Friday, June 17, 2011

இப்பெல்லாம் நோ ஜருகண்டி !!!!!!!!!!!! (திருமலைப் பயணம் மினித் தொடர் பகுதி 2 )

போனவாரம் 9 ஆம் தேதி வியாழன் காலை ஆறுமணிக்கு அந்த ஸ்ரீநிவாஸனே சாரத்யம் செய்ய, திருப்பதிப் பயணம். திருத்தணியில் இருந்து பைபாஸ் ரோடுவழியா போறோம். ரயில் எங்களை முந்திக்கிட்டு வேகம் எடுத்து ஓடுது:)
தீருப்பதீ = தீநமலைன்னு தமிழில் எழுதுன பேருந்து நம்ம முன்னால் போகுது. அண்டை மாநிலம். ஆனாலும் ஒரே ஒருத்தருக்குக் கூடவா தமிழ் அறவே தெரிஞ்சுருக்காது? அறவமுன்னா இவ்வளோ அலட்சியமா?
இருபத்தி இரண்டு வருட மாற்றங்கள் மாறுனதே தெரியாமல் எல்லாம் புதுமை. கீழ்த் திருப்பதியில் எம் எஸ் எஸ் அம்மா தம்பூரா ஏந்தி அமர்ந்திருக்கும் தங்க வர்ணச்சிலை! க்ளிக்குவதற்குள் வண்டி பறந்துருச்சு:( சுப்ரபாதமுன்னு நினைச்சாலே எம் எஸ் எஸ் அம்மாதானே அத்தாரிட்டி ! பெருமாள் கூட அப்புறம்தான் நினைவுக்கு வருவார் இல்லையோ!!!!!
இந்த முறையும் சம்ப்ரதாயம் விடுபட்டது. பத்துமணிக்கு அங்கே இருந்தால் என் ஆர் ஐ. வரிசையில் போகலாமுன்னு மலேசியத்தோழிகள் சொல்லி இருந்தாங்க. கைகூப்பி வரவேற்கும் பெரிய திருவடியைக் கடந்து செக்யூரிட்டி செக்கப் போனோம். ஏழெட்டு வரிசையில் வண்டிகள்.
பெட்டிகள் கொண்டு வந்துருந்தால் அவைகளை வெளியே எடுத்து ஸ்கேன் செஞ்சுக்கணும். நமக்கு கையில் ஒரு பை.. (மஞ்சப் பையா மட்டும் இருந்துருந்தா எவ்ளோ நல்லா இருந்துருக்கும்!!)! அதில் ஒரு செட் மாற்று உடுப்பும், வேண்டுதலுக்காக நியூஸியில் வெட்டிய முடிக் கற்றைகளும்.( இதுவே ரெண்டு கிலோ எடை)
மலைக்குப்போகும் பாதையில் காளி கோபுரம் கண்ணில் பட்டது. பாதையில் அங்கங்கே வரவேற்பு வளைவுகள். பளபளன்னு புதிய சாலை. ஓய்விடங்கள் எல்லாம் அருமை. நமக்கு நின்னு பார்க்க ஏது நேரம்? ஓடு............

பத்து இருபதுக்குக் கல்யாணகட்டாவைத் தாண்டும்போது முடி கொடுக்கணுமுன்னு சாரதியிடம் சொன்னால்.....விடுதியில் தங்கி இருப்பவர்களுக்கு மட்டுமே இங்கே அனுமதின்றார். இது என்னடா புதுக் கதைன்னு நினைக்குமுன் வைகுண்டம் காம்ப்ளெக்ஸில் வண்டி நின்னுச்சு. செருப்பை வண்டியிலே விட்டுட்டுப் போங்கன்னார் சாரதி ஸ்ரீநிவாஸன். கூடவே கேமெரா, செல்ஃபோன்கள் எல்லாம். எதுக்கும் அனுமதி இல்லை(யாம்)

வைகுந்தம் க்யூ காம்ப்ளெக்ஸில் கம்பிக்கூண்டுகளுக்குள் வரிசை நகராமல் நிற்பது தெரியுது. நடுங்கிப் போயிட்டேன். யாருக்காவது மயக்கம் வந்தால் அதோகதிதான்..... இப்படியா மந்தை மாதிரி....:(


விசாரணையில் விசாரிச்சு கோவில் ஊழியர் ஒருவர் வழி காட்ட சுபோதம் என்ற வாசலுக்குப் போய்ச் சேர்ந்தோம். 11.30க்கு என் ஆர் ஐ.க்களை உள்ளே விடுவார்களாம். ஒருவயதுக்குட்பட்டக் கைக்குழந்தையுடன் வருவோர், புதுமணத்தம்பதிகள், தேவஸ்தான ஊழியர்கள் குடும்பம் இப்படி எல்லோருக்கும் இன்னொரு வழி இங்கே.

