Thursday, September 27, 2007

வீடு 'வா வா'ங்குது ! பகுதி 27

மறுபடியும் கிளம்பி கடை கடையாப் போறதுதான் வேலைன்னு ஆகிடுச்சு! லைட்டிங் கடைக்குப் போய் சங்கு லைட்டுகளுக்கு ( அது பேரு என்ன தெரியுமா? கிறிஸ்டீனா!) ஆர்டர் கொடுத்துட்டு,மகள் வேலை செய்யும் இடத்துக்கு எதிரே இருக்கும் இன்னொரு லைட்டிங் கடைக்கும்போய், 'ஐ லிட் பல்க் ஹெட் லைட்'டுங்களுக்கும் (மொத்தம் 9 லைட்டுங்க)ஆர்டர் கொடுத்தோம். ஒண்ணு $39க்குன்னு கிடைச்சது!

(இதுதான் அந்தக் க்றிஸ்டீனா)

அப்படியே ஏற்கனவே வாங்கி வச்சிருந்த அடுப்பையும் டெலிவரி செய்யச் சொன்னோம். நம்ம கிச்சன் டிஸைனர் ரேச்சல் எங்களைப் பார்த்துட்டு 'வீடு எந்த நிலையிலே இப்ப இருக்கு?'ன்னு கேட்டாங்களா, நானும் 'அடுக்களை வேலைதான் நடக்குது'ன்னு சொன்னேன். 'முடிஞ்சவுடனே சொல்லுங்க. வந்து பார்க்கிறேன்'னு சொன்னாங்க. வந்து பார்த்தால்லே தெரியும், அவுங்க டிஸைனை நாங்க வேற மாதிரி மாத்திட்டோம்ங்கறது! பார்த்தபிறகு ஹார்ட் அட்டாக் வராம இருக்கணும்!திரும்பவந்து,வீட்டைப் போய்ப் பார்க்கலாம்ன்னு போனா, ஜன்னலுங்களைப் பாதி போட்டுட்டு போயிருக்காங்க! ரெண்டு ஜன்னலுக்கு ஹிஞ்சு தப்பா போட்டுட்டாங்களாம்! அப்புறம் ஒரு அரைவட்டக் கண்ணாடி முன்வாசலுக்கு மேலே வருதே, அதையும் பாதி(?) அதாவது டபுள் க்ளாஸ்லே ஒரு பக்கம் இருக்கு. மறுபக்கம் உடைஞ்சுடுச்சாம். இது 4 வது தடவை! ஜன்னல்கள் எல்லாம் டபுள் க்ளேஸ்டு அதுவும் டிண்ட் செஞ்சிருக்கு. இந்த வைத்தியம் UV ரேவைத் தடுக்கத்தான்.


நம்ம முன்வாசல் மேற்கே பார்த்தமாதிரி இருக்கு. மாலை வெய்யில் முன்கதவுலே பட்டு, நம்ம யானைப் புள்ளையார் சுவத்தில் அழகா 'காட்சி' கொடுக்கறார்.
சாயந்திரம் 7 மணிக்கு மறுபடி போனோம். கிங் வேலை செய்யறார். கை கழுவற கண்ணாடிப் பாத்திரத்தை வைக்க ஒரு ஸ்டேண்டு வேணுமுன்னு சொன்னோம்.. செஞ்சுறலாம்ன்னு ஒரு டிஸைன் வரைஞ்சு காமிச்சார். நல்லாத்தான் இருக்கு. காசு? $700 ஆகுமாம்.யோசனை செய்யலாம்............. பேசாம கை கழுவாம இருந்துட்டா.......... பிரச்சனையே இல்லை:-) கிங்கிட்டே ஒரு குணம். எதுவுமே முடியாது என்றதில்லை. "டோண்ட் வொரி. நத்திங் இஸ் இம்பாஸிபிள்' இதுதான் அவரோட மாட்டோ!9/12
ஜன்னலுக்குக் கண்ணாடி போட்டாச்சு. ஒரு ரூம் இன்னும் பாக்கி. அப்புறம் அந்த அரைவட்டமும் பாக்கி. ஸ்டடிலே கண்ணாடி இருக்கு, ஆனா அது ப்ளெயினா இருக்கு. உள்ளே கம்பிக் கட்டம் வரணுமே! அதுக்கு இப்ப டெம்ப்ரரியா வெறும் கண்ணாடி போட்டுருக்காங்களாம்.அப்புறம் சரியானது செஞ்சு கொண்டுவருவாங்களாம். இவுங்ககூட மாரடிக்க முடியலேப்பா. ஓய்ஞ்சு போகுது உடலும், மனசும்!அடுப்பு வருதுன்னு ஃபோன் வந்துச்சு. கிளம்பிப் போனேன். அதுக்குள்ளே டெலிவரி செஞ்சுட்டுப் போயிட்டாங்க! கிங்கும், போவும் வேலை செய்யறாங்க. செக்யூரிட்டி அலாரம் போட ஆளு வந்திருக்கு. கேரியும் லைட்டுங்களுக்கு வேலை செய்யறார். பெயிண்டருங்க வழக்கம்போல மும்முரமா இருக்காங்க.வெளித் தூணுக்கு வெள்ளைக் கலர் அண்டர்கோட் அடிக்கிறாங்க.


