Tuesday, April 21, 2009

அரனின் நாளில் அரியைக் கண்டேன் .....(2009 பயணம் : பகுதி 14)

சொன்னால் நம்பமாட்டீங்க..... நம்ம உலகநாதன்...நேராய்க் கொண்டுபோய் இறக்கிவிட்ட முதல் இடம்? பெயரைப்பார்த்தவுடன் எனக்கே மனசுலே ஆச்சரியம். மகரநெடுங்குழைக்காதன், நிகரில்(லா) முகில்வண்ணன் முன்னால் நிற்கிறோம். பூமாதேவி தியானம் செய்யும்போது தாமிரபரணி ஆற்றில் இருந்து மீன்வடிவத்தில் ரெண்டு குண்டலங்கள் கிடைச்சதாம். அதைப் பெருமாளுக்கே அர்ப்பணிச்சுட்டாங்க. அதைத்தான் இந்த பெரு(ம்) ஆள் காதுலே அணிஞ்சு காட்சி தர்றார். வீட்டு சோஃபாவில் நிம்மதியா உக்காந்துருப்பது போல, அமர்ந்த திருக்கோலம். மனம் குளிரக் கிடைச்சது தரிசனம். தென்திருப்பேரையில் நின்னுக்கிட்டு, பதிவர் ஒருத்தர் நினைவுக்கு வரவே இல்லைன்னு சொன்னால் அது பொய்:-)

தென்திருப்பேரை
வழக்கமாக, மூலவரை நோக்கியபடியே வெளியே கைகூப்பி நிற்கும் 'பெரிய திருவடி' இங்கே இல்லை. எதிரில் மண்டபத்தில் சின்னப்பிள்ளைகள் உக்காந்து வேதம் ஓதும் காட்சி மறைக்குதுன்னு கருடரைச் 'சற்றே விலகி இரும்' ன்னு சொன்னாராம் பெருமாள்!
கோவில் தேர்


நாங்க போனப்பதான் கோவிலில் பூஜை ஆரம்பிச்சு இருந்தாங்க. திரை போட்டுருந்துச்சு. கொஞ்சநேரம் கோவிலைச் சுத்திப்பார்த்துக்கிட்டு இருந்தோம். ரொம்பப் பழைய கோவில். ஆனால் படு சுத்தமா இருந்துச்சு. வெளியே இருந்து பார்த்தப்பக் கோவிலின் அளவு பெருசா ஒன்னும் இல்லை. ஆனால்..... உள்ளே போகப்போகப் பிரமாண்டமா இருக்கு.

கும்பகோணத்தை சுற்றி நவகிரக க்ஷேத்திரங்கள் இருக்கு பாருங்க அதே போல திருநெல்வேலியைச் சுத்தியும் நவகிரக ஆலயங்கள் இருக்கு. சைவத்துக்கு ஒன்னு இருக்குன்னா, அப்ப வைணவத்துக்கும் ஒன்னு வேணுமில்லையா? என்ன ஒன்னு...அங்கெல்லாம் சிவன், மூலவர் என்றாலும் கூட்டம் அம்முரதென்னமோ அந்தந்த ஸ்தலத்துக்கான கிரகத்தின் சந்நிதியில்தான்.

ஆனால் இங்கே நவதிருப்பதிகளில் அருள்பாலிப்பது பெருமாள் ஆச்சே. ஆடை அலங்காரத்துடன் வெவ்வேறு நிலைகளில் தரிசனம் கொடுத்து, அமர்க்களமா எல்லாத்தையும் 'தன்னுடைய கண்ட்ரோலில்' வச்சுருக்கார். பெருமாளே எல்லாக் கிரகங்களுக்கும் அதிபதி. மேலும் சிவன் கோவில்கள் போல நவகிரகங்களுக்குன்னு தனியாச் சந்நிதிகளும் கிடையாது. (மதுரை கூடலழகர் கோவில் விதிவிலக்கு. இதுபோல் இன்னும் நவகிரகங்கள் உள்ள வைணவக்கோயில்கள் இருக்கான்னு தெரிஞ்சவங்க சொல்லுங்க)


மகரநெடுங்குழைக்காதனின் பேரருள், நம் பதிவுலக அன்பர்கள் அனைவருக்கும் கிடைக்கணுமுன்னு வேண்டிக்கிட்டேன். நவகிரகத்தில் சுக்கிரன் இங்கே வழிபட்டுக்கிட்டே இருக்கார். அதனால் நம் எல்லோருக்கும் இனி சுக்கிரதசைதான் போங்க!!!

