Thursday, January 19, 2006

சென்னை, பெங்களூரு வலைஞர்களே,

இது பழைய பதிவு. மீண்டும் பொங்கியதன் காரணம் தெரியவில்லை.
உங்களையெல்லாம் பார்க்க ஒரு சந்தர்ப்பம் வந்திருக்குன்னு நினைக்கிறேன்.உங்க தொலைபேசி எண்களை அனுப்பி வச்சீங்கன்னா, உங்க ஊருக்கு வந்ததும்தொடர்பு கொள்வேன்.

இதுவரை எழுத்து மூலமே பரிச்சயப்பட்டவர்களின் முகங்களைக் காணும் ஆவலில்இருக்கேன்.

மற்றவை நேரில்.

என்றும் அன்புடன்,
துளசி.

பதிவு போரடிக்காம இருக்கச் சும்மா ஒரு படம் போட்டு வச்சுருக்கேன்.

இது நியூஸியிலெ கிடைக்கிற பாவா சிப்பி.

28 comments:

said...

சென்னைக்கும், பாங்களூருக்கு மட்டும்தானா?
தெற்கே வரும் நோக்கம் இல்லையா?

said...

ஞானவெட்டியண்ணா,

தெற்கே மதுரைவரை வரேன். போடியிலே ஒரு கல்யாணம்.
திண்டுக்கல் அநேகமா இல்லைன்னுதான் இப்ப இருக்கு.

தனி மடல் பாருங்க.

said...

Akka, Need your e-mail id

said...

Thulasi Mam,

Let us meet.

- Suresh Kannan

said...

namma thodarbu enn...94444 53694

said...

விஜய்,

என்னோட மெயில் ஐடி

tulsigopal@xtra.co.nz
சுரேஷ் கண்ணன்,

//Let us meet. //

But Where?
Please let me know your phone #

ராம்கி,

நன்றி. குறிச்சுக்கிட்டேன்.

said...

//But Where?
Please let me know your phone //

Pl. check my personal mail.

said...

டீச்சர்...நீங்கள் பெங்களூரு வர்ரேன்னு சொன்னதுமே...இங்க அரசாங்கம் கவுந்திருச்சி...தமிழ்நாட்டுல என்ன நடக்குமோ தெரியலையே...

ஆயிரம் நடந்தாலும் உங்களை வரவேற்போம் என்று உறுதி கொள்கிறோம். வருக வருக என்று வரவேற்கிறோம்.

said...

//பெங்களூரு வர்ரேன்னு சொன்னதுமே...இங்க அரசாங்கம் கவுந்திருச்சி...

:-)

said...

ராகவன்,

ஒரு டீச்சருக்கு 'உண்மையான' மாணவன் என்கிறதை மறுபடி நிரூபிச்சதுக்கு ஒரு 'சபாஷ்'!

வந்துக்கிட்டே இருக்கேன்:-)

ஆமாம், தனி மடலிலாவது போன் # குடுக்கறது.

said...

ராம்கி,

சென்னையிலே இந்த விஷயம்( அரசாங்கம் கவுந்துன்னு என்னமோ சொல்றாங்களே அது)
பரவிருமோ?:-)

said...

எப்பங்க?

நான் ஒரு நாடோடியாச்சே.. நாடாறு மாசம் காடாறு மாசம்கறா மாதிரி.. ஓடிக்கிட்டேயிருக்கற ஆளாச்சே..

சரி.. நீங்க வர டேட்ட சொல்லுங்க.. மேனேஜ் பண்ணி இங்க இருக்க பாக்கறேன்..

என் ஃபோன் நம்பர் தனி மெய்ல அனுப்பறேன்..

see you..

said...

டி.பி.ஆர். ஜோ,

பிப்ரவரி 12க்கு வலைஞர்கள் எல்லாம் சேர்ந்து சந்திப்பதாக இப்போதைக்கு ஒரு ஏற்பாடு இருக்கு.
எதுக்கும் தனி மடல் அனுப்பறேன்.

said...

// ராகவன்,

ஒரு டீச்சருக்கு 'உண்மையான' மாணவன் என்கிறதை மறுபடி நிரூபிச்சதுக்கு ஒரு 'சபாஷ்'! //

நன்றி டீச்சர்.

// வந்துக்கிட்டே இருக்கேன்:-) //

வாங்க வாங்க

// ஆமாம், தனி மடலிலாவது போன் # குடுக்கறது. //

இன்னைக்கு வீட்டுக்குப் போய் அனுப்புறேன் டீச்சர்.

said...

ராகவன்,
//இன்னைக்கு வீட்டுக்குப் போய் அனுப்புறேன் டீச்சர்//

அப்ப 'மயிலுக்கு' மக்காச்சோளம் வாங்கி வைக்கவா?:-)

said...

வாங்க வாங்க.எத்தனை நாளக்கி இங்கண இருக்கப் போறதா உத்தேசம்?

உங்களுக்கு ஒரு தனி மயில் அனுப்பியிருக்கேன்.

said...

// அப்ப 'மயிலுக்கு' மக்காச்சோளம் வாங்கி வைக்கவா?:-) //

டீச்சர். மயிலார அனுப்பியிருக்கேன். நல்லா மக்காச்சோளமெல்லாம் கொடுத்து அனுப்புங்க. கண்டம் விட்டுக் கண்டம் பறந்து வரனுமே. ரொம்ப குளுருச்சுன்னா கொஞ்சம் சுடச்சுட சூப்பு வெச்சுக் குடுங்க.

said...

துளசியக்கா,

உங்கள் வரவு நல்வரவாகுக! :)

தனிமயில் வந்துக்கிட்டே இருக்கு...

