Sunday, April 05, 2009

சீச்சீ.....விருந்தாளி செய்யும் வேலையா இது... (2009 பயணம் : பகுதி 7)

கும்மோணத்தின் சுற்றுப்புறங்களைச் சுத்திச்சுத்தி வந்தப்ப கணபதி அக்கிரஹாரம், கபிஸ்தலம், இஞ்சிக்கொல்லை, செம்மங்குடி, அய்யாவாடி, ராஜாக்கமங்கலம்,இப்படித் தெரிஞ்ச பெயர்களும் தெரியாத ஊர்களுமாவே கண்ணில் பட்டுக்கிட்டு இருந்துச்சு. தி.ஜா.ரா.வின் நாவல்களில் புகுந்து புறப்பட்டுக்கிட்டே இருந்தேன்.

இவ்வளவு தூரம் வந்துட்டுக் கல்கருடனைப் பார்க்காமல் போகலாமோ? பக்கத்துலேதானே இருக்கு திருநறையூர். பேரைப்பார்த்து இது ஏதோ ஒரு இடமுன்னு இருந்துறாதீங்க. நம்ம நாச்சியார்கோயில்தாங்க இது. வல்லியின் நாச்சியார் பதிவு மனசுலே வந்து போச்சு.
மேதாவி என்ற மகரிஷி, தனக்கு அந்த மகாலக்ஷ்மியே பொண்ணா வந்து பிறக்குணுமுன்னு தவம் செஞ்சுருக்கார். அம்மாவும் அவருடைய ஆசிரமத்துக்கு அருகில் வஞ்சுளமரத்தடியில் குழந்தையா அவதரிச்சுட்டாங்க. வஞ்சுளவல்லின்னு பெயர் சூட்டி, எடுத்து வளர்த்து குமரியா நிக்குது. அப்போ எம்பெருமானே, அஞ்சு ரூபத்துலே அதிதிகளா வந்து நின்னார், ஆசிரமவாசலிலே. வந்தவங்களுக்குச் சோறு போட்டு, சாப்பிட்டு முடிச்சவுடன் கை கழுவத் தண்ணி ஊத்துறாங்க நம்ம வஞ்சுளா.

நாலுபேர் ஒழுங்காக் கையைக் கழுவிப்போனபிறகு கடைசியா வந்தவர் பொண்ணைக் கையைப் பிடிச்சு இழுத்துட்டார். உண்டவீட்டுக்குச் செஞ்ச துரோகமில்லையோ? பொண்ணு 'குய்யோ முறையோ'ன்னு கத்த, வந்து பார்த்த மகரிஷிக்கு கோவம் பொங்கிக்கிட்டு வந்துச்சு. சபிக்கப்போகும் தருணம் அந்த 'அஞ்சாத அஞ்சாமத்து ஆள்' (வாசுதேவன் என்ற பெயர்) உங்க பொண்ணை எனக்குத் தாரைவார்த்துக் கொடுங்கோன்னு கெஞ்சினாராம். இவன் யாரடா போக்கிரின்னு நினைக்கும்போது தன்னுடைய 'சுயரூபத்தை' வெளிப்படுத்தி இருக்கார் பெருமாள்.

ஆஹா.... ... விஷ்ணுவே மாப்பிள்ளையா வந்தாக் கசக்குமா? ஆனாலும் இப்ப மாமனார் கை ஓங்கி இருக்கு. 'பொண்ணைத் தா' ன்னு கெஞ்சிக் கேட்பவரிடம் சில கண்டிஷன்களைப் போட்டுக்கணும். இந்த நொடியைத் தவறவிட்டா.....அப்புறம் இப்படி ஒரு ச்சான்ஸ் கிடைக்குமா?

"என் பொண்ணுக்குத்தான் எல்லாத்துலேயும் முதலிடம் கொடுக்கணும். அவள்தான் இங்கே அதிகாரம் செய்யறவளா இருக்கணும். நீ வீட்டு மாப்பிள்ளையாக் கிட. இன்னும் சுருக்கமாச் சொன்னால் அவள் பேச்சைக்கேட்டு நீ ஆடணும்"

பொண்ணு கிடைச்சாப்போதுமுன்னு தலையை ஆட்டிட்டார் வாசுதேவன். அப்புறம்?

அம்மாதான் இங்கே எல்லாம். இடுப்பிலே சாவிக்கொத்து கூட இருக்கு. கெஞ்சும் முகபாவத்தோடு கை நீட்டும் பெருமாளும், அவரைவிட ஒரு எட்டு முன்னால் நிற்கும் வஞ்சுளவல்லி நாச்சியாருமா இருக்காங்க கருவறையில். பெருமாளின் முகம், பாவனை அட்டகாசம்.
( படம் உதவி நம்ம கைலாஷி)

நீ (ங்க)முன்னாலே போ(ங்க), நான் பின்னாலே வாரேன்.....

