Saturday, July 16, 2022

பாதுகாப்பு முக்கியம்தானே ?

தோழியின் நடனப்பள்ளியின் ஆண்டுவிழா நிகழ்ச்சி.   இது பதிமூன்றாவது ஆண்டு விழா! . இந்தக் கோவிட் காரணம்  நூறு நபர்களுக்கு மேல் கூட்டம் கூடாதுன்ற அரசு நியமப்படி....  ஒரே நாளில் ரெண்டு தனி நிகழ்ச்சியா ஏற்பாடு செஞ்சுருந்தாங்க. முதலில் ஜூனியர்களின் நடனம்.  அது முடிஞ்சதும் முக்காமணிக்கூறு இடைவெளியில் சீனியர் மாணவிகளின்  நடனம். 
 சீனியர்ஸ் நடனம் பார்க்க வர்றேன்னு சொல்லியிருந்தேன். கடந்த பனிரெண்டு வருஷங்களா எல்லா விழாவுக்கும் போயிருக்கோம். இந்த நடனப்பள்ளி ஆரம்பிச்ச சமயம் நாம் இந்தியாவில் இருந்தோம்.    அப்போ குழந்தைகளா இருந்த பிள்ளைகள் வளர்ந்து இப்போ  நட்டியத்தில் நல்ல தேர்ச்சி அடைஞ்சுருக்காங்க.  இவர்கள் நடனம் பார்ப்பதே ஒரு சுகானுபவம் ! தவறவிடக்கூடாதது !

நம்ம கார் கடையில் இருந்து, வண்டியைக் கொண்டாந்து காட்டிட்டுப்போன்னாங்க.  மில்லிமீட்டர் வேவ் சென்சார் சரியா இருக்கான்னு பார்க்கணுமாம். பாதுகாப்புப் பிரச்சனையாச்சே.....  ஒருநாள் நேரம் வாங்கிக்கிட்டுப் போனோம். ஒரு ஒன்னரை மணி நேரம் அங்கே வண்டியை விட்டு வைக்கணும்.
நண்பர் ஒருத்தர் நியூஸியிலேயே பெஸ்ட் டிஸ்ஸர்ட் தயாரிக்கும் கடை நம்ம ஊரில்தான் இருக்குன்னு ரொம்பவே பாராட்டிச் சொன்னதால் , இங்கே பக்கத்தில்தானே இருக்கு....  கிடைச்ச ஒன்னரை மணி நேரத்தை வீணாக்காம..... அங்கே போகலாமுன்னு நடந்து போனோம்.

போறவழியில்தான்  எங்கூரில் நடந்த  நிலநடுக்கத்தில் பலியானவர்களுக்கான  நினைவிடம்  அமைச்சுருக்காங்க. ஆத்தங்கரையையொட்டி இருக்கு இது.   நிலநடுக்கம் நடந்த ஆறாவது வருஷம்  இந்த நினைவிடத்தைத் திறந்துவச்சாங்க.  வருஷாவருஷம் சம்பவம் நடந்த  22 ஃபெப்ரவரி நாள்  நம்ம   மேயர் (சிட்டிக்கவுன்ஸில்) மலர்வளையம் கொண்டுவந்து வைப்பாங்க.   இந்த வருஷம்,  அதுகூட நடக்கலை இந்த கோவிட் சனியனால்.  Traffic light  system னு சொல்லி, நம்மூர் ஆரஞ்சு லைட்டில் இருந்ததால் நூறு பேருக்குமேல் கூட்டம் கூடாது என்ற நியமம்.  185 உயிர்கள் போயிருக்கு அந்த நிலநடுக்கத்தில் :-(  வீட்டுக்கு ஒரு ஆள் என்றாலும் நூறுக்குமேல் போயிறாதா ? 