நூற்றியெட்டில் இதுவும் ஒன்னு.

அடுத்ததாகப்போன இடம் திருக்கோளூர். ஸ்ரீ வைத்தமாநிதிப் பெருமாள். ஸ்தலபுராணம் என்ன சொல்லுது? குபேரனுக்கு சாபம் கிடைச்சதும், அவரிடமிருந்த நவநிதிகளும் கிளம்பிப்போய், மகாவிஷ்ணுவிடம் தஞ்சம் அடைஞ்சாங்க. சாபவிமோசனம் ஆகும்வரை பெருமாளே எடுத்து வைத்த நிதிகளையெல்லாம் காப்பாத்திவச்சுத் திரும்பக் கொடுத்துருக்கார்.
இதுவே இந்தக் காலத்து மனுசங்ககிட்டேயோ, இல்லை அரசியல்வாதிங்ககிட்டேயோப் போய்ச் சேர்ந்திருந்தால், குபேரன் 'நிரந்தர தரித்திரவாசி'யாத்தான் இருப்பான். நிதிகள் எல்லாம் பினாமி பெயர்களில் ஸ்வாஹா ஆயிருக்காது?
உயரமான முன் மண்டபவாசலோடு அழகான அளவான கோவில். தரிசனமும் நல்லாவே அமைஞ்சது. இடதுகையால் தலையைத் தாங்கிக்கிட்டு, லேசாத் தலையைத் திருப்பி நம்மைப் பார்த்துக்கிட்டு நிம்மதியாப் படுத்துருக்கார். புஜங்க சயனம். செவ்வாய் ஸ்தலமாம்.
கோவிலுக்குச் சுத்துச்சுவர் கட்டும் வேலை நடக்குது.

பொதுவாப் பெருமாள் கோவில்களில் பார்த்தீங்கன்னா மூலவர் இருக்குமிடம் தாயார்கள் இருந்தாலும், லேடீஸ்க்கு தனி ரூம்ஸ் கொடுத்து கௌரவிக்கும் பழக்கம் இருக்கு. தாயார்கள் குமுதவல்லி & கோளூர் வல்லிகளுக்குத் தனித்தனி சந்நிதிகள் இருக்கு. மதுரகவி ஆழ்வார் அவதரித்த ஸ்தலமும் இதுவே.
சாலைக்கு ரெண்டுபக்கமும் வாழை


வழியெங்கும் வாழைத்தோட்டமாப் பச்சைப்பசேல்ன்னு குளுமையாக் கிடக்கு. தாமிரபரணிப் பாசனம் ஆச்சே. அங்கங்கே பெரிய பெரிய குளங்கள், ஊருணிகள். நீருக்குப் பஞ்சமில்லாத தேசம். நல்ல நீர்வளமுன்னா சொன்னால் மிகையில்லை.

கோவில் முகப்பு ஆழ்வார் திருநகரி

ஒரு ரெண்டு கிலோமீட்டர் தூரத்துலே ஆழ்வார் திருநகரி வந்துருது. நம்மாழ்வார் அவதரித்த ஊர். அதனாலேதான் திருக்குருகூர் என்றிருந்த பெயரை மாத்தி வச்சு நம்மாழ்வாருக்குப் பிரத்தியேக மரியாதை கொடுத்துருக்காங்க.

