எந்த ஊரு நல்ல ஊரு? இப்படி மொட்டையாக் கேட்டா எப்படி? எல்லா ஊரும் நல்ல ஊருதான். எல்லாம் நாம நடந்துக்கறதைப் பொறுத்துத்தான் ஊரும் நாடும். இல்லையா? ஆனாலும்.....ச்சின்னச்சின்னஆசைகள்..... பெரிய பெரிய புலம்பல்கள்....
சொந்த நாட்டைவிட்டுப் பலகாலமா போன ஆளுங்க, ஒருநாள் இல்லேன்னா ஒரு நாள், 'போதும். இங்கே இருந்தது.ஊரைப் பார்த்துப் போயிரலாம்'ன்னு நினைப்பாங்க. நினைக்கிறாங்க.
சரி. போயிரலாமுன்னு முடிவு எடுத்துட்டா, எங்கே போறது? ரொம்ப வசதிகள் இல்லேன்னாலும் அத்தியாவசியமான வசதிகளொடஅதாவது தண்ணீர், மருத்துவ வசதி, சுகாதாரச் சூழல் எல்லாம் இருக்கற இடம் வேணுமில்லையா?
நாட்டுநடப்பையெல்லாம் இணையத்துலேயும், இப்ப வர்ற இ-பேப்பர்களிலேயும் படிக்கறப்ப ஊழல் ரொம்பவே மலிஞ்சு
போனதாத் தெரியுது. இதுக்கெல்லாம் ஈடுகொடுத்து, நடக்குற அநியாயங்களைப் பொருட்படுத்தாம இருக்கற மனசு
முதல்லே வேணும். குற்றங்களும் பெருமளவுலே இருக்கு. அல்ப சமாச்சாரமா அஞ்சுபவுன் நகைக்கெல்லாம் கொலை வரைபோறாங்கப்பா!
'ஓஓஓஓ.... ..... பெருசாப் பேசவந்துட்டா, எல்லாம் இங்கிருந்து போன ஆளுங்கதானே?'ன்னு உங்களுக்குத் தோணும்.
அங்கேயே இருந்திருந்தா இதெல்லாமே பழகிப்போயிருக்கும். இப்ப 'டச்'விட்டுப் போச்சு. அதே சமயம் கொஞ்சம்பேரு
திரும்பிவந்து புது வாழ்க்கையை ஆரம்பிச்சுக்கறாங்கதான். நம்ம 'காசி'யே பிடுங்கி நடப்பட்ட மரம்னு எழுதியிருந்தார். அவருக்குச்
சின்ன வயசு. போய் செட்டில் ஆகிட்டார். நாமோ...... வயசான காலத்துலே, எல்லாத்தையும் மொதல்லே இருந்து ஆரம்பிக்கணுமுன்னாநடக்கற காரியமான்னு மலைப்பா இருக்கு.
மனசுக்குள்ளெ எப்பவும் ஒரு ஆசை மூலையிலே குந்திக்கிட்டு இருக்கு. ரெண்டு பக்கமும் திண்ணை வச்ச அழகானவீடு. மேலே ஓடு வேணுமுன்னுகூட அவசியமில்லை. அழகா ஓலை வேய்ஞ்சிருந்தாலும் போதும்.( குடிசைன்னுசொல்லேன், என்னமோ ஓலை கீலைன்னு பீலா வுடறே?ன்னு யாருப்பா அங்கே சவுண்டு விடறது)
உள்ளே போனா நல்ல முற்றம். அதை ஒட்டுனாப்போல உள்பக்கமும் திண்ணைங்க. முற்றம் முழுசும் அலங்காரமாப் பூச்செடிங்க.மேலே நிமிர்ந்து பார்த்தா அழகான ஆகாயம். சிமெண்ட்டுத்தரை எல்லாம் வேணாம். இல்லே வேணுமா?மழைகிழை பேய்ஞ்சா, மண்ணெல்லாம் ஊறி நசநசன்னு ஆயிரும் இல்லே? சரி. சிமெண்டுத்தரையே இருக்கட்டும்.ஆனா வீட்டுக்குள்ளெ எல்லாம் மொழுகுன மண்தரைதான் சொல்லிப்புட்டேன். தண்ணிகிண்ணி கொட்டுனாலும் கவலையே இல்லை.அப்படியே உள்ளே இஞ்சிரும்,ஜாலிதான்.