இங்கேயும் சரி, ஒப்பிலியப்பன் கோவிலும் சரி, இன்னும் நிறைய இடங்களில் முனிவர்கள், பெண் குழந்தை வேணுமுன்னு வேண்டுவதும், அவுங்களுக்கு மரத்தடியிலோ, வனத்திலோ குழந்தை அகப்படுவதும் பார்த்தீங்கன்னா........ பெண் குழந்தைகள் மதிப்பு மிகுந்தவர்கள். பொண்ணுன்னாவே மகாலக்ஷ்மி. அவுங்களைத் தத்து எடுத்தாவது வளர்க்கணும், அது மிகப்பெரிய வரம் என்ற எண்ணமெல்லாம் காட்டுலே இருக்கும் ரிஷி முனிவர்களுக்கும் தெரிஞ்சுருக்கு. நாட்டுலே இருக்கும் பல அற்ப மனிதர்கள்தான் பொண் குழந்தைகளே வேணாமுன்னு, கருவிலேயே சமாதி கட்டும் நடவடிக்கை எடுக்கறாங்க. பொண் அருமை தெரியாத ஜென்மங்கள் ஹும்.......

பெருமாளின் வாகனமான பெரியதிருவடி இங்கே கல்லாவே இருக்கார். இவரேதான் இங்கே உற்சவமூர்த்தி. கல்லால் ஆன உற்சவமூர்த்தி. தனியா பஞ்சலோகச் சிலை எல்லாம் கிடையாது. இந்தக் கல்கருடனையே வெளியே கொண்டுவந்து உற்சவமூர்த்தியா ஊர்சுற்ற வச்சுத் திரும்ப உள்ளே கொண்டுபோய் அவருக்கான சந்நிதியில் வச்சுடறாங்க. உள்ளே இருந்து வரும்போது நாலே பேரால் தூக்கமுடியும் இவருக்குப் படி தாண்டுனதும் கனம் கூடிருதாம். நாலு எட்டாகி, பதினாறாகி, அப்புறம் முப்பத்திரெண்டு பேர் வேணுமாம். திரும்பக் கோயிலுக்குள் வரவர எடை குறைஞ்சுக்கிட்டே வந்து நாலே பேர் போதுமாம், உள்ளே கொண்டு வைக்க.
ஆச்சரியமா இருக்கு !!!!
(மேற்கண்ட ரெண்டு படங்களையும் நம்ம கைலாஷியின் பதிவில் இருந்து சுட்டுட்டேன். அவர்கிட்டே அனுமதி கேட்டு மடல் போட்டுருக்கேன். பதில் வரும்வரை பொறுமை காக்க எனக்குப் பொறுமை இல்லை. ஒன்னும் சொல்லமாட்டார் என்ற தைரியம்தான்)
பதிவு வெளியிடும் சமயம் அனுமதி கிடைச்சுருச்சு. நன்றி கைலாஷி.

நாங்க போனப்ப ஏதோ விசேஷமான நாள் போல இருக்கு. கருடன் சந்நிதியில் நல்ல கூட்டம். ஆனாலும் தரிசனம் நல்லாவே கிடைச்சது. கண்ணை உருட்டிப் பார்த்தார் எங்களை. இந்தக் கோயிலும் நூற்றியெட்டில் ஒன்னு. மகா திருப்தியுடன் கும்பகோணத்துக்கே திரும்ப வந்தோம். இந்த முறைப் பயணத்தில் ஒரு ராமலக்ஷ்மண சீதை ஹனுமான் செட் வாங்கணுமுன்னு நினைச்சுக்கிட்டுத்தான் போனேன். சுவாமிமலையில் அழகான விக்கிரகங்கள் கிடைக்கும் என்ற தகவலும் கிடைச்சிருந்துச்சு.
நாச்சியார் கோவில் குத்து விளக்கு பிரசித்தமாம். நம்ம லிஸ்ட்டுலே இல்லைன்னு விட்டுட்டேன்:-)

கும்பகோணத்திலும் நல்ல சிலைகள் கிடைக்குதுன்னு நம்ம வினோத் சொன்னார். 'போய்ப் பார்க்கலாம். சரிப்படலைன்னா சுவாமி மலைக்கே போகலாமு'ன்னு சொன்னேன். வண்டி போய் நின்ன இடம் ஒரு பாத்திரக் கடை! வடிவேலன் பாத்திரக்கடை, பெரியதெரு. மனசில்லா மனசோட உள்ளே நுழைஞ்சேன். எக்கச்சக்கமான விக்கிரகங்கள். பாலித்லீன் உறைக்குள்ளே இருந்து எட்டிப்பாக்கறாங்க.
சொந்தமாத் தொழிற்சாலை வச்சுப் 'படைக்கிறாங்களாம்'. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி உண்டு. கிரிக்குக்கூட (சென்னை) இங்கே இருந்துதான் போகுதாம். சம்பந்தப்பட்ட விவரங்கள் அடங்கிய சான்றுகளைக் காமிச்சாங்க.
ரெண்டு மூணு செட் எடுத்துப் பார்த்துட்டு, மூக்கு மொக்கையா இருக்கு, முகத்துலே அம்சம் இல்லே, கனம் கூடுதலா இருக்கு, அது இதுன்னு ( நம்ம பட்ஜெட்டை விடவும் கூடுதலாப் போய்க்கிட்டு இருக்குன்றது வேற விஷயம்) சொல்லிக்கிட்டு ஆராய்ஞ்சப்ப, 'நமக்குன்னு விதிக்கப்பட்ட ஒரு செட்' கண்முன்னே காமிக்கப்பட்டது. விக்கிரகங்கள் அளவு குறைஞ்சுக்கிட்டே போனால் உழக்குக்குள்ளே, கிழக்கு மேற்கு பார்த்தாப்போல்தான் கண்ணும் மூக்கும் இருக்கும் இல்லையா?

