Thursday, April 16, 2009

ராஜாவின் பார்வை...... (2009 பயணம் : பகுதி 12)

கானாடுகாத்தான்... செட்டிநாட்டரசரின் மாளிகை. எத்தனை தமிழ்ப்படங்களில் பார்த்துருக்கோம் இந்த முகப்பை!!! அப்பழுக்கு இல்லாமல் அப்படி ஒரு சுத்தம். படிகளேறி உள்ளே நுழைஞ்சதும் பிரமாண்டமான அகலமான திண்ணைகள் முன்வாசக் கதவின் ரெண்டு பக்கமும். அலங்காரமா வழுவழுன்னு மார்பிள்தரை மின்னுது. மழமழன்னு தூண்கள். அண்ணாந்து பார்த்தால் ஹைய்யோ.....


நுழைவு வாசல் நிலைப்படியில் நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் அழகாய் கஜலக்ஷ்மியும், காளிங்க நர்த்தனமுமாய்.... வரிவரியாய் மரத்தில் செதுக்கி இழைச்சு வச்சுருக்கு. முன்பக்கத்து ஹாலில் குடும்பப்படங்களும், வீட்டரசிகளின் படங்களுமாய் மாலைகளுடன் ஜொலிக்கிறது.கண்ணாடிக்கு முன் நிற்கும் 'பாடம்' செஞ்ச யானைப் பாத பீடம்! யானைத் தந்தத்தில் செதுக்கிய வில்லும் அம்புகளுமாய் ராமன். இதே யானையின் தந்தங்களோ என்னவோ(-:


வாசல்வழியாகப் பார்த்தா.............. பிரமாண்டமான முற்றங்களைக் கடந்து பார்வை போகும் நேர்வழியில், மாளிகை வளர்ந்துக்கிட்டே போகுது. ரெண்டு பக்கத் தாழ்வாரம் முழுசும் அலங்காரத் தூண்களும் பெருசும் சிறுசுமா விதவிதமான அறைகளும். தாழ்வார ஓடுகள் வந்து சேருமிடத்தில் 'லேஸ்' வேலைப்பாடு போல மரத்தில் செஞ்சு ஒரே சீராய் முற்றம்பூராவும் ஓடுது. இதுவே ஒவ்வொரு முற்றத்துக்கும் ஒவ்வொரு டிஸைன்!!பார்வையைச் சற்றே உயர்த்தினோமுன்னா போச்சு..... கழுத்து வலிதான். வேலைப்பாடுகளுடன் கண்ணாடி பதிச்ச அரைவட்ட ஜன்னல்களும் அலங்காரமுமாய் ...எதைச் சொல்ல எதை விட!!!!
முற்றத்தின் ஒரு பக்கம் அடுக்களை. என்னமாதிரி சமையல் அந்தக் காலத்துலே நடந்துருக்கும்!!!!
மாளிகைப் பாதுகாப்புப் பணியாளராக இருந்த தங்கவேல் என்பவர், பொறுமையா நாங்க கேட்ட அத்தனைக்கும் முகம் கோணாமல் பதில் சொல்லிக்கிட்டு இருந்தார். அவருக்கு அன்பளிப்பா எதாவது தரணுமுன்னு கோபால், நோட்டை எடுத்து நீட்டுனப்ப....... பணிவோடு வேணாமுன்னு மறுத்துட்டார். 'நாங்க மக்கள்கிட்டே ஏதும் வாங்கக்கூடாதுன்னு நியதி இருக்குங்க'ன்னார்.


அரசரின் மாளிகையைத் தமிழ்நாட்டு அரசிடம் ஒப்படைக்கணுமுன்னு கேட்டுக்கிட்டு இருக்காங்களாம். இது தனி நபரின் சொத்து. அரசர் என்னும் பட்டம், மக்கள் அன்பால் வழங்கியது. ராஜபரம்பரையில் வந்த ராஜாவோட சொத்துக்கள் இது இல்லை. அதனாலே மாளிகையைப் பூட்டி வச்சுருந்தார் அரசர். இப்போ சில வாரங்களாத்தான் மீண்டும் மக்கள் பார்வைக்குத் திறந்திருக்குன்னு சொன்னார். நமக்கு இருந்துருக்கு அதிர்ஷ்டம் பாருங்க.

