'இவுங்க மூணுபேரும் 'ட்ரூ' குடும்பத்தைச் சேர்ந்தவங்க'. 'அன்றலர்ந்த பூ'ன்னு எதோ ஒரு உவமை சொல்வாங்க பாருங்க ,அப்படி பளிச்சுன்னு இருந்தாங்க. மேட்டுக்குடிக்கே உரிய பார்வை, கம்பீரம், நடை எல்லாம் பொருந்தியிருந்துச்சு.'வீடு மாத்திக்கிட்டுப் போறாங்க. அதாலே கொஞ்சநாள் இங்கே இருக்கட்டுமுன்னு இவனுங்களை விட்டுட்டுப் போயிருக்காங்க'ளாம்.
அடுத்த அறையிலே ஒருத்தனுக்கு நல்ல தூக்கம். கை காலையெல்லாம் 'பப்பரப்பா'ன்னு நீட்டிக்கிட்டு இருக்கார்.தாய்தகப்பன் வெளிநாடு போயிருக்காங்களாம். அதனாலே 'ஹாஸ்டல்' வாசம்.
வெளியே தோட்டத்துலே ஒரு பெரியவர் உக்கார்ந்து, வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்தார். அங்கே இருக்கற ஹாஸ்டல் வாசிகளிலே இவர்தான் ரொம்பவே வயதானவராம்.
அடுத்தடுத்த அறைகளில் இன்னும் பலர். சிலபேருக்கு நம்மைப் பார்த்தவுடனே முகத்தில் ஒரு சிரிப்பு. நட்புணர்வோடு கை நீட்டுனாங்க சிலர்.
ஹாலில் ஒரு டி.விப் பெட்டி. மெல்லிசான சத்தத்திலே ஓடிக்கிட்டே இருக்கு. 24 மணிநேரமும் இப்படித்தானாம். பசங்க நேரங்கெட்ட நேரத்துலே டி.வி. பார்த்துக்கிட்டு இருக்காங்களே. அப்ப 'மிட்நைட் மசாலா' கூடப் பாப்பாங்கதான்.
அடக் கடவுளே!
அறையிலேயே இருந்தா சாப்பிட்டுத் தூங்கி, டிவி பார்த்துன்னு 'போர்' அடிச்சுராதா? வெளியிலே ஒரு 'வாக்' போய்வரக்கூடாதா? முடியுமான்னு கேட்டதுக்கு, 'தாராளமாப் போய் வரலாம். எல்லாரையும் ஒரே சமயத்துலே வெளியே அனுப்ப முடியாது. அவுங்கவுங்களுக்குத் தனி நேரம். கூட்டமாப் போனா சிலசமயம் வேண்டாத வாக்குவாதம் வந்துசண்டை வந்துரும்.'
"எத்தனைபேர் இப்ப இருக்காங்க? ஒரே ஒரு பில்டிங்தானா? இல்லே ......"
"ரெண்டு ஹாஸ்டல் பில்டிங் இருக்கு. சாப்பாட்டு நேரம்தான் கொஞ்சம் வித்தியாசம். ச்சும்மா ஒரு 15 நிமிஷம்தான்.ஒரே சாப்பாடுதான். பரிமாற ஆள் ஒண்ணுதான் இருக்கு. 20 பேர் ஒரு பில்டிங்லே தங்க வசதி இருக்கு. "
"உடம்பு சரியில்லாம இருக்கறவங்களுக்குக் கவனிப்பு எப்படி? "
" எதாவது மருந்து கொடுக்கணுமுன்னா சொல்லுங்க, சாப்பாட்டு நேரத்துலே கொடுத்துரலாம்"
" எங்க பையனுக்குச் சக்கரை வியாதி. அதான்......."
" தினம் ஊசி போடணுமா?"
" அதெல்லாம் இல்லைங்க. இன்சுலின் அளவு குறைஞ்சு போறதாலே சாப்பாடு நின்னு செரிக்கரதில்லை. அதனாலேபசி கூடுதல். மத்தவங்களுக்கு மூணு வேளைன்னா அவனுக்கு ஆறு வேளை சாப்புடணும்."
