Tuesday, July 11, 2006

நகையைத் தொலைச்சேன்

இருந்தா எவ்வளோ நல்லா இருக்கும்? எத்தனைபேர் இதைப் பாராட்டிச் சொல்லி இருக்காங்க.அப்படி இருந்தும் அதைப் போற்றிப் பத்திரமா வச்சுக்கத் தெரியலை பாருங்க.


எந்த வயசுலே இருந்து இதை அணிய ஆரம்பிச்சேன்? ம்ம்ம்ம்ம்ம்


அம்மா 'போன'பிறகு பாட்டி வீட்டுலே கொஞ்ச நாள் இருந்தேன் பாருங்க, அப்ப நம்ம பாட்டிதான்ரொம்ப வற்புறுத்தி இந்த நகையைப் போட்டுக்க சொன்னாங்க. எப்பவும் கழட்டவே கூடாதாம். ஆனாலும் அப்பப்பக் கழட்டிருவேன். அப்படியெல்லாம் சொன்ன பேச்சைக் கேக்கறவளா நான்?


ம்ம்ம்ம்ம் அப்புறம்?


கல்யாணம் ஆச்சு பாருங்க. அப்ப இருந்து கவனமா எப்பவும் போட்டுக்கிட்டு இருந்தது மட்டுமில்லை,எங்க இவருக்கும் ஒண்ணு போட்டுவிட்டேன். அப்படியும் நானாவது சிலசமயம் போட்டுக்காம விடறதுதான்.பாவம், எங்க இவர் எல்லா நேரமும் போட்டுக்கிட்டு இருக்கார். இல்லேன்னா 32 வருசம் குப்பை கொட்டி இருக்க முடியுமா? இதோட முக்கியத்துவம் என்னன்னு வயசாக ஆகத்தான் புரியுது.


மகள் பிறந்த பிறகு இப்போ ஒரு 22 வருசமா, நான் இதை ஒருநாளும் கழட்டுனதே இல்லை.


அப்படி இருக்க, நேத்து............? ம்ம்ம்ம்ம்


வெளியே எங்கேயும் போகலை. வீட்டுக்குள்ளேயேதான் இருந்தேன். கூடவே இருந்தது ஒரு கணத்துலேக் காணாமப் போச்சே!


சரியா எந்த வினாடி அதைத் தொலைச்சேன்றது நல்லாவே ஞாபகம் இருக்கு.


ஊஞ்சலில் உக்காந்த அஞ்சாவது நிமிஷம். அணிஞ்சிருந்த நகை மெதுவா கழல ஆரம்பிச்சது.அமுக்கிப் பிடிக்க முயற்சி செஞ்சேன். ஆனாலும் ம்ஹூஊஊஊஊம். போனது போனதுதான்.


த்யானும், சதாவும், ஷகீலாவும் கூட இருந்தாங்க. இந்திரஜித்.... அவரும் அங்கேதான் இருந்தார்.


எப்படிங்க........? எப்படிங்கறேன்.......?


கன்னடப் படங்கள் இப்படியா?


இதையும் தமிழ்ப்படுத்தி, நம்மையும் 'படுத்தி' இருக்காங்களே(-:

இந்த அழகுலே 'இங்கிலீஷ் ஸப்டைட்டில் வேற.

மறந்துபோயும் பார்த்துறாதீங்க 'மோனாலிசா'

அதுக்காக ஒண்ணுமேவா நல்லா இல்லை?

இருக்கே. ஹாஸ்பிட்டல்ன்னு ஒரு பில்டிங் காமிக்கறாங்க. அது அட்டகாசமா இருக்கே!


அப்பக் காணாமப்போன நகை?


'பொறுமை என்னும் நகை' தான். வேறென்ன?

56 comments:

said...

டீச்சர் இது என்ன திரைப்பட வாரமா? இப்படி போட்டுத் தாக்கறீங்க? அது சரி என்னதான் பாக்கறதுன்னு ஒரு விவஸ்தை இல்ல?

said...

கொத்ஸ்,

'திரைப்பட வாரம்' ? ஐடியா நல்லா இருக்கேப்பா.

விஷூவல் எஜுகேஷன்?

வீடு தேடி வர்ற படங்களைப் பார்க்கணுமா இல்லையா? இதுலே விவஸ்தையை கவனிக்கறதுதான்
அவஸ்தையாப் போகுது(-:

said...

