பகல் சாப்பாட்டை முடிச்சகையோடு பாசிமணியைக் கழுத்தில் போட்டுக்கிட்டு அரண்மனை முற்றத்துக்குள் போறோம். செங்கற்கள் பாவிய தளமும், கட்டைச்சுவருமாப் பெருசா இருக்கு. முற்றத்தின் சுவரையொட்டியே ஏகப்பட்ட கல்வெட்டுகளும், கல்லில் புடைப்புச் சிற்பங்களுமா வச்சுருக்காங்க. இந்த கல்வெட்டுன்னு நான் இங்கே குறிப்பிடும் வகைகளை, சிலாபத்ரமுன்னு சொல்றாங்க. ஸ்டோன் டாக்குமென்ட் ! வெறும் எழுத்துகளை மட்டும் போடாம பத்திரத்துக்கு அடியிலே சின்னச்சின்ன உருவங்களைச் செதுக்கி இருப்பது சுவாரஸ்யம் !!
முற்றத்தின் ஒரு பக்கம் மரத்துக்கு முன்னால் ஒரு இருக்கை. ஃபோட்டோ பாய்ண்ட்? இருக்கலாம். விடலாமா? க்ளிக் க்ளிக் :-) (கைவசம் ஃபொட்டாக்ராஃபர் இருக்காரே !)
தேமேன்னு ஒரு சிவலிங்கம் உக்கார்ந்துருந்தது.
இப்போ நுழைஞ்சு வந்த இந்த ரெண்டு முற்றங்களும் இருக்கும் இடத்துக்கு கேஷவ் நாராயண் சௌக் என்று பெயர். பெருமாள் சந்நிதியைப் போன பதிவில் பார்த்தீங்களே அவர்தான் கேஷவ்நாராயண்.
இங்கே மூணு சௌக் இருக்கு! இப்ப நாம் கேஷவ்நாராயண் சௌக்கில் இருப்பதால் இந்த ம்யூஸியத்தைப் பார்த்துட்டு மற்ற சௌக்குகளுக்குப் போகலாமுன்னார் பவன்.
மாடியேறிப்போனோம். உள்ளே ஹாலைப் பார்த்ததும் எனக்கென்னவோ நம்ம பத்மநாபபுரம் அரண்மனை சட்னு நினைவுக்கு வந்துச்சு. ஏன்? க்யா மாலும்!
பளபளக்கும் சிமென்ட் தரையோ, இல்லை நீண்டு போகும் ஹாலோ, இல்லை ஓடு போட்ட மேற்கூரையோ ....
உள்பக்கத்துலே போகும் வழியும், வெராண்டா அமைப்பும், அங்கிருந்து தெரியும் உள்முற்றமும், எல்லாத்துக்கும் மேலே வெளிப்பக்க முற்றம் பார்க்கும்படி போட்டுருக்கும் இருக்கை மாடங்களும், ஏன் நான் பத்மநாபபுரமுன்னு நினைச்சதை உறுதிப்படுத்திருச்சுதான்! அதே ஸ்டைலு .....
உலோகச்சிற்பங்கள்தான் இந்த பரந்த ஹால் முழுக்கவே..... ரொம்ப நல்லா டிஸ்ப்ளே செஞ்சு, குறிப்புகளோடு வச்சுருக்காங்க. சிவனின் ரூபங்களும், எமனின் உருவங்களுமா ஏராளம். மரச்சிற்பங்களும், கற்சிலைகளும் அங்கங்கே இருக்குதான்.
