Monday, February 24, 2020

அத்திவரதரின் ஏகாந்த தரிசனம் !!! (பயணத்தொடர் 2020 பகுதி 18 )

மனுஷனுக்கு எந்தவலி வந்தாலும் பல்வலி மட்டும் வரக்கூடாது... இல்லே?  ராத்ரியெல்லாம் தூங்கவே இல்லையாம்....    பல்வலின்னதும் கவலையாப் போச்சு. உடனே பல்மருத்துவரைப் பார்த்தே ஆகணும் என்று வலைவீசிப் பார்த்ததில் தி.நகர்  ஜிஎன் செட்டி ரோடுலேயே பாலத்தாண்டை ஒருத்தர் இருக்கார்னு தெரிஞ்சது. பிரச்சனை என்னன்னா.... இன்றைக்கு ஞாயிறு. க்ளினிக் உண்டான்னு தெரியலை.  வலையில் இன்னுமொரு பல்மருத்துவமனையும் பார்த்து வச்சோம். அங்கே ஞாயிறு பிரச்சனையே இல்லை.  இடம் தேனாம்பேட்டை.  இரண்டில் ஒன்றுன்னு கிளம்பிப்போனோம்.
தி. நகரில் ஆட்டோவைக் காத்திருக்கச் சொல்லிட்டு உள்ளே போய் விசாரிச்சால்  இன்னும் ஒரு ஒன்னரை மணி நேரக் காத்திருப்பாம்.  அடுத்த இலக்கு அரைமணிதான் என்றதால் அங்கே போறோம்.

காமராஜர் அரங்கில் டிசம்பர் ஒன்னு முதல் எட்டுவரை மெகா இசைவிழா நடக்குதுன்னு  தினசரியில் பார்த்துக்கிட்டே இருக்கோம்.  இசை விழா மட்டுமில்லாமல் அத்திவரதர் தரிசனமும் போனஸ்.  அது என்னமோ.... டிசம்பர் சங்கீத சீஸனில் சென்னையில் இருந்தும் கூட  எந்த ஒரு கச்சேரிக்கும் போக சந்தர்ப்பம் அமையவே இல்லை.  பரவாயில்லை....  போகட்டும்னு மனசை தேத்திக்கிட்டாலும் அத்தி தரிசனம் கொக்கி போட்டு இழுத்துக்கிட்டுத்தான் இருந்தது.  இன்றைக்குத்தான் கடைசி நாள் என்பதாலும்,  பல்லாஸ்பத்ரிக்குத் தேனாம்பேட்டை போக வேண்டி இருப்பதாலும்  ஒரு அஞ்சு நிமிட் அவரை தரிசனம் செஞ்சுக்கிட்டே போகலாமேன்னு ஒரு நப்பாசை.


பல்வலிக்காரரிடம், மெல்ல  என் யோசனையைச் சொன்னதும் 'சரி'ன்னுட்டார் !  ஆஹா....  ஆட்டோக்காரரை முதலில் காமராஜர் அரங்கம் போகச் சொன்னோம். அரங்கம் போய்ச் சேர்ந்து படிகளேறிப்போனால்... 'வா வா'ன்னார் வரதர்!   ச்சும்மாச் சொல்லக்கூடாது....  ரொம்பவே அழகு!
நிம்மதியான தரிசனம்.   (ஒருவேளை இது நம்ம அத்திவரதரின் 'திருவிளையாடலோ?'  

எது? 

நம்மை  கடைசி நாளிலாவது வரவழைச்சது!)

அங்கிருந்து டென்டிஸ்ட்ரீ போனோம். நம்ம எஸ் ஐ இ டி கல்லூரிக்கெதிரில் இருக்கு. ஆட்டோக்காரர் நல்ல மாதிரி. மதுரைக்காரராம்!   'காத்திருக்கவா'ன்னார். பல் சமாச்சாரம் எத்தனை நேரம் எடுக்குமோன்னு தெரியாததால்  அவரை அனுப்பிட்டோம்.
வாசலுக்கு அடுத்த கதவில்  கிறிஸ்மஸ் குடில்.  மாடி ஏறிப்போறோம். திறந்துதான் இருக்கு!

