Monday, January 26, 2015

எழுத்தாளர் ஏகாம்பரியின் மாடித்தோட்டம்! ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 16)

பாலாவின் வீட்டில் இருந்து கிளம்ப அஞ்சு நிமிசமிருக்கும்வரை ஏகாம்பரி அதாங்க நம்ம எழுத்தாளர் ஏகாம்பரி வீட்டுக்குப் போகும் எண்ணமே இல்லை.  நம்ம திட்டத்தின்படி,  கனியைப் பார்த்துட்டு அங்கிருந்து நேரா அண்ணன் வீடு.

'மணி இன்னும்  நாலு கூட ஆகலையே....  உன் தோழி வேற  (ஏகாம்பரிதான்)  வீட்டுக்கு வரலை, வரலைன்னு சொல்லிக்கிட்டே இருக்காங்கன்னு  சொல்றியேம்மா'ன்னார் கோபால்.

அவுங்க வீடு கூட இங்கிருந்து ரொம்பப் பக்கமாம். போனமுறை கூட அவ்ளோதூரம் வந்துட்டு  என்னைப் பார்க்காமல் போயிட்டீங்களேன்னும் சொன்னாங்க. சரி போயிட்டுப்  போகலாமுன்னு  முதலில் அவுங்களுக்கு செல்லடிச்சேன். வீட்டுலே ஆள் இருக்கான்னு தெரியணுமுல்லெ?

'வாங்க வாங்க.வீட்டுலேதான் இருக்கேன்'னாங்க எழுத்தாளினி(! பெண்பால் சரிவருமா?) ஏகாம்பரி. விலாசம் கேட்டு வச்சுக்கிட்டேன். நம்ம பாலாவும் ரொம்பப்பக்கம்தான். நேர் ரோடு. பத்தே நிமிஷமுன்னு சொல்லி  கையை, தலையை ஆட்டி  கையாலேயே வழியைக் காற்றில்  வரைஞ்சும் காமிச்சு, நம்ம சீனிவாசனுக்கும் விளக்கிச் சொன்னார்.

அந்தப் பத்து நிமிச ஓட்டம்  என்னமோ மும்மடங்கா ஆகுமுன்னு அப்போ சீனிவாசனுக்கும் தெரியலை:-)

ஏகாம்பரியின் பேட்டைக்குள் நுழைஞ்சு அவுங்க  செல்லில் சொன்ன வழியில் போனா..... தெருமுழுக்கத் தோண்டி போட்டுருக்கு. டெட் எண்ட்!  இன்னொருக்கா செல்லடி.

பின்வாங்கி அடுத்த தெரு, இன்னுமொரு தெருன்னு பேட்டையைச் சுத்திப் பார்த்துக்கிட்டு,  வீட்டைக்  கண்டுபிடிச்சோம். மாடியில் வசிக்கிறாங்க ஏகாம்பரி.  நாயன்பர்களுக்கு  வரவேற்பு  தரும் வாசகத்துடன் வாசல்  மிதியடி:-)  காலிங் பெல்லின் அவசியமே  தேவைப்படாது. வாசலில் காலடி ஓசை கேட்ட மறுவிநாடி வீட்டுக்குள்ளே' வள் வள், லொள் லொள்.'

கீழ்தளத்தில் வசிக்கும் பெற்றோரை முதலில் அறிமுகப்படுத்தினதும், அஞ்சு நிமிசப்பேச்சு ஆச்சு. மறுபடி மாடிக்குப் போனோம். அவுங்க செல்லங்களை  வேறொரு அறைக்குள் வச்சுப் பூட்டிட்டாங்க.  எங்க கண்ணுலேயே காமிக்கலைப்பா:(  

அதுக்காகவிட்டுற முடியுமா?  ஊஞ்சலோடு இருக்கும்  ஹால் ஷோ கேஸில் செல்லங்கள் ஜெயிச்சு வாங்கினதை க்ளிக்கிக்கிட்டேன்:-)


சங்குப்பிள்ளையார்  ப்ரமாதம்!

சட்னு கண்ணில் பட்டது வெண் பளிங்கு பூஜை மாடம்!   பிள்ளையார் தலையில் அன்றலர்ந்த அழகான  செம்பருத்தி.  வியப்பின் எல்லைக்குப் போனேன்!  பெரியாரிஸ்ட்டின் வீட்டிலா?  'கணவர் பக்தி மான்.  மேலும் வீட்டைச் சுத்தமாக வைத்துக் கொள்ளப்பிடிக்கும். வீட்டின் ஒரு பகுதிதான் பூஜை இடம் என்பதால் எல்லாமே பளிச்.'  கொள்கை விளக்கம்  ரொம்பச் சரி.  அடுத்தவரின் கருத்தை மதிக்கத் தெரியும் உயர் குணம். க்ரேட்!

