பயணக்கதை நகரவே இல்லை. நீ முடிக்கறதுக்குள்ளே அடுத்த 'பயணம்' வந்துரும் என்கிறார் நம்ம கோபால். அதுக்காக தினமும் எழுதமுடியுதா? நானென்ன ஜெமோவா? சரி. நம்ம கதையை ஆரம்பிக்கலாம். நேற்று தீபாவளி ஒருவழியா முடிஞ்சது.
இன்றைக்குப் பெரிய மனிதர்களின் சந்திப்பு நாள் என்று(ம்) வச்சுக்கலாம். காலையில் வழக்கம்போல்(!) வல்லியம்மாவுடன் சந்திப்பு. வீட்டுலே எல்லாம் ஒரு மாதிரி சரியாச்சுன்னு அங்கேயே இடம் மாறிப் போறாங்க இன்றைக்கு. காலையில் சீக்கிரம் அவுங்க கிளம்புவதால் ப்ரேக்ஃபாஸ்ட் சேர்ந்து சாப்பிட நேரமில்லை:( அவுங்களுக்கு டாட்டா சொல்லிட்டு கொஞ்சம் துக்கத்தோடு போய் ரெண்டு மசால்வடையும் கொஞ்சம் வெண்பொங்கலுமா காலை உணவை முடிச்சேன்:-)
தினமும் காலங்கார்த்தாலை எதுக்கு ஓடணுமுன்னு சீனிவாசனை பத்து மணிக்கு வந்தாப்போதுமுன்னு சொல்லி இருந்தோம். அவர் வந்ததும் போனது நம்ம காற்றுவெளிப்பதிவர் கவிதாயினி மதுமிதா அவர்கள் வீட்டுக்கு. சென்னைப் பயணங்களில் இது வழக்கமான ரவுண்டு என்பதால் தெருப்பெயரை மட்டும் சொன்னால் நம்ம சீனிவாசன் 'டான்'னு கொண்டு போய் வீட்டுவாசலில் நிறுத்திருவார்:-)
கவிதாயினியைப்பற்றி நான் அதிகம் சொல்ல வேண்டியதில்லை. இலக்கிய வட்டாரத்தில் பெரும்புள்ளி. மொழிபெயர்ப்பதில் முக்கிய புள்ளி. இதுவரை ஏராளமான கவிதை, கட்டுரை, முழிபெயர்ப்புப் புத்தகம் என்று வெளி வந்துள்ளன. வாங்கின பரிசுகளை எண்ணி மாளாது! ஆனாலும் துளிகூட கர்வமே இல்லாத எளிமையான பாங்கு! என் மரத்தடி காலத் தோழியும் கூட! ஏகாம்பரியும் நம்ம மரத்தடித்தோழிதான்.
இங்கே போய்ப்பாருங்க, அசந்துருவீங்க.
தீபாவளி இனிப்புகளும் மற்றவைகளுமா கொஞ்சம் அரட்டை. மகள் வேலைக்குக் கிளம்பிக்கிட்டு இருந்தாங்க. வேலை டென்ஷனில் இருந்து விடுபட மகளின் இப்போதைய பொழுது போக்கு காதணிகள் செய்வது. ஏற்கெனவே செஞ்சு வச்சுருந்தவைகளைப் பார்த்தேன். அழகோ அழகு.
பாராட்டுகளுக்குப் பதிலா'உங்களுக்கு எதெது பிடிச்சிருக்கோ அதையெல்லாம் எடுத்துக்குங்க ஆண்ட்டி'ன்னாங்க மகள். மதுவுக்குக் கொண்டு போய்க் கொடுங்கன்னாங்க. இந்த மது என் மகள் மதுமிதா. அவள் நீலக்கலர் ஆள் என்பதால் நீலத்தில் செஞ்சு வைக்க 'ஆர்டர்' (!!!) கொடுத்துட்டுக் கிளம்பினேன்:-))))
சொந்த ஷாப்பிங் கொஞ்சம் செஞ்சுக்க சென்னை சில்க்ஸ் போனோம். கடைக்குப் பின்பக்கம் கார் பார்க்கிங் வசதி அட்டகாசமா இருக்கு! எதிர்பார்க்கவே இல்லை! காத்திருக்கும் நேரத்தில் காஃபி குடிச்சுக்கலாம். இருக்கைகள் போட்டு வச்சுருக்கு. இங்கே ரெஸ்ட் ரூம்கூட இருக்குன்னு பார்த்ததும் 'அட!' என்றே இருந்துந்தது!!!!!