" அது பரவாயில்லை. நாங்க சாப்பாடு கூடுதலாக் கொடுப்போம். எதாவது ஸ்பெஷல் சாப்பாடுங்களா?சொல்லுங்க. நாங்க வாங்கிடறோம்"
" ஆமாங்க,ஸ்பெஷல்தான். நாங்களே சாப்பாடெல்லாம் வாங்கிக் கொடுத்துட்டுப் போறோம். அப்புறம் ஃப்ரெஷ் சாப்பாடு வகைஒண்ணு போடணும். அதுக்கும் நாங்களே ஏற்பாடு செஞ்சுடறோம். "
" அப்பச் சரிங்க. நீங்க கவலைப்படவேணாம். நாங்க நல்லா கவனிச்சுக்குவோம். உங்க குடும்ப டாக்டர் விலாசமும்,ஃபோன் நம்பரும் குடுங்க. எதாவது தேவைன்னா நாங்களே கூட்டிக்கிட்டுப் போய் காமிச்சிருவோம். "
" நல்லதுங்க. ஹாஸ்டல் ஃபீஸ் எவ்வளோன்னு சொல்லுங்க."
" ஒரு நாளைக்கு ----- இவ்வளோன்னு கணக்குங்க. மூணு வாரத்துக்கு மேலே தங்குறவங்களுக்கு ஒரு 10 சதம் கழிவுதர்றோம்"
"ஹாஸ்டலைச் சுத்திக் காமிச்சதுக்கு நன்றி. நாங்க ஊருக்குப் போகறதுக்கு ரெண்டு நாளைக்கு முந்தியே, பையனைக்கொண்டுவந்து விட்டுருவோம். பொட்டியெல்லாம் அடுக்கறப்பப் பக்கத்துலே நின்னு பார்த்துக்கிட்டு இருந்தால் பாவமாஇருக்குமில்லையா?"
" உண்மைதான். அப்பா அம்மா நம்மளைக் கூட்டிட்டுப் போகலையேன்னு இருக்கும்தான். நீங்க கவலைப்படாமப் போய்வாங்க.இதுதான் எங்க மின்னஞ்சல் விலாசம். அப்பப்ப மெயில் செய்யுங்க. இல்லேன்னா ஃபோன் செஞ்சாலும் சரி"
திரும்பி வர்ற வழியெல்லாம் இதைப் பத்தியே பேசிக்கிட்டு வந்தோம். நகரத்தோட சந்தடியெல்லாம் இல்லாமஅமைதியா இருக்கற இடம்தான். நம்ம வீட்டிலிருந்து ஒரு 20 நிமிஷக் கார் பயணம். ஒரு மாசமா அலைஞ்சுஇந்த ஹாஸ்டலைக் கண்டு பிடிச்சோம். பேரு கூட அழகா இருக்கு,'செர்ரி க்ரொவ் கேட்டரி'
வார்டனும் அன்பாப் பேசறாங்க. தங்கி இருக்கற பசங்களும் அவங்களைப் பார்த்ததும் எவ்வளோ சந்தோஷப் பட்டாங்கன்னுதான் பார்த்தமே.
ஒரே ஒரு எண்ண்ம்தான். மத்த பசங்க நல்ல 'காந்தானி'யா இருக்காங்க. நம்ம பையன் மட்டும் மட்டமா? இவனும்மேட்டுக்குடி மைனர்தான். முடி நீளம். தினமும் தலை சீவிக்க மாட்டான். அதான் கொஞ்சம் சிக்கு பிடிச்சுக் கிடக்கான்.இமயமலையிலே இருக்கவேண்டிய சாமியார் மாதிரி ஜடாமுடி.
சீப்பு வச்சா வலிக்குது போல.அதான் இஷ்டப்படறதில்லை. ஒருதடவை சலூன்லே 'ஹேர்கட்' செஞ்சுக்கட்டும். அப்புறம் நல்லா ஆயிருவான்.
ஆச்சு.
இப்பப் பட்டுப்போல இருக்கு முடி. விட்டுட்டா மறுபடி சிக்கு விழுந்துரும். தினமும் ரெண்டு நேரம் சிரமம் பாக்காம சீவி விட்டுரணும்.
வாடா, கோபால கிருஷ்ணா. அப்பா கிட்டே தலை சீவிக்கோ. ஹாஸ்டலுக்குப் போறப்போ நல்லா 'ஜம்'னுஇருக்கணும். இல்லேன்னா மத்த பசங்க சிரிக்கமாட்டாங்களா?
'சீவி முடிச்சுச் சிங்காரிச்சு.......'ன்னு பாடிக்கிட்டே சீவறாரு அப்பா!
Thursday, January 12, 2006
சீவி முடிச்சு சிங்காரிச்சு.....
Posted by துளசி கோபால் at 1/12/2006 04:04:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
:O)
அதெப்படி அநேகமான "மைனர்"மாரெல்லாம் மேஜரா இருக்கிறாங்க துளசி?