நமக்கு இன்னும் அம்பது நிமிடங்கள் இருக்கு. முடி கொடுக்கப் போகலாமுன்னா..... அம்பது நிமிசத்தில் போய்வர முடியாது. எப்பவும் போல இடும்பிக்கு வேற வழி! படுத்துக்கினு போர்த்திக்கவா இல்லை போர்த்திக்கினு படுத்துக்கவா.................

கல்யாண உற்சவத்துக்கு பணம் கட்டுனவுங்க வாங்க வாங்கன்னு அப்பப்ப தர்மக்கூச்சல் போட்டுக்கிட்டு இருந்தாங்க. ஊழியர்கள். பட்டும் பீதாம்பரமும் நகையும் நட்டுமா வந்துக்கிட்டு இருந்த மக்கள்ஸ்க்கு அஞ்சு நிமிசத்துக்கொருமுறை கேட் திறந்து வழி விட்டுக்கிட்டே இருந்துச்சு!!!!!!! பெரிய சிபாரிசோ என்னவோ?

சரியா 11.25க்கு உள்ளே அனுப்பினாங்க. எலெக்ட்ரானிக் கேட்டுக்குள்ளே நுழையும்போதே நம்ம தலையில் இருக்கும் பூவை எடுத்துப்போட்டுடச் சொன்னாங்க. திருமலையில் எல்லாப் பூக்களும் இறைவனுக்கே. ஆனால் முடி போகப்போகுதேன்னு காலையில் மலர் சூடி பிஃபோர் ஃபோட்டோ எடுத்துக்கிட்டேன். திரும்பி வந்ததும் ஆஃப்டர் எடுக்கணும்.
கேட்டைத்தாண்டி உள்ளே போனோம். அங்கே ஒரு படிவம் நிரப்பணும். கையோடு கொண்டு போயிருந்த பாஸ்போர்ட் முதல் பக்கத்தின் காப்பியைப் பார்த்து பாஸ்போர்ட் நம்பர் மற்ற விவரங்கள் எழுதிக் கையெழுத்துப் போட்டோம். 'இது என்ன காப்பி கொண்டுவந்துருக்கீங்க? பாஸ்போர்ட் எங்கே'ன்னார் ஆப்பீஸ்ஸர்.

"சரியாப் போச்சு. இந்தக் கூட்டத்துலே தொலைஞ்சு போச்சுன்னா அப்புறம் எப்படி ஊருக்குப் போவேன் (ஆப்பீஸ்ஸர்)?"

சொன்னது புரிஞ்சது அவருக்கு:-)

தலைக்கு 300 ரூபாய் தரிசனக் கட்டணம். இன்னொரு சின்ன கேட்டைத் திறந்து உள்ளே போகச் சொன்னாங்க. காலை வீசிப்போட்டு கடந்து போனோம். ஒருவர் தாராளமா போகும் அளவுள்ள கம்பித்தடுப்பு வரிசை. அங்கே (யும்)வரிசையில் இருக்கும் ஆட்களைப் பொருட்படுத்தாமல் பின்னால் இருந்து முண்டியடிச்சுக்கிட்டு நம்மை இடிச்சுக் கம்பிப் பக்கமா ஒரே தள்ளு தள்ளிட்டு முன்னேறிப்போகும் மாக்கள்.

ஒரு இடத்தில் கைப்பைகள் ஸ்கேன் செய்யப்பட்டன. அது முடிஞ்சதும் ஒரு இருபது மீட்டர் தூரத்தில் கோவில் முகப்பு கோபுரவாசலுக்கு வந்துடறோம். இங்கே 300 ரூ கட்டணம், கட்டணமில்லாத சேவை என்று எல்லா மக்களையும் 'இனி உன் சமர்த்து'ன்னு ஒன்னாக் கலந்துடறாங்க. அலையில் அகப்பட்ட மீன்கள் தானாவே அடிச்சுக்கிட்டுப்போகுது! நாம் ஒன்னுமே செய்யவேணாம். கூட்டம் நம்மை முன்னேற்றும்!

