Wednesday, November 15, 2017

பெயருக்கும் ப்ரஸாதத்துக்கும் தொடர்பு இருக்கோ? (இந்திய மண்ணில் பயணம் 76)

ஸ்ரீரங்கத்துக்கு அடுத்தபடி எனக்கு விருப்பமான ஊர்களின் பட்டியல்னு ஒன்னு இருந்தால் அடுத்து வர்றது கும்மோணம்தான் ! ஹைய்யோ.....  கோவிலான கோவில், தாராசுரம் போல  கண்ணில் ஒத்திக்கும் வகையா சிற்பமான சிற்பங்கள்!
ஊர் முச்சூடும் கோவில்கள்தான், ரொம்பப்பக்கத்து பக்கத்துலேதான்னு சொன்னாலும்..... மக்கள் தொகை  அளவுக்கு மீறிப் பெருகிக்கிடப்பதாலும், அதைவிட அதிக அளவில் வாகனங்கள் ரொம்பி  வழிவதாலும்....  போக்குவரத்து கொஞ்சம் கீக்கிடமாத்தான்....  ப்ச்....
1.7 கிமீ போக இருவது நிமிட் ஆகி இருக்குன்னா பாருங்க. கோவில்வாசலில் நம்மை இறக்கி விட்டுட்டுப் பார்க்கிங் தேடிப்போனார் சீனிவாசன்.  உள்ளே போன நாங்க தேடிப்போனது நம்ம கோபுவை!

கோபு யார்?  சக்கரைப்பொங்கல் ஸ்பெஷலிஸ்ட்!  சக்கரபாணி கோவிலில் ரொம்ப டிமாண்ட் இருக்கும் முக்கிய நபர் :-)

கடவுள் என்பதே ஒரு நம்பிக்கைதான்!  நம்மால் ஒன்னும் செய்ய இயலாத நிலையில் 'நீயே கதி'ன்னு  விழுந்தால் தூக்கி விட்டுரும் ஒரு அரிய  கண்டுபிடிப்பு!

போனமுறை  கும்பகோணம் போறேன்னு  நெருங்கிய தோழிகளில் ஒருவரிடம் பேச்சுவாக்கில் சொன்னப்ப,  'சக்கரபாணி கோவிலில் சக்கரைப்பொங்கலுக்குக் கொடுங்க. மகள் கல்யாணத்தடை  நீங்கிடும்' னு சொன்னாங்க. நாம்தான் 'எத்தைத் தின்னால் பித்தம்  நீங்கும்'னு  கிடக்கோமே....

கோவிலுக்குப்போய்,  அங்கிருந்த  அர்ச்சனை டிக்கெட் கவுன்ட்டரில் சக்கரைப்பொங்கலுக்குத்  தரணுமுன்னு  சொன்னவுடனே, கோபுகிட்டே கொடுத்துருங்கன்னார்.     ஙே..... 

நம்ம முழியைப் பார்த்த இன்னொருவர், ஆள் அனுப்பின அஞ்சாவது நிமிட் கோபு வந்து சேர்ந்தார்.  அவரிடம் சொன்னதும், என்றைக்குன்னு  கேட்டார்.  எப்போ உங்களுக்கு சௌகரியமோ அப்போன்னேன்.  நாளைக்குக் காலை எட்டு மணிக்கு வந்துருங்கோன்னார்.
 சுவத்துலே  செல்நம்பர்  இருக்கு. தேவைப்படறவங்க குறிச்சு வச்சுக்கலாம் !
அப்போ நடந்ததையும் கோவிலைப்பத்தி எழுதுனதையும் இப்போ ஒரு எட்டுப்போய் பார்த்தீங்கன்னா   மகிழ்ச்சி.  இல்லையோ....  பேசாம இங்கே காப்பி அண்ட் பேஸ்ட்டா உங்களை விடாமல் துரத்துவேன் :-)


பிரார்த்தனை  பலிச்சு,  மகள் கல்யாணம் நல்லபடி நடந்தது.  செய்நன்றியை மறக்கலாமோ?  அதான் இன்னொருக்கா இங்கே போகணுமுன்னு  முடிவு.

இதுக்கிடையில் இன்னொரு நெருங்கிய தோழிக்கும் இதே நிலமை. நமக்கு நல்லது செய்ஞ்சவர் இவுங்களுக்கும் செய்யமாட்டாரா என்ன? சமாச்சாரம் சொன்னேன். அவுங்களும் வெளிநாட்டு வாசம்தான்....  "கவலை  வேணாம்.   நான் போகும்போது  மகள் பெயருக்கு  வழிபாடு செஞ்சுட்டு வருவேன். அவள் எனக்கும் மகள்தான், இல்லையோ?"  முழுப்பெயர் , நக்ஷத்திர விவரம் எல்லாம் அனுப்பினாங்க.