எழுத்தாளர் (எழுத்தாளினி) ஏகாம்பரி, இப்பல்லாம் எழுதுவதை ரொம்பக் கு'ரை'ச்சுக்கிட்டு (மொட்டை மாடி)தோட்ட வேலையில்  மூழ்கிட்டாங்க.  'நுனிப்புல்' மேயாமல், ஆழ்ந்து  'உழுது' போட்டு வச்சிருக்கும்  தோட்டம்!




சம்பங்கி,மல்லி, ரோஜா, கனகாம்பரம், அரளி, செத்தி,  செம்பருத்தின்னு பூக்களும் இடையில் நானும், காய்கறிச் செடிகளுமா  நீட் அண்ட் டைடி! ரொம்ப அழகான சின்னத் தோட்டம்.

ஏகாம்பரி வீட்டு வெண்டைக்காய்:-)

 பக்கத்து  ஏகாம்பரி வீட்டுப் பப்பாளிக்காய்:-)

ஆமாம்..... இந்த ஏகாம்பரி யாருன்னு கண்டுபிடிச்சீங்களோ?  தோட்டம் பற்றிய குறிப்புகள் எல்லாம் நக நுனியில்!   உண்மையான ஈடுபாடும்  செடிகொடிகளைப்பற்றிய  அறிவு சேகரிப்பும் இல்லைன்னா...இது சாத்தியமே இல்லையாக்கும், கேட்டோ!




இன்னும் கொஞ்சநேரம் கதைகள் பேசிட்டு, அன்பளிப்பாக  தந்த  'ஆவி'யுடன்  கிளம்பி  அரை மணியில் அண்ணன் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தோம்.
'முதல்நாள் ராத்திரியே இங்கே வந்து தங்கி அதிகாலை கங்கா ஸ்நானம் செஞ்சு தீபாவளி கொண்டாடி  இருக்கலாம்.  இப்படி   இந்த நேரத்துக்கு வரயே'ன்னு  ஒரு  ஆலாபனை!

காஃபி, தீபாவளி  பலகாரங்கள் எல்லாம் ஒரு கை 'பார்த்துட்டு,  இருட்டானதும் பட்டாஸ் வெடிப்பு ஆரம்பம். இது ஒரு மாதிரி  'கேட்டட் கம்யூனிட்டி' லிவிங் என்பதால் (பத்து வீடுகள் மட்டுமே!)  ஒருவர் மாற்றி ஒருவர் என ஆரம்பிச்சு  ஒரு மணி நேரத்துக்கு  டப் டுப். டமார் டமார்.


ராச்சாப்பாட்டையும் அண்ணன் வீட்டுலேயே முடிச்சுக்கிட்டு அறைக்குத் திரும்பினோம். இரவு ட்யூட்டில் நம்ம  ரங்கநாதன். தீபாவளி ஸ்பெஷல் என்னன்னு கேட்டால்,  'இன்றைக்கு இட்லி சாப்பிட்டேன்' என்றார்! ஹைய்யோ  இட்லியா !!!!  ஊருக்குப் போகலை. சென்னையில் தான் இந்த வருசமும் தீபாவளியாம்.

வீட்டில் இருந்து கொண்டு வந்த தீபாவளி சமாச்சாரங்களில்  ஒரு பாதியை  ரங்கநாதனுக்கும் மற்றொரு பாதியை சீனிவாசனுக்கும்  பங்கு போட்டதும்தான்  மனசுக்கு நிம்மதி ஆச்சு.

இரவு  ரொம்ப நேரம் வரை  பட்டாஸ் சப்தங்கள் இங்கொன்னும் அங்கொன்னுமாக் கேட்டுக்கிட்டே இருந்தாலும்....  ஏதோ ஒரு  கணத்தில்  தூக்கத்தில் மூழ்கித்தான் போனேன்.

தொடரும்..........:-)

அனைவருக்கும் இந்தியக் 'குடி'யரசு தினத்திற்கான இனிய வாழ்த்து(க்)கள்!




24 comments:

said...

கொள்கை சூப்பர்...!

ஆகா...! அழகான தோட்டம்...

said...

மொட்டைமாடில வீட்டுத்தோட்டம் பிரமாதம்னு, ‘ஏகாம்பரி’ மேடத்துக்கு சொல்லிடுங்க மேடம்!

said...

துளசி, விலாவாரியாய் போட்டோ போட்டதற்கு நன்னி. அப்படியே சின்ன திருத்தம். அந்த பப்பாளி மரமும் என்னுது :-) வீட்டை சுற்றி இருக்கும் ஐந்தடி நிலத்தில் மரமாய் வளர்ந்து நிக்குது.

said...

அனுபவம் அருமை. புகைப்படங்கள் கண்ணைக் கவர்ந்தன.

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

ரசிப்புக்கு நன்றீஸ்.

said...

