நகர்வலத்தில் கொலு வாரம் விஸிட் 2,3,4,5,6,7............
ஒருவாரத்துலே கிடைச்சதையெல்லாம் விடாம நம்ம பதிவர்கள் சிலர் வீடுகளுக்குப் போய்வந்தோம்.சுப்புரத்தினம் ஐயா வீட்டுக் கொலு
*****************************************************************************மேலே உள்ள இரண்டு படங்களும் சுப்பு ரத்தினம் & மீனாட்சி அக்கா வீட்டு வளாகத்தில் வச்சுருக்கும் 'காமன்' (ஆங்கிலம்) கொலு!
********************************************************************************'அலைகள் 'அருணா வீட்டுக் கொலு.
**************************************************************************மேலே இரண்டு படங்களும் நம்ம நாச்சியார் வல்லி சிம்ஹன் வீடு
******************************************************************************
தியாகையருக்குக் காட்சி கொடுத்த ராமர் கூட்டம்!!இந்த இரண்டு படங்களும் கீதா சாம்பசிவம் வீட்டுக் கொலுவில்
****************************************************************************சங்குபிள்ளையார்!!
வீணை நம்ம நானானியின் குழந்தை!! இன்னும் அழகான 'காய்க்கொலு' படங்கள் இருக்கு. அவுங்க போடுவாங்கன்றதால் நான் கொஞ்சம் அடக்கி வாசிக்கிறேன்.
அனைவருக்கும் நவராத்ரி & தசரா வாழ்த்து(க்)கள்.
பொழுது விடிஞ்சால் நம்மூட்டுலே விஜயதசமிக்கான பூசை இருக்கு. முடிஞ்சால் ஒரு நடை வந்துட்டுப் போங்க.
பதிவர் நானானி இப்போத்தான் தொலை பேசுனாங்க. அவுங்க வீட்டு அற்புதங்களைப் போடச் சொல்லிட்டாங்க!!!! நான் கண்ட இன்பம் வகையில் இதோ.....
கேரட்டும் முள்ளங்கியும் பூத்துருக்கு.
தர்ப்பூசனித் தாமரை
வீணை மீட்டும் சரஸ்வதி மஞ்சள் பூசணியில்.
புத்தக அடுக்கில் புடவை கட்டுன சரஸ்வதி.
புதுமையோ புதுமைதான் போங்க!!!!!
காய்கறிகளுக்கெல்லாம் அப்பப்பப் 'புஸ்க் புஸ்க்'ன்னு தண்ணீர் தெளிச்சுக்கிட்டே இருக்காங்க. வெளியே அடிச்சு ஆடும் மழைக்கு மேட்சா இங்கே ஒரே 'ஷவர் பாத்' தான்:-))))
Monday, September 28, 2009
பதிவர் வீட்டுக் கொலுவைப் பாரு.....
Posted by
துளசி கோபால்
at
9/28/2009 03:20:00 AM
45
comments
Labels: அனுபவம், கொலு, பதிவர் வட்டம்
Thursday, September 24, 2009
துளசியின் தளத்துக்கும் மணாளனுக்கும் பொறந்தநாள்.
நம்ம தளத்துக்கும் நம்மூட்டுத் 'தல'க்கும் இன்னிக்குப் பொறந்தநாள்.
என்னவோ இப்பத்தான் எழுதவந்தது மாதிரி இருக்கு. அஞ்சு முடிஞ்சு ஆறாவது வருசம் ஆரம்பிச்சாச்சு. உருப்படியா ஏதாவது செஞ்சேனான்னு இன்னும் யோசிச்சுக்கிட்டுத்தான் இருக்கேன்.
'தல' யின் பிறந்தநாளை எங்கே மறந்திடப் போறேனோன்னு தளத்தோடு முடிச்சுப்போட்டு வச்சுக்கிட்டது ரொம்ப நல்லதாப் போச்சு.
வழக்கம்போல் உங்கள் அன்பும் ஆதரவும் கிடைக்கணுமுன்னு தமிழ்கூறும் நல்லுலகத்தைக் கேட்டுக்கொள்கின்றேன்.
என்றும் அன்புடன்,
துளசி
Posted by
துளசி கோபால்
at
9/24/2009 03:53:00 AM
40
comments
Labels: அனுபவம், பதிவர் வட்டம், பிறந்தநாள்
Monday, August 10, 2009
வாழ்க்கையில் முதல்முதலா......
