உறவுகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒரு விதம்.... இப்படிச் சொல்லலாம்தானே? நம்மச் சுத்தியும் பார்த்தால் எத்தனையோசொந்தங்கள் இருக்கு. இதுலே எது உசத்தி? ஒவ்வொண்ணும் ஒவ்வொரு விதத்துலே உசத்தின்னாலும் எது நிஜமாவே உசத்தி?
அம்மா - குழந்தை, அண்ணன் -தம்பி/தங்கை, அக்கா-தங்கை/தம்பி பெரியப்பா, சித்தப்பா, மாமா, மாமின்னு எக்கச்சக்கம்.நமக்கு உறவுமுறையிலே சொந்தம் இல்லாதவங்களைக்கூட அம்மா,அண்ணே, மாமி,அக்கான்னு கூப்புடறோம்.பேசறப்ப சிலசமயம் மனசு நெகிழ்ந்து நீங்க எனக்கு அம்மா மாதிரி, மகள் மாதிரி, மகன் மாதிரின்னு நிறைய 'மாதிரி'கள் வருது.ஆனால் யாரையாவது நீங்க எனக்கு மனைவி/கணவன் மாதிரின்னு சொல்லத் தோணுமா? ச்சீச்சீன்னு இருக்காது?
அதாலே இந்தக் கணவன் மனைவின்னு சொல்லற உறவுதான் உண்மைக்குமே உசத்தின்னு என் மனசு சொல்லுது.அதுவும் பெற்றோர்கள் பார்த்து நடத்தி வைக்குற கல்யாணத்துலே பாருங்க, அந்த வாழ்க்கைத் துணை ரெண்டு பேருக்குமேஅவ்வளவா முன்பின் தெரியாத நபரா இருப்பாங்க. பொண்ணு பார்க்க வந்தப்பத்தான் ரெண்டுப்பேரும் முதல்முதலாசந்திக்கறாங்க.( சந்திப்பு என்ன சந்திப்பு? பார்த்துக்குறாங்கன்னு சொல்லலாம்) அப்புறம் கல்யாணம் நிச்சயமானபிறகுசில அதிர்ஷ்டசாலிகளுக்கு நிச்சயத்துக்கும் கல்யாணத்துக்கும் நடுவிலே கொஞ்சம் இடைவெளி ஒரு ரெண்டுமூணுமாசம்கிடைக்கும். (இதுவா அதிர்ஷ்டம்னு யாரும் அடிக்க வந்துராதீங்க.) போன் பில் ஏகப்பட்டது வருதுன்னு சொல்லிக்கிட்டாலும்'கடலை பிஸினஸ்' அமோகமா நடக்கும்.
அப்பவும் அவுங்க பேசிக்கறது முக்காலே மூணுவீசம் வெறும் ஸ்வீட் நத்திங். அதுக்கப்புறம் கல்யாணம், குழந்தைன்னுவாழ்க்கை ஓட ஆரம்பிச்சு நின்னு மூச்சுவிடவே நேரமில்லாமப் போயிடும்.
இப்பத்தான் ச்சின்ன சின்ன விஷயமும் பூதக்கண்ணாடியிலே பாக்கறமாதிரி பெரூசாத் தெரிஞ்சு மனசுலே ஒரு கசப்பு.இது ஏற்படறதுக்கு ரெண்டு சைடும் காரணக்காரர்கள்தான். இந்தச் சின்ன விஷயத்துலே எதெது முக்கிய இடம் புடிச்சுருக்குன்னுஒரு சமயம் படிச்சேன். அதுலே ஞாபகம் இருக்கறதை உங்களோடு பகிர்ந்துக்கலாமுன்னுதான் இந்தப் பதிவு.
சண்டை. ஒண்ணும் பெரிய யுத்தம் இல்லீங்க.என்ன கத்தியெடுத்தா சண்டை. இதெல்லாம் வெறும் 'கத்தி' சண்டைதான்.எங்கே எங்கேன்னு காத்துக்கிட்டு இருந்தாப்போல சூழலிலே சுத்திக்கிட்டே இருக்கும். ஒரு கோடி காமிக்கவேண்டியதுதான்.'டாண்'ன்னு வந்து இறங்கிரும்.