மின்சாரம் வேணும். ஆனா அடுக்களையிலே மாடர்ன் உபகரணங்கள் எல்லாம் வேணாம். அம்மிக்கல், ஆட்டுக்கல்னுஇருக்கணும். போனாப் போட்டுமுன்னு 'கேஸ் அடுப்பு' மட்டும் இருந்து தொலையட்டும்.
வீட்டைச் சுத்தித் தென்னைமரங்களும், இன்னும் சில பழமரங்களும் வேணும். பலாமரம் இருக்கறது கட்டாயம்.காத்து சிலுசிலுன்னு வரணும். தண்ணிப் பஞ்சமே இருக்கக்கூடாது. கிணத்துலே 'நல்ல தண்ணி' எப்பவும் வத்தாம இருக்கோணும். பழையகாலத்துலே இருட்டிருட்டா இருக்குமே அப்படி இல்லாம வீடும் வெளிச்சமா இருக்கணும்.
படுக்கையறை ஃபர்னிச்சர்ன்னு ஒண்ணும் பெருசா வேணாம். ஒரு கயித்துக் கட்டில் இருந்தாலும் போதும். பாயைஉதறி உள்திண்ணையிலே போட்டோமா தூங்குனோமான்னு இருக்கணும். எலெக்ட்ரிக் ப்ளாங்கெட், வேலன்ஸ், ஃப்ளாட்ஷீட், ஃபிட்டட் ஷீட், டூவே இன்னர், டூவே கவர் இப்படி ஒரு நக்ராவும் கூடாது.
வீட்டை ஒட்டி ஆறு 'ஓடுனா' உத்தமம். இல்லையா, கவலை வேணாம். வீட்டுக் குளியலறை கொஞ்சம் விஸ்தாரமா இருந்தாப் போதும்.அங்கே மட்டும் வசதியை முன்னிட்டு, நம்ம 'பாலிஸி'யைக் கொஞ்சம் விட்டுக் கொடுக்கலாம்.( புரிஞ்சிச்சுல்லே)
கங்காரு, குட்டியைத் தூக்கிட்டு அலையுறதுபோல எப்பப் பார்த்தாலும், ஸ்வெட்டர், ஜாக்கெட்டுன்னு தூக்கிக்கிட்டுப்போய் அலுப்பா இருக்கு. இதெல்லாம் தேவையில்லாத ஒரு காலாவஸ்தை ( அவஸ்தை இல்லீங்க, காலநிலை) இருக்கணும்.
இதெல்லாம் கூடிவரக்கூடிய ஊர் எதாவது தெரிஞ்சதுன்னா சொல்லுங்களேன். சிம்பிளா இருக்கறதே ஒரு லக்ஸரியாப்போயிருமோ?
Friday, January 06, 2006
காணி நிலம் வேண்டும்......
Posted by துளசி கோபால் at 1/06/2006 02:01:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
33 comments:
அட போங்கம்மா!
இங்க எட்டுக்கு ஆறு (8' x 6') அடி கிடைக்கிறதே கஷ்டமா இருக்கு.
இங்க "காணி நிலம் வேண்டும்"ன்னா, எங்க போறது?
//இங்க எட்டுக்கு ஆறு (8' x 6') அடி கிடைக்கிறதே கஷ்டமா இருக்கு.//
என்ன இப்படிச் சொல்லிட்டீங்க? மெய்யாலுமா?
வருகைக்கு நன்றிங்க பொன்னம்பலம்
இப்ப என்னாத்துக்கு காணி நிலம் தேடரீங்க? க்ரைஸ்ட்சர்ச்ல ஏதோ இரண்டு தடவ குண்டு இருக்குனு புரளிய கிளப்பிவிட்டால் ஒடன ஊரவிட்டு ஓடிடப்படாது.
