Friday, July 14, 2006

வித்யா

நம்ம லிவிங்ஸ்மைல் வித்யாதாங்க. இந்த வாரம் அவள் விகடன் கவர் ஸ்டோரியில்
மின்னுறாங்க பாருங்க.

வாழ்த்து(க்)கள் வித்யா.

நல்லா இருங்க.

20 comments:

said...

துளசியக்கா .......வாவ்.... ரியலி ? !!!!!..... யாராவது ஸ்கேன் பண்ணி போடுங்களேன்.

வித்யாவுக்கு பாராட்டுக்கள் !!!

said...

அது சரி, இது என்ன பழச தோண்டியெடுத்து இப்படியெல்லாம் வேர ஆரம்பிச்சாச்சா? நடத்துங்க நடத்துங்க.

said...

துளசி, நானே உங்களிடம் சொல்லணும்னு நினைச்சேன்.

பந்தி பிந்தி!:-)

நல்லா விவரமா கொடுத்து இருக்காங்க. நல்லா இருக்கணும் இந்தப் பொண்ணு.

said...

வித்யாவுக்கு வாழ்த்துக்கள்.. பேட்டி ரொம்ப நல்லா இருக்கு.. அப்படியே வலை பதிவுகளைப் பத்தியும் சொல்லி இருக்கலாமோ?

said...

கிவியன், இந்த பழசை தோண்டியெடுக்கற கருவி என்னுடையது. நான்தான் ஒரு சோதனைக்காக துளசியக்கா பதிவில் போடச்சொல்லி கேட்டுக்கிட்டேன். நல்லா வேலை செய்கிறது. இன்னிக்கு இதைப்பற்றி ஒரு பதிவு போடறேன்.

said...

கோவி.க,

யாராவது 'புத்தகமா வாங்குறவங்க' போட்டாத்தான் உண்டு.

'கட்டாயம் யாராவது போடுவாங்க'ன்னு நம்புவோமாக.

பேசாம வித்யாவையே கேட்டுறலாமா? :-))))


மானு ,

வாங்க வாங்க. இப்படி பிந்தலாமா? :-))))


பொன்ஸ்,

மறந்திருப்பாங்க போல. சொல்லாம இருக்க அப்படி ஏதும் காரணம் இருந்திருக்காது.

said...

சுரேஷூ,

நல்லவேளை ரமணி வந்து காப்பாத்திட்டார் :-))))

ரமணி,

கிவிகிட்டே இருந்து 'காப்பாத்துனதுக்கு ' நன்றி.

said...

துளசி அக்கா,
நானும் நேற்றே பார்த்துவிட்டு வித்யா பதிவில் வாழ்த்தி பின்னூட்டமிட்டேன் .அவர் பிஸியாக இருக்கிறார் போல!

said...

Best Wishes and all the best in life "Living smile Vidya"

said...

ஜோ & நன்மனம்,

நன்றி.

இட்லிவடை படத்தோட பேட்டியைப் போட்டுருக்கார்.

போட்டொவுலெ(யும்) அழகா இருக்காங்க.

said...

பதிவிட்ட துளசிக்கும், பின்னூட்டமிட்ட நண்பர்களுக்கும் நன்றி...

// அப்படியே வலை பதிவுகளைப் பத்தியும் சொல்லியிருக்கலாமா //

வலைப்பதிவைப் பற்றி மட்டுமல்ல இன்னும் நிறைய சொல்லியிருந்தேன்... அது என்னமோ செய்தி கட்டுரையாம் (நன்றி : பால பாரதி), அதெல்லாம் போடமாட்டாங்களாம்..

ஆனால், அடுத்த குங்குமத்தில் வலைப் பதிவைப் பற்றி மட்டுமே தனியே ஒன்னு வரப்போகுதாம் (நன்றி : ஜி. கௌதம்)...

// மறந்திருப்பாங்க போல. சொல்லாம இருக்க அப்படி ஏதும் காரணம் இருந்திருக்காது //

பொருமையா சொல்லனும்னு நினைச்சேன் ரெண்டு நாளா ரொம்ப டைட் இன்னைக்கும் என் systemத்தை எவ்வளோ files இருக்குன்னு நீங்களே பார்த்தா தெரிஞ்சிருக்கும்..

கண்டிப்பா கொஞ்சம் ப்ரீயானபின் போடவேன்..

பதிவிட்ட துளசிக்கும், பின்னூட்டமிட்ட தோழர்கள் கோவி. கண்ணன்., கிவியன், மனு, பொன்ஸ், வெங்கட ரமணி, ஜோ, நன்மனம் அனைவருக்கும் நன்றி. நன்றி.. நன்றி...

said...

