Monday, September 13, 2010

இப்படி ஆளாளுக்குப் பிச்சுப்பிடிங்கினா.......(அம்ரித்ஸர் பயணத்தொடர் - 10 )

ஒருத்தர் நல்லவரா இருந்து, புகழோடு வாழ்ந்து எல்லோர் மனசுலேயும் இடம் பிடிச்சார்ன்னா அவரைக் கொண்டாட அங்கங்கே 'மக்களாப் பார்த்து'ச் சிலை வச்சு மரியாதை செலுத்துவாங்க. கோவில்களும் இப்படித்தான் இஷ்ட தெய்வங்களுக்குன்னு நாடு பூராவும் கட்டி வச்சுக் கும்பிடறாங்க. ஆனா அதுக்காக 'அவர்' இங்கேதான் பிறந்தார். இந்த இடத்தில்தான் அவுங்க குழந்தைகள் பிறந்தாங்கன்னு ஊர் ஊருக்கு இடம் காமிச்சா எப்படி இருக்கும்? ப்ளேஸ் ஆஃப் பர்த் எது? பர்த் சர்ட்டிஃபிகேட் கொண்டான்னா சொல்ல முடியும்?

பகல் வெய்யில் தாங்காம அறைக்குப் போனவங்க, நம்ம ஓட்டுனர் ப்ரதீப்பிடம் என் கோவில் லிஸ்ட்டைக் கொடுத்து அக்கம்பக்கம் மக்களிடம் 'பஞ்சாபியில் பேசி' இந்த இடங்களுக்கு எப்படிப் போகணும் என்ற விவரத்தைச் சேகரிச்சு வையிப்பா. சாயங்காலம் அஞ்சு மணிக்குக் கிளம்பிப் போகலாம். பள்ளிக்கூடத்துலே ஹோம் வொர்க் செஞ்ச பழக்கம் இருக்குதானே? இதுதான் உனக்கு ஹோம் வொர்க்ன்னு சொன்னேன்.


அஞ்சுமணிக்குக் கிளம்புனப்ப முதல்லே போனது பக்கத்துலே ரெண்டு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் ராம் தலாய் மந்திர். சண்டிகர் பஸ் டெர்மினஸைக் கடந்து போய் வலதுபக்கம் திரும்பி புதுசாக் கட்டிக்கிட்டு இருக்கும் மேம்பாலத்தின் அடியில் போறோம். ரெண்டு கிலோமீட்டர்ன்னு போட்டுருக்கு வலையில். ஆனா போய்க்கிட்டே இருக்கோமே! எதுக்கும் இருக்கட்டுமுன்னு, பக்கத்துலே நிக்கும் சைக்கிள் ரிக்ஷாக்காரரிடம் விசாரிச்சோம்.

ரொம்பப் பக்கத்துலேதான் இருக்குன்னு கையைக் காமிச்சு பஞ்சாபியில் ப்ரதீப்புக்கு விளக்கினவர், நாங்க போய் ரைட் எடுத்துத் திரும்பி அலங்காரவாசலில் நிறுத்தும்போது, சைக்கிள் ரிக்ஷாவை மிதிமிதின்னு மிதிச்சுக்கிட்டு அங்கே வந்து நிக்கறார். இது இல்லையாம். அடுத்த ரைட்டுலே போணுமாம்.

ஸ்பெஷலா இங்கே ரெண்டு அலங்காரவாசல். முதலில் இருப்பதில் ரெண்டு யானைகள். இதைப் பார்த்துட்டே போகலாமுன்னு உள்ளே நுழைஞ்சோம். ப்ராச்சீன் இதிஹாஸிக் மந்திர் ஸ்ரீராம். ராம் தலாய் னு வளாகத்தில் போர்டு போட்டுருக்கு. அப்ப இதுதான் நாம் தேடிவந்தது. அப்ப 'அது' என்னவா இருக்கும்?
பெருசா ஒரு கோவில்குளம். இடதுபக்கம் ஹனுமன் சந்நிதி, சிவனுக்கு ஒரு சந்நிதின்னு முன்பக்கம். சிவன்தலையில் குடைபிடிக்கும் பாம்புக்குச் சட்டை!!!!
ஒரு ஹால் போன்ற இடத்தில் வரிசையா சந்நிதிகள் அறுவரான ராமர் அண்ட் கோ , ராதாகிருஷ்ணா, விஷ்ணு, துர்க்கை இப்படி. கோவிலை இப்போ நடத்தும் குரு கன்ஷ்யாம் ஜி , இதுதான் லவகுசர் பிறந்த இடம். இந்த இடம்தான் வால்மீகி முனிவரின் ஆஸ்ரமம் இருந்த இடம். அதனால் இதை ராம் தலாய்ன்னு சொல்றோமுன்னு 'அடிச்சு'ச் சொல்றார். அப்ப கர்ப்பிணி சீதை இருக்கும் நம்ம கோயம்பேடு? வாயைத்திறக்காம சொன்னதைக் கேட்டுக்கிட்டேன்.
ராம் தலை ராமர் கூட்டத்தின் முக அழகு பிரமாதம்தான்.


