அன்பார்ந்த வலைஞர்களே,
அனைவருக்கும் வணக்கம். உங்களுக்கெல்லாம் ஒரு மகிழ்ச்சியான செய்தி.நான் கிட்டத்தட்ட ரெண்டு மாசத்துக்கு வெளிநாடு போறேன். (யாருங்க அங்கே, நிம்மதிப் பெருமூச்சு விடறது?) அங்கிருந்து உங்க பதிவுகள் சிலதைப் பார்க்கச் சந்தர்ப்பம் கிடைக்கும். ஆனால் பின்னூட்டமெல்லாம் 'தமிழில்'போடமுடியுமான்னு தெரியலை. முடிஞ்சவரை ஆங்கிலத்திலே பின்னூட்டம் கொடுக்கலாம்.இல்லாட்டா,நம்ம பின்னூட்டத்தை எதிர்பார்த்து நிக்கறவங்களுக்கு ஏமாத்தமாயிராது?
இந்தப் பின்னூட்டங்களைப் பத்திச் சொல்றப்ப இன்னொரு விஷயம் ஞாபகம் வருது.நம்ம டிபிஆர் ஜோசஃப் அவர்களோட பதிவுலே, பின்னூட்டங்கள் போதுமான அளவு வரலையேன்னு அவர் கவலைப்பட்டதுக்கு ஆறுதலா நம்ம குமரன், 'பின்னூட்டக் கலையை வளர்த்தவங்களிலே துளசியும் ஒருத்தர்'னு புகழ்ந்துட்டார். படிச்சவுடனே ரொம்ப சந்தோஷமாஇருந்துச்சு. எதையாவது வளர்த்தவரை விசேஷம்தானே! 'ஆத்தா ஆடு வளத்தா, கோழி வளத்தா.நான் பின்னூட்டம் வளக்கறேன். இல்லையா ஆத்தா?'
ஆமாம், இதுவரைக்கும் எனக்குப் புரியாத விஷயம் இந்தப் பின்னூட்டத்துக்குப் பின்னூட்டம் வேணுமா,இல்லை வேணாமான்றதுதான்.
நம்ம வீடுதேடி வந்து, நாம கிறுக்கியதைப் படிச்சுட்டு,ஒருத்தர் அவரோட வேலை மெனக்கெட ஒருபின்னூட்டம், நல்லா இருக்குன்னோ, இல்லை நீ சொல்றது தப்புன்னொ சொல்றார். வந்தவங்களைவாங்கன்னு சொல்லி, அவுங்க சொன்னதுக்கு பதில் தரணுமா இல்லை வர்றவங்க எல்லாம் வந்துசொல்றதை எல்லாம் சொல்லிட்டுப் போங்க. நாலு நாள் கழிச்சு, 'பின்னூட்டம் இட்ட அனைவருக்கும்நன்றி'ன்னு சொல்லி முடிச்சுக்கணுமா?
இங்கேதான் வருது 'பின்னூட்டம் வளர்ப்புக்கலை'. சிலப்ப தனித்தனியாக, சிலப்ப கூட்டமா நன்றி சொல்லிக்கிட்டுவந்தேன். வளர்றது அதும்பாட்டுக்கு வளருது. ஆனா பின்னூட்டங்களொட எண்ணிக்கையைப் பார்த்து ஒரு பதிவோடதரத்தைச் சொல்ல முடியாது. எழுதுன பதிவு நமக்குத் திருப்தியா இருந்தா அது நல்ல பதிவு. தினம் 'கவுண்டரை'ப்பார்த்தமா, அதுலே நம்ம பதிவுக்கு ஒரு நாளுக்கு வந்த எண்ணிக்கையைக் கணக்கு எடுத்து அதை ரெண்டாலே வகுத்தோமான்னுஇருக்கணும். அதான் முணுக் முணுக்குன்னு நாமே பதிவுக்குப் போய் எதாவது வந்திருக்கான்னு பாக்கறமில்லே?
இப்ப நம்ம மெயில் ஐடியை செட்டிங்லே போட்டபிறகு அப்பப்ப வீட்டுவாசலைத் தேடி ஓடாம இருக்க முடியுது. பின்னூட்டம்வந்துச்சுன்னா நமக்கு 'போஸ்ட்மேன்' வந்துட்டுப் போறாருல்லெ!
'காலை எழுந்தவுடன் படிப்பு, பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு. மாலை முழுதும் விளையாட்டு'ன்னுமுண்டாசு சொன்னபடியேதான் இத்தனை நாள் இருந்துச்சு.
