Monday, January 23, 2006

13 'கூடாது' கட்டளைகள்.


'காலை எழுந்தவுடன் படிப்பு'ன்ற நியமத்தை மாத்தமுடியாம கொஞ்சம் படிச்சுக்கிட்டு இருந்தப்பக் கண்ணிலே பட்டது,'பெண்கள் செய்யக்கூடாத 13 காரியங்கள்'!

1 இருட்டுவழியிலே தனியா நடந்துபோகக் கூடாது.( பார்ட்டிகளிலே கலந்துக்கிட்டு அர்த்தராத்திரியிலே தனியாநடந்துவர்றப்ப தவறான ஆளுங்க கிட்டே மாட்டிக்கிட்டு பலவிதமான அபாயங்களை நேரிடலாம்)


2. மனம், மொழி மெய்களால் துன்புறுத்தும் துணையுடன் இருக்கக்கூடாது.


3. பாதுகாப்பிலாம உறவு கொள்ளக்கூடாது ( இது குஷ்பு மேட்டர்தானே?)


4. ஜங்க் ஃபுட் அதாங்க சிறுதீனி பொழுதண்ணிக்கும் சாப்பிடக்கூடாது.


5. மயக்க மருந்து பழக்கம் கூடாது.


6. புகைப் பிடிக்கும் பழக்கம் கூடாது


7. ஹிட்ச் ஹைக்கிங் Hitchhike.(இதுக்குத் தமிழிலிலே என்ன சொல்றது?
ஊரூராச் சுத்தறதா?) கூடாது.


8.முன்பின் அறிமுகம் இல்லாதவங்களுக்கு நம்ம கார்லே 'லிஃப்ட்' கொடுக்கக்கூடாது.


9. மதுபானம் குடிச்சுட்டுக் காரோட்டிக்கிட்டுப் போகக்கூடாது.


10. கடை, உணவகம் இப்படி எங்கெல்லாம் பணம் கொடுத்துப் பெறும் சேவைகளில் குறைபாடு இருந்தால் அதை ஏத்துக்கிட்டுச் சும்மா இருக்கக்கூடாது. (Don't accept shoddy service. If service staff are rude, complain to a manager. Don't take bad service lying down - you are a paying customer and deserve to be treated well. If you don't make noise about bad service, you, and other customers, will be treated in the same manner again. )


11. கைத்தொலைப்பேசியை வீட்டுலே வச்சிட்டு வெளியே போகக்கூடாது.( இது எனக்காகப் போட்டுருப்பாங்களோ? )


12. கைப்பையைக் கார் இருக்கையிலே வச்சிட்டுப் போகக்கூடாது.


13. தானியங்கியிலே பணம் எடுக்க நமக்குன்னு உள்ள 'பின் நம்பரை'ATM PIN யாருக்கும் சொல்லக்கூடாது.


எல்லாம் சரிதான். இது ஆண், பெண் என்ற வேறுபாடே இல்லாம இரு பாலர்களுக்கும் பொருத்தம்தான். ஆனாஇதை என்னாத்துக்குக் 'பெண்களுக்கானது'ன்னு குறிப்பிட்டுச் சொல்லி இருக்காங்கன்னே புரியலைங்களே(-:


அவுங்களுக்கென்ன சொல்லிட்டுப்போயாச்சு, அகப்பட்டது நானல்லவா?உங்களுக்காவது புரிஞ்சதுங்களா?


ச்சும்மா ஒரு படம் வருது. அது என்னன்னு பார்த்துச் சொல்லுங்க.

22 comments:

said...

அக்கா,
படத்துக்கும் பதிவுக்கும் சம்பந்தம் புரியல எனக்கு.

//(Don't accept shoddy service. If service staff are rude, complain to a manager. Don't take bad service lying down - you are a paying customer and deserve to be treated well. If you don't make noise about bad service, you, and other customers, will be treated in the same manner again. )//
இதப் பாத்ததும் American Express தான் நினைவுக்கு வருது. ஒரு நாள் சாயங்காலம் நாலரைக்கு மவுண்ட் ரோடிலிருக்குற AM பாங்குக்கு போனோம். அஞ்சு மணிக்குத்தான் மூடணும்னாலும் நாலரைக்கு செக்கியூரிட்டி உள்ள உடல. பேங்க மூடிட்டாங்கன்னு திமிர் பதில்.

