Thursday, July 27, 2006

நியூஸிலாந்து பகுதி 53

அல்பமா இருக்காம எதையுமே பெருசாச் செய்யணும். பிரமாண்டமான திட்டங்களைப் போட்டு நாட்டை முன்னுக்குக் கொண்டு வரணுமுன்னு சொல்லிக்கிட்டு ஒரு பிரதமர் வந்தார். இவர் பேர் ஸர். ராபர்ட் முல்டூன்.1975லே நேஷனல் கட்சி சார்புலே வந்தவர். இதுக்கு முன்னாலே இருந்தவங்க செஞ்ச மாதிரியே இவரும்'கடன் வாங்கிக் கல்யாணம்' ஃபார்முலா வச்சிருந்தார். பெரிய பவர் ஸ்டேஷன்களைக் கட்டுனா, அதன்மூலம் எல்லா முன்னேற்றமும் வந்துரும்னு நம்புனவர் இந்தத் திட்டங்களுக்கு 'திங் பிக் ( Think Big)'ன்னு பேர்.


1979லே பெட்ரோலுக்குக் கடுமையான விலை உயர்வு. வீக் எண்டுலே பெட்ரோல் பங்கை மூடிருவாங்க. வாரத்துலே சில நாட்களை கார் இல்லாத நாள் ன்னு வச்சாங்க. அன்னைக்குக் கார் எதுவும் ஓடக்கூடாது. அப்படியும் சமாளிக்கமுடியலை. பெட்ரோல் தட்டுப்பாடு மற்ற வியாபாரங்களைப் பாதிச்சது. அமெரிக்கா, ஜப்பான் இங்கே இருக்கறபெரிய மோட்டார் கம்பெனிகளோடு பேசி, மெதனாலை பெட்ரோல் கூட கலந்து(Methanol blending) பயன்படுத்தலாமுன்னு யோசனைஇருந்துச்சு. இங்கயோ அளவுலே ரொம்பச் சின்ன தேசம். மார்க்கெட்டும் ச்சின்னது. அதனாலெ அவுங்க யாரும் அவ்வளவாநம்மளைக் கண்டுக்கலை. நாமளெ இதைச் செஞ்சுக்கலாமுன்னா, கார் எஞ்சின்களைக் கொஞ்சம் மாற்றி அமைக்கணும்.அதுக்கெல்லாம் இங்கே வழி இல்லை.


பத்து பில்லியன் டாலர் கடன் வாங்கி பவர் ஸ்டேஷன் கட்டுனாங்க. மந்திரிசபையிலே இவருக்கு ஏற்கெனவே நல்ல அனுபவம் இருந்துச்சு. 1964 முதல் 1967 வரை அப்ப இருந்த நிதி மந்திரிக்கு அண்டர் செக்கரட்டரியாஇருந்தார். அதுக்கப்புறம் 1967 முதல் 1972 வரை நிதி மந்தியாவும் இருந்துருக்கார். இதோ இப்ப பிரதம மந்திரி மட்டுமில்லை, இவரே நிதி அமைச்சரும் கூட!


ஆனா இந்த அனுபவங்களை வச்சுக்கிட்டும், இவராலெ, இவர் போட்ட திட்டங்களாலே பெரிய நன்மை ஒண்ணும் வந்துறலை. 'கடன் வாங்கிக் கல்யாணம்' ன்னா இப்பக் 'கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி'ன்னு ஆயிருச்சு.கடைகண்ணிகளில் விலை உயர்வு கூடிப்போச்சு. பணவீக்கம். 1982 லே 20% பண வீக்கமாம்!ஒண்ணும் கட்டுப்படி ஆகலை. அப்பப் பார்த்து ஃபால்க்லாந்து போரில் பிரிட்டன் ஈடுபட்டு இருந்துச்சு. இவரும் அவுங்களை ஆதரிச்சுக்கிட்டு நின்னார். 1975 லே இருந்து தொடர்ந்து மூணு முறை பிரதமரா இருந்தவர், மக்கள் நம்ம திட்டங்களுக்கு ஆதரவு ரொம்பக் கொடுக்கறாங்கன்ற நம்பிக்கையிலே குறிப்பிட்ட காலம் முடியறதுக்கு முன்னேயே 1984 பொதுத் தேர்தலை வைச்சார்.