நம்ம மக்கள்ஸ் பரிசு வாங்குவதைக் கொண்டாடப் போயிருந்தோம். விழா மாலை நேரம்தான். ஆனால் அன்று பிற்பகல் நடக்கும் எளக்கிய சந்திப்புதானே நமக்கு முக்கியம்:-) அதிலும் நம்ம எஸ்.ரா. பேசறார். கட்டாயம் கேக்கத்தான் வேணும்.
ஒன்னும் எழுதத்தோணலை. காதும் மனமும் நிறைஞ்சுபோச்சு. விருது வாங்கப்போறவங்க, அவுங்க அனுபவங்களைச் சொன்னாங்க.நம்ம எஸ்.ரா
நம்ம நாகூர் ரூமி
பிற்பகல் நிகழ்ச்சியில் நாச்சியாரையும், நுனிப்புல்லையும் சந்தித்தேன். ஒரு சின்ன இடைவேளையா ஒரு மணி நேரம். மாலை நிகழ்வுக்குத் திரும்பிப்போனால்.............. பயங்கரக் கூட்டம். (நாலுபேருக்குமேல் இருந்தால் கூட்டம் என்று கொள்ளவேண்டியதில்லை. இது நியூஸியா என்ன?)தங்க மயிலோடு தங்க முருகன்கள்
நல்லி குப்புசாமிச் செட்டியார், தொலைக்காட்சி நடராஜன், நீதியரசர் லட்சுமணன்னு மேடையில் இருந்தாங்க. பேச்சுகள், நூல்வெளியீடு, பொன்னாடை போர்த்தல், விருது வழங்குதல், க்ரூப் ஃபோட்டோஸ் என்று சம்பிரதாயங்களை மீறாமல் எல்லாம் செவ்வனே நடந்தது. தெரிஞ்ச பெயரும் தெரியாத முகங்களுமாய் இருந்த நம்ம மக்களில் பலரையும் சந்திக்கும் வாய்ப்பாக அமைஞ்சது இந்த விழா. நம்ம அண்ணாகண்ணன்
நம்ம பத்ரி
நம்ம கவிதாயினி மதுமிதா
நம்ம சிங்கை ஜெயந்தி சங்கர்
எஸ். சங்கரநாராயணன், சிலபுத்தகங்களைக் காமிச்சு, 'எதுவேணுமுன்னாலும் எடுத்துக்கோ'ன்னார். மனக்குப்பை எடுத்துக்கிட்டேன். 'ஆஹா.... சரியான தேர்வு'ன்னு கோபாலுக்குப் பயங்கர மகிழ்ச்சி:-))))
எல்லாரும் இருந்து சாப்புட்டுட்டுப்போகணும், உங்களுக்காக ஆக்கிவச்சுருக்குன்னு விழாக்குழுவினர் விடுத்த வேண்டுகோளை, நீதியரசர் இருக்கும்போது நாமும் ஜஸ்டிஃபை பண்ணித்தானே ஆகணும்? கலியாண விருந்து , இலை போட்ட சாப்பாடு. குலாப்ஜாமூன், ஐஸ்க்ரீம், பீடான்னு எதையுமே விட்டுவைக்கலை. சுமார் 600 பேர்கள் இருக்கலாம்.எல்லாம் இனிதே முடிஞ்சது.
Posted by
துளசி கோபால்
at
8/10/2009 03:12:00 PM
37
comments
Labels: அனுபவம், திசை எட்டும் விருது விழா, பதிவர் வட்டம்
Friday, August 07, 2009
நம்ம 'தல' இப்போ அப்பா!!!!
பதிவுலக நட்புக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி.
நம்ம பாலபாரதிக்குப் பதவி உயர்வு.
அப்பா
ஆண் குழந்தை
தாயும் சேயும் நலம்
நம் அனைவரின் அன்பும் ஆசிகளும் புதுப் பூவுக்கு.
மிஸ்டர் & மிஸஸ் 'தல' க்கு வாழ்த்து(க்)களும் பாராட்டுகளும்.
Posted by
துளசி கோபால்
at
8/07/2009 04:03:00 PM
26
comments
Labels: குழந்தை, தல, பதிவர் வட்டம்
Thursday, July 30, 2009
நம்ம சிஜி தாத்தா ஆகிட்டாரு!!!!
