Monday, April 25, 2005

எல்லாம் விதி!!!!

உங்ககிட்டே சொன்னாப்புலெ 'கிரிவலம்' பாக்கலாமுன்னு படத்தைப் போட்டேன்.
ச்சீன்னு போயிருச்சுப்பா!

இதுவும் ஒரு ரீ மேக் படம்தான்.

அது ஹிந்திப் படம். 'ஹம்ராஸ்'



பாபி டியோல்,அக்ஷய் கன்னா, அமீஷா படேல் நடிச்சது. இந்த ஹிந்திப் படமே
ஒரு இங்கிலீஷ் படத்தோட 'தேசி வர்ஷன்'தான்! ' எ பெர்ஃபெக்ட் மர்டர்'ன்னு எங்கியோ
படிச்சேன்!

அது போகட்டுமுன்னு பார்த்தா, கதாநாயகி பேரு ஹிந்திப் படத்திலும் ப்ரியா!

இப்படிக்கூட பேருக்குப் பஞ்சமா?

இது பல பாஷை தெரிஞ்சிருக்கறதாலே வர்ற கஷ்டம் !!! எங்கே போய்ச் சொல்லுவேன்?

நடிச்சவுங்க யாருன்னு சொல்லலையே, ஷாம் & ரிச்சர்ட்( அஜீத்தோட மச்சானாம்!)இப்பெல்லாம் ரீ மேக்குன்னா நிஜமான ரீ மேக்தான். கருத்து, கருப்பொருள்ன்னு எடுத்துக்காம
ஸீன் பை ஸீன் அப்படியே எடுத்துடறாங்க! மூளைக்கு வேலை மிச்சம். இல்லே?

வேணாமய்யா, வேணாம்.

கொஞ்ச நாளைக்குப் படமெல்லாம் வேணாம். சும்மா இருப்பதே சுகம்னு இருக்கப்போறேன்!

2 comments:

said...

அக்கா,

சே! ஏன் இந்த மாதிரி படங்களை பார்த்து கஷ்டப்படுகிறீர்களோ.எனக்கே உங்க நிலமைய நினச்சி நினச்சி நைட்டெல்லாம் தூக்கம் வரல. பேசாம சிங்கப்பூரிலயிருந்து உங்களுக்கு பட சிடிக்களை அனுப்பலாமான்னு என்னை யோசிக்க வைக்குது.

அங்கே லைப்ரரிலே எல்லாம் படம் கிடைக்காதா?

said...

தம்பி விஜய்,

இதெல்லாமெ நம்ம லைப்ரரிக்கு வர்ற படங்கள்தான். தெரிஞ்ச நடிகர்கள் படமும்
வந்துக்கிட்டுதான் இருக்கு. அதைப் பத்தி எல்லாருக்கும் தெரியுமேன்றதாலெ அதைப்
பத்தி நான் எழுதறது இல்லை!

அதுவுமில்லாம, வர்ற வி.சி.டிங்க ஒழுங்கா வேலை செய்யுதான்னு செக் பண்ணணுமே!

கஷ்டப்படாம நல்லாத் தூங்கிட்டு, இந்த வார நட்சத்திர வேலையை நிம்மதியாச்
செய்யுங்க!

என்றும் அன்புடன்,
துளசி.