Wednesday, January 07, 2015

இந்தச் சுத்துப்போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா? ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 11)

இங்கிட்ருந்து அங்கிட்டுப் போக எவ்ளோ நேரம் செல்லும்?

"சீனிவாசன்,  சொல்லுங்க  எவ்ளோ நேரமாகும் சென்னைக்குப்போய்ச் சேர?"

"ஒரு ஆறுமணி நேரம் ஆகும். நேத்து நான் வந்தப்ப ஆறரை மணி நேரம் ஆச்சு. ட்ராஃபிக்  ஜாஸ்தி. தீபாவளி டைம் பாருங்க......"

"ஏங்க, எவ்ளோ தூரம் ?  "

" ஒரு 350 கிலோமீட்டர்தான்.  நிறைய இடத்துலே பைபாஸ்லே போயிறலாம்."

"காஞ்சீபுரம்  வழியாத்தானே போறோம்? "

"ஆமாமாம்.  அங்கே என்ன பார்க்கணும், ஜஸ்ட் ஒரு கோவில்தானே சொல்லிக்கிட்டு இருந்தே."

மனசுக்குள்ளே சரசரன்னு கணக்குப் போட்டேன்.  இப்போ பனிரெண்டே முக்கால்.  கூடிவந்தால்  ஆறுமணிக்குக் காஞ்சீபுரம் போயிருவோம். நேரா பாண்டவதூதன் கோவில். 25 அடி உயரமாமே!  போனமுறை ஆசை ஆசையாப்போயும்.....  மார்கழின்னு , தரிசனம் கிடைக்கலையே:(   இன்னிக்கு விடறதா இல்லை!   அரைமணி கோவிலுக்கு. அவ்ளோதூரம் போயிட்டு  சும்மா  வராம, ஒரு பர்ச்சேஸ் பண்ணிக்கணும். எனக்கில்லைப்பா....  சாமிக்குத்தான். வஸ்த்திரம் ஒன்னு சாத்தணும்.  அங்கேயே நல்லதா வாங்கிக்கிட்டு  எட்டுமணிக்குக் கிளம்பிட்டால்.... ஒன்பதரைக்குச் சென்னை!   எல்லாம் சரியா இருக்கு!

கோபாலிடம், என் ப்ளானைச் சொன்னதும்  தலையை ஆட்டினார். சீனிவாசனும்   'அதெல்லாம் போயிறலாம்' என்றார்.  என்றாரா.... ....

இந்த மஹல் அந்த மஹல் என்று ஏகப்பட்ட  மஹல்கள்  கல்யாணச் சத்திரங்களா உருமாறி இருக்கு.  ஒவ்வொன்னுக்கும்  வெளியிலே  அவுத்துவிட்ட  ரதங்கள் , மேயும் வெள்ளைக்குதிரைகள்  என்று  ....
மகாராஜாவுக்குச் சொந்தமான  மைதானங்கள் போல இருக்கு.  பேலஸ் க்ரௌண்ட் கேட்  8ன்னு  பார்த்தேனே! அரசு மானியத்தை நிறுத்தி கனகாலமாச்சு:(

 வருமானத்துக்கு இதுவும் ஒரு வழிதானோ என்னவோ! மைதானங்களை  யாரோ காண்ட்ராக்ட் எடுத்துக்கிட்டு  அதுக்குள்ளே அடுத்தடுத்து பலவாசல்களும், பல பந்தல்களுமா போட்டு  காசு பார்க்கறாங்கன்னு நினைக்கிறேன்.



ரதங்கள்  இப்பப் பார்த்தால் சோதாவா இருக்கே தவிர , கல்யாண சமயத்துலே  அலங்காரத்தில் மூழ்கிப்போயிரும், இல்லே?  குதிரைகளும் இப்படித்தான்.  வெள்ளையாப் பிறந்தால்தான் மவுசு.  அதென்ன ராஜகுமாரன்கள் எல்லாம்வெள்ளைக் குதிரை தவிர வேறெதிலும் ஏறமாட்டாங்களோ!


சிட்டியை விட்டு வெளியே போகும் வழியில் விதான் சௌதா வருது. முந்தி ஒரு காலத்தில்  ஹைகோர்ட் வாசலில் நின்னு பார்த்தால் ஜெகஜோதியா  பரந்து  விரிந்திருக்கும்  இந்தக் கட்டிடத்தைக் கண்ட பிரமிப்பு இன்னும் என் மனசின் ஒரு மூலையில் இருக்கு.  அதே ஆவலுடன்   கேமெராவை தயாரா வச்சுருந்தேன். கொஞ்சூண்டு தலையைக் காமிக்குது. மெட்ரோ போடுவதால்  தகர மறைவு.  இந்தப்பக்கம்  கோர்ட் கண்ணுக்குத் தெரியுதான்னு தலையைத் திருப்பினேன். இருக்கு:-)


காலமாற்றம் நடக்காமல் இருக்குமா? கிடைச்சவரை க்ளிக்ஸ்தான்.