நன்றி வித்யா.

நேரம் இருக்கறப்ப விரிவா பதிவு போடுங்க.

said...

வித்யாவுக்கு பாராட்டுக்கள் + வாழ்த்துக்கள்!

said...

வாழ்த்துகள் வித்யா. வண்ணத்துப்பூச்சி விளைவு என்று உண்டு. ஒரு செயல் ஒரு இடத்தில் நடந்தால் அதன் விளைவுகள் எங்கெங்கெல்லாம் போகும் என்று சொல்ல முடியாது. வண்ணத்துப்பூச்சி இறக்கை அடிப்பில் கடலும் பொங்கலாம். எரிமலையும் வெடிக்கலாம். இதுதான் முலையைத் திருகி எறிந்ததும் மதுரை எரிந்தது.

அது போல நல்ல செயல்கள். நியாயமான வழிமுறைகளின் படி கஷ்ட நஷ்டங்களைச் சகித்துக் கொண்டு நேர்மையாக முன்னேறி நிற்கும் வண்ணத்துப்பூச்சியாகிய உங்கள் சிறகடிப்பு நிச்சயம் நல்ல விளைவுகளை ஏற்படுத்தும்.

என்னைக் கேட்டால் பாலினத்தில் ஆண் பெண் என்று இருப்பது போல அரவாணி என்று ஒரு இனமும் படிவங்களில் சேர்க்கப்பட்டால் நிலமை மாற உதவும் என நினைக்கிறேன்.

வண்ணத்துப்பூச்சிகள் சிறகடிக்கட்டும். வண்ணவண்ணப் பூக்கள் மலரட்டும்.

said...

வாழ்த்துக்கள்....

said...

ராகவன்,
மூன்றாவது பாலினம் ஒண்ணு சேர்க்கணுமுன்னு சொல்றிங்களே. அது எவ்வளவுதூரம் சரிப்படுமுன்னு தெரியலையே.

அவுங்க பெண்ணா உணர்ந்தாங்கன்னா அவுங்க பொண்ணுங்கதானே. அதே போலத்தான் ஆணா உணர்ந்தா ஆண்.
இங்கே இந்தப் பக்கம் இந்தச் சிக்கல்கள் ஒண்ணும் இல்லையே.

அவுங்களை சக மனுஷங்களாப் பார்த்தாவே குழப்பங்கள் தீர்ந்துராதா? கேலி கிண்டல் எல்லாம் இந்தியாலேதான்
கூடுதல். சினிமாக்காரங்க எப்படியெல்லாம் காமிக்கிறாங்க பாருங்க.

said...

மனதின் ஓசை & செந்தழல் ரவி,

வருகைக்கு நன்றி. வித்யாவின் சார்பா வாழ்த்துகளுக்கும் நன்றி.

said...

லிவிங் ஸ்மைல் பத்தி அவள் விகடன்ல போட்டு இருக்காங்களா தகவலுக்கு நன்றி துளசி கோபால். கொஞ்ச நாள் வலைப்பதிவுகள் பக்கம் வரவில்லை அதுக்குள்ள நிறைய செய்திகள்!வழக்கமா பெண்கள் பத்திரிக்கைலாம் படிக்கிறது இல்லை(கோலம் போடுவது , எம்பிராய்டரி, சமையல் குறிப்பு படிக்க ஒரு பத்திரிக்கைப்படிக்னுமானு தான் :-)) ) தேடிப்படிக்கணும் இந்த ஒரு விஷயத்திற்காகவாது.
வித்யாவிற்கு வாழ்த்துகள்!

said...

வவ்வால்,

நம்ம இட்லிவடை இந்தப் பேட்டியை ஸ்கேன் பண்ணிப் படத்தோட போட்டுருக்கார், பாருங்க.

பெண்கள் பத்திரிக்கை இப்படி இருக்கறது இந்தியாவில் மட்டுமில்லை. இங்கேயும் அதெ அழகுதான். என்ன,
கோலம் மிஸ்ஸிங்:-))))

இதையெல்லாம் முதல்லே யாராவது படிக்கிறாங்களான்னே சந்தேகம் இருக்கு.

said...

வாங்க யோகன்.

விகடன் தரம் உயர்ந்துருச்சுன்னா சொல்றீங்க? ஆ.வி. யைப் பாருங்க.
சினிமா & அரசியல்தான் முக்காலே மூணு வீசம்(-: