வேலைக்கு உதவியாளர்கள் இல்லாததால் கூடியவரை சுளுவா நம்ம வேலையாகணும்னு பார்த்துக்கிட்டேன்.


முதலாவது, நம்ம ஒரிஜனல் டிஸைன்லே அங்கே கார்நீஸ் கிடையாது. இந்த பில்டர் சரியான இன்ஸ்ட்ரக்ஷன் கொடுக்காம விட்டதுலே இந்த ரிச்சர்டு கார்நீஸை அங்கேயிருந்து ஆரம்பிச்சு வைச்சாச்சு! அதனாலெ மத்த இடத்துக்கு பத்தாமப் போய் இன்னும் ஒரு 8 வேற வாங்கும்படியாச்சு.சரி இருந்துட்டுப் போகட்டும்ன்னு விட்டுட்டோம். அப்புறம் அடுக்களையை பெயிண்ட் அடிச்சப்ப, கார்நீஸ் பெயிண்டைக் கலக்கற ஆளு வரலைன்னு ரெண்டு நாள் லேட் ஆச்சு. இப்படிக் கஷ்டப்பட்ட கார்நீஸ் இப்ப கீழே கிடக்குது!


ஸ்கர்ட் போர்டுக்கு என்ன கலர்ன்னு சொல்லுங்க. நீங்க சொன்னதை எழுதி வச்சேன், ஆனா இப்ப அது கிடைக்கலேன்னு டோனி சொன்னார்.அப்புறமா பார்த்துட்டுச் சொல்றேன்னுட்டு, இன்னும் பிள்ளையார் வைக்கலேன்னு வந்துட்டேன்.


மத்தியானம் ஒரு ரெண்டு மணிக்கு கிங் ஃபோன்லே கூப்பிட்டு ஏதோ ஒரு ப்ராப்ளம் இருக்குன்னார். அங்கெ போனா, ஸிங் வைக்கற இடத்துலே இல்லாம குழாயோட கனெக்ஷன் தள்ளியிருக்குன்றார். ப்ளம்பரைக் கூப்பிட்டு என்னன்னு கேக்கணும்ன்னா அவர் ஃபோன் நம்பர் எங்கிட்டே இல்லே. அங்கெ யிருந்து கோபாலைக் கூப்பிட்டேன். அவர் வந்தார். ப்ளம்பருக்கு ஃபோன் போட்டு விஷயத்தைச் சொன்னதுக்கு, நாளைக்குக் காலையிலெதான் வர முடியும்ன்னு சொல்லிட்டார். காலையிலே ஏழரைன்னு முடிவாச்சு!
ஒண்ணும் சரி பண்ண முடியாதுன்னா, கட்லரி ட்ரேயை இந்தப் பக்கம் கொண்டுவந்துட்டு சிங்கை இடதுபக்கம் நகர்த்தலாம்னு முடிவாச்சு.
மத்தியானம் நம்ம எலிநோர் போய்ப் பார்த்துட்டு என்னைப் ஃபோன்லே கூப்பிட்டு, வீடு ரொம்ப நல்லா இருக்கு. ரொம்பப் பிடிக்குதுன்னு சொன்னாங்க!கேக்கறதுக்கு சந்தோஷமா இருந்தாலும் வேலை இப்படி சுணங்குதேன்னு இருக்கு!

சாயந்திரம் வேலையிலிருந்து வரும்போதே இவர்போய் பார்த்துட்டு வந்தார். கிங் வேலை செய்யப் போறாராம். மார்னிங் கோர்ட்லே ஓடு சரிசெஞ்சாச்சு. தப்பா ரைலாக் ஆளுங்க டிஸைன் செஞ்சுட்டதாலெ ஏதோ செஞ்சு அட்ஜஸ்ட் பண்ணி வச்சிருக்காங்க.இந்த ரைலாக்கோட மாரடிச்சே வாழ்க்கை நொந்துபோச்சு(-:


நாங்களும் 7 மணிக்குப் போனோம். கிங் வேலையை ஆரம்பிச்சு இருந்தார். அவருகிட்டே ஒரு சாவியைக் கொடுத்துட்டு, நீங்களே பூட்டிட்டுப் போங்கன்னு சொல்லிட்டு நாங்க வந்துட்டோம்.


1/12
இவரு காலேல அங்கெ போயிட்டார். ப்ளம்பரும், கிங்கும் வந்து இருந்தாங்களாம். அப்புறமா எனக்குப் போன் செஞ்சு வரச் சொன்னாரா, நான் கிளம்பற அவசரத்துலே ச்சாந்துப் பொட்டு குப்பி கீழே விழுந்து கொஞ்சம் கொட்டிடுச்சு! கார்பெட் பாழாயிருமேன்னு அவதி அவதியா அதைத் துடைச்சுச் சுத்தம் பண்ணிட்டு ஓடுனேன்.