நம்ம பதிவர் சிவஞானம் அவர்கள் நேற்றுமுதல் பதவி உயர்வு பெற்றுத் தாத்தா ஆகி இருக்கார்.
அவரது மகளுக்குப் பெண்குழந்தை பிறந்துள்ளது.
தாயும் சேயும் நல(மா)ம்.
நம் மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொள்கின்றோம்.
அனைத்துப் பதிவர்கள் சார்பில் இனிய வாழ்த்து(க்)கள் சிஜி அவர்களே.
Posted by
துளசி கோபால்
at
7/30/2009 04:54:00 PM
19
comments
Labels: சிஜி, தாத்தா, பதிவர் வட்டம், புதுக்குழந்தை
Thursday, March 19, 2009
நோட்டீஸ் போர்டு
இன்று:
கலை, கலாச்சாரம், ஆன்மீகம், பதிவர் சந்திப்பு இப்படிக் கலந்துகட்டி ஊரெல்லாம் சுத்தியடிச்சுத் தேர் நிலைக்கு வந்து நின்னாச்சு. எதிர்பார்த்துப் போன இடங்கள், நினைச்சுப் பார்க்காமலேயே அதுவா வந்து ஆப்ட்டுக்கிட்ட விஷயங்கள், விதவிதமான மனிதர்கள், உணவுகள் இப்படி ஏகப்பட்டது இருக்கு உங்களோடு பகிர்ந்து கொள்ள.
டீச்சரைக் காணோம் என்ற மகிழ்ச்சியில் அங்கங்கே கூடி ஆனந்தக்கூத்தாடும் மாணவமணிகளே, வரும் திங்கள் முதல், வகுப்பு வழமைபோல.படம்: கும்மோணத்துக் கூட்டம்
Posted by
துளசி கோபால்
at
3/19/2009 02:55:00 PM
63
comments
Labels: அறிவிப்பு, பதிவர் வட்டம்
Wednesday, February 11, 2009
குரங்காய்த்தான் ஆரம்பிச்சு.......
மூணு குரங்குகள் பொம்மையைப் பார்த்ததும் என்ன ஞாபகம் உங்களுக்கு வரும்? (இன்னும் ஒரு குரங்கைக் கூடுதலாச் சேர்த்து நாலு குரங்குகளாகவும் சில இடங்களில் கிடைக்குதாமே) இந்த கூட்டு எல்லாம் நமக்கு வேணாம். இந்த மூணே போதும், இல்லை?
மூணு என்ற எண்ணுக்கு உரிய விசேஷ குணங்கள் என்னென்ன? தெரிஞ்சவுங்க சொல்லுங்க பார்க்கலாம்.
குரங்கைவிட்டுட்டு எங்கியோ போயிட்டேன்........
இந்தக் குரங்குகள் பலவிதமா மாறி யானைவரைக்கும் வந்துருக்கு.
அதுக்குப்பின்?
யானைக்கொரு காலமுன்னா பூனைக்கொரு காலம் இருக்கே.....
இப்பப் பூனையாவும் ஆகியாச்சு.
( எல்லாம் மகள், அவ்வப்போதுத் தாய்க்குக் கொடுத்த பிறந்தநாள் பரிசுகள் )
இதுகள் எல்லாம் என்ன சொல்லுதுன்னு கவனிச்சீங்களா?
கெட்டதைப் பார்க்காதே
கெட்டதைப் பேசாதே
கெட்டதைக் கேட்காதே
மூணே மூணு அன்புக் கட்டளைகள்.
கடைப்பிடிச்சுக்கிட்டு அமைதியா இதுவரை நடந்த பாடங்களை 'எப்பவாவது' படிச்சுக்கிட்டு ஓய்வு எடுத்துக்குங்க. பாவம். உங்களுக்கும் வகுப்புக்கு வந்து அலைச்சலா இருக்கும். பரிட்சை வேற வருது!!!!
மூணு வாரம் நல்லா ஓய்வெடுத்துக்கிட்டு வாங்க.
அப்ப டீச்சர்....?
உங்களுக்காக ஒரு டூர் போய் மேட்டரைத் தேத்திக்கிட்டு வரேன்.
பத்திரமா இருங்க. டேக் கேர்.