பாத்திரம் இன்னைக்கு யார் தேய்க்கிறது? இது ரொம்ப ஈஸி இல்லே? நம்ம ஊரா இருந்தா வேலைக்கு உதவிசெய்யறவங்க.இங்கேன்னா இருக்கவே இருக்கு 'டிஷ் வாஷர்'. ஹ்ம்..... அதான், யாரு அதுலே பாத்திரம் அடுக்கறது? செய்யவேண்டியவர்செய்யலை. தொலையட்டுமுன்னு அதோட போகாது. இதுக்கு முன்னாலே எத்தனை தடவை இப்படி நடந்திருக்கு, எந்தெந்தசந்தர்ப்பத்துலேன்னு எல்லாம் துல்லியமா புள்ளிவிவரத்தோடு விஸ்தரிக்கப்படும். ஏறக்குறைய அரைமணிநேரச் சண்டைகேரண்ட்டீ!
( ஆனா இந்தச் சண்டைக்கு இந்தியாவுலே ஸ்கோப் இல்லைன்னு நினைக்கிறேன்)
வெளியே கடை கண்ணின்னு போறோம். ரெண்டுபேருமா காரை விட்டு இறங்கி கடைக்குள்ளெ போயிட்டாப் பிரச்சனை இல்லை.அதைவிட்டுட்டு, நான் கார்லேயே இருக்கேன். நீ/நீங்க போய் வாங்கிவந்தாப் போதும். வந்துச்சு வினை. 'எவ்வளவு நேரமாச்சு? அங்கேஎன்னதான் செஞ்சுக்கிட்டு இருந்தே?' இது கொஞ்சம் நாகரீகமாச் சொல்றது.(எங்கே போய்த் தொலைஞ்சே? போனா போன இடம் வந்தா வந்த இடம்...... ) ஆனா பாருங்க பலசமயங்களிலே சூப்பர்மார்கெட்டுலே செக்அவுட்லே நிக்கறப்ப கரெக்ட்டாநமக்கு முன்னாலே நிக்கறவங்களுக்குத்தான் எதாவது பிரச்சனை, கார்டு வேலை செய்யாது, தவறான விலையைக் காமிக்கறதுன்னுஇப்படி எதோ ஒண்ணு. வேற கவுண்ட்டருக்குப் போகமுடியாம நம்ம பின்னாலே அனுமார்வால் போல நீளமான க்யூ.நடுவிலே மாட்டிக்கிட்டு முழிச்சது கார்லே காத்துக்கிட்டு இருந்தவங்களூக்குத் தெரியுமா? முப்பது நிமிஷ ஃபைட்டுக்கு உத்திரவாதம்!
'எனக்கு நிஜமாவே எரிச்சல் ஊட்டுற விஷயம் என்னன்னு தெரியுமா?' இப்படி ஆரம்பிக்கற பேச்சுதான் எங்கியோ கொண்டு போய் விட்டுரும். இது விம்ப்ள்டன் ஃபைனல் மேட்ச் பாக்கறமாதிரிவிறுவிறுப்பான சமாச்சாரம். இதுவரை நடந்த வாழ்க்கையிலுள்ள அத்தனை மோசமான அம்சமும் கேட்லாக் போட்டமாதிரி ஒவ்வொண்ணா வரும். ஆகக்கூடி அத்தனையும். இதுலே கவுண்ட்டர் அட்டாக் வரக்கூடிய அபாயமும் இருக்கு. கவனம் தேவை.
இன்னிக்கு என்ன நாள் தெரியுமா? போச்சுரா! என்னவா இருக்கும்? பொறந்தநாள், கல்யாணநாள், புள்ளைங்களோட பொறந்தநாள் இப்படி ஒண்ணும் இல்லேன்னாலும் நம்ம நாய்/பூனை செத்த நாள்...... ஐய்யோ எதோ ஒண்ணு, சட்னு நினைவுக்கு வந்து தொலையமாட்டேங்குதே.......