ஸால்வார் கமீஸுக்கான சில துணிகளை வாங்கிக்கிட்டு மகளுக்கு எதாவது தேறுமான்னு பார்த்தால் ஒரு நீலக்கலர் கண்ணில்பட்டது. என்னதான் அவளுக்குப் பிடிச்ச நீலம் என்றாலும் சட்னு அனுமதி இல்லாமல் வாங்கிறமுடியாது. ஷோவாக மாட்டியிருந்த உடுப்பை செல்லில் படம் எடுத்து மகளுக்கு அனுப்பினார் கோபால். பதில் வரும்வரை காத்திருக்கணும்.
அப்படியே பொடி நடையில் அடுத்த கடை போத்தீஸ்க்குப் போனோம். அங்கேயும் ரெண்டு செட் எனக்கு. என் விருப்பத்திற்கேற்ற வகை கிடைப்பது ரொம்பக் கஷ்டமா இருக்கு. அப்படி இருந்தாலும் கலர் சாய்ஸே இல்லை:( எதைப் பார்த்தாலும் உன்னிடம் இருக்கேங்கறார் கோபால். உண்மைதான். ஏற்கெனவே ஒரே காம்பினேஷனில் ரெண்டு மூணு (வெவ்வேற பயணங்களில் தான்) எடுத்துக்கொண்டு போய் ஊர் திரும்பியதும்தான் 'ஐயோ' என்றிருக்கும். போயிட்டுப்போகுது. ஒன்னு பழசானால் ரீப்ளேஸ்மெண்ட் கைவசம்:-)
மகளின் பதில் வந்தது எஸ்ஸு. மறுபடி சென்னை சில்க்ஸ். போதீஸில் இருந்து பரிசுப்பொருளாக துளசி கிடைத்தது. துளசிக்கே துளசி பாருங்க:-)
மகளுக்கான துணிகளை வாங்கிக்கிட்டு நேரா நம்ம முஸ்தாஃபா டெய்லர் கடை. எங்கள் அளவுகளை ஏற்கெனவே குறிச்ச அட்டைகள் கைவசம் இருப்பதால் அதைக் காமிச்சாலே அவர் எழுதிக்குவார். மகளுடையதை மட்டும் வெட்ட வேணாம்.அவளிடம் இன்னொருமுறை கேட்டுட்டுச் சொல்றேன் என்றேன்.
அப்படி இப்படின்னு கடிகாரம் ரொம்ப வேகமா ஓடுதோ? மணி ஒன்னரை தாண்டியாச்சு. வெங்கடநாராயணா சாலை சரவணபவன் அடுத்த ஸ்டாப். என்னென்னவோ காம்போக்கள். சப்பாத்தியும், மினிமீலுமா சாப்பாடு ஆச்சு. லேசா மழை வேற நச் நச்சுன்னு......
அறைக்குத் திரும்பி கொஞ்ச நேரம் ஓய்வெடுத்த பிறகு நம்ம லோட்டஸுக்கு அடுத்து ரெண்டாவது கட்டிடத்துக்குள் நுழைஞ்சோம். மூணு மணி அப்பாய்ண்ட்மெண்ட். மழை நிக்கவேஇல்லை. காருக்குள் சீனிவாசன் நல்ல தூக்கத்தில்! அடுத்த பில்டிங் போக அவரை ஏன் எழுப்புவானேன்? தூங்கட்டும், தூங்கட்டும்.
நம்ம பதிவர் முத்துச்சிதறல் மனோ சாமிநாதன் ஒரு சமயம் மாற்று மருத்துவம் பற்றி எழுதி இருந்த பதிவைப் படிச்சுட்டு, என் கை (தோள்)வலி தீர உபாயம் இருக்கான்னு கேட்ட போது, 'தஞ்சையில் ஒரு மருத்துவர் இருக்கார், வாங்க நான் கூட்டிட்டுப்போறேன்' என்றாங்க. தஞ்சைக்கு இப்போ வரும் சான்ஸ் இல்லை. சென்னைதான் என்றதும், ஒரு விலாசம் கொடுத்தாங்க. பழம் நழுவி பாலில் விழுந்தது. நம்ம லோடஸ் இருக்கும் அதே வெங்கட்ராமன் தெரு. டாக்டர் ஜெயலக்ஷ்மி, 19 வுட் ப்ரிட்ஜ் அபார்ட்மெண்ட்ஸ்.
