Friday, January 20, 2006

புத்தம் புதிய புத்தகமே


நான் வேலை செஞ்சுக்கிட்டு இருந்த லைப்ரரியை 'ஊத்தி மூடியாச்சு;ன்னு சொல்லிக்கிட்டுஇருந்தேனே, யாருக்காவது நினைவு இருக்கா? ( ஆமாம். பொல்லாத விஷயம், ஞாபகத்துலேவேறவச்சுக்கணுமாக்கும்னு யாரோ....... யாரோ என்ன யாரோ எல்லாம் நம்ம மனசாட்சிதான் குரல் கொடுக்குது!)


பக்கத்துலேயே ஒரு 500 மீட்டர் தூரத்துலே நம்ம நகராட்சி புது நூலகம் ஒண்ணைக் கட்டத்துவங்கிவேலை அநேகமா முடிஞ்சுபோச்சு. வர்ற திங்கட்க்கிழமை புது நூலகம் அதிகார பூர்வமா திறக்கப்படும்.


அதுக்கு முன்னாலே, என்னைப் போல வேலையை இழந்த(!) நூலகர்களுக்கு இன்னிக்கே ஒரு விசேஷஅழைப்புக் கொடுத்துக் கூப்புட்டு இருந்தாங்க. நமக்குத்தான் முதல் அழைப்பாம்!


சரின்னு போனேன். நம்ம காசு எப்படியெல்லாம் உபயோகமாகுதுன்னு பார்க்கத்தான். அதான் வீட்டுவரின்னுஏகப்பட்டது வாங்கிடறாங்களே!
வாசலிலேயே வரவேற்புக்காக நின்னுக்கிட்டு இருந்தவங்கதான் புது லைப்ரரியின் தலைமை அதிகாரியாம்.இனிப்பாப் பேசி உள்ளெ கூப்புட்டுக்கிட்டுப்போய் ஒரு கூடத்துலே உக்காரவச்சாங்க. நாங்க, நகரசபை கவுன்சிலர்கள், லைப்ரரி கட்ட இடம் கொடுத்த புண்ணியவான், அங்கே வேலை செய்யப்போற சிலர்,ஒவ்வொரு பிரிவுக்கும் புத்தகம் ஏற்பாடு செஞ்சவங்கன்னு சிலர்னு ஒரு முப்பதுபேர் இருந்தோம்.


வழக்கம்போல எல்லாரையும் வரவேற்று, அறிமுகப்படலம் எல்லாம் முடிச்சு, 'ஓப்பன் சிஸமே'ன்னு உள்பக்கக் கதவு திறக்க எங்களை உள்ளே கொண்டு போனாங்க.


அட்டகாசமா அடுக்கி வச்சுருக்கற புதுப் புத்தகங்கள்,பளபளன்னு கண்ணைப் பறிக்குது. ச்சும்மாப் பார்த்தா, அது ஒரு பெரிய ஹால்தான். நடுவிலே புத்தக அடுக்குகள். அங்கங்கே வாசகர்கள் உக்காந்துபடிக்க நல்ல சோஃபாக்கள், நாமே புத்தகங்களைப்பற்றிய விவரங்களைத் தேடிக்க நிறைய இடத்துலே கணினிகள், ஒரு காஃபி ஷாப் ( தின்னுக்கிட்டே புஸ்தகம் படிக்கவாம். அட!நம்ம பழக்கம் இவுங்களுக்குஎப்படித் தெரிஞ்சது?) மேலும் இன்ட்டர் நெட் வசதி, சிடி ரைட்டர் வசதி (இதுக்கெல்லாம் காசு)ன்னுஏகப்பட்ட வசதிகள்.


இப்போதைக்கு அம்பதாயிரம் புத்தகங்கள் வச்சிருக்காங்களாம். அதுலே குழந்தைகள் பிரிவு ரொம்பநல்லா இருக்கு. பெரியவங்க பிரிவுலே இருக்கற ஃபர்னிச்சர்ங்க டிஸைனிலே குட்டிக் குட்டியாமேசை, நாற்காலிகள். சூப்பர் போங்க!