பெயிண்டர் சொன்னாரு, வேக்குவம் க்ளீனர் கொடுத்தா கொஞ்சம் சுத்தம் செஞ்சுட்டு பெயிண்ட் அடிப்பாராம். மத்தியானம் கொண்டுவரேன்னு சொன்னேன்.


மத்தியானம் இவர் அரைநாள் லீவுபோடறேன்னு சொல்லியிருந்தார். ஆனா போடலையாம்.நாங்க போனப்ப அலாரம் ஆளு வேலை செய்யறார். கொஞ்சம் நேரம் காத்திருந்தா, அலாரம் ஒப்பந்தம் கையெழுத்துப் போடலாம்ன்னு இவரு சொன்னார். அப்ப நம்ம எலிநோரும், ஜானும் வந்தாங்க! அந்தப் பக்கம் போய்கிட்டு இருந்தாங்களாம். அவுங்க மகன் கிறிஸ் இப்ப ஒரு வீடு கட்டப் போறாரே, அதுக்காக சுத்திகிட்டு இருக்காங்க. உள்ளே வந்துபாத்துட்டு, ரொம்ப நல்லா இருக்குன்னு புகழ்ந்துக்கிட்டே இருந்தாங்க! பில்டரும் வந்தாரு. கிங்கும், போவும் அடுக்களை சிங்கை போட்டுக்கிட்டு இருந்தாங்க. எலிநோருக்கு ரொம்பப் பிடிச்சுடுச்சாம். அவுங்களுக்கு 'லாண்டரி' செஞ்சு தரமுடியுமான்னு கிங்கு கிட்டே கேட்டாங்க.அப்புறம் இவர் ஆஃபீஸ் போயிட்டார். மறுபடி 3.30 வந்தார். வாஷ் ஸ்டேண்டு தேடப் போனோம். ஒண்ணும் சரியா இல்லை. விலையும் 1800, 2400ன்னு இருக்கு. பேசாம கிங்குகிட்டே 'பார்கெயின்' செஞ்சு ஒரு 600க்கு முடிச்சுடலாம். புது டிஸைனா, யுனீக்காவும் இருக்கும்!சாயந்திரம் ஆகுதேன்னு அங்கே போனா, கிச்சன் ஹூட் சரியா வைக்க இடம் இல்லேன்னு ஒரு குண்டைத் தூக்கிப் போடறாங்க. வெண்ட் மேல் பக்கத்துலே இருக்கு. சைடுலேதான் சுவர் ஓட்டை வருது! இங்கே 311 லே ஹூட் வேலை செய்யும்போது ஃபேக்டரியில் இருக்கற மாதிரி சத்தம். அதனாலே ரொம்பச் சத்தம் இல்லாம இருக்கணுமுன்னு தேடி வாங்குனது இது. கொயட்டா இருக்குன்னு 1500 டாலர் அழுதேன். சரி, வேற ஏதாவது வழி இருக்கான்னு பாருங்கன்னா, கேரி சொன்னாரு, மேற்புறம் ஓட்டை போட்டு அதுவழியா ஹோஸ் கொண்டு போலாம். . ...ஓட்டுக்குள்ளே ஓட்டை போட்டுறாமல், அந்த ஹோஸை வளைச்சு சாஃபிட்லே கொண்டு வந்துருங்கன்னு ஒரு ஐடியாக் கொடுத்தேன். அட! எனக்குக்கூட இப்படி யோசனைகள் வருதே!