வெளிமண்டபம் ஆழ்வார் திருநகரி
வெளியே பார்க்கும்போது ரொம்பவே சாதாரணமா இருக்கேன்னு உள்ளே நுழைஞ்சால்......... வெளி மண்டபமே விஸ்தாரமா இருக்கு. வலப்பக்கம் ரேஷன் கடை. முதல்வர் படம்போட்டு ஒருரூபாய் அரிசி விளம்பரம். ஆஹா.... இந்த அரிசி எப்படி இருக்குமுன்னு தெரியலையேன்னு அங்கே நுழைஞ்சேன். கையிலே ரேஷன் கார்டுதான் இல்லையே... கடைக்காரர் சிநேகமாச் சிரிச்சார். ஒரு ரூபா அரிசி 'பார்க்கணுமு'ன்னு சொன்னதும் ஒரு தட்டுலே கொஞ்சம் வாரி என் முன்னாலே வச்சார். நல்லாத்தான் இருக்கு இந்த அரிசி. அப்புறம் அம்பது ரூபாய்க்குப் பத்து மளிகைச் சாமான்கள்னு எழுதுனதைப் பார்த்துட்டு அதையும் காமிக்கச் சொன்னேன். மிளகாய்ப்பொடி, தனியாப்பொடி, மஞ்சத்தூள், கடுகு, வெந்தியம், சீரகம், மிளகு, இப்படித் தனித்தனியாப் பொதிஞ்சுவச்சுருக்கு ஒரு ட்ரேயில் . பார்க்க நல்லாத்தான் இருக்கு. பேசாம இந்தியாவுக்கே வந்துரலாம் போல இருக்கே!
இந்த 'அரி'(சி) யையும் கண்டேன்:-))))

இன்னொருக்கா அந்த போஸ்ட்டரை நிமிர்ந்து பார்த்தேன். 'கலைஞர் ஆட்சியில்'னு போட்டு முதல்வர் படம். 'கலைஞர்' என்ற சொல்லுக்கு மேலே தமிழக அரசு முத்திரையாக ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரம். எல்லாம் மேலே இருப்பவன் பார்த்துப்பான்னு சொல்வோம் இல்லை? நல்லா இருக்கட்டும்.
கூட்டம் கொஞ்சம் இருக்கு. ஒருவேளை ரேஷன் வாங்க வர்றவங்களோ என்னவோ?
படம்: வழியில் பார்த்த ஒரு மசூதி

கோயிலுக்குள்ளே போனோம். திரை போட்டுருந்தாங்க. சாமி சாப்புட்டுக்கிட்டு இருக்காராம். கொஞ்சம் கூட்டமா இருந்தாலும். எல்லாரும் வரிசையில் உக்கார்ந்து இருந்தாங்க. அஞ்சு நிமிசத்துலே சாமி சாப்புட்டுட்டார். பிரசாதம் கொண்டுவந்து எல்லோருக்கும் தந்தாங்க. நான் கையில் வாங்கிக்கிட்டுத் திருதிருன்னு முழிச்சேன். வாங்காம இருக்கலாமுன்னா நல்லா இருக்காதுல்லையா? எனக்குப் பக்கத்தில் இருந்த ஒருத்தர்கிட்டே நீட்டினேன். அவுங்க ஒருமாதிரி முழிச்சுப் பார்த்துக்கிட்டே நல்லவேளையா வாங்கிக்கிட்டாங்க. பெருமாளோட பிரஸாதம் கிடைப்பது அபூர்வம். ஆனால் அமிர்தமே கிடைச்சாலும் வாயில் போட்டுக்க முடியாத நிலமையாச்சே எனக்கு(-:

பள்ளிக்கூடப் பிள்ளைகளுக்குச் சொல்றது போல 'எல்லோரும் போய்க் கையை அலம்பிண்டு வாங்கோ'ன்னார் ஒரு பெரியவர். கையைக் கழுவிக்கக் குழாய் வசதி செஞ்சு இருக்கு பிரகாரத்தில். இதுக்குள்ளே திரையை விலக்கியாச்சு. பிரபந்தம் சொல்ல ஆரம்பிச்சாங்க. உள்ளே வாங்கன்னு கூப்பிட்டு உள்ளே பெருமாள் ஆதிநாதர் முன்னால் நிக்கவச்சாங்க. சுயம்பு. பாதங்கள் இன்னும் பூமிக்கடியிலேயே புதைஞ்சுருக்கு. நின்ற கோலமுன்னு தனியாச் சொல்லணுமாக்கும்?அருமையான தரிசனம். குரு ஸ்தலம்.