பெருமை இழந்துட்டீங்களே, துளசி கோபால்!

said...

என்ன செய்யறதுங்க SK.

எல்லாம் காலத்தின் கோலம்.
இழந்ததை மீட்டுருவொம்லெ:-)

said...

கிறித்துவ நம்பிக்கை ஒன்று
கடவுள் ஏழைகளை சந்தோசப் படுத்த வேண்டும் என்றால் ... அவர்களுடைய பொருளை காணாமல் போகச் செய்வாராம்.. அது திரும்ப கிடைத்ததும் அவர்கள் எல்லையற்ற மகிழ்ச்சி அடைவார்களாம்.

அக்கா... நீங்க நெனெச்சது நகைன்னு நெனெச்சி இந்த நாகைக் காரன் ஏதேதோ எழுதிப்புட்டேன்...பெரிய மனசு பண்ணி விட்டுடுங்க அக்கா..

பிடிங்கள் ஒரு தத்துவம் :
முத்து பல் வரிசையாய் கோர்த்த செய்த புன்நகையை மட்டும் தொலைக்கக் கூடாது.
- திடீர் சுவாமிகள்

said...

கோவி.கண்ணன்,

திடீர் சாமிகளின் புது தத்துவம் எல்லாம் நல்லாவே இருக்கு. நாகைக்கு 'முத்து' பற்றிச் சொல்லணுமா என்ன?

ஆமாம், அதென்ன ஏழைக்கு சந்தோஷம் தர அவுங்களுதையே தொலைக்கணுமா?
அப்பப் பணக்காரங்களுக்கு புதுப்புது நகைகளா?
கொஞ்சம் அநியாயமா இருக்கேப்பா(-:

அங்கேயும் ஓரவஞ்சனைதானா?

said...

எதை கொண்டு வந்தீங் தொலைப்பதற்கு

said...

பொக்கைவாய்ச் சிரிப்பில் இல்லாத அழகா முத்துச் சிரிப்பில்??

அது சரி..! முத்துப் பல்வரிசையை வெச்சுக்கிட்டு புன்னகை பூத்தால் பல் வரிசை தெரியாதே!!

புன்னகை என்பது உதடு மட்டும் சிரிப்பதன்றோ?

சறுக்கிட்டீங்களே, கோவி!

said...

மோனாலிசா புன்னகையைத் தொலத்த நேரம்
துளசியின் பொறுமை நகையும் தொலைந்ததா?
நாளை,தலைனகரம் இதெல்லாம் பாருஙப்பா.
பொறுமை திருப்பி வந்துடும்.

said...

மிஸ், 'மோனாலிசா' பாத்துட்டு பொருமைய தான தொலைச்சீங்க! புன்னகையோனு பயந்துட்டேன்.

அது சரி சார் மட்டும் எப்படி அந்த நகைய கழட்டாம வெச்சிருக்க விடரீங்க எல்லாம் தற்காப்புக்கு தானா, அவரும் தொலைச்சிட்டார்னா இதெல்லாம் வீட்டுக்குள்ளியே வர முடியாதில்ல:-)

said...

என்னார்,

நான் எங்கே கொண்டு வந்தேன்? எனக்குக் கொடுக்கப்பட்டது அதுவாச்சேங்க.

said...

SK,

கோவி. வந்து பதில் சொல்வார்:-))))

said...

மானு,

தலைநகரம் பார்த்துட்டேன். அப்பத்தான் கை கால் எல்லாம் கொஞ்சம் வெட்டு:-)))))

நாளை இன்னும் வரலை.

said...

நன்மனம்,

பாருங்க உங்களுக்குத் தெரியுது. பாயிண்டை 'கப்'னு புடிச்சிட்டீங்க:-))))

said...

//
SK said...
புன்னகை என்பது உதடு மட்டும் சிரிப்பதன்றோ?

சறுக்கிட்டீங்களே, கோவி!//

பொன்னகை, புன்னகை இரண்டுமே அழகுதான் இரண்டிலும் முத்துசேர்த்தால் அது பேரழகு அதற்காக சொன்னேன்.

எஸ்கே அய்யா...உங்களை மாதிரி பெரியவுங்க முன்னாடி கீழே விழுவது (சருக்குவது) ஆசீர்வாதம் பெறுவதற்குத்தான்... உங்களுக்கு வயதும் இருக்கிறது... வாழ்த்தும் மனமும் இருக்கிறது :)

said...