இது கொஞ்சம் நல்லாவே இருந்துச்சு. முக்கால் அடி ராமர். அவருக்கேத்த மாதிரி மனைவி, தம்பி, பக்தன்னு ஒரே ஜோர். பேரமும் படிஞ்சது. கடைசிச் சொல் என்னோடதுதான்:-)))) ( எனக்கொரு சந்தேகம் ரொம்ப நாளா இருக்கு. ராமனும் லக்ஷ்மண பரதசத்ருகர்கள் எல்லாம் ஒரே நாளில் பிறந்தவுங்க. அவுங்க வளர்ச்சியும் ஒன்னுபோலத்தானே இருக்கணும். ஆனா.... எல்லா சிலா ரூபங்களிலும் ராமர் மற்ற எல்லாரையும் விட உயரம் கூடுதல். ஒருவேளை தம்பிகள் என்றானதும் சின்னவர்கள் எல்லாம் சின்ன உயரமோ?)

சந்தேகம், இந்த ராமநவமியன்னிக்கு மறுநாள் (ஏப்ரல் 4 2009) ஒருமாதிரி தீர்ந்தது எனக்கே ஆச்சரியமா இருக்கு. பண்டிகை நாளா இருக்கே, இன்னொருமுறை ராமாயணம் வாசிக்கலாமுன்னு எடுத்து ஒரு அத்தியாயம் படிச்சேன், தினமும் ஒரு அத்தியாயமுன்னு மகாபாரதமும், ராமாயணமும் இது முடிச்சு அது, அது முடிச்சு இதுன்னு மாத்தி மாத்தி வாசிக்கும் வழக்கம் ரொம்ப வருசமா இருக்கு. பாயசப்பாத்திரம் தசரதருக்குக் கிடைச்சதும் கௌசல்யாவிடம் அதைத் தர்றார். அந்தம்மா இருக்கறதுலே பாதியைக் குடிச்சுட்டு, மீதிப்பாதியை சுமித்ராவிடம் கொடுக்கறாங்க. அவுங்க அதுலே பாதியை (சரியாச் சொன்னால் மொத்தத்தில் கால்வாசி) குடிச்சுட்டு, மீதியைக் கைகேயி கையிலே கொடுத்தாங்க. அவுங்க அதை முழுசுமாக் குடிச்சு வைக்காம நாசுக்கா அதுலே பாதியை மிச்சம் வச்சுடறாங்க. என்னடா இன்னும் பாயசம் பாக்கி இருக்கேன்னுட்டு தசரதர் சுமித்ராவிடமே 'இதையும் குடிச்சுக்கோ'ன்னார். டபுள் பங்கு குடிச்சதால் சுமித்ராவுக்கு ரெட்டை பிள்ளைகள். அது இருக்கட்டும், ஆக மொத்தத்துலே நிறைய குடிச்சது (பாயசத்தைத்தான் சொல்றேன்) கௌசல்யா. அதான் ராமர் பெரிய உருவமா வளர்ந்துருக்கார். தியரி சரியா இருக்கா?

இந்த நாசூக்கா மிச்சம் வைக்கிறது பற்றி இன்னொண்ணு சொல்ல மனசுலே வருதே..... சொல்லலைன்னா அப்புறம் மறந்துருவேன். அதனால்......

ஃபிஜியில் இருக்கும்போது கவனிச்சது இது. அங்கே வீட்டுக்கு யாராவது விஸிட்டர்ஸ் வரும்போது பழரசம், ஜூஸ் இப்படி எதாவது குளிர்பானம் கொடுப்பது எல்லா வீட்டிலும் வழக்கம்தான்.வெய்யில் போடோபோடுன்னு போடும் நாடாச்சே. ஜூஸ் கலக்கிக்கன்னு ஒரு பவுடர் பாக்கெட்டும் கிடைக்கும். லெமென், ஆரஞ்சு, பைனாப்பிள் இப்படி . அதை ஒரு லிட்டர் தண்ணியில் கலக்கிப் ஃப்ரிட்ஜில் வச்சுட்டா வேலை ஆச்சு. விலையும் கொள்ளை மலிவு. டாலருக்கு அஞ்சுன்னு கிடைக்கும். இந்த விவரம், அதான் பவுடர் விவரம் தெரியாம விலை உயர்ந்த வகைகளே ஃபாண்ட்டா, கோகோகோலான்னு வீட்டுலே வாங்கி வச்சுக்கிட்டு இருந்தோம்.