சரின்னு இன்னோரு ஓட்டை. இப்படி ஓட்டை ஓட்டையாச் செஞ்சுகிட்டு இருக்காங்க. ஏற்கெனவே செஞ்ச ஓட்டைக்கு ஒரு க்ரில் போடலாம்ன்னு சொன்னாங்க. வீட்டைக்கட்டி முடியறதுக்குள்ளேயே, போட்ட காநீஸ் எடுத்தோம். சொல்ல மறந்துட்டேனே. அடுக்களையிலே வடக்கு மூலையிலே ஒரு சின்ன ஓட்டையிலே ஒரு ஒயர் இருக்கு. அது எதுக்குன்னே தெரியலை. அப்புறம் விவரம் கிடைச்சது. அண்டர் ஃப்ளோர் ஹீட்டிங் போடவாம். இடுப்பு உயரத்துலே, சுவத்துக்கு நடுவிலே அண்டர் ப்ளோர்(!) ஜிப் போடறவங்க அதைத் தப்பா மேலெ வச்சிட்டாங்களாம். அதைச் சுத்தி சுவர் வந்திருச்சு!அதைச் சரி செஞ்சவுடனே, சுவத்துலெ ஒரு ஓட்டை! தப்பான இடத்துலே ப்ளம்பர் பைப் ஓட்டை போட்டு, அதைச் சரி செஞ்சப்ப , சுவத்துலே அங்கே ஒரு பொக்கு. இப்படி ஓட்டைகள் ஏராளம். பட்டினத்தார் பாட்டுலே மனுஷனுக்கு 9 ஓட்டைன்னு வரும். இந்த வீட்டுக்கோ 90 ன்னு வச்சுக்கலாமா? பட்டினத்தாரை மறக்கமுடியலையே......


ஒரு வழியா அலாரம் போட்டாச்சு. 30 விநாடியிலே வெளியிலே போகறமாதிரி செட்டிங்காம்! 'கராஜ்' லெயிருந்து 30 விநாடியிலே வண்டியை எடுத்துக்கிட்டுப் பூட்ட முடியுமா? 45 க்கு வைக்கிறேன்னு சொன்னார். நைட் வாட்ச் இல்லையாம் அதுக்குப் பதிலா இன்னோரு கீ பேடு நம்ம படுக்கையறையில் போட்டுருக்கு. கட்டில் தலைமாட்டுலே 'பேனிக் ஸ்விட்ச்'. ஒண்ணிருந்தா ஒண்ணு இல்லை! தூக்கக் கலக்கத்துலே, தெரியாம அதை அமுத்துனா...........தூக்கம் போச்:-)சாயந்திரம் எல்லாரும் போனபிறகு, அலாரம் போட்டுட்டு வந்துட்டோம். ரிக்கர்ட்டன் மால் எல்லாம் சுத்தி 9 மணிக்கு வீட்டுக்கு வந்தா,கிங் ஃபோன் செஞ்சிருக்காரு. இன்னைக்குப் பாத்து ஃபோனை வீட்டுலே விட்டுட்டுப் போயிட்டோம். அவர் உள்ளெ போனாராம் அலாரம் அடிக்க ஆரம்பிச்சுடுச்சாம். இப்ப வரோம்ன்னு போனோம். நான் மெயின் கதவைத் திறந்து 'கீ பேடு போக ஒரு 3 விநாடிதான் ஆகும். அதுக்குள்ளே அலற ஆரம்பிச்சுடுச்சு! ஓடிப் போய் நிறுத்துனேன். 30 விநாடியை மூணே விநாடியா வச்சிட்டாருபோல!


பெஞ்சு டாப் மெலே ஒரு கப் போர்டு 'கேட்ஜட் கராஜ் வருதே அதைக் கொண்டுவந்து வச்சிட்டுப் போனாரு கிங். அலாரத்தை முழுசா நிறுத்திட்டோம். சாவிங்க 3 பேரு கையிலே இருக்கு. எல்லாருக்கும் 'கோடு' சொல்லிக்கிட்டு இருக்கமுடியுமா?