//SK said...
புன்னகை என்பது உதடு மட்டும் சிரிப்பதன்றோ?//

ம்..ஹூம் .. . அது புன்முறுவல்... (செட்டப் பல், சொத்தைப் பல் உடையவர் மறைத்துக் கொண்டு சிரிப்பது)
வாய்விட்டு சிரித்தால் - சிரிப்பு (பல் இருக்குறவங்க பரவலாக சிரிப்பது)
பல்லைக் காட்டினால் - புன்னகை (ஹி ..ஹி)

said...

super,..

especially the ending,..//'பொறுமை என்னும் நகை' தான். வேறென்ன?//

never expected

anbudan,

said...

நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும், கோவி.!

கலாய்க்கறவரையே கலாய்க்கறது தப்பு!!

said...

பாட்டெழுதி பெயர் வாங்குபவர்களும் உண்டு,குற்றம் கண்டுபிடித்து பெயர் வாங்குபவர்களும் உ ண்டு. இதில் நீர் எந்த ரகம் என்று உமக்கே தெரியும்.

(ஹி..ஹி.. திருவிளயாடல் நாகேஷ் வசனம்)

பொதுவா பொண்ணுங்க எல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் தான் போட்ருந்த "நகையை" அவுங்க அவருக்கு மாட்டிவிட்ருவாங்க (அவுங்களும் தேமேன்னு மாட்டிகிவாங்க, என்ன பண்றது வண்டி ஓடனும்ல....). நீங்க உங்கத கொடுக்காம புதுசா வாங்கி போட்டுவிட்ரூக்கீங்க... அதான்...

(பொன்ஸிற்கான கல்யாண பாடம்!!!)

said...

புன்னகை தொலையவில்லையே?
அப்ப தப்பிச்சாச்சு
கூடிய சீக்கிரம் தொலைஞ்ச நகை கிடைச்சிடும் :-)

said...

துளசி இளநகை,

குறுஞ்சிரிப்பு

இதெல்லாம் நீங்க பார்த்து இருக்கிங்களா?
இளநகை தான் பல் தெரிய சிரிக்கும் புன்னகைனு நினைக்கிறேன் வேணும்னா கலைவாணரோட சிரிப்பு பாட்டு போட்டுக் கேக்கலாமா?

said...

பொய் சொன்னாலும் பொருந்த சொல்லுங்க ஒங்க மொகத்துலருந்து புன்னகை காணாமப் போயிருச்சா?

ஐஸ்.. ஐஸ்.. இவர நம்பாதீங்க.. டீச்சர்..

யார்ப்பா அது? அப்பப்போ வந்து கொரல் குடுக்கறது?

ஓ மனசாட்சியா? நீ வேறப்பா.

said...

//வாய் விட்டுச் சிரித்தால்.// .......?
நோய் விட்டுப் போகும். அப்புறம் 'மருத்துவர்'களின் நிலை?

said...

அடடே ஜெயந்தி. வாங்க வாங்க. நலமா?
நன்றி ஜெ.

said...

SK,

கலாய்க்கறவங்களைக் கலாய்க்கக்கூடாதுல்லே?

கோவி.க்கு சொன்ன பதிலில் 'எந்த வித உள்குத்தும்' இல்லைன்னு
ஒரு டிஸ்கி. போட்டுக்கறேன்:-)))

said...

மனசு,
என்னதை அவருக்குக் குடுத்துட்டா.....?
நான் என்ன செய்வேனாம். 'தினமும்' எனக்குப் போட்டுக்க நகை வேணாமா?

பொன்ஸ்க்குப் பாடங்களா? ஆமாமாம். இந்தக் காலத்துலே படங்கள் எங்கிருந்தெல்லாம் வருதுன்றதுக்கு
ஒரு நியாயமே இல்லாமப் போச்சு:-))))

said...

மதுமிதா,

புன்னகையைத் தொலைக்கும் ஐடியா இப்போதைக்கு இல்லை:-)))))

said...

மானு,

என்னத்த இளநகை? இப்பெல்லாம் இது கிழநகையாப் போச்சேப்பா:-))))

said...

டிபிஆர்ஜோ,

மதுவுக்குச் சொன்னதுதான் உங்களுக்கும்.

"டீச்சர்.... டீச்சர்....."

