Monday, December 26, 2016

அன்பெனும் மழையிலே....... (இந்தியப் பயணத்தொடர். பகுதி 110)

I never like mixing  business with pleasure என்றாலும் கூட,  ஒரு நாள், ஒரே ஒருநாள்  மிக்ஸ் பண்ணிக்கிட்டால் தப்பான்னு  கேட்டால்.....    சரி போயிட்டுப் போகுதுன்னு  விட்டுரும்படி ஆகிருது.  அதுக்காக மூலையில் உக்கார்ந்து பிலாக்கணம் வைக்கணுமா?  நோ நோ....    நமக்கான வேற ஒரு முக்கியமான சமாச்சாரத்தை  இன்று வச்சுக்கிட்டால் ஆச்சு.  இன்று அவரவருக்குத் தனிவழி!
நெருங்கிய தோழி வீட்டில் கெட் டுகெதர்.  'பேசாமக்கிளம்பி வாங்க எல்லோரும். சமையல்  நான் செஞ்சுருவேன்'னு  சொல்லிட்டாங்க. அது  சரி இல்லைன்னு வாதாடி,  எதாவது கொண்டு வரோமுன்னு மற்ற தோழிகள்  அடிச்சுச் சொல்லி  அருமையான ஐட்டங்களைக்  கொண்டு வந்துருந்தாங்க. நமக்கேது அடுப்பு? இருக்கவே இருக்கு சுஸ்வாத்:-)
காலையில் இவரை  தொழிலதிபநண்பர் வந்து கூட்டிட்டுப் போயிட்டார். எனக்கு ஒரு ஓலா டாக்ஸி புக் பண்ணி இருந்தோம்.  சரியான நேரத்துக்கு  வந்துருச்சு வண்டி.  ஓட்டுனர் 'நல்ல முகம்'  காட்டினார்.  போற இடத்துக்கு எனக்கு வழி சரியாத் தெரியாதுன்னு முதலிலேயே சொல்லிட்டேன்.  கடைசியில் ஒரு சிக்னலில் நிக்கும்போது  வலமா இடமான்னு கேட்டதுக்கு, யாருக்குத் தெரியும்? வலமே போய்ப் பார்க்கலாமுன்னு சொன்னேன்.  வலம் திரும்பும்போதுதான் நான் போக வேண்டிய கட்டிடம்   நேரெதிரா இருக்குன்னு கண்டுபிடிச்சேன்:-)  அதுக்குள்ளே ஒரு  இருவது முப்பது மீட்டர் வண்டி ஓடிருச்சு.  அப்புறம்  ரிவர்ஸ் எடுத்தே சரியான கட்டிடத்துக்குள்ளே கொண்டு வந்துட்டார். பிரச்சனை இல்லைன்னு  அவரே சொல்லிட்டு மீட்டருக்கான வாடகையையும் வாங்கிக்கிட்டு, சர்வீஸ் நல்லா இருந்தா ஒரு  மெஸேஜ் அனுப்பறீங்களான்னு கேட்டார்.  அதுக்கென்ன?  பின்னூட்டம் அனுப்ப நமக்குத் தெரியாதா என்ன?  அதே போல் ஆச்சு :-)இப்ப எதுக்கு விஸ்தரிச்சுச் சொல்றேன்னா.....  நேத்து  வந்த முறைப்பாளர் மாதிரி இல்லை என்பதற்கு!  மனிதரில் எத்தனை வகை!!!
தோழிகள் வந்து சேர்ந்து, அரட்டைக் கச்சேரி, அப்பப்ப தீனி, சாப்பாடுன்னு நேரம் ஓடியே போச்சு. மெட்ரோவில்  போயிட்டு வரலாமுன்னு நினைச்சது  நடக்கலை.  ஒரு இளம்தோழியின் குழந்தை  பள்ளியில் இருந்து திரும்பிவரும்  நேரமாச்சுன்னதும் அடிச்சுப்பிடிச்சுக் கிளம்பினாங்க. அப்புறம் தொடர்ந்த  அரட்டை அடுத்த  ரெண்டு மணி நேரத்துக்குள்ளே முடிஞ்சுருச்சு. எனக்கும் தோழியே ஒரு  ஓலா கேப் புக் பண்ணிக் கொடுத்தாங்க.