தெரியலைன்னா தலை கவிழ்ந்து இருந்தால் தப்பிச்சீங்க. அதை விட்டு தப்பா எதுவாவது சொல்லிட்டீங்க..அவ்வளோதான். உங்களைக் காப்பாத்த அந்த ஆண்டவனாலேயும் முடியாது. இந்த கண்டம் ஆம்புளைங்களுக்குத்தான்.45 நிமிஷ வாய்ச் சண்டைக்கு ரெடியா இருங்க. சொல்லிட்டேன்.
........ பில் அடைச்சாச்சா?
(எலக்ட்ரிசிடி பில், போன் பில், க்ரெடிட் கார்டு பில் இப்படி எதாவது ஒண்ணுன்னு வச்சுக்குங்க. அதான் ஏகப்பட்டது இருக்கே.)
கேக்கற கேள்வியோட தொனியே 'அடைக்கலே இல்லே? ஞாபகமா மறந்திருக்குமே?'
இன்னிக்குத்தானே கடைசிநாள்? பாக்ஸிங் க்ளவுஸ் இருந்தா எடுத்து ரெண்டுபேரும் போட்டுக்குங்க. எவ்வளோநாள் தான் வாய்ச் சண்டை மட்டும் போடுறது?
ரொம்பவும் சென்சிட்டிவான டாபிக் 'அம்மா'! அதிலும் 'உங்க'ன்ற அடைமொழி சேர்ந்தாப் போச்சு. தன்னுடைய தாய் ஒரு பேய்னு தான் சொன்னாலும் சொல்லலாமே தவிர அதை 'உங்க' போட்டீங்க, கதம் கதம் கதம்......
அப்புறம் அநேகமா எல்லா வீட்டுலேயும் வழக்கமா நடக்கறது இது. உங்க மகன்/மகள் செஞ்ச வேலையைப் பார்த்தீங்களா?இது புள்ளைங்க எதாவது தப்புத் தண்டா செஞ்சா. அதே புள்ளைங்க நல்ல பேர், நல்ல மார்க்னு எடுத்துட்டா சிலசமயம் நம்ம, பலசமயம் என் பையன்/பொண்ணு..... இதுக்கு மட்டும் சண்டையெல்லாம் இல்லே , ஒரு 'எகத்தாளமான பார்வை' மட்டும்தான்.
இப்படி இன்னும் பல சொல்லிக்கிட்டே போகலாம். ஆனா , நாங்க இதுவரை சண்டையே போட்டதில்லைன்னு யாராவது சொன்னாமட்டும்நம்பவே நம்பாதீங்க. ஒண்ணு அவுங்களுக்குக் கல்யாணம் முடிஞ்சு 24 மணி நேரம்கூட ஆயிருக்காது. இல்லே, அவுங்க 'உண்மை'யைச் சொல்லாம மறைக்கறாங்க.( பொய்ங்க, பொய்ய்யி)
ஆனா இந்தச் சின்னச் சின்ன சண்டைகள்தான் வாழ்க்கைக்கு மசாலா தூவி ஒரு ருசி கொடுக்குது. ஆனா எல்லாம் அளவோட இருக்கணும்.
சண்டையும் சச்சரவுமா எல்லோரும் சந்தோஷமா இருங்க, என்ன.
புரிஞ்சதா?
Wednesday, January 04, 2006
உறவுகள் மேம்பட.....
Posted by துளசி கோபால் at 1/04/2006 04:28:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
32 comments:
periyamma...irunga kopalu periyappa inthapakam varadum kekuran masalva thovineenga endu:-)
supermarket visayam 100% unmai.
சிநேகிதி,
நன்றி. தமிழ்மனம் ரொம்ப நேரமா திரட்டலையேன்னு இருந்தேன்.
பெரியப்பா அப்பப்ப மசாலா தூவறாருதான்.
