Monday, July 31, 2006

Toy Library




தமிழ் ஆன் லைன் அகராதியைப் ( புரட்டி?) பார்த்துக்கிட்டு இருந்தேன். லைப்ரரி'க்கு என்னபோட்டுருக்குன்னு பார்க்கத்தான். நூலகம் ,நூல் நிலையம். சரியான வார்த்தைகள்தான்.ஆனா நான் போன இடமும் ஒரு நூலகம்தான். ஆனா பொம்மைகளுக்கான நூலகம்.


என்னதான் நல்ல விலை உயர்ந்த பொம்மைகளும் விளையாட்டுச் சாமான்களும் புள்ளைங்களுக்கு வாங்கிக் கொடுத்தாலும், எண்ணி ரெண்டே வாரத்துலே பசங்களோட டேஸ்ட் மாறிடுது. ஒரு மூலையிலேதூக்கிப் போட்டுட்டு வேற எதாவது புதுசா வந்துருக்கான்னு பார்க்குதுங்க. அதுலேயும் அவுங்களோடகூட்டாளிங்க, சிநேகிதங்க வச்சுருக்கறதுதான் ரொம்ப நல்ல விளையாட்டுப் பொருள்ன்னு நினைச்சுக்கிட்டுஅதுக்கு 'அடி' போடுதுங்க. 'சரி. உனக்குதான் வேணாங்கறியே, வேற யாருக்காவது கொடுக்கலாமு' ன்னாப்போச்சு. 'ஓ இதுதான் எனக்கு ரொம்ப ஃபேவரைட்'ன்னு பதில். இன்னொரு குழந்தை ( சொந்தக்காரக் குழந்தையாவேஇருந்தாலும்) அதைத் தொட்டாப் போச்சு.


இந்தப் பசங்களோட சைக்காலஜியைப் புரிஞ்சுக்கவே முடியலையேப்பா. எப்பப் பார்த்தாலும் பொம்மைகள்,ஆட்டசாமான்கள் வாங்கிக்கிட்டே இருக்க முடியுமா? சரி. நாம் ச்சின்னப்புள்ளையா இருந்தப்பத்தான் அவ்வளவு வசதியும் இல்லை, இவ்வளவு விதங்களும் இல்லை. இதுகளாவது அனுபவிக்கட்டும்'னுதான் பல பெற்றோர்களும் வாங்கிக் குவிச்சுடறோம். இப்பப் பார்த்தா வீடு பூராவும் இந்த அடைசல்கள்.


இந்த சமயத்துலே ஒரு ச்சின்னக் கொசுவர்த்தி:-))))


என்னோட ஒரு தோழி(?) இருக்காங்க. அவுங்க புள்ளைங்களுக்கும், என் மகளுக்கும் ஏறக்குறைய ஒரு வயசு.நம்ம வீட்டுலே 'வராதுவந்த மாமணி'ன்னு எந்தப் பொம்மையைக் கேட்டாலும் உடனே வாங்கிக் கொடுத்துருவோம்.இதுலே என் பங்குதான் நிறைய. 'இந்த வயசு போனா வருமா? குழந்தைக் காலம்ன்னு சொல்றது எவ்வளோ இனியது.கவலைகள் எதுவும் இல்லாம, பெத்தவங்க மேலே முழு நம்பிக்கையும் வச்சிருக்கும் பருவம். நம்மளை மட்டுமே நம்பி இருக்கும் ஜீவன்'ன்னு டயலாகெல்லாம் விட்டு, உடனே வாங்கிக் கொடுத்துருவேன்.


தோழி....ஊஹூம். அவ்வளவு சீக்கிரம் இளகிறமாட்டாங்க. கடைகளுக்கு நாங்க பிள்ளைகளோடு போனால்......அந்தப் பிள்ளைங்க, அங்கே இருக்கற ஒவ்வொரு பொம்மையையும் எடுத்து ஆசையோடு தடவிப் பாக்கும். அவுங்க அம்மாகிட்டே கேக்கவும் செய்யும். அதுக்கு அவுங்க அம்மா சொல்றதைக் கேக்கணுமே, " நீ பெரியவனாகி சம்பாரிப்பே பாரு. அப்ப வாங்கிக்கோ'!!!!!!