இதுதான் உங்களுக்கு ரிவிஷன் ஹாலிடேஸ்.
Posted by
துளசி கோபால்
at
2/11/2009 10:28:00 PM
54
comments
Labels: School holidays, பதிவர் வட்டம்
Tuesday, January 20, 2009
ஜெயந்தி சங்கர்!!!!
Posted by
துளசி கோபால்
at
1/20/2009 08:27:00 PM
10
comments
Labels: பதிவர் வட்டம், புத்தகத் திருவிழா
Tuesday, May 15, 2007
ப்ரிஸ்பேன்
மக்கள்ஸ், பிரிஸ்பேன் நகரில் இருந்து வலைபதியும் நண்பர்கள் யாராவதுஇருந்தால் பின்னூட்டத்தில் உங்க மெயில் ஐடியோ இல்லே தொலைபேசி எண்களோ தெரிவிச்சீங்கன்னா.............. சந்திக்க முயற்சிப்பேன்.
வரும் வாரம் முழுசும் அங்கேதான் கேம்ப்:-)
உங்கள் சொந்த விவரங்கள்(???) அடங்கிய பின்னூட்டங்கள் வெளியிடப்படாது.
என்றும் அன்புடன்,
துளசி.
Posted by
துளசி கோபால்
at
5/15/2007 01:19:00 PM
16
comments
Labels: பதிவர் வட்டம், பொதுவானவை
Wednesday, February 21, 2007
நம்மில் யாராவது graphic designer ஆக இருக்கும் வாய்ப்பு உண்டா?
மக்கள்ஸ்,
இங்கே நம்ம தமிழ்ச்சங்கத்துக்கு ஒரு பேனர் செய்துகொள்ளும் எண்ணம் இருக்கு.
அதுக்குப் பொருத்தமான டிஸைன்களை வரைஞ்சு தரக்கூடியவர்களைத் தேடி
அலுத்துப் போயிட்டோம்.
நம்மில் யாராவது இந்தப் பணியைச் செய்து தர இயலுமா? கொஞ்சம் அலங்கார வேலைகள்
செய்ய வேண்டி இருக்கும். பேனரின் நீள அகலங்கள் 3 x 1.5 மீட்டர் வரணும்.
குறிப்பாகத் தமிழர்கள் ( இலங்கை & இந்தியா) செய்து தர இயலுமானால்
அவர்களுக்கு நம் அலங்கரிப்புத் தேவைகளை விளக்குவது சுலபம். எங்களுடைய
தமிழ்ச்சங்கத்தின் logo முக்கியம்.
இதற்காக ஒரு தொகையும் சங்கத்தினால் ஒதுக்கப்பட்டுள்ளது. தயவு செய்து
விருப்பம் உள்ளவர்கள், அல்லது உங்களுக்குத் தெரிஞ்ச நண்பர்கள் யாராவது
உதவ முடியும் என்று நீங்கள் நினைத்தால் பின்னூட்டம் மூலமாக உங்கள்
மெயில் ஐடியைத் தெரிவித்தால் ( அதை நான் வெளியிடமாட்டேன் என்பது உறுதி)
உங்களைத் தொடர்பு கொண்டு விளக்கங்கள் தர எண்ணம்.
தயவுசெய்து உதவணும். செய்வீங்கதானே?
ரொம்ப எதிர்பார்ப்புடன்,
துளசி
Posted by
துளசி கோபால்
at
2/21/2007 12:59:00 PM
12
comments
Labels: பதிவர் வட்டம், பொதுவானவை
Monday, February 12, 2007
அலை ஓய்ந்தது (-:
நெடுநெடுன்னு உயரமாவும், ஒல்லியாவும் இருந்த இளைஞர் ஒருத்தர்
கூட்டம் நடந்து கொண்டிருக்கும் சமயம் வந்துசேர்ந்தார். நாங்க அப்ப பேசறதையெல்லாம்
பேசிமுடிச்சுட்டோம்ன்ற நிலை. வந்தவர் கையிலிருந்த ஒரு இனிப்புகள் நிறைந்த பாக்ஸ்
திறக்கப்பட்டு எல்லோருக்கும் இனிப்புகள். அருமையான மில்க் ஸ்வீட்ஸ். சிலருக்கு
அவரை ஏற்கெனவே தெரிஞ்சிருந்துச்சு. சாகரன்னு தன்னை அறிமுகப்படுத்திக்கிட்டார்.
