Wednesday, January 14, 2015

அப்பெல்லாம் இப்படித்தான், இல்லே? ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 13)


லோட்டஸ் போய்ச் சேர்ந்தப்ப மணி  இரவு  ஒன்பதேமுக்கால்.  வரும் வழியில் சாப்பாட்டுக்கு நிறுத்துன டைம் ஒன்னேகால் மணி  நேரம் போச்சுன்னா  ஏழேமுக்கால் மணி நேரம் ஆகி இருக்கு, இதோ இருக்கும் பெண்களூரில் இருந்து சென்னைக்கு வர :(

கடந்த ஏழெட்டு வருசங்களா சென்னைக்கு வரும்போது  இந்த லோட்டஸில் தான் தங்கல் என்பதால், ஏதோ  சொந்த வீடு போல பழகிப்போயிருக்கு. வரவேற்பில் நமக்குத் தெரிஞ்ச  ரங்கநாதன் இருந்தார். அவுங்க வந்துட்டாங்களான்னு  ***  பெயர் சொல்லிக் கேட்டேன்.  வந்துட்டாங்கன்னு சொல்லி அவுங்க அறைக்குப் போன் போட்டுத் தந்தார்.

'இந்த நேரத்துலே ஏம்மா? அவுங்க ஓய்வெடுக்கட்டுமே'ன்னார் கோபால். நான் கேட்டுட்டாலும்.....

தோழியின் குரல் காதில் அமுதமாப் பாய்ஞ்சது.  அதே தளத்தில்தான் நமக்கும் அறை. பணியாளர் பெட்டிகளைக் கொண்டு வரட்டும். நான் போய் தோழியைப் பார்க்கணுமுன்னு முன்னாலே ஓடினேன். அறைவாசலில் காத்திருந்தாங்க நம்ம வல்லியம்மா:-)

ஒரு வருசமா பூட்டிக்கிடக்கும்  அவுங்க வீட்டைச் சுத்தப்படுத்தி, மற்ற விஷயங்களைச் சரிப்படுத்தும்வரை  இங்கே தங்கல்.  அவுங்க வந்து  ரெண்டு நாளாச்சு.  ரொம்ப இளைச்சுப்போய் இருந்தாங்க. அதுக்குள்ளெ கோபால் வந்து சேர்ந்தார். அஞ்சே நிமிசம் பேசிட்டு காலையில் பார்க்கலாமுன்னு சொல்லிட்டு அறைக்குப் போனேன்.  முதல் மாடியில்  இடது வலது கோடிகள் எங்களுக்கு!  நீள வெராந்தாவில்  அவுங்கவுங்க  அறை வாசலில் நின்னு  ஒருவரை ஒருவர் பார்த்துக்கிட்டோம்:-))  ரெண்டு வருசப் பிரிவு.  நாளைக்கு நிறையப் பேசணும்:-))))))

மறுநாள்  காலை எட்டுமணிக்கு போன் செஞ்சு  சாப்பிடப் போவோமான்னாங்க. டைனிங் ஹாலில்  மீண்டும் சந்தித்தோம்.  பஃபே ப்ரேக்ஃபாஸ்ட்தான் இங்கே எப்போதும்.  தென்னிந்திய, வட இந்திய வகைகள்.  ப்ரெட்,  ம்யூஸ்லி வகைகளும் உண்டு.  பழங்கள், காஃபி, டீன்னு  உண்டு.  சிம்பிளாத்தான் இருக்கும்.  சுருக்கத்தில் சொன்னால் வீடு:-)  ஆனால்.... இட்லி வடை கண்டிப்பா தினமும்  இருக்கும். இன்னொரு ஐட்டமா பொங்கல், கிச்சடி, இடியப்பம் , உப்புமா  இப்படி எதாவது ஒன்னு. ரெண்டு வகை சட்னி, சாம்பார் நிச்சயம். கூடவே  ஒரு ஜூஸும் உண்டு.