உமாமகேஸ்வரன் சிற்பம் ஒன்னு அருமை! கயிலையில் உக்கார்ந்துருக்கும் போஸ் இது! இடதுகாலை மடிச்சு, வலது காலைத் தொங்கப்போட்டு உக்கார்ந்துக்கிட்டு, இடக்கையால் உமையை லேசா அரவணைச்சுப் பிடிச்சுருக்கார். வலக்கையை உயர்த்தி தன் தலையின் குழல்கற்றைகளைக் கோதிவிடுவது போல் ஒரு பாவனை(யாம்) அந்த இடத்தில் ஜடாமுடிக்குள் இருப்பது கங்கா! ரெண்டு பெண்டாட்டிக்காரனுக்கு சமாளிக்கவும் தெரிஞ்சுருக்காதா என்ன? :-)
கிட்டத்தட்ட 120க்கு மேற்பட்ட சிலைகள் நேபாளில் இருந்து திருடப்பட்டு வெளிநாடுகளில் விற்பனை ஆகி இருக்கு என்ற சேதி எனக்கொன்னும் புதுசா இல்லை. நம்ம நாட்டிலும் இப்படி சிலைக் கடத்தல் நடந்துக்கிட்டுத்தானே இருக்கு :-(
நான்முக சிவனுக்கும் குறைச்சலே இல்லை. லிங்கத்துலேயே நாலு பக்கமிருந்தும் கிளம்பும் முகங்கள், தூணில் நாலுபக்கமும் சிவனின் தலைகள் இப்படி!
Hevajra சிலை ஒன்னு பார்க்கவே பிரமாதம், நாலு தலைகளும் பதினாறு கைகளுமா !!! இந்தப் பக்கங்களில் தாந்த்ரீக முறை உபாசனைகள் நிறைய இருந்துருக்கு போல. பௌத்த மதத்தில் வஜ்ராயணா பிரிவில் இவரை பல விதமான உருவங்களில் ஒரு தலையில் இருந்து எட்டு தலை வரை விதவிதமா வரைஞ்சும் சிற்பமாகச் செதுக்கியும் கும்பிட்டுக்கிட்டு இருக்காங்க.
சக்ரஸம்வரரும் வஜ்ரவராஹியுமா ஒரு ஜோடி!
எமனும் மனைவியுமா இன்னொரு ஜோடி. எருமை வேற இருக்கே :-)
இவர் ஹனு பைரவர். ஹனுமனும் பைரவரும் சேர்ந்தே இருக்காங்க. வைஷ்ணவம் & சைவம் இணைக்கப்பட்டுருக்கு. காலடியில் மனுசர்கள்.....
விதவிதமான புள்ளையார்கள். அசப்புலே பார்த்தா...பாவாடை கட்டிக்கிட்டு இருக்காரோ? சிலைகளும் ஏராளம், தலைகளும் ஏராளம்!
ஒத்தைத் தலையுள்ள சாமியைப் பார்க்கறதே அபூர்வமா இருக்கே!
அப்பாடான்னு ஆச்சு ஒருத்தரை பார்த்தப்ப? யாரா இருக்கும்? நாரதரோ? நாராயணா நாராயணா....
வஜ்ரபாணி
இவரும் ஒரு வஜ்ரபாணி
பார்த்துக்கிட்டே வரும்போது கண்ணில் பட்டவர் மைத்ரேயர்! ஆஹா.... இவரைத்தானே அடுத்த புத்த அவதாரமாச் சொல்றாங்க! அப்ப நம்ம கல்கி அப்புறமா வருவாரா? இல்லே வந்துட்டுப் போயிருப்பாரா?
சித்தி விநாயகர் தெரியும். இப்ப சித்தி லக்ஷ்மியையும் தெரிஞ்சுக்கணும்:-) துர்கையின் இன்னொரு வடிவமாம். சிவன் கைகளில் தாங்குறார்!
புரியாத, தெரியாத சாமிகளைப் பார்த்துக்கிட்டே கடைசியில் வந்து சேர்ந்தது நம்ம விஷ்ணுவாண்டைதான். கருடவாஹனத்துலே பறக்குறார். சூரியப்பறவை என்ற பெயரும் உண்டாம் கருடருக்கு!
சூரியன்
மாடங்களில் விதவிதமான விளக்குகள்!
ஊத்திக் கொடுக்கும் பாத்திரம்! சரக்கு.... சுமாரா இருந்தாலும் பாத்திரம் பிரமாதமா இருக்கணும் :-)
ஹாலின் கோடியில் ஒன்பது பாம்புகளோடு ஒரு தங்க சிம்மாசனம்! ரெண்டு யானைகளின் முதுகுலே ஏறி நிற்கும்சிங்கம்! பாம்புப்பின்னல்கள் ..... முதுகு சாய்மானம்!