உள்ளே போய்ச் சுற்றிப்பார்க்கவோ, கெமெராவைப் பயன்படுத்தவோ, இல்லை வெளியே கார் பார்க்கிங் செஞ்சுக்கவோ கட்டணம் ஏதுமே இல்லை. முற்றிலும் இலவசம். அரசர்ன்னு சும்மாவா சொல்லி இருக்காங்க! அந்தப் பெருந்தன்மை பெரியமனசு...... பிரமிப்புதான்.

அரண்மனை மாளிகை இருக்கும் தெரு முழுசும் சுத்தமாவும், எதிரே ஒரு பார்க்கிங் ஏரியாவுமாக இருந்துச்சு. கொஞ்சம் தள்ளி ஓரிடத்தில் சைக்கிள் ரிக்ஷாக்கள் சில. அரண்மனையாச்சேன்னு ஒரு குதிரை வண்டியும் காத்து நின்னுச்சு:-)
ஒழுங்கா ஒவ்வொன்னும் பார்த்து ரசிக்கணுமுன்னா இந்த மாளிகைக்கே ஒரு நாள் ஒதுக்கணும். நமக்குத்தான் காலில் கஞ்சி கொட்டி இருக்கே.... ஆறுதலா நிக்க முடியுதா?

'பங்களா'வில் போய்ச் சாப்பிடணுமுன்னு ஏற்கெனவே மனசில் முடிச்சுப்போட்டு வச்சுருந்தேன். பதிவுலக நண்பர் ஒருத்தரும் இதைக் கேள்விப்பட்டுருக்காராம், அவர் நண்பர் மூலமா.
காரைக்குடிக்கு வந்து சேர்ந்தோம். காளிதாஸ் கரெக்ட்டாக் கொண்டுபோய்ச் சேர்த்துட்டார் பங்களாவில். தேவகோட்டை ரோடில் போனா செஞ்சை ஊருணி இருக்கு பாருங்க அதுக்குப் பக்கம்தான் இருக்கு.

எழுபத்தியஞ்சு வருசமான பழையகாலத்து வீடுகள். ஆனால் எல்லா நவீன வசதிகளோடும் பழமை மாறாமல் அப்படியே புதுப்பிச்சு இப்போ, இது ஒரு ஹெரிடேஜ் ஹொட்டேல். விசாலமான பன்னெண்டு அறைகள் இருக்கு. இங்கே ரெண்டு நாள் தங்கலாமுன்னு ஒரு ஆசை இருந்துச்சு. ஆனால்......நம்ம பட்ஜெட்டுக்குள்ளே அடங்கமாட்டேங்குதே(-:

வெளிப்புற வெராந்தாவைச் சுற்றி மண் தொட்டிகளில் விதவிதமான செடிகள். முன்வாசலைக் கடந்தால் நீண்ட ஒரு கூடம். கணக்கெழுதிக்கொண்டு, இந்த இடத்தை ஒரு ஆஃபீஸா வச்சுருக்காங்க.
இதைக்கடந்தால் அழகான அளவான ஒரு கூடம். பழங்காலத்துக் குடும்பப் படங்கள், இருக்கைகள் இப்படி. பின்புறத்தோட்டத்தில் புல்வெளியில் ஒரு கார்டன் செட்டிங்.

கூடத்தில் கொண்டுபோய் உக்காரவச்சாங்க ஒரு அழகான பொண்ணு. மூணு பேருக்குச் சாப்பாடுன்னதும், 'ட்ரைவருக்கு சாப்பாடு இங்கே இலவசமாத் தந்துருவோம். உங்களுக்கு என்ன மாதிரி?' 'ஒரு வெஜிடேரியன், ஒரு நான் வெஜிடேரியன்'னு சொன்னதும் உங்களுக்கு முதல்லே குடிக்க ஜூஸ் கொண்டுவரேன்னு போனாங்க.