பல்மருத்துவர் வட இந்தியர். ஆனால் அட்டகாசமாகத் தமிழ் பேசறாங்க. இங்கே பொறந்து வளர்ந்தவங்களாம். எஸ் ஆர் எம். படிப்பு. ஆச்சு ரெண்டு வருஷமா இங்கே வேலை செய்யறாங்க.  முதலில் செக்கப், அப்புறம் எக்ஸ்ரேன்னு ஆச்சு.  அதைப் படம் பிடிச்சு நம்ம குடும்ப பல்மருத்துவருக்கு அனுப்பினேன்.  அவுங்களோடு ஃபோனில் விஷயத்தைச் சொன்னதும் அவுங்களும்  இங்கத்து மருத்துவரிடம் இதைப் பற்றி விசாரிச்சு சில ஆலோசனைகள்  சொன்னாங்க.

(பொதுவா ஒரு மருத்துவர் சொல்றதை இன்னொருவர் கேக்கறதில்லைதானே? அவுங்களே சிபாரிசு செஞ்ச சிறப்பு மருத்துவரா இருந்தால் கொஞ்சம் கேப்பாங்க! )

ரூட் கெனால் செய்யும்படியா இருக்குமுன்னு சென்னை மருத்துவர் சொல்லி, எதுக்கும்  சீனியர் ஸ்பெஷலிஸ்ட்டை மறுநாள்  வந்து பார்க்கும்படிச் சொன்னாங்க. மறுநாள் நமக்கு பாலாஜி ட்ரிப் இருக்குன்னு, புதன் கிழமை  வர்றோமுன்னு சொல்லிட்டுக் கிளம்பினோம்.  அதென்னவோ எப்பவும் மருத்துவரைப் பார்த்தவுடன்  நோயின் தாக்கம் கொஞ்சம் குறைஞ்சுதான் போகுது.  எங்க பல்மருத்துவரும், தாற்காலிகமா ஒரு ஃபில்லப் பண்ணிக்கிட்டு, இங்கே வந்தவுடன் என்னன்னு பார்க்கலாமுன்னாங்க.

இதெல்லாம் நடந்தும் மணி பத்தேகால்தான் ஆகி இருக்கு.  அப்படியே இன்னொரு ஆட்டோ பிடிச்சுப் பாண்டி பஸார் வந்து கொஞ்சம் ஷாப்பிங், நம்ம டெய்லர் கடை விஸிட் எல்லாம் ஆச்சு.  அங்கே  துணிகளில் அலங்கார வேலை செஞ்சுக்கிட்டு இருந்தாங்க ரெண்டு பெண்கள்.  நல்லாத்தான் இருக்கு. ஒரு தொழிலும் ஆச்சு, இல்லே!





இந்திர மோகன்....  பெயரே வித்யாசமா இருந்தது.  புடவைக் குஞ்சலம், மோடிஃப் எல்லாம் நல்லா இருக்கு இவர் கடையில்!
இவர் குழந்தைகள் செருப்பு & ஷூஸ்  ஸ்பெஷலிஸ்ட். குட்டிப்பாதங்களுக்கு ரொம்ப அழகழகானவை இவரிடம் இருக்கு. நானும் நம்ம ஜன்னுவுக்கு மூணு வகை வாங்கினேன்.

வணிக வளாகத்துக்குள்ளே நல்ல நல்ல கடைகள் இருக்கு. நமக்குத்தான் ஏறிப்போக சோம்பல். ப்ளாட்ஃபாரத்துலேயே எல்லாம் வேணுமுன்னா எப்படி ?