ஏங்க, இவன் பெரியவனாகி சம்பாரிக்கிறப்ப , இந்தப் பொம்மையைத்தான் வாங்குவானாம்மா?ன்னு நான் மனசுக்குள்ளெ நினைச்சுக்குவேன். இதுக்காக, 'ஆஹா.... நான் பாரு. என் புள்ளைக்குக் கேட்டதும் வாங்கித் தர்றேன்னு பெருமை அடிச்சுக்கலை. ஒவ்வொருத்தரும் ஒரு மாதிரி, தனி ரகம் இல்லையா? அவுங்கவுங்க கருத்து, எண்ணம் வேறயா இருக்கக்கூடாதா?


அப்பப் பார்த்து நம்ம மகள் கேக்கறதை உடனே நான் வாங்குனா அந்தப் புள்ளைங்க ஏங்கிப் போகுமேன்னு, 'இன்னொரு கடையிலே விலை விசாரிச்சுக்கிட்டு வாங்கலாம். இப்ப அம்மா காசு கொண்டு வரலை. வீட்டுக்குப்போய் காசு எடுத்துக்கிட்டு வரலாம்'னு எதாவது சொல்லிச் சமாளிச்சுட்டு, வீட்டுக்கு வந்துட்டு, அப்புறம் போய் வாங்குவேன். அதான் பெரிய ஷாப்பிங் செண்ட்டர் நம்ம வீட்டுக்கு முன்னாலேயே இருக்கே. மூணு நிமிஷ நடைதானே?


நம்ம புத்தக லைப்ரரி இருந்த இடத்தை இப்பப் பொம்மை லைப்ரரிக்குக் கொடுத்துட்டோம். பக்கத்துலேயே பெரூசா சிட்டிக் கவுன்ஸிலோட லைப்ரரி வந்துட்டதாலே நாங்க, எங்க லைப்ரரியை மூடவேண்டியதாப் போச்சு.
எங்களுக்குப் புத்தகம் வாங்கிக்க ஒரு புண்ணியவான் கொடுத்த காசுலே கொஞ்சூண்டு பாக்கி வச்சிருந்தோம்.அது ஒரு ட்ரஸ்ட். இப்ப லைப்ரரி இல்லாததாலே அந்த ட்ரஸ்ட்டைக் கலைக்க வேண்டியதாப் போச்சு. அந்தக்காசை எதாவது குழந்தைகள் சம்பந்தப்பட்ட தர்ம நிறுவனங்களுக்குக் கொடுத்தறலாமுன்னு முடிவு செஞ்சோம்.


ஒரு நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்து விஷயத்தைச் சொன்னதும் அவுங்களும் சந்தோஷப்பட்டாங்க. அவுங்களுக்கு முறைப்படி அந்த பாக்கிக் காசு கொடுக்கற நிகழ்ச்சி, நம்ம பழைய கட்டிடத்துலேயே வச்சிக்கிட்டோம். பொம்மைக்காரங்களும் இதை அங்கே வச்சுக்கணுமுன்னு வற்புறுத்திச் சொன்னதுமில்லாம, அவுங்களும் நமக்கு நன்றி தெரிவிக்க இதை ஒரு சந்தர்ப்பமா எடுத்துக்கிட்டு ஒரு ச்சின்ன supper பார்ட்டியா ஏற்பாடு செஞ்சுட்டாங்க.