தர்ப்பூசணி ஜூஸ். வெயிலுக்கு இதமா ஜில்லுன்னு நல்லா இருந்துச்சு. சாப்பாடு இன்னும் கொஞ்ச நேரம் ஆகும். வெஜிடேரியனுக்காக தக்காளி சாதம் செய்யப்போறாங்களாம். அதெல்லாம் தனியா ஒன்னும் செய்ய வேணாம். (எப்படியும் வெறும் சோறுதானே?) இருக்கறதைக் கொடுங்கன்னேன். பக்கத்துலே இன்னொரு தனிக்கட்டிடம். கடந்துபோகும் இடத்தில் விசாலமான நீள ஹாலில் ஊஞ்சல் போட்டு வச்சுருக்கு.
ரெஸ்ட் ரூம் ஏரியாவே படுசுத்தம். அசப்பில் இங்கே நியூஸியில் இருப்பதுபோல.

ரொம்பவே நீளமான டைனிங் டேபிள். ஒரு படத்துலே நாகேஷ் சொல்வார் பாருங்க....உப்பு வேணுமுன்னு யாராவது கேட்டா..சைக்கிளில் போய்க் கொடுக்கணுமுன்னு அப்படி:-)))) அதுலே எதிரும் புதிருமா நாங்க ரெண்டு பேர். எங்களைக் கவனிக்க மூணு பெண்கள், நாலு சமையல் நிபுணர்கள்.
(இதுலே ஒரு பொண்ணு சிங்கையில் எம்.பி.ஏ. முடிச்சுட்டு வேலைக்காகக் காத்துக்கிட்டு இருக்காங்க)

அசல் செட்டி நாட்டு உணவு. மட்டன் பிரியாணி, சிக்கன் குழம்பு , முட்டை, மீன் வறுவல், கீரைக்கூட்டு, மாங்காய்ப்பச்சடி, காராமணியில் செஞ்ச ஒரு கறி, போண்டா மாதிரி ஒன்னு, இன்னும் சில குழம்பு வகைகள், தயிர், ரசம் ஊறுகாய் வகைகள் இப்படி எக்கச் சக்கம். உள்ளே இருந்து கொண்டுவந்து பரிமாறிக்கிட்டே இருக்காங்க. நல்லா சாப்பிடும் ஆளா இருக்கணும் ஜஸ்டிஃபை செய்யறதுக்கு.
எதிர் இலையைப் பார்த்துக்கிட்டே, என் வெறும் சோத்தை முழுங்கி வச்சேன். தயிர் புளிப்பே இல்லாமல் அருமையா இருக்குன்னதும் அதையும் ஒரு கை பார்த்தேன். கடைசியில் இனிப்புக்கு ஐஸ்க்ரீம், கேரட் அல்வா. ஒரு ஸ்பூன் கேரட் அல்வா மட்டும் எடுத்துக்கிட்டேன்.
இதுக்குள்ளே இதன் உரிமையாளர் மீனாட்சி (ஆச்சி)அம்மா வந்துட்டாங்க. நியூஸின்னதும் அங்கே எங்கேன்னு ஆர்வமாக் கேட்டாங்க. கிறைஸ்ட்சர்ச்ன்னதும் முகம் மலர்ந்துச்சு. ரெண்டுமூணு முறை வந்து போயிருக்காங்களாம். நம்ம விலாசத்தைக் கொடுத்துட்டு அடுத்தமுறை வரும்போது கட்டாயம் வீட்டுக்கு வரணுமுன்னு சொல்லிக்கிட்டுக் கிளம்புனோம்.
இவ்வளவு தூரம் வந்துட்டு, ஆயிரம் ஜன்னல் வீடு பார்க்கலைன்னா எப்படி? காளிதாஸுக்கு இடம் தெரியாதாமே..... அதனாலே என்ன? வாயிலே இருக்கு வழி. இல்லீங்களா? உள்ளே போகலாமான்னு தெரியலை. கேட் மூடி இருந்துச்சு. ஸ்ரீவெங்கிடாஜலபதி துணை. நாராயண விலாஸ். 1941, ஜூன் மாசம் 12 தேதிக்குக் கட்டிய வீடு(??) க்ளிக் க்ளிக் க்ளிக்........:-)
வழியெல்லாம், க்ரானைட் கல்லுக்காக, 'மலை முழுங்கிய மகாதேவன்'கள் இருப்பதையெல்லாம் பார்த்துக்கிட்டே பகல் மூணு மணிக்கு மதுரைக்குத் திரும்பினோம். ஒரு மணி நேரம் ஓய்வு. அப்புறம் மதுரைக்கு டாட்டா சொல்லிட்டுக் கிளம்ப வேண்டியதுதான்.