//க்ரைஸ்ட்சர்ச்ல ஏதோ இரண்டு தடவ குண்டு இருக்குனு புரளிய கிளப்பிவிட்டால் //
ஐயோ... எங்க பாத்தாலும்., இது என்ன அவஸ்தை?
சுரேஷ்,
இப்பப் பாருங்க நம்ம மரம் பதறி அடிச்சுக்கிட்டு வந்திருக்காங்க.
இங்கே 'காணி'யிலே தோட்டவேலை செய்ய முடியாமத்தான் இருக்கு. என்னத்தை சம்மரோ? இன்னும் குளுர் விட்டபாட்டைக் காணொம்(-:
மரம்,
இங்கே கிறைஸ்ட்சர்ச்சிலே ஒரே ஒரு குண்டுதாங்க. அது நாந்தான்:-)
//இதெல்லாம் கூடிவரக்கூடிய ஊர் எதாவது தெரிஞ்சதுன்னா சொல்லுங்களேன்...//
சொர்க்கமே என்றாலும் அது....
:-))
Akka... aanalum aasai ungalukku athigamthaan! :-)
"புதியகாணி" கிரகத்தில் "நீராற்று"க்கு அருகில் மண்வீதியில் மரங்கள் நிறைந்துள்ள ஒரு நிலத்துண்டில் 3 அறைகளும் வசதியான கழிப்பறையும் குளியலறை கிணறு சகிதம் ஒரு வீடு விற்பனைக்குண்டு. ஆர்வமுடையோர் ஐம்பது படி அன்பும், எண்ணூற்றி எண்பத்தி மூன்று ஆழாக்கு வலைப்பதிவுகளும் முற்கட்டணமாகச் செலுத்தி மேற்படி வீட்டைத் தம் பெயரில் பெற்றுக்கொள்ளலாம். தனிமடலில் அணுகுங்கள்.
நிலவிலேயும் செவ்வாய்க் கிரகத்திலேயும் காணி விக்கிறாங்களாமே... தெரியுமா? :O)
டீச்சரு. ஆசைன்னு சொல்லுவாங்க. அதுவே அளவுக்கு மீறுனா பேராசைன்னு சொல்லுவாங்க. நீங்க பெரும்பேராசை படுறீங்களே.
இப்பல்லாம் மக்களுக்கு அந்தர வாழ்க்கைதான். அதான் அப்பார்டுமெண்டுதான். நீங்க சொல்ற அத்தனை கனவும் ஆசையும் எனக்கும் உண்டு. அதுக்குக் கோடி கோடியாக் கொட்டிக் குடுத்தாலும் கிடைக்கிறது கஷ்டம். கிடைச்சாலும் வெச்சிக் காப்பாத்துறது ரொம்பக் கஷ்டம். ரொம்ப நல்லாருந்தா அரசியல்வாதிங்க வேற வந்து வெலைக்குக் கேக்குறாங்களாமே!
டி ராஜ்,
இதுக்கெல்லாம் மயங்கி வுழுந்துரலாமா? வயசு இருக்க்கேப்பா.... முயற்சி செஞ்சால்
முடியாதா,என்ன?
ஞான்ஸ்,
அதேதான். ஆனா ராகவன் சொன்னதைப் பார்த்தீங்களா? ஊருக்கு வந்து இருந்துறலாம்ன்றது
பேராசையிலே சேர்ந்துபோச்சாமே(-:
ராம்கி,
நீங்களுமா?
ஆமாம், காவிரிக்கரையிலே இப்படி இடம் இன்னும் இருக்கா?
ஷ்ரேயா,
இதோ அம்பதுக்குப் பதிலா 500 படி அன்பு ரெடி!
ஆனா வலைப்பதிவுகள்தான்...... ரொம்ப நாள் செல்லும்(-:
ராகவன்,
நிறையப்பேருக்கு நம்மளைப்போலவே ஆசை இருக்கு போல. பேசாம இதையே ஒரு பிஸினெஸ்ஸா
மாத்திரலாம்.