கோபால் வந்து சேரும்போது மணி எட்டு.  ராச்சாப்பாட்டுக்கு வெளியே  போகவேணாமுன்னு  இருந்துச்சு. பகல் சாப்பாடு ரெண்டுவித வடைகளுடன் பாயஸம், இன்னபிற வகைகளுமா அமர்க்களமா இருந்ததுன்னு சொல்லி, படங்களை இவருக்குக் காமிச்சு கொஞ்சம் தீ வளர்த்தேன்:-)

ஏற்கெனவே அறையில் இருக்கும் ஃப்ரிட்ஜில்  தயிர் வாங்கி வச்சுருக்கோம். பழங்களும் பாக்கி இருக்கு. போதாதா என்ன?

மறுநாள் பிறந்ததும் காலில் கொஞ்சம் கஞ்சியைக் கொட்டிக்கிட்டாப்லெ ஒரு வேகம் வந்துருச்சு. இன்னும் மூணே நாட்கள்தான் சென்னையில்.  அதுக்குள்ளே  சந்திக்க வேண்டியவர்களைச் சந்திச்சே ஆகணும்!
கவிதாயினிக்குச் சேரவேண்டிய புத்தகங்களைக் கொண்டுபோய்க் கொடுக்கணும். அவுங்க ஊரில் இல்லை. அதனால் பக்கத்து ஃப்ளாட் தோழி வீட்டில் கொடுத்தால் ஆச்சு. ஏற்கெனவே நமக்குப் பரிச்சயமானவங்கதான்!  அங்கே போனால்....   ஹைய்யோ ஹைய்யோ அச்சச்சோ....   தத்தைக் குட்டி!  கொஞ்சநேரம்  கொஞ்சிட்டுத்தான்  கிளம்பினேன்:-)
ரொம்பநாளாக நண்பர்/வாசகர் வரச்சொல்லிக் கேட்டுக்கிட்டே இருக்கார்.  அடுத்தபயணத்தில்னு சொல்லியே ஆறேழு பயணங்களைத் தள்ளிப் போயிருக்கு. இன்றைக்கு ரெண்டாவது வேலையா அங்கேதான்!

 நண்பருக்குப் பகல் 1 மணி  ஷிஃப்ட் என்பதால் காலை நேரம் ஓக்கே!
தகவல் தெரிவிச்சதும்.....  எப்படி வழி,  எங்கே வண்டியை நிறுத்தணும்,  அவர் இருக்கும் தெருவின் அகலம் உட்பட சகலமும்.  கூடவே ஒரு குறிப்பிட்ட இடத்தின் பெயரைச் சொல்லி அங்கே நமக்காகக் காத்திருப்பதாகவும் சொன்னார்.  இது  போதாதுன்னு  நம்ம சீனிவாசனிடமும் வழியெல்லாம் விஸ்தரிச்சும் ஆச்சு.
எல்லாம் சொன்னது சொன்னபடியெ!   அனந்து வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தோம்!
ஹைய்யோ.....  என்ன ஒரு அன்பான வரவேற்பு! அவர் மடலில் சொன்னதைப்போல குடும்பமே ஆர்வமாக் காத்துக்கிட்டு இருக்கு!!   அனந்துவின் அம்மா....
சொந்தப் பொண்ணை வரவேற்பதுபோல்  காட்டிய  புன்முறுவலை ஆயுசுக்கும் மறக்க முடியாது! எல்லாத்தையும்விட அடுத்தமுறை வரும்போது நாலைஞ்சுநாள் கூடவே தங்கி, அக்கம்பக்கத்திலுள்ள கோவில்களுக்குப் போய்வரலாமுன்னு சொன்னது ரொம்பவே பிடிச்சுருந்தது! உடன்பிறந்தான் வீடு கிடைச்சுருச்சு!