கொஞ்ச நேரம் நம்ம அறையிலேயே நெட் பார்த்துக்கிட்டோம். ப்ராட்பேண்ட் இருக்கு. மணிக்கு 100 ரூபாய். அவுங்க தரும் ஒரு எண்ணைப் பதிஞ்சுக்கிட்டு வலையில் உலவலாம். உலவினோம்.

தொடரும்...............:-)

44 comments:

said...

மீ த பஸ்டு :0))

said...

படிச்சிட்டு இனிமே பின்னூட்டம்....மொதல்ல அந்த பங்களா ரொம்ப நல்லாருக்கு....அதை விக்கிறாங்களான்னு கேளுங்க...வாங்கிப் போடலாம்...:0))

said...

இவ்வளவு நடந்துருக்கா! முழுசா இத படிச்சிட்டேன். இப்போதான் மத்த இடங்களுக்கும் (பதிவு) சுத்திப் பார்க்கப் போறேன். :-)

said...

வாங்க அது சரி.

//வாங்கிப் போடலாம்...:0))//

அதுசரி!!!!!!

said...

சரித்திரம் இப்படிப் படங்களோட எடுத்து இருந்தா நான் நூத்துக்கு இருநூறு வாங்கி இருப்பேனேப்பா.

துளசி எனக்குச் சொல்ல வார்த்தையே இல்லை. கானாடுகாத்தான்,ஆயிரம் ஜன்னல் வீடு எல்லாம் எங்களுக்கு மிகப் பழக்கமான இடம். அப்படியே செக்காலே வழியா அழகப்பா நகர் வந்தீங்கன்னா...கோட்டையூர் போற வழில போஸ்ட் ஆபீஸ் வரும். அங்க இருக்கற தோட்டம் அப்பா போட்டது. இப்ப எப்படி இருக்கோ. பாம்பு நடமாட்டம் இருக்கிற செம்மண் பூமி.
நன்றிப்பா. இவ்வளவு அழகா யாரு பயணங்களைப் பத்தி எழுதி இருக்காங்க!!

said...

வாங்க வல்லி.

உள்ளூர் ஆளாப்போயிட்டீங்கபோல!
எல்லாம் சரியா எழுதியிருக்கேனா?

(இன்னிக்கு என்னமோ ஜிமெயில் தகராறு செய்யுது)

said...

வாங்க தெகா.

ரொம்ப ஒன்னும் இல்லை, பதினோரு பதிவுதான்:-)

நிதானமாப் படிச்சுட்டு வாங்க.

said...

நாங்களும் சுத்திப்பாத்தாப்பல ஆச்ச்சு .. பங்களா உங்களுக்கே கட்டுப்படியாகத இடமா :(

said...

4 வருஷம் அங்க தான் இருந்தேன்,ஆனா நீங்க சொல்லி இருக்குற ரெண்டு இடங்களயும் பார்க்கவேயில்ல..உம்ம்..இதுக்கே எங்க வீட்டுல காரைக்குடியா முழுசா சுத்தியாச்சு,படிக்குற காலத்துலண்ணு என்னையா புகழ்ந்து தள்ளுறாங்கா!!

புள்ளாயார்பட்டி episodeஉம் சூப்பர்..பல நினைவுகளை கொண்டு வந்துடுச்சு.

said...

நல்லா சுத்தி பார்த்தாச்சி ;))

அந்த பாதுகாப்புப் பணியாளார், உங்களுக்கு உணவு பறிமாறினவுங்க எல்லோருமே கலக்கல்...அவுங்களை எல்லாம் அவர்கள் செய்த்தை எல்லாம் மறக்கமால் பதிவுல போடுறிங்க பாருங்க அது தான் எங்க டீச்சரோட ஸ்பெசல் ;))

கலக்கல் டீச்சர் ;)

said...