// ராகவன்,
நிறையப்பேருக்கு நம்மளைப்போலவே ஆசை இருக்கு போல. பேசாம இதையே ஒரு பிஸினெஸ்ஸா
மாத்திரலாம். //
சரியாச் சொன்னீங்க டீச்சர். பெங்களூருல என்னத்த வித்தாலும் இப்ப வெல போகுது. நீங்க இன்வெஸ்ட்மெண்டு பார்ட்டுனரா இருங்க. நான் இங்க லோக்கல்ல ரொம்பவே செல்வாக்கா(!!!) இருக்குறதால ஒர்க்கிங் பார்ட்டுனரா இருந்து எல்லாலாஆஆஆஆஆத்தையும் பாத்துக்கிர்ரேன். என்ன சொல்றீங்க?
துளசி எல்லாம் மனசுதான் காரணம். நானும், வூட்டுக்காரரும் ரிடையர் ஆனதும் மாயவரம் போயிடலாம் என்று இன்றுவரை நினைத்துள்ளோம். அங்க, பழைய தாத்தாவோட வீடு இருக்கு, குளுமையா, பாதி ஓடு, பாதி பிறகு கட்டினார்கள்.
மொட்டை மாடி, உயர்ந்த தென்னைமரங்கள் என்று வாழ போகும் அந்த நாளும் வந்துடாதோ என்று இருக்கிறேன். ஸ்ரீரங்கம்,
கோவையும் அடுத்த லிஸ்டில் பார்க்கலாம் இன்ஷா அல்லா!
கரூர், திண்டுக்கல் ஞாபகம் இருக்கா?
அடடா துளசி,
எப்படிங்க உங்களால மட்டும் இப்படியெல்லாம் யோசிக்க முடியுது?
எனக்கும் இப்படியெல்லாம் ஆசை உண்டுதான்.
ரெண்டு பக்கம் திண்ணை, வாணம் பார்த்த முற்றம், ஓடு வேய்ந்த கூரை.. (ஓலையெல்லாம் சொல்றதுக்குத்தான் நல்லாருக்கும்)சூரிய ஒளி அறைகளுக்குள்ள வர்றதுக்கு ஓட்டுக்கு நடுவுல ஒரு சின்ன கண்ணாடி கண்டிப்பா வைக்கணும்.. சின்ன வயசுல எங்க வீட்ல இருந்திச்சி.. ராத்திரியில நிலா ஒளிக்கற்றை என் மூஞ்சி மேல விழுந்தது இன்னைக்கி வரைக்கும் கண்லயே நிக்குது..
பின்னால முக்கனி மரங்கள்.. கால்ல குறுகுறுக்கற புல்தரை..
ஹூம்... நடக்கற ஆசையா பேராசையான்னு சின்ன பொண்ண கட்டிக்குடுத்துட்டுத்தான் பாக்கணும்..
நான் போனதும் சொல்றேன்.. நீங்களும் அந்த ஊருக்கே வந்துருங்க..
அக்கா,
நல்லாத்தான் ஆசைப்படறீங்க. நீங்க கேக்கறதெல்லாம் இருக்குற இடம் நிறையவே இருக்கே..
//ஆமாம், காவிரிக்கரையிலே இப்படி இடம் இன்னும் இருக்கா? //
நிறைய இருக்கே. திருவையாறு, திருப்பந்துருத்தி, நன்னிலம் ஏரியாவுல தேடிப்பாருங்க. சரி, வீட்ட வாங்கி கஷ்டமெல்லாம் படவேணாம்னு நினைக்கறவங்களுக்கு ஒரு ஹோட்டல் இருக்கு. கிராமத்தையே ஹோட்டலாக்கிட்டாங்க. ஸ்டெர்லிங் சுவாமிமலை. நீங்க சொல்ற மாதிரியே திண்ணை வச்சு, தலைகுனிஞ்சு தான் வீட்டுக்குள்ள போகணும். அப்புறம் வெளிநாட்டுலலாம் zoo வில் மட்டுமே பார்க்கக்கிடைக்கிற பசு, கன்னுக்குட்டி, மான் எல்லாம் ஃப்ரியா சுத்திகிட்டிருக்கும்.
அப்படியே வாழைத்தோப்புக்கு நடுவுல தெப்பக்குளம் டிசைன்ல ஒரு நீச்சல் குளம். அதுல ஊறிகிட்டே பன்னீர் டிக்கா சாப்டா ஜென்ம சாபல்யம்.