நீங்க பாட்டுக்கு பூ படத்த போட்டுட்டீங்க. கோபாலகிருஷ்ணன பத்தி தெரியாத புதியவங்க, இது என்ன திடீர்னு முடிஞ்சி போச்சே கதைன்னு நினைச்சிக்குவாங்க :))
அன்பு அம்மா,
இறுதியில் பட்டை போட்டுவிட்டீர்கள் போலுள்ளதே?
எனக்கு ஒரு நேரம் வருகிறது. அடுத்த நேரம் மறைந்து விடுகிறது.
டி ராஜ்,
நல்லாத்தான் இருக்கு அங்கே சுற்றுப்புறம் எல்லாம்.
பேசாம நானும் அங்கே போய் தங்கிக்கலாமுன்னு இருக்கேன்:-)
ஷ்ரேயா,
இவரு மல்லுவேட்டி மைனராச்சேப்பா:-)
முகமூடி,
அப்படிங்கறீங்க?
துளசியைப் பத்தித் தெரிஞ்சவங்களுக்கு ஜி.கே.யைப்பத்தித் தெரியாம இருக்குமா?
ஞானவெட்டியாரே,
எனக்கும், இந்தப் பட்டை,அங்கே ப்ளாக்லே அப்பப்பக் காணாமப்போய் இங்கே என் நெத்தியிலே வந்துருது:-)
ஒரு இடத்தில் மறைந்தால் இன்னொரு இடத்தில் தோன்றுவதன் ரகசியம் என்னவோ?
கோபாலகிருஷ்ணன பத்தி தெரியாத புதியவங்க, இது என்ன திடீர்னு முடிஞ்சி போச்சே கதைன்னு நினைச்சிக்குவாங்க :)) //
என்னைய மாதிரி ஆளுங்களுக்குன்னே போட்டா மாதிரி இருக்கு..
யாருங்க இந்த GK? எனக்குன்னு ஒரு தனி பதிவு போடுங்களேன்..
எனக்கு ஒரு நேரம் வருகிறது. அடுத்த நேரம் மறைந்து விடுகிறது.//
ஏன் அப்படி.. என் 'என்னுலகம்' பதிவிலும் இப்படித்தான் கண்ணாமூச்சி காட்டுகிறது. என் 'கதையுலகம்' பதிவில் இந்த ப்ராப்ளம் இல்லை..
டீச்சர் கதைய மொதல்ல படிக்கிறப்போ...ரொம்ப சாதாரணமா இருந்தது. என்னடா சொல்ல வர்ராங்க டீச்சருன்னு யோசிச்சுப் பாத்தேன். கதைய முடிச்சப்புறம் புரிஞ்சி போய் மறுபடியும் படிக்கும் போது சூப்பரா இருக்கு. குறிப்பா கீழ குடுத்திருக்குற வரிகள்.
// சிலபேருக்கு நம்மைப் பார்த்தவுடனே முகத்தில் ஒரு சிரிப்பு. நட்புணர்வோடு கை நீட்டுனாங்க சிலர்.//
// எல்லாரையும் ஒரே சமயத்துலே வெளியே அனுப்ப முடியாது. அவுங்கவுங்களுக்குத் தனி நேரம். கூட்டமாப் போனா சிலசமயம் வேண்டாத வாக்குவாதம் வந்துசண்டை வந்துரும்.'//
ம்ம்...ம்..ம் ..இது ஒண்ணும் ஆவுறதுக்கு இல்லீங்க... :-)
ஏங்க தருமி இப்படிச் சொல்லிட்டீங்க?
" அது பரவாயில்லை. நாங்க சாப்பாடு கூடுதலாக் கொடுப்போம். எதாவது ஸ்பெஷல் சாப்பாடுங்களா?சொல்லுங்க. நாங்க வாங்கிடறோம்"
" ஆமாங்க,ஸ்பெஷல்தான். நாங்களே சாப்பாடெல்லாம் வாங்கிக் கொடுத்துட்டுப் போறோம். அப்புறம் ஃப்ரெஷ் சாப்பாடு வகைஒண்ணு போடணும். அதுக்கும் நாங்களே ஏற்பாடு செஞ்சுடறோம். "
துளசிக்கா அந்த ஹாஸ்டல் எங்க இருக்குன்னு சொல்லலாமா?
சிங் செய குமார்,
இங்கேதான் கிறைஸ்ட்சர்ச்லே இருக்கு.
கிளம்பி வாங்க. உங்களை சேர்த்துறலாம்:-)
Post a Comment