வீடுதான். இங்கேயே ஒரு அறையில் சிகிச்சை சொல்லிக்கொடுக்கறாங்க. அகுப்ரெஷர். நம்மைப் பற்றிய உடல் நல விவரம் எல்லாம் எழுதிக்கொடுத்தோம். நம் பாதங்களில் இருக்கும் பல்வேறு நரம்பு உள்ள இடங்களில் அழுத்தம் கொடுத்து குறித்துக்கொண்டார் உதவியாளர்.
டாக்டரம்மா அறைக்குள் கூப்பிட்டாங்க. உள்ளே போய் உட்கார்ந்தோம். 'எத்தனை நாள் இருப்பீங்க? இன்றைக்கும் நாளைக்கும்தான். அப்ப ரெண்டு நாளைக்குள் உங்களை சரியாக்கணும். ஆக்கிடலாம் 'புன்முறுவலுடன் சொன்னபோதே காவாசி வலி குறைஞ்ச ஃபீலிங்:-)
ஹாலில் ஒரு இளம்தம்பதியின் ஃபோட்டோ பார்த்தேன். ரொம்ப அழகான அமைதியுடன் இருக்காங்க அந்தப்பெண். இப்போ வயசாச்சுன்னாலும் அதே அமைதியான அழகு டாக்டரின் முகத்தில் இருக்கு!
எங்கெங்கே தொட்டு, எத்தனை முறை அழுத்தம் கொடுக்கணுமுன்னு சொல்லிக் கொடுத்தாங்க. கவனிக்கிறாரான்னு நான் இவரைத் திரும்பிப் பார்த்தால் இவர் காலை சின்ன ஸ்டூலில் வச்சு உட்கார்ந்திருக்க, உதவியாளர் இவருக்கு இங்கே வலி இருக்கா, இப்ப வலிக்குதான்னு கேட்டுக்கிட்டு குறிப்பெடுத்துக்கிட்டு இருக்கார். நியூஸியில் 'பை ஒன் கெட் ஒன் ஃப்ரீ' நினைவுக்கு வந்துச்சு:-)
தோள்வலிக்குக் காது மடலை அமுக்கணும். பதினாலு முறை ஒவ்வொரு காதுக்கும். தோப்புகரணம் டைப். ஆனால் உக்கார்ந்து எழுந்திரிப்பது போல் பாவ்லா காட்ட வேணாம். அது என்ன பதினாலு முறை? அது ஒரு கணக்குன்னாங்க.
அப்புறம் பாதத்தில் பெருவிரல் சைடில் மூணு இடம், குதிகால் சைடில், காலில் , உள்ளங்கையில் இப்படி பதினாலு பதினாலு முறை. பாதத்தின் மேற்பகுதியில் மட்டும் அதில் பாதி. ஏழு!இது மட்டும் நாளுக்கு ஒரே ஒரு முறை!
அழுத்தம் கொடுக்கவேண்டிய இடங்களை பால்பாய்ண்ட் பேனாவால் வட்டம் போட்டுக் குறிச்சுக் கொடுத்தது சூப்பர்! (என்ன ஒன்னு.... வருங்காலத்தில் குளிக்காம இருக்கணுமோ!)
கவனமா இன்றைக்கு இருமுறை இதையெல்லாம் செஞ்சு பார்த்துட்டு மறுநாள் வரச்சொன்னாங்க.
அறைக்குத் திரும்பியதும் சிகிச்சையை ஆரம்பிச்சோம். கஷ்டமா ஒன்னும் இல்லை. ஏறக்குறைய ரெண்டுபேருக்கும் ஒரே சிகிச்சை என்பதால் நோக்கும் நேக்கும் சரியாப்போச்சு:-)
மழை கொஞ்சம் ஓயட்டுமேன்னு காத்திருந்து, சந்தியா பதிப்பகம் போனோம். அசோக் நகர் என்றால் போதும். சீனிவாசன் நேராக் கொண்டுபோய் பதிப்பகத்தின் வாசலில் நிறுத்திருவார்:-) 'அக்கா' வெளிவரும் ஏற்பாடுகள் எந்த நிலையில் இருக்குன்னு பார்க்கணும். 'எல்லா வேலைகளும் முடிஞ்சது. அட்டைப்படம் இன்னும் வரலை. அநேகமா நீங்க ஊர் திரும்புமுன் வந்துரும்' என்றார் பதிப்பக உரிமையாளர் திரு சௌந்தரராஜன்.