பை தி வே, நிறைய பேரு இந்த ஹோட்டல பார்த்திருப்பீங்க. ஆனந்தம் படத்துல வர மம்மூட்டி வீடு தான்.
வருஷாவருஷம் கண்டிப்பா அங்க போறதுண்டு.
இந்தியாவுக்குத் திரும்பி வந்து settle ஆகப்போறதில்லை என்று தெளிவா, வெளிப்படையா சொல்லிட வேண்டியதுதானே...அதை விட்டுட்டு இல்லாத விஷயங்கள், நடக்காத காரியங்களைப் பற்றிச் சொன்னா எப்படி?
அதானே. ஊருக்குத் திரும்பி வரப் போறதில்லைன்னா நேராச் சொல்லவேண்டியது தானே. சுத்திவளைச்சு இப்படி ஒரு பதிவு போடணுமா என்ன?
மன்னிச்சுக்கோங்க அக்கா. நமக்கும் அதே கதைதான். நீங்க பதிவா போட்டுட்டீங்க. நமக்கு இன்னும் அந்த தகிரியம் வரல.
ராகவன்,
இதைப் பத்தி நேரில் சம்சாரிக்கலாம்.
உஷா,
அதெப்படிங்க கரூரை மறக்கமுடியும்? நான் 'அவதரித்த' ஊராச்சே! ஆமாம், திண்டுக்கல் எப்படி
இந்த லிஸ்ட்டுலே? அங்கே எப்பவும் ரொம்ப 'காஞ்ச'பூமியாச்சே!
மாயவரம் வீடு சூப்பரா இருக்கும்போல! ஒண்டுக்குடித்தனத்துக்கு ச்சான்ஸ் உண்டா?
எனக்குத்தான், அப்படியே ஒண்டிக்கலாமுன்னு...
டிபிஆர் ஜோ,
//நான் போனதும் சொல்றேன்.. நீங்களும் அந்த ஊருக்கே வந்துருங்க.. //
இது .....
பேசாம 'தமிழ்மணம் நகர்'னு ஆரம்பிச்சுரலாமா?
ராம்ஸ்,
கேக்கறப்பவே 'மஜா'வா இருக்கே. நானும் முந்தி இப்படி ஒண்ணு இருக்குன்னு எங்கோ படிச்சுட்டு
அதை இப்பத் தேடிக்கிட்டு இருந்தேன். மூளை(!)யை ரொம்பக் கசக்கறதுக்கு முந்தி
விவரத்தைச் சொல்லிட்டீங்க, தேங்ஸ்.
//வருஷாவருஷம் கண்டிப்பா அங்க போறதுண்டு. //
ஹூம்.... ரொம்பப் புகையுதே இங்கே....:-))))
தருமி & குமரன்,
யாரு கண்டா நமக்கு எந்த ஊருத் தண்ணி விதிச்சிருக்குன்னு?
நம்ம மலேசிய நண்பர் ஒருத்தர் இப்படித்தான் வருஷா வருஷம் குளுர் தொடங்குனதும் ஆரம்பிச்சிருவார்,
இங்கெயிருந்து திரும்பிப் போயிரணும்லா'ன்னு. நாங்களும் சிரிச்சுக்கிட்டே ஆமாம்னு சொல்வோம்.
பத்துவருசம் இதே கதைதான். பதினோராம் வருசம் இப்படி ஆரம்பிச்சப்ப அதை நாங்க பெருசாக் கண்டுக்கலை.
ஆனா மனுஷன் நிஜமாவே மலேசியாவுக்குத் திரும்பிப் போயிட்டாருங்க! இப்ப அவர் போயே ஏழு வருசமாச்சு.
போனமாசம் இங்கே ஒரு வாரம் வந்துட்டுப் போனார்.
துளசி
நிஜமாவே ஆசை இருந்தா, பெங்களூரில் இப்ப நிறைய புது வீடு கட்ட ஆரம்பித்திருக்கிறார்கள் அதுவும் மல்லேஸ்வரம் (IISC) அருகே. ஓய்வான நேரத்தில் நூலகம் செல்ல வசதி. விருப்பமானால், கட்டட மேலாண்மையாளரான ராஜஸ்ரீயின் மின்மடல் தருகிறேன்.