10/12
பத்தரை மணிக்குப் போனென். கொஞ்ச நேரத்துலே காங்க்ரீட் ஆளுங்க வந்துட்டாங்க. போட ஆரம்பிச்சாச்சு. பெயிண்டருங்கதான் வேலை செய்யராங்க. கிங் வந்து அந்த கப்போர்டை மேலெ ஏத்திட்டுப் போயிருக்காரு. கெரிக்கு சுவத்துலெ ஒரு நோட்! அங்கெ இருக்கற ப்ளக்கைக் கொஞ்சம் மாத்தணும். போடு....... இன்னோரு ஓட்டை! ஓட்டையடி ஓட்டையடி, வீடு முழுக்க ஓட்டையடி! "தலைக்குமேலே வெள்ளம் போனால் ஜானென்ன முழமென்ன?"ஏற்கெனவெ கட்டுன வீட்டை வாங்குனா நல்லாயிருந்திருக்கும்ன்னு இவர் சொல்றாரே. அங்கெயும் இந்த மாதிரி எத்தனை ஓட்டைங்களோ? கடைசியில் பூசி மொழுகிட்டா எல்லாமே படு சுத்தம்.மூணு மணிக்கு ஒருதடவை போனேன். காங்க்ரீட் ஊத்துன இடத்துலே அம்மைத் தழும்பு போல காசு காசா தேசலா இருக்கு. கூரையிலே இருந்து மழைத் தண்ணி சொட்டிய இடங்கள். நல்ல வேளை, பெருமழையா இருந்திருந்தா எல்லாம் கரைஞ்சு வெளியே ஓடியிருக்கும். இன்னைக்குத்தான் மழைக்குன்னு இருக்கற நாளு! எல்லாம் நம்ம அதிர்ஷ்டம்!


கேரியும், பெயிண்டர்களும் வேலை செய்யறாங்க. நல்ல நல்ல பலகைகள் வெளியே கிடக்கு. பில்டர் வந்துட்டுப் போனாராம்!!!!!!!!! அதானே பார்த்தேன்:-)))) அப்புறமாப் போய் முன்கதவைச் சாத்தணும்!சாயந்திரம் மறுபடி போனப்ப கிங்கும், போவும் அடுக்களையிலே ஷெல்ஃப் எல்லாம் போட்டுக்கிட்டு இருந்தாங்க. கொஞ்ச நேரம் இருந்தோம். அப்புறம் எல்லோருமாக் கிளம்பி வந்துட்டோம். சிமெண்ட் போட்டது இன்னும் அப்படியே ஈரமா இருக்கு.ஆனா இவரு ஆஃபீஸிலே இருந்து வரும்போது அங்கே போனப்ப, ஒரு ஆளு வந்து சிமெண்ட்மேலே ப்ரூம் ( துடைப்ப ப்ரஷ்ங்க) வச்சு அதை சமப்படுத்திகிட்டே இருந்தாராம்! எதுக்குன்னா அப்பத்தான் சொர சொரன்னு இருக்கும், நடந்தா வழுக்காது! வீட்டு டெக் & மார்னிங் கோர்ட்டுக்கு முன்னாலே லேசா வழு வழுன்னு இருந்தாத்தானே காலுக்கு நல்லாயிருக்கும்! அப்புறம் இவர் சொன்ன பிறகு, அந்த இரண்டு இடங்களை விட்டுட்டு மத்த இடத்துலே ப்ரஷ் பண்ணாராம்!


தொடரும்.......................
---------------------------


19 comments:

Anonymous said...

எங்க வீட்டுலயும் இருக்கு. தூக்கக்கலக்கதுதுல அமுத்திறக்கூடாதே என்ன பண்ணறதுன்னு யோசிச்சோம். கடைசில படுக்கையத்தள்ளிப்போட்டுட்டோம். வேற என்ன பண்ணறது

Anonymous said...

எங்க‌ வீட்டுல‌யும் panic button இருக்குன்னு வ‌ந்திருக்க‌ணும் போன‌ பின்னூட்ட‌த்துல‌.விட்டுப்போச்சு டீச்ச‌ர். மார்க் குறைச்சுறாதீங்க‌

said...

வாங்க ச்சின்ன அம்மிணி.
இதுக்கா இப்படி பேனிக் ஆயிட்டீங்க? அதெல்லாம் புரிஞ்சுக்கிட்டேன். டோண்ட் வொர்ரி:-)))))

நம்மூட்டுலே அதுக்கு ஒரு டேப் போட்டுவச்சுருக்கு. கட்டிலை நகர்த்த முடியாது.
அதுக்கு அந்த இடம்தான்:-)

said...

