பழம் தின்னு 'கொட்டை' போட்டதில் விளைஞ்சது.
வந்தது வந்தீங்க, அப்படியே இந்தப் பூவின் பெயரையும் சொல்லுங்க.
உங்களுக்குத் தெரியுதான்னு பார்க்கலாம்.
-----------
காலையில் நாள்காட்டியின் தாளைக் கிழிச்சதும் கண்ணில் பட்டது.........
இன்று நம் முண்டாசின் நினைவுநாள்.
மகா கவிக்கு மனமார்ந்த அஞ்சலிகள்.
Monday, September 10, 2007
இது என்ன?
Posted by
துளசி கோபால்
at
9/10/2007 07:28:00 PM
20
comments
Tuesday, July 17, 2007
தமிழ்மணம் கொ.ப.செ. சந்திப்பு வித் பீட்டர்.
நிறைய வருஷமாத் தெரிஞ்ச நண்பர்தான். ஆனாலும் இப்படி ஒரு காரியம் செஞ்சுருக்காருன்னு நம்பவே முடியலை:-)
குளிர்காலம் ஆச்சுனா நானும் ஒரு ஹெட்ஜ்ஹாக் மாதிரிதான் ஹைபர்னேட் பண்ணும்வழக்கம். காலநிலை மனுஷனை அண்ட்டீ சோஷியல் ஆக்கி வச்சுருதுன்னு நம்பிக்கிட்டு இருக்கேன். இந்த நம்பிக்கையை உடைச்செறியலாமுன்னு நண்பர் வீட்டுக்கு ஒரு விஸிட்.
'வழக்கம்போல்' தமிழ்மணத்தின் பெருமைகளை அள்ளி வீசிக்கிட்டு இருந்தேன். கொ.ப.செ.வா இருந்துக்கிட்டு இதையெல்லாம் செய்யாட்டா எப்படி? பதவி தனக்குத்தானே திட்டம்:-))))
நண்பருக்குப் புகைப்படக்கலையில் ஆர்வர் அதிகம். படங்கள் எடுத்துத் தள்ளிக்கிட்டு இருக்கார்.அவைகளை ஃப்ளிக்கரில் போட்டு வச்சுருக்கறதாகவும் சொன்னார். ஆஹா........நம்ம மேதா விலாசத்தைக் காமிக்க நல்ல ச்சான்ஸ்.
" அதுலே மாசாமாசம் இத்தனை ஃபோட்டோன்னு கணக்கு இருக்கே. கோட்டா முடிஞ்சதுன்னாஅடுத்தமாசம்தான் இன்னும் சிலதைச் சேர்க்கமுடியும். மாசத்துக்கு 18 படமுன்னு நினைக்கறேன்"
" ஆமாம். நான் அப்க்ரேடு வாங்கிவச்சுருக்கேன்"
"ஹா.........(ங்) அப் க்ரேடா? எத்தனை படம் இதுவரை போட்டுருக்கீங்க?"
" ஐநூத்துச் சொச்சம்"
"(................ மீண்டும் ஹா.........(ங்)...........)
"ப்ரைவேட்டா இல்லை பப்ளிக் வ்யூவா?"
" பப்ளிக்தான்"
" பேசாம ஒரு ப்ளொக் ஆரம்பிச்சு, அதுலே போடுங்களேன் படங்களை"
" ஒரு ப்ளொக் வச்சுருக்கேன்"
" (அடுத்த ஷாக்!!!!) என்ன பெயரில் வச்சுருக்கீங்க? "
சொன்னார்.
( அட! ரஜினியை இவரும் விட்டுவைக்கலை!!!!)
" ஓ........... பீட்டரா? அதான் நான் பார்க்கலை!"
" பீட்டரா? அப்படீன்னா? "
பீட்டரைப் பத்தி விளக்கோ விளக்குன்னு விளக்கிட்டு, பேசாம தமிழ் ப்ளொக் ஒண்ணு ஆரம்பிச்சுஅதைத் தமிழ்மணத்துலே சேர்த்துருங்க. நம்ம தமிழ்ப்பதிவுகளிலே ஃபோட்டோக்ராஃபிக்குன்னே
ஒரு வகுப்புவேற நடக்குதுன்னு சொன்னேன்.
நண்பர் தமிழ்காரர்தான். ஆனா தமிழில் எழுதறதுக்குக் கொஞ்சம்.............................?
" இது ஒரு பிரச்சனையா?" கலப்பையைப் புடிச்சு எப்படி உழணுமுன்னு 'ஊதி'யாச்சு:-)
ஆனா...சும்மாச் சொல்லக்கூடாது, படங்கள் ஒவ்வொண்ணும் அருமையாத்தான் எடுத்துருக்கார்.
நேரம்கிடைச்சா......... கொஞ்சம் எட்டிப் பாருங்க.
Posted by
துளசி கோபால்
at
7/17/2007 11:01:00 AM
14
comments
