Wednesday, January 21, 2015

புத்தகத் திருவிழாவில் வாங்** புத்தகங்கள் !

இன்னிக்குத்தான் கடைசி நாளாம்லெ!   மக்கள்ஸ்  ஓடியோடி புத்தகங்கள் வாங்கிக்குவிச்சுக்கிட்டு  இருக்காங்க.  பதிவுகளும் படங்களும், ஃபேஸ்புக் ஸ்டேடஸுமா ஒரே கலக்கல்.

நிறைய பதிவர்களின் புத்தகங்களும் வெளிவந்திருக்கு!  அனைவருக்கும் மனம் நிறைந்த இனிய வாழ்த்து(க்)கள்.

பதிவுலகம்  என்று ஒன்று வந்த பின்   எழுத்தாளர் என்ற பிம்பம் உடைபட்டுப்போச்சுன்னுதான் சொல்லணும்.  அந்தக் காலத்துலே  வாராந்தரிகளில்  சிறுகதை எழுதுபவர்களையும், தொடர் எழுதுபவர்களையும்  'ஆ'ன்னு வாய் பிளந்து  பார்த்து நின்ற நினைவு!  இப்ப எல்லோரும் நம்மக்கள் ஆயாச்சு.  ரொம்ப நல்ல சமாச்சாரம்.

இந்த முறை திருவிழா நகரத்துக்குள்ளே,  தெருக்களுக்குப்  பெயர்கள் எல்லாம் வச்சுருக்காங்க.   பார்க்கவே  கம்பீரமா இருக்கு!


இது முப்பத்தியெட்டாம் புத்தகத் திருவிழா ! இதை ஏன் புத்தகக் கண்காட்சின்னு சொல்றாங்கன்னு தெரியலை:(  ஒருவேளை அப்பளம்(மட்டும்)  வாங்கித் தின்னவே போகும்  மக்களுக்கான  சொல்லாடலோ!!

இந்த முறை குழந்தைகளுக்கான  புத்தகங்கள் நிறைய வந்துருக்கு.  நம்ம விழியன்  (இல்லே உமாநாத்தோ?) ஏகப்பட்டவைகளை எழுதிக் குவிச்சு முன்னணியில் நிக்கறார். அவருக்கு பதிவுலக நண்பர்கள்/அன்பர்கள் சார்பில்  நம் வாழ்த்துகளை இங்கே  பதிவு செய்கின்றோம்.


 என் புத்தகப் பட்டியல் இதோ!

காசு கொடுத்து வாங்கியவை: 


கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி :  நாகரத்தினம் கிருஷ்ணா

சன்னலொட்டி அமரும் குருவிகள்  :   நாகரத்தினம் கிருஷ்ணா

புத்ர :  லா ச ர

கல் சிரிக்கிறது  : லா ச ர


ஓநாய் குலச்சின்னம் (மொழிபெயர்ப்பு) சி. மோகன்

விந்தைக் கலைஞனின் உருவச்சித்திரம்  : சி மோகன் (சுஜாதா விருது 2014)

ஆரண்யநிவாஸ்  :  ஆர் ராமமூர்த்தி

சரிதாயணம் :  பாலகணேஷ்

ஒரு நடுப்பகல் மரணம் :  சுஜாதா

கரையெல்லாம் செண்பகப்பூ  :  சுஜாதா

ஆதலினால் காதல் செய்வீர்    :  சுஜாதா

பிரதாப முதலியார் சரித்திரம் : மாயூரம் வேதநாயகம் பிள்ளை



உடல்நலம் உங்கள் கையில் :   Dr. J  Jayalakshmi    &  Dr. C G. Srilakshmi

Finger Tips :  Dr. J  Jayalakshmi    &  Dr. C G. Srilakshmi

Acupressure for good health:   Dr. J  Jayalakshmi    &  Dr. C G. Srilakshmi

health is in your hands  :  Dr. J  Jayalakshmi    &  Dr. C G. Srilakshmi


ஆரோக்கிய வாழ்வுக்கு 55 ஆசனங்கள்  : ஜெகாதா

 பரிசாகக்  கிடைத்தவை :-)