அப்புறம்  'நம்மவரின்'  ஸலூன் விஸிட்.  எப்பவும் போல அதே கேரளா ட்ரெஸ்ஸர்ஸ்தான். பழமை மாறாத கடை !  ஓனர் அரவிந்தாக்ஷன் , நலம் விசாரிச்சார்.  அவரைப்பற்றி எழுதுன பதிவை, செல்ஃபோனில் காமிச்சதும் ரொம்பவே சந்தோஷப்பட்டார். அப்போ எழுதுனது இங்கே :-)  



பாண்டிபஸாரை அழகுபடுத்தியபின் மக்கள் வசதிக்காக இந்தக்கோடிக்கும் அந்தக் கோடிக்கும் போய் வர பேட்டரி கார் ஏற்பாடு செஞ்சுருக்கு அரசு.  ஒரு வண்டியின் ஓட்டுநரிடம் பேச்சுக்கொடுத்தேன். சங்கர்னு பெயர் சொன்னதா நினைவு.  மொத்தம் அஞ்சு வண்டிகள் ஓடுதாம்.  மக்களின் வரவேற்பு நல்லாவே  இருக்குன்னார்.

ஒரு பக்கம் மட்டுமே அகலமான ப்ளாட்ஃபார்ம் இருப்பதால் அந்தப்பக்கம் மட்டுமே வண்டி போய் வருது. எதிர்வாடைக்குப் போகணுமுன்னா... மக்கள் இறங்கி அந்தாண்டை போகணும். பெடஸ்ட்ரியன் க்ராஸிங் இருந்தாலும் கூட நம்மூர் வழக்கப்படி   யாருமே வண்டிய நிறுத்தாம  இன்னும் வேகமா ஓட்டிக்கிட்டுப் போறாங்க. நீங்க பாட்டுக்கு நடந்து போங்க. அவுங்க பார்த்து ஓட்டுவாங்கன்னு அவுங்களுக்கு சப்போர்ட் வேற....  ப்ரேக் பிடிக்கலைன்னா.....  ?  எப்பத்தான்  ட்ராஃபிக் ரூல்ஸ்ன்னு ஒன்னு இருப்பதை உணர்ந்துக்குவாங்களோ............

அப்படி இப்படின்னு சாப்பாட்டு நேரம் வந்துருச்சு. வழக்கத்துக்கு மாறாக அடையார் ஆனந்தபபவன். எனக்குத்தான் வாயில் சனி. அப்போ அது எனக்குத் தெரியலை. லைட்டா சாப்பிடலாமேன்னு தஹிபூரி ஆச்சு. லோட்டஸ் போக ஆட்டோ பிடிக்கலாமுன்னு போறோம். பாண்டிபஸார் இப்போ ஒன்வே ஆகிட்டதால்  இந்தப்பக்கம் போகணுமுன்னாலும்.... அந்தப் பக்கம் போய்த்தான் ஆட்டோ எடுக்கணும். இப்போ சனி இடம் மாறி 'நம்மவர்' வாயில் உக்கார்ந்தார். 'இளநி' குடிக்கலாம். '

"வேணாம்."

"உனக்குப் பிடிக்குமே.... குடிச்சுட்டே போலாமே...  "
நம்ம சாவித்ரி அம்மாவின் அக்காவாம் லட்சுமி.  அக்காவும் தங்கையும் இளநி வியாபாரம்தான். பாண்டிபஸாரின் ரெண்டு கோடியில் ஆளுக்கொன்னு !  இளநீர் ஆச்சு.
லோட்டஸ் போய்ச் சேர்ந்த கொஞ்ச நேரத்தில்  என்னவோ தலை சுத்தல் போல வந்து 'டேஷ்' எடுத்தேன். பழியை தஹிபூரிமேல் போடுவதா இல்லை இளநிமேல் போடுவதா?  ரெண்டு பேரும் ஒரே மாதிரி சாப்பிட்டு இருக்கோம். ஆனால்  எனக்குத்தான் ஒத்துவரலை...

கொஞ்ச நேரம் தூங்கினால் சரியாப் போகும்னு கிடந்தேன்.  ஒரு மூணரை போல முழிப்பு வந்ததும் கொஞ்சம் பரவாயில்லை.   காமராஜர் அரங்கம் போகலாமான்னார் 'நம்மவர்'  மெகா இசைவிழாவின் கடைசி நாள்.  நாலு மணிக்கு நம்ம ராஜேஷ் வைத்யா. ஆறுமணிக்கு நம்ம சுதா ரகுநாதன்.

