Monday, November 13, 2017

தாயின் மடியில் கொஞ்சநேரம்.... (இந்திய மண்ணில் பயணம் 75)

மாதா பிதா குரு தெய்வம் வரிசையை இன்றைக்கு மாத்திப்போட்டுக்கலாமேன்னு  குருவந்தனத்துக்குப் போறோம். ஸ்ரீ ராமானுஜர் சந்நிதி!  வாசலில் அறிவிப்பு பார்த்ததும் திகைப்பு!


அடடா....  மாலை நாலு மணிக்கு நாம் ஊரைவிட்டே போயிருப்போமே.....  காலை நேரம் கோவிலுக்கு வந்தப்பயே குரு வணக்கம் செஞ்சுருக்கலாம். ஹூம்.....  மன்னிச்சுருவார்... நம்ம நிலை அவருக்குத் தெரியாதா என்ன?

குரு தரிசனம் இல்லைன்னதும் ஓடிப்போய் அம்மா மடியில் விழலாமுன்னு  நந்தவனப் பாதையில் போறோம்.  எங்க ரெண்டுபேருக்குமே  பூவுலக மாதா பிதா இல்லை . மேலுலக மாதா பிதாதான் இருக்காங்க!  போற வழியில் மறக்காம சக்கரத்தாழ்வாரை தரிசனம் பண்ணிக்கிட்டோம்.  மரமல்லி பூக்கும் காலம். தரையெல்லாம் கொட்டிக்கிடக்கு!

வஸந்தமண்டபம் வழியாத் தாயார் சந்நிதியாண்டை போயாச்சு. பதினோரு மணி வெயில் தன் வேலையைக் காமிக்குது.  சின்னதா ஒரு ரெஸ்ட் நம்மவருக்கு. நான் மட்டும் ஓடிப்போய் லக்ஷ்மிநாராயணரையும் அஞ்சு குழியையும் பார்த்துட்டு வந்தேன்.


தாயார் சந்நிதியில் அவ்வளவாக் கூட்டம் இல்லை.  மூணு பேரும் தரிசனம் கொடுத்தாங்க.   அரைச்ச மஞ்சள் ப்ரஸாதம்.... ஹம்மா.... எவ்ளோ அருமையான வாசனை!  கூடவே சாமந்தியும் ரோஜாவுமா ( இது என்ன காம்பினேஷன்? )  ஒரு துண்டு பூச்சரம் கிடைச்சது.  சூடிக்கொண்டேன்.  கனம்தான்....   தாய்க்காகத் தாங்கிக்கலாம்.....
பிரகாரம் வலம் வந்து வில்வமரம், துளசிமாடம் வணங்கி  உள்ப்ரகாரத்திண்ணையில் கொஞ்ச நேரம் உக்கார்ந்தோம்.  தியானம் பண்ண மனசு ஒருமுகப்படலை. வேடிக்கை பார்க்கலாம்....
வெளியே வந்து கம்பர் மண்டபத்தின் அருகே உக்ர நரசிம்ஹர் சந்நிதிக்குப் படியேறினோம்.




மகள் சின்னவளா இருக்கும் சமயம், இந்த சந்நிதியில் நாங்கள் யாருமே எதிர்பாராத விதமாய், கை நிறைய தீர்த்தம் எடுத்து பளிச்சுன்னு  குழந்தை முகத்தில் பட்டர் அடிச்ச சம்பவம் ரெண்டு பேருக்கும் ஒரே சமயம் வந்தது!  இது நடந்தே வருஷம் இருபத்தியாறாச்சு.  ஆனாலும் ஒவ்வொரு முறை இந்தப் படி ஏறும்போதும் 'டான்'ன்னு நினைவுக்கு வந்துரும் :-) 'குழந்தைக்கு இனி பயம் என்பதே வாழ்வில் இல்லை'ன்னு  அப்போ விளக்கம் சொன்னார் பட்டர் ஸ்வாமிகள்.  ரொம்பச் சரி.  நாங்கதான் எதுக்கெடுத்தாலும் பயப்படுவோம். அவள் டோன்ட் கேர் மகாராணி !  'தட்ஸ் யுவர் ப்ராப்லம்'னுடுவாள் :-)

 இந்தச் சந்நிதி வெளிப்புறச் சுவரில் உள்ள சித்திரங்கள் எனக்கு ரொம்பவே பிடிக்கும்!  க்ளிக் க்ளிக் க்ளிக்  :-) இங்கேயும் நல்ல கூட்டம்.   கொஞ்சம் நேரம்       ஆனாலும் தரிசனம் பிரமாதம்!