வாழ்வின் விளிம்பில் : ஜி எம் பாலசுப்ரமணியம்

அடைமழை:   ராமலக்ஷ்மி

இலைகள் பழுக்காத உலகம்:   ராமலக்ஷ்மி

துலக்கம் :  பாலபாரதி

ஆவி தீபாவளிமலர் (2014) : ராமசந்திரன் உஷா

காலம்  :  கவிதாயினி மதுமிதா

நல்லா எழுதுங்க நல்லதையே எழுதுங்க : வழக்குரைஞர் பி ஆர்  ஜெயராஜன்

காற்றின் சிற்பங்கள்  :

மலர்மஞ்சம்  : தி.ஜானகிராமன்  ( வல்லியம்மா)

மற்றும் சில கோவில்களின் தலபுராணங்கள். (பின்னே பதிவுக்கு எப்படி மேட்டர் தேத்துவதாம்?)


புத்தகத்திருவிழாவுக்குப்போகமுடியலையே என்ற குறை நம்ம மக்கள்ஸின்  பதிவுகளால்  ஓரளவு தீர்ந்தாலும்..... மீதிக்குறையை  நீக்க,............  திருவிழாப் படங்களைப் பார்த்துக்கிட்டு இருக்கேன். எல்லாம் போன வருசம் எடுத்தவை:-))))

அனைவருக்கும் அன்புடன்........
துளசி கோபால்.




28 comments:

ஜோதிஜி said...

ஆகா இதுவே ஒரு பெரிய (சுகமான) சுமையாக இருக்குமே? எப்படி கொண்டு போகப் போறீங்க?

துளசி கோபால் said...

வாங்க ஜோதிஜி.

கோபாலின் SIA Gold card உதவியால் கூடுதலா 30 கிலோ கிடைச்சது. அதுலே கொண்டு வந்துட்டேன்:-)

உங்களை திருப்பூரில் சந்திச்ச பயணத்தின் முடிவில் வாங்கியவைகளே இவை:-)

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

இப்பதிவைக் கண்டவர்களுக்கு வாசிப்பின்மீதான ஆர்வம் அதிகரிக்கும். நன்றி.

Geetha Sambasivam said...

புத்தகத் திருவிழாவின் போது சென்னை? சுஜாதா புத்தகங்கள் இணையத்திலேயே கிடைக்கின்றன. நம்ம நண்பர்கள் புத்தகங்களும் வாங்கி இருப்பதில் மகிழ்ச்சி.

திண்டுக்கல் தனபாலன் said...

அனைவருக்கும் வாழ்த்துக்கள் அம்மா...

வெங்கட் நாகராஜ் said...

புத்தகப் பட்டியல் பிரமிக்க வைக்கிறது.

இந்த வருடத்தின் புத்தகக் காட்சியில் எடுத்த சில படங்கள் எனது தளத்தில் கிடைக்கும்! [விளம்பரம் அல்ல! :)]

http://venkatnagaraj.blogspot.com/2015/01/blog-post_20.html

இலவசக்கொத்தனார் said...

இவ்வளவு வாங்** இருக்கு ஆனா இந்த வருஷமும் இலக்கண புக்கு வாங்** விட்டுப் போச்சு போல.. :)

துளசி கோபால் said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

துளசி கோபால் said...

வாங்க கீதா.

புத்தகத் திருவிழாவுக்கு மட்டுமா தினமும் சென்னை வந்துருவேனே கனவில்:-)

அக்டோபர்/நவம்பர் பயணம் முடிச்சு வரும்போது வாங்கியவைகளே இவை.

புத்தக விழான்னால் ஒரு 10% கழிவு கிடைக்கும். மற்ற நாட்களில் இல்லை . ஆனால் நான் அங்கே வரும்போது விட்டுட்டால் வேற ச்சான்ஸ் ஏது?

துளசி கோபால் said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

அனைவரின் சார்பிலும் நன்றீஸ்.

துளசி கோபால் said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

துளசி கோபால் said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

உங்க பக்கத்துக்குப் போனால் ஒரு இன்ப அதிர்ச்சி கொடுத்துருக்கீங்க!!!!

நன்றியோ நன்றி.

துளசி கோபால் said...

வாங்க கொத்ஸ்.