அன்பு அம்மா,
"என்ன இரும்பு இதயமம்மா உங்களுக்கு". திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் சிறு வயதில் குடித்த காபியை நினைத்துப்பின் கூறுங்கள். திண்டுக்கல் "காஞ்ச" ஊரா? இது ஞானவெட்டியானை அவமதிப்பது போலாகும்.
சிறுமலைக் காற்று. அமைதியான ஊர். இருந்தாலும் அங்கே இங்கே ஏதாவது அடிதடி சின்னதா நடக்கும். குடும்பச் சண்டை என்றால் தலையை மாத்திரம்தான் சீவுவார்கள்.
காய்கறி எல்லாம் மலிவாகக் கிட்டும். மாலையில் அபிராமி கோவிலுக்குச் சென்று அவளையே பார்த்துகொண்டிருந்தால் போதும். மவுன நிலைக்கே சென்றுவிடலாம்.
தொ(ல்)லைபேசி உள்ளது. ஆனால் பெரும்பாலான நேரங்களில் செத்து விடும்.சிமென்ட் சாலைகள்(ஒரு காலத்தில்) குண்டு, குழி எல்லாம் மற்ற ஊர்களைப்போல் இல்லாமல் அடிக்கு ஒன்றுதான் இருக்கும்.
கொஞ்சம் தெற்கே சென்றுவிட்டால் தோல் பதனிடும் சாலைகளில் இருந்து நறுமணம் தவழ்ந்து வரும்.
எல்லாவற்றிற்கும் மேலாக நான் இருக்கிறேனே!
பத்மா, பெங்களூரா? துளசி கொஞ்சம் யோசிச்சி முடிவெடுங்க :-), இரண்டு வருடம் முன்பு பெங்களூர் எங்கள் லிஸ்டில் இருந்தது
இப்பொழுது இல்லை.
என்ன மாயவரத்து பிள்ளைகள் யாரையும் காணோம்?
மாயவரம் டவுன் என்று சொல்லிக் கொள்வார்கள், ஆனா என் கண்ணுக்கு கிராமம்தான். திருட்டு பயமெல்லாம் சின்ன ஊர்களில் பெருசாய் இருக்காது. காயப்போட்ட துணி, ஜன்னல் அருகில் இருக்கும் பொருள்கள், மரத்தில் காய்ப்பவை என்று! என் மாமனார் சொல்வார், பாவம் இல்லாதவன் கொண்டுக்கிட்டு போரான் என்பார்.
வீட்டை எப்படி மாற்றிக் கட்ட வேண்டும் என்ற பிளான் கூட நான் போட்டாச்சு. முடிஞ்சா அடுத்த முறை மாயூரம் போய் பாருங்க.
ஆசையோ, பேராசையோ, ஆனால் அருமையான ஆசை. எனக்கும் இதே ஆசைகள் உண்டு.
அம்மா, உங்க ஆசைகள் நிறைவேறும்.
ஞானவெட்டியாரே,
ஆமாம். மறந்துதான் போயிட்டேன் பஸ் ஸ்டாண்டுலே இருந்த?இருக்கற மாணிக்கவாசகர் கஃபேயை.
அங்குவிலாஸ் கம்பெனிகூட நினைவில் வருது. மலக்கோட்டையில் ஏறினதும், அங்கே ஏதோ ஒரு சுவரில்
வந்துட்டுப்போன அடையாளத்தை 'கல்வெட்டுலே பதிச்சதும்'கூட ஞாபகம் வருதே......
ஆனா, இன்றைய நிலையிலே பார்த்தால், நீங்களும் அண்ணியும் அங்கே இருக்கறது மட்டுமே ப்ளஸ் பாயிண்ட்.