கோயில் மண்டபத்தூண்களில் அழகழகானக் குட்டிச் சிற்பங்கள். நரசிம்மன், ஹனுமன், தசாவதாரச் சிற்பங்கள் இப்படி. இந்தப் பயணத்தில் நாங்க பார்த்த எல்லாப் பெருமாள்கோயில்களும் ஏறக்குறைய ஒரே காலக் கட்டத்தில் கட்டப்பட்டதோன்னு சம்சயம். அப்படி இல்லேன்னா ஒரே வகையில், ஒரே பாரம்பரியத்தில் கட்டி இருக்கலாம். இந்தக் கோவிலில் ஸ்தல விருட்சம் புளிய மரம். இ(வரை)தயே, திருப்புளி ஆழ்வார்ன்னு சொன்னங்க. இருக்கட்டும். நம்ம புள்ளையார் கூட தும்பிக்கை ஆழ்வார் ஆச்சே! இந்த மரத்தின் கீழ் இருந்துதான் நம்மாழ்வார் தவம் செஞ்சாராம். இந்த மரத்தின் இலைகள் வழக்கமான புளியமரம்போல ராத்திரியில் மூடறதில்லையாம். உறங்காப்புளின்னு சொன்னாங்க.
சிங்கைக் கோவிலில் தும்பிக்கை ஆழ்வார்தொடரும்............:-)

பி.கு: பதிவின் நீளம் கருதி, 'நான் கண்ட நவதிருப்பதிகள்' மூணு பாகங்களா வரும்

52 comments:

said...

கூடவே வரேன் டீச்சர்...;))

said...

நானும்

said...

//பொதுவாப் பெருமாள் கோவில்களில் பார்த்தீங்கன்னா மூலவர் இருக்குமிடம் தாயார்கள் இருந்தாலும், லேடீஸ்க்கு தனி ரூம்ஸ் கொடுத்து கௌரவிக்கும் பழக்கம் இருக்கு//

:) சிவன் கோவில்களிலும் அப்படித்தான். எங்க ஊரில் நாகை காயரோகனம் - நீலாயதாக்ஷி ஆலயத்திலும் தனித்தனி சன்னதி தான்

****

ஒரு ரூவா அரிசி, மளிகை சாமான்களைப் பார்த்து வந்திட்டிங்க, நான் சென்ற போது காட்சிக்கு கிடைக்கல.

தும்பிக்கை ஆழ்வாருக்கும் பிள்ளையாருக்கும் ஆறு வித்யாசம் கண்டுபிடிக்க போட்டு வைக்கலாம் போல
:)

said...

புளிய மரம் எங்கப்பா:)
அதாவது எங்கே??/

நம்மாழ்வார் தரிசனம் கிடைச்சுதா.
சுருக்க அடுத்த பதிவு வேணும்.
நவதிருப்பதியே போகாதவங்களுக்கு
கோவில்களைக் காண்பித்துக் கொடுக்கும் உங்களுக்கு தம்பதிசமேதராப் பரிபூர்ண மனநிம்மதியும்,ஆரோக்கியமும் ஐஸ்வர்யமும் கிடைக்கணும்னு வேண்டிக்கறேன்.

said...

மகர நெடுங்குழைக்காதரின் காது எவ்வளவு பெரிசு? மகர நெடுங்குழையும் எவ்வளவு பெரிசு?? காணக் காண அழகு!

said...

நானும் போயிட்டு வந்ததும் நீங்க குறிப்பிட்ட பதிவருக்குச் செய்தியைக் கொடுத்தேன். :))))))

said...

present teacher..innum fulla padikalai..padichittu thirimbi varaen..

said...

தென்திருப்பேரையில் நின்னுக்கிட்டு, பதிவர் ஒருத்தர் நினைவுக்கு வரவே இல்லைன்னு சொன்னால் அது பொய்:-)//

மருந்த குடிக்கும்பொழுது குரங்க நினைக்காதே என்ற செலவாடை நினைவுக்கு வருது :-))))))
( இது பழமொழி, அனுபவிக்கணும். விளக்கம் எல்லாம் கேட்க கூடாது- நன்றி பி.கே. எஸ்)

said...