ஹைய்யோ....  ரெண்டு பேருமே எனக்குப் பிடிச்சவங்க!  போனால் வராது.....  சரின்னு கிளம்பிட்டோம்.  லேட்டாத்தான் போறோம். அநேகமா டிக்கெட் கிடைக்கலாம். ஆனால்  வீணை பாதியில் இருந்துதான்னு கவலை.   அதெல்லாம் லேட் இல்லை. எப்படியும் வீணை ட்யூன் செஞ்சு ஆரம்பிக்க லேட் ஆகும்னார் 'நம்மவர்'. அதே  போல் ஆச்சு.

ரெண்டு கச்சேரிகளுக்கும் டிக்கெட் வாங்கிக்கிட்டு உள்ளே போறோம்.  ட்யூனிங் நடக்குது :-)

இடம் தேடி முன்னால் போனால் நம்ம ஸ்ரீதரின் அப்பா, அருணாசலம்.  அங்கேயே நமக்கும் இடம் கிடைச்சது.


வழக்கம்போல் ரெண்டு கச்சேரிகளும் அட்டகாசம்.  கச்சேரி முடிஞ்சதும் கிளம்பினால், ஒரு நிமிட் சுதாவைப் பார்த்துட்டுப் போங்கன்னார்  தம்பி அருணாசலம். எனக்குத்தான் வேணுமான்னு தோணுச்சு.  அப்புறம் ரசிகர்கூட்டத்துக்கிடையில்  ரெண்டு வார்த்தை பேச முடிஞ்சது.  நியூஸிக்கு வந்தவங்க, எங்கூருக்கு வரலை. எங்க ஊரில் கூட்டம் ரொம்பக் கம்மி என்பதால்  கச்சேரி ஏற்பாடு  செய்ய முடியறதில்லைன்னு சொன்னேன்.
அரங்கம் வாடகை எல்லாம் அதிகம்.  வந்து போகும் செலவு, தங்குமிடம்,  வாடகை, கலைஞர்களுக்கு சன்மானம்  இப்படி எல்லாமும்  சேர்த்தால்  டிக்கெட் ஏகப்பட்ட விலைக்குப் போயிரும்.  கூட்டமோ  கொஞ்சம். நல்ல நாளிலேயே நாழிப்பால்.... ப்ச்.... நடக்கற காரியமா?

திரும்பி வரும் வழியில் லேசாத் தலை சுத்தல் ஆரம்பிச்சது எனக்கு.  கீதா கஃபேயில்  நாலு இட்லி பார்ஸல் வாங்கிக்கிட்டு லோட்டஸ் வந்துட்டோம். வாங்கி வந்த இட்லியைச் சாப்பிடத்தோணவே இல்லை. என்னமோ தலை அதிகமாச் சுத்துது.  அப்புறம் .....  ப்ச்.... ஒன்னும்  முடியலை....

காலையில் நாலு மணிக்கு எழுந்து ரெடியாகணும். அஞ்சு மணிக்கு வண்டி வந்துரும், திருப்பதி போக.  எங்கே........ பார்க்கலாம்.....

காலையில் அலாரம் எழுப்பும்போது  அப்படி ஒரு அசதி.  முதல்லே சதீஷைக் கூப்பிட்டுப் பயணம் இன்றைக்கு கேன்ஸல்னு சேதி சொல்லும்படி ஆச்சு. நாளைக்குப் பார்க்கலாம்...

'நம்மவரை' மட்டுமாவது போயிட்டு வரச் சொன்னால் வேணாமுன்னுட்டார்.  கிடைச்ச நாளை வீணாக்க வேண்டாமேன்னு   பல்மருத்துவமனை டெண்டிஸ்ட்ரீக்கு ஃபோன் செஞ்சு, ஸ்பெஷலிஸ்ட் வந்துட்டாருன்னு தெரிஞ்சுக்கிட்டு, அங்கே போய் பல்லைக் காமிச்சுட்டு வந்தார். ரூட் கெனால் பண்ணலை.  'ஒன்னுமே பண்ண வேணாம். எதாவது பண்ணிட்டு, பயணத்துலே இருக்கும்போது இன்னும் பிரச்சனை வந்தால் கஷ்டம்.  அந்தப் பல்லுக்கடியில் இருக்கும் குழியில் உணவுப்பொருள் ஏதும் தங்காமல் பார்த்து அப்பப்ப சுத்தம் செஞ்சுருங்க'ன்னுட்டாராம்.  தாற்காலிக ஃபில்லிங் கூடப் பண்ணலை.   இப்ப வலி குறைஞ்சுருக்குன்னார்.
 நாஞ்சொல்லலை....    டாக்டரைப் பார்த்தவுடன் வலி பாதி போயிருமுன்னு. இவர் ஸ்பெஷலிஸ்ட் வேறயா.....  வலி போயே போயிந்திதான்:-) 