காலையிலே எழுந்து கையிலே ஒரு காஃபியோட வந்து கணினி திறந்து ஒரே படிப்பு. கூடவே கொஞ்சம் பாட்டுஅதுவும் கணினி மூலமாத்தான். மாலையானதும் விளையாட்டு. அதுவும் கணினியிலேதான்'னு நாள் போய்க்கிட்டு இருந்துச்சு. இனி கொஞ்ச நாளைக்கு இந்த ரொட்டீனை மாத்திக்கணும். கணினி மையம் திறக்கவே ஒம்போதுமணி ஆயிருதாமே(-:
என்னவோ சொல்ல ஆரம்பிச்சு எங்கியோ போயிட்டேன்.
ம்ம்ம்ம்ம்ம்........லீவுலே போறேன். நியூஸித்தொடர்அம்போன்னு நிக்குது. வந்துதான் மறுபடி விட்ட இடத்துலே இருந்து தொடரணும். டீச்சர் தொலைஞ்சான்னு மாணவர்கள் ஒரு ரெண்டு மாசத்துக்குச் சந்தோஷம் கொண்டாடிக்கலாம்.
இதோ போனேன், இதோ வந்தேன்னு போயிட்டு வந்து தாளிக்கிறேன்.
அப்ப... போயிட்டு வரட்டுமா மக்களே.
Tuesday, January 24, 2006
லீவு லெட்டர்
Posted by துளசி கோபால் at 1/24/2006 12:15:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
25 comments:
///போயிட்டு வரட்டுமா மக்களே. //
:(((((
சீக்கிரம் வருகன்னு சொல்லிக்கிறேன்.
சென்று வருக... வென்று வருக.. போட்டோக்கள் பல எடுத்து வருகன்னு சொல்லிக்கலாமா? (போன பதிவிலேயே Bon Voyage சொல்லியாச்சே!). சுவாமிமலை ஸ்டெர்லிங்கை மறந்துடாதீங்க. நம்மூர் பக்கம் போறதா இருந்தா மின்னஞ்சல் அனுப்பவும்!
மாமா நடிச்ச கதையும் நிலாச்சாரலில் பார்த்தேன்!
துளசியக்கா,
மாணவர்கள் கிட்ட சொல்லிட்டு போற நீங்க ,தம்பிமார்கள மறந்துட்டீங்களே! இனிய பயணம் அமைய வாழ்த்துக்கள்.
பயணம் இனிதே அமையட்டும்.
மாணவர்களே - Summer holidays!!! ;O)
ராம்ஸ்,
நன்றி. ஊர்ப்பக்கம் போனா கட்டாயம் மயில் அனுப்பறேன்.
மாமா நல்ல நடிகர்,இல்லே?:-)
ஜோ,
நம்ம வகுப்புலே தம்பிகளே மாணவர்கள். மாணவர்களே தம்பிகளாச்சே:-)
மார்ச் 9 உங்க சிங்கைதான்.
மேலதிகத் தகவலுக்கு ஜெயந்தியைக் கேட்கலாம்.
ஷ்ரேயா,
நன்றி.
நான் திரும்ப வர்றவரை கொஞ்சம் ஆஃபீஸ் வேலையைப் பாருங்க:-)
நீங்களே இப்பிடிக் காலை வாரி விடுறீங்களே!!! :O(
அதுசரி, ஆராய்ச்சி (மயிலிலே சொன்ன ஹைதர் கால சாமானுக்கு) முடிஞ்சா?
டி.ராஜ்,
நன்றி. உசிலம்பட்டி வழியாப்போறேன்.
http://peddarayudu.blogspot.com/2006/01/blog-post_23.html
நாட்டாமை என்ற பாப்பார நாய் வரிசையாக பாப்பான் நடிகர்களையே பிடிக்கும் என்று பதிவு போட்டு இருக்கிறது. படித்துப் பாருங்கள்.
//'ஆத்தா ஆடு வளத்தா, கோழி வளத்தா.நான் பின்னூட்டம் வளக்கறேன். இல்லையா ஆத்தா?'
:-) :-)
//அங்கிருந்து உங்க பதிவுகள் சிலதைப் பார்க்கச் சந்தர்ப்பம் கிடைக்கும். ஆனால் பின்னூட்டமெல்லாம் 'தமிழில்'போடமுடியுமான்னு தெரியலை
:-( :-(
//நம்ம வகுப்புலே தம்பிகளே மாணவர்கள். மாணவர்களே தம்பிகளாச்சே//
உண்மை. உண்மை. மறுக்க முடியாத உண்மை.