அப்போ என் சித்தப்பா ஒரே ஒரு கேள்வி கேட்டாரு. "I wud like to know if this is the official policy of AM to close at 430 when they are supposed to close at 5PM!?" அவ்வளவுதான், வங்கியின் R.M வந்து மன்னிப்பு கேட்டு எங்கள உள்ளே விட்டாங்க. இதே கதையை நான் Ford, SBI, தாஜ் லையும் முயற்சி பண்ணிருக்கேன். எல்லா தடவையும் வர்க் அவுர் ஆகியிருக்கு.

said...

அக்கா. ஹிட்ச்ஹைக்கிங்ன்னா ரோட்டுல நின்னு லிப்ட் கேக்கறது. அன்னியர்களுக்கு லிப்ட் கொடுக்கிறதும், லிப்ட் கேக்கிறதும் டேஞ்சர்ங்கறதால மினச்சொட்டாவில அது சட்டவிரோதம். யாருக்கும் லிப்ட் கொடுக்காதீங்க. யாராவது காட்டு நடுவில நின்னுக்கிட்டு இருந்தா உடனே 911 (அவசர போலீஸ்)க்கு போன் பண்ணி சொல்லுங்க. அவங்க வந்து தேவையான உதவி செய்வாங்கன்னு அறிவுறுத்துறாங்க. இந்த ஊரில அது நடக்கும். நம்ம ஊருல முடியுங்களா?

said...

ராம்ஸ்,

அது என்ன படமுன்னு சொல்லணும். அதுதான் சம்பந்தம்:-)

இங்கிலிபீஸுலே பேசுனா தனி மரியாதை வருமோ என்னவோ?


குமரன்,

நம்ம ஊர்லேயும் அன்னியர்களுக்கு லிஃப்ட் கொடுக்கக்கூடாதுதான். ஆபத்து அதுலெயும் வருதே.

said...

துளசி

இந்த 'கூடாது'கள் யார் போட்ட விதிகள்னு சொல்லலியே?

said...

நிலா,
இது எங்கூரு XTRA ஹோம் பேஜ்லே வர்ற லைஃப் ஸ்டைல்ஸ், ரிலேஷன்ஷிப் & ஃபேமிலி
பகுதியிலே படிச்சேன். இன்னிக்கு வந்திருக்கு.

இதோ அதோட லிங்க். நேரம் இருந்தா படிச்சுப் பாருங்களேன் !

http://xtramsn.co.nz/lifestyles/0,,12614-5173208,00.html

said...

இதெல்லாமே ரெண்டு பேருக்கும் பொருந்தாது. குறிப்பா...மொபைல பையில வெச்சுட்டுப் போறதும்...காருல வெச்சிட்டுப் போறதும். மத்ததெல்லாம் எல்லாருக்கும் பொருந்தும்.

இந்தியாவுலயும் யாருக்கும் லிப்ட் கொடுக்கக் கூடாது.

போன வருசம் பெங்களூருல பிரச்சனையாயிருச்சு. ஆபிஸ்லயிருந்து ஒருத்தன் லேட்டா பைக்ல வந்திருக்கான். பத்து மணின்னு வெச்சுக்கோங்களேன். வழியில ஒரு கால் சரியில்லாம கட்டையோட இருந்தது ரொம்பப் பக்கத்துல இருந்த இடத்துக்கு லிப்ட் கேட்டிருக்காரு. இவனும் பாவமேன்னு ஏத்தியிருக்கான். ஏறுன ஆளு கத்திய வெச்சு ஒரு எடத்துக்குக் கூட்டீட்டுப் போயிட்டான். அங்க ஏற்கனவே நாலு பேரு கூட்டாளிங்க இருக்காங்க. அங்க போய் அவனோட துணியெல்லாம் அவுத்து முண்டமாக்கீட்டானாம். தப்பிச்சு ஓடீரக் கூடாதே. கையில இருந்த மொபைலு,வாச்சு, காசு, ஏடிஎம் கார்டு, கிரெடிட் கார்டு எல்லாம் வாங்கீருக்காங்க. (பிடிங்கீருக்காங்க.) துணியில்லாம தப்பிக்க முடியாதுன்னு ராத்திரி எல்லாரும் தூங்கும் போது இவன் நைசா வெளிய வந்துட்டான். அங்க ஒருத்தர் உதவி செஞ்சி....விஷயம் போலீஸ் வரைக்கும் போயி....எல்லா சாப்ட்வேர் கம்பெனிலயும் இத நோட்டீஸ் போர்டுல ஒட்டி எச்சரிக்கை செஞ்சாங்க. அதே சமயத்துல நான் ஒரு நாள் ராத்திரி 12மணிக்கு வீட்டுக்குத் தனியா ஆபிசுல இருந்து பைக்ல (எட்டு மணிக்கு மேலன்னா கேப் புக் பண்ணலாம்.) போயி, அடுத்த நாளு மேனேஜரு கிட்ட திட்டு வாங்கிக் கட்டிக்கிட்டேன்.

