Saturday, December 25, 2004

ஒலியும் ஒளியும்- சிவாஜி!!!!!!!!

இன்னைக்கு நாள் ரொம்ப 'கொயட்!' கடைகண்ணி ஏதும் இல்லை! தெருவெல்லாம் அனக்கம்
இல்லாமக் கிடக்குது!இங்கெ நம்ம ஊர் தொலைக்காட்சியிலே இன்னைக்கு விளம்பரங்களே கிடையாது! அதனாலே ஒரு மணி நேரம்
போடுற நியூஸ்கூட 15 நிமிசத்துலெயே முடிஞ்சிடுச்சுன்னா பாருங்க, எவ்வளோ விளம்பரங்கள் வருதுன்னு!

பண்டிகைநாள் மாதிரியே இல்லை! அட் லீஸ்ட் நேத்துவரைக்குமாவது எல்லா இடமும் 'கலகல'ன்னு
இருந்துச்சு!

இன்னைக்கு 'ஸ்பெஷலா' என்ன செய்யலாம்ன்னு யோசிச்சுகிட்டு இருந்தப்ப, ஊருக்குப் போயிட்டு
'ஹாங்காங்' வழியாத் திரும்பி வந்திருந்த நண்பர் ( முந்தாநாள்தான் வந்தாராம்!) 'அங்கே டிவிடி 20
ஹாங்காங் டாலருக்குக் கிடைக்குது. நான் கொஞ்சம் பழைய படங்கள் (மூணு படம் ஒரு டிவிடிலே)
அப்புறம் வெறும் பாட்டுங்கன்னு வாங்கிட்டு வந்தேன். நீங்க பாத்துட்டுத் தாங்க'ன்னு சொன்னார்.

மொத்தம் 7. 'எல்லாத்தையும் வேணா வச்சுட்டுப் போட்டா'ன்னு கேட்டார். சரின்னு சொன்னா ரொம்ப
'க்ரீடி'யா இருக்குமேன்னுட்டு, 'ஜஸ்ட் ரெண்டு பாட்டு டிவிடி மட்டும் கொடுங்க. படங்களை அப்புறமாப்
பாத்துக்கறேன்'னு சொன்னேன்.

சிவாஜி-50 சிறந்த பாடல்கள் ( ப்ளாக் & ஒயிட்)

எஸ்.பி.பி பாடுன 50 பாடல்கள் இன்னோன்னு!

கொஞ்சநேரம் கழிச்சு, இன்னோரு நண்பர் வந்தப்ப, நம்ம வாய் ச்சும்மா இருக்குமா? இந்த மாதிரி ரெண்டு
டிவிடி கிடைச்சிருக்குன்னதும், 'எனக்கு ஒண்ணு தாங்க. நான் பார்த்துட்டுத்தரேன்'னார். எது வேணும்ன்னு
கேட்டதுக்கு எஸ்.பி.பி எடுத்துக்கறேன்னுட்டு எடுத்துக்கிட்டுப் போயிட்டார். நான் அதுதான் மொதல்லே
பாக்கணும்ன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன். பண்டிகைநாள், 'குட் வில் டுவர்ட்ஸ் மென்'னாக இருக்கட்டும்.
நாம அப்புறம் பார்த்தாப் போச்சு!

கொஞ்ச நேரத்துலே அந்த நண்பர் ஃபோன்லே கூப்பிட்டு, அந்த டிவிடிலே பாட்டு இல்லிங்க. ஏதோ
'கம்ப்யூட்டர் பேக் அப் டிஸ்க்'தான் இருக்கு. தவறுதலா வச்சிட்டுட்டாங்க போல. நாளைக்குத் திருப்பிக்
கொண்டு வரேன்னார்!!!!!

நான் ஆஹான்னுட்டு, சிவாஜி பாடல்கள் பார்க்க ஆரம்பிச்சேன். 50 பாட்டு முடியாது! இன்னைக்கு ஒரு 15
பார்க்கலாம்ன்னு ப்ளான்.

பாலும் பழமும், படிக்காத மேதை, பழனி, பலே பாண்டியா,விடி வெள்ளி,ஞான ஒளி, கை கொடுத்த தெய்வம்,
பார் மகளே பார், பாகப்பிரிவினை, மஹா கவி காளிதாஸ் இப்படின்னு பாட்டுங்க வந்துக்கிட்டு இருந்தது!

எல்லாமே கறுப்பு வெள்ளைப் படங்கள்தான். ஆனா நல்லா 'பளிச்'சுன்னு இருந்தது.

இதையெல்லாம் பார்த்துக்கிட்டு இருந்தப்ப கவனிச்சது இது.....

அந்தக் காலப் படங்களிலே,

கதாநாயகிங்க கொஞ்சம்(!) குண்டா இருந்தாலும் அழகான முகத்தோட இருக்காங்க! களையான முகம்!
சரோஜா தேவி, சாவித்திரி, விஜய நிர்மலா,தேவிகா, செளகார் ஜானகி, ஜி.வரலட்சுமி இப்படி! அப்பல்லாம்
சினிமாவுலெ நடிக்க 'அழகு அவசியம்!'

ஆறு வர்ற 'சீன்'லே ஆத்துலே நிஜமாவே தண்ணி நிறைய ஓடுது!