வாகன மண்டபத்தாண்டை வந்திருந்தோம்.செல்வராஜ், நாகராஜ் சகோதரர்கள்  சிம்மவாகனக் கவசம் பொருத்திப் பார்ப்பதில் பிஸி ! செப்புத்தகடுதான். அப்புறம் முலாம் பூசுவாங்களாம்!   காலையிலேயே  இவுங்களைப் பார்த்து  ரெண்டு வார்த்தை பேசிட்டுப்போயிருந்தேன்.  அநேகமா இன்னும்  ஒரு வருசத்துக்கு இங்கே வேலை இருக்குமாம். பெருமாளே... இந்தக் கலையை அழியாமல் காப்பாத்தணும். 
தாயார் சந்நிதியில் இருந்து  வடக்கே போகாமல் இப்படிக்கா வந்துட்டோமே... இனி கோதண்டராமர் சந்நிதிக்குப் போகணுமான்னு தோணுச்சு. நம்மவரும்.... 'அதான் திருமஞ்சனத்தை ரொம்ப நல்லா விலாவரியாப் பார்த்தோமே.... அந்த திருப்தியே போதாதா'ன்னார். உண்மை.  நேரம் வேற ஆகிக்கிட்டு இருக்கு. வெயில்  களைப்பு வேற.....  ப்ரஸாதத்தில் நம்ம பெயரை எழுத விட்டுப்போச்சு போல!


ரெங்கவிலாஸ் வெளி முற்றத்துக்கு  வந்துருந்தோம்.  சீனிவாசனை செல்லில் கூப்பிட்டுச் சொல்லிட்டு நாம் போய் காலணி பாதுகாப்பில் இருந்து  செருப்புகளை  வாங்கிக் காலில் போடும்போதே   வண்டி வந்துருச்சு.
இனி ரெங்கம் எப்போன்ற  எண்ணத்துடன்  வண்டியில் ஏறப்போகும்போது திருப்பதிக்குப்போக உண்டியல் குடத்தோடு ஒரு பெண். பூலோக வைகுண்டத்தில் இருக்காங்க.......   இதைவிடவா.....
மதில் சுவர் பார்த்ததும் நம்ம ஜெயஸ்ரீ கோவிந்தராஜன் நினைவு  டான்னு  வழக்கம்போல் வந்தது :-)  சம்பந்தப்பட்டப் பொருட்கள், ஸீன்கள் கண்ணில் படக்கூடாதே......... பதிவர் குடும்ப ஞாபகம் வந்துருமே !!    யானை, பூனை, வடை பார்த்தால் தயவு செய்து யாரும் என்னை நினைச்சுக்க வேண்டாம், கேட்டோ  :-)
ஹயக்ரீவா போய்  ஒரு    சின்ன ஓய்வுக்குப்பின் பகல் சாப்பாட்டுக்கு  நேத்து நம்ம  தோழி கீதா சாம்பசிவம் சொன்ன ரெஸ்ட்டாரண்டுக்குப் போனோம். அம்மா மண்டபத்துக்குக் கிட்டே இருக்கு. பேரு நிவேதம்!  130708


நம்மவருக்கு ஒரு மினி மீல், எனக்கொரு தயிர் சாதம். சீனிவாசன் வேற இடம் பார்த்து வச்சுருக்காராம். அங்கே சாப்பிடப் போனார்.

நிவேதம், இடம் சுத்தமா இருக்கு.  எங்களைத் தவிரக் கூட்டமே இல்லை.  நம்மூர் பக்கங்களில் பகல் ரெண்டு  மணிக்குத்தான் சாப்பிட வருவாங்களாம். இப்போ மணி  ஒன்னரைதானே....   சாப்பாடு அவ்வளவு பிரமாதமா இல்லைதான்.... ...   போயிட்டுப்போறது.....    இதுக்கு பாலாஜி பவனே தேவலை!

பாலாஜி பவன், ஹயக்ரீவா ஹொட்டேல் பில்டிங் கார்பார்க்கிலே  இருந்தாலும்  ரெண்டு வியாபாரமும் தனித்தனி ஆட்களோடது!  அதனால் என்ன....  நமக்கு  என்ன பிரச்சனை?  நமக்கு காலை எழுந்தது முதல்  காஃபி, டிஃபன்னு    சௌகரியமாத்தானே இருக்கு.  வேற இடம் தேடி ஓட வேண்டாமே ...

நாங்க ஹயக்ரீவா திரும்பியதும்   வலை மேய்தல், வீட்டுக்கு  ஃபோன் செய்தல்னு  முக்கிய வேலைகளை முடிச்சுக்கிட்டு ரெண்டரை மணிவாக்கில் கிளம்பிட்டோம். இங்கே டிப்ஸ் வாங்கும் வழக்கம் இல்லை, எங்க நியூஸி போல!