வட இந்திய வகைகளை நான் திறந்துகூடப் பார்ப்பதில்லை. எனிக்கு வேண்டா,கேட்டோ!

இன்றைய ஸ்பெஷல் மசால்வடை!   என் வருகைக்கான வரவேற்பு:-)))

குத்துமதிப்பா  இன்றைக்கு என்னென்ன  செய்யப்போறோமுன்னு   ஒப்பிச்சேன்.  அவுங்க பங்குக்கு அவுங்களும். ஒன்பதரைக்கு வண்டிகள் வந்தன. அவரவர் வழியில் கிளம்பிட்டோம்.

நாங்க  கண்ணாடி வாங்கிக்கணும்.  தி நகர் ராகவேந்திரா கோவிலுக்குப் பக்கத்துக்கடை. கோவிலுக்குப் போயிட்டு,  ரெண்டு பேருக்கும் கண் பரிசோதனை நடந்து கண்ணாடிகளுக்கு ஆர்டர் கொடுத்தாச்சு.  எனக்கு  கண் சர்ஜரி நடந்து  கண் பளிச் என்றாலும் கூட, படிக்கணுமுன்னா கண்ணாடி  தேவையாத்தான் இருக்கு.  கணினி பக்கத்துலே அதுக்கும்  ஒரு இடம் வச்சுருக்கேன்.

கோபாலுக்கு ரெண்டு கண்ணாடிகள்!  ஒன்னு அவருக்கானது. ரெண்டாவது அவருக்காக  என் முகத்துக்கு!   சுமார் 20 வருசமா கண்ணாடியோடு  பார்த்தே என் முகம் பழகிருச்சாம். இப்போ கண்களுக்கு கண்ணாடி வேண்டாமே தவிர, முகத்துக்குக் கட்டாயம் வேணுமாம். இது எப்படி இருக்கு?

அதுக்குப் பேசாம, கோபால் கண்ணாடி இல்லாமப் பார்த்தால்,  முகம் (என் முகம்) அழகா இருக்குமோல்லியா?  ஹூம்....  இதுக்காக என் பழைய கண்ணாடி ஃப்ரேமிலே ஜஸ்ட் ப்ளெய்ன் க்ளாஸ்  போட்டுக்கணும்.  அதுவும்  கனமே இல்லாத ப்ளாஸ்டிக்கா இருக்கணும். கூடவே  ஃபோட்டோக்ரோமிக்காவும் இருக்கணும். எங்கூர் வெயிலுக்கு (!)  சன் க்ளாஸஸ் கட்டாயம் வேணும். ஓஸோன் லேயரில் பெரிய ஓட்டை இருக்கு நியூஸிக்கு மேலே:(


கடையை நல்லா அப்க்ரேடு  செஞ்சு உள்ளே மாடர்ன் எக்விப்மெண்ட்ஸ் வச்சுருக்காங்க.   அஞ்சு வருசமா இங்கேதான் கண்ணாடி வாங்கிக்கறோம்.
முந்தி மாதிரி இல்லை இண்டியா ஷாப்பிங். எல்லாமே ஏகத்துக்கு விலை ஏறிக்கிடக்கு.  மொத்தம் மூணு கண்ணாடிகள். நல்லா தாளிச்சுட்டாங்க! இத்தனைக்கும்  ரெண்டு ஃப்ரேம்  என்னோட பழைய கண்ணாடியில் இருந்ததுதான். செவ்வாய்க்கிழமை ஆர்டர் செஞ்சு வெள்ளிக்கிழமையே வேணுமுன்னதுக்கு,  தீபாவளி விடுமுறை நாளைக்கு இருக்கு. எப்படியும் முடிச்சுக் கொடுத்துடறேன்னு  சொன்னார்  சாந்தகுமார்.  (அப்படியே  ஆச்சு என்பது மகிழ்ச்சி! இல்லேன்னா படிக்காதவளா இருந்திருப்பேன் மீதிப்பயணம் முழுவதும்)