கொடிமரத்தைச் சேவிச்சுக்கிட்டு இடப்பக்கமா கருவறை முன்மண்டபத்துக்குள் போயாச்சு. இடது பக்கம் இருக்கும் ரங்க மண்டபத்தைக் கண்கள் ஏறிட்டுப் பார்ப்பதோடு சரி. அங்கே இங்கே திரும்பவிடாமல் கூட்டமே நம்மை உள்ளே தள்ளிக்கிட்டுப் போகுதே! நாலுஅடி அகல கம்பித்தடுப்பில் எட்டு ஆட்கள் போகணும். நாங்க நடுவில் இருக்கோம். ரெண்டு பக்கமும் தள்ளியனுப்புறாங்க. மூக்குக்(?!) கண்ணாடி அடிபடாமல் இருக்க காபந்து பண்ணிக்கிட்டு இருக்கேன். குதிகாலை உயர்த்தி எட்டிப்பார்த்தால் அதோ குலசேகரன் படி!

உள்ளே கும்மிருட்டு. கண்களை ட்ரெயின் பண்ணி இருட்டுக்குப் பழகுமுன் குலசேகரன் படி முன் கட்டி இருக்கும் சங்கிலிக்கு அருகில் வந்தாச்சு. என் முன்னே இருந்த ஒருவர் சட்ன்னு குனிஞ்சு கும்பிட கீழே விழறார். அவரைத் தடுத்து நிறுத்த அங்கிருந்த ஊழியர்கள் முயற்சிக்க, சாமி பாருன்னு கோபால் என்னிடம் சொல்ல கண்ணை உள்ளே அனுப்பிய விநாடி, என் கையைப் பற்றி இழுத்தது............... சாமி இல்லைப்பா:(

நோ ஜருகண்டி........ கையோடு கை பேசுங்கால்
வாய்ச்சொல்லில் என்ன பயன்

இழுத்த வேகத்தில் அப்படியே வெளியேறும் வாசல்பக்கம் எறிஞ்சது, அங்கிருந்த கோவில் ஊழியையின் கை. நான் என்ன பார்த்தேன்? முதல்லே...பார்த்தேனா? ஆங்......பார்த்தேன். கும்மிருட்டில் ரொம்பவே மெல்லீஸா ஒரு ஒளியில் உயரக்குறைவா பெருமாள் நிக்கறார். ஒத்தை வரிசையாக் கட்டுன மஞ்சள் சாமந்திச் சரம், அதுக்குக் கீழே பச்சையாய் துளசி மாலை, அப்புறம் வெள்ளை மலர்கள் சரம், அடுத்த வரிசையா அரளிப்பூ நிறத்தில் ஒரு சரம். இப்படி நாலஞ்சு மெல்லிய பூச்சரங்கள் மட்டுமே போட்டுருந்தார்.

' வெளியே வந்து விழுந்த' எல்லோருக்கும் முகத்தில் ஒரு ஆசுவாஸம். பெருமாளைப் பார்த்ததால் இருக்காது. நசுங்கல்களில் இருந்து விடுபட்டு மூச்சு விட முடிவதால் ஏற்பட்ட திருப்தியாத்தான் இருக்கணும்.

மணி 12.10. ஆகக்கூடி 45 நிமிசத்தில் உள்ளே புகுந்து வெளியேவும் வந்தாச்சு.

Bபங்காரு Bபாவியைக் கடந்து மண்டபத்தில் ஏறி உக்கார்ந்து கண்களை உயர்த்தி ஆனந்த நிலையம் தங்கக்கோபுரத்தைப் பார்த்த மாத்திரத்தில் மனசுலே தாளமுடியாமல்............. கண்ணீர் பொங்குச்சு. சுருக்கத்தில்(சின்னதா) ஒரு நயாக்ரா.

இப்ப எதுக்கு கரையறாய்? பொம்மநாட்டிகள் அழுதா நேக்குத் தாங்காது கேட்டோ...........கோபால் சொல்றார். 'வெறும் துளசி மாலையும் இடுப்பில் ஒற்றை வேஷ்டியுமா நகைநட்டு எதுவுமே இல்லாம சின்ன நாமமாப் போட்டுண்டு நின்னார்'

"இல்லையே............. வேற மாதிரின்னா இருந்தது. பூச்சர வரிசைகளோடு"

"இல்லவே இல்லை. சிம்பிளா கண்ணைக்கூடத் திறந்து(?) வச்சுண்டு இருந்தார்"

"ஐயோ...... அப்படியா? நான் பார்க்கவே இல்லை......"