கொஞ்ச நேரம் ஊர் உளவாரம் பேசிக்கிட்டு எனக்குத் தேவையான புதுப்புத்தகங்களை தெரிவு செஞ்சுக்கிட்டு இருந்தப்ப உள்ளே இருந்து ஒருத்தர் வந்தார். மெய்ப்பு பார்த்துக்கிட்டு இருந்தாராம். 'நீங்க கையிலே வச்சுக்கிட்டுஇருக்கும் புத்தகம் இவர் எழுதுனது' என்றார் பதிப்பாளர்! என் கையில் விந்தைக் கலைஞனின் உருவச்சித்திரம் . சிறந்த நாவல் 2014, சுஜாதா விருது பெற்ற நூல். ஆசிரியர் சி. மோகன்.
இவர் ஒரு சீன நாவலை மொழிபெயர்த்துள்ளாராம். உடனே அதையும் வாங்கிக்கிட்டேன்.
மூலம்: சீன மொழியில் .நாவல் பெயர் Lang Tuteng by jiang Rong
English translation (enguin group) Wolf Totem
2004 ஆம் வருசம் வெளியான இந்த சீன நாவல், சீனாவில் ரெண்டே வருசத்தில் நாப்பது லட்சம் பிரதிகள் வித்துப்போச்சாம். சீனர்கள் ரொம்ப வாசிக்கிறாங்க போல!
இந்த முழி பெயர்ப்பு சமாச்சாரம் இருக்கு பாருங்க...... நம்ம இந்திய மொழிகளில் இருந்து தமிழுக்கு முழி பெயர்த்தால் குறைஞ்சபட்சம் சூழல், முக்கியமா கதாபாத்திரங்கள், இடங்கள் ஆகியவற்றின் பெயர்களைச் சுலபமா எழுதலாம். நமக்கும் அவ்வளவா கஷ்டம் இருக்காது.
ஆனால்...மற்ற நாடுகளின் மொழிகளில் இருந்து அவற்றை தமிழாக்கும்போது ..... ஐயோ போதுண்டா சாமின்னு ஆகிரும். நான் ஒரு பத்துப்பனிரெண்டு மவோரி கதைகளை மொழி பெயர்த்து முழி பிதுங்கி இருக்கேன். அந்த அனுபவம்தான் பேசுது:-)
அப்புறம் உள்ளே கணினியில் வேலை செஞ்சுக்கிட்டு இருந்தவர்களோடு கொஞ்சம் பேசிட்டு, 'அக்காவை நல்லபடியாக் கரை ஏத்துங்கோ'ன்னு சொன்னேன். சின்னவயசுப் பெண்கள்தான். தினம் கதைகதையா வாசிக்கிறாங்க. நாம் ப்ரூஃப் பார்த்துச் செய்து கொடுக்கும் திருத்தங்களை கணினியில் உள்ள நம்ம புத்தகப் பக்கங்களில் திருத்தி எழுதும் வேலை ரொம்பவே சிரமமானதுதான். போதாக்குறைக்குப் புத்தகம் அச்சுக்குப்போகும்வரை திருத்தங்கள் சொல்வது, கூடுதல் பத்திகளை எழுதி, இதை இந்தப் பக்கத்தில் செருகிருங்கோ. அதை அந்தப் பக்கத்தில் இந்த வரிக்குப் பின்னே சேர்த்துருங்கோன்னு இம்சைஅரசிகளாக இருக்கோமே! பாவம்,அந்தப் பெண்கள்.