ட்ரஸ்ட் மெம்பர் என்ற வகையில் அங்கே போகும்படி ஆச்சு. இப்பத்தான் மொதமுறையா ஒரு பொம்மை லைப்ரரிக்குள்ளெ காலடி எடுத்து வச்சிருக்கேன். அருமையான வகைவகையான பொம்மைகள். விளையாட்டுச் சாமான்கள். வாடகைக்கு எடுக்கலாம். ரெண்டு வாரம் வச்சுக்கலாமாம்( அதுபோதுமே பசங்களுக்கு) ஒரு டாலர் முதல் 5 டாலர் வரை சாமான்களுக்குத் தகுந்தாப்போலே வாடகை.


47 குடும்பங்கள் பதிஞ்சுருக்காங்களாம். வருஷத்துக்கு 30 டாலர் ஒரு குடும்பத்துக்கு மெம்பர் ஷிப் கட்டணம். எந்த அடிப்படையில் பொம்மைகளை வாங்கறாங்கன்னு கேட்டேன். கல்வி சம்பந்தம், பொழுது போக்கு, அவுட்டோர் கேம்ஸ்ன்னு பலவகைகளில் தேர்ந்தெடுக்கறாங்களாம். பிள்ளைகள் அவுங்களுக்கு ஆசைப்பட்ட பொருட்கள் இங்கே இல்லைன்னா அதுக்காக வேண்டுகோள் விட்டாப் போதுமாம். அதை வாங்க பெருமுயற்சி எடுத்துக்குவாங்களாம். அட! பரவாயில்லையே!


இதையெல்லாம் வாங்கறதுக்குக் காசு வேணாமா? இங்கே பல வியாபார நிறுவனங்கள் கொஞ்சம் பண உதவியும் செய்யறாங்களாம்.
எத்தனை பிள்ளைங்க இதைப் பயன்படுத்தறாங்கன்னு கேட்டேன். நூத்துக்கு ஒண்ணு கம்மி,99.


எவ்வளோ நல்ல கான்ஸெப்ட்ன்னு நினைச்சேன். பசங்களுக்குப் புதுப்புது விளையாட்டுச் சாமான்கள். பெத்தவங்களுக்கும் சுமையா இல்லாமச் சுலபமா இருக்கு. மொத்தக் காசையும் போட்டு வாங்கிக் குவிக்க வேணாம். அங்கே இருந்த பல பொருட்களைப் பார்த்தால் நாமும்கூட குழந்தைக் காலத்துக்குப் போக ஆசையா இருக்கு. அங்கே இருந்த ஒரு 'பொம்மை வீடு'எனக்கு ரொம்பப் பிடிச்சது.


இப்ப இந்தக் குழுவுக்கு 'ச்சேர் பெர்சன்'னா இருக்கற 'லின்' னிடம் பொம்மைகள் அடுக்குன ஒரு அலமாரி கிட்டே நின்னு பேசிக்கிட்டு இருந்தேன். பேச்சு சுவாரஸியத்துலே அங்கே இருந்த பிக்னிக் கூடையில் இருந்த ஒரு வாழைப்பழத்தை எடுத்து 'வேணுமா'ன்னு கேட்டாங்க. 'நான் ஆப்பிள் எடுத்துக்கறேன், நீங்க பனானா சாப்புடுங்க'ன்னு சீரியஸ்ஸாச் சொன்னதும் சிரிச்சுட்டாங்க.

இங்கத்துக் குழந்தைகள் கொடுத்து வச்சவுங்கதான்.

37 comments:

said...

//இதுகளாவது அனுபவிக்கட்டும்'னுதான் பல பெற்றோர்களும் வாங்கிக் குவிச்சுடறோம். //

எங்கள் வீட்டில் தடுக்கி விழுந்தால் பொம்மை மீதுதான் விழுகிறோம். அதுங்க வேண்டான்னு சொன்னாலும் 'புள்ள வெளையாண்ட் பொம்மை' என்று தூக்கிப் போடவும் மனசு வருவதில்லை :)

said...

