Wednesday, September 04, 2019

தஹிஃபுச்கா..... (பயணத்தொடர், பகுதி 138)

பகல் சாப்பாட்டுக்கு அதே மால்குடின்னு ரெண்டேகாலுக்குப் போய்ச் சேர்ந்தோம்.  கோபிந்தைச் சாப்பிடக் கூப்பிட்டால்  வேற இடத்துலே சாப்புடறதாச் சொல்லிட்டார்.  அவருக்கு லஞ்சுக்கான காசைக் கொடுத்துட்டு நாங்க உள்ளே போனோம்.
தோசைகளுக்குச் சொல்லிட்டு,  அன்றைய ஸ்பெஷலான 'தஹிஃபுச்கா' (என்னமோ அந்தப் பெயரே பிடிச்சுப்போச்சு! ) கொண்டுவரச் சொன்னேன்.  வந்தது. ருசியும் நல்லாவே இருந்தது.



நியூஸி வந்தபின் ஒருநாள் செஞ்சு  மகளுக்கும் கொடுத்தேன்.  இப்ப அடிக்கடி செய்யறேன் :-)  ரொம்பவே சுலபம்தான் ஹிஹி...
பானிபூரி செய்யறோம் இல்லையா?  அதுலே பானிக்குப் பதிலா தயிர்!   தயிரில் உப்புக்குப் பதிலா சக்கரை கொஞ்சம் சேர்த்துக் கலக்கி இதன் தலையில் ஊத்தினாலும் நல்லாவே  இருக்கு.  ஒருவகையைப் பலவகையாக்க  இடும்பிக்குத் தெரியாதா என்ன?  :-) 

மேலே படம்: நம்ம வீட்டு தஹிஃபுச்கா :-)

மால்குடியில் வேலை செய்யும் குஸும்  ரொம்பவே  நட்பாப் பேசறாங்க. நம்மூட்டுப் பொண்ணுன்னு வச்சுக்கலாம்.   பெங்காலிப்பெண் என்றாலும்  சிலபலத் தமிழ்ச் சொற்கள்  நல்லாவே வருது. "சாப்பாடு ஹை,  ஆன்ட்டி "

 ]'உங்க ஊர்  சுவலட்சுமி, எங்கூர்  தமிழ் சினிமாவில்  ஒரு ரவுண்டு  வந்தாங்க'ன்னேன் :-)
மால்குடியில் நம்ம காஃபி நல்லாவே இருக்கு. மெட்ராஸ் ஃபில்ட்டர் காஃபி.  காஃபி டைம் இல்லைன்னாலும் விடக்கூடாதேன்னு  ஒன்னு வாங்கி நாங்க ஒன் பை டுன்னு.....
மூணேகால் மணிக்கு  கோபிந்தை அனுப்பிட்டோம்.  இன்றைய சுத்தல் இதோடு முடிஞ்சது.  'கொஞ்சம் துணி துவைச்சுக்கறேன்'னு  இவர் நேத்துத் துவைச்சுப்போட்ட ஒன்னும்  காயவே இல்லை.  வெளியே போகும்போது ஏசியை  ஆஃப் பண்ணிட்டுப் போனாலும், ரூம் சுத்தம் செய்ய வரும்  ஊழியர், ஆன் பண்ணி வச்சுட்டுப் போயிடறார்!

பேசாம அயர்ன் செஞ்சுதான் ஈரத்தைப் போக்க வேண்டியதாப் போச்சு.
எதிர்க்கட்டடம் ரொம்ப அழகா இருந்தது. ஏதோ  குடியிருப்பா இருக்கணும்.   கொஞ்சநேரம் மழைய வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்தேன்.

 இன்றைக்கு டின்னருக்கு 'நம்மவரின்'   வேலைசம்பந்த  நண்பர் வீட்டுக்குப் போறோம்.  பல வருஷப் பழக்கம் என்றாலும்,  எனக்கு அங்கே போறது இது முதல்முறை!
அவரே வண்டியை அனுப்பிட்டார்.  அங்கே குடும்பத்துடன்  சேர்ந்து பேச்சும், விருந்துமா  நேரம் போயிருச்சு.  அறைக்குத் திரும்பும்போது மணி பத்து.

குடும்பத்து மருமகளுக்குக் கோவில்கள் பார்க்க விருப்பமாம். குழந்தைகள் கொஞ்சம் பெரிதானவுடன்  ஆரம்பிச்சுருங்க.  இளவயசுப் பயணங்கள் சுலபமா இருக்குமுன்னு சொன்னேன்.

அவுங்க வீட்டுக்குப் போகும்வழியில்தான் கொல்கத்தாவின்  பிரசித்திபெற்ற இனிப்புக் கடை இருப்பதை நோட் பண்ணியாச்.  விடக்கூடாது....  மூளையில் முடிச்சு :-)
நாளையும் கொல்கத்தா என்பதால்  இப்ப நல்லா ஓய்வெடுத்துக்கலாம். மழை இல்லாமல் இருக்கணுமே பெருமாளே......
தொடரும்......... :-)


8 comments:

said...

பயணத்தில் சந்திக்கும் நட்புகள்.... மகிழ்ச்சி தரும் விஷயம். தஹிபுச்கா இங்கே கிடைக்கும் தஹி bபல்லா கூட அந்த வகை தான். கூட இன்னும் மசாலாக்கள்....

said...

அட தஹி சாட் ...எங்க பசங்களுக்கு எப்பவும் fav....எனக்கும்

said...

அருமை சிறப்பு நன்றி

said...

பானிபூரி நமக்கு ஒரு பார்சல்.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

பொதுவா வட இந்தியாவில் தயிர் ரொம்ப நல்லாவே கிடைக்குதே! அதான் அமர்க்களப்படுத்திடறாங்க.

said...

வாங்க அனுப்ரேம்,

புளிக்காத நல்ல தயிர் என்றாலே வெளுத்துக் கட்ட வேண்டியதுதான் :-)

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி.

said...

வாங்க மாதேவி,

பானிப்பூரியை விட இது இந்த தஹிஃபுச்கா இன்னும் நல்லா இருக்கே. இதோ உங்களுக்குப் பார்ஸல் ரெடி !