Friday, November 01, 2019

பைபை பூரி..... !!!!! (பயணத்தொடர், பகுதி 163 )

டான்னு எட்டு ஆகும்போது  நாம் தயாராகிக் கீழே போயாச்சு. செக்கவுட்டும் ஆச்சு.  ப்ரேக்ஃபாஸ்ட்  முடிச்சுட்டுக் கிளம்பணும்.  எட்டே முக்காலுக்கு வண்டிக்குச் சொல்லி இருக்கோம்.  ஜமீந்தாரின் நினைவுப் பரிசு  ஒன்னும் கொடுத்தாங்க.  ரதயாத்ரா ஜகந்நாத் பரிவார் !
டைனிங் ஹாலில் நல்ல கூட்டம்.  நேத்து வந்துருப்பாங்க போல !  பிள்ளைகளின் அட்டகாசம் அதிகம்.  ரொம்பவும் கூச்சல் போடறதும், குறுக்கே பாயறதுமா  இருக்காங்க.  இதுலே  ஜூஸை எடுத்துக்கிட்டுப்போய், கொட்டிக் கவிழ்த்துன்னுன்னு.....  பணியாளர்கள் ஓடியோடிச் சுத்தம் செஞ்சுக்கிட்டு இருந்தாங்க.

குழந்தையையும் தெய்வத்தையும் கொண்டாட வேணும்தான். இல்லைங்கலை.....  ஆனால் அடுத்தவனுக்கு உபத்திரவம் கொடுக்காம இருக்கணுமுன்னு சொல்லிவைக்கப்டாதோ? முக்கியமாப் பொது இடங்களில் எப்படி நடந்துக்கணுமுன்னு ......    ப்ச்.... 
ப்ரேக்ஃபாஸ்ட்  ஆனதும் எட்டேமுக்காலுக்குக் கிளம்பிட்டோம். நேரா  புபனேஷ்வர் ஏர்ப்போர்ட்தான்.  நமக்கு ஃப்ளைட் பகல் 12.10க்கு.  ரெண்டு மணி நேரத்துக்கு முன்னே அங்கே இருந்தால் போதும்தான்.


அதென்னமோ பூரி நகரைக் கடந்து போகும்போது த்வார்கா நினைவு வந்துக்கிட்டே இருந்தது.  ஒருவேளை வழியில் பார்த்த பஸ் ஸ்டாண்டு கட்டடம் காரணமோ?
Malatipatpur Bus Terminal, பூரி நகருக்கு வெளியே ஏழு கிமீ தூரத்தில் புதுசாக் கட்டி இருக்காங்க. மூணு வருஷத்துக்கு முன்னே (2015) நபகளேபரா  விழா நடந்தப்பக் கட்டுனதுதான். பத்து ஏக்கர் நிலத்தில் எழுபது கோடி  ரூபாய் செலவில் அருமையா,  ஒடிஷா கட்டடக்கலை அம்சத்தில்  பார்க்கவே நல்லா இருக்கு! கண்ணைக் கடிக்கலை, கேட்டோ !

விழாக்காலங்களில்  லக்ஷக் கணக்கான பக்தர்கள் வருகைக்கான  வசதி !
பூரி ஊர் கொஞ்சம் அழுக்கும் புழுக்குமாத்தான்.....   இப்பதானே ரதயாத்ரை முடிஞ்சது. உடனே பெருமழை, வெள்ளம் எல்லாம் கூடச்  சேர்ந்ததால் இருக்கலாம்.... சீக்கிரம் சுத்தம் செய்து,  ஸ்வொச்பாரத் பெயரைக் காப்பாற்றட்டும்...
டோல் ரோடில் பயணம் சுகம்.   டோல் கேட் தாண்டி கொஞ்ச தூரத்தில் கௌரி ஹேண்டிக்ராஃப்ட். அழகழகான சிற்பங்களும் சிலைகளுமா.....

புபனேஷ்வர் நகருக்குள் போகாமலேயே  ஏர்ப்போர்ட் சாலையில் போனால் ஒரு பக்கம் நிறையப்பேர் வரிசையில்....  நமக்கு எதுக்கு இந்த வரவேற்பெல்லாம்....  பரவாயில்லை... இருக்கட்டும்...  :-)  ஆளும்கட்சி சம்பந்தமுள்ளது போல.... முதலமைச்சர் படம் போட்ட பதாகை.....