said...

மனிதநேயம்கிறதே கேலிக் கூத்தாயிருச்சு...
இது பெங்களூரில மட்டும்தான் நடக்குதுன்னு நினைச்சீங்கன்னா தப்புங்கோவ்...
டெல்லி ஹைதராபாத் கொல்கத்தான்னு எல்லா ஊரிலயும் இருக்குது.

said...

அடக் கொடுமையே. ஊரூருக்கு நடக்குதா....வெளங்குனாப்புலதான்.

said...

ரெண்டு ஜெண்டருக்கும் பொதுன்னாலும், `பெண்களுக்கு’ன்னு போட்டாதானே மவுசு ஜாஸ்தி.
2 வது கட்டளை யாரைக் குறிக்குதுன்னு கொஞ்சம் விளக்கமா சொல்லலாமே- ஊகங்கள் பலவிதம்!!!!

said...

மதுபானம் குடிச்சுட்டுக் காரோட்டிக்கிட்டுப் போகக்கூடாது.//

அப்ப வீட்லருந்து குடிக்கலாம்கறீங்க..

நியூஜீ ஆளாச்சே, சொல்ல மாட்டீங்க?

மத்த 12லயும் கொஞ்சம் அடல்ஸ்ட ஒன்லீ வாசம் அடிக்குது?

இது போலி துளசி போட்டதில்லையே..:-(

said...

மேடம்,
படத்துல இருக்கறது மல்லிப்பூ மாதிரி இருக்கு. சரி அதுக்கும் பதிவுக்கும் என்ன சம்பந்தம்??

said...

ராகவன்,ப்ரதீப்

எல்லாம் கவனமா இருங்கப்பா.காலம் ரொம்பவே கெட்டுக் கிடக்கு(-:

தாணு,

இது பெண்களுக்குன்னு போட்டுருந்தாலும் ஆண், பெண் இருவருக்கும் பொருந்தும்தான்.
எத்தனைபேர் ராட்சசியான மனைவிகிட்டே மாட்டிக்கிட்டுக் கஷ்டப்படறாங்க தெரியுமா?

வேணுமுன்னா கோபால்கிட்டே கேட்டுப் பாருங்க:-)

என்னங்க டிபிஆர் ஜோ,

அட தேவுடா, அடல்ட்ஸ் வாசம் வீசுதா?

ஒரு ச்சின்ன சந்தேகம். நாமெல்லாம் இன்னும் அடல்ட்ஸ் இல்லையாமா?:-)

கைப்புள்ளெ,

வாங்க வாங்க. சொகமா இருக்கீகளா?

இன்னும் யாராவது பதில் சொல்லட்டுமுன்னு இருக்கேன். அது மல்லிப்பூ இல்லைங்க.

said...

ஏதோ தாவர வகைனு தெரியுது. எதாச்சும் க்ளூ குடுத்தா நல்லாருக்கும்

said...

அப்படி என்றால் ஆண்கள் செய்யலாமா?

said...

இது டாண்டலியான்(Dandelion) தானே??

said...

//கடை, உணவகம் இப்படி எங்கெல்லாம் பணம் கொடுத்துப் பெறும் சேவைகளில் குறைபாடு இருந்தால் அதை ஏத்துக்கிட்டுச் சும்மா இருக்கக்கூடாது.//

இப்பிடி நெனச்சித்தானுங்க இங்க ஹைத்ராபாத் ஹைடெக் சிட்டில சைபர் டவர்ஸ்னு ஒரு பிரபல கட்டிடம் நெறைய மென்பொருள் நிறுவனங்க இருக்குற இடம். அதுல வின்டோஸ்னு ஒரு உணவகம். ஒருநாள் அங்க சாப்பிடப் போனப்ப சேவை சரியில்லைன்னு காட்டு கத்தல் கத்தி கூட்டத்தை கூட்டிட்டேன். அப்புறம் மன்னிப்பு கேட்டு கொஞ்ச நேரத்துல கேட்ட உணவு வகையை கொண்டு வந்து வச்சாங்க.