அப்பப்ப வந்து உனக்குப் பல்வலின்னு நினைவூட்டிக்கிட்டு இருந்துச்சு. இவரையும்  அப்பப்ப ஒரு பெயின் கில்லர் போட்டுக்கச் சொன்னேன். நாளுக்கு ரெண்டு முறை :-)

(அப்புறம் நியூஸி திரும்பினதும் நம்ம பல் டாக்டர் பார்த்துட்டு, ரூட் கெனால் வேணாம். ஃபில்லிங் போதுமுன்னு செஞ்சு விட்டாங்க)

தலை சுத்தல் நின்னுருந்தாலும்  ரிஸ்க் எதுக்குன்னு நான் நாள் முழுக்கக் கிடப்பில் இருந்தேன், மனதுக்குள் 'அவனோடு'  ஒரே சண்டை.

தொடரும்........... :-)


11 comments:

said...

அடடா...உங்களுக்கு முடியலையா..

இந்த பல் வலி...நாராயணா..அந்த treatment ல தான் இப்போ இருக்கேன்😊😊

said...

ஒரு வலி இன்னொரு வலியைத் தேவலாம் என்று நினைக்க வைக்கும் தமிழ்நாட்டிலேயே டேராவா

said...

அடடா... முதல் நாள் பயணம் ரத்தாகும்படி ஆகிவிட்டதே... உடல் நலம் முக்கியம் தான். பெருமாள் அழைத்த போது போகலாம்!

தொடரட்டும் பயண அனுபவங்கள். நானும் தொடர்கிறேன்.

said...

//ப்ரேக் பிடிக்கலைன்னா..... ? // அத்திவரதர் அழைச்சிட்டார்ன்னு நெனச்சிக்கவேண்டியது தான்.

said...

பல் வலிக்கு மருந்து: பச்சை மிளகாயை வலி இருக்கும் இடத்தில் அழுத்தவும் - ஆறு மாதங்களுக்கு பல் வலி எட்டி பார்க்காது - எச்சரிக்கை வலி இருக்கும் இடத்தில் மட்டும் இல்லை என்றால் எரிச்சலில் பிராணன் போய் விடும்

அழுத்தும் போது வாயை திறந்து வைத்துக்கொண்டு வாஷ் பேசின் முன் நின்று செய்க : எச்சில் வடிய வேண்டும்

விஸ்வநாதன்

said...

வாங்க அனுப்ரேம்,

இப்ப வலி குறைஞ்சுருக்கா ?

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

எல்லாம் இருகோடுகள் தத்துவம்தான்....

தாற்காலிக டேரா தான். இன்னும் சில வாரங்களில் பிரிச்சுட்டுக் கிளம்ப வேண்டியதுதான்.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

சிலசமயம் இப்படி நாம் ஒன்னு நினைச்சால் அவன் ஒன்னு நினைச்சுக்கறான்.

said...

வாங்க விஸ்வநாத்,

அத்திவரதர் ஒரேடியா அழைச்சுக்கிட்டால் பிரச்சனையே இல்லை. படுக்கையில் தள்ளிட்டான்னா பயங்கரம்.

said...

வாங்க விஸ்வா,

புள்ளிக்குச் சொல்லியாச். தோட்டத்துலே பச்சை மிளகாயும் ப்ரெஷா ரெடி !

said...

'அவன் ஆட்டும் பொம்மைகள் நாங்கள் " இருந்தும் நல்லதே நடக்க அவனருள் வேண்டுவோம .