அயோத்தியில் இருந்து இந்த இடம் கிட்டதான் இருக்கு. கதைக்குப் பொருந்தி வரும். ஒருவேளை கோயம்பேடுதான் லவகுசர் பிறந்த இடமுன்னா..... அவ்வளோ தூரம் கர்ப்பிணி சீதை எப்படி நடந்து வந்துருப்பாங்க? ஒருவேளை வால்மீகி ராமாயண சீதை இங்கும், கம்பராமாயண சீதை அங்குமா பெத்துப் போட்டுருப்பாங்களோ!!!!
அடுத்த சந்நிதி சனி பகவானுக்கு. கருப்பு உடைகளில் நிக்கறார். முழுச்சந்நிதியும் கருப்பே. அபிஷேகம் பண்ணிக்க வசதியா கருமை நிறக் கண்ணன் ஒரு ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் ஸிங்லே இறங்கி நிக்கறார் ஒரு பக்கம்!
இன்னொரு ஆஞ்சநேயர் சந்நிதி. ஒரு சில குடிசைவீடுகள், வாசலில் மண் அடுப்பி, மாட்டுக்கொட்டில் நிறையப் பசுக்கள் இப்படி வளாகத்தின் ஒரு பக்கம். இருந்துட்டுப் போகட்டும். அடுத்த கோவிலைப் பார்க்கலாம். பழைய கோவிலை இடிச்சுட்டுப் புதுசாக் கட்டி இருக்காங்கன்னு பயங்கர பில்டப் கொடுத்தாராம் ரிக்ஷாக்காரர்.

சிம்ரன் பேலஸ் கல்யாண மண்டபத்தைக் கடந்து கொஞ்சதூரம் போனால் தெருவையொட்டி நிற்கும் மரத்தோடு சேர்ந்து நிக்குது ஹனுமன் கோவில்.
வழக்கமான பளிங்குச்சிலைகளுடன் சுவரில் பதிக்கப்பட்ட ஹனுமனும் இருக்கார். ரொம்பப் பழைய கோவில் இல்லையாம். நாப்பது வருசமா இருக்கும் கோவிலை, தெருவை அகலப்படுத்தன்னு காரணம் சொல்லி அரசு இடிச்சிருச்சாம். பொதுமக்கள் எல்லாம் ஒன்னு சேர்ந்து கோரிக்கை வச்சு இதைமட்டும் இடிச்சு தெருவை அகலப்படுத்த முடியுமா? அப்போ இந்த வரிசையில் இருக்கும் எல்லாக் கட்டிடங்களையும் இடிச்சாத்தானே தெரு இன்னும் அகலமாகுமுன்னு சண்டை போட்டதும் நியாயத்தை உணர்ந்து நாலு மாசத்துக்கு முன்னே திரும்பக் கட்டிக் கொடுத்துருக்கு முனிசிபாலிட்டி.
இடிச்சுக்கட்டுன கோவில்
இங்கே பூஜை செய்யும் பண்டிட் ஸ்ரீனிவாசன் நம்மை விசாரிச்சார். 'சௌத் கா லோக்' இல்லையா? மதுரைன்னு கோபால் ஊரைச் சொன்னேன். மீனாட்சியை தரிசிச்சு இருக்காராம். கன்யாகுமரிவரை போய்வந்தேன்னார். 'தமிழ் நாட்டுக்காரர்கள் ரொம்ப நல்லவங்க. நல்ல உதவும் மனப்பான்மை. விருந்தோம்பலில் சிறந்தவங்க' ன்னு புகழ் பாடினார். கேக்க இனிமையா இருக்குன்னு நன்றி சொல்லிட்டு வந்தேன். இட்லி தோசைன்னா உசுரையில்லே கொடுக்குது இந்த வடநாட்டு சனம்!!!!!
பண்டிட் ஸ்ரீனிவாஸ்


இன்னொரு கோவில் அடுத்த ரெண்டாவது ரைட்டில் இருக்கு. கட்டாயம் பாருங்கன்னாரேன்னு போனால்.... அதுவும் தனியார் கோவில். ஏதோ மடம். பத்துநிமிசம் இருங்க. சாமியார் வந்துருவார். சந்நிதி திறப்பாங்கன்னார்.
கோபாலின் முகத்தைக் கவனிச்சு, எஸ்' ஆகிட்டோம்.