வர்ற மக்களும் ஜூஸ் கொடுத்ததும் அதை நாசூக்கா ஒரு ஸிப் பண்ணிட்டு அப்படியே வச்சுட்டுப் போறதையும் பார்த்தேன். என்னடா இப்படித் தண்டம் பண்ணுதுங்கன்னு நினைப்பு . அப்புறம் மற்றவர்கள் வீட்டுலே கவனிச்சதில் இது அங்கே இருக்கும் பழக்கமுன்னு புரிஞ்சுபோச்சு. முழுசும் குடிச்சாப் பரக்காவெட்டியா இருக்குமுன்னு இப்படி ஒரு நாசூக்கு. ஆஹா.....

அப்புறம் என்னாச்சுன்னு கேக்காதீங்க. நானும் அந்தப் பவுடர் பாக்கெட்டையே விஸிட்டர்ஸ்க்குன்னு வாங்க ஆரம்பிச்சுட்டேன்:-)

சரி, பயணக் கதையைப் பார்க்கலாம். நாம் சாமி வாங்கிக்கிட்டு இருக்கோம் இப்ப....

நம்ம பயணம் இன்னும் பாக்கி இருக்கே. நல்லாப் பொதிஞ்சு எடுத்துக்கிட்டுப் போகணுமுன்னு சொன்னதும் அங்கே இருந்த ரெண்டு உதவியாளர்கள் அட்டைப்பெட்டிகள், கூடுதலா செய்தித்தாள்கள் எல்லாம் கொண்டுவந்து வேலையை ஒருவிதச் சோம்பலோடு ஆரம்பிச்சாங்க. ஐயோ..... அவுங்க வேலையின் லக்ஷணத்தைப் பார்த்துக் கோபாலுக்குத் தாங்கலை. இப்படி செய்யுங்க, இதை அப்படி வையுங்கன்னு சொல்லிக்கிட்டே இருந்தார். (இந்த கலாட்டாவுலே லக்ஷ்மணன் கையில் இருந்த அம்பு(சந்திரபாணம்) காணாமப் போயிருந்ததை இங்கே நியூஸி வந்தபிறகுதான் கவனிச்சேன். தாற்காலிகமா, சூரியபாணம், அம்பைக் கையில் கொடுத்துருக்கேன்)

இதுக்கிடையில் பட்டுச்சேலை உடுத்திப் பளிச்ன்னு ஒரு பொண்ணு கடைக்குள்ளே நுழைஞ்சாங்க. 'வாம்மா கலியாணப்பொண்ணே' ன்னு வரவேற்பு. இந்தக் கடையில் வேலை செய்யும் பொண்ணுதானாம். நேத்துக் கலியாணம் நடந்துருக்கு. கடையில் யாருக்கும் அழைப்பு இல்லையாம். கலியாணத்துக்குக் கூப்புடலைன்னு இந்த ரெண்டு உதவியாளர்களுக்கும் சலிப்பு.

"அவசரமாவும், ரொம்ப எளிமையாவும் நடந்துபோச்சு. அதாண்ணே....... "

கோபாலுக்கு என்ன தோணுச்சோ...... 'சட்'ன்னு ஒரு நூறு ரூபாயை என்கிட்டே கொடுத்துக் 'கலியாணப்பரிசாக் கொடுத்துரும்மா'ன்னார். கசக்குமா? பெரிய மனுஷித் தோரணையில் பரிசைக் கொடுத்து, காலில் விழப்போனப் பொண்ணை அப்படியே தடுத்தாட்கொண்டு ஆசீர்வதித்தேன். பொண்ணையும் கிளிக்கிட்டேன்.

நால்வரையும் தூக்கிக்கிட்டுக் கிளம்பி 'வீடு' வந்தோம். ரெஸ்ட்டாரண்டைக் கடக்கும்போது குமார் எதிரில் வந்தார். இன்னிக்குப் பாட்டுக் கச்சேரி நடக்குதுன்னார். எங்கே?

தொடரும்.......:-)

49 comments:

said...

பிரஸண்ட் டீச்சர்....

said...

உள்ளேன் ரீச்சர்..

படிச்சிட்டேன் ரீச்சர்..

எத்தனை எத்தனை ஊர்ல.. எத்தனை எத்தனை பேர்லதான் சாமிகள் அவதாரம் எடுத்திருக்காங்க..

தோண்டத் தோண்ட புதையலால்ல இருக்கு..!

இவுக அத்தனை பேரையும் பார்த்து விஷ் பண்றதுக்கு நமக்கு ஆயுசு போதாது போலிருக்கே..!

said...