அக்கா நல்லா வந்துருக்கு மேடம் என்று சொல்லி என் வயிற்றில் ஐஸ்க்ரீம் வார்த்ததும் இவுங்கதான். சொன்ன வாக்கு தவறாமல் நான் சென்னையில் இருந்து கிளம்புமுன் அக்கா அட்டையையும் அனுப்பி வச்சாங்க. என்னுடைய விசேஷ நன்றிகளை இங்கேயும் பதிவு செஞ்சுக்கறேன். தேங்க்ஸ் லேடீஸ்/\
அதுக்குப்பிறகு அறைக்கு வந்துட்டு வேறெங்கேயும் போகலை. லாங் ஸ்லீவ் உடுப்பு என்பதால் மகள் கை அளவு அனுப்பி இருந்தாள். அவளுக்குக் கை கொஞ்சம் நீளம்:-)
நாளைக் கதை நாளைக்குன்னுட்டு, கீழே ரெஸ்ட்டாரண்டில் எனக்கு ஒரு தோசையும் கோபாலுக்கு ஒரு ஊத்தப்பமும் ரெண்டு லஸ்ஸியும் வாங்கி முழுங்கிட்டு(ஒவ்வொரு முறைஉணவு ஆர்டர் செய்யும்போதும் 'தோ ப்ளேட் லேகி ஆவ் ' சொல்லணும், இங்கே) உறக்கம் வரும்வரை அவரவர் வேலையான கணினி மேய்தல்,டிவி பார்த்தலென்று இருந்தோம்.
தொடரும்...........:-)
PINகுறிப்பு: டாக்டரம்மா வீட்டில் அவுங்க வெப்சைட்டில் எல்லாம் இருக்கு . பார்த்துக்கோன்னு ஒரு போர்டில் எழுதிப்போட்டுருந்தாங்க. அதான் பார்த்து அதில் இருந்து சில படங்களைச் சுட்டுக்கிட்டேன். டாக்டர் வீட்டுக்கும் அதுவும் முதல்முறையா நோயாளியாகப் போகும்போது கேமெராவும் கையுமாப்போனா நல்லாவா இருக்கும்?

32 comments:
அடேயப்பா... நாற்பது இலட்சமா? இங்கே ஐநூறு ஆயிரத்துக்கே நாக்கு தள்ளிப்போகிறது.
பகிரும் ஒவ்வொன்றும் சுவாரசியம் தவறாத ரசனையான பதிவுகள்...
இப்படி ஒரு சிகிச்சையா...?
ஒவ்வொன்றும் ரசனையான சுவாரஸ்யம் அம்மா...
ஸ்வாரசியமான தகவல்கள்....
அக்கா - எனக்கும் பிடித்தது! :) படித்து முடித்து விட்டேன்.....
congrats
//சென்னை சில்க்ஸ் போனோம். கடைக்குப் பின்பக்கம் கார் பார்க்கிங் வசதி அட்டகாசமா இருக்கு! எதிர்பார்க்கவே இல்லை! காத்திருக்கும் நேரத்தில் காஃபி குடிச்சுக்கலாம். இருக்கைகள் போட்டு வச்சுருக்கு. இங்கே ரெஸ்ட் ரூம்கூட இருக்குன்னு பார்த்ததும் 'அட!' என்றே இருந்துந்தது!!!!!//
நல்லியிலும் இந்த வசதி உண்டு! :) இந்த மருத்துவர் தொலைக்காட்சியிலும் சிகிச்சை குறித்துச் சொல்லி இருக்கார். :)
எனக்கு ஒரு நண்பர் பேனா போல் ஒன்றைப் பரிசாகக் கொடுத்திருந்தார். எங்கு வலியொ எங்கு அழுத்த வேண்டுமோ அதெல்லாம் குறித்துஒரு படமும் அதில் உண்டு. நான் இதுவரை உபயோகித்தது இல்லை. எதற்கும் நம்பிக்கை வேண்டும். உங்கள் தோள்வலி குணமாயிற்றா கோபாலின் அனுபவம் எப்படி. ?
சட்டம் போட்ட கட்டங்களுக்குள்ளே இருக்கும் விளக்குகளை ஏற்றி வைத்தால் சும்மா ஜகஜகவென்று ஜொலிக்கும் இல்லையா.. கேரளக்கோயில்களைப்போல.
இந்தமுறை புத்தகக் கண்காட்சியில் நானும் உங்கள் அக்காவை வாங்கினேன். பெங்களூரு திரும்பும்போது ரயிலிலேயே படித்தும்விட்டேன்.