விருந்தோம்பலுக்கு செட்டி நாடு தான். படங்கள் ரொம்ப அழகா வந்ருக்கு. பிட்டுக்கு தேத்தி வைங்க. :))


//பங்களா உங்களுக்கே கட்டுப்படியாகத இடமா //


முத்தக்காவின் நுண்ணரசியலை ரசித்தேன். :))

said...

வாங்க கயலு.

என்னப்பா உ.கு. எல்லாம் பலமா இருக்கே!!!

said...

வாங்க தாமரை.

இதுதாங்க....... உள்ளூர் சமாச்சாரம் அப்புறம் பார்த்துக்கலாமுன்னு எத்தனையோ இடத்தை மிஸ் பண்ணி இருக்கோம் நாங்களும்(-:

said...

வாங்க கோபி.

நமக்கு நன்மை செஞ்சவங்களை அப்படி எப்படிப்பா மறக்கமுடியும்?

'பொடி' சமாச்சாரங்கள்தான் சுவையாமே:-)

said...

வாங்க அம்பி.

சுமார் அஞ்சாயிரம் படங்கள் எடுத்துருக்கு.

தேறுவது எத்தனைன்னு இன்னும் எண்ணலை.

உங்க முத்தக்கா 'பொடி வச்சுப் பேசறதை' கவனிச்சீங்கதானே:-)))))

said...

முந்தின பதிவு, இது ரெண்டும் இப்பத்தான் படிக்க முடிந்தது ரீச்சர்....
எங்க ஏரியால ஒரு கலக்கு கலக்கியிருக்கீங்க....

எங்க வூட்டுக்காரம்மா ஊர் காரைக்குடிதான்...நீங்க சொன்ன எல்லாவற்றையும் கூட்டிக்கிட்டுப் போயி காட்டியிருக்காங்க..... வல்லியம்மா சொல்லியிருக்கும் செக்காலை ஏரியாதான் மாமியார் வீடு :-)

ஆமாம், நகரத்தார் வீட்டு பழைய நகைகள் எல்லாம் பார்க்க கிடைத்ததா?...மிக சிறப்பானவை அவைகளும்... :-)

said...

இந்த பதிவுல இருக்குற ஒவ்வொரு போட்டோவும் ஒரு பொக்கிஷம்

//சுமார் அஞ்சாயிரம் படங்கள் எடுத்துருக்கு.//

ஆ....
டீச்சர் நீங்க ஒரு அருங்கசியகம் நடத்தலாம் போல நியூஸில

said...

எத்தனை படத்தில் பார்த்திருந்தாலும் தெரிந்து கொள்ள முடியாதவற்றை இத்தனை அருமையாய் ராணி உங்கள் பார்வையில்....தந்திருப்பதற்கு நன்றி:)!

போய் பார்க்க வேண்டும் எனும் எண்ணத்தைத் தூண்டுகிறது பதிவு.

said...

நம்ம ஊருக்குப் பக்கத்தில் வந்துட்டுப் போய் இருக்கீங்களே!!!
சொல்லக்கூடாதா?

said...

மேடம் அசத்தல் தகவல்கள்

said...

துளசி அம்மா,
உங்ககூடவே எல்லா இடத்திற்கும் வந்துட்டு இருக்கேன்.(பின்னூட்டம் போடாவிட்டாலும்). செட்டிநாடு வீடு பிரமாண்டம். பகிர்ந்தமைக்கு நன்றி.

said...

சாப்பாடு என்ன விலை?

said...

வாங்க மதுரையம்பதி.

இங்கே நகை'பார்க்கக் கிடைக்கலை'

ஆனால் அந்தப் பக்கத்து நகைகள் சிலவற்றை முந்தி ஒரு சமயம் பார்த்துருக்கேன்.

அந்தச்சீமைக்காரத் தோழிகள் சிலர் இருக்காங்க.