ஒன்னேகால் மணி நேரத்துலே கொண்டு வந்து சேர்த்துட்டார் ட்ரைவர்.  பத்திரமாத் திரும்பிப் போகச் சொல்லிட்டுச் செக்கின்  செஞ்சுக்கப் போனோம்.   வாசலிலேயே எல்லா ஏர்லைன்ஸுக்கும்  கவுன்ட்டர்ஸ் போட்டு வச்சுருக்காங்க.

உள்ளே செல்ஃப் செக்கின் செஞ்சுக்கலாமாம்.  அது என்ன சிஸ்டமோ.....   உள்ளே  வெளியேன்னு....
வேடிக்கை பார்க்க ஒன்னும் இல்லை, இந்த புறப்பாடு ஏரியாவில். ஒரே ஒரு புள்ளையார்தான் இருக்கார்.
வருகைப்பகுதியில் இருப்பதுபோல் ஒரிஸ்ஸாவின் மணல் சிற்பம் ஒன்னு  இங்கேயும் வச்சுருக்கப்டாதோ?  உண்மையில் பூரிக் கடற்கரைதான் மணல்சிற்பச் சிறப்பு பெற்ற இடம்.  நாம் இருந்த மூணுநாட்களில் ஒரு சிற்பத்தைக்கூடப் பார்க்கலை.... அடிச்சுப்பேய்ஞ்ச மழையில் இதை எதிர்பார்ப்பதே அநியாயம் இல்லையோ?

மைசூரில்  ஏகப்பட்ட மணல்சிற்பங்களைப் பார்த்த நினைவு மனசில் வந்து போனது....

ஒருமணி நேரம்போல போரடிச்சுக்கிட்டு உக்கார்ந்தபின் போர்டிங் ஆச்சு. உள்ளூர் தினசரியில் ' சென்னை சம்பவம்' பற்றிக் கொஞ்சம் இருந்தது.....

விமானநிலையப் பணியாளர்களில் ஒருவர் வீல்சேரில் இருந்தார்.  பரவாயில்லையே.....  ஃபிஸிக்கல்லி சேலஞ்சுடு மக்களுக்கும்  நல்ல வேலை கிடைக்குதுன்னு  பாராட்டினேன். அடுத்த ரெண்டாவது நிமிட் அவர்  எழுந்து நடந்துபோனார். யாரோ பயணிக்காகக் கொண்டு வந்த வீல்சேர் அது!  அப்புறம்  மற்ற பணியாளர்களில் ஒருவர் அதில்  இடம்பிடிச்சு உக்கார்ந்தார்.  கால் வலிக்கு ரெஸ்ட் எடுத்துக்கறாங்க போல :-)


சொன்ன நேரத்துக்கு   இண்டிகோ வண்டி கிளம்பிருச்சு. 110  நிமிட் ஃப்ளைட்னு  சொன்னாங்க. மேலே போயிட்டா அநேகமா எல்லா ஊரும் ஒரேமாதிரிதான் தெரியும்.  ஆனால் இங்கே பேய்மழையின் பாதிப்பு கண்ணிலே பட்டது.... மகாநதி ஒருபக்கம் தளும்பத் தளும்ப....

அப்பப்ப முழிச்சுப் பார்த்துக்கிட்டும்,  முழிப்பு வந்தவுடன் க்ளிக்கறதுமா நேரம் போயிருச்சு.   சட்னு வந்த ஒரு முழிப்பில் பார்த்தால்  சேப்பாக் ஸ்டேடியம்.  சென்னை வந்துட்டோம்போல...
கவனமாப் பார்த்ததில்  சமாதிகள் சில கண்ணில் பட்டன.  புதுசா வரப்போவதும்  அங்கெதான் இருக்கு....    நேத்துதான்....   மண்ணுக்குள்....
எவ்ளோ அழகான கடற்கரை.... அதிக நீளம்....உலகத்தின் மூணாவது இடத்தில்.....  இதை நாம் வச்சுருக்கும் விதம் பார்த்தால்....  ப்ச்.....