ம்யூசிக் செக்ஷன் ஜோர். புத்தம் புது டிவிடிக்கள். ஒரு வாரம் வச்சுக்கலாமாம். வாடகை ஒரே ஒரு டாலர்! அடிச்சேன் ப்ரைஸ்!


இந்தக் கட்டிடம் கட்ட இடம் கொடுத்தது இங்கே இருக்கற ஒரு உயர்நிலைப் பள்ளிக்கூடம்தான். அவுங்கபள்ளிக்கூடப் பசங்களுக்கும் இங்கே வந்து ஸ்பெஷல் வகுப்பு நடத்திக்கலாமென்ற வசதிக்காக மூணு பெரியஅறைகள் ஒதுக்கப்பட்டு இருக்கு. ஒரு அறையிலே 40 கணினி வசதி இருக்கு. பசங்க கொடுத்து வச்சவங்கதான்.


வெளியே தோட்டமும் புதுவிதமா இருந்தது. இங்கே இருக்கற ஒரு ஆற்றுப்படுகை மாடலிலே இருந்துச்சு.வைமாகாரிரி ஆறு. அதுக்குத் தண்ணீர் பாய்ச்ச மழைநீரே போதும் என்ற வகையிலே அமைச்சிருக்காங்க.


முழு நூலகமும் குளிர்சாதன வசதி செய்யலை. உள்ளெ வெப்ப நிலை கூடும்போது , ஜன்னல்கள் தானே திறந்து புதுக்காத்து வருமாம். தேவைக்குத்தக்கபடி தானே மூடித்திறக்கற ஜன்னல்களாம்.


நம்முடைய பழைய லைப்ரரி கார்டைக் கொடுத்துட்டு புதுசு வாங்கிக்கலாமாம். அதையும் மொத ஆளாமாத்தி வாங்கிக்கிட்டேன்.
எங்களுக்காக ஒரு தேநீர் விருந்தும் ஏற்பாடு செஞ்சிருந்தாங்க. அந்த ஹால் குழந்தைகளுக்குக் கதை சொல்லும்இடமாவும், பொது ஜனங்களுக்குத் தேவைப்பட்டா குறைந்த வாடகையில் ஃபங்ஷன் ஹாலாவும் உபயோகப்படுமாம்.


இலாபநோக்கு இல்லாத மீட்டிங் நடத்தணுமுன்னா இலவசமாவும் கிடைக்குமாம். அப்படிப்போடு. மனசுலே வச்சுக்கணும்.


போனதுக்குக் கொஞ்சம் படங்கள் எடுத்துக்கிட்டு வந்திருக்கேன். அதுலெ ரெண்டு உங்களுக்குச் சுடச்சுட இதோ!

24 comments:

said...

போட்டோ எல்லாம் நல்லா இருக்கு அக்கா. :-)

said...

//வைமாகாரிரி ஆறு//
???

இனிமே 24 மணி நேரமும் தமிழ்மணம் தானா?? :)

said...

துளசியக்கா,
என்ன! பட்டைய பதிவுக்கு கீழ தள்ளீட்டீங்க .இப்போ ஓட்டு போடுறதுக்கு வசதியாவா?

said...

பட்டையைக் கீழே தள்ள என்ன செய்தீர்கள்?

said...

நன்றி குமரன்.

நூலக வசதிகள் எப்படி இருக்கு? உங்க ஊர்லே இது போலவா இல்லெ இன்னும் நல்லாவா?

said...

ராம்ஸ்,

இது இங்கே நம்ம ஊருலே ஓடற
ஆத்தோட பேர். ஆறூ!

போட்டோ புதுசா? ஒரே சிந்தனையிலே இருக்கற போஸ்?

'அறிவாளி'ன்றதுக்கு கோடி காமிக்கறதா?:-)

said...