இன்னும் மற்ற இடங்களைப் பார்க்கணுமேன்னு இப்போ இந்த இடம்விட்டுப் போகவேண்டியதாச்சு.
தொடரும்........:-)
முற்றத்தின் ஒரு பக்கம் மரத்துக்கு முன்னால் ஒரு இருக்கை. ஃபோட்டோ பாய்ண்ட்? இருக்கலாம். விடலாமா? க்ளிக் க்ளிக் :-) (கைவசம் ஃபொட்டாக்ராஃபர் இருக்காரே !)
தேமேன்னு ஒரு சிவலிங்கம் உக்கார்ந்துருந்தது.
இப்போ நுழைஞ்சு வந்த இந்த ரெண்டு முற்றங்களும் இருக்கும் இடத்துக்கு கேஷவ் நாராயண் சௌக் என்று பெயர். பெருமாள் சந்நிதியைப் போன பதிவில் பார்த்தீங்களே அவர்தான் கேஷவ்நாராயண்.
இங்கே மூணு சௌக் இருக்கு! இப்ப நாம் கேஷவ்நாராயண் சௌக்கில் இருப்பதால் இந்த ம்யூஸியத்தைப் பார்த்துட்டு மற்ற சௌக்குகளுக்குப் போகலாமுன்னார் பவன்.
மாடியேறிப்போனோம். உள்ளே ஹாலைப் பார்த்ததும் எனக்கென்னவோ நம்ம பத்மநாபபுரம் அரண்மனை சட்னு நினைவுக்கு வந்துச்சு. ஏன்? க்யா மாலும்!
பளபளக்கும் சிமென்ட் தரையோ, இல்லை நீண்டு போகும் ஹாலோ, இல்லை ஓடு போட்ட மேற்கூரையோ ....
உள்பக்கத்துலே போகும் வழியும், வெராண்டா அமைப்பும், அங்கிருந்து தெரியும் உள்முற்றமும், எல்லாத்துக்கும் மேலே வெளிப்பக்க முற்றம் பார்க்கும்படி போட்டுருக்கும் இருக்கை மாடங்களும், ஏன் நான் பத்மநாபபுரமுன்னு நினைச்சதை உறுதிப்படுத்திருச்சுதான்! அதே ஸ்டைலு .....
உலோகச்சிற்பங்கள்தான் இந்த பரந்த ஹால் முழுக்கவே..... ரொம்ப நல்லா டிஸ்ப்ளே செஞ்சு, குறிப்புகளோடு வச்சுருக்காங்க. சிவனின் ரூபங்களும், எமனின் உருவங்களுமா ஏராளம். மரச்சிற்பங்களும், கற்சிலைகளும் அங்கங்கே இருக்குதான்.
உமாமகேஸ்வரன் சிற்பம் ஒன்னு அருமை! கயிலையில் உக்கார்ந்துருக்கும் போஸ் இது! இடதுகாலை மடிச்சு, வலது காலைத் தொங்கப்போட்டு உக்கார்ந்துக்கிட்டு, இடக்கையால் உமையை லேசா அரவணைச்சுப் பிடிச்சுருக்கார். வலக்கையை உயர்த்தி தன் தலையின் குழல்கற்றைகளைக் கோதிவிடுவது போல் ஒரு பாவனை(யாம்) அந்த இடத்தில் ஜடாமுடிக்குள் இருப்பது கங்கா! ரெண்டு பெண்டாட்டிக்காரனுக்கு சமாளிக்கவும் தெரிஞ்சுருக்காதா என்ன? :-)
கிட்டத்தட்ட 120க்கு மேற்பட்ட சிலைகள் நேபாளில் இருந்து திருடப்பட்டு வெளிநாடுகளில் விற்பனை ஆகி இருக்கு என்ற சேதி எனக்கொன்னும் புதுசா இல்லை. நம்ம நாட்டிலும் இப்படி சிலைக் கடத்தல் நடந்துக்கிட்டுத்தானே இருக்கு :-(
நான்முக சிவனுக்கும் குறைச்சலே இல்லை. லிங்கத்துலேயே நாலு பக்கமிருந்தும் கிளம்பும் முகங்கள், தூணில் நாலுபக்கமும் சிவனின் தலைகள் இப்படி!