சென்னை விமானநிலையம் சமீபிக்கும்போது இன்னும் கொஞ்சம் க்ளிக்ஸ் ஆச்சு. சென்னைக்குப் பகல்நேரத்துலே பறக்கறது  நமக்கு அதிகமில்லை. பெரும்பாலும் ராத்திரி வர்றதும், ராத்திரி போறதுமாத்தான் இருக்கு நம்ம பயணங்கள்.... அதுவும்  உள்நாட்டு முனையத்துக்கு வர்றதும்  எப்பவாவதுதான்.

நல்லா சுத்தமாத்தான் வச்சுருக்காங்க.  நடராஜர் அழகு! பெட்டிகளை எடுத்துக்கிட்டு ஒரு டாக்ஸி பிடிச்சுக்கிட்டு லோட்டஸ் போய்ச் சேர்ந்தப்ப ரெண்டே முக்கால். யெல்லோ கேப் ஓட்டிவந்தவர் அப்துல் அஸீஸ்.
லோட்டஸ் என்னவோ நமக்குப் பொறந்தவீடு மாதிரி ஆகி  இருக்கு, இந்தப் பத்துப்பனிரெண்டு வருஷங்களில்..... வரவேற்பில் நம்ம பசங்கதான் :-)  வழக்கமான அறை நமக்காகத் தயாராத்தான் இருக்காம்!

செக்கின் செஞ்சுட்டுக் கொஞ்சம் ஃப்ரெஷப் பண்ணினதும்  வாசலில் ஒரு ஆட்டோ எடுத்து நம்ம கீதா கஃபே போனோம். ரெண்டு சென்னை மீல்ஸ்.  என்னமோ பொறந்ததில் இருந்தே சாப்பிடாதமாதிரி  நம்ம ஊர் சாப்பாட்டுக்கு அப்படி ஒரு பசி.    நம்ம பருப்பு சாதம் சாப்பிட்டதும்தான்  எனக்கு உயிர் வந்தாப்லெ!
பக்கத்துலே இருக்கும் பூர்வீகா கடைக்குப்போய்  செல்ஃபோனுக்கு ஒரு எஸ்டி கார்ட் , 256 ஜிபி வாங்கினோம். எனக்கில்லைப்பா.... மகளுக்கு....
பூக்காரம்மாவிடம் மனோரஞ்சிதம் இருக்கு!   ஹைய்யோ !   எவ்ளோ நாளாச்சுத் தலைக்குப் பூச்சூடி..... ஒரு  பதினைஞ்சு நாள்.....  ஹாஹா....

அறைக்குப்போய் நல்லா ரெஸ்ட் எடுக்கப்போறாராம் 'நம்மவர்'!!!  நான் ஒன்னும் சொல்லலை..... இன்றைக்கு விட்டுப்பிடிக்கலாம்....   :-)

தொடரும்....... :-)


12 comments:

said...

நம் ஊர் சாப்பாட்டையும் பூவையும் கண்டால் சந்தோசமே.

said...

பூரி பயணம் நன்றாக இருந்தது. சென்னையில் என்ன என்ன புதிதாகப் பார்க்கப்போகிறீர்கள், நகை ரிப்பேர், வாட்ச் ரிப்பேர், அனந்த பத்மநாபன் கோவில் விசிட், ஓ.எம்.ஆர் ஆசிரமம் இதெல்லாம் வருதான்னும் பார்க்கிறேன்.

said...

வெகுசிறப்பு அருமை நன்றி

said...

உங்கள் பாணியில் பயண அனுபவம் மிக அருமையாக இருந்தது. பூரி நகருக்குச் செல்ல ஆவல் எழுந்துவிட்டது.

said...

பூரி பயணம் சிறப்பாக முடிந்தது....

தொடர்கிறேன்.

said...

வாங்க மாதேவி,

நாக்கும் மூக்கும் அப்படி வளர்ந்துருக்கு என்ன செய்ய? :-)

said...

வாங்க நெல்லைத்தமிழன்,

இந்த முறை நோ வாட்ச் ரிப்பேர் :-)

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா,

புராதனக் கோவில்கள் ஏராளம். சமயம் கிடைத்தால் ஒருமுறை போய் வாருங்கள்.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

தொடர்வருகைக்கு நன்றி !

said...

மகிழ்ச்சி மா ...பூரி ஜெகநாதர் பற்றி பல தகவல்களை அறிந்துக் கொண்டேன் ..

வான்வழி காட்சிகள் எல்லாம் மிக சிறப்பு ..

said...
This comment has been removed by the author.