அந்த ராமர கண்ணுல காட்ட மாட்டீங்களா?

said...

வாங்க சிஜி.

முதல் ஆளா வந்ததால் முதல் பெஞ்சுலே உக்காருங்க:-)))

said...

வாங்க உண்மைத் தமிழன்.

இதுக்குத்தான் எங்கேயும் போகாம அவுங்கவுங்க ஊர்லே இருப்பவரைப் பார்த்து 'விஷ்' பண்ணிக்கணுங்கறது:-)

said...

வாங்க தீப்பெட்டி.

நோட்டீஸ் போர்டைப் பார்க்கலையா?

அச்சச்சோ.... விவரம் இங்கே

http://thulasidhalam.blogspot.com/2009/03/blog-post.html

said...

லட்சு ஹைட் பத்தி தியரியெல்லாம் படிச்சு விவரமா சொல்லியிருக்கீங்க டீச்சர்!

கும்பகோணம் ஸ்பெஷல் வெண்கல சிலைகள், பாத்திரங்கள் கடைக்கும் போயிட்டு வந்தாச்சு சூப்பரூ!

said...

பட்டாபிஷேக சிலைகளா? அதை காமிக்கலியே டீச்சர்

said...

ஆஹா, கல்கருடன் சேவை மிகப் பிரமாதம்.
ஏம்பா அந்தத் தூண்களைப் போட்டோ எடுக்கலியா:)

கும்மோணனாலே பொண்ணுங்க தான் ஒஸ்தி:))நீங்க சொல்கிறது நூத்துக்கு நூறு உண்மை. மூக்கும் கண்ணும் வாயும் நல்லா வைக்க ரொம்பப் பேருக்கு மறந்து போயிடுது. எதுத்தாப்பில இருக்கறவங்க மாதிரி செஞ்சுடறாங்களோ!!!!
படு வேகம். சுவாரசியமாப் போகுது . புதன் கிழமை வரக் காத்திருக்கணுமே!!!!

said...

வாங்க ஆயில்யன்.

எல்லாத்துக்கு ஒரு லாஜிக் வேணுமுல்லே?

நாம என்ன சினிமா எடுக்கறோம், இதை கோட்டைவிட:-))))

said...

வாங்க நான்நரேந்திரன்.

போய் நோட்டீஸ் போர்டு
இங்கே பாருங்க

said...

வாங்க வல்லி.
அதென்னமோப்பா...சிலசமயம் கெமெரா இருப்பதே மறந்து போறது(-:

விளக்கு வச்சு மசமசன்னு இருட்டும் சமயம் வேறயா.......

பதிவுலே விவரம் சரியா இருக்கான்னு நாச்சியார்தான் சொல்லணும்:-))))

said...

நிறைய சைடு தகவல்களோட இன்னிக்கு பதிவு நல்லா சுவாரசியம்..

கரெக்டா உங்க சந்தேகத்தைத் தீர்த்து வச்சார் பாருங்க ராமன்.. :)

said...

செல்லாது டீச்சர்...செல்லாது...நீங்க கதை சொல்லும்போது பக்கத்தில படமும் போடணும்.

said...

பரக்காவெட்டினா என்ன டீச்சர்?

மனுஷனிலிருந்து சாமி வரைக்கும் சாவிகொத்து திருமதிக கிட்ட தா இருக்கு..இல்லையா டீச்சர்.

said...

//நாட்டுலே இருக்கும் பல அற்ப மனிதர்கள்தான் பொண் குழந்தைகளே வேணாமுன்னு, கருவிலேயே சமாதி கட்டும் நடவடிக்கை எடுக்கறாங்க. பொண் அருமை தெரியாத ஜென்மங்கள் ஹும்.......//

உங்கள் ஹீம் எனக்கும் புரியுது...
நல்ல கட்டுரை...

said...

வாங்க கயலு.

ராமரிடமே கேட்டதாலேதான் 'டக்'ன்னு பதில் புலப்பட்டுச்சு:-))))

இடைத்தரகர் யாரும் இல்லை:-)

said...

என்னங்க நான் நரேந்திரன்.

அரியர்ஸ் வைக்காமப் படிச்சா இப்படியெல்லாம் ஆகுமா?

said...

துளசி கோபால்,

பதிவு நல்லா இருக்கு. கொஞ்சம் சுருக்கலாம்.

//கோபாலுக்கு என்ன தோணுச்சோ...... 'சட்'ன்னு ஒரு நூறு ரூபாயை என்கிட்டே கொடுத்துக் 'கலியாணப்பரிசாக்//

இந்த திடீர் நிகழ்வில் ஏதோ ஒரு தெய்வீகத் தன்மை தோன்றுகிறது.

//தி.ஜா.ரா.வின் நாவல்களில்//

தி.ஜா?(தி.ஜானகிராமன்.

said...

வாங்க சிந்து.