அதான் நாளைக்கு மூணு சண்டை:-)
டி ராஜ்,
அதையெல்லாம் 'டக்'ன்னு கண்டு பிடிச்சுருவோம்லெ.
//இதுக்கு முன்னாலே எத்தனை தடவை இப்படி நடந்திருக்கு, எந்தெந்தசந்தர்ப்பத்துலேன்னு எல்லாம் துல்லியமா புள்ளிவிவரத்தோடு விஸ்தரிக்கப்படும். //
நல்லா சொன்னீங்க துள்ஸ். பழசைக் கிண்டக்கூடாது என்று ஒரு சட்டம் சத்தமாய் வைத்தாலும் பயனில்லை என்பது எங்கள் வீட்டுக் கருத்து. ஏனென்டா கட்டாயம் பழை..ய்..ய்ய்ய்..து மீண்டும் கிளறப்படும்!
ஷ்ரேயா & ராஜ்
OLD IS GOLD
பழசாக ஆக...... மதிப்பு கூடும்.:-)
துளசியக்கா!
ஆனாலும் எங்க வீட்டை இப்படி வேவு பார்த்து அக்குவேறு ஆணிவேரா எழுதறது கொஞ்சம்கூட நல்லா இல்லை.. சொல்லிட்டேன்! :)
இருந்தாலும் இந்த 'அம்மா'வுக்கு முன்னால 'உங்க'... அல்டிமேட்!!!!
:-)))) ஹி.. ஹி..
முக்கியமா இன்னோரு விஷயம் சொல்லாம விட்டுட்டீங்க.
சண்டையில தர்மஅடி வாங்கினாலும் அதையெல்லாம் (எவ்வளவு நேரந்தான் வலிக்காத மாதிரி நடிக்கறது) வெளிய சொல்லாம இருக்கிறதுதான் நல்லது.
lakalakalaka illaamal vaazhkai kalakalannu irrukkaathu correctaaa??
டீச்சர். இதுக்கெல்லாம் காரணம் அந்தப் பழைய பரமசிவன் குடும்பந்தான் டீச்சர். அவரும் அவரோட பொண்டாட்டியும் போடாத சண்டையா? அதுக்கு மேல ஒரு மாம்பழ விவகாரத்துல அண்ணந்தம்பிக்குள்ள சண்ட வந்து வீட்ட விட்டே வெளிய போய் தனிக்குடித்தனம் பண்ணுனதாகவும், பெறகு ஊர்க்கெழவிகள்ளாம் போய்க் கூப்புட்டதாகவும் கூட பேச்சு உண்டு. இவங்க மச்சினர் வீட்டுலயும் வெவகாரந்தான் டீச்சர். வீட்டுக்கு வந்து எட்டி ஒதச்ச விருந்தாளிய ஒபசரண பண்ணுன புருஷன் கிட்ட கோவிச்சுக்கிட்டு அந்தம்மா வெலகிப் போக.....ஜெகஜெகன்னு இருந்தவரு தரித்திர நாராயணனாகி.....எல்லாம் அப்படியே தொடருது இல்ல.....
//சண்டையும் சச்சரவுமா எல்லோரும் சந்தோஷமா இருங்க, என்ன. புரிஞ்சதா?//
வேற வழி :-)
//உங்களைக் காப்பாத்த அந்த ஆண்டவனாலேயும் முடியாது. இந்த கண்டம் ஆம்புளைங்களுக்குத்தான்.45 நிமிஷ வாய்ச் சண்டைக்கு ரெடியா இருங்க. சொல்லிட்டேன்.
//
அக்கா உண்மைய ஒத்துக்கிட்டதுக்கு நன்றி :-)))
சும்மா ஒன்றுக்கும் உதவாத தேதிக்கெல்லாம் குடைஞ்சு எடுக்கிறது நல்லதில்ல ஆமா.
45 நிமிஷ வாய்ச் சண்டை அப்போமட்டும்தான் ...ஆனா அது வருங்காலங்களிலும் தொடரும்......ஒரு தடவ மறந்தா மகனே உன்னை காலம் உள்ளவரை தொடரும்.