"இல்லை. நான் சாமி பாருன்னு சொன்னேன். நீ கண்ணை உசத்திப் பார்த்தாய்"

"அட ராமா...... என் கண்பார்வையைப் பறிச்சுட்டான் போல இருக்கே! நான் பார்த்தது வேற மாதிரி! "

ஐயோ..... என் கண்ணைக் கட்டிட்டான்...........

நினைக்க நினைக்கப் பொங்கிப்பொங்கி அழுகை. பார்த்தேனா? இல்லையா? ஊனக்கண்ணில் பார்த்தேனா? ஞானக்கண்ணில் பார்த்தேனா? இந்த விநாடிவரை சந்தேகம் தொடர்கிறது. கோபால் ஒரு புண்ணியாத்மா. அவர் சொன்னால் சரியாத்தான் இருக்கணும். அன்று முதல் இன்றுவரை தினம் நாலுமுறை, 'எப்படி இருந்தான் எப்படி இருந்தான்'னு கோபாலைப் பிச்சுப் பிடுங்கிக்கிட்டே இருக்கேன்:(

பாவம் கோபால். தூக்கத்தில் எழுப்பினாலோ இல்லை தெரியாமல் கை கால் பட்டுச்சுன்னாலோ அலறி அடிச்சுக்கிட்டு 'ஒத்தை வேட்டி, துளசிமாலை சின்ன நாமம்' ன்னு பினாத்தறார்:-)

சரி....இப்போ கோவிலைப் பற்றிக் கொஞ்சமா(!)ச் சொல்லவா?)

தொடரும்..............:-)

41 comments:

said...

கடைசியில் மெய் மறந்து இருக்கிங்க.

:)

படிக்கவும் நன்றாக இருந்தது.

said...

தலைப்பை பார்த்து நான் கூட இப்போ ரொம்ப சுலபமாக மாறிப்போச்சோ என்று நினைத்தேன்.

said...

படங்கள் அருமை

said...

தரிசனம் செய்ய முடியாம இப்படித் கையைப் பிடித்து இழுத்து வெளியேற்றுவது என்பது ஒத்துக்கொள்ள முடியாத ஒன்று... இதற்கு ”ஜருகண்டி”யே தேவலாம்...

தூக்கத்தில் பினாத்தினார்... :) பாவம் கோபால் சார்...

உங்கள் புண்ணியத்தில் இரண்டு விதமாய் வேங்கடவனை தரிசித்தோம்.....

said...

sema running commentary!

said...

நல்ல பகிர்வுங்க. தரிசனம் செய்தோம் இரண்டு விதமாய். படங்களும் நல்லாயிருக்கு.

said...

அன்பு

துளசி, திருப்பதி போய் வந்து ரொம்ப நாளாச்\னு பதிவே சொல்கிறது.

ஜருகண்டி மரியாதைச் சொல்.;௦)

இப்போ நடப்பது ரிலே ரேஸ்.

அவனாப் பார்த்து நம்ம முன்னால் வந்தாதான் ஆச்சு.

கிங்கரர்ககல்மாதிரி (பெண்பாலருக்கும் அதே பெயர்தான்)

அவர்களிழுக்கும் வேகத்தில் கைகால் பிய்ந்து போகாமல் இருக்கணும்னால் ஐநூறு ஆயிரம் கொடுக்கலாம். வாங்கிக் கொண்டு தள்ளுபவர்களும் உண்டு.

சிங்கம் சொல்வது போல நம்ம வீட்டுப் பெருமாள்போதும் என்கிற நிலைமைக்கு வந்தாச்சு.

said...

Karaiyandaa mole. ennum Kopaal undallo pakkaththilnu avarsollittaar...baalaaji sir.

said...

பாவம் கோபால். தூக்கத்தில் எழுப்பினாலோ இல்லை தெரியாமல் கை கால் பட்டுச்சுன்னாலோ அலறி அடிச்சுக்கிட்டு 'ஒத்தை வேட்டி, துளசிமாலை சின்ன நாமம்' ன்னு பினாத்தறார்:-)


இதை படித்ததும் என்னை அறியாமல் வாய் விட்டு சிரித்து விட்டேன்,

உண்மையை சொல்லுவதென்றால் உங்களின் எழுத்துக்களை படித்த வரையில் எனக்கு உங்களின் கோபா(லே)லனே கோவிந்தனாக தெரிகிறார்

நல்ல மொழி நடையில் வேங்கடவன் தரிசனம் , நானும் வரும் ஜூன் இருபது செல்கிறேன் அவன் பாதம் பணிய

said...