சக்ரஸம்வரரும் வஜ்ரவராஹியுமா ஒரு ஜோடி!
எமனும் மனைவியுமா இன்னொரு ஜோடி. எருமை வேற இருக்கே :-)
இவர் ஹனு பைரவர். ஹனுமனும் பைரவரும் சேர்ந்தே இருக்காங்க. வைஷ்ணவம் & சைவம் இணைக்கப்பட்டுருக்கு. காலடியில் மனுசர்கள்.....
விதவிதமான புள்ளையார்கள். அசப்புலே பார்த்தா...பாவாடை கட்டிக்கிட்டு இருக்காரோ? சிலைகளும் ஏராளம், தலைகளும் ஏராளம்!
ஒத்தைத் தலையுள்ள சாமியைப் பார்க்கறதே அபூர்வமா இருக்கே!
அப்பாடான்னு ஆச்சு ஒருத்தரை பார்த்தப்ப? யாரா இருக்கும்? நாரதரோ? நாராயணா நாராயணா....
பறந்து போகும்போதே டைம்பாஸுக்கு குழல் ஊதிக்கிட்டே போறார்!
கையிலே கீரி வச்சுக்கிட்டு சிங்கத்துமேலே உக்கார்ந்துருக்கறவர் யார்னு சொல்லுங்க பார்ப்போம்! வைஷ்ரவண் என்னும் இவர் குபேரன். (அஷ்ட)திக்பாலகர்களில் ஒருவர்னு இவுங்க சொல்றாங்க. வடக்கு திசைக்கு உரியவராம்.வஜ்ரபாணி
இவரும் ஒரு வஜ்ரபாணி
பார்த்துக்கிட்டே வரும்போது கண்ணில் பட்டவர் மைத்ரேயர்! ஆஹா.... இவரைத்தானே அடுத்த புத்த அவதாரமாச் சொல்றாங்க! அப்ப நம்ம கல்கி அப்புறமா வருவாரா? இல்லே வந்துட்டுப் போயிருப்பாரா?
சித்தி விநாயகர் தெரியும். இப்ப சித்தி லக்ஷ்மியையும் தெரிஞ்சுக்கணும்:-) துர்கையின் இன்னொரு வடிவமாம். சிவன் கைகளில் தாங்குறார்!
புரியாத, தெரியாத சாமிகளைப் பார்த்துக்கிட்டே கடைசியில் வந்து சேர்ந்தது நம்ம விஷ்ணுவாண்டைதான். கருடவாஹனத்துலே பறக்குறார். சூரியப்பறவை என்ற பெயரும் உண்டாம் கருடருக்கு!
சூரியன்
மாடங்களில் விதவிதமான விளக்குகள்!
ஊத்திக் கொடுக்கும் பாத்திரம்! சரக்கு.... சுமாரா இருந்தாலும் பாத்திரம் பிரமாதமா இருக்கணும் :-)
ஹாலின் கோடியில் ஒன்பது பாம்புகளோடு ஒரு தங்க சிம்மாசனம்! ரெண்டு யானைகளின் முதுகுலே ஏறி நிற்கும்சிங்கம்! பாம்புப்பின்னல்கள் ..... முதுகு சாய்மானம்!
இன்னும் மற்ற இடங்களைப் பார்க்கணுமேன்னு இப்போ இந்த இடம்விட்டுப் போகவேண்டியதாச்சு.
தொடரும்........:-)
12 comments:
படங்கள் மூலம் அங்கிருக்கும் கலை நயத்தை ரசித்தேன்.
மிகச்சிறப்பு. பிரமாதம்.
அழகான சிற்பங்களும் , சிலைகளும் ... ....
அடேங்கப்பா... எத்தனைவிதமான சிற்பங்கள்.
அந்தச் சிவலிங்கத்தைப் பாத்தா திருகல் மாதிரி இருக்கே.