///இப்படி ஓட்டைகள் ஏராளம். பட்டினத்தார் பாட்டுலே மனுஷனுக்கு 9 ஓட்டைன்னு வரும். இந்த வீட்டுக்கோ 90 ன்னு வச்சுக்கலாமா? பட்டினத்தாரை மறக்கமுடியலையே......///

இந்த வரிகள் - ரசித்த இடம்!

"உடலுக்கு ஒன்பது வாசல்
மனதுக்கு என்பது வாசல்"

கண்ணதாசனும் சொல்லியிருக்கார் சகோதரி!

said...

வாங்க வாத்தியார் ஐயா.
வணக்கம். நலமா? ரொம்பநாளா உங்களைக் காணொமே!

கவிஞர்ன்னு சொன்னா மனசு 'தானே' நினைக்கிறது, நம்ம கண்ணதாசன் அவர்களைத்தாங்க. அவர் தொடாத 'சப்ஜெக்ட்' எதாவது இருக்கா?

வெறும் சொற்சிலம்பமா? எல்லாமே அற்புதமான பொருள் உள்ளது ஆச்சுங்களே.

மனதுக்கு எண்பது வாசல் என்றது எவ்வளவு அப்பட்டமான உண்மை பார்த்தீங்களா?

மனிதர் என்னமா எழுதி இருக்கார்!!!!!

said...

கடைசியில் என்ன ஆச்சு? விட மாட்டேங்கறீங்களே.....

said...

வாங்க கொத்ஸ்.

கடைசியில் என்ன.....................
ஆச்சா......................?

கட்டி முடிச்சாச்சு:-))))

//விட மாட்டேங்கறீங்களே//

பாதியில் விடமுடியாமைக்கு வருந்துகின்றேன்:-)

said...

கிங் கிட்டே வேலை பார்க்கனும்,முடியாது என்று சொல்லாமல் "இளையராஜா" மாதிரி பலவற்றை கொடுப்பார் போலும்.
கை கழுவ 700 டாலரா?யோசிக்க வேண்டிய விஷயம் தான்.
இப்ப ரொம்ப பிடிச்சது கிச்சன்.Spacious அதோடில்லாமல் கண்ணாடி ஜன்னல்.அருமை.
இதுக்குத்தான் வீடு கட்டுவதை பக்கத்தில் இருந்து பார்க்கக்கூடாது என்பது.அங்கங்கு போட்ட ஓட்டை எல்லாம் சும்மாவது வந்து தொல்லை படுத்திக்கொண்டு இருக்கும்,கொஞ்ச நாட்களுக்காவது.
இந்த இ.கொத்தனார் வருவதற்கு முன்பு நான் வந்துவிட்டு போய்விடனும்... "தாங்க முடியவில்லை" :-))))
சிரிப்பையும் அடக்கமுடியவில்லை.

said...

வாங்க குமார்.

கொத்ஸ் மாதிரி ஒருத்தர் இல்லைன்னா இந்தப் பதிவு கொஞ்சம் போரடிச்சுரும்:-)))))

இங்கே நல்ல மரம் பயங்கர விலை. அப்புறம் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் தகடுன்னு போடறதால் விலை கூடித்தான் போகுது. ஆனால் நம்ம 'கிங்'கிட்டே எல்லா வேலையும் லைஃப்டைம் வாரண்ட்டி:-)))

said...

கை கழுவற கண்ணாடிப் பாத்திரத்தை //
எதுக்குப்பா பாத்திரம் எல்லாம்??
புரியலையே!
இந்த இங்லீஷ் படத்துல எல்லாம் ரூம் மூலைல வச்சிருப்பாங்களே அது மாதிரியா.
இல்லை வாஷ் பேசினா?
மகா பொறுமை தாயே!!
//
இந்த இ.கொத்தனார் வருவதற்கு முன்பு நான் வந்துவிட்டு போய்விடனும்... "தாங்க முடியவில்லை" :-))))
சிரிப்பையும் அடக்கமுடியவில்லை.//
கொத்தனார் மேற்பார்வையோட வீடு வருது. நீங்களே அலுத்துக்கலாமா குமார்:)))))

ஓட்டை நிறைய இருந்தா மனசும் காத்தாட லைட்டா இருக்கும்.
அதுமாதிரி வீடும் காத்தால நிறைஞ்சு இருக்கும்னு நம்பறேன் துளசி:))))

said...