விலைவாசி உயர்வாலே திணறிக்கிட்டு இருந்த மக்கள் இவரைத் தூக்கிக் கடாசத் தயங்கலை. லேபர் கட்சி ஜெயிச்சது. டேவிட் லாங்கெ புதுப் பிரதமரா ஆனார். இவரைப் பத்தின மேலதிகத் தகவல்கள் இங்கே இருக்கு.நிதி மந்திரியா வந்தவர் ரோஜர் டக்ளஸ். பெரிய மாற்றங்கள் வந்த நேரம் இதுதான். இவரோட திட்டங்கள் Rogernomics ன்னு கொண்டாடப்பட்டுச்சு. நாட்டோட பொருளாதாரம் மேலே போகக் காரணமா இருந்தவர் இவர்தான்.


மொதவேலையா, கடைகண்ணிகளுக்கு வேலை நேரத்தை மாத்துனாங்க. இதுக்கு முன்னாலே கடைகள் திறந்திருக்கற நேரம் இப்படி இருந்துச்சு. வார நாட்களிலே திங்கள் முதல் வெள்ளிவரை காலையில் 9 முதல் மாலை 5.30வரை.இதுலே ஒவ்வொரு ஏரியாவுக்கும் ஒரு நாள் 'லேட் நைட் ஷாப்பிங்'ன்னு சாயந்திரம் 9 வரை திறந்திருக்கும். சனிக்கிழமையானா பகல் 1 மணிக்கு மூடிருவாங்க. ஊரே 'ஜிலோ'ன்னு கிடக்கும். மறுநாள் ஞாயித்துக்கிழமை பூராஇதே 'ஜிலோ'தான். திங்கக்கிழமைக் காலையிலேதான் மறுபடி கடைகள் திறக்கும். அங்கங்கே தெரு முக்குலே இருக்கற கடைகளுக்கு மட்டும் விதி விலக்கு. அவுங்க வேலைநேரம் வேற. மத்த கடைகள் இல்லாததாலே வார இறுதின்னா இந்தக் கடைகளிலே வியாபாரம் கூடும். வியாபாரம் மட்டுமா? விலையும் கூடும். எல்லாம் அவுங்க இஷ்டம்!


இங்கே ஒரு விஷயம் சொல்லணும். இந்த தெருமுக்குக் கடைகள் வச்சிருந்ததெல்லாம் யாருங்கறீங்க? 100க்கு 99 கடைகள் இந்தியர்கள்தான். வேலை நேரத்தைப் பத்திக் கவலைப்படாம உழைக்கக்கூடிய ஆட்கள் நம்மாட்கள்தான்.இவுங்க எல்லாரும் இடி அமீன் கொடுமைக்கு ஆளாகி 1972 லே உகாண்டாவுலே இருந்து பிரிட்டனுக்கு அடைக்கலமாப் போனவங்க. உகாண்டா முந்தி பிரிட்டிஷ் காலனியா இருந்தப்ப, இந்தியர்கள் அங்கே போய் வியாபாரம் நடத்திக்கிட்டு இருந்தாங்க பாருங்க. அவுங்களொட வம்சாவளியினர் தான், பிரிட்டனுக்குப் புகலிடம் தேடிப் போனாங்க.