வாங்க ஆறுமுகம் அய்யாசாமி.

ஏகாம்பரியே வந்து பார்த்துட்டுப் போயிட்டாங்க!

பப்பாளி வேற அவுங்களுதாமே!

said...

வாங்க உஷா.

ஆ....பப்பாளி..... தவறு நடந்து போச்சுப்பா:( திருத்திட்டேன்! நன்றி.

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

ஏகாம்பரியின் பராமரிப்பும் அருமை! அதுதான் அழகான படங்களும் கிடைத்தன.

வருகைக்கு நன்றி.

said...

அருமையான கண்ணுக்குக்குளிர்ச்சியான தோட்டம். ரொம்ப நல்ல பராமரிப்பும் கூட! செடிகளோடு பேசிக் கொண்டிருந்தாலே பொழுது போயிடும். :)

said...

அடடே! ராமச்சந்திரன் உஷா வீட்டுத் தோட்டமா? மொதமொதலா ஜிரான்னு கூப்டது அவங்கதானே :)

தோட்டம் அருமையோ அருமை. தூக்கிக் கொண்டு வந்து எங்க அப்பார்ட்மெண்ட் மாடில வெச்சிறத் தோணுது.

அப்புறம்... தோட்டத்துக்குச் சுத்திப் போடச் சொல்லுங்க. ஓஓஓ.. உஷா அதெல்லாம் பண்ண மாட்டாங்கள்ள :)

said...

வாவ் உஷாவின் தோட்டம் அழகு

அருமை துளசி கலக்குறீங்க பச்சைப் பட்டில் :)

said...

அழகிய மாடித் தோட்டம். இதைப் பராமரிக்க தனிப் பொறுமை வேண்டும்!

நான் மகா சோம்பேறியாக்கும்!

:))

said...

# 'குடி'யரசு தினத்திற்கான இனிய வாழ்த்து(க்)கள்!#
எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும் ,அதென்ன 'குடி 'அரசு ?

said...

அனைவருக்கு நன்றி- இப்படிக்கு எழுத்தாளினி ஏகாம்பரி :-)

ஜீரா, நலமா? முகநூலில் இருக்கிறாயா? இருந்தால் எனக்கு ஒரு பிரண்ட் ரிக்வெஸ்ட் கொடு

said...

சிறப்பான கொண்டாட்டமாக இருந்ததில் எனக்கும் மகிழ்ச்சி....

said...

வாங்க கீதா.

அவுங்க வீட்டுலே ரெண்டு செல்லங்கள் இருக்காங்களே. அவர்களிடம் பேசினாலும் பொழுது இன்னும் ஜாலியாப் போகுமே:-)))))

said...

வாங்க ஜிரா.

சென்னைதானே ... ட்ரான்ஸ்ப்ளான்ட் பண்ணால் ஆச்சு:-)

விட்டுறாதீங்க!

said...

வாங்க தேனே!

ரொம்ப நீட்டா இருக்குப்பா உஷா வீட்டு மாடித்தோட்டம்!

அது பச்சைப் பட்டு இல்லைப்பா.ஸில்க் காட்டன் தான்:-) என்னவோ பேர் சொன்னாங்க. மறந்து போச்:(

said...

வாங்க ஸ்ரீராம்.

ஆரம்பம்தான் கொஞ்சம் கஷ்டம். பலன் கிடைக்க ஆரம்பிச்சதும் ஆர்வம் தானே வந்துரும்.

நம்ம கோபால் கூட இப்பெல்லாம் காலையில் எழுந்ததும் தோட்டத்தை ஒரு பார்வை பார்த்துட்டு வந்து சேதிகள் சொல்வார். "மிளகாய்ச்செடியில் மூணு மிளகாய் வந்துருக்கு! தக்காளி எக்கச்சக்கமா இருக்கு!"

said...

வாங்க பகவான் ஜி.

என்னங்க இது தமிழ்நாட்டுலே இருந்துக்கிட்டு 'குடி' அரசு தெரியலைன்னு சொல்றீங்க?

அதான் 'குடி' மக்களுக்கு அரசே(கடைகள் வச்சு) ஊத்திக் கொடுக்குதே!

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

ரசிப்புக்கு நன்றீஸ்.

said...

நல்ல நன்றி நவிலல் உஷா!

டேங்கீஸ்.

said...

மனம் வசீகரிக்கும் மாடித்தோட்டம். அழகும் நேர்த்தியுமாய்... பாராட்டுகள் எழுத்தாளினி ஏகாம்பரி அவர்களுக்கு. படங்களால் கண்களுக்கு விருந்தளித்த தங்களுக்கு நன்றி டீச்சர்.

said...

அழகான தோட்டம். பரிசுபெற்ற செல்லங்களுக்கு வாழ்த்துகள்.