"எக்ககோலத்தெவ்வுருவாய் எத்தவங்கள் செய்வார்க்கும்
அக்கோலத்து அவ்வுருவே ஆம்"---- காரைக்கால் அம்மையார்.

நம் வீட்டு பூசை அறையில் நாம் வழிபடும் சாமியும், சிரமப்பயணம் போய் தரிசுக்கும் சாமியும் ஒன்றுதான்!!

இருப்பினும் பயண அனுபவம் மிக நன்று. பாவம் கோபால்.

said...

எம்பெருமானே! அப்பா!
உன்னைப் பார்க்கும் போது மட்டுமல்லாமல், பிறர் சொல்லிக் கேட்கும் போதும் கூட ஏனோ, கண்ணோரம் ஆனந்த ஈரம்!

said...

மாயனார் திரு நண் மார்பும், மரகத உருவும் தோளும்
தூய தாமரைக் கண்களும், துவர் இதழ்ப் பவள வாயும்
ஆய சீர் முடியும் தேசும், அடியோர்க்கு அகலலாமே!

said...

அகலகில்லேன் இறையும் என்று
அலர்மேல் மங்கை உறை மார்பா!
என்னை ஆள்வோனே!

உன் வென்றி வில்லும், வாளும், தண்டும்,
சங்கோடு சக்கரமும்....
இன்று வந்து என் கண்ணுள் நீங்காது!
என் நெஞ்சுள்ளும் நீங்காது நீங்காதே!

said...

உன் கோல நீள் கொடி மூக்கும்,
தாமரைக் கண்ணும், கனி வாயும்,
நீல மேனியும், நான்கு தோளும்,
ஐயோ....வந்து.....
என் நெஞ்சம் நிறைந்ததுவே! என் நெஞ்சம் நிறைந்ததுவே!

said...

அழகான கூந்தல் டீச்சர் :)

said...

//காளி கோபுரம் கண்ணில் பட்டது//

Gaali Gopuram! Not KaaLi Gopuram :)

said...

//பத்துமணிக்கு அங்கே இருந்தால் என் ஆர் ஐ. வரிசையில் போகலாமுன்னு மலேசியத்தோழிகள் சொல்லி இருந்தாங்க//

அது என்ன என்.ஆர்.ஐ வரிசை? டூ மச்! இந்த என்.ஆர்.ஐ தொல்லை தாங்க முடியலைப்பா:)

//இங்கே 300 ரூ கட்டணம், கட்டணமில்லாத சேவை என்று எல்லா மக்களையும் 'இனி உன் சமர்த்து'ன்னு ஒன்னாக் கலந்துடறாங்க.//

சூப்பர்! நல்லவங்க! :)
பெருமாளின் கண்ணு முன்னாடி முத்தன் குப்பனாவது? முன்னூறு ரூவா டிக்கெட்டாவது!
எல்லாரும் ஓர் குலம்! எல்லாரும் ஓர் நிறை!
இடிபட்டுத் தான் பாக்கணும்!:)

அடியாரும் வானவரும் கிடந்து இடிக்க...
படியாய் கிடந்து உன் பவழவாய் காண்பேனே!

said...

//மூக்குக்(?!) கண்ணாடி அடிபடாமல் இருக்க காபந்து பண்ணிக்கிட்டு இருக்கேன். குதிகாலை உயர்த்தி எட்டிப்பார்த்தால் அதோ குலசேகரன் படி! உள்ளே கும்மிருட்டு//

:)
இதோ, இடிபடமால், கும்மிருட்டில் அதே எம்பெருமான்!

தயிர்க்காரி - தும்பையூர் கொண்டி!

said...

//கும்மிருட்டில் ஒத்தை வரிசையாக் கட்டுன மஞ்சள் சாமந்திச் சரம், அதுக்குக் கீழே பச்சையாய் துளசி மாலை, அப்புறம் வெள்ளை மலர்கள் சரம், அடுத்த வரிசையா அரளிப்பூ நிறத்தில் ஒரு சரம். இப்படி நாலஞ்சு மெல்லிய பூச்சரங்கள் மட்டுமே போட்டுருந்தார்//

:)

//நினைக்க நினைக்கப் பொங்கிப்பொங்கி அழுகை. பார்த்தேனா? இல்லையா?//

:)

said...