இங்கே நியூஸியிலும் குடியேற்ற உரிமை பிரிட்டிஷ்காரங்களுக்கு மட்டுமே இருந்த காலக்கட்டம். அப்ப எப்படிஇந்தியர்கள் வந்திருக்க முடியும்? அதான் அவுங்க புகலிடம் போயிட்டுப் பிரிட்டிஷ் பாஸ்ப்போர்ட் வாங்கியிருந்தாங்களே.இந்தியர்கள்தான்னு சொன்னாலும் இவுங்க எல்லாரும் ஒரே ஒரு மாநிலத்தைச் சேர்ந்தவர்களாகவே இருந்தாங்க.அது எந்த மாநிலம்? குஜராத்.


எல்லா பெரிய ஊர்களிலும் பரந்து நிரவி இருந்தாங்க இவுங்க. அங்கங்கே 'இண்டியன் அசோஸியேஷன்'ன்னு ஆரம்பிச்சும் வச்சிருந்தாங்க. இதைப் பத்தி அப்புறம் விரிவாச் சொல்றேன். இப்ப எங்கே விட்டேன்?.....

...ம்ம்ம்.தெருமுக்குக் கடைங்க & புது அரசாங்கம்.


புது அரசாங்கம் வந்தவுடனே, சனிக்கிழமைக் கடைகண்ணி நேரத்தை அதிகப்படுத்துனாங்க. விருப்பம் இருந்தாஞாயித்துக்கிழமைகூட கடையைத் திறந்துக்குங்கன்னும் சொன்னாங்க. வியாபார நிறுவனங்களுக்குக் கொண்டாட்டமாப் போச்சு. வார இறுதிகள் பூரா ஜேஜேன்னு வியாபாரம்,மக்களும் ஓய்வா ஷாப்பிங் போறதுன்னு ஆரம்பிச்சு, இப்பபல சூப்பர் மார்கெட்டுகள் அளவுலே மட்டும் பெருசா இல்லாம, 24 மணி நேரமும் திறந்து இருக்குன்னா பாருங்க.


இந்த மாற்றங்களாலே அதிக அடி பட்டதும் இந்த தெருமுக்குக் கடைங்கதான். அரைவிலை, முக்கால் விலைக்குச் சாமான்கள் கிடைக்கறப்ப யாரு இங்கே போவாங்க?


அடுத்த மாற்றம் என்னென்னா.....ரெயில்வே, ஏர்லைன்ஸ், டெலிஃபோன்ன்னு இருந்த சேவைகளையெல்லாம் தனியாருக்கு வித்தாங்க. வனப்பகுதிகளையும் தனியார்களுக்கு வித்தாங்க. வெளிநாட்டுக் கம்பெனிகள் போட்டி போட்டுக்கிட்டு வாங்குனாங்க. சேவையின் தரம் உயர்ந்துச்சு. ஆனா........


இதுவரை அரசாங்கச் சிப்பந்திகளா அங்கே வேலை பார்த்துக்கிட்டு இருந்தவங்களிலே பலருக்கும் வேலை போச்சு.அரசாங்கம் ஒவ்வொண்ணையும் விக்கற வேகத்தை பார்த்து, 'நம்மளை எல்லாம் எப்ப, யாருகிட்டே விக்கப் போறாங்களோ?'ன்னு ஜனங்க பயப்படும்படியா ஆச்சு:-)))))))
1987லே அண்டைநாடான ஃபிஜியிலே ராணுவம் அரசாங்கத்தைக் கைப்பற்றி எடுத்துச்சு. அங்கே இருந்த 51%இந்திய வம்சாவளியினர் ரொம்ப பயந்துட்டாங்க. ரெண்டாம் தர குடிமக்களா இருக்கவேண்டி இருக்குமேன்ற கவலையாலே பிரிட்டன் சம்பந்தப்பட்ட நாடுகளுக்குக் குடிமாற நினைச்சாங்க. ஏன்னா ஃபிஜித்தீவுகள் சுதந்திர நாடுன்னாலும், அப்ப பிரிட்டனின் மேற்பார்வையிலேதான் இருந்துச்சு.