'சாகரனின் அலைகள்'னு எழுதுறவர். இருட்டும் வேளை. மசமசன்னு ஒரு மங்கல்.
நேராய் என்கிட்டே வந்தவர்,'வணக்கம் அக்கா. நல்லா இருக்கீங்களா?'ன்னு கேட்டார்.
வலைமூலம் எனக்குக் கிடைத்தக் கணக்கில்லாச் சொந்தத்தில் இவரும் ஒரு தம்பின்னு
நினைச்சேன். 'நாந்தாக்கா கல்யாண்'ன்னு சொன்னார். எனக்கு அதிர்ச்சி. தேன்கூட்டில் இருந்து
அப்பப்ப அவுங்க புதிய திட்டம்,மாற்றம்னு எதாவது பரிசீலிக்கும்போது ,'அக்கா... இந்த மாதிரி
...... ஒரு விஷயம் பரிசிலிக்கப்போறோம். உங்க தளத்தை வச்சு சோதனை செய்யலாமுன்னு
இருக்கேன். என்ன சொல்றீங்க? இதுலே ஏதும் ஆபத்து இல்லை'ன்னு கேட்டு மடல்கள்
அனுப்புவார். நான் ஒரு க.கை.நா என்றபடியாலே ஒண்ணும் புரியாது. என்ன ஏதுன்னு
நொச்சுநொச்சுன்னு விளக்கம் கேப்பேன். பொறுமையா பதில் சொல்வார். பரிசோதனைக்கு
இருக்கற எலியா நாம? சரி.. இருந்துக்கலாமுன்னு அதுலே பங்கெடுத்துருக்கேன். அந்த
மடல்களின் சொந்தக்காரர்தான் இவர்ன்னு தெரிஞ்சதும், மகிழ்ச்சியாத்தான் இருந்துச்சு.
தேன்கூடு ஆரம்பிச்சு ஒரு வருஷம் ஆச்சு. இந்த ஆண்டுவிழாவை உங்க எல்லோரோடும்
கொண்டாடி, சந்தோஷத்தைப் பகிர்ந்துக்கணுமுன்னுதான் இனிப்போட வந்தேன்னு சொன்னார்.
பழகுவதற்கு இனிமையான மனிதர். அங்கே இருந்த கொஞ்ச நேரத்துலேயே கலகலப்பா
எல்லார்கிட்டேயும் பேசிச் சிரிச்சுக்கிட்டு இருந்தார்.
அதுக்கப்புறமும், அவர் ச்சென்னையிலிருந்து திரும்பிப்போகு முன்னே சிலதடவைகள்
செல்லுலே கூப்புட்டுப் பேசுனார். அருமையான நகைச்சுவையோடு நாட்டுநடப்பு, ஊர் நடப்புன்னு நிறையப் பேசுனோம்.
இங்கே நான் திரும்பி வந்தபிறகு, ஒரு முறதமிழ்மணத்துலே 'பிங்'செய்யமுடியாமப் போச்சு. சரி, தேன்கூட்டுலேயாவது நம்ம பதிவு தெரியுதான்னு பார்க்க அங்கே போனா அங்கேயும் நம்மளைக் கண்டுக்கலை.
அப்பதான் தேன்கூட்டுக்கு ஆதரவு திரட்டறதுக்காகவே நான் ச்சென்னைக்குப் போனேன்னு ஒரு 'கிசுகிசு' வந்திருந்துச்சு.
என்னடா.... இது எனக்கு? "இப்படியெல்லாம் மக்கள்ஸ் வதந்தி பரப்பிக்கிட்டு இருக்காங்க. இங்கே வந்து பார்த்தா
என் பதிவைக்கூட உங்க தளம் காமிக்கலை.கடைசியில் நானே பிங் செய்ய வேண்டியதாப்போச்சு'ன்னு ஒரு புகார்
அனுப்புனேன். அப்பவும் அதுக்குப் பொறுமையாப் பதில் அனுப்புனது நம்ம கல்யாண்தான்.
இதுதான் நான் அனுப்புன மடல்:
சரியாப்போச்சு.