பார்க்காத,
பார்த்தும் ஆராத
அடியவர்கள் வசதிக்காக...இதோ...

பக்தர்கள் எல்லாரும் பெருமாளைச் சேவித்துக் கொள்ளுங்கள்!
கர்ப்பூரத் தீபத் தட்டு சுழல.....

எம்பெருமான் திருவேங்கடமுடையான்!

வேங்கடேஸ்வரன், ஸ்ரீநிவாசன், பாலாஜி என்கிற திருநாமங்கள்!
கலியுக வைகுந்தம் என்று போற்றப்படும் திருமலை-திருப்பதியிலே எம்பெருமான் சேவை சாதிக்கின்றான்!
பகவானுடைய முடிவல்லதோர் அழகுத் திருமேனி!

திருமுடியிலே வஜ்ர கிரீடம்! குழற்கற்றை!
பகவானுடைய திருமுக மண்டலம்!
நெற்றியிலே திருமண் காப்பும், குளிர்ந்த கண்களும், கூரிய நாசியும், கொவ்வைச் செவ்வாய் தித்தித்து இருப்பதுமாய் சேவை சாதிக்கின்றான்! பெருமானுடைய மோவாய்க் கட்டையிலே தயா சிந்து!

எம்பெருமானுடைய திருமார்பிலே நித்யவாசம் செய்கின்றாள் மகாலக்ஷ்மித் தாயார்! மஞ்சள் குங்கும பூஷிதையாய், நித்ய சுமங்கலியாக, அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா என்று ஆழ்வார் சாதித்தபடி வீற்றிருக்கின்றாள்!

பகவானுடைய திருமேனியைப் பல திவ்ய ஆபரணங்கள் எல்லாம் அணி செய்கின்றன! பல ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த மகர கண்டி, லட்சுமி ஆரம், சகஸ்ரநாம மாலை, சூர்ய கடாரி போன்ற திருவாபரணங்களும்...
மல்லிகை, இருவாட்சி, கதம்பம், ரோஜா, அல்லி, அளரி, செந்தாமரை மலர்களாலான புஷ்ப மாலைகளும், துளசி மாலைகளும் பெருமாளுக்குச் சார்த்தப்பட்டு இருக்கின்றன!

எம்பெருமானுடைய ஒரு கரம் தன் பாதங்களை நோக்கியும், மற்றொரு கை, தன் முழங்காலிலும் வைத்துச் சேவை சாதிக்கின்றான்!
இதோ திருவடிகள்! இதைப் பற்றிக் கொண்டார்க்கு உலக சமுத்திரம் வெறும் முழங்கால் ஆழம் தான் என்பதைச் சொல்லாமல் சொல்லி விளக்கும் முத்திரைத் திருக்கோலம்!

பற்றுக பற்றற்றான் பற்றினை என்னும்படியான திருப்பாத சேவை!

பார்த்தாலும், படித்தாலும், படிக்க பக்கம் நின்று கேட்டாலும்
ஈர்த்தாலும், பிடித்தாலும், இறுகக் கட்டி அணைத்தாலும்...
இத்தனைக்கும் தித்திக்கும் இனித்த சுவைக் கரும்பே என்னும்படியான மாயோனின் திவ்ய மங்களத் திருமேனி!

கோதையும், ஆழ்வார்களும், ஆசார்யர்களும், உடையவரும்,
அன்னமாச்சர்யர், புரந்தரதாசர், தியாகராஜர், பக்த ராமதாசு முதலான தெலுங்கு இசை வாணர்களும்,
ஆதி சங்கரர், இராமானுஜர், மாத்வர் முதலான ஆசாரியர்களும்,
கனகதாசர், விஜயதாசர், வியாசராய தீர்த்தர் முதலான கன்னட தாச சாகித்ய கர்த்தாக்களும்,
இன்னும் மீரா முதலான பல்வேறு மொழி, நாடு கடந்த பக்தர்களும்....

உருகி உருகிச் சேவித்தவன்...இதோ உங்கள் முன்னால்...

சேவித்துக் கொள்ளுங்கள்!
ஸ்ரீயக் காந்தாய கல்யாண நிதயே நிதயேர்த்திநாம்
ஸ்ரீவேங்கட நிவாசாய ஸ்ரீநிவாசாய மங்களம்!

செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
நெடியோனே வேங்கடவா நின் கோயிலின் வாசல்
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும்

(தீபத்தட்டு அப்படியே சுழன்று வர..குலசேகரன் படிக்கு தீபாராதனை)

இந்த வாசல் படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனே!
எம்பெருமான் பொன்மலை மேல் ஏதேனும் ஆவேனே!!!