//எவ்வளோ நல்ல கான்ஸெப்ட்ன்னு நினைச்சேன். பசங்களுக்குப் புதுப்புது விளையாட்டுச் சாமான்கள். பெத்தவங்களுக்கும் சுமையா இல்லாமச் சுலபமா இருக்கு. //

ரொம்பச் சரியா சொன்னீங்க போங்க. எங்க வீட்டுல, எல்லா துணிவைக்கிற (க்ளாசட்டும்) அலமாரியிலும் இப்ப விளையான்டு அலுத்துப் போன டொய்ஸ்தான் போங்க. நீங்க சொல்ற முறை நல்ல அணுகுமுறைய இருக்கு, ஆனா இங்க அது நடைமுறைக்கு வருமா, சந்தேகம்தான்.

said...

வாங்க ஜிகே.

ஒவ்வொண்ணும் என்னா விலைங்கறீங்க? வீணா இப்படிக் காசு தண்டம் பண்ணாம
சிக்கனமா இருக்க இது ஒரு நல்ல ஐடியாதானே?

மனசு வராதுதான். நமக்குத்தான் ஒவ்வொண்ணுக்கும் ஒரு செண்டிமண்ட்டல் ரீஸன்
இருக்கே:-)))))

said...

தெ.கா.
சொன்னா நம்ப மாட்டிங்க, அன்னிக்கு உங்களை நினைச்சுக்கிட்டேன். அந்த
சேர்பெர்சன் 'லின்' மின்னசோட்டாக்காரங்க. கிவியைக் காதலிச்சுக் கல்யாணம் பண்ணிக்கிட்டு
இங்கே வந்து 10 வருசமாச்சாம். எல்லாம் பேசறப்பப் புடிச்ச விவரம்தான்:-)))

said...

துளசி,
நம்ம பொண்ணு ஊர்ரில புத்தக லைபிரரியும் இந்த மாதிரி இருக்கு. நிறைய பணம் போட்டு வாங்கி அடுக்கி வைப்பதற்குப் பதிலாக இங்கே எடுப்பது பிள்ளைங்களுக்கு ஒரு டிசிப்லின் கிடைக்கிறதுனு அவங்க அபிப்பிராயம்.அதிலேயெ ஹாரி பாட்டர் புத்தகம் முதலிலேயெ கதையை ஒரு சிடிலே வைச்சு சொல்லிக் கொடுத்துட்டு,பிறகு படிப்பதால் நல்லா புரியுதாம்.

said...

//அங்கே இருந்த பல பொருட்களைப் பார்த்தால் நாமும்கூட குழந்தைக் காலத்துக்குப் போக ஆசையா இருக்கு. //

போட்டோவில் உங்க சிரிப்பை பார்த்தாலே தெரியுதே.... :)

said...

இந்த மாதிரி வாடகைப் பொம்மை நிலையங்கள் இந்தியாவிலும் வளரனும்

said...

வாங்க மானு.

நம்மதும் முந்தி புத்தக லைப்ரரியாத்தான் இருந்துச்சு. இத்தனைக்கும் எங்களுது
0 to 16 வயசுக்கு மட்டும்தான்.
பெரியமீன் ச்சின்ன மீனை முழுங்குன கதைதான் எங்களுக்கு நேர்ந்துச்சு(-:

//பிள்ளைங்களுக்கு ஒரு டிசிப்லின் கிடைக்கிறதுனு ...//

இது என்னவோ நிஜம். சரியான முறையிலே புத்தகம்/பொம்மை இவைகளைப்
பராமறிக்கிறது. சரியான நாளுலே கவனமாத் திருப்பிக் கொடுக்கறது போன்ற
நல்ல குணங்கள் வளரும். இல்லையா?

said...

கொத்ஸ்,

அங்கே ஒரு ஸ்ப்ரிங் வச்ச துள்ளூம் ஸீட் பொம்மை இருந்துச்சு. அதுலே ஒரு
'go' வேணுமான்னாங்கதான். 'too far'ன்னு வேணாமுன்னுட்டேன்.அதானே
ஸ்ப்ரிங் ஒடைஞ்சுட்டா....? :-))))))))

said...