அங்கங்கே எதோ 'நான்'தான் தேன்கூட்டுக்கு வரிஞ்சுகட்டி ஆள் சேர்க்கிறதா
'கிசுகிசுக்கள்' வந்துக்கிட்டு இருக்கு.அப்படியான்னு இங்கே வந்து பார்த்தா நம்ம ப்ளொக்லே போட்ட
புதுப் பதிவுகளைக்கூடக் காட்ட மாட்டேங்குறீங்க. அப்புறம் 'பிங்' பண்ணி விட்டுருக்கேன்.
ஏங்க தானாவே பதிவுகள் 'இடுகைகள்' பக்கத்திலே வராதா?
ஒண்ணும் புரியலையேங்க.
என்றும் அன்புடன்,
துளசி கோபால்
அதுக்கு வந்த பதிலும் இதோ.
Thulasi Madam,
Vanakkam.
அட.. என்னங்க மேடம் இப்படி சொல்லிட்டீங்க?!
Nothing like that. There is a logic... based on which, there is 2 different aggregating
styles. one is to aggregate once in every 1 hour. another is to aggregate in 24 hours.
If you do post regularly like every 15 days. it will automatically add it up to the 1 hour
method. Otherwise wait for 1 day.
By the way, if you can, please use ping itself whenever you post. It really reduces
lots of over heads in the backend side.
Kisu - Kisu pathi ellam kavalaipadatheenga. Crooked minded peoples are there
at all places.
Anbudan,
Kalyan.
இப்படியெல்லாம் நல்ல நட்போடு இருந்த ஒருத்தர் திடீர்னு மறைஞ்சதா, நம்ம மதியின் பதிவைப்
பார்த்ததும் ஒரு நிமிஷம் ஆடிப்போயிட்டேன்.
சாகற வயசா இது? இன்னைக்கெல்லாம் இருந்தாலும் ஒரு முப்பத்திரெண்டைத் தாண்டுவாரா என்ன?
சாகரனின் அலைகள் இப்படி ஓய்ஞ்சது ஒரு திடுக்கிடும் செய்திதான்.
அன்னாருக்கும், அவர் குடும்பத்தினருக்கும், அவரின் உற்ற நண்பர்கள், வாசகர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்ளும் நேரம், கல்யாணுக்கு என் கண்ணீர் அஞ்சலி.
Posted by
துளசி கோபால்
at
2/12/2007 10:14:00 AM
29
comments
Labels: பதிவர் வட்டம்
Monday, February 05, 2007
காலத்தின் கட்டாயம்
குடிக்கூலிக்காரியிடம்,'புது வீடு கட்டி இருக்கேன்.அங்கே வந்து இதே 'வாடகை'யில்இரு'ன்னு கூப்புட்டுக்கிட்டு இருந்த வீட்டுச் சொந்தக்காரரிடம், 'இதோ அதோ'ன்னுசாக்குச் சொல்லிக்கிட்டு இருந்தேன். இன்னிக்கு 'வீட்டுக்காரர்', கறாராச் சொல்லிப்புட்டார்.
உன் பிரச்சனை என்னன்னு புரியுது. சாமான் செட்டெல்லாம் நிறைய இருக்கே, எப்படிடா அதையெல்லாம் கட்டி வலிக்கிறதுன்னு தானே பாக்கறே?
இன்னிக்கு நாளும் 'ரொம்ப நல்ல நாள்'. உனக்கான 'ஸ்பெஷல்' நாளுக்கு நான் இதைக்கூடச் செய்யாட்டா எப்படி?
நானே 'தொலையட்டும், போனாப்போவுது'ன்னு எல்லாத்தையும்அங்கே மாத்தி வுட்டுடறேன். நிம்மதியா(??) அங்கே போய் இருந்துக்கோன்னு 'அருள்வாக்கு' சொல்லி, இப்ப மாத்தியும் ஆச்சு.
அங்கே போய்ப் பார்த்தா.............பின்னூட்டக்காரங்க பேரெல்லாம் சிலது 'ஜிலேபி ஜிலேபி'யா இருக்கு. பலது அனானியாக் கிடக்கு.நிதானமாத்தான் இதைக் கவனிக்கணும். விவரம் தெரிஞ்ச தம்பி தங்கைகள் கொஞ்சம் என்னையும் கவனிங்கப்பா.
Posted by
துளசி கோபால்
at
2/05/2007 11:53:00 AM
20
comments
Labels: பதிவர் வட்டம்

