Monday, September 10, 2007

இது என்ன?

பழம் தின்னு 'கொட்டை' போட்டதில் விளைஞ்சது.






வந்தது வந்தீங்க, அப்படியே இந்தப் பூவின் பெயரையும் சொல்லுங்க.
உங்களுக்குத் தெரியுதான்னு பார்க்கலாம்.

-----------

காலையில் நாள்காட்டியின் தாளைக் கிழிச்சதும் கண்ணில் பட்டது.........

இன்று நம் முண்டாசின் நினைவுநாள்.

மகா கவிக்கு மனமார்ந்த அஞ்சலிகள்.

20 comments:

said...

முதல்ல உள்ளது மாமரமா? எல வேற மாதிரி இருக்கும். ஆனாலும் தளிர்ல இப்பிடி இருக்குமோ!

பூவா? இது தெரியாதா? இதுதான் செம்பூ? செம்புல தண்ணி ஊத்தி ஊத்திப் பூத்த செம்பூ! :)

said...

வாங்க ராகவன்.

முதல் விடை: ஊஹூம்

ரெண்டாவது: தொட்டியில் பூத்ததால் தொடுப்'பூ'ன்னு சொல்லிக்கலாமா? :-))))

said...

பலாமரம். (பலாக்கண்டு. ) அல்லது பட்ட புறுட். பூ தண்டிலை தொட்டதும் முறிஞ்சிடுமா. பெயர் தெரியேலை. அல்லது சீனியாஸ் வகையாக இருக்கலாம்.

said...

வாங்க நளாயினி.
நல்லா இருக்கீங்களா?

முதல் விடை உங்க ரெண்டாவது சாய்ஸ் சரி.

ரெண்டாவது : இல்லை(-:

இன்னும் சிலபேராவது யோசிக்கட்டும்.
அதனாலே உங்க பின்னூட்டத்தை இப்ப வெளியிடலை(-:

said...

அவக்கடா மரமா?
பூ பார்த்துள்ளேன் பெயர் தெரியாது

said...

வாங்க யோகன்.

முதல்= சரி
ரெண்டாவது= அப்புறம் சொல்றேன்:-)

இன்னும் சிலபேராவது யோசிக்கட்டும்.
அதனாலே உங்க பின்னூட்டத்தை இப்ப வெளியிடலை(-:

said...

முண்டாசுக்கவிராயனுக்கு
மலர் அஞ்சலி!

Anonymous said...

முதலாவது என்ன திராட்சையா?
ரெண்டாவது பெகோனியா மாதிரி இருக்கு

said...

டீச்சர்,

இந்த மாதிரி டெஸ்ட் எல்லாம் வெச்சா அண்ணன் வெறும் சூப்பர்விஷனுக்குத்தான் வருவேன். தெரியுமில்ல!

அதுவும் இந்த மொதக் கேள்விக்குப் பதிலா பசங்க எல்லாம் 'பலா'ன 'பலா'ன மேட்டர் எல்லாம் சொல்லறாங்க. அவங்களை எல்லாம் சும்மா 'பூ'ன்னு ஊதித்தள்ள வேண்டாமா?

said...

Butter fruit = ஆனைக்கொய்யா

said...

வாங்க சிஜி.
வருகைக்கு நன்றி. பரணில் வந்துருக்கு.

said...

வாங்க ச்சின்ன அம்மிணி.

//முதலாவது என்ன திராட்சையா?//

கொஞ்சம் அநியாயமா இருக்கேங்க:-)))))
ரெண்டாவதும் ...ஊஹூம்........

said...

வாங்க கொத்ஸ்.

என்னதான் 'பூ'ன்னு ஊதுனாலும் அது 'பலா'னதாகாதே:-))))

said...

வாங்க சந்திரன்.

முதலுக்கு உங்க விடை ரொம்பச் சரி.
உங்க பின்னூட்டத்தைக் கொஞ்சம்நேரம் மக்களுக்காக ஒளிச்சு வச்சுருக்கேன்.
அதோட தமிழ்ப்பெயர் எனக்குப் புதுசா இருக்கு.
வருகைக்கு நன்றி.

said...

போட்டிக்கு அனுப்பலாமே. இரண்டாவது சூப்பர் கலரு.

பின்குறிப்பு:
டீச்சர் நான் ரெண்டாம் கிளாஸ் பெயிலு. ரெண்டுமே கண்டுபிடிக்க மிடியல. :-(

said...

2nd namma ooru Dalia maadhiri irukku?

said...

விடை சொல்லும் நேரம் வந்தாச்சு. எப்படி? அதான் பத்துப்பேர்
பதில் சொல்லியாச்சே( ---- சுத்திப் பத்துப்பேர்னு பழமொழி இருக்குல்லே? )
:-)))))))

யோகன், சந்திரன் முதல் கேள்விக்குச் சரியான விடை
எழுதியிருந்தாங்க. நம்ம நளாயினி ரெண்டாவது ச்சாய்ஸ்லே
சரியாச் சொல்லி இருக்காங்க.

காட்டாறு,
அதெல்லாம் ரெண்டாங்கிளாஸ்லே ஃபெயில் பண்ண முடியாது:-)

சர்வேசன்,

ஊஹூம்....... விடை தேறலை(-:


டெல்ஃபீன்,

நல்லவேளை, எங்கிட்டே இதோட பொடானிகல் பேர் கேக்காம இருந்தீங்க:-))))

1. அவகாடோ ( ஒரு நாள் ச்சும்மாப் புதைச்சு வச்சேன். செடியா வளருது. இது பெரிய
மரமா வளருமாம். 30 அடி உயரம்)

2. ரானன்குலஸ் ( Ranancules)

ஆர்வத்துடன் புதிரில் பங்கெடுத்ததுக்கு உங்கள் அனைவருக்கும் நன்றி நன்றி.

said...

அய்ய, என்னப்பா.
அதுக்குள்ள விடையைப் போட்டாச்சு.
நான் கெர்பரா டெய்சினு சொல்ல நினைச்சேன்.
அதுதான் தப்பாப் போச்சே.:))
படங்கள் ரொம்ப அழகா இருக்கும்மா.

said...

நானும் சொல்லலாம்னு வந்தேன். அதுக்குள்ள நீங்களே சொல்லீட்டீங்க.

நான் என்ன பண்ண?.

நான் என்ன சொல்லலாம்னு நினைச்சேனா மொதல் படம் மரக்கன்று..

இரண்டாவது படம் ஒரு செடியில் பூத்த மூன்று மலர்கள்.

said...

Bharathi....

muNdaasu,meesai,thalaippaakai,
theeviram,
kaNkaL.