இப்பதான் நமக்கு ஆளும் பெயரும் தெரியுமே!  நேரப்போய் கோபுவைப் பார்க்கணுமுன்னு சொன்னதுக்கு,  இங்கெதானே இருந்தார்னு சுத்துமுத்தும் பார்க்க  அந்தாண்டைத் தூண் பக்கத்திலே  இருந்தார்.  இங்கே இவருக்குன்னு தனி அறை கூட இருக்கு!  அங்கே போய்  சின்ன நோட்டுப் புத்தகத்தில் விவரம் எல்லாம் குறிச்சுக்கிட்டார். மறுநாளே செய்ய ஏற்பாடு.  இதுவரை வேற யாரும் புக் பண்ணிக்கலையாம். நீங்க நாளைக்கு ஒம்போதரை பத்துக்கெல்லாம்  வந்துருங்கோன்னார். அதை விட வேறென்ன வேலை  நமக்கு?

போனமுறை நாம் வந்துருந்தப்பக் கும்பாபிஷேகத்துக்கான மராமத்து வேலைகள் எல்லாம் நடந்துக்கிட்டு இருந்தது. அதெல்லாம் நிறைவேறி இப்போ கோவில் பளிச்ன்னு இருக்கு!
புஷ்கரணியில் புதுசா விளக்கலங்காரத்தில்  ஜொலிக்கிறார் சக்கரராஜா!
கோவில் ராஜகோபுரத்துலே  ஸ்ரீ சக்கர ராஜான்னு தான் பெயர் போட்டுருக்காங்க :-)    சக்கரைக்குக்கு சக்கரைன்னு சரியாப்போச்சோ :-)
மேலே படிகள் ஏறிப்போய் சக்கரத்தாழ்வார் சந்நிதியில் தரிசனம் செஞ்சுட்டு,  பிரகாரத்தை வலம் வந்தோம். 





இருட்டிப்போயிருச்சே......  நாளைக்குக் காலை  வரத்தானே போறோமுன்னு  கிளம்பி, வண்டியிலேயே ஊரையும் குளத்தையும் ஒரு சுத்து சுத்திட்டு ராயாஸுக்குத் திரும்பிட்டோம்.
தீபாவளிக்கு இன்னும் அஞ்சு நாள்தான் இருக்குன்றதால்... கடைகளில் கூட்டம் நெரியுது!

  ராயாஸில்    வைஃபை நல்லா வேலை செய்யுது இந்த முறை :-)

ஆனாலும்  வேறெதாவது குறை சொல்லாம இருக்க முடியுமோ?

மஹாமகக்குளத்தைப் பார்த்தமாதிரி ஜன்னல்கள் இருக்கும்  அறைகள் கிடைக்கலை, இந்த முறையும்  :-(   போனதடவைதான்  மஹாமகம் ஏற்பாடுகளுக்காக அரசு அதிகாரிகள் வந்து மாசக் கணக்காத்   தங்கி இருந்தாங்கன்னு எல்லா முக்கிய அறைகளையும் அவுங்களுக்கே ஒதுக்கி இருந்தாங்க.  இந்த முறை கல்யாண கோஷ்டிகளுக்கு!  இதெல்லாம்  கொஞ்சம் பெரிய அறைகள் வேற! பெட் ரூம், ஸிட்டிங் ரூமுன்னு  ரெண்டு பகுதிகளா இருக்கும். ராயாஸ் க்ளப் ஸ்யூட் !

'காரிடாரில் நாலெட்டு எடுத்து வச்சா குளம் தெரியும் ஜன்னல் இருக்கே!  எதுக்கு இப்படிப் புலம்பறாய்'னு  மனசுக்கு ஒரு அதட்டல் போட்டேன்.

ம்ம்ம்ம்ம்....னுச்சு :-)

தொடரும்........  :-)


15 comments:

said...

கோவில் விவரமும், செல் நம்பரும் குறித்துக் கொண்டுள்ளேன். நெருங்கிய இரு உறவினருக்குக் கொடுக்க வேண்டும். மகள் இல்லை, இருவருக்குமே மகன்கள்! ப்ளாக் லிங்க்கும் சேர்த்தே தருவேன்.

said...