  ரொம்பநாளா இங்கே வரலையேன்னு  இதன் வழியாப் போனோம்.  என்ன மெமோரியலோ ? யாரும் வந்துபோறமாதிரி தெரியலை.  பளிச்ன்னு ஒரு கட்டடம் இருந்தால்தானே  ஊர்மக்களோ, பயணிகளோ  வந்து போவாங்க.  ஆத்தங்கரை ஓரம் குட்டிச்சுவர் மாதிரி ஒன்னு நீளமாக் கட்டி, அதுலே 'போனவங்க' பெயர்களைப் பொறிச்சுருக்காங்க.  அதுவும் ஒரு லைட் க்ரே கலர்  கல்.  மார்பிளான்னு எனக்கு இன்னும் சந்தேகம்தான். அதில் பொறிச்ச் பெயர்கள்.... அதே நிறத்தில். சுத்தம்.  ஒன்னும் கண்ணுக்குத் தெரியாது..... 
மேலே படம் :  நினைவிடம் திறந்து வச்சநாள் முப்படையினரும்,  உறவினர்களும்  வச்ச மலர்வளையங்கள் ! 2017  ஃபெப்ரவரி 22.

எல்லாத்துக்கும்  டிஸைன் பண்ண,  ஆலோசனை வழங்க, செயல்படுத்தன்னு நிபுணர்கள் இருப்பாங்கல்லே....  நமக்கு வாய்ச்சவுங்க இந்த அழகு.....    என்னதான் அடக்கி வாசிப்பது நல்லதுன்னாலும், 'அடங்கிட்டவங்களை' இப்படியா அடக்கி வைக்கிறது?  ப்ச்... என்னமோ போங்க...

கொஞ்சம் எரிச்சலோடுதான் நினைவிடத்தைக் கடந்து போய் எதிர்வாடையில் இருக்கும் இருக்கும் ரிவர்சைட் மார்கெட்க்குள்ளே போய் அந்த டிஸ்ஸர்ட் கடையைத் தேடினால் கண்ணுலே ஆப்டலை.  நண்பருக்கே ஃபோன் செஞ்சு கடைப்பெயரைக் கேட்டு, கூகுளிச்சால் அது  நம்ம கேஷல் தெரு மாலாண்டை இருக்கு.  விடுவதில்லைன்னு போறோம். 









நம்மூரில் ஒரு முக்கியமான  நினைவிடம் ப்ரிட்ஜ் ஆஃப் ரிமெம்பரன்ஸ் என்ற  வளைவு !  உலகப்போரில் கலந்துகொள்ளப்போன நியூஸிப் படையினர், இங்கேயிருந்துதான்  புறப்பட்டாங்களாம் !  நகரின் பல நிகழ்ச்சிகள் பொதுவா இதையொட்டித்தான் நடக்கும். 

இப்போ உலகக்கோப்பை  க்ரிக்கெட் பெண்கள் அணியின்  இறுதிப் போட்டிகள் நம்மூரில்தான் நடக்குது என்பதால் அதற்கான கொண்டாட்ட விவரங்கள் ! உங்களுக்காகப் படங்கள் எடுத்துக்கிட்டுக்  கடை தேடிப்போனால்.......   ஆ... ஆப்டுடுத்து ஸ்வீட் ஸோல் !



எனக்கொரு ஆப்பிள், நம்மவருக்கு ஒரு பேரிக்காய் ! ரசிச்சுத் துளித்துளியா உள்ளே அனுப்பும்போதே....   டொயொட்டாவில் இருந்து ஃபோன். வண்டி ரெடியாம் !

சட்னு முடிச்சுட்டுக் கிளம்பினோம் !   

4 comments:

said...

கீழிருந்து ஒன்பதாவது படமும், பத்தாவது படமும்.... டாப். அழகு.

said...

நாட்டிய நிகழ்ச்சி படம் சூப்பர். ஆப்பிள்,பேரிக்காய் செம அழகு.

said...

வாங்க ஸ்ரீராம்,

இப்படி என்னை எண்ண வச்சுட்டீங்க :-)

said...

வாங்க மாதேவி,

நடனப்பள்ளி தோழி, இலங்கையர்தான். தமிழர். இங்கிலாந்தில் படிச்ச எஞ்சிநீயர். நடனம் ஒரு passion. அதுதான் வேலைக்கும் போயிட்டு, வீக் எண்டில் நடன வகுப்பும் நடத்துறாங்க.

ஆப்பிளும் , பேரிக்காயும் மின்னுதுல்லெ !!!