வாங்க சிஜி.
இது மட்டுமில்லை. இன்னொரு விஷயம்கூட ரொம்ப நாளா என் மனசுலே
இருக்கு. இந்தியாவுலே ஆரம்பிச்சா நல்லதுன்னு.

அதுதான் pre loved clothes. இங்கே செகண்ட் ஹேண்ட் க்ளோதிங் ஷாப் லே
ஏறக்குறைய நல்ல புதுசா இருக்கும் துணிகள் அஞ்சு, ஆறு டாலருக்குக் கிடைக்கும்.
எல்லாம் சில முறைகள்தான் போட்டுருப்பாங்க போல. வெள்ளைக்காரர்கள் இதை
வாங்கிப் போட்டுக்கறாங்க. நம்ம நாட்டுலேதான் கட்டுன துணியை யாருக்கும் கொடுக்கக்கூடாது,
நம்ம ஐசுவரியம்( லச்சுமி) போயிருமுன்னு ஒரு தவறான நினைப்பு.

எத்தனை வீடுகளிலே பட்டுப் புடவைகள் புதுக் கருக்கு அழியாம பேஷன் போயிருச்சுன்னு அப்படியே
பீரோலே தூங்குது. இதையெல்லாம், அப்புறம் பசங்களுக்கு வாங்குன பட்டுப்பாவாடை
ரகங்கள் எல்லாம் இப்ப அதுங்க வளர்ந்ததாலே ச்சும்மாத்தானே கிடக்கு. இதையெல்லாம்
தானமாக் கொடுத்தாங்கன்னா வாங்கி ஒரு கடையிலே விக்கலாம். வசதி குறைஞ்சவங்க
பத்து இருபது ரூபாய்க்கு வாங்கிப்பாங்க. அவுங்களுக்கும் காசு கொடுத்து வாங்குனோம் என்ற
தன்னம்பிக்கை வரும் இல்லையா?
ஆனால் இது நடைமுறையில் சரிப்படுமான்னு தெரியலை.
இங்கே முழுக்க முழுக்க வாலண்டியர்கள்தான் இதையெல்லாம் நடத்தறாங்க.

said...

துளசிம்மா எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம் இருக்கு இப்ப நீங்க துணிகளை பத்தி சொன்னதும்தான் ஞாபகம் வருது
"எல்லார் வீட்டிலயும் பெண்கள் பீரோ நிறயா துணிவச்சிருக்காங்க ஆனா யாரும் கட்டி கிழிக்கறதில்லயே ஏன்" ?

இதை என் மனைவியிடம் கேட்டபோது: இதெல்லாம் விஷேச நாளுக்கு மட்டும்தான்
அக்கா: ஓன்னோட வேலையப் பாத்துகிட்டு போடா...
பெரிய அக்கா: போயி ஓன்னோட பொண்டாட்டிகிட்ட கேளு
அம்மா: சின்ன புள்ளங்க அதும் பொட்டபுள்ளைங்க ஆசையா வச்சிருந்தா ஒனக்கென்ன ?
பாருங்க யாருமே பதில் சொல்லல நீங்களாவது சொல்லுங்க ....:)

said...

இங்கெ எல்லாம் வறட்டுக் கவுரவம் அல்லது பொய்யான செண்டிமெண்ட்...
சுனாமியால் பாதிக்கப்பட்டோர்
பழைய துணிமணிகளை வாங்கிக்கொள்ள மறுத்துவிட்டனர்
தெரியுமா?

said...

நல்ல கருத்தும் செயல்முறையுமாக இருக்கிறது. பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி.

said...

மகேந்திரன்,

//ஆனா யாரும் கட்டி கிழிக்கறதில்லயே ஏன்" ? //

இது இப்படி இருக்க, வெளியே கிளம்பும்போது பீரோவைத் திறந்து பார்த்தா.......
'கட்டிக்க நல்லதா ஒண்ணுமே இல்லையே ' ன்னு நினைப்பு வருதே. அதை எங்கெ போய்ச் சொல்ல?

said...