பிள்ளையார் கட்டியிருப்பது பாவாடையேதான். ஒருவேளை ஸ்காட்லாந்துகாரங்க இடுப்புல கட்டுவாங்களே...அது பேரென்னா... என்னவோ ஒன்னு. அதுவா இருக்குமோ!
தாந்திரீகத்தின் அடிப்படையே ஆணும் பெண்ணும் சேர்ந்து இருப்பதுதான். தனித்தனியா இருக்கக்கூடாது. அதுனாலதான் எமனைக்கூட மனைவியோட சேத்து வெச்சிருக்கு. நம்ம ஊர்க்கோயில்கள்ள ஆணும் பெண்ணுமா இருக்கும் கோயில்கள் எல்லாமே தாந்திரீகம் முன்னாடி பழக்கத்தில் இருந்ததால்தான்னு சொல்றாங்க.
அப்புறம்... அந்த சன்னல் ஓரமா உக்காரும் எடம் சூப்பரோ சூப்பர்.
காசு வாங்காத போட்டோகிராபர் கிடைத்துவிட்டால் என்னமாய் சுட்டுத்தள்ளி இருக்கிறீர்கள்! படங்கள் அபாரம். படங்களின் உள்ளடக்கம் அதைவிட அபாரம். அந்த உமா மகேஸ்வரன் படம் அழகோ அழகு! மிக்க நன்றி.
- இராய செல்லப்பா நியூஜெர்சி
அழகான படங்கள். இது போன்ற இடங்களில் பொக்கிஷமாகப் பாதுகாக்கப்பட்டு வரும் சிலைகளைப் பார்ப்பதற்கே அதிக நேரம் வேண்டும்! எத்தனை எத்தனை அழகான சிலைகள். பராமரிக்கவும் வேண்டும்.
தொடர்கிறேன்.
வாங்க ஸ்ரீராம்.
ரொம்பவே கலை நயத்தோடு செஞ்சுருக்காங்க !
வாங்க விஸ்வநாத்.
வருகைக்கு நன்றி!
வாங்க அனுராதா ப்ரேம்.
கொள்ளை அழகு!
வாங்க ஜிரா.
தாந்த்ரீகமும் சக்தி வழிபாடும் ஆரம்பகாலங்களில் இருந்தே இருக்கு போல!
ஸ்காட்லாந்து மக்கள் கட்டுவதுக்கு கில்ட்ன்னு பெயர். Kilt.
ஃபிஜித்தீவுகளிலும் நேடிவ் ஃபிஜியன்ஸ் ஆண்கள் இதேபோல ஒன்னு கட்டுவாங்க. Sulu
சுலு என்று அதுக்குப் பெயர்.
ஜன்னலோர இருக்கையிலே சாய்ஞ்சுக்கிட்டு நிம்மதியா நல்ல புத்தகம் வாசிக்கலாம்.
வாங்க இராய செல்லப்பா.
காசு வாங்காத போட்டோகிராபரா? இல்லையே கைடு சர்வீஸில் பார்ட் ஆஃப் த் டீல்னு கோபால் சொல்றார் :-)
தேதி போட்டுக்கும் படங்கள் எல்லாம் நான் என் கேமெராவில் எடுத்தவை. கைடு எடுத்தவைகள் என் செல்ஃபோன் பயன்படுத்தி :-) நானும்கோபாலும் இருக்கும் படங்களை எடுத்தவர் கைடு பவன் தான் ! அவருக்கு என் செல்ஃபோன் கெமெரா பிடிச்சுப்போச்சாமே :-)
வாங்க வெங்கட் நாகராஜ்.
உண்மையில் நேரக்குறைவுதான் பெரிய கஷ்டம். எதைப் பார்ப்பது எதை விட்டுவிடுவதுன்னு குழப்பம்தான் மிஞ்சும்.
நின்னு நிதானமாப் பார்க்கணுமுன்னா இன்னொருக்காப் போய்த்தான் வரணும்.
பார்த்தவரை நல்ல பராமரிப்புதான். சுற்றுலாப்பயணிகள் மூலமாக அரசுக்கு நல்ல வருமானம். அதைக் காப்பாத்திக்கணுமா இல்லையா?
Post a Comment