கப்பன் பார்க்காண்டை திரும்பணுமுன்னு  சொல்லி இருந்தாங்க. திரும்பினோம்.  கண்ணுக்கெதிரா மூணாப் பிரியும் ரோடு. இது தவிர இடதுபக்கம் இன்னொரு  ரோடு. வலது பக்கம் இன்னொன்னு. எந்தப் பக்கம்  போகணும்?  எங்கேயும்  சைன்போஸ்ட் கண்ணுக்குத் தெம்படலை.  சென்னைன்னு  போட்டுருந்த ஒரு பஸ் நமக்கு முன்னே!   ஆஹா....   பஸ்ஸுக்குப் பின்னாடிப் போகலாமுன்னு  பார்த்தால் அது சட்ன்னு வலது பக்க ரோடில் திரும்பிருச்சு.  நாமும் திரும்பி இருக்கணுமோ?  ப்ரேக்கில் இருந்து காலை எடுக்கும் ஒரு மைக்ரோ  விநாடிக்குள்  நம்மைச் சுத்தி ஏகப்பட்ட வண்டிகள்.  லேன் ட்ராஃபிக் எல்லாம் இல்லை. கூட்டமா நின்னுக்கிட்டு இருக்கு  எல்லா  வண்டிகளும். பக்கத்தில் இருந்த ஆட்டோக்காரரிடம் ஹோசூர் போகும் ரோடு எதுன்னு கேட்டால் முன்னால் கை காமிச்சு அந்த ரோடுன்னார். மூணுலே எது? அதுக்குள்ளே கிடைச்ச  இடைவெளியில் அவர் புகுந்து போயிட்டாரே!


குத்து மதிப்பா ஒரு ரோடுக்குள்ளே நுழைஞ்சுட்டோம். போறோம்,போறோம் ,போய்க்கிட்டே இருக்கோம்.  எங்கெங்கோ திரும்பின பிறகு பார்த்தால் கப்பன்பார்க் கண் முன்னால். இப்படியே வெவ்வேற வழின்னு போய்ப்போய்  பார்க்காண்டையே வந்துக்கிட்டு இருக்கோம். என் கணக்குலே  இது நாலாவது சுத்து.  நமக்குக் கிரகநிலை  சரி இல்லை போல.எப்படியும் ஒன்பது சுத்து சுத்த வச்சுருமோ?

எங்கூர்லே (நியூஸி)  நாமா விரும்பினாலும் கூடக்  காணமப்போக முடியாது. அதனால்தான் போல ஜனங்க  'மலை ஏறப்போறேன், காட்டுக்குள்ளே போகப்போறேன்'னு  எழுதி வச்சுட்டுக் காணாமப் போயிர்றாங்க போல.  எல்லா சாலை சந்திப்புகளிலும் பெயர்ப்பலகைகள், வேணாமுன்னாலும் கூடக் கண்ணில் பளிச்சுன்னு படும். நாற்சந்தி, ரவுண்ட் அபௌட் எல்லாம்   பெயரைக் கைநீட்டிக் காமிக்கும். டூரிஸ்ட்டுகள் , ஏர்ப்போர்ட்டை எங்கே தவறவிட்டுவாங்களோன்னு  விமானப் படம் போட்டு கூட வச்சுருக்காங்க. ஹைவேயா இருந்தால் ஆயிரத்தெட்டு இடங்களில்  இன்ன இடத்துக்கு இங்கே திரும்பு  அடுத்த இடத்துக்கு அங்கே போன்னு துல்லியமாப் போட்டு வச்சுருப்பாங்க.

மூணு பேரும் அவுங்கவுங்க ஜன்னலைத் திறந்து வச்சுக்கிட்டு, எல்லி  எல்லி எல்லின்னா அல்லி அல்லி அல்லின்னு   ஆட்டோ, கார், ஸ்கூட்டர், மோட்டர் ஸைக்கிள்  ஓட்டும்  மக்கள்ஸ், கை காமிக்கும்  சாலையில் எல்லாம் போய்ப்போய் சுத்தி வந்துக்கிட்டு இருக்கோம்.   தீபாவளிக்கூட்டம்...அதுதான் இப்படி ட்ராஃபிக்ன்னு  சமாதானம் வேற சொல்லிக்கறோம்.