எவ்ளோ சொன்னிங்க., எங்க வீட்டுல எப்படி சண்டை வரும் தெரியுமா?., ஒண்ணுமில்லைங்க.... ஒரு முறை பேசிக்கிட்டு இருக்கும்போது., மனுசன் பேச்சோட பேச்சா வா.உ.சிதம்பரனார் எங்க தாத்தாவுக்கு நெருங்கின சொந்தம்னு சொன்னாரு., நமக்கு திக்குன்னு ஆயிருச்சு., ஒரே ஒரு கேள்விதான் கேட்டேன்., "யாரச் சொல்றிங்க., இந்த சுதந்திரத்திற்காக ஜெயிலுக்குப் போனாரே., தன்னோட கப்பலக் கூட நாட்டுக்குக் குடுத்தாரே., அந்த வா.உ.சியா? ந்னுதான் கேட்டேன். மனுசன் 'டக்'குன்னு எந்திருச்சி போயிருச்சு. ஏங்க அவங்க வீட்டுக்கு நானிருந்த வரைக்கும் ரெகுலரா வர்ற ஒரே விருந்தாளி., சனிக்கிழம மத்தியானம் வர்ற காக்காதான், (எனக்குத் தெரியாம யாராவது வந்திருக்கலாம்!). சந்தேகத்த கேட்கக்கூடாதா?., இந்தப் பின்னூட்டத்தப் பார்த்தா என்னா வறப் போகுதோ?., ஆனா அதுக்காக சந்தேகம் கேட்காம என்னால இருக்க முடியாதே?.
அப்படி போடு ! வேண்டாம் பேசாம இருங்க, அப்புறம் நானும் ஆரம்ச்சிடுவேன் :-)
வலுக்கட்டாயமாய் வாயை மூடிக் கொண்டு,
உஷா
இன்னுமொன்று சொல்ல மறந்துட்டேன்., சண்டையில்லாம எதுக் கெடுத்தாலும் தலையாட்டி பொம்ம மாதிரி நம்ம தலையாட்டிட்டு இருந்தா நல்லாவா இருக்கும்?., எதச் சொன்னாலும் அதுக்கு எதிர்ப்பா சொல்லிப்பாருங்க... அட நமக்கு யோசிக்க தெரியலையாட்டம் இருக்குன்னு அதீதாமா அதுகளா ஏதாவது கற்பனைய பண்ணிகிட்டு., என்ன பண்ணலாம்னு நீயே சொல்லு! ந்னு சரண்டர் ஆவாங்க... ஆமா... எல்லாத்துக்கும் நாந்தான் கிடைச்சேன்னு ஏழறையப் போட்டு, மனசுக்குள்ள புன்னகையப் போட்டுட்டு போய்ட்டே இருக்க வேண்டியதுதான்.
உஷா., சும்மா சொல்லுங்க., துணைக்கு நாங்க இருக்கம்ல?.
நீங்க வேற அப்படி போடு! அடுத்த தடவை கொஞ்சம் சீரியசான முகபாவனையுடன் தலையாட்டிப் பாருங்க, மனுஷ குழம்பிடுவாரு ;-))
இனியும் வாயை திறக்க உத்தேசம் இல்லாத,
உஷா
துளசியக்கா,
எங்க வீட்டுகாரர் ஒரு மாதம் இந்தியா பயணம் போயிருக்கார். சண்டை, சச்சரவு எதுவும் இல்லாம் ரொம்ப போர் அடிக்கிது எனக்கு.
தாரா.
//கொஞ்சம் சீரியசான முகபாவனையுடன் தலையாட்டிப் பாருங்க//
ஐ!., ஐடியா சூப்பர் உஷா!.:-)))), செஞ்சு பார்த்திட்டு சொல்றேன்.
இளவஞ்சி,
எல்லோரும் மன்னவரே.... மாதிரிதான் இது எல்லோருக்கும் பொது:-)
சதீஷ்,
இது ரொம்பச்சரி. இது மட்டும் இல்லைன்னா ஒரே போரிங்கா இருக்குல்லே?