அடுத்து கோபாலுக்கான டைம்.  பாண்டிபஸார்  கேரளா ஹேர் ட்ரெஸ்ஸிங் ஸலூன். ரத்னா ஸ்டோர்ஸ்க்கு எதுத்த கடை!  முடிவெட்டிக்கணுமாம். இது எல்லா சென்னைப் பயணத்திலும்  வழக்கமான ஒன்னு. எப்ப வந்தாலும் இங்கேதான்  முடி வெட்டிக்குவார்.  போற வழியிலே ஆளுக்கொரு இளநீர். ஒன்னு நாப்பதுரூபாய்!  எப்படி  இப்படி ஏகத்துக்கும் தாறுமாறா  விலை ஏற்றம்!

1939 இல்  சங்குண்ணி நாயர் ஆரம்பிச்சு நடத்தின  ஸலூன் கடை. ஆச்சு இப்போ 75 வருசம்!  வைரவிழா  ஆண்டு இப்போ!  மூணு தலைமுறைகள் மாறி இருக்கு.  சங்குண்ணி நாயரின் மகன் அரவிந்தாகக்ஷன்,அப்புறம்  அரவிந்தாக்ஷனின் மகன் சந்தீப்  என்று  கடையை நடத்திக்கிட்டு இருக்காங்க.  அப்பெல்லாம் பாண்டி பஸார் ஒரு மார்கெட் ஏரியாதான்.  பத்துப்பதினைஞ்சு  கடைகள் இருக்கும் பகுதி. இதுக்கிடையில் ஒரு முடி திருத்தகம். பழைய தெலுங்கு, கன்னட , தமிழ் நடிகர்களும், மற்ற பிரபலங்களும்தான் வாடிக்கையாளர்கள்.  பெரிய பங்களாக்களும் அதைச் சுற்றி  இருக்கும் பரந்த தோட்டங்களுமாத்தான்  அந்தப் பகுதி  (டவுன் ) இருந்துருக்கு.  இப்பவும் கூட சில  பங்களாக்கள்  அங்கங்கே இருக்குன்னாலும்   அடுக்குமாடிகளும்  கடைகண்ணிகளும்   டவுனையே புரட்டிப்போட்டுருச்சு என்பதே உண்மை.  ஷாப்பிங் என்றாலே முதலில் மனசில் வருவது தி.நகர் இல்லையோ!!!!

அப்போ அந்தக்காலத்தில் எப்படி  இருந்ததோ.... அதைக் கொஞ்சம்கூட மாற்றாமல் அப்படியே கடையை வச்சுருக்காங்க என்பதுதான் இதன் விசேஷம். தேக்குமரத்தாலான சுழல் நாற்காலிகள்.  சுவர்முழுக்க  தேக்குமரத்தினால் ஆன ஃப்ரேம் போட்ட பெரிய  கண்ணாடிகள்.  இடையிடையே   கண்ணாடியில்  வரைஞ்ச பழங்காலச் சித்திரங்கள் இப்படி   அமைதியுடன் ஒரு அமர்க்களம்!





ஒரு பக்கச் சுவர்  முழுசும் முடி திருத்தும் வேலைக்கு.  அதற்கு எதிர்ப்புறச் சுவர் அருகில்  கண்ணாடித்தட்டு இட்ட மேஜை. கண்ணாடிக்கு அடியில் சாமிகள்!  எதோ கோவிலுக்கு வந்துட்டோமோன்னு நினைக்கத்தோணும் வகை!







 வாசிக்க சில சஞ்ஜிகைகள்.  ஆவியின் தீபாவளி ஸ்பெஷல்.  அடுத்து சில நாற்காலிகள். சுவரில்  சங்குண்ணி நாயரின் படம். இன்னொரு பக்கம் லக்ஷ்மி, சரஸ்வதி, பிள்ளையார் என்று மல்லிச்சரத்துடன் இருக்கும் பழுப்பேறிய படங்கள். ரவிவர்மாவாக இருக்கணும். அப்பெல்லாம் இப்படித்தான் ........