பொம்மையகமா! நல்ல ஐடியாவா இருக்கே.....ஆனா கொழந்த வெளையாடுற பொம்மைன்னாலே ஒரு செண்ட்டிமெண்ட்டு வந்துருதுங்களே...அதத் திரும்பக் குடுத்தாலும் அந்த பொம்மதான் வேணும்னு கேட்டா என்ன பண்றது. அந்த ஊர்க் கொழந்தைகளுக்கு அந்த அளவுக்குப் பத்தாதோ!

said...

சிஜி,

அதுக்குத்தான் ச்சும்மா தானமாக் கொடுக்காம கடையா இருந்தால் அவுங்களும் வந்து 'வாங்கலாம்' இல்லையா?

said...

என்னடா ஒரே வெளிச்சம்ன்னு பார்த்தேன். நட்சத்திர வருகை:-))))

நன்றி செல்வா.

said...

வாங்க ராகவன்.

திருப்பிக் கொடுத்தா என்ன? ஒரு வாரம் கழிச்சுப்போய் அதே
பொம்மை இருந்தா இன்னொருக்கா எடுக்கலாம்தானே?
பசங்களுக்கு ரெண்டு வாரமே ஜாஸ்தி. புதுசா இன்னொண்ணைப் பார்த்தா,
இதை விட்டுரும்:-))))

said...

பொம்மைகள் உலகம் தனி உலகம். இதுலே பிள்ளங்க கேட்கறதைவிட நம்ம ஆசையும் சேர்ந்துதான் வாங்குறது. அவர்களுக்கு விட்டு காட்டுகிறேன் என்று நான் விளையாடியதும் உடைத்துவிடப் போகிறார்கள் என்று சுதந்திரமாக விளையாடக் கொடுக்காமல் இன்று அவை உபயோகப்படாமல் இருப்பதைப் பார்த்து எப்படி dispose செய்வது என்று விழிப்பது வரை நினைவிற்கு வருகிறது.

said...

மேடம், நல்ல concept போல இருக்கே! இங்கேயும் இது போல ஒன்னு தொடங்கினா நம்ம பையனுக்கான மாச பட்ஜெட் குறையும் போல.. மெம்பர்ஷிப்பு வாங்க நான் ரெடி :)))

said...

//என்னடா ஒரே வெளிச்சம்ன்னு பார்த்தேன். நட்சத்திர வருகை:-))))///

சிலநேரங்களில் சட்டென்று சிரிக்கவைத்துவிடும் உங்களின் இயல்பான நகைச்சுவைக்காகவே தினம் துளசிதளம் வரவேண்டியிருக்கு, என்ன பண்ணச்சொல்றீங்க? உஷாவின் சமீபத்திய பதிவில் நீங்கள் இட்டிருக்கும் "விமர்சனங்கள்" குறித்த பின்னூட்டம் படித்துப் பொங்கிய சிரிப்பை இன்னும் அடக்க முடியவில்லை எனக்கு.

said...

வாங்க மணியன்.

எனக்கு ஒரு செலுலாய்ட் பொம்மை ஒண்ணு ரங்கூன்லே இருந்து வந்துச்சாம். அதை ஒரு நாளும்
கையிலே எடுத்து விளையாடுன ஞாபகமே இல்லை. எப்பவும் பீரோ மேலே உக்காந்திருக்கும்.
ஒரு கை ஒடிஞ்ச மரப்பாச்சிதான் துணையா இருந்தது.

இப்போ வீடு நிறைய பொம்மைகள், மகளோடது. அவ சின்னவளா
இருந்தப்ப இந்த கான்ஸெப்ட் வந்திருக்கலை(-:

said...