கைவசம் பெரிய லிஸ்ட் இருக்கும்போது நமக்கென்ன மனக்கவலை?

முக்கால் மணி நேரப் பயணத்துலே இன்னொரு இடம் போனால் அதுதான் பிள்ளைகள் உண்மையாவே பிறந்த இடமாம்!! இப்படி ஆளாளுக்கு சீதை இங்கேதான் பிரசவிச்சாள்ன்னு அதிகாரபூர்வமாச் சொல்லும்போது...... பாவம். ஒருமுறை பெத்துப் பொழைச்சு வருவதே அபூர்வம் என்ற காலக்கட்டத்துலே எத்தனை முறை வலியை அனுபவிச்சாளோன்னு இருக்கு எனக்கு:(

அதிலும் இவளுக்கு ரெட்டைப்பிள்ளைகள்!

நல்லவேளை. ராமன் பிறந்த இடத்தை மட்டும் வேற எந்த ஊரும் சொந்தம் கொண்டாடலை. ஒரு அயோத்தியாலேயே இந்தப்பாடு பட்டாச்சு. இந்த லவகுசன் பிறந்த இடம் மாதிரி இருந்துருந்தா அவ்ளோதான்:(


தொடரும்......................:-)


======================================================================

9 comments:

Anonymous said...

பாம்புச்சட்டை, கோயம்பேடுன்னு கலக்கல். :) உங்க வர்ணனையே தனி

said...

\\ஒருவேளை வால்மீகி ராமாயண சீதை இங்கும், கம்பராமாயண சீதை அங்குமா பெத்துப் போட்டுருப்பாங்களோ!!!//
ஆகா... என்ன ஒரு விளக்கம்.. :)

\\ஒரு ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் ஸிங்லே இறங்கி நிக்கறார் //
இறங்கி நிக்கிறார்ன்னு என்ன அழகா சொல்லி இருக்காங்க கட்டுரையாளர் என்பதை இங்க கவனிக்கனும்.. :))

said...

வாங்க சின்ன அம்மிணி.

சட்டை உரிக்கும் பாம்புக்கே சட்டை போட்டுட்டாங்கப்பா:-)

said...

வாங்க கயலு.

கட்டுரையாளருக்கு லொள்ளு கூடிப்போச்சோ!!!

said...

ம்ம்ம். ஆளாளுக்கு நல்ல பாயிண்டுகளைப் பிடிச்சு ''கோட்'' செய்துட்டாப் பின்னாடி வரவங்க என்னா செய்றது.:)
நம்ம ஊரில ப்ளாட்ஃபார்ம் கோவில்கள் மாதிரி இந்த அனுமான் கோவிலும் இருக்கே. பதிவெல்லாம் சுருக்கக் கூடாதுப்பா. இன்னும் ரெண்டு பாரா மிஸ்ஸிங்:)
சீதைக்கு(குழந்தைகள் பிறந்த) இரண்டு இடங்கள் நமக்குத் தெரிஞ்சு .இன்னும் துளசிதாஸ் ராமாயணம் வேற இருக்கு.! கிருஷ்ணன் க்ளோஸ் அப் ல நல்லா இருக்கார்.

said...

நன்றாய் ரசித்தேன்.

said...

சிறிய கோவில்களையும் பார்த்தாச்சா டீச்சர்,சிவன் நம் ஊரில் குழந்தைகள் போடும் துணி டிசைனில் கலர், கலராக போட்டு உள்ளார் இதுவும் நன்றாக உள்ளது டீச்சர்:))))

said...

அருமையான படங்களையும் போட்டு, உங்கள் பாணியில் தகவல்களையும் கொடுத்து அசத்திட்டீங்க!

said...

//அபிஷேகம் பண்ணிக்க வசதியா கருமை நிறக் கண்ணன் ஒரு ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் ஸிங்லே இறங்கி நிக்கறார் ஒரு பக்கம்!//

நமக்குத்தான் அது ஸிங்க்.. அவருக்கு அது பாத்டப் :-)))))