இதி ஸ்ரீமத் வேங்கடேஸ்வர ஸ்வாமினே கர்ப்பூர நீராஞ்சனம் தரிசயாமி!
ஸ்ரீ ஸ்ரீநிவாச பரப்பிரம்மணே கர்ப்பூர ஜோதிஹி! ஹரி ஓம்!

எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு...
வேங்கடவனுக்கு என்னை விதி என்ற இம்மாற்றம்
நாங்கடவா வண்ணமே நல்கு!

said...

பூக்கட்டும் தொண்டுக்காகச் சென்றிருந்த போது...
எம்பெருமானை 45 நிமிடம்...
ஆழ்வார் பாசுரக் கோஷ்டியில் தமிழ் வேதம் முழங்கச் சேவித்த போது, அடியேன் கண்ட காட்சி...அதையே இங்கு அனைவரின் பொருட்டும் அப்படியே சொன்னது...

said...

கண்ணோடு....காண்பதெல்லாம்... வேங்கடேசன் அருட்கோலம்.

said...

//ஒத்தை வேட்டி, துளசிமாலை சின்ன நாமம்//

வியாழன் அன்று திருப்பதி பெருமாள் அலங்காரம் இல்லாத திருக்கோலம் என்று படித்த நினைவு!

மிக்க நன்றி, ஸ்ரீனிவாசனை நான் சுப்ரபாதத்தின் போது பார்த்த நினைவுகளைக் கிளறியதற்கு;-)

said...

வாங்க கோவியாரே.

மெய் மறந்ததால் கண்கள் மெய்யைப் பார்க்கத் தவறிடுச்சே:(

said...

வாங்க குமார்.

அதெல்லாம் மாற்ற மாட்டாங்க. விஞ்ஞானவளர்ச்சின்னு கெமெரா வச்சு பெரிய ஸ்க்ரீன்லே கோவில் முகப்பிலேயே காட்டுவாங்களா இருக்கும். பார்த்துட்டு அப்படியே போயிடனும். ஆனாலும் அங்கேயும் உண்டியல் உண்டு:-)

said...

வாங்க சமுத்ரா.

வருகைக்கு நன்றி.

//படங்கள் அருமை//

அப்போ....பதிவு?????

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

அதாங்க எனக்கும் படா பேஜாராப் போச்சு.

நேற்று இங்கே பஞ்ச்குலா ஸ்ரீவெங்கடேஸ்வரா கோவிலில் ஆற அமர 10 நிமிசத்துக்கு அர்ச்சனை ஆரத்தி எல்லாம் கண்குளிரப் பார்த்தோம். இங்கத்து மூலவரும் திருப்பதி தேவஸ்தானம் அனுப்பியதுதான்.

தில்லியில் ஒரு கோவில் இருக்கு பாருங்க. அங்கேயும் ஆரத்தி அர்ச்சனை எல்லாம் நிம்மதியாப் பார்க்கலாம். ஒருமுறை போய் வந்தேன். விவரம் தில்லிப் பதிவுகளில் இருக்கு.

said...

வாங்க குலோ.

நன்றி நன்றி.

said...

வாங்க வல்லி.

எல்லோர் முன்னாலேயும் குறிப்பா பெருமாள் முன்னாலேயும் கைநீட்டி ஐநூறு ஆயிரம் வாங்குவாங்களா!!!!!!! அடராமா......

எல்லோருக்கும் காட்டிட்டுத்தானே கொடுத்தீங்க?

இருக்கும் இடத்தில் மனசைக்குவிச்சு முழுமனசோட அவனை வணங்குவதுதான் நம் உடலுக்கும் உள்ளத்துக்கும் இனி நல்லது:-))))
குரங்கைக் கட்டிப்போடனும்!

said...

வாங்க ஏ ஆர் ஆர்.

நல்ல தரிசனம் கிடைக்கட்டும்.

கோபால் ஒரு விதத்தில் கோவிந்தனேதானோ என்னவோ?

கடவுள் முக்காலே மூணு வீசம் மிருகம் ஒரு வீசமுன்னு வச்சுக்கலாம்:-)

said...

வாங்க பத்மா சூரி.

முற்றிலும் உண்மை. ஆனால் விதி யாரை விட்டது? ச்சும்மாக் கிடந்தாலும் கூப்பிடறானே!!!

said...