ராம்ஸ்,

24 மணிநேரம் தமிழ்மணம் இல்லைப்பா. 20 மணி நேரம்தான்:-)

அதுவும் இன்னும் சில நாட்களுக்குத்தான்.(-:

said...

ஜோ,

எப்ப இருந்து இந்த 'முண்டாசு' வேஷம்?

ஞானவெட்டியாரே & ஜோ

நம்ம 'பட்டை' எப்ப மேலே போச்சு? எப்பவும் கீழே தானே இருந்துச்சு. இப்ப என்ன புதுசா நீங்க கேக்கறீங்க?

'கனம்'கூடிய பட்டை 'மேலே' மிதக்காது:-)

said...

அட நூலகமா இது. என்னமா இருக்கு. இவ்வளவு வசதிக செஞ்சவங்க. உள்ளயே பருகரு பிட்சா எல்லாம் வித்தா சாப்பிட்டுக்கிட்டே படிப்பாங்கள்ள.....இதெல்லாம் சொல்லித் தர வேண்டியிருக்கே. நான் வந்தா சாப்புடறதுக்குக் கடையும், மயிலாருக்கு மக்காச்சோளமும் விக்க ஏற்பாடு செஞ்சா நல்லாயிருக்கும்.

said...

//எப்ப இருந்து இந்த 'முண்டாசு' வேஷம்?//
ஹி..ஹி..நமக்கு எப்பவுமே பாரதி மேல ஒரு கிறுக்கு.

//அட நூலகமா இது. என்னமா இருக்கு//
ராகவன்,சிங்கப்பூர் புது நூலகம் வந்தா மயக்கம் போட்டு விழுத்துருவீங்க போல இருக்கே!

said...

தமிழ்ப்புத்தகங்கள் இருக்கா?

said...

ராகவன்,
எதுக்கு வீண்கவலை? இங்கே நூலகத்துக்குள்ளெயே ஒரு 'கேஃபிட்டீரியா' இருக்கு.

இந்த வசதி இருக்கற முதல் நூலகம் இதுதான்!

said...

ஜோ,

ரொம்பத்தான் ..... ...
நாளைக்கு விழாவுக்குப் போறிங்களா ?

இந்த புது நூலகம் செண்ட்ரல் நூலகம் இல்லை. ச்சும்மா ஒரு கிளை நுலகம்தான்.

said...

ஷ்ரேயா,
மனுஷருக்கு ஆசை இருக்கலாம். ஆனா 'பேராசை' இருக்கக்கூடாது:-)

இன்னொரு விஷயமும் சொன்னாங்க அங்கே. நியூஸியிலேயே இங்கே கிறைஸ்ட்சர்ச் மக்கள்தான் நூலகத்தை அதிகம் பயன்படுத்தறாங்களாம்.

அதான் அறிவாளிகள் இருக்கற ஊராச்சே! உதாரணத்துக்கு 'நான்' இருக்கேன்லெ:-)

said...

//நாளைக்கு விழாவுக்குப் போறிங்களா ?//
நாளை மறுநாள் தானே? நியூசிலாந்துல இன்னிக்கு சனிக்கிழமையா?ஹி..ஹி.

நாளை தான் சிங்கை செல்கிறேன் .விழாவுக்கு கண்டிப்பா போவேன்.

said...

// ஹி..ஹி..நமக்கு எப்பவுமே பாரதி மேல ஒரு கிறுக்கு. //

ஜோ...எல்லாருக்குந்தான். :-) எனக்கும் பாரதி ரொம்பப் பிடிக்கும்.

// ராகவன்,சிங்கப்பூர் புது நூலகம் வந்தா மயக்கம் போட்டு விழுத்துருவீங்க போல இருக்கே! //

வரனுங்க....சிங்கபூர் வர்ரதுக்கு நானும் ரெண்டு வருசமா திட்டத்த தீட்டிக்கிட்டேயிருக்கேன்.....என்னவோ இன்னும் கூராகலை.