ராஜகோபுரம் தாண்டும்போது  லேசா ஒரு சோகம் மனசுக்குள். போயிட்டுப்போறதுன்னு  மனசை சமாதானம் செஞ்ச கையோடு அடுத்த முறை குறைஞ்சது  ஒரு வாரம் தங்கப்போறேன்னு அறிவிப்பும் கொடுத்தேன் :-)
ஒரு எம்பத்தியஞ்சு கிமீ பயணம்  இருக்கு இப்போ.  கல்லணை வழியாக் கும்மோணம்  போறோம்.  கரிகால் சோழன் மணி  மண்டபம் போன முறை பார்த்துட்டதால்  வேறெங்கேயும் நிறுத்திப் பார்க்கும் எண்ணம் இப்போதைக்கு இல்லை.


கூகுள்காரன் ரெண்டு மணி ஏழு நிமிசம்னு சொன்னாலும் ரெண்டரை மணி  ஆகுமுன்னு சொன்னார் நம்மவர்.  ரெண்டையும் பொய்யாக்கி ரெண்டுமணி இருபது நிமிட்டில் ராயாஸ் க்ராண்டில் போய் வண்டியை நிறுத்தினார் சீனிவாசன் :-)
இப்ப ஒரு நாலைஞ்சு வருசமா ராயாஸில்தான் தங்கறோம். மகாமகக் குளத்துக்கு எதிரில் இருக்கு இது. ராயாஸ் க்ராண்ட்.  வாசலில் ஒரு ரெஸ்ட்டாரண்ட் இருக்கு. ரைஸ் அன்(ட்) ஸ்பைஸ்னு பெயர்.  சூடா பஜ்ஜி & காஃபி  முடிச்சுட்டுக் கொஞ்ச நேரம் ரெஸ்ட். நம்ம சீனிவாசனுக்குத்தான்  !
 நீங்களும் ரெடியா இருங்க.     கொஞ்ச நேரத்தில்     கோவிலுக்குப் போறோம்.
இங்கே தடுக்கி விழுந்தாக் கோவில் வாசலில்தான்.....  கோவில் நகரம் இல்லையோ...

தொடரும்........  :-)


12 comments:

said...

// யானை, பூனை, வடை பார்த்தால் தயவு செய்து யாரும் என்னை நினைச்சுக்க வேண்டாம் //

கண்டிப்பா இனி மறக்காது. நன்றி.



said...

முன்பொரு முறை இந்த தங்கும் விடுதி பற்றியும் மகாமகக்குளம் பற்றியும் நீங்கள் எழுதிய நினைவு. இருந்தாலும் அடுத்த பதிவிற்காகக் காத்திருக்கிறேன், கும்பகோணத்தில் பிறந்தவனல்லவா? அந்த ஈர்ப்புதான்.

said...

தொடர்கிறேன். ராமானுஜரை நீங்கள் சேவிக்க முடியவில்லையா? அப்படீன்னா உங்களுக்கு இன்னொரு முறை திருவரங்கம் வரும் பாக்கியம் இருக்கு போலிருக்கு.

said...

உக்ர நரசிம்ஹர் சந்நிதி...

எனக்கும் பிடித்த இடம்...


said...

கோபாலின் பார்வை சரியாகி விட்டதா

said...

வாங்க விஸ்வநாத்.

சரியா பாய்ண்டைப் புரிஞ்சுக்கிட்டதுக்கு நன்றி :-)

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

ஆஹா.... ஜன்மஸ்தலமா? ஈர்ப்பு இருக்கத்தான் செய்யும் !

இன்னும் முழுசா ஊரைச் சுத்திப் பார்க்கலைன்னுதான் சொல்லணும். ஸ்ரீரங்கத்துக்கு அடுத்து விரும்பும் ஊர்னா கும்மோணம்தான் எனக்கு!

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

அடுத்தமுறை முதலில் குரு வணக்கம்தான்!

said...

வாங்க அனுராதா ப்ரேம்.

நல்ல உயரத்தில் இருக்கும் சந்நிதியும் கூட !

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

விசாரிப்புக்கு நன்றி.

ஓரளவு பரவாயில்லை.

said...

Superub pictures! Padathil irukkum thayir sadhathai appadiye sappidalam pola irundhahdu.

said...

அழகான படங்கள்.....

ஒவ்வொரு முறை திருவரங்கத்தினை விட்டு புறப்படும் போதும் எப்போது மீண்டும் எனத் தோன்றுவது - எனக்குமுண்டு! இங்கே இருக்கும் குடும்பம் மட்டும் காரணம் அல்ல, ஊரும்!

தொடர்கிறேன்.