உங்க இலக்கணத்தை வாங்* நினைச்சதும் கடையில் கேட்டதும் உண்மை.
கிழக்கு அங்கே 'புதுப்புத்தக நிலையத்தில்' உதிப்பதில்லையாமே:(

நீங்க வேற எனக்கான காப்பியை எடுத்து வச்சுருக்கீங்க. அதை நேரில் வந்தே வாங்கிக்கறேன்! அதுவரை பிழையோடு எழுதலாமே:-))))

ஸ்ரீராம். said...

நிஜமாகவே சிலபேர் இங்கு வெறும் கண்காட்சி போலவே வந்து செல்கிறார்கள். கையில் ஒரு புத்தகம் கூட வாங்காமல் திரும்பிச் செல்வோரைப் பார்த்து வியந்திருக்கிறேன்.

இந்த முறை வாசகர் கூட்டம் கம்மிதான் என்று நினைக்கிறேன்.

KILLERGEE Devakottai said...


ஆத்தாடி இம்பூட்டு புத்தகமா ?

எனது குறும்படம் காண வருக....

ப.கந்தசாமி said...

புத்தகங்களையெல்லாம் படிப்பீங்களா?

Anuprem said...

அப்பா ...எத்தனை புத்தகங்கள் படிக்க ஆசையாய் உள்ளது ...

இன்று தான் உங்கள் தளத்திற்கு வந்தேன் .....அருமையான பதிவுகள்.. வாழ்த்துக்கள்

தி.தமிழ் இளங்கோ said...

உங்கள் வாசிப்பு பயணம் தொடரட்டும். சிறக்கட்டும். வாழ்த்துக்கள்.

Unknown said...

nice collection . படித்தபின் விமர்சனம் வந்த நல்ல இருக்கும்

துளசி கோபால் said...

வாங்க ஸ்ரீராம்.

புத்தகம் வாங்கலைன்னாலும் இப்போ பார்த்து வச்சுக்கிட்டு அப்புறம் வந்து வாங்குவாங்கன்னு ஒரு நம்பிக்கையை நாம் வளர்த்துக்கலாம்:-)

துளசி கோபால் said...

வாங்க கில்லர்ஜி.

இம்பூட்டா? இத்தனூண்டுன்னு சொல்லிக்கிட்டு இருக்கேனே:-)

குறும்படம் பார்க்க வந்துக்கிட்டு இருக்கேன் இப்போ!

துளசி கோபால் said...

வாங்க பழனி கந்தசாமி ஐயா.

என்ன இப்படிக் கேட்டுட்டீங்க?

அப்பப்ப எழுத்துக்கூட்டி வாசிப்பேனே!

துளசி கோபால் said...

வாங்க அனுராதா ப்ரேம்.

வணக்கம்.

முதல் வருகைக்கு நன்றி.

வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.

துளசிதளத்தில் இதுவரை 1632 பதிவுகள் வெளிவந்துள்ளன.
நேரம்கிடைக்கும்போது பாருங்கள்.

நன்றி. மீண்டும் வருக.

துளசி கோபால் said...

வாங்க தமிழ் இளங்கோ.

வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.

துளசி கோபால் said...

வாங்க சசி கலா.

ஐயோ....விமரிசனமா? செத்தேன்:-))))

G.Ragavan said...

இதெல்லாம் போன வருடம் வாங்கிய புத்தகங்களா? ஜிரா எழுதிய நாலுவரி நோட்டு மிஸ்சாகுது டீச்சர் :)

நானும் போயிட்டு வந்துட்டேன். இதோ பதிவு https://gragavanblog.wordpress.com/2015/01/24/chennai-bookfair-2015/ :)

துளசி கோபால் said...

வாங்க ஜிரா.

இது இந்த 2014 அக்டோபர் -நவம்பர் பயணத்தில் வாங்கிவந்தவை.
அதென்ன நாலுவரி நோட்டு?

நான் அதை மிஸ் செஞ்சது போலவே நீங்களும் அக்காவை மிஸ் செஞ்சுட்டீங்க :-)

மாதேவி said...

இவ்வளவு புத்தகங்களா! மகிழ்ச்சியாக இருக்கிறது.
நண்பரின்தயவில் நமக்கும் ஓரிரு புத்தகங்கள் கிடைத்தன.