அப்புறம்  சாலை ஓரம் நின்னுக்கிட்டு இருந்த ஒரு  போக்குவரத்துப் போலீஸைக் கேட்டதும்,   இந்தப் பக்கம் போய்  லெஃப்ட் திரும்பி   அடுத்த முனையில் ரைட் எடுத்தால்  பைபாஸ்  வந்துருமுன்னு  அவரே  வண்டியை ரிவர்ஸ் எடுக்க கைடு பண்ணி  ஒரு தெருவுக்குள் திருப்பி விட்டுட்டார். ' தேங்க்ஸ் ஆஃபீஸர்'ன்னு சொன்னேன்.  ஏன் சொன்னேன்னு அப்புறம் நொந்துக்கும்படியா ஆச்சு.  அவர் சொன்ன லெஃப்ட் எடுத்தால்....











கலாசிப்பாளையமுன்னு நினைக்கிறேன். காயலான் கடைகள் . ஆள் நடக்க இடமில்லை. அப்புறம் வண்டி?  நல்லா மாட்டிக்கிட்டோம். இரும்பு கேட்,  ட்ரக்குக்கான உதிரி பாகங்கள், கண்டாமுண்டா சாமான்கள் எல்லாம் கொட்டிக்கிடக்கு.  முன்னேயும் போகமுடியலை, பின்னேயும் திரும்ப முடியலை.  'நம்மது கொஞ்சம் பெரியவண்டியா இருக்கு. அதான்   சட்னு திரும்ப முடியலை'ன்னு கோபால் சொல்லிக்கிட்டே இருக்கார். இந்த அழகிலே  சந்துக்குள்ளே நமக்கு முன்னால் பெரிய தனியார் பேருந்து அஸால்ட்டா  உள்ளே வருது. ஓரங்கட்டு ஓரங்கட்டுன்னா எங்கே போய் .....?  ரெண்டு வண்டிக்கும் மயிரிழை இடைவெளி. என் பக்கமா பஸ் போகும்போது ....  வயித்துலே கபீர்....

பெங்களூருவை நல்லாச் சுத்திப் பார்க்கலைன்னு இனி நாக்குமேலே பல் போட முடியாது, கேட்டோ!

  ஒருவழியாத் தப்பிச்சு எதிர் தெருவுக்குள்ளே  நுழைஞ்சு, 'ப்ளை ஓவர் எங்கே எங்கே'ன்னு மசூதியை எல்லாம் சுத்தி வந்தோம்.



"யா அல்லா,  மதத் கரோ..... "

தொடரும்....:-)


ஒரு சிறு குறிப்பு:   தமிழ்மணம் நண்பர்கள் கவனிச்சீங்களான்னு  தெரியலை. பதிவர்கள் நூல் பகுதியில்   கடந்த ஒன்பது நாட்களா அக்கா இடம் பிடிச்சு உக்கார்ந்துருக்காங்க.  வேற யாருக்கும் இடமில்லைன்னு  ஆகிப்போச்சோ!!!!!

ஏங்க்கா.... இப்படி ?

15 comments:

said...


ஒரு இடத்டைத் தேடிப்போகும் போது நன்றாகவே சுத்துகிறீர்கள். எங்களுக்கு சின்ன வயதில் வாயில் வழி என்று சொல்லிக் கொடுத்தார்கள். ஊண்ங்ஆலூஊ ஏறீஊஆஆ. 1955-56-ல் நான் விதான சௌதா கட்டுமானப் பணியில் ஒரு மாதம் சம்பளம் இல்லாமல்வேலை பார்த்திருக்கிறேன். சுட்டி தரட்டுமா விவரங்களுக்கு,?

said...

ஆகா. ஊர் சுத்திப் பாக்குறதுன்னா இதுதான். ஈசி கெட்டிங் அவுட்னா அது எலக்டிரானிக் சிட்டி வழியாத்தான். ஹோசூர் வழிதான் ஈசி. இல்லாட்டி பெங்களூர்ல சுத்திக்கிட்டேயிருக்க வேண்டியதுதான்.

கலாசிபாளையமெல்லாம் போய் வருடங்கள் ஆகுது. பெங்களூர் போன புதுசுல அங்கிருந்துதான் சென்னைக்கு பஸ். அப்பவே அடைசலா இருக்கும். இப்பல்லாம் கேக்கனுமா.

நான் இருந்த பெங்களூரே இப்ப இல்ல போல. இனிமே பெங்களூர் நினைவுகளில் மட்டுந்தான் போல.

said...

எவ்வித சிரமமும் இல்லாமல் நாங்கள் சுற்றிப் பார்த்து விட்டோம் - உங்களின் பகிர்வின் மூலம் அம்மா...

said...

ஊரைச் சுத்துவாங்க.சரி. இப்படியா.
பெங்களூரு முக்கிய சேவையைத் தடுத்துவிட்டதே . கோவில் மசூதி எல்லாம் சுத்திட்டு ஒரு சர்ச்சையும் சுத்தி இருந்தால் புண்ணியமாய் இருந்திருக்கும்.படங்கள் குறையை நிவர்த்தி செய்கின்றன துளசி.

said...