மலையாளத்துலே பறஞ்ஞால் ' கொதி'ன்னு..... பயங்கரக் கொதி, அலவலாதின்னும் பறயாமல்லோ!

வெறும் சாவி வச்சுப் பயன் இல்லை. பெட்டியில் காசு இருக்கணும்.ஆமா....

said...

வாங்க ஞானசேகரன்.

நல்ல கட்டுரையா?

நன்றிங்க.
மீண்டும் வரணும்.

said...

வாங்க ரவிஷங்கர்.

ரொம்பச் சுருக்குனா..... மக்கள் கோச்சுக்கறாங்க. நான் யாருக்குன்னு ஆடுவேன்?
அதான் மனசில் வந்தது வந்தபடி...

'மக்கள் விருப்பத்திற்கிணங்க'ன்னு சினிமாக்காரங்க சொல்லிக்கொள்வது போல!!!!

தி. ஜானகிராமனைத்தான் குறிப்பிட்டேன்.

said...

// உள்ளே இருந்து வரும்போது நாலே பேரால் தூக்கமுடியும் இவருக்குப் படி தாண்டுனதும் கனம் கூடிருதாம். நாலு எட்டாகி, பதினாறாகி, அப்புறம் முப்பத்திரெண்டு பேர் வேணுமாம். திரும்பக் கோயிலுக்குள் வரவர எடை குறைஞ்சுக்கிட்டே வந்து நாலே பேர் போதுமாம், உள்ளே கொண்டு வைக்க.
ஆச்சரியமா இருக்கு !!!!//

ஹிஹி டீச்சர்... அந்த நாலு பேர்ல ஒருத்தரா என்னையும் சேத்துக்கச் சொல்லுங்க. எடை எப்பிடிக் கூடுதுன்னு பாப்போம். கோயிலுக்கு வெளிய வர்ரப்போ... அதுல ஒருத்தர் ஏறி நின்னுக்கிட்டு.... சூடம் காமிப்பாரே. அவரு எடைய கணக்குல சேத்தாங்களாமா? :-)

மா ஏகம் பஜ பாத்தீங்களா? என்னவோ கைல எழுதீருக்குமாமே... மா ஏகம் சரணம் பஜன்னு நெனைக்கிறேன்.

ஒப்பிலி உப்பிலியும் கூடன்னு சொல்றாங்களே.... சாப்ட்டுப் பாத்தீங்களா?

// "அவசரமாவும், ரொம்ப எளிமையாவும் நடந்துபோச்சு. அதாண்ணே....... "//

நாட்டுல எல்லாக் கல்யாணமுமா மண்டபங்கள்ளயும் மைதானங்கள்ளயும் நடக்குது? களவு மணம் கற்பு மணம்னு அந்தக்காலத்துலயே சொல்லீருக்காங்க. பொருளாதார மணம்னும் ஒன்னு இருக்குல்ல. அந்தப் பொண்ணுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

said...

//மேற்கண்ட ரெண்டு படங்களையும் நம்ம கைலாஷியின் பதிவில் இருந்து சுட்டுட்டேன். அவர்கிட்டே அனுமதி கேட்டு மடல் போட்டுருக்கேன். பதில் வரும்வரை பொறுமை காக்க எனக்குப் பொறுமை இல்லை. ஒன்னும் சொல்லமாட்டார் என்ற தைரியம்தான்)
பதிவு வெளியிடும் சமயம் அனுமதி கிடைச்சுருச்சு. நன்றி கைலாஷி.//

கேட்கணும் இல்லை? ஹிஹிஹி! :P

தி.ஜா.ரா. தி.ஜ. ரங்கநாதனைக் குறிப்பிடுவார்கள்.
தி.ஜா. என்றால் தி.ஜானகி ராமன். ஏற்கெனவே ரவிஷங்கர் கேட்டிருக்கார் போல! :)))) பார்க்கலை!

நேத்துத் தான் கல் கருட சேவை நடந்ததை பொதிகை ஒளிபரப்பியது, இன்னிக்கு உங்க நேர்முக வர்ணனை. நாச்சியார் கோயிலுக்குப் போயிட்டு வந்திருக்கேன். நீங்க எழுதறதுக்காக விட்டு வச்சேன்! :)))))))))

said...

ராமரைக் காட்டவே இல்லையே?

said...

டீச்சர் எங்க ஊர் பக்கம் போய் வந்து இருக்கீங்க இன்னும் எனக்கு கப்பம் கட்டவில்லை, சீக்கிரம் வரி பணத்தை அனுப்பி வைக்கவும்:))

said...

//சீக்கிரம் வரி பணத்தை அனுப்பி வைக்கவும்:))//

அட, இப்படி ஒரு வழி இருக்கா?? எனக்கும் அனுப்பணும், துளசி! :))))))) அதிலும் புகுந்த இடமாச்சே!

said...

என்ன இந்த தடவை கும்பகோணம் சுற்றியே பல இடங்களை பார்த்துவருகிறீர்கள் போலும்.
நடுவில் பிஜி பக்கமும் காலை நனைத்துவிட்டு வருகிறீர்கள்.

said...