அக்யூபிரஷர் பற்றி நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். எனக்குத் தெரிந்த ஒரு பெண்மணி தனது சர்க்கரை நோய்க்குக் கூட இந்தமுறை மூலம் சிகிச்சை எடுத்துக் கொள்வதாகவும், அலோபதி மருந்துகளை நிறுத்திவிட்டதாகவும் கூறுகிறார்!
ஒரு நொடி கூட வீணாக்காத பயணம் போல... சுவாரஸ்யம்.
வல்லிம்மா அன்ட் துளசிக்கா so sweet :)
க்வில்லிங் காதணிகள் இப்போ சென்னைல ரொம்ப famous அக்கா .நானும் செய்வேன் பட் கம்பி எனக்கு அலர்ஜி
சென்னைக்கு நெக்ஸ்ட் டைம் போகும்போது சுகந்தி அவர்களிடம் வாங்கலாம் க்விலிங் ராணி அவங்கதான் .
ரோஷிணி செல்லம் கூட செய்றா அக்கா ரொம்ப அழகாயிருக்கு .
//ரெஸ்ட் ரூம்கூட இருக்குன்னு பார்த்ததும் // சந்தோஷம் !!
2005 இல் இன்னோர் பிரபல கடைல அங்கே ஒரு 12 வயசு பொண்ணு துடிக்கிறா அவ அம்மா அவள திட்டிடிருந்தாங்க பாவம் :(
அந்த நாற்காலிங்க :))) ஆல் தி ரங்க்ஸ் தங்ஸ் புடைவை செலக்ட் பண்ணும்போது பயன்படும் ROFL:)
வாங்க கீதமஞ்சரி.
எழுத்தாளருக்கு ஒரு பிரதிக்கு 10 ரூபான்னு வச்சாலும் நாலுகோடி தேறிடுமே!!!!!
நம்ம ஊர்லே ஆயிரம் பிரதிதான் ஒரு பதிப்புக்கு. அதுவே விக்காமத் தேங்கிக்கிடக்கு கேள்வி:(
ஆறு கோடி மக்கள்ஸ்லே ஒரு சதம் வாங்கினாலும் விற்பனை எகிறிடுமேப்பா!
வாங்க திண்டுக்கல் தனபாலன்.
இப்படியும் ஒரு சிகிச்சை!
பலன் கொடுத்துக் கொண்டு இருக்கிறது!
வாங்க வெங்கட் நாகராஜ்.
நல்லவேளை அக்காவைப் பிடிச்சுருக்குன்னு சொன்னீங்க.
தலையை குட்டு வாங்க நீட்டிக்கிட்டு இருந்தேன்:-)
வாங்க இலக்கியம்.
வாழ்த்துகளுக்கு நன்றி.
வாங்க கீதா.
நல்லி போயே பலவருசங்களாச்சு. அங்கே இப்ப அவுங்க நகைக்கடை ஒன்னு வந்துருக்கே!
மருத்துவர் , தொலைக் காட்சியில் சொல்றாரா! பேஷ் பேஷ்!
வாங்க ஜி எம் பி ஐயா.
நம்பிக்கை... சொன்னீங்க பாருங்க அது சத்தியமான உண்மை!
நம்பினால்தான் வாழ்க்கையே!
என் தோள்வலி இப்போ 60% குணமாகி இருக்கு. சோம்பலில்லாமல் தினம் அவுங்க சொல்லிக் கொடுத்தபடி செஞ்சுருந்தால் பூரணகுணம் ஆகி இருக்கலாம்.
கோபாலுக்கும் இப்போ எவ்வளவோ தேவலை என்று சொல்கிறார்.
நம்பணும். நம்புவோம்!
வாங்க ரஞ்சனி.
புத்தகத்திருவிழாவில் உங்க புத்தகம் பயங்கரமா (!) விற்றதாமே! இனிய பாராட்டுகள்.
சகல வியாதிகளுக்கும் அக்கூப்ரெஷரில் தீர்வை இருக்குன்னுதான் சொல்றாங்க.
அக்காவுக்கு ஒரு விமரிசனம் எழுதினால் மகிழ்வேன். அதென்னவோ தெரியலை அஞ்சு வருசக் காத்திருப்பாக ஆகிவிட்டது.