அடுத்தப்பதிவுல சக்கரைப்பொங்கல் படம் போட்டுடுங்க, ப்ளீஸ். நன்றி.

said...

இந்த பதிவில்தான் வளையலும், பொங்கலும் வரல.

said...

காலையில் சர்க்கரைப் பொங்கலைப் பத்தி எழுதினால், கோவில் கவனம் பின்னுக்குப்போய் விடுகிறதே. இருந்தாலும் நம்பரைக் குறித்துக்கொண்டேன். பிரசாதமாக அங்கு செல்லும்போது வாங்கினால் போச்சு.

இரவு நேரம் என்பதால் சில படங்கள் பளிச் என்று இல்லை. தொடர்கிறேன்.

said...

சர்க்கரைப் பொங்கள் விஷயத்துக்கு நன்றி

said...

சர்க்கரை பொங்கல் - நல்ல விஷயம். அப்படியே சாப்பிடவும் கிடைத்தால் வசதி! :)

கும்பகோணம் மற்றும் சுற்றுப் புற கோவில்கள் - ஒரு முறை அப்படியே விஸ்ராந்தியா சுற்றணும் - எப்போது தான் வாய்ப்பு தரப் போகிறானோ!

said...

கும்பகோணத்தில் சக்கரபாணி கோயில் வந்தோம் உங்களோடு. சக்கரபாணி கோயிலிலிருந்து ஒரே நேர்கோட்டில் சென்றால் வரிசையாக (பெரியக்கடைத்தெருவில் தொடங்கி) அனுமார் கோயில், சரநாராயணப்பெருமாள் கோயில்,கூரத்தாழ்வார் சன்னதி, உடையவர் சன்னதி, ராஜகோபாலஸ்வாமி கோயில், கும்பகோணம் ஜெயவீர ஆஞ்சநேயர் கோயில், ராமசுவாமி கோயில் உள்ளிட்ட கோயில்கள் உள்ளன. எனக்குத் தெரிந்து தமிழ்நாட்டில் இவ்வாறாக அருகருகே கோயில்கள் இருப்பது இங்கேதான் என நினைக்கிறேன். இதனைப் பற்றி விக்கிபீடியாவில் பதிந்துள்ளேன்.

said...

வாங்க ஸ்ரீராம்.

நாலு பேருக்காவது பயனாகட்டுமேன்னுதான் அந்தப் படத்தைப் போட்டேன்.

நன்றி.

said...

வாங்க விஸ்வநாத்.

பொங்கல் இன்னும் வெந்துக்கிட்டு இருக்கு.....

said...

வாங்க ராஜி.

அப்படியா?

உடனே போய்ப் பார்த்தேன். இதுக்கு முன்னாலே இருக்கும் அஞ்சு பதிவுகளிலும் கூட வளையல் வரலையேப்பா..............

இப்பப்போய் படத்தை இணைக்கலாமான்னு சொல்லுங்க. செஞ்சுருவோம் :-)

said...

வாங்க நெல்லைத்தமிழன்.

லைட்டிங் சரி இல்லை. மறுநாள் படங்கள் நல்லா வந்துருக்கு !

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

நான் பெற்ற இன்பம் வகை. நல்லது, நாலு பேருக்காவது நடக்கட்டுமே!

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.


ஏகப்பட்ட சமாச்சாரங்கள் இருக்கும் ஏரியா! ஒரு நாலுநாள் தங்கினால் அநேகமா பாதியை முடிச்சுடலாம்!

அதுக்கான வேளை எப்போ என்றதுதான் எனக்கும் பிரச்சனை.....

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

உள்ளூர்க்காரர் சொன்னது ரொம்பச் சரி! ஆனால் நடந்து போகும் நிலையிலா இருக்கு போக்குவரத்து?

பார்க்கிங் வேற ரொம்ப பிரச்சனை என்பதால் ஒன்னு பார்த்தால் ஒன்னு இல்லைன்னு .... ப்ச்...

கோவில்நகரமுன்னு சொல்றது ரொம்பச் சரி!

said...

சர்க்கரைப் பொங்கலைப் போல் வாழ்வும் இனிக்கட்டும். எல்லோரும் வாழ்க.

கும்பகோணம் ரெண்டு முறை போயிருக்கேன். சின்ன ஊர். குறுகலான தெருக்கள். நிறைய கோயில்கள். ரெண்டு முறையும் அவசரம் அவசரமா போயிட்டு வர வேண்டியதாப் போச்சு. அடுத்த வாட்டி பொறுமையாகப் போகனும்.