"என்ன மனசாட்சி?"

:சரியா வகுப்பைக் கவனிக்கறதில்லை பாருங்க நம்ம டிபிஆர்ஜோ"

"ஏன் ? என்ன ஆச்சு அவருக்கு?"

"இல்லே, இவுங்க பொறுமை என்னும் நகையைக் காணொமுன்னு புலம்புனா,
அவர் புன்னகையைத் தொலைச்சிட்டீங்களான்னு கேக்கறார்...."

"நல்ல மனசாட்சி நீ. வெரி குட். இப்படித்தான் போட்டுக் கொடுக்கணும்"

said...

//துளசி கோபால் said...
//வாய் விட்டுச் சிரித்தால்.// .......?
நோய் விட்டுப் போகும். அப்புறம் 'மருத்துவர்'களின் நிலை?
//
'மருத்துவர்'களின் நிலை ?
மருத்துவர்களின் மன நிலை ?
மனநல மருத்தவர்களின் நிலை ?
மனநல மருத்துவர்களின் மன நிலை ?

said...

டிஸ்கி போட மறந்துட்டன் ... :)

said...

//SK said...
நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும், கோவி.!//
எஸ்கே அய்யா ...
நான் சொல்றதை விடுங்க ...
பெரியவங்க சொன்னா பெருமாள் சொன்ன மாதிரிதான் :)

said...

//மறந்துபோயும் பார்த்துறாதீங்க 'மோனாலிசா'//

அப்படீங்கறீங்க! ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.

ஒன்னுமில்ல...ஏக்கப் பெருமூச்சு தான். தமிழ் டிவி நிகழ்ச்சி இல்ல படம் பாத்தே ரெண்டு மாசம் ஆவுது. இதுல கன்னடத்துக்கெல்லாம் எங்கே போறது?

:(

இருந்தாலும் உங்க அட்வைஸை நியாபகம் வச்சிக்கிறேன்.

said...

துளசியக்கா,

ரெண்டு வருஷம் முன்பு ப்ரபுதேவா, ப்ரியங்கா த்ரிவேதி ஸ்டில் பார்த்து எடுத்துவந்த "காவேரி" அப்பிடின்னு ஒரு படம் (கன்னடத்தமிழ் டப்பிங்னு தெரியாது)

ப்ரபுதேவா, ப்ரியங்கா த்ரிவேதி கன்னட ஹீரோ உபேந்திரா (ஸ்டில்லில் மறைக்கப்பட்டவர்)நடித்துக் கொத்தியதில் கொத்துபுரோட்டாவாகி, நொந்து நூடுல்ஸாகி, ப்டம் முடிந்தவுடன் (முடிந்ததே தெரியவில்லை எனக்கு) பைத்தியக்காரனாகப் "படத்தப் போடுங்கப்பா"ன்னு புலம்பும் படி செய்துவிட்டது.

டப்பிங்படம்ன்னா தெலுங்குப்ப்டம் தான் சூப்பர் காமெடி. கொஞ்சம் சிரிக்கவாணும் செய்யலாம்.

said...

வாங்க கைப்புள்ளெ.

உங்க படம் அங்கே பிச்சுக்கிட்டு ஓடுதுன்னு சொல்றாய்ங்க. இங்கே நியூஸியிலே
தியேட்டருலே வேற வரப்போகுது. நீங்க என்னன்னா தமிழ்ப்படம் பார்க்க்ச் சான்ஸ் இல்லைங்கறீரு?
ஓஓஓஓ... புரிஞ்சுபோச்சு. நடிக்க மாத்திரம் முடியுது. நடிச்சதைப் பார்க்க முடியலை. அப்படித்தானே? :-)))))

இப்படி வருத்தப்படக் கூடாதுன்னுதான் அந்தக் கன்னடப் படத்தை 'தமிழ்'லே பேசவச்சிருக்காய்ங்கெல்லெ.

said...

ஹரிஹரன்,

நானும் 'காவேரி'யைப் பார்த்தேன். நம்ம வீடியோ க்ளப்புக்கு எல்லாத்தையும் அனுப்பி வுட்டுருவாங்க.
இந்தக் கணக்குலே யாருமே பார்க்காத படத்தையெல்லாம் கூட நான் பார்த்திருக்கேன்.