அங்கே போனா, ப்ளம்பர் இல்லை. ஆனா சொல்லிட்டாராம் 'நான் வெள்ளிக்கிழமை வந்து அதை மாத்தி வச்சிடறேன்'னு! அந்த மூலையிலெ கிச்சன் காட்ஜெட் கராஜ் வருது. சிங்கை நகர்த்துனா அங்கெ கொஞ்சம் இடிக்குமோன்னு பயமா இருக்கு. அதுவுமில்லாம சோப் தண்ணி தெறிக்காதா? சரி. பைப்பையே நகர்த்தட்டும்னு வந்துட்டேன்.


மத்தியானம் 1 மணிக்கு பேவன் கார்பெட், வைனல் போட அளவெடுக்க வந்தாரு. கிங்கும், போவும் வேலை செஞ்சுக்கிட்டு இருந்தாங்க.
நான் அங்கிருந்து நடந்தே வந்துட்டேன். மறுபடி வழக்கம் போல மாலை விசிட் போனப்ப யாரும் இல்லை. பான்ட்ரீங்க ரெண்டும் வச்சிருந்தது! நல்லா பெரூஊஊஊஊசா இருக்கு. எனக்கு ரொம்பப் பிடிச்சது. லாண்டரியிலேயும் கப்போர்டு போட்டு வச்சிருந்தது. ராத்திரி வேலை செய்வாங்கன்னு நினைக்கிறேன். கொஞ்சம் ஃபோட்டோ எடுத்துகிட்டு வந்துட்டோம்.


2/12
இன்னைக்கும் பெயிண்டிங் வேலைதான் நடந்துகிட்டு இருக்கு. கதவுங்களையெல்லாம் ஒரு அண்டர் கோட் அடிச்சுட்டாங்க. முன்னாடி வாசக் கதவுக்குப் பூட்டுப் போட்டாச்சு! ஆனா இன்னும் ஜன்னலுங்களுக்குக் கண்ணாடி வைக்கலையே! கிங்கும் போவும் வந்து 'என்னமோ' செஞ்சுகிட்டு இருக்காங்க. வெளியிலே பூசறவேலையும், வெளிப்புறம் பெயிண்டிங்கும் அநேகமா முடிஞ்சிடுச்சு. இன்னும் கொஞ்சமே கொஞ்சம் பாக்கி இருக்கு. தூண் மேடையிலே அதுக்குள்ளே பூசுனது பெயர்ந்துடுச்சு. என்ன வேலையோ? இன்னும் நம்ம பிள்ளையாரை வைக்கலே!


பாத்ரூம் வேனிட்டியும் ஸ்பாவும் வந்து இறங்கியிருக்கு. பவுடர்ரூம் குட்டி வேனிட்டியும் வந்துருச்சு!

3/12
காலையிலே 9.30க்கு வார்டுரோப் அளக்க ஆளுவருதுன்னு அங்கே போனேன். ப்ளம்பர் வரேன்னுட்டு வரலையாம்! மத்தியானம் வரேன்னு சொன்னாராம்! கிங் வந்து பார்த்துட்டுப் போயாச்சு! வெளியே காங்க்ரீட்டு போடறதுக்கு, தரையைச் சரி செய்யறதுக்கு, சிடிகேர்' ஆளுங்களும் வரோம்ன்னு சொல்லிட்டு வரலை! இப்போதைக்கு ஒழுங்கா வேலை செய்யறது பெயிண்டருங்கதான்!'ஜில் எட்வர்ட்ஸ்'ன்னு ஒருத்தர் வந்து வார்டுரோப் அளந்தாங்க. நான் சொன்ன டிஸைனை எழுதிக்கிட்டுப் போனாங்க. எல்லா வேலையும் முடிஞ்சுக் கார்பெட் போட்டபிறகுதான் அவுங்களுக்கு வேலையாம். எஸ்டிமேட் அனுப்பறேன்னு சொன்னாங்க.வெளி வேலைக்குக் கல்லும் மண்ணுமாக் கொட்டிட்டுப் போயிட்டாங்க. ரப்பிஷ்க்கு வச்சிருக்கறதை எடுக்க ஃபோன் போட்டிருக்கு. சாயந்திரம் போனப்ப அப்பத்தான் ரப்பிஷ் ஸ்கிப் ( என்ன ரப்பிஷ்? எல்லாம் படு வேஸ்ட்டு...... நல்ல நல்ல பலகை அது இதுன்னு அதுக்குள்ளே இருக்கு!) எடுக்க ஆள் வந்துச்சு. ஒரு ட்ரக்லே அப்படியே அலாக்கா எடுத்துட்டுப் போயிடறாங்க! ஒரு ஆளுதான் இந்த வேலை செய்யறது!


ப்ளம்பர் மத்தியானமும் வரலே! நாங்க இன்னைக்கு ஆஃபீஸ் கிறிஸ்மஸ் பார்ட்டிக்குப் போயிட்டோம். அங்கே போறதுக்கு முன்னாடிக்கூடவீட்டைப் பார்த்துட்டுத்தான் போனோம்:-)

தொடரும்..................