வாங்க, பெங்களூருல கவுந்து கிடக்கற கவருமெண்ட்டை நிமிர்த்திடுவோம்!!!

இளவஞ்சி.

said...

இந்தியப் புரட்சி பயணத்திட்டமா? திட்டம் அறிவிச்ச உடனேயே பெங்களூர் அரசு ஆட்டம் கண்டுடுச்சு. இன்னும் என்னவெல்லாம் நடக்கப்போகுதோ? bon voyage.

//கொஞ்சம் சுடச்சுட சூப்பு வெச்சுக் குடுங்க//
என்ன இராகவன், மயிலாரையே சூப்பா வைக்க சொல்றீங்களே? :))

பிப்ரவர் 12 நடக்குற க்ளாசுல எனக்கு ஒரு ப்ராக்ஸி போட்டுடுங்க இராகவன். தருமி ஆளையே காணோமே? க்ளாசுக்கு ஒழுங்கா வரதில்லியா?

said...

//நீங்கள் பெங்களூரு வர்ரேன்னு சொன்னதுமே...இங்க அரசாங்கம் கவுந்திருச்சி...தமிழ்நாட்டுல என்ன நடக்குமோ தெரியலையே...//

அப்படின்னா கண்டிப்பா நீங்க ஆந்திரா பக்கம் வாங்க.. :-)

said...

////கொஞ்சம் சுடச்சுட சூப்பு வெச்சுக் குடுங்க//
என்ன இராகவன், மயிலாரையே சூப்பா வைக்க சொல்றீங்களே? :)) //

ஆகா கெளம்பீட்டாங்கய்யா..கெளம்பீட்டாங்க...மயிலாருக்குச் சூப்பு வெக்கச் சொன்னா...மயிலாரையோ சூப்பு வெக்கப் பாக்குறாங்க....அது ஆகாதுங்க. யாராலயும் ஆகாதுங்க.

said...

இந்தியாவுல அம்மன் திருக்கோலத்தில் தான் இறங்குவீங்களா?

said...

கோபி,

உண்மைக்குமே நான் இதுவரை 'ஹைதராபாத் ' வந்ததில்லை. பாவம், நாயுடுகாரு
எத்தனையோ தடவை அழைப்பு அனுப்பி அனுப்பி அலுத்துப்போய் பதவியை விட்டே
போயிட்டாரு:-)

இளவஞ்சி,

மயிலைப் பார்த்துட்டு பதில் அனுப்பி இருக்கேன்.

ராம்ஸ்,
நன்றி.

ப்ராக்ஸிக்கு என் கிட்டேயே சொல்லிரலாமே:-)

உங்க பக்கம் அரசாங்கத்தை ஆட்டம்காண வைக்கணுமுன்னா என் தம்பி நீங்க
அங்கே இருக்க எனெக்கென்ன பயம். உங்களுக்கே 'பவர் ஆஃப் அட்டர்னி' கொடுத்தாச்சு.

ராகவன்,

மயிலாருக்கு ஒண்ணும் ஆகாது. நான் இருக்கேன்லெ.

ராம்கி,

//இந்தியாவுல அம்மன் திருக்கோலத்தில் தான் இறங்குவீங்களா//

இல்லியா பின்னே? ஜனங்களுக்குப் பார்த்தவுடனே ஒரு பயபக்தி வரணுமா
இல்லையா? :-)

said...

ஆஹா., இதைப் பார்க்கலையே நான். எப்ப?., நல்லா மகிழ்ச்சியா என்சாய் பண்ணிட்டு வாங்க.

said...

மரம்,

நன்றி.

இன்னும் ரெண்டு நாள் இருக்கு.

said...

ரொம்ப சந்தோஷம் துளசி மேடம்.

உங்க பதிவுல உங்க mailid இல்லன்னதும் ஏக டென்ஷன் ஆயிட்டேன். என்னை மாதிரி ஒரு அழகான, அறிவான, துடிப்பான, etc., etc வான ஒரு வயசுப்பையனின் phone # ஐ, இப்படி லட்சோப லட்சம் பேர் படிக்கிற உங்களோட பதிவுல(எப்பவும் நம்மள பத்தி உண்மைய சொல்றப்போ யார்கிட்ட சொல்றோமோ அவங்களை பத்தியும் கொஞ்சம் உயர்வா சொல்லிடனும்!) போட்டா என்ன ஆகும்னு நீங்க யோசிக்கவே இலையேன்னு வருத்தப்பட்டேன். நல்ல வேளை, விஜய் கேட்டு நீங்க கொடுத்துட்டீங்க :) உங்களுக்கு தனிமடல் அனுப்பியுள்ளேன்.

அப்புறம்... எப்போ சென்னை வரீங்கன்னு சொன்னா அதுக்குள்ள சோப் சிற்பம் ரெடி பண்ணப் பார்க்கிறேன் :)

said...

அருள் குமார்,

இது பழைய போஸ்ட். எப்படி, யாராலே இதுக்கு திடீர்ன்னு 'உயிர்' வந்துச்சுன்னு தெரியலையேப்பா(-:

இப்ப ஊருக்கு வர்ற ப்ளான் இல்லையேப்பா(-:

said...

அப்படீங்களா :(

சரி விடுங்க. அடுத்தமுறை நீங்க வரப்போறதா சொல்றப்போ மறக்காம date போடுங்க மேடம்.

முடிஞ்சா, இந்த பழைய பதிவுலயே முதல்வரில date update பண்ணிடுங்க. என்ன மாதிரி யாரும் ஏமாறாம இருக்கலாம் இல்ல :)