ஃபிஜி இந்தியர்கள் கானடா, இங்கிலாந்து, ஆஸ்தராலியா, நியூஸிலாந்துன்னு பல நாடுகளுக்கும் போனாங்க.இங்கே நியூஸி அரசாங்கமும் வியாபார நிமித்தம் வர்றதா இருந்தா 250,000 டாலர்கள் கொண்டு வாங்க.உங்களுக்கு பிஸினெஸ் மைக்ரேஷன் தகுதியிலே நிரந்தரமாத் தங்கலாமுன்னு சொல்லுச்சு.


இதை மக்கள் எப்படிப் பயன்படுத்துனாங்கன்னு அடுத்த வகுப்புலே சொல்றேன்.

15 comments:

said...

இப்போதான் பெயர்கள் எல்லாம் புரிகின்ற நிலையில் இருக்கிறது. இந்த உகாண்டா இந்தியர்கள்தான் இங்கிலாந்திலும் எலெக்ட்ரானிக்ஸ் கடைகளை வியாபித்திருப்பது.பீனிக்ஸ் பறவை போல நொடிக்க நொடிக்க மீண்டெழும் இனம்.

said...

நன்றாக உள்ளது. நான் தமிழ் எழுதுவது கொஞ்சம் கஷ்டம். I got ur site from Valli's site. It is good to know about your blogs.

said...

நாங்களும் அங்கேதான் வர்ரோம்

said...

உலக வரலாற்றினைப் பார்க்கையில் வீழ்ச்சி என்பது நிரந்தரமல்ல...எழுச்சி என்பது நடவாதது அல்ல என்று புரிகிறது. எப்பாடு பட்டாவது பிழைக்க வேண்டும் என்ற எண்ணம்தான் இந்த உலகத்தில் இன்னமும் மக்களை வாழ வைக்கிறது.

ஒன்று சொல்கிறேன். குறித்துக் கொள்ளுங்கள்.

அடுத்த நூற்றாண்டு உழைப்பவர்களுக்கு மட்டுமே ஆனதாக இருக்கும். இன்று சுருங்கியிருக்கும் உலகத் தொலைத் தொடர்புகள் அற்றுப் போகும். அப்பொழுது உடலுழைப்புதான் தேவைப்படும். உழைப்பவர் பிழைப்பர்.

said...

வாங்க மணியன்.

உழைப்புக்கு அஞ்சாத இனம். ஆணானாலும் சரி, பெண்ணானாலும் சரி 'பரபர'ன்னு வேலை
செய்யறாங்க பார்த்தீங்களா?

அதனால்தான் போற இடங்களில் எல்லாம் வளமா இருக்கறாங்க.

said...

வாங்க ஃபேரி. தேவதையா வந்துருக்கீங்க. அப்படியே நல்ல வாக்கும் சொன்னீங்க.
எல்லாருடைய மனோ அபிலாஷைகளும் நிறைவேறணுமுன்னு ஒரு 'விஷ் க்ராண்ட்'
செய்யுங்க.:-))))

said...

சிஜி,

வர்றிங்களா? தாராளமா வாங்க. தினம் ஒரு பதிவு போட்டாத்தான் P.R. கிடைக்கும்,ஆமா:-))))

said...

ராகவன்,

'சொல்லின் செல்வர்'ன்னு நிரூபிச்சுட்டீங்க.

// உழைப்பவர் பிழைப்பர். // அருமை.

said...

துளசிஅக்கா,

ஒரு நாடு முன்னேற நல்ல தொலைநோக்கு கொண்ட அரசியல் ஆட்சியாளர்களும், தீட்டப்பட்ட திட்டங்களை அக்கறையுடன் முடித்துத்தர தனியார் கம்பெனிகளும் தான்.

அரசு வேலை நிரந்தரம் தோற்றுவிக்கும் சோம்பேறித்தனத்தில் Effective Infrastructure Development என்பது அசாத்தியமே!

said...