அதனாலேதான் நிச்சயமா வெளியே வர ச்சான்ஸே இல்லைங்கற படங்களுக்கு மட்டும் 'விமரிசனம்' எழுதறது
நம்ம கொள்கையாப் போச்சு.

( மனுசன்னா ஒரு கொள்கைப் பிடிப்பு வேணுமுல்லே? :-)))))... அது)

said...

ஓஹ்ஹோ. பொக்கை வாய் அப்படீனு சொல்ல வரீங்களா/

அப்படிபார்த்தா நமக்கெல்லாம் குழந்தை மனசுனு வைச்சுக்கணும்.
பாரிஜாதம் பாக்கலியா?
இது கலாஇத்தல் வாரம்னு தான் எனக்குத் தோணுது.

said...

கலாய்த்தல்.;)(

said...

மானு,

பாரிஜாதம் எல்லாம் பார்த்தாச்சு.

நம்ம 'கொளுகை' என்னன்னு ஹரிஹரனுக்கு சொல்லியிருக்கற பதில்லே இருக்கு பாருங்க.
எதையும் கொளுகைப்படித்தான் செய்வேனாக்கும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்:-))))

said...

மானு,

கலாய்த்தல் இல்லேன்னா வாழ்க்கையே 'டல்' ஆகிறாது?

said...

டீச்சர், தமிழ்த் திரைப்படங்களின் பொற்காலம் அறுபதுன்னா, கன்னடப் படங்களின் பொற்காலம் எம்பது. ரொம்பவே நல்ல இயல்பான படங்கள் அந்த காலகட்டத்தில் வந்தன. இப்பொழுது தரம் மிகவும் தாழ்ந்திருக்கிறது என்பதும் உண்மைதான்.

போன சனிக்கிழமை ஒரு படம். டீவியில். ராஜ்குமாரும் மாதவியும் நடித்தது. கதை பெரிய கதை இல்லை. இருவரும் புதிதாகத் திருமணம் ஆனவர்கள். சந்தோஷமாக இருக்கிறார்கள். மாதவிக்கு ரத்தப் புத்து நோய் வருகிறது. அவளை மருத்துவமனையில் சேர்க்கிறார்கள் என்று போகிறது கதை. ஆனால் அதைச் சொன்ன விதம். அப்பப்பா.......கதையில் வரும் ஒவ்வொரு பாத்திரமும் தனது பங்கைச் சிறப்பாகச் செய்திருந்தன. குறிப்பாக மாதவி. இவ்வளவு நன்றாக நடித்து நான் வேறு படம் பார்த்த நினைவு இல்லை.

இன்றைக்கு நிலமையே வேறு. இப்பொழுதும் நாகமண்டலா, நீலா, கண்ணூரு ஹெகடத்தி என்று சிறப்பான படங்கள் வந்தாலும் பெரும்பாலும் மசாலாதான். அதுவும் தமிழில், ஹிந்தியில் இருந்து ரீமேக்கியிருப்பார்கள். சமீபத்தில் லட்சுமி நடித்துப் பிரபலமான ஜூலி ஹிந்திப் படத்தை ரீமேக்கியிருந்தார்கள். ஆனால் ஒரிஜினல் ஒரிஜினல்தான்.

said...

//மறந்துபோயும் பார்த்துறாதீங்க 'மோனாலிசா'//
அத எப்படி, நீங்க சொல்வதை வச்சு பார்க்கும் போது, இந்த படம் தான் இந்த வருடத்தின் மிக காமெடி படமாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.

நாங்க எல்லாம் ஒரு சில படத்தை தவிர மத்த படங்களை எல்லாம் காமெடி படமாக நினைத்து பார்ப்போம். அதுனால பிரச்சனை இல்ல. சிம்புவின் சரவணா படத்தையே முழுசா பாத்து முடிச்சிட்டேன்.

said...

ராகவன்,

நீங்க சொல்றதும் சரிதான். இப்பப் பாதிக்குப் பாதி தரம் குறைஞ்சுதான் இருக்கு.
சினிமா உலகத்துக்குக் கதை பஞ்சம்.ஆனா மக்களோட ரசனை மாறிப்போச்சுன்னு
ரீல் விட்டுக்கிட்டு இருக்காங்க.

said...

சிவா,

சூடான்லே இருந்துக்கிட்டு 'ச்சூஸி'யா இருக்கமுடியாதுதான். புரியுது.
கிடைக்கறதைப் பார்த்து வைக்கணும். வேற வழி?( இங்கே நாங்களும் இப்படித்தான் இருக்கொம்)

said...