கோபி,
அட தேவுடா..... இப்பெல்லாம் ஆரம்பத்துலேயே இப்படி ஆயிருதா? இன்னும் புதுமாப்பிள்ளை ஜோரே
முடிஞ்சிருக்காதேப்பா? கலிகாலம்:-)
தேவ்,
கலக்கலா இருக்கணுமுங்கறதுதான் பொழிப்புரை:-)
ராகவன்,
எல்லாத்துக்கும் நமக்குத்தான் 'ரோல் மாடல்' இருக்கங்களே:-)
அப்படியே 'காப்பி'அடிக்கவேண்டியதுதான்!
உஷா,
உங்க ஐடியா நல்லா இருக்கு. ஆனா, இந்த 'அடுத்தது காட்டும் பளிங்கு'ன்னு
சொல்லிட்டுப் போயிட்டாரே. அதை என்ன செய்யறதாம்?
எல்லாத்தையும் 'கேட்டுக்கிட்டுத் தலை ஆட்டறப்ப பளிங்கு பிரதிபலிக்காம இருக்கணுமே.'
அதுதான் கவலையா இருக்கு.
கல்வெட்டு,
//ஒரு தடவ மறந்தா மகனே உன்னை காலம் உள்ளவரை தொடரும். //
இது.... நல்ல கற்பூர புத்திப்பா. கடவுள் மேலே பாரத்தைப் போட்டுறலாம்:-)
மரம்,
ஒருவேளை அந்தக் காக்காதான் கப்பலைக் குடுத்தவரோ? இறந்து போனவங்கதான் காக்கா ரூபத்துலே
வர்றாங்கன்னு பாட்டி சொன்னது அதுக்குள்ளே மறந்துருச்சா?
இங்கேயும், பழைய ஜனாதிபதி வெங்கட்ராமன், இன்னும் பாரதியார் சொந்தம்னு சொல்லிக்கறவங்க இருக்காங்க.
தாரா,
எத்தனை நாள்? ஒரு மாசமா? தாங்காதே. முப்பதை மூணாலே பெருக்குனா தொண்ணூறா?
இன்னும் ஒரு பத்தைக் கூட்டிக்கலாம்,பெனால்ட்டிக்காக. நூறு சண்டை போட அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!
வந்த அன்னைக்கு வேணாம். மறுநாள்லேயிருந்து ஆரம்பிக்கலாம். சகுனம் சரியா இருக்கும்.
அக்கா. நீங்க எல்லாம் லேட்டு. நாங்க எல்லாம் கல்யாணத்துக்கு நாலு நாளைக்கு முன்னாலேயே ஆரம்பிச்சாச்சே. இதோ 8 வருஷம் ஆகப் போகுது. இன்னும் வெட்டு குத்து தான் நடக்கலை. மத்தபடி 'கத்தி'ச் சண்டையெல்லாம் நடந்துக்கிட்டு தான் இருக்கு.
Other side of the world seems to be frightening. Consider this 'dishwasher' & ‘kathi’ fights 3 * 300(minus public holidays, birthdays, anniversary, etc per year)*10(a decade) = 9000 incidents.
It’s gotta take gig’s of space in brain.(to tell better half)
OMG some body help me
குமரன்,
இது என்ன? சண்டை போடற அன்னிக்கு சப்பாத்தி ரொம்ப சாஃப்ட்டா இருக்குமே! அதை எப்படி மிஸ் செஞ்ச்சீங்க?
என்னங்க கார்த்திக்,
//minus public holidays, birthdays, anniversary....//
மைனஸ்? அன்னிக்குத்தானேங்க டபுள் வால்யூம் இருகும் சண்டை.
அதெப்படி?