//ஆறுதலா நம்ம குமரன், 'பின்னூட்டக் கலையை வளர்த்தவங்களிலே துளசியும் ஒருத்தர்'னு புகழ்ந்துட்டார். //
அக்கா, உங்ககிட்டயும் இராமநாதன்கிட்டயும் நான் ஒழுங்கா கத்துக்கிட்டகு இந்தக் கலையைத் தான். :-) நம்ம மொதொ நட்சத்திரப் பதிவைப் பார்த்தாத் தெரியுமே :-)
//படிச்சவுடனே ரொம்ப சந்தோஷமாஇருந்துச்சு. எதையாவது வளர்த்தவரை விசேஷம்தானே! 'ஆத்தா ஆடு வளத்தா, கோழி வளத்தா.நான் பின்னூட்டம் வளக்கறேன். இல்லையா ஆத்தா?'//
கோபமாச் சொல்றீங்களா, ஜாலியாச் சொல்றீங்களான்னு தெரியலையே. தெரிஞ்சோ தெரியாமலோ மனசைப் புண்படுத்தியிருந்தா மன்னிச்சு விட்டுறுங்க. After all நான் உங்க தம்பிதானே.
//நம்ம வீடுதேடி வந்து, நாம கிறுக்கியதைப் படிச்சுட்டு,ஒருத்தர் அவரோட வேலை மெனக்கெட ஒருபின்னூட்டம், நல்லா இருக்குன்னோ, இல்லை நீ சொல்றது தப்புன்னொ சொல்றார். வந்தவங்களைவாங்கன்னு சொல்லி, அவுங்க சொன்னதுக்கு பதில் தரணுமா இல்லை வர்றவங்க எல்லாம் வந்துசொல்றதை எல்லாம் சொல்லிட்டுப் போங்க. நாலு நாள் கழிச்சு, 'பின்னூட்டம் இட்ட அனைவருக்கும்நன்றி'ன்னு சொல்லி முடிச்சுக்கணுமா?//
என்னைக் கேட்டாத் தனித்தனியா எல்லாருக்கும் அவங்கவங்களுக்கு உரிய மரியாதையைக் குடுத்து பின்னூட்டப் பதில் போடணும் அக்கா. எனக்கு அது தான் சரின்னு படுது. பதில் பின்னோட்டமே போடாம இருக்கிறதும் பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றின்னு மொத்தமா சொல்றதும் மெனக்கெட்டு பின்னூட்டம் போட்டவங்களுக்கு குடுக்கிற மரியாதையில்லை.
//அப்ப... போயிட்டு வரட்டுமா மக்களே.//
:-( நம்ம விண்மீன் வாரத்துல வர்ற பதிவுகளை எல்லாம் படிக்காம ஊருக்குக் கெளம்பிப் போயிடறிங்களே :-( ஹும் ஹும் ஹும்
பரவாயில்லை. நல்லா சவுக்கியமா ஊர் சுத்திப் பாத்துட்டு வந்து அந்தக் கதையெல்லாம் சொல்லுங்க. என்ன? :-)
ராம்கி,
நன்றி.
அதென்ன, எல்லாம் ஜாடைமாடையாத்தான் சொல்றதா?:-)
மகாகவி காளிதாஸ்னு ஒரு படம் சிவாஜி செளகார் நடிச்சது. அதுலே இது வேணுமுன்னா இது, அது வேணுமுன்னா
அதுன்னு எல்லாம் கண்ஜாடை கைஜாடையிலே செய்யறது மாதிரி இருக்கு:-)
குமரன்,
//:-( நம்ம விண்மீன் வாரத்துல வர்ற பதிவுகளை எல்லாம் படிக்காம ஊருக்குக் கெளம்பிப்
போயிடறிங்களே :-( ஹும் ஹும் ஹும்//
கவலைப்படாதீங்க. நிலவு எங்கே இருந்தாலும் நட்சத்திரத்தைப் பார்த்துக்கிட்டுத்தான் இருக்கும்:-)
டி ராஜ்,
நல்ல வாய்ப்பைக் கோட்டை விட்டுட்டீங்க:-)
டீச்சர் தொலைஞ்சான்னு மாணவர்கள் ஒரு ரெண்டு மாசத்துக்குச் சந்தோஷம் கொண்டாடிக்கலாம்.//
ரெண்டு மாசமாஆஆஆஆ?
அது ரொம்பங்க..
இருந்தாலும் பின்னூட்டம் போடுவீங்க இல்லே.. ஏதோ நீங்க மட்டுமாவது இருக்கீங்களேன்னு பாத்தேன்..
ஹூம்.. போண்டாம்னா கேக்கவா போறீங்க.. இங்கதான வரப்போறீங்க?
வாங்க..
துள்சி, சந்தோஷமா போய்ட்டு வந்து கதை சொல்லுங்க. அப்புறம் அந்த பின்னுட்ட மேட்டர், அது துளசி ஸ்டைல், யாரு என்ன
சொன்னாலும், நான் உட்பட கேலி செய்தாலும், அனைத்தையும் எம்பெருமான் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு தொடருங்க!