:சரியா வகுப்பைக் கவனிக்கறதில்லை பாருங்க நம்ம டிபிஆர்ஜோ"//

அதானே.. ஸ்கூல்லதான் மக்குன்னு பேர் எடுத்துருக்கேன்னு நினைச்சா இங்கயுமா..

கொஞ்சம் மெதுவா குட்டக்கூடாதா? வழுக்கை தலைங்க..

said...

டிபிஆர்ஜோ,

அப்ப இது மானு சொன்னதுபோல 'கலாய்த்தல் வாரம்'ன்றது கன்ஃபர்ம் ஆயிருச்சு:-))))

said...

மக்கள்ஸுக்கு வரலாற்றைவிட சினிமாவுலெ ஈடுபாடு அதிகமாயிடுச்சுங்க ;ட்டீச்சருக்கும்தான்யாருமே பார்த்திருக்காத சினுமாவ பத்தி எழுதுனா எவ்ளோவ் பின்னூட்டம்?
நியூஸி கதாவுக்கு எவ்வளவு பின்னூட்டம்?

said...

சிஜி,

இதுதான் காலத்தின் கோலம்.

said...

கலாய்த்தல் வாரம் இல்லீங்கோவ்.. கலாய்த்தல் மாதமுங்கோவ் !!!

***

எந்நகையை தொலைத்தாலும், புன்னகையை தொலைக்கக் கூடாது..

***

மோனாலிசா படத்துக்கே இப்படின்னா எப்படிங்க.. தெலுங்குல 'போக்கிரி' படம் பாருங்க..

said...

ஏதோ சினிமாவைப் பத்திப் பேசறீங்க போலிருக்கு. ஒண்ணுமே புரியலை. சரி, உங்க பொறுமை எங்கேயும் போகலை. உங்க கிட்டேதான் இருக்கு. கொஞ்சம் மறைஞ்சு விளையாடுது.

said...

நல்லா வந்திருக்கு... கிடைத்த நகை திரும்பவும் தொலையாமலிருக்க வாழ்த்துகிறேன் :-)

said...

என்னங்க சோ.பை,

இந்த 'போக்கிரி' தானே ரீமேக் படமா வரப்போகுது?

அது என்னங்க, விஜய் எப்பவும் ரீ மேக் படமே பண்ணறார்?

தமிழர்களுக்கு தெலுங்கு புரியாதேன்ற அனுதாபமா?

said...

கீதா,

வாங்க வாங்க. நலமா?

கோயில் குளமுன்னு நீங்க இருக்கீங்க. ஆனா நானு?
இங்கே எங்கே இருக்கு கோயிலும் குளமும்? அதான் சினிமாவுலே
பத்தறக் கலந்துட்டேன்.

( அதானே... எல்லாரும் ஆன்மீகமா இருந்துட்டா எப்படி உலகம் நடக்கும்?)

said...

ராம்ஸ்,

திரும்பக் கிடைச்ச நகை மீண்டும் காணாமப்போக ச்சான்ஸ் நிறைய இருக்கேங்க:-))))

இன்னிக்குப் பாருங்க, இந்த மும்பை குண்டு வெடிப்புலே எனக்குப் பொழுது விடிஞ்சிருக்கு.
என்னத்தை சொல்றது போங்க(-:

said...

அப்படின்னா என்னோட வலைப்பதிவுக்கு வரீங்களா என்ன? ஆச்சரியமா இருக்கே? ஒரு பின்னூட்டம் கொடுக்கக்கூடாது? வந்ததுக்கு சாட்சியா?

said...

கீதா,

இங்கே நம்ம தோழி ஒருத்தர் வீட்டுக்குவந்து பார்த்துட்டு, நாம் இல்லைன்னா நம்ம தோட்டத்துலே
இருந்து ஒரு பூவைப் பறிச்சு நம்ம வாசக்கதவுலே சொருகிவச்சுட்டுப் போவாங்க.

நாம் கண்டுக்குவோம், அவுங்க வந்துட்டுப் போனதை:-)))))

ஒவ்வொண்ணாப் படிச்சுக்கிட்டுப் போய்க்கிட்டேஇருக்கறதுதான்.அடையாளம்
வச்சாப் போச்சு:-))))