உங்க கணக்கு தப்பா வருதே:-)
Professor Tulsi ,
//Other side of the world seems to be frightening //
I thought it would tell about me.yep i am single
calc, i tend to be optimistic :-)
ஐய்யோ கார்த்திக்,
//I thought it would tell about me.yep i am single
calc, i tend to be optimistic :-) //
3 x 300 ப்ளஸ் அதர் ஹாலிடேஸ் ( அதுக்கு ஒரு 65 x 6 சேர்த்துக்கணும்) இப்ப பத்து வருசத்துக்குக்
கணக்குப் போட்டுக்குங்க.
மெட்டர்னிட்டி லீவு வேணா கொஞ்சம் வுட்டுறலாம்.
ஆனா இதுக்கெல்லாம் பயந்துறக்கூடாது. நாமெல்லாம் யாரு? பயங்கரமான வீரர்கள். எல்லார் உடம்புலேயும்
'விழுப்புண்'கள் இருக்கு. ஆனா இருக்கற இடம்தான் முதுகு!
காலம் கனியும்போது 'போரில் வெற்றி பெற ' வாழ்த்துக்கள்.
துளசிக்கா கோபாலு மாமாவ ரொம்ப திட்டி விட்டீர்களா? போன் போட்டு உடனே வரசொல்லுங்க ,ஒங்க மேல ரொம்ப கோவமா இருக்காரு!
சிங்.செயகுமார்,
:-))))))
எங்கே போயிருவாரு? இந்த வாரமும் இங்கே விடுமுறைதான்.
எல்லா ஆஃபீஸும் 9 ஆம்தேதிதான் திறக்குறாங்க.
துளசி, நல்லா எழுதியிருக்கீங்க. அட, ஒரு கருத்துப் பரிமாற்றத்துக்கே இந்தச் சண்டைகள் தானே வழி வகுக்குது. இல்லேன்னா அவ்வளவு லேசா மனசுக்குள்ள இருக்குறதச் சொல்லிருவமா என்ன?
ஆமாங்க செல்வராஜ்.
இந்தக் கருத்துப் பறிமாற்றத்தைத்தான் பலரும் 'சண்டை'ன்னு நினைச்சுக்கறாங்க.
//அவ்வளவு லேசா மனசுக்குள்ள இருக்குறதச் சொல்லிருவமா என்ன? //
அப்படியா சேதி?
மனசுக்குள்ளே பூட்டி வச்சுருக்கறதெல்லாம்
வெளியே வரணுமுன்னா இதுதான் வழியா?
கொஞ்சம்உங்க வீட்டம்மா ஃபோன் நம்பரைத் தாங்க:-)
ச்சும்மா... போட்டுக்குடுக்கத்தான்...
ஆனா இந்தச் சண்டைக்கு இந்தியாவுலே ஸ்கோப் இல்லைன்னு நினைக்கிறேன்)//
நீங்க வேற துளசி..
புருஷன் பெஞ்சாதி சண்டைக்கு ஸ்கோப் வேற வேணுமாக்கும்.
நீங்க போட்ட அட்டவணை பாதிதான்.. இன்னும் எவ்வளவோ ஸ்கோப் இருக்கு..
எழுதினா நூறு எபிசோட் போவும்..
ஆனா அந்த சண்டை முடிஞ்சதும் அடுத்த நாள் காலைல ஒரு கள்ளத்தனமான ஓரப்பார்வையோட நீ பேசினா நானும் பேசுவேன்னு ரெண்டு பேரும் மனசுக்குள்ளயே பேசிக்குவமே அதுக்கப்புறம் ரெண்டு பேரும் ஒன்னா நீ.. நீங்கன்னு ஆரம்பிச்சிட்டு அசடு வழிவமே.. அதுதான் தாம்பத்தியம்..
ஏங்க துளசி,
நெஜமாலுமே இப்படியெல்லாமா ஆம்பளைகளும், பொம்பளைகளும் சண்டை போட்டுக்குவாங்க? என்னங்க அநியாயமா இருக்கு?
(வீட்டுக்காரம்மா பின்னால நிக்கிறாங்க; பிறகு வேற பின்னூட்டம் போடறேன்; சரியா? அவங்ககிட்ட சொல்லிடாதீங்க)
Post a Comment