வாங்க ஜெயசங்கர்.
மெம்பர்ஷிப் 30$ எனக்கு அனுப்புங்க:-))))

உங்க ஏரியாவுலே பொம்மையகம் திறந்தா சொல்லிக்கலாம்:-)))

said...

செல்வா,
இன்னிக்கு எனக்கு டபுள் dip! அடிச்சேன் 'லாட்டரி'

நீங்க உஷா பதிவைச் சொல்றீங்களே. அதுலே அவுங்க படத்தோட வந்துருக்குன்னு
எழுதுனாங்க இல்லே. அங்கே போய்ப் பார்த்தா ஒரு 'வெள்ளைத்தலை லேடி' படம்
வந்துச்சு. எனக்கு 'திக்'னு ஆயிருச்சு. ஐய்யய்யோ ...உஷாவுக்கு என்னடா ஆச்சுன்னு.
அப்புறம் படிச்சா தலைப்பு மட்டும் தான் உஷாவோடது. 'தலை' இல்லை:-)))

said...

துளசியக்கா,

இப்ப பெற்றோர்கள் பெரும்பாலும் தங்கள் குழந்தைகள் மூலமாக தாங்கள் மிஸ் செய்த குழந்தைப் பருவத்தை அனுபவிக்கிறார்கள்.

ஆரம்பத்தில் குழந்தைகளை விட அப்பொம்மைகள் நான் விளையாட்டுக்காட்டுவதாக நான் விளையாடியது அதிகம். குழந்தைக் கார்ப் பைத்தியமாக இருந்தேன். :-)))

இப்போ தினம் பொம்மைப் பொறுக்கியாக வீடெல்லாம் இறைந்து கிடக்கும் பொம்மைகளை பொறுக்க வேண்டியிருக்கிறது.

இது மிக அதிகமான எமொஷனல் அண்ட் செண்டிமெண்ட்ஸ் அதிகமான arena.

நானெல்லாம் eco friendly மற்றும் சுயதயாரிப்பு சிகரட் பெட்டி+ சோடாமூடி டயர் கார் வைத்து விலையில்லாமல் விளையாடியவன்.

என்றாலும் அதிகம் பயன்படுத்தி உடைந்து போன பொம்மைகளை குழந்தைகளையே "தாங்யூ மை ப்ரண்ட்"
சொல்லித் தூர எறிந்துவிடுகிறேன் அவ்வப்போது.

said...

We dont inherit the world from our parents but we borrow it from our children....

எதோ ஒரு நாவல்லப் படிச்சது சட்டுன்னு ஞாபகம் வந்துடுச்சு... ஏன் எல்லாம் கேக்காதீங்க...

ஆகா என்ன ஒரு அற்புதமான சிந்தனை...

"அட''போட வைத்த ஒரு பதிவு.

said...

ஹரிஹரன்,

என்ன சொல்றீங்க?

//அதிகம் பயன்படுத்தி உடைந்து போன பொம்மைகளை குழந்தைகளையே "தாங்யூ மை ப்ரண்ட்"
சொல்லித் தூர எறிந்துவிடுகிறேன் அவ்வப்போது//

குழந்தைகளை தூர எறிந்துவிடுறீங்களா? ஙே..............(-:

said...

தேவ்,

//We dont inherit the world from our parents
but we borrow it from our children....//

//ஆகா என்ன ஒரு அற்புதமான சிந்தனை...//

ஆமாமாம். மேற்படி வரிகள் அற்புதமே!

said...

//அதிகம் பயன்படுத்தி உடைந்து போன பொம்மைகளை குழந்தைகளையே "தாங்யூ மை ப்ரண்ட்"
சொல்லித் தூர எறிந்துவிடுகிறேன் அவ்வப்போது//

குழந்தைகளையே என்பது குழந்தைகளை விட்டே என்று இருந்திருக்கவேண்டும். தவறுக்கு மன்னிக்கவும் :-})))

said...