கடையில் கூட்டமே இல்லை. நாளைக்குத் தீபாவளி என்பதால்   யாரும் வரலை போல.  நமக்கும் நல்லதாப்போச்சு.  கோபாலைப் பார்த்ததும்  ஏற்கெனவே அறிமுகமானவருக்கு  வழங்கும் வரவேற்பு. சிகை அலங்கார  நிபுணர்    கோபாலுக்குப் புதியவர் அல்ல.  அவுங்க வேலையை  அவுங்க தொடங்க, வழக்கத்துக்கு மாறா அங்கிருந்த இருக்கையில் நான்  உக்கார்ந்து சுவர் அண்ட்  மேஜைப்பொருட்களை வேடிக்கைப் பார்க்க ஆரம்பிச்சேன்.






பத்திரிகைகளில்  இவர்களைப்பற்றி வந்த பக்கங்களை ஃப்ரேம் போட்டு வச்சுருந்ததைப் பார்த்ததும், சுவாரசியமான சமாச்சாரம் போல இருக்கேன்னு என் பங்குக்குக் கேள்விகளைக் கேட்டு  பதிவுக்கு மேட்டர் தேத்திக்கிட்டேன்.  பதினைஞ்சே நிமிசத்தில்   எல்லாமே கனகச்சிதமா முடிஞ்சது.




சிகை அலங்கார நிபுணர் ,  இப்போ ஒரு அஞ்சு வருசமாத்தான்  இங்கே. அதுக்கு முந்தி மலேசியாவில் வேலை பார்த்தவர்.  செய்யும் தொழிலை ரொம்பவே ரசிச்சுச் செய்கிறார்!   அதான் கூடுதல் படங்கள்!  முகம் மலர,   கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பொறுமையுடன் பதில் சொன்னார். அவர் பெயரைத்தான் மறந்துட்டேன்:(

திருப்பதின்னு சொன்ன நினைவு.

தொடரும்..........  :-)



பொழுது விடிஞ்சால் தை ஒன்னு!  நண்பர்கள் அனைவருக்கும்  பொங்கல் விழாவுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.

பொங்கல் லீவு ஒரு நாலுநாளைக்கு  இருக்கட்டும். அடுத்த வாரம் ஸ்பெஷல் க்ளாஸ் வச்சுக்கலாம். சரியா? 


24 comments:

said...

திருப்பதி அவர்களுக்கு திருப்தியான வேலை...

said...

முடி திருத்தினது திருப்தி என்றும் சொல்லிக்கலாம். ஒரு டீடெயில் விடாம எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள்(பொங்கல்)

said...

வாழ்த்துக்கு நன்றி.

said...

வல்லியம்மா நலமா? பாத்து எத்தன வருஷம் ஆச்சு.

அடுத்த முறை சென்னை வர்ரப்போ சொல்லுங்க. சந்திக்கலாம்.

கண்ணாடி பிரேமுக்கு விலை அதிகமில்லம்மா. அது குறைஞ்ச விலைல வாங்கிக்கலாம். இந்தக் கண்ணாடிக்குதான் விலை ரொம்ப அதிகம். அதுலயும் மெல்லிசாக மெல்லிசாக விலை கூட. பிளாஸ்டிக் வகை கண்ணாடிகள்தான் இப்ப வருது. அதுலதான் காசு. எந்தக் கடைக்குப் போனாலும் டிஸ்கவுண்ட் கேளுங்க. நான் ஜிகேபி ஆப்டிகல்ஸ்தான் போறது.

கேரளா சலூனை பாண்டி பஜார்ல பாத்திருக்கேன். ஆனா போனதில்ல. அந்த மாதிரி பழைய பாணி கடைகள் எனக்குப் பிடிக்கும்.

said...

அட.... வல்லிம்மா...!