மக்கள்ஸ்,

இன்னிக்கு நம்ம வீட்டுலே ஒரு ச்சின்னக் கொண்டாட்டம்.
துளசியின் 'கோபாலுக்கும்', துளசியின் 'தளத்துக்கும்' இன்னிக்குப் பொறந்தநாள்.
உங்கள் அன்பும் ஆதரவும் வேணுமுன்னு கேட்டுக்கறேன்.


என்றும் அன்புடன்,
துளசி.

========================

23 comments:

said...

நான்தான் first...

Anonymous said...

கோபால் சாருக்கும் தளத்துக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள். கேக் எப்ப வெட்டறீங்க? பாயாசம் சாப்பிட வரலாமா?

said...

வாங்க அரவிந்தன்.
முதல் ஆஜருக்கு என்ன கொடுக்கலாமுன்னு யோசிச்சுக்கிட்டு இருக்கேன்:-)

said...

வாங்க ச்சின்ன அம்மிணி.
கேக் என்னங்க பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய கேக்கு? நம்மூட்டுலே இன்னிக்கு
‘இட்லி’ வெட்டறோம்:-)

பாயசம் செஞ்சா அம்மா குடி அய்யா குடி(-:

வாழ்த்துகளுக்கு நன்றிங்க.

said...

வாழ்த்துக்கள்.

உங்க தளத்துக்கும் கோபால் பிறந்த நாளுக்கும் அப்படியே இம்புட்டையும் சமாளிச்சு வீட்டைக் கட்டினதுக்கும்.

said...

Many Happy returns of the Day.
இட்லியை வெட்டுகிறீர்களா?பிறந்த நாள் அதுவுமா இப்படியா இட்லி பண்ணுவது?
வீட்டில்,இப்ப தான் கிச்சன் ஒரு ஷேப்புக்கு வந்திருக்கு.

said...

வாங்க கொத்ஸ்.

வாழ்த்துகளுக்கு நன்றி. எல்லாருக்கும் சொல்லிட்டேன்:-)

said...

வாங்க குமார்

வாழ்த்துகளுக்கு நன்றி.
இட்லியை ஒரு 'வெட்டு'வெட்டிடொம்லெ:-)
நல்லாதான் வந்துச்சு.

கிச்சன் சரியானாத்தானே பூவ்வா கிடைக்கும். அதுதான் அது மொதல்லே வருது:-)

said...

உங்க சிங்கத்துக்கும், தமிழ்த் தங்கத்துக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!

said...

Happy returns of the Day

வாழ்த்துகள்

said...

தளம் , மற்றும் தலைவருக்கும் வாழ்த்துகள்!

said...

வாங்க வெயிலான்.

வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றிங்க.

said...

வாங்க சிஜி.

வாழ்த்துகளுக்கு நன்றிங்க.

said...

இருவருக்கும் என் வாழ்த்துக்க்ள்.. தாமதமாக சொல்கிறேன் என்றுநினைக்க மாட்ட்டீர்கள் வேலை அதிகம் அதான் தெரியுமே...உங்களுக்கு.

said...

வாழ்த்துக்கள்.

=இஸ்மாயில் கனி

said...

வாழ்த்துக்கள்.

=இஸ்மாயில் கனி

said...

உடல் நலம் சரியில்லாததால் நான் கொஞ்சம் லேட். இருந்தாலும் வாழ்த்துக்கள். முதல்ல ஒரு போஸ்ட் போட்டிருந்தீங்கன்னா, இருட்டு கடை அல்வா அனுப்பியிருப் பேனே...போங்க.

said...

என் இந்த புதிய பக்கத்திற்கு(தமிழ் இ புத்தங்கள்) உங்கள் பக்கதிலிருந்து இணைப்பு கொடுக்கவும்

http://gkpstar.googlepages.com/

இணைப்பு கொடுத்ததற்கு நன்றி

said...

வாங்க முத்துலெட்சுமி.

வேலை அதிகமுன்னு 'தெரியும்':-))))

வாழ்த்து(க்)களுக்கு நன்றி.

said...

வாங்க இஸ்மாயில் கனி.

வருகைக்கும் வாழ்த்து(க்)களுக்கும் நன்றிங்க.

said...

வாங்க ஆடுமாடு.

இப்ப உடம்பு தேவலைங்களா?

நீங்க சென்னையில் இருக்கீங்கன்னு இருக்கேன்.

அல்வாவை நேரில் பார்க்கும்போது வாங்கிக்கறேன்.

கணக்குலே இருக்கட்டும்:-)))

said...

வாங்க கார்த்திக்.

இணைப்புக் கொடுத்துறலாம். பிரச்சனை இல்லை.

said...

வாங்க வவ்வால்.

தாமதமான பதிலுக்கு மன்னிக்கணும்.

வருகைக்கும் வாழ்த்து(க்)களுக்கும் நன்றி.

தலைவருக்குச் சொல்லலாமுன்னா.............

நம்ம வீட்டுலெ தலைவர் நம்ம ஜிகேதாங்க. நாங்க எல்லாம் அவர் அடிமைகள்:-)))))
வம்புவேணாமுன்னு கோபாலுக்குச் சொல்லிட்டேன்:-)