டி.எம்.எஸ். குரல்தான் சிவாஜிக்கு'மேட்சிங்'கா இருக்கு. ஒரு படத்துலே ( விடிவெள்ளி) ஏ.எம்.ராஜா குரல்,
பொருத்தமாவே இல்லே!

ஈகோ இல்லாம ரெண்டு மூணு கதாநாயகர்ங்க சேர்ந்து நடிச்சிருக்காங்க. பழனின்னு ஒரு படம். நாலு அண்ணன்
தம்பிங்களாம்( பாட்டுலேயெ இந்த விவரம் இருக்கு!) சிவாஜி, எஸ்.எஸ்.ஆர்,முத்துராமன், இன்னொருத்தர்
யாருன்னு சரியாத் தெரியலை. 'க்ளோஸ் அப்' அவருக்கு வைக்கலை! நானும் உத்து உத்துப் பாத்துக்கிட்டு இருந்தேன்.
ஊஹூம்... அசோகன் மாதிரி தெரியுது! ஒருவேளை வேற யாரோ!

'மஹாகவி காளிதாஸ்'லே 'யார் தருவார் இந்த அரியாசனம்?' பாட்டு. நகை நட்டெல்லாம் ச்சும்மாத் 'தகதக'ன்னு
ஜொலிக்குது! எல்லாம் 'கல்லு'வச்ச நகைங்க! இந்தப் படத்துலே 'காளி அம்மன்' நடனம் ஆடறாங்க.க்ளோஸ் அப் இருந்தும்
யார்ன்னு தெரியலை, ஆனா நல்லா ஆடறாங்க! அந்த கோயில் 'செட்'டும் அட்டகாசமா இருக்கு! நல்லாக் கவனிச்சுப்
போட்டிருக்காங்க!

குரு தட்சிணைன்னு ஒரு படம். இதுலே நம்ம 'அம்மா' ஜோடி! நல்லா அழகா, அம்சமா இருக்கங்க! இப்ப 'அம்மா'
அதைப் பார்த்தாங்கன்னா அவுங்களுக்கு எப்படி இருக்கும்? வயசாறதே ஒரு கொடுமை!!! ச்சும்மாவா சொன்னாங்க
அவ்வைப் பாட்டி, கொடிது கொடிது முதுமை கொடிதுன்னு! எப்படி இருந்தவுங்க...ஹூம்

படத்துலே நாயகன் 'பணக்காரன்'னா, 'நைட் ட்ரெஸ்'மேலே ஒரு ஸாட்டீன் 'ட்ரெஸ்ஸிங் கவுன்'போட்டுக்கணும்!

'கலாட்டாக் கல்யாணம்' படப் பாட்டுலே நாகேஷ் இருக்கார். பழைய ஒல்லிக்குச்சி நாகேஷ்!

'கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா' பாடுலே எல்.ஆர். ஈஸ்வரியோட 'ஹம்மிங்'நல்லா இருக்கு! அந்தப் பாட்டுலே
ஒரு வரி 'இல்லை என்று சொல்வதுந்தன் இடை அல்லவா'! ஆனா நாயகிக்கு இடை இருக்கு!( அதெல்லாம் கண்டுக்கக்
கூடாது!)

பாக்கிப் பாட்டெல்லாம் இனி எப்ப நேரம் இருக்கோ அப்ப!


3 comments:

said...

//'இல்லை என்று சொல்வதுந்தன் இடை அல்லவா'! ஆனா நாயகிக்கு இடை இருக்கு//

I have read somewhere that this sentence doesn't mean "NO IDAI". It means the hips shake horizontally as "illai" while the eyes shake(nod) vertically as "undu"

said...

துளசி,'கிறிஸ்மஸ் பிளஸ் புத்தாண்டு வாழ்த்துகள்'

பாருங்க துளசி என்னை.. இதோ இங்கே இருந்துக்கிட்டு இத்தனை
நாளா இந்தப் பக்கமே வராம இருந்திருக்கேன் என்ன நான் :(

அதனால இன்னைக்கி ஒண்ணுவிடாமே
ஒரே மூச்சுல எல்லாத்தையும் படிச்சுட்டேன்!.
எல்லாப் பதிவுகளும் ரொம்ப ரொம்ப நல்லாருக்கு.
படிக்கப் படிக்க சுவாரஸ்யமா!இருந்ததும் ஒரு காரணம்.

பழனி படத்துல ஒரு பாட்டு வயக்காட்டில் சகோதரர்கள்
நால்வரும் கம்பீரமா பாடுவது போல் ஒரு பாட்டு
அருமையான பாட்டு அடிக்கடி ரேடியோவில் கேட்டிருக்கேன்.
'ஆறோடும் மண்ணில் என்றும்'எனத் தொடங்கும்னு நெனைக்கிறேன்
(வார்த்தைகள் கோர்வையாக சரியா நினைவில் வரமாட்டேங்குது)
அந்த ராகம் அப்படியே நினைவில் இருக்கு!) கேட்டீர்களா? .

said...

துள்சி!!
அது;"ஆறோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும் என்றும் நம்ம பேரோடும்.."
சேரியா?
அந்த நாலாவது பிரதர் ஸ்ரீராம் என்னும் பழைய நடிகர். மலைக்கள்ளனில் வில்லனாக வருவாரே..அவர்.