வாங்க ராகவன்.

நீங்க கருடனைத் தூக்க வரும்போது ,
ரொம்ப ஒல்லியா இருக்கும் பட்டரை மேலே ஏத்திறலாம். அப்படி ஒருத்தரைக் கண்டுபிடிப்பது ரொம்பக் கஷ்டமோ!!!

உப்பிலி கொடுத்த எதுவும் வாயில் போட்டுக்கலை( நம்ம லக்ஷ்ணத்தைப் பார்த்துட்டு ஒன்னும் கொடுக்கலைன்றது வேற விஷயம்)

தீர்த்தம் இந்த உப்பில்லாக் கணக்கில்
வராது (இதையும் தலையில் தெளிச்சுக்கறதோடு சரி)

நம்ம எல்லோருடைய வாழ்த்தும் அந்தக் கலியாணப்பொண்ணுக்கு இருக்கு. அமோகமா இருப்பாங்க.

said...

வாங்க கீதா.

நேத்துதான் இந்தப் பதிவையும் எழுதி ட்ராஃப்ட்டாப் போட்டுவச்சேன் நம்ம தளத்திலே.

கருடர் தானாய் மனசில் வந்து எழுதவச்சுட்டாருன்னா நீங்களாவது நம்புங்கப்பா. (ஜிரா நம்புவாரான்னு சந்தேகம்)

ராமரை நோட்டீஸ் போர்டு( பதிவு)லே போட்டுட்டுத்தான் பயணக்'கதை'யே எழுத ஆரம்பிச்சேன்.

ரொம்ப பக்தியா இருக்கேன்ப்பா!!!

வரிவரியா எழுதறதுதானே வரி? இல்லையா கீதா?

said...

வாங்க குசும்ப்ஸ்.

நட்சத்திரம் முடிச்ச கையோடு தண்டலுக்கு வந்துட்டீரா?

வரிகளை எழுதியாச்சு:-))))

said...

வாங்க குமார்.

தமிழ்நாட்டுப் பயணத்தில் ஃபர்ஸ்ட் 'லெக்' கும்பகோணம்தான். (அதுதான் அந்தக் காலையே ஃபிஜியிலும் வச்சுட்டேன்)

எக்கச்சக்க விசேஷங்கள் இருக்கு அங்கே. கண்டது ஒரு அஞ்சு சதமானம் இருக்கலாம்.

மீதிக்கு அப்புறம் சிலமுறைகள் போகணும்!

said...

//ராமனும் லக்ஷ்மண பரதசத்ருகர்கள் எல்லாம் ஒரே நாளில் பிறந்தவுங்க//

அடுத்தடுத்த நாட்கள்ன்னு நினைக்கிறேன். கேஆரெஸ் பதிவுல பாத்த நியாபகம்.

அண்ணனும் தம்பியும் ஒரே உயரத்துல தான் இருக்கனும்னு சொல்ல முடியாதே! :))

கும்பகோண பெண்கள் செம வாயாடின்னு கேள்வி. :))

கெக்கெபிக்குணி அக்கா இங்க வரத்துகுள்ள நான் ஓடிடறேன். :p

said...

கும்பகோணத்தை இப்போதைக்கு விடறமாதிரி தெரியலை டீச்சர்:)

said...

உள்ளேன் டீச்சர்..;)

said...

அப்பப்ப வருவேன் டீச்சர், இன்னிக்குத்தான் அட்டன்டன்ஸ் போட்டிருக்கேன். புதுசு புதுசாத் தெரிச்சுக்க முடியுது, ஆனா இலங்கையில இருக்கிறதால எல்லாம் போட்டோவிலதான் பார்க்க முடியும். எல்லாம் நல்ல சுவாரசியமா இருந்தது.

said...

வாங்க அம்பி.

//அடுத்தடுத்த நாட்கள்ன்னு நினைக்கிறேன். கேஆரெஸ் பதிவுல பாத்த நியாபகம்.//

அச்சச்சோ..... நான் சினிமாவில் ஒரே சமயத்தில், சேடிமார் ஓடிவந்து குழந்தை பிறப்பைச் சொல்வதைப் பார்த்தேன். போதாக்குறைக்கு, அலங்கரிச்ச நாலு தொட்டில்களில் நாலு குழந்தைகள், க்ரூப் டான்ஸ் எல்லாம் கவனிச்சுட்டுத் தப்பா(வே) நினைச்சுக்கிட்டேன் போல!

ஒரே உயரம் வேணாம்தான். ஆனால் தம்பி ஏன் அண்ணனைவிட உயரமா இல்லே?
என்னமோ போங்க....
கும்மோணத்துப் பெண்களுக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு பெருமை!!!

said...

வாங்க ராஜ நடராஜன்.

ஆச்சு, இன்னும் ரெண்டே பதிவுக்கு அப்புறம் கும்மோணத்துக்கு டாட்டா:-)))

said...