இப்போ சென்னையில் இந்த மாதிரி நகைகளை வாங்கிக்க ஒரு இடம் இருக்கு. நானும் இடத்தைக் கவனிச்சேன். ஆனால் போகலை(-:

said...

வாங்க தீப்பெட்டி.

நியூஸிக்காரங்களைப் படுத்த வேணாமுன்னு .......

ஆல்பத்துலே போட்டு உங்களையெல்லாம் படுத்தும் எண்ணம் வந்துருக்கு:-)

said...

வாங்க ராமலக்ஷ்மி.

படத்தை மறந்துட்டு, இடத்தை மட்டும் நினைவு வச்சுப் போங்க.

உண்மைக்கும் ரசிக்கலாம்.

said...

வாங்க தேவன்மயம்.

சரியா என்றைக்கு அங்கே வருவோமுன்னு தீர்மானிக்காததால்....யாருக்கும் தகவல் சொல்லிக்க முடியலை.

அடுத்த முறை கண்டிப்பாகத் தெரிவித்துவிட்டே வருகிறேன்

(நகைநட்டு பார்க்கணும். மதுரையம்பதி சொல்லிட்டார்)

said...

வாங்க கிரி.

அசத்தல் இருக்கட்டும், பயனுள்ளவைகளான்னு சொல்லுங்களேன்.

said...

வாங்க பாண்டியன் புதல்வி.

ஓசைப்படாமல் வந்துட்டுப்போறீங்களா?

நோ ப்ராப்ளம்:-)))

said...

வாங்க ஞாபகம் வருதே.

சாப்பாடு...?

இருங்க ஞாபகம் வருதான்னு பார்க்கிறேன்.

ரூபாய் அறுநூறு ஒருவருக்கு.

அந்தக் கவனிப்புக்கு இது ஒன்னும் அவ்வளோ அதிகமில்லைதான்.

said...

நாங்கள் போன முறை போனபோது பூட்டி வைத்திருந்தார்கள். பார்க்கமுடியவில்லை. மனைவியை அழைத்துக்கொண்டு மறுபடி போகனும். படங்களுக்கு நன்றி டீச்சர்

said...

நான் இந்த ஊர் வழியாதான் காலேஜுக்கு போவேன், ஆனால் அரண்மனை பக்கமெல்லாம் போனதில்லை.

said...

வாங்க சுகுமார்.

நம்ம அரசு செய்யும் சில தொல்லைகளுக்காவும், பூட்டிவச்சுடறாங்களாம்(-:

சந்தர்ப்பம் கிடைச்சால் தவறாமல் பார்க்க வேணும்.

சொல்லில் அடங்காத அமைப்பு.

said...

வாங்க குடுகுடுப்பை.

இனி ஒருக்கில் அந்தப் பக்கம் போக நேர்ந்தால் குடும்பத்தோடு போய்ப் பாருங்க.

ஆச்சரியமான இனிய அனுபவம் கேரண்ட்டி.

said...

ஆகா ஆகா - எங்க ஊர்ப்பக்கம் நானே திருப்பி ஒரு முறை சுத்தி வந்த மாதிரி இருக்கு - அழகு அழகு - படங்கள் அழகு

பங்களா சாப்பாடு ரொம்பப் பிடிச்சிருக்கணுமே ! நான் நெரெய தடவை சாப்பிட்டிருக்கென் - அலுவல் காரணமாக ( சொந்த செலவுன்னா கட்டுப்படியாகாதும்மா )

ரசிச்சுப் படித்தேன்

said...

வாங்க சீனா.

விவரம் எதாவது தவறுதலா எழுதி இருந்தால் குட்டுவீங்கன்னு இருந்தேன்.

இன்னும் கொஞ்ச நேரம் காரைக்குடி டவுன் சுத்த நேரமில்லாமப் போச்சு(-:

'ஷோகேஸ்'லே வைப்பதுபோல் பாத்திரங்கள் அழகாக் கிடைக்குமாமே!!!

பங்களாவில் உபசரிப்பு பிரமாதம்தான்,இல்லே?

said...