வாரும் கே ஆர் எஸ்.

ஆ.... அது Gகாலி கோபுரமா? லோபலோ ஏமி லேதா? Gகாலிகானே உந்தியா!!!!!

எல்லோரும் ஓர் 'நிரை' தான்:-)))) அப்படித்தான் இருந்தது!

தரிசனம் பண்ணி வச்சதுக்கு நன்றிப்பா.

இப்போதான் இந்தப் பதிவு பாடல்பெற்ற பதிவாக ஆகியுள்ளது!!!!

தயிர்க்காரி ப்ரமாதம். அவள் பசுக்களில் ஒன்னா அப்போ நான் இருந்திருப்பேனோ என்னவோ!

ஆணாக இருப்பதில் உள்ள சுகங்களில் ஒன்னு இப்படி நினைச்சா தொண்டு, ஸேவைன்னு போயிடலாம்.

எங்களுக்குத்தான் 'கர்ம' யோகம் விதிக்கப்பட்டு இருக்கே:(

ஆக்கு ஆக்கு ஆக்கு..........ஆக்கிண்டே இரு:-)

said...

வாங்க மாதேவி.

தரிசனம் நல்லாவே பண்ணி வச்சுருக்கார் நம்ம கே ஆர் எஸ்.

said...

வாங்க கெக்கேபிக்குணி.

குருவாரம் நேத்ர தரிசனம்தான் எப்பவும். அப்படியாவது கண் திறந்தால் சரி.

ஆமாம்....எங்கே ரொம்ப நாளா இந்தப் பக்கமே காணோம்?

ஸ்ரீநிவாஸன் இப்ப இழுத்துக் கொண்டுவந்துட்டானா?:-)))

said...

எழுத்து நடை ரொம்ப நல்லாருக்கு துளசிம்மா.

உங்கள் பயணக்கட்டுரைகளை எப்போதும் விரும்பி வாசிப்பேன்.

இந்தத் தொடரும் அருமை.

said...

வாங்க சரவணக்குமார்.

ஆஹா....பயணக்கட்டுரை பிடிக்குதா? பேஷ் பேஷ்.

நாளைக்கு மீண்டும் ராஜஸ்தான் தொடரை தொடர்கிறேன்.

ஜஸ்ட் ஃபார் யுவர் இன்ஃபோ:-)))

said...

துளசி மாமி
திருப்பதிக்கே நீங்கள் அழைத்துக் கொண்டு போய் விட்டீர்கள். கொஞ்சம் வேகமாகப் படிக்க வேண்டி இருந்தது. பிறகு பொறுமையாகப் படிக்கிறேன்.
வாஸ்தவம் தான், பெருமாள் அலங்காரப் பிரியர். வண்டி வண்டியாக புஷ்பங்கள் இருந்தாலும், ஒரே ஒரு பெண்ணின் தலையில் உள்ள புஷ்பத்தைப் பார்த்து நமக்கு அது இல்லையேன்னு நினைப்பாராம்.

said...

வாங்கோ தக்குடு.

அலங்காரப்ரியனை ஒன்னுமில்லாமல் சிங்கைக்கோவிலில் ஒரு முறை பார்த்துட்டுத் தேம்பித்தேம்பி அழுதுட்டேன். இது என்னடா உனக்கு இந்த கதின்னு!

அரைநாள் இப்படின்னு பட்டர் சொன்னார்:-) சாயந்திரம் முழு அலங்காரம் ஆயிடுமுன்னு நெஞ்சில் பால் வார்த்தார் !

said...

//ஆனால் முடி போகப்போகுதேன்னு காலையில் மலர் சூடி பிஃபோர் ஃபோட்டோ எடுத்துக்கிட்டேன். திரும்பி வந்ததும் ஆஃப்டர் எடுக்கணும்.// No after photo...!??

said...

வாங்க ஆனந்த ராஜ்.

முதல் வருகைக்கு நன்றி.

ஆஃப்டர் படம் எடுக்க ஆண்டவன் ச்சான்ஸ் கொடுக்கலையே!

பகுதி 3 பாருங்க:-)

said...

எனக்கு வேறு அனுபவம்.   பதிவும் போட்டிருக்கேன்.  ஜனவரி 19 இல் வாசல்வரை போன எங்களை உள்ளே அழைக்கவில்லை எம்பெருமான்.  எங்களை ஒரு சிறு விஷயத்தில் தவறு செய்யவிட்டு திருப்பி அனுப்பினான்.