தமிழ் ஆன் லைன் அகராதியைப் ( புரட்டி?) பார்த்துக்கிட்டு இருந்தேன்.//

மேய்ஞ்சுக்கிட்டிருந்தேன்னு வேணும்னாலும் சொல்லலாம்:)

இப்பப் பார்த்தா வீடு பூராவும் இந்த அடைசல்கள்.//

எல்லார் வீட்லயும் இதே கதைதான். அதுவும் எங்கள மாதிரி டிரான்ஸ்ஃபர் கேசுங்கன்னா கேக்கவே வேணாம். அதுக்குன்னே தனியா பேக் பண்ணணும். நாற்காலி,மேசையோட கால் ஒடஞ்சாலும் பரவாயில்லை. ஒரு பொம்மையோட கையோ, காலோ ஒடஞ்சிட்டா அவ்வளவுதான். வீடு ரெண்டாயிரும்..

சரி வளர்ந்து ஆளாயிருச்சுங்களேன்னு பார்த்தா.. அதுவும் பொண்ணுங்கள்னா கேக்கவே வேணாம். இன்னமும் விசிட்டர்ஸ் ரூம்லருக்கற ஷோ கேஸ் முழுசும் பொம்மைங்கதான்..

said...

//'கட்டிக்க நல்லதா ஒண்ணுமே இல்லையே ' ன்னு நினைப்பு வருதே. அதை எங்கெ போய்ச் சொல்ல?//

நீங்களாவது ஒரு நல்ல பதில் சொல்லுவீங்கன்னு பாத்தா திருப்பி ஏங்கிட்ட கேள்வி கேக்கறீங்க இது நியாயமா துளசிம்மா? :)

ஹீம் நான் என்ன சொல்ல எல்லாரும் அவங்க அவங்க ஆளுங்களுக்கு சப்போட் பன்னுறீங்க:))

said...

ஹரிஹரன்,

//குழந்தைகளை விட்டே ....//
'விட்டே'வை 'விட்டு'ட்டீங்கன்னு முதல்லேயே அனுமானிச்சேன்.

பின்னே எதுக்கு அப்படிப் போட்டேனா?....ச்சும்மா......

said...

வாங்க டிபிஆர்ஜோ,

உங்களுக்கும் இதுதான் சொல்லணும்.

வீ.வீ வா.
நம்ம வீட்டுலே என் யானைகளுக்கு இடம் பத்தலைன்றதாலே,
எல்லாரும் ஸ்பேர் ரூம்லே கட்டில்லே ஏறி உக்காந்துக்கிட்டு இருக்காங்க.
ஒரே கூட்டம்தான் போங்க.
ஒரு ச்சின்னபசங்க கதையிலெ படிச்சேன், 'ராத்திரி மனுசங்க தூக்கத்துலே இருக்கும்போது
பொம்மைங்களுக்கு உயிர் வந்து பேசிக்குமாம்.' நம்ம வீட்டுலே அதுதான் சத்தம் போல,
சிலநாளில் அர்த்தராத்திரியில் எழுந்தாக் கேக்குது.

said...

மகேந்திரன்,

அதான் வீ.வீ வா.ன்னு இருக்குல்லே:-))))

வீட்டு வீட்டுக்கு வாசப்படி

said...

//வீட்டு வீட்டுக்கு வாசப்படி //

வீட்டுக்கு வீடு வாசப்படி யா
வீட்டுக்கு வீடு பீரோ வா?

:)

said...

//
இந்தப் பசங்களோட சைக்காலஜியைப் புரிஞ்சுக்கவே முடியலையேப்பா. எப்பப் பார்த்தாலும் பொம்மைகள்,ஆட்டசாமான்கள் வாங்கிக்கிட்டே இருக்க முடியுமா?
//

இந்த கான்சப்ட்டை வைத்து ஒரு பதிவு விரைவில் போடலாமுனு இருக்கேன். நன்றி

said...

மகேந்திரன்,

அதே அதே:-))))


மின்னுது மின்னல்,

ஜாமாய்ங்க. படிச்சுறலாம்.