அன்பின் துளசி

நவ திருப்பதி நவ பாகங்களாக வரலாமே - துளசி நினைத்தால் தொண்ணூறு பாகங்கள் கூட போடலாம் - கோவிலுக்குச் செல்கிறோமோ இல்லையோ - கோவிலுக்குச் சென்று வந்தவர்களைப் பார்த்தாலே புண்ணியம் வந்து விடுமாம். நன்றி


அத்தனை படங்களும் அருமை - வர்ணனைகள் அருமை - துளசின்னா துளசிதான்

said...

திருநெல்வேலி படங்கள்... ரொம்ப நல்லா இருக்கு

said...

படங்களும்,
பயண்க்கட்டுரையும்
அருமை!!

said...

//ramachandranusha(உஷா) said...
தென்திருப்பேரையில் நின்னுக்கிட்டு, பதிவர் ஒருத்தர் நினைவுக்கு வரவே இல்லைன்னு சொன்னால் அது பொய்:-)//

மருந்த குடிக்கும்பொழுது குரங்க நினைக்காதே என்ற செலவாடை நினைவுக்கு வருது :-))))))
( இது பழமொழி, அனுபவிக்கணும். விளக்கம் எல்லாம் கேட்க கூடாது- நன்றி பி.கே. எஸ்)
//

எனக்கென்னமோ சகோதரி உஷாவின் பின்னூட்டத்தைப் படித்த பிறகு 'வேலியில் போற ஒணானை...' தான் ஞாபகம் வருது.
:)

said...

இதெல்லாம் நானும் போகாத கோயில் போலத்தான் தெரியுது.. :)

அரிசி , மசாலா நல்ல ஐடியா வா இருக்கே..

said...

"அரனின் நாளில்"..சிவராத்திரி ?
எப்போதும்போல் சிறப்பான பதிவு.நேரில் கண்ட சுகம்.

said...

வாங்க கோபி & நான் நரேந்திரன்.

ச்சும்மாக்கூட வந்தா எப்படி? படிச்சுக்கிட்டே வாங்க:-)

said...

வாங்க கோவியாரே.

சிவன் கோயில்களிலும் அம்பாளுக்கு மட்டும்தான் தனிச் சந்நிதி. சின்ன வூடு தலையிலே இல்லே உக்கார்ந்துருக்கு!

ரூபாய் அரிசி நல்லாத்தான் இருக்கு.

உங்கூர் கோவிலில்தான் தும்பிக்கையார்.

அடுத்தமுறை போகும்போது வித்தியாசம் பார்த்துக்கிட்டு வாங்க:-)

said...

வாங்க வல்லி.

கோவிலுக்குள்ளில் இருக்கு அந்த உறங்காப்புளி.

உள்ளே படம் எடுக்கத் தடை இருக்குப்பா.

ஆசிகளுக்கு நன்றி.

said...

வாங்க கீதா.

குழைக்காதன் நல்லாவே ஜொலிச்சார்.

அன்னிக்கும் சரி, இப்போதும் சரி . நம்ம பதிவருக்கு புரை ஏறி இருக்கணுமே:-)))

said...

வாங்க தாமரை.

நிதானமாப் படிச்சுட்டு வாங்க.

அவசரமில்லை.

said...

வாங்க உஷா.

நான் மருந்து குடிக்கலையே:-))))

said...

வாங்க சீனா.

கோபுரத்தைப் பார்த்தாலே போதுமாம். கோடி புண்ணியம் கிடைக்குமாம்.

//அத்தனை படங்களும் அருமை - //

சரியாப்போச்சு.

படங்கள் சுமாராத்தான் இருக்குன்னு நான் இங்கே புதுக்கெமெராவுக்கு அடி போட்டுக்கிட்டு இருக்கேன்.
அநேகமா ஜெயிச்சுருவேன்:-))))

said...

வாங்க அது ஒரு கனாக் காலம்.

நீங்க திருநெல்வேலிதானே?

தொடர்ந்து இன்னும் சில பதிவுகளுக்