மகன் விவேக் படிப்பில் கெட்டி!  பெண் சின்னவள். பள்ளிக்கூடம் போயிருந்தாள்.  மகன் இப்போ ஸி ஏ படிப்புக்குச் சேர்ந்துருக்கார்!
அன்றைக்குத் தை வெள்ளிக்கிழமை!  அதுவும்  தை மாசக் கடைசி வெள்ளி என்பதால் விசேஷ பூஜை எல்லாம் ஸ்பெஷல் நைவேத்தியங்களோடு நடந்து, நமக்கு இனிப்போ இனிப்புதான்:-) கூடவே மஞ்சள்குங்குமம் தேங்காய் பழம் வெற்றிலைபாக்கோடு வச்சுக்கொடுக்கும் சம்ப்ரதாயத்தின்படி  ஜாக்கெட் பீஸ்.

நம்முடைய பூனா எபிஸோடில் நமக்கு வாய்த்த நண்பர் குருசாமியை நினைவுபடுத்தும் நண்பரும் குடும்பமும்.....  இந்த அன்பை எழுத்தில் சொல்ல முடியாது.... உணரத்தான் முடியும்!
பக்கத்துத் தெருவில் நிறுத்தியிருந்த வண்டிவரை கொண்டுவிட்ட  தம்பித் தம்பதிகளுக்கு நன்றி சொல்லி அங்கிருந்து கிளம்பி தங்கக்கூட்டில் இருக்கும் தகப்பனைப் பார்க்கப் போனோம்!

தொடரும்..........  :-)


16 comments:

said...

அருமையான நட்புப் பகிர்வு.

said...

ஹூம்... இங்கே பெரும்பாலும் டாக்சி டிரைவர்ஸ் நல்ல முகம்தான் காட்டுறாங்க... காரணம் ஒவ்வொரு ரைடுக்கும் ரேட்டிங் இருக்கு. worst, bad, average, good, excellent இந்த மாதிரி. அதுக்காகவே நம்ம மேல அவங்களுக்கு கோபம் வந்தாலும் ரைடு முடியும் வரை அடக்கிட்டு இருப்பாங்க...

said...

நட்புகள் வாழ்க. ஓலாவை விட Uber சீப் அண்ட் பெஸ்ட்! வடை படமும், கிளிப் படமும் ஸூப்பர்!

said...

//படங்களை இவருக்குக் காமிச்சு கொஞ்சம் தீ வளர்த்தேன்//

ஹிஹிஹி.

said...

அடடா... ஆமைவடையையும் உழுந்தவடையையும் பாக்கப் பாக்க வாயூறுதே.

அந்த பச்சை டிசட்டைப் பையன் சிஏ படிக்கிறாரா? பள்ளிக்கூடம் போற பையன் மாதிரி இளமையா இருக்காரு. வாழ்க. வளர்க.

உணர்ச்சி நட்பாங் கிழமை தரும்னு வள்ளுவர் சொல்லியிருக்காரு டீச்சர். ஆனா கிழமைல நேர்மையும் அன்பும் தேவைங்குறது உங்களோட நட்புறவுகளைப் பாக்கும் போது தெரியுது.

said...

தொடரட்டும் நட்பு.....

தொடர்கிறேன்.

said...

தத்தம்மே பூச்ச பூச்சா என்று கூவினேன்

said...

நட்புகளுடன் இனிய தருணங்கள். தொடரட்டும்.

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

நன்றி.

said...

வாங்க கார்த்திக் சரவணன்.

கொஞ்சநாளா இந்த ட்ரைவர்கள் கெட்ட பெயர் வாங்கிக்கிட்டு இருக்காங்க போல!

said...

வாங்க ஸ்ரீராம்.

எப்பவாவது அவசரத்தேவைக்குத்தான் கால் டாக்ஸி எடுக்கறோம். சீனிவாசன் இருந்தால் ஒரு பிரச்சனையும் இல்லை.

said...

வாங்க விஸ்வநாத்.

ச்சான்ஸ் கிடைச்சால் விடலாமோ? :-)

said...

வாங்க ஜிரா.

இந்த எழுத்துக்கே இப்படி ஒரு நட்புகள் கிடைக்குதுன்னா.... இன்னும் நல்லா எழுதினால் எப்படி இருக்குமுன்னு நினைச்சுப் பார்க்கிறேனே......

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

தொடர்வதற்கு நன்றி.

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

ஆ வீட்டில் பூச்ச இல்லையாக்கும். தத்த நல்லோணம் அறியும் :-)

said...

வாங்க மாதேவி.

வருகைக்கு நன்றிப்பா.