முதலில் நம்ம வண்ணதாசன் அவர்களிடம் மதிப்புரை வாங்கலாம் என்று கவிதாயினி மதுமிதா ஐடியா கொடுத்தாங்க. அக்காவின் அதிர்ஷ்டம்... அப்போ அவரது வாழ்வில் ஒரு சோக நிகழ்வு:( உடன்பிறப்பின் இழப்பு. அதனால் நாங்க வாயைத்திறக்காமல் கப்சுன்னு இருந்துட்டோம்.
அப்புறமும் ஒவ்வொரு வருசமும் அக்கா வெளிவரும் அடையாளம் இருக்கும் ஆனால் வராது. இப்படியே போய் திடீர்னு அக்கா 2014 இல் வந்தே வந்துட்டாங்க!
என்னுரையில் கூட ஒரு இடத்தில் இப்படி எழுதி இருந்தேன்.
//நம்ம துளசிதளம் வாசகியான பதிவுலகத்தோழி பதிவர் ராமலக்ஷ்மி (பெங்களூரு) தனி மின்மடலில் இப்படி எழுதி இருந்தாங்க.
//சொல்லாம இருக்க முடியவில்லை. கல்லூரி காலத்தில் சில தொடர்கள் என்னைப் பாதித்ததுண்டு. பல ஆண்டுகள் கழித்து என்னை ரசிக்க மட்டுமின்றி மனதைத் தொலைக்கவும், நெகிழவும், பல இடங்களில் வருந்தவும் வைத்த கதை அக்கா. அப்போ மகன் ஏழேகாலுக்கு ஸ்கூல் கிளம்பணும். உங்க தொடரைப் படிக்கவே அரைமணி முன்னதா எழுந்துக்குவேன். பின்னூட்டமிட்ட நேரங்களைப் பார்த்தால் அது உங்களுக்குத் தெரிய வரலாம்.//
ஹைய்யோ!! இது ஒன்னு போதாதா மனநிறைவு தர!//
இன்னும் அக்காவை நான் 'நேரில்' பார்க்கலை:(
வாங்க ஸ்ரீராம்.
கிடைக்கும் நேரத்தில் நம்மாட்களைச் சந்திப்பது மனசுக்கு நிறைவாக இருக்கேப்பா.
இப்போ விட்டால் பின்னே எப்போ?
வாங்க சாந்தி.
ஹைய்யோ! நானும் அந்த விளக்குகளைப் பார்த்ததும் கேரளக் கோவிலைத்தான் நினைச்சேன்!
எல்லாம் மின்சார விளக்குகள்தான். ராத்திரி நேரம் அந்தப் பக்கம் விஸிட் அடிச்சுருந்தால் பார்த்து ரசித்து இருக்கலாம்! கோட்டை விட்டுட்டேனே:(
வாங்க ஏஞ்சலீன்.
இந்த க்வில்லிங் என்ற பெயர் நினைவுக்கு வரலை. எடுத்துக் கொடுத்ததுக்கு நன்றி.
சுகந்தி எங்கே இருக்காங்க?
ரோஷ்ணியின் கைவேலையை நேரில் பார்த்தேன். பதிவு பின்னாளில் வரும்:-)))
முந்தியெல்லாம் கடை வாசலில் ரங்ஸ்க்கான இருக்கைகள் இருக்கும்.
இப்போ....காஃபி ஷாப் பக்கம். போரடிக்காம இருக்கட்டுமே என்ற நல்லெண்ணத்தையும் பாராட்ட வேணாமா:-)))
எல்லா ரங்க்ஸ்ம் இப்படி இருக்கை தேடி ஓடுவதில்லை. கோபால் என் பக்கத்துலேயே நின்னு நாம் ஆசையா எடுக்கும் துணிகளுக்கு 'அஸ்து' போட்டுக்கிட்டே இருப்பார். நல்லாவே இல்லைன்னு அழுத்தமாச் சொல்றதை, உடனே நான் வாங்கிருவேன்:-)))))
படிக்கப் படிக்க ஆவலாக உள்ளது. இயல்பாக, இயற்கையாக நகாசு இல்லாமல் காணப்படும் தங்களின் பதிவுகள் வாசகர்களை எளிதில் ஈர்க்கின்றன. அதிகமான, ரசிக்கும்படியான தகவல்கள்.