சென்னைச் சுற்றுலா சுவாரஸ்யம்.

இனிய மகர சங்கராந்தி வாழ்த்துகள்.

said...

வல்லிம்மாவுடனா சந்திப்பு, கோபால் சாருக்கு தலைக்கு மேலே வேலை! என சிறப்பான அனுபவங்கள்.....

தொடர்கிறேன்.

said...

சென்னை வருகை பற்றி பதிவை படிக்கும் போது மீண்டும் மனம் அடடா பாக்க முடியாம போச்சேன்னு மனம் ஏங்கிடுச்சு .அடுத்த முறை கண்டிப்பா மீட் பண்ணனும் , வீட்டுக்கு வரணும் துளசி . இப்பவே சொல்லிட்டேன் .
தோழிகளின் படம் அழகு . வல்லியம்மாக்கும் சொல்லிடுங்க .

said...

உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் .

said...

தங்களுக்கும், குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள்!

subbu thatha.
www.vazhvuneri.blogspot.com

said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

said...

பலமுறை உங்களிடம் கேட்டதுண்டு. பார்த்த இடங்களில் பழகிய மனிதர்களின் சமூகம் மற்றும் தொழில் சார்ந்த விசயங்களை ஏன் எழுதுவதில்லை? என்று. இந்தப் பதிவை மிகவும் ரசித்துப் படித்தேன். அற்புதமாக வெளுத்து வாங்கியிருக்கீங்க. இனிய வாழ்த்துகள்

said...

பொங்கல் லீவு முடிஞ்சுருச்சு:-)))))

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

ரொம்ப ரசிச்சு செய்யறார் என்பதே வியப்பு!

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

வாழ்த்துகளுக்கு நன்றி.

கோபாலுக்கு மறதி அதிகம். அதான் நான் போனபிறகு வாசிக்க இவ்ளோ டீடெய்லு:-)

said...

வாங்க பழனி கந்தசாமி ஐயா.

வருகைக்கு நன்றி.

said...

வாங்க ஜிரா

ரொம்அக் குறைஞ்சவிலை ஃப்ரேமுன்னா.... லுக் இல்லையே:(

varilux lenses போடுவதால் விலை அதிகமாத்தான் இருக்கு. டிஸ்கவுண்ட் கிடைச்சாலும் கிட்டத்தட்ட எங்க நியூஸி விலைதான்.

ஆரம்பகாலத்தில் ப்ளூ ஆப்டிக்கல்ஸ் போய்க்கிட்டுஇருந்தேன். இதுவும் பாண்டி பஸார்தான்.

சந்தர்ப்பம் கிடைச்சால் கேரளா ஸலூனுக்குப் போயிட்டு வாங்க ஒருக்கா.

உங்களுக்குப் பிடிக்கும்:-)

said...

வாங்க ஸ்ரீராம்.

வருகைக்கும் வாழ்த்துகளுக்கு நன்றி.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

//கோபால் சாருக்கு தலைக்கு மேலே வேலை//

அடடா.... அருமையான தலைப்பா இருந்துருக்குமே!!!!

said...

வாங்க சசி கலா.
எனக்கும் ஒரு வாசகர் சந்திப்பு போச்சேன்னு இருக்குப்பா!!!

said...

வாங்க ஆறுமுகம் அய்யாசாமி.

வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.

said...

வாங்க சுப்பு ரத்தினம் ஐயா & மீனாட்சி அக்கா.

வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.

said...

வாங்க தமிழ் இளங்கோ.

வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.

said...

வாங்க ஜோதிஜி.

எல்லாம் கிடைப்பதை வச்சுத்தான்.

அன்றைக்கு என்னமோ எல்லாம் கச்சிதமா அமைஞ்சது:-)

கூட்டம் இல்லாததாலும், கலைஞர் முகமலர்ச்சியுடன் இருந்ததாலும் நமக்கும் பேசப் பிடிக்குதே!