அழகான பதிவு துள்சி!
செட்டிநாட்டு வீடுகளும், குறிப்பாக அந்த முற்றம் வைத்த வீடு! எனக்கு மிகவும் பிடிக்கும்.நான் தனி வீடு கட்டினால் கட்டாயம் முற்றமிருக்கும். NDTV-யில் பொம்பொம் என்ற கன்னங்களோடு ஊருராய்ச் சென்று மொசுக்குவாரே அவர் கூட இங்கு சென்று அந்த விருந்தோம்பலை அனுபவித்திருக்கிறார். அதைப் பார்த்தலிருந்து அங்கு போகணுமின்னு ஆசை...நீங்க வேற கெளப்பிவிட்டுட்டீங்களா...அடுத்த டூர் அங்கதான்!!

said...

வாங்க நானானி.

முற்றம் திண்ணை இதெல்லாம் ஆசையாத்தான் இருக்கு. நம்ம வீடு தனி வீடுன்னாலும் இதுக்கெல்லாம் நோ ச்சான்ஸ்(-:

தென் துருவத்துக்குப் பக்கத்தில் முற்றம் வச்ச வீடா?

NDTV-க்காரர் மொசுக்கறதையெல்லாம் பார்க்கலையேப்பா!!!!!

கட்டாயம் போய்வாங்கப்பா. அங்கத்து விருந்தோம்பலை அடிச்சுக்கமுடியாது.

said...

அசத்தலான பதிவு நல்ல படங்கள். நல்ல சாப்பாடும் போல செட்டிநாடு சாப்பாடு எப்பவுமே super!!அந்த ஆயிரம் ஜன்னல் வீட்ல ரெம்ப நாளா வீடு அம்மவுகே தெரியமா ஒரு திருடன் தங்கி இருந்தானாம். அவலோ பெரியா வீடு அரண்மனை மாரி. காரைக்குடி எங்க பாட்டி ஊரு....
அருண்மொழி

said...

வாங்க அருண்மொழி.

அவ்வளோ பெரிய வீட்டில் (வீடா அது மாளிகைப்பா) திருடன் ஒருத்தன் மட்டுமில்லே.... நாலைஞ்சுபேர் வெவ்வேற அறைகளில் யாருக்கும் தெரியாம இருந்தாலும் ஆச்சரியமில்லை.

ஆனா இது எனக்குப் புதுச் செய்தி.
நன்றிப்பா.

said...

நன்றி. உள்ளே வந்து போய்க்கிட்டு இருந்தீக. ரொம்ப நாளாச்சு. ? இப்ப உள்ளே வராமல் சொந்த ஊருக்கே போயிட்டு வந்தீடீக. எதார்த்தமாக இன்றைய போட்ட பதிவு உங்களின் பதிவு போல் இருப்பதாக வந்த தகவல் வந்ததும் வந்து பார்த்தால் அப்பாடி தப்பித்தேன்?


ஜோதிஜி. தேவியர் இல்லம். திருப்பூர்.
http://texlords.wordpress.com
texlords@aol.in

said...

அருமையான விவரிப்பு.. அற்புதமான புகைப்படங்கள்.

கொடுத்து வைத்தவர்கள்..

said...

வாங்க ஜோதி கணேசன்.

இது அது இல்லைன்னதும் அப்பாடா.....எவ்வளொ நிம்மதி இல்லை:-))))))

said...

வாங்க சூர்யா.

இல்லையா பின்னே:-)))))

said...

இதை அப்பவே படித்த ஞாபகம். சந்தேகமாய் உள்ளே கீழே பார்த்தால் என்னோட கருத்தும் இருக்குது பாத்தீகளா,

ஒரு ஆச்சரியம் என்ன தெரியுமா? இது வழியா ஆயிரம் முறை போய் இருப்பேன். இதுவரைக்கும் உள்ளே போனதில்லை. பிள்ளையார்பட்டி கோவிலுக்கு எப்ப போனேன் தெரியுமா?

கல்யாணம் செய்த பிறகு. அதாவது வாழ்ந்த ஊரில் 32 வருடத்திற்க்குப் பிறகு?

கேட்டா சிரிக்கமாட்டாங்க.(?)