அடுத்தநாள் முழுவதும் எங்க வீட்டுல வயித்தப் புடிச்சிக்கிட்டு 'இருக்க' வேண்டியதாயிடுச்சி.

அப்றம் கொஞ்சநாள் கழிச்சி போய் பாத்தா வேற ஆளுங்க நடத்திக்கிட்டு இருக்காங்க.. என்ன விஷயம்னு விசாரிச்சா சில பெரிய தலைங்களுக்கும் இந்த மாதிரி நடந்து அவங்க இவங்கள போட்ட போடுல வேற ஊரப்பாக்க போயிட்டாங்கன்னு சொன்னாங்க..

எப்படியோ நல்லது நடந்தா சரி...

said...

///இது டாண்டலியான்(Dandelion) தானே??///

வெங்காயப்பூ இது மாதிரியேதான் இருக்கும்.

said...

//வெங்காயப்பூ இது மாதிரியேதான் இருக்கும்//

கூடாதுனு கட்டளை போட்ட வெங்காயம் யாருடானு கேக்கறாங்களா அக்கா??

said...

//மனம், மொழி மெய்களால் துன்புறுத்தும் துணையுடன் இருக்கக்கூடாது//
தொட்ட தொண்ணுருக்கும் 'இன்ஸ்டண்டா' கதைய (கதைக்கு உண்மையான பொருளை அப்படியே இங்கு கொள்ள வேண்டும்) கைல வச்சுருக்கிறதுக கூட இருக்கலாமா?., இல்ல.... போய்யா.... பொடி டப்பான்னு போய்கிட்டே இருக்கலாமா?. எனக்கு தெரிந்த ஒருவர்., அவர் மனைவி அலுவலகத்தில் இருக்கும்போது மதியம் தொலை பேசவில்லையெனில் (வழக்கமாக பேசுவார்)., அடடே!., சொல்லாமயே செஞ்சுருச்சு போலைருக்குன்னு புலம்புவார்...(செஞ்சுருச்சு - விவகரத்து). அந்தப் பயத்துலயேதானாப்பா இதுகலயெல்லாம் வச்சிருக்கணும்!!!.

said...

என்னார்,

women லேயே men வந்துருதுல்லே, அதனாலே ஆண்களும் செய்யக்கூடாது. இப்ப
எல்லாத்துலேயும் கவனம் கொஞ்சம் அதிகமாத்தான் தேவைப்படுது.

கைப்புள்ளெ,

நம்ம முத்து எப்படி 'டக்'ன்னு புடிச்சுட்டாரு பார்த்தீங்களா? அட வெங்காயம்:-)

இது வெங்காயப்பூ தாங்க.

முத்து,

நல்ல கூர்மையான பார்வை.

கோபி,

நம்ம உரிமைகளை விட்டுக் கொடுக்கக் கூடாதுதான். ஆனா அதுக்கும் 'இடம்,பொருள், ஏவல்
இருக்குல்லே. வூட்டுலே உரிமை பேசிருவீங்களோ? இல்லே, பேசத்தான் முடியுமாங்கறேன் :-)))


மரம்,

வருகைக்கு நன்றி. அந்த 'சொல்லாமலே செஞ்ச' ஜோக் உண்மைக்குமே தூள்!

said...

//வூட்டுலே உரிமை பேசிருவீங்களோ? இல்லே, பேசத்தான் முடியுமாங்கறேன் :-)))//

வூட்ல எல்லாம் நாம கைப்புள்ள (வலைஞர் அல்ல - வின்னர் பட வடிவேல்) மாதிரி "பேச்சு பேச்சா இருக்கனும்! இந்தக் கோட்டத் தாண்டி நானும் வரமாட்டேன், நீயும் வரப்படாது"ன்னு சொல்லியில்ல ஆரம்பிப்பம்!

said...

கோபி :-)))))))))))))))