வாங்க கோபி.
பதிஞ்சாச்சு

said...

வாங்க சுபாங்கன்.

மறைவில் இருந்து வெளிக்கிட்டதுக்கு நன்றி.
நலமா?

எனக்கும்தான் இலங்கை அழகைக் காண ஆசையா இருக்கு.

பார்க்கலாம், விதிச்சிருக்கோ என்னவோ.

Anonymous said...

//கோபாலுக்கு என்ன தோணுச்சோ...... 'சட்'ன்னு ஒரு நூறு ரூபாயை என்கிட்டே கொடுத்துக் 'கலியாணப்பரிசாக் கொடுத்துரும்மா'ன்னார். கசக்குமா? பெரிய மனுஷித் தோரணையில் பரிசைக் கொடுத்து, காலில் விழப்போனப் பொண்ணை அப்படியே தடுத்தாட்கொண்டு ஆசீர்வதித்தேன். பொண்ணையும் கிளிக்கிட்டேன்.
//

நல்லா இருக்கட்டும் அந்தப்பொண்ணு. என்ன அவசரமோ, முகத்துல ஒரு பயம் தெரியுது

said...

//பெரிய மனுஷித் தோரணையில் பரிசைக் கொடுத்து, காலில் விழப்போனப் பொண்ணை அப்படியே தடுத்தாட்கொண்டு ஆசீர்வதித்தேன். பொண்ணையும் கிளிக்கிட்டேன்.//

டீவி சீரியல்ஸ்ல வர்ற நல்ல ஆன்ட்டி கணக்கா உங்களை இந்த சீன்ல கற்பனை பண்ணிப்பார்த்தேன் டீச்சர்..சூப்பரா இருக்கு..

ஆனாலும் இப்படி மிரட்டி போட்டோ பிடிச்சிருக்கக் கூடாது..பாருங்க..பொண்ணு எவ்ளோ மிரண்டுபோயிப் பார்க்குதுன்னு :P

சும்மா சொன்னேன் டீச்சர்..
டீச்சர் கேமரால விழ அந்தப் பொண்ணு கொடுத்துவச்சிருக்கணும்.. :)

அந்த மணப்பெண்ணுக்கு நல்ல வாழ்க்கை அமையட்டும் !

said...

வாங்க சின்ன அம்மிணி.

திடீர்னு நம்மைப் பார்த்த அதிர்ச்சியோ என்னவோ?

வெங்கலக்கடையில் நுழைஞ்ச யானை:-))))

said...

வாங்க ரிஷான்.

டிவி சீரியல் முழுசும் கெட்ட ஆண்ட்டீகளா இருக்காங்கப்பா. அதான் ஒரு சேஞ்சுக்கு......

நம் எல்லோருடைய ஆசிகளும் அந்தப் பொண்ணுக்கு இருக்கே. கண்டிப்பா நல்ல வாழ்க்கைதான் அமையும்.

said...

ம்ம்ம்ம் - நல்லாருக்கு பதிவு - கைலாஷிக்கு நன்றி - கல் கருடன் அற்புதம்.

வஞ்சுள வல்லி மாதிரியே துளசி - கோபால் மாதிரி வாசுதேவன்

ராமர் உயரம் நல்ல கதை

அங்கே பாதி ஜூஸ் குடிச்சா - மீதி என்ன பண்றது .....

கோபாலின் நல்ல குணம் வாழ்க - புதுமணப்பெண்ணிற்குப் பரிசு .....

நல்லாருக்கு - நல்லாருங்க எல்லோரும்

said...

ம்ம்ம்ம் - நல்லாருக்கு பதிவு - கைலாஷிக்கு நன்றி - கல் கருடன் அற்புதம்.

வஞ்சுள வல்லி மாதிரியே துளசி - கோபால் மாதிரி வாசுதேவன்

ராமர் உயரம் நல்ல கதை

அங்கே பாதி ஜூஸ் குடிச்சா - மீதி என்ன பண்றது .....

கோபாலின் நல்ல குணம் வாழ்க - புதுமணப்பெண்ணிற்குப் பரிசு .....

நல்லாருக்கு - நல்லாருங்க எல்லோரும்

said...

வாங்க சீனா.

//நல்லாருக்கு - நல்லாருங்க எல்லோரும்//

நன்றி, எல்லாத்துக்கும் சேர்த்து:-)

said...

புதுப் பெண் வாழ்க வளமுடன். வாழ்த்திய தம்பதியர் வாழ்வாங்கு வாழ்க வளமுடன்!

said...

வாங்க ராமலக்ஷ்மி.

வாழ்த்துகள் புதுமணவாட்டிக்குப் போய்ச்சேரட்டும்.

இன்னும் ரெண்டு வாரத்துலே உள்ளூர் கோயிலில் ஒரு கல்யாணம். நாந்தான் மாப்பிள்ளைக்கு அம்மா role செய்யப்போறேன்:-))))