// ராகவன்,
எதுக்கு வீண்கவலை? இங்கே நூலகத்துக்குள்ளெயே ஒரு 'கேஃபிட்டீரியா' இருக்கு.
இந்த வசதி இருக்கற முதல் நூலகம் இதுதான்! //

அதான பாத்தேன். இந்த வாட்டி சுதாரிச்சிக்கிட்டாங்க. வெளியில இருந்து தூக்குச்சட்டி கொண்டாரக்கூடாதுன்னு சொல்றாங்களா என்ன? அப்படீன்னா போராட்டம் நடத்தீரலாம்.

said...

துளசி
ஒருவழியா ஊர் சுத்தல் முடிச்சு க்ளாஸுக்கு வந்தா பள்ளிக்கூடத்தையே காணோம்? புத்தாண்டு வாழ்த்துக்கள்.

அடுத்த செமெஸ்டருக்கு என்ன பாடம் டீச்சர்?

said...

//என்னவோ இன்னும் கூராகலை.//
நல்லா சாண பிடிக்கிற மிஷினா பாத்துட்டு ,சீக்கிரம் வந்து சேருங்கைய்யா!

said...

லைப்ரரி படமெல்லாம் நல்லாத்தான் இருக்கு..

அது சரி அங்க போயும் சூடிதார் தானா? பேண்ட், ஷர்ட் போட்டுக்கிட்டு போஸ் குடுக்கக் கூடாது?

ஞானவெட்டியான்,

பட்டை எங்க இருந்தா என்ன? நாம நெத்தியில போட்ருக்கோம்
அவங்க கால்ல போட்டு மிதிச்சிட்டாங்க..

என்ன ஜோ?

நீங்க என்ன எப்ப கீழ போச்சிங்கறீங்க? ஸ்கிரிப்ட எங்க பேஸ்ட் பண்றமோ அங்கதான இருக்கும்? சரிதானே.. இல்லையா?

said...

ராகவன்,

'தூக்குச்சட்டி'ன்னதும் ஒரு கொசுவர்த்தி எரியுது:-)


தாணு,

மாணவமாணவிகள் மட்டும் ஊர் சுத்துனாப் போதுமா? இனி டீச்சர் கொஞ்ச நாளைக்கு ஊர் சுத்திட்டு
வந்தபிறகுதான் அடுத்த செமஸ்டர். பாடம் அதே சரித்திரம்தான், அப்படியே நிக்குதே:-)

டிபிஆர் ஜோ,

இப்ப எங்களுக்கு சம்மர். இதை விட்டுட்டா சுரிதார் போட ச்சான்ஸ் கிடைக்காது. முக்கியமா இதுபோல
இடத்துக்குப் போட்டுக்கிட்டுப் போனாத்தான் அவுங்க வயித்தெரிச்சலைக் கொட்டிக்க முடியும்:-)

said...

அப்பிடியே ஜெயந்தி அக்காகிட்ட ஒரு செட் புக் வாங்கி ஒங்க லைப்ரவரில வச்சுடுங்க .

said...

சிங்.செயகுமார்,
அதெல்லாம் ஜெயந்திகிட்டே சொல்லி வச்சாச்சு. கட்டாயமா நூலகத்துலே வச்சிருவேன், ஆனா அது நம்ம வீட்டுலே இருக்கற நூலகமா இருக்கும்.

said...

துளசி அக்கா,

உங்கள் ஊர் நூலகம் நல்லா இருக்கு.

நாங்கள், ஏதோ எங்களால் இயன்ற அளவில், தமிழ்ப் புத்தகங்களுக்காக ஒரு தகவல் தளத்தை ஆரம்பித்துள்ளோம்.

ஒரு முறை எட்டிப் பார்துக் கொள்ளுங்கள்

said...

விருபா,

உங்க தகவல் தளத்தை அன்னிக்கே நம்ம குமரேசன் பதில்போட்ட வுடனே பார்த்துட்டேன்.

என்னோட புத்தகம் வரட்டும்:-))))) இணைச்சுறலாம், என்ன?