வாங்க ஹரிஹரன்.

இதுமட்டுமா, இங்கே தனியார் கம்பெனிகளும் வயசுக்கும் அனுபவத்துக்கும் முன்னுரிமை கொடுக்கறது இல்லை.
அரை செஞ்சுரி ஆயிட்டாவே எப்படா தூக்கிறலாமுன்னு பார்த்துக்கிட்டு இருப்பாங்க. இள ரத்தம் நல்லத்துன்னாலும்,
சிலசமயம் இளங்கன்று பயமறியாதுன்னுதப்பான திசையிலே பாயவும் சாத்தியம் இருக்குல்லையா?

எல்லாம் ஒரு பேலன்ஸோட இருந்தா நல்லது.

said...

யோகன்,
அதான் 'வாய்ச்சவடால்' நம்முடைய பிறப்புரிமையாச்சே :-)))))

நாடு முன்னேறணும் அப்ப அதுகூடவே நாமும் முன்னேற முடியும்னு நினைக்கிற அரசியல்வாதிகள் வேணும்.
'நாடு எப்படியோ போகட்டும், நானும் என் குடும்பமும் முன்னேறினால் போதுமு'ன்னு நினைக்கிற அரசியல்காரங்க
இருந்தா நிலமை இப்படித்தான் ஆகும்.

நம்ம நாடுகளில் அரசியல் ஒரு 'வியாபாரமா' ஆயிருச்சு. தேர்தலுக்குச் செலவளிக்கிறதைப் பார்த்தீங்கன்னா புரிஞ்சிரும்.
அப்ப போட்ட பணத்தை திருப்பி எடுக்க நினைப்பாங்களா மாட்டாங்களா?

இங்கே ஒரு பிரதமர், ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸாகுதுன்னு பிரதமர் பதவியை ரிஸைன் செஞ்சுட்டா, இப்ப சில வருஷங்களுக்கு
முந்தி. இதையெல்லாம் நம்ம ஊர்லே நினைச்சுப் பார்க்க முடியுமா?
சாதாரண மந்திரி, எம் எல் ஏ & எம்.பி.ங்க, பதவி முடிஞ்சபிறகு, அவுங்களுக்குக் கொடுக்கப்பட்ட அரசு வீடுகளைக்
காலி செய்யறதுக்கே என்ன பாடு படுத்தறாங்கன்னு பார்க்கிறொம் இல்லையா?

ஹூம்...... பெருமூச்சு விடத்தான் முடியுது.

said...

அரசியல் வாதிகளை குத்தம் சொல்லிகிட்டே இருந்தால் போதுமா ??

சாக்கடையை யாரு மூடுவது???

said...

இப்படி மின்னலாட்டம் பளிச்சுன்னு வந்து கேட்டா எப்படி?:-))))

மக்களுக்கு 'சேவை' செய்யவே இருக்கோமுன்னு சொல்ற, மக்களொட வரிப்பணத்தை
அனுபவிக்கிற இவங்கதானே முன்மாதிரியா இருக்கணும். இவுங்க ஒரு கை கொடுத்தா,
மக்களும் அதுலெ சேர்ந்துருவாங்களே.

said...

//
இவுங்க ஒரு கை கொடுத்தா,
மக்களும் அதுலெ சேர்ந்துருவாங்களே.
//

அதான் காமராஜ்க்கு கை கொடுத்ததை பாத்தோமே

said...

மின்னல்,

காமராஜர் ஆரம்பிச்சு வச்ச மதிய உணவுத்திட்டம் ( ஒரு நாள் தான் முட்டை அழுகிருச்சாம்)
நல்லாத்தானேங்க செயல்படுது. அவருக்கப்புறம் வந்தவங்களும் அதை நிறுத்தலைதானே.

நல்லது நடக்க நாள் செல்லுமோ?