அப்படியே, போறப்ப பின்னுட்ட பெட்டிய மூடிட்டுப் போங்க, இல்லாட்டி போலிகள் தொல்லை மற்றும் இங்கிலீசுகாரங்க ஏதாவது விளம்பரம் ஒட்டிக்கிட்டு இருப்பாங்க
வருக டீச்சர் வருக. எல்லா மாணவர்களும் டீச்சரைத் தேடி வந்தா...இங்க டீச்சரே மாணவர்களத் தேடி வர்ராங்க. அடடா!
பின்னூட்டக்கலைய நானும் இன்னும் சரியாப் படிச்சுக்கலை. டீச்சர் கிட்ட இருந்து கொஞ்சம் படிச்சிருக்கேன்னு வசந்தன் சொன்னாரு. அதை இன்னமும் வளர்த்து விடனும். ஆனா அதுக்காக ஒவ்வொரு வார்த்தையையும் ஒவ்வொரு பின்னூட்டமா போட முடியாது. (இராமநாதன் கோவிச்சுக்கப் போறாரு.) இருந்தாலும் முடிஞ்ச வரைக்கும் செஞ்சு பாப்போம்.
துளசி,
கரூர் வரும்போது கண்டிப்பா ஈரோட் வருவீங்கன்னு நம்பறேன். நேரப் பற்றாக்குறையாகும் போல் தோணினால் ஒரு போன் பண்ணவும், நான் வந்து பார்க்கிறேன். தனி மெயிலில் முகவரி& போன் நம்பர் அனுப்பறேன்.
Bon Voyage
வந்துவிட்டு போங்கள் :)
துளசிதளம் காணாத நாள் என்ன நாளே :(
எங்கிருந்தாலும் எழுத முயலுங்கள். இராமநாதன் கூறுவதுபோல் படங்களை பதியுங்கள்.. அவற்றுக்கு மொழி தடையில்லை.
//ஆனா பின்னூட்டங்களொட எண்ணிக்கையைப் பார்த்து ஒரு பதிவோடதரத்தைச் சொல்ல முடியாது. எழுதுன பதிவு நமக்குத் திருப்தியா இருந்தா அது நல்ல பதிவு.//
தலைவி,
நச்சுன்னு சொன்னீங்க.
நல்லபடியா ஊருக்குப் போயிட்டு வாங்க. மேளதாளம், போஸ்டர், தோரணம், ஆர்ச்சுன்னு ஏற்பாடு பண்ணி வச்சிருக்கேன்.
நோட் பண்ணி வச்சுக்குங்க :-) பின்னால உதவும்
யப்பா 2 மாசம் நிம்மதி.. ( ச்சும்மா )
பயணம் இனிதே அமையட்டும்.
டிபிஆர் ஜோ,
பின்னூட்டத்தை நேரில் சொல்லலாமா?:-)
உஷா,
நானும் அதுதான் யோசிச்சுக்கிட்டு(!) இருந்தேன். நன்றி உஷா.
ராகவன்,
ராம்ஸ்கிட்டே சொல்லிட்டுப் போனா பின்னூட்ட அம்புகளாப் போட்டுத் தாக்கிடமாட்டாரு?
தாணு,
கரூர் வரலை(-:
அடுத்தமுறை வாய்க்குமான்னு பார்க்கறேன்.
மணியன்,
நன்றி. படங்கள் பதிய முயற்சிப்பேன்.
நிலா,
அதெல்லாம் 'நோட்' பண்ணி வச்சாச்சு. யார் என்ன சொன்னாலும் நீங்கதான் என் உ.பி.ச.:-)
ரசிகவ்,
கொஞ்சம் பொறுங்க. ரெண்டே மாசம்தான்.
அப்புறம் உங்க நிம்மதி ? போயே போச்:-)
பயணம் இனிதாக வாழ்த்துக்கள் ! மார்ச் "9" இன்னும் ரென்டு மாசம் இருக்கா ? சுத்திபுட்டு சுருக்க வாங்கோ!
சிங்.செயகுமார்,
நன்றி. அதெல்லாம் வந்துருவேன்.
எனக்கு என்னென்ன கொண்டு வரவேணும் என்கிற பட்டியலை மயிலாரிட்ட அனுப்புறேன். சரியா.. :O)
ஷ்ரேயா,
இதுக்குத்தான் பின்னூட்டப் பெட்டியை மூடச் சொன்னாங்க நம்ம உஷா.
உடனே அவுங்கப் பேச்சைக் கேக்காமப்போனேனே:-)
சரி அனுப்புங்க உங்க மயிலை.
Post a Comment