அங்கேதான் நல்ல பூட்டுங்க கிடைக்குதே. ஒண்ணு வாங்கி அனுப்புங்க, என் வாயைப் பூட்டிக்கறதுக்கு:-)
பத்மா,
நம்ம உஷா சொன்னதேதான், நானும். பெங்களூரு வேணாம். தென்னைமரம் இருக்கும் ஒரு கொச்சுப் பரம்பு
கேரளத்திலே லபிக்கும். ஆறுதான் கஷ்டம். எல்லா ஆறிலேயும் பொல்யூஷந்தான்:-)
உஷா,
நீங்க சொன்னதுபோலத்தான் பெந்தகளுரை லிஸ்ட்டுலே சேர்க்கலை.
மாயவரம் வீட்டுப் ப்ளானைக் காப்பியடிக்கலாமா?:-)
பரஞ்சோதி,
//அம்மா, உங்க ஆசைகள் நிறைவேறும்//
உங்க வாயில் நியூஸி தேன் ஊத்தணும். வாக்கு பலிக்கட்டும்.
அன்பு அம்மா,
பரவாயில்லை.
தாங்கள் எங்கு இருப்பினும் நிம்மதி(நி+மதி)யாக இருக்க வேண்டும்.
இந்த அண்ணன், அண்ணியை மட்டும் மறந்து விடாதீர்கள். இப்பொழுது மாணிக்கவாசகர் கபே இல்லை. அதற்கெனக் கலங்க வேண்டாம். என் இல்லத்திற்கு வாருங்கள். அருமையான டிகாக்ஷன் போட்டு பில்டெர் காபி தருகிறேன்.
வடைபாயசத்துடன் அண்ணி செய்யும் செட்டிநாட்டு சமையலையும் ஒரு கைபார்க்கலாம். 42ஆண்டுகளாக நாவுக்குச் சுவையாய் உண்டுகளித்திருக்கிறேன்.
வீட்டைப்பூட்ட வேண்டுமாகில் பூட்டு வாங்கி அனுப்புகிறேன்.
வாயைப்பூட்ட மவுனமே சிறந்த வழி.
"மோனமென்பது ஞான வரம்பு."
//தாங்கள் எங்கு இருப்பினும் நிம்மதி(நி+மதி)யாக இருக்க வேண்டும்.//
தாங்கள் எங்கு இருப்பினும் நிம்மதி(நின்+மதி)யாக இருக்க வேண்டும்.
கொத்துப்பிழைக்கு மன்னிக்கவும்.
ஞான வெட்டியாரே,
//கொத்துப்பிழைக்கு//
:-))))))))
//கொத்துப்பிழை//
தட்டச்சு செய்வது குருவி கொத்தி அரிசி எடுப்பதுபோலுள்ளதா?
அதுதான் "கொத்துவது". அதிலேற்பட்ட பிழை.
ஞானவெட்டியாரே,
விளக்கம் அருமை.
Great people think alike:))
உயிர்பித்தமைக்கு( அட இந்தப் பதிவைப்பா!) நன்றி முத்து (தமிழினி)
இப்ப மாயவரத்துல இடம் குதிரகொம்பு... ஓட்டு வீடு ஆசைப்பட்டப்ப அம்மா சொன்னது பல்லி பூரான் தேளுக்கு ஓகேவான்னாங்க.. சரி முற்றம் வச்சு வீடு இப்ப சொல்றேன்.. அதுக்கு கொசு வருமே இப்ப மட்டும் எல்லாக்கதவையும் சாயங்காலம் மூடிவைக்கிறேயேன்னு கேக்கராங்க.. ஆனா என்ன பண்றது ஆசை விடலயே..
மேடம் உங்கள் கனவான திண்ண வச்ச வீட்டின் பல அம்சங்கள் நான் பிறந்து வளர்ந்த வீட்டில் உண்டு.
வந்து பாருங்களேன்.
http://tamilamudam.blogspot.com/2008/07/blog-post.html
ஊருக்குச் சென்று வந்த களைப்பென்று எதுவுமில்லாமல் உற்சாகமாய் அடுத்த பதிவு ஆரம்பித்து விடுவீர்கள் எனத் தெரியும், இருந்தாலும்..என் திண்ணையிலும் சில நிமிடம் இளைப்பாறலாம்தானே:).
Post a Comment