அக்கா, உங்களுடைய பிஜீத் தீவு புத்தகத்தை வாசிக்க வாய்ப்பு கிடைத்தது.. அருமை... முதல் பாகம், இரண்டாம் பாகம் அவ்வளவாக சுவாராஸ்யமாக இல்லை.. நாங்களே நேரில் அனுபவித்தது போன்று இருந்தது... உங்களின் படைப்பிற்குரிய வந்தனம்.

சிவபார்கவி

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

இந்தக் காலத்தில் வாயில் மட்டுமில்லை வலையிலும் இருக்கு வழி என்பதே உண்மை.

ஒரு ஊருக்குப் போக வழி சொல்லும் கூகுள் ஊருக்குள்ளேயே அங்கே இங்கே போக சரியான வழியைச் சொல்றதில்லை பாருங்க. தாற்காலிக ட்ராஃபிக் கண்ட்ரோலுன்னு பல இடங்களை ஒரு வழிப்பாதையா வேற ஆக்கிடறாங்களே உள்ளூர் நிர்வாகிகள்.

சுட்டி தாங்களேன். சரித்திரம் வாசிக்கக் கசக்குமா?

said...

வாங்க ஜிரா.

அந்த ஹொஸூர் வழிக்குத்தானே இந்தப் பாடு!!!

நானும் கலாசிப் பாளையத்தை 1975லே பார்த்ததுதான்.

பெங்களூர் மட்டுமில்லை எல்லா ஊர்களுமே காலப்போக்கில் மாறித்தான் கிடக்கு.

எங்க ஊரைச் சொன்னால் நாலு வருசத்துக்கு முந்தி இருந்ததுலே முக்கால்வாசி காலி. எல்லாம் நிலநடுக்கத்தில் அழிஞ்சு போச்சு:(

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

உங்களுக்காகத்தான் நாங்க சிரமப்பட்டுட்டோமே:-)))

said...

வாங்க வல்லி.

அடடா....சர்ச்சை விட்டுட்டேனே:(

ஒருவேளை சுத்துன வழியில் எதாவது இருந்துருக்குமோன்னு இப்ப யோசனை:-)))

said...

வாங்க சிவபார்கவி.

புதுவரவுக்கு நன்றி.

ஃபிஜி புத்தகத்தில் முன்பாதி அந்தக் கால சரித்திரம். பின்பாதி இந்தக் கால அரசியல். அதான் அப்படி உங்களுக்குத் தோணி இருக்கு.

அக்கான்னுட்டீங்க..... ரொம்ப மகிழ்ச்சி.

அக்கா என்ற தலைப்பில் நம்ம புத்தகம் ஒன்னு இந்த வருச புத்தகத் திருவிழாவுக்கு வெளிவந்துருக்கு.

அதையும் வாசிச்சுட்டுக் கருத்து சொல்லுங்க.

மிகுந்த எதிர்பார்ப்புடன்,
துளசி.

said...

ஐய்யோ! இப்படி சுத்து சுத்துன்னு சுத்துபடியா ஆகி விட்டதே....:(

காஞ்சிபுரத்துக்கு போனீங்களா?தொடர்கிறேன் டீச்சர்.

said...

பின்குறிப்புல மொத வார்த்தைக்கு அர்த்தம் என்ன ரீச்சர்?

said...

வாங்க ரோஷ்ணியம்மா.

அடுத்த பதிவைப் பாருங்க. விளங்கிரும்:-))))

said...

வாங்க கொத்ஸ்.

என்ன, இந்தப் பக்கம் அபூர்வமா!!!!

பின் குறிப்பே சொல்லலை. அது சிறு குறிப்புதான்.

தமிழ்மணம்பக்கம் தலை வச்சுப் படுத்தே கனகாலம் ஆச்சு போல!

முதல் வார்த்தை? போச்சு போச்சு.மறந்தே போச்சு உங்களுக்கு இல்லை? இப்படியும் ஒன்னு இருக்குன்னு......

பொறந்த வீட்டை இப்படி மறந்துட்டீங்களே..... கட்டிக்கொடுத்தபின் அம்புட்டுதானா.... ஷத்ரிய இளவரசிகளைப் போல!

said...

பல இடங்களில் இப்படி வழி கேட்டுச் செல்வதே பெரும் பாடு தான். அந்தந்த ஊரில் இருக்கும் கைடுகளும் காசு பார்ப்பதில் இருக்கும் ஆர்வத்தை வழி சொல்வதில் காண்பிப்பது இல்லை! :))

அடுத்த பகுதியையும் இப்போதே படிச்சு மேலே என்ன ஆச்சுன்னு தெரிஞ்சிக்கிறேன்!