அக்கா இப்போது என் கைகளில்.... சீக்கிரம் படித்துவிட்டு கருத்து சொல்கிறேன்... :)
துளசி அக்கா இப்ப தான் நானும் சென்னை போய் வந்தேன் ஆனால் சந்திப்பு பதிவுகளை எழுத வில்லை. நீஙக் எப்ப சென்னையில் இருந்தீஙக்ள், நான் ஜனவரி 15 .
உங்களுடன் நீங்க சொன்ன இடங்களுக்கெல்லாம் நானும் ஒரு வலம் வந்து விட்டேன்.
துளசி அக்கா வல்லியக்கா,மிக அருமை
நான் அங்கு வந்த போது பார்க்காத , சென்னை சில்க்ஸ் , போத்தீஸ் எல்லாமே பார்த்துட்டேன்
நீங்க எங்க ஹோட்டலில் தங்குவீங்க.. லோட்டஸ்ன்னு சொல்றீங்க.. சென்னை போக வேண்டியிருக்கு. அது தான் கேட்டேன்.
வாங்க ஜம்புலிங்கம் ஐயா.
ரசித்தமைக்கு நன்றிகள்.
நாம் இருக்கும் அழகில் நகாசு வேலைகள் வேற தேவையான்னு விட்டுட்டேன்:-)))
பதிவில் உள்ள எதாவது சமாச்சாரம் எப்பவாவது யாருக்காவது பயனாக இருக்கணும், இருக்கும் என்றுதான் எழுதிக்கொண்டே போகிறேன்!
வாங்க கார்த்திக் சரவணன்.
அக்காவைப் பற்றிய கருத்துகளுக்குக் காத்திருக்கிறேன்.
நன்றி.
வாங்க ஜலீலா.
இந்தப் பயணம் போன(2014) அக்டோபர் 17 இல் ஆரம்பிச்சு நவம்பர் 16 இல் முடிஞ்சுபோனது.
ஊர்திரும்பிய அடுத்த வாரம் முதல் நீட்டி முழக்கி எழுதிக் கொண்டு இருக்கேன். பார்க்கலாம் வரும் அக்டோபருக்குள் முடிக்க முடியுமான்னு:-)
வாங்க அகிலா.
நலமா? ரொம்ப நாளாச்சே 'பார்த்து'!
இந்த லோட்டஸ், ஜிஆர்டி ஹொட்டேல் நடத்தும் சர்வீஸ்ட் அப்பார்ட்மெண்ட். சென்னையில் தி. நகரிலேயே ரெண்டு கிளை இருந்தாலும், நாம் எப்போதும் தங்குவது வெங்கட்ராமன் தெரு கிளையில்தான். இதுதான் ஆதிமூலம்:-)))
http://www.thelotus.in/Default.aspx
சரவணபவன்ல இப்போ நெறைய காம்போக்கள் இருக்கு. அதுலயும் சிலது கொழப்புது. ஒருவாட்டி ஏதோவொரு காம்போ ஆர்டர் பண்ணேன். அதுல ரெண்டு ஐட்டம் வரனுமேன்னு பாத்தா... இது அல்லது அதாம். பல்பு பெருசா வாங்குனேன். ஆனா நல்லாருந்தது.
கொஞ்சம் எதையும் யோசிக்காமச் சாப்பிடலாம் அங்க.
அக்குபஞ்சர் பத்திக் கேள்விப்பட்டிருக்கேன். எங்க ஆபிஸ் நண்பர் ஒருத்தர் அதுக்குப் போயிட்டிருந்தாரு. வலிக்குமான்னு கேட்டேன். லைட்டா.. ஆனா தெரியாதுன்னு சொன்னாரு. சின்ன வயசுல எனக்கு ஊசின்னா பயம். ஊசி போட நாலு நர்சு பிடிக்கனும். அதுனால அதுக்கு மேல அவர் கிட்ட கேக்கல.
ஓ .. நல்ல இருக்கேன் (கோம்).வந்து சத்தமில்லாம படிச்சுட்டுப் போயிடுவேன்..
நன்றி.. ஹோட்டல் விவரத்துக்கு.
ரஸித்து ரஸித்துப் படிக்கிறேன் யாவற்றையும். அன்புடன்
ரசனையான பதிவு.
Post a Comment