இவ்ளோ ஓட்டைகளா? நல்லதுக்குத்தான் எலி கிலி கஷ்டப்படாம வர்றதுக்கு ஏதாவது வேணுமில்லை. அட்வான்ஸா யோச்சிச்சு வச்சிருக்காங்கன்னு நினைக்கிறேன். சின்ன சந்தேகம். உங்க ஊர்ல எலி உண்டா? நம்மூர் சைஸா, உங்க ஊர் சைஸா?

said...

Just came through. Nice series. I think i have to take a print out and read slowly.

said...

வாங்க வல்லி.

அட! இங்கிலீஷ் பட ரேஞ்சுக்கு நம்மைக் கொண்டுபோயிட்டீங்க:-)))))

வாஷ் பேஸிந்தாங்க. கண்ணாடியிலே செஞ்சது. கொஞ்சம் மாடர்னா(??) இருக்கென்னு வாங்குனோம்.

நம்ம வீட்டுக்குள்ளே அமைப்பெல்லாம் கலைஅழகோட இருக்காது. சிம்பிள் டிஸைந்தான்.

ஃபங்ஷனல் கிச்சன் வகையறா:-)))

இந்தக் காலத்துலே சிம்பிளா இருக்கவே நிறைய செலவாயிருதுப்பா.

பொறுமை இல்லேன்னா எப்படி? இது புலிவாலைப் பிடிச்ச கதை

said...

வாங்க ஆடுமாடு.

எலி இருக்கு. தோட்டத்திலே புதருக்குள்ளெ இருக்குமாம். அதான் வீட்டுவீட்டுக்கு ரெண்டு பூனைகளாவது இருக்கே.

ஆனாலும் இந்தப் பூனைகள் எலியைப் பிடிச்சுத் தின்னுறதில்லை. உனக்கு வேணுமுன்னா நீயே போய் பிடிச்சுக்கோன்னு சொல்லும் பார்வையை நம் மீது வீசும்:-)))

said...

வாங்க ஸ்ரீகாந்த்.
முதல் வருகைக்கு நன்றி. மெதுவாப் படிங்க. 'வீடு' என்ன ஓடிறவாப் போகுது?:-)))))

said...

லைட்டு போட்டாலே வெளிச்சமும் அழகும்தானே
சின்னதா இருன்தாலும் இருட்ட்ட்டை கொஞ்ச‌மா அனுப்புதே

மன்னிகக்கணும் துளசிம்மா
கணினி, பாண்ட் பிரச்சினையால தொடர்ந்து வர முடியல‌

இன்னைக்குதான் ஒரு பத்து வீட்டுக்குப் போயிட்டு வ‌ந்தேன்


///கடைசியில் பூசி மொழுகிட்டா எல்லாமே படு சுத்தம்.///

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ஆமாமாம்:-)

நிஜமாவே வீட்டுக்கு எப்போ வ‌ர‌லாம் சொல்லுங்க‌

said...

உங்களது வீட்டை இரசித்து ஒரு தொடர் எழுதிக் கொண்டிருக்கிறீர்கள். ஒரு குறுங்கோட்டை போல் தெரிகின்றது. வீடு முழுதும் முடிந்தபின் முழுத்தோற்றம் தாருங்கள். உங்கள் முயற்சிகள் வெற்றியடைய வாழ்த்துக்கள்.

said...

வாங்க மது.

//நிஜமாவே வீட்டுக்கு எப்போ வ‌ர‌லாம் சொல்லுங்க‌//

கேக்கணுமா? எப்ப வேணுமுன்னாலும் வரலாம். உங்க வீடுன்னு நினைச்சுக்குங்க.

சீக்கிரம் வாங்க. 'தபால்' தின்னு நாளாச்சு:-))))

said...

வாங்க காரூரன்.

முதல்முறை நம்ம வீட்டுக்கு வந்துருக்கீங்க. நல்லா இருக்கீங்களா?

குறுங்கோட்டை:-))) சொற்பிரயோகம் நல்லா இருக்கு.

இங்கே 'மை ஹோம் மை காஸல்'ன்னு ஒரு டிவி தொடர் வருது:-))))

தலைப்பைத்தான் தவறுதலா எழுதிட்டேனோன்னு நினைக்கிறேன்.

'கட்டியவளின் நாட்குறிப்பு'ன்னு வச்சுருக்கலாம்:-)

வாழ்த்து(க்)களுக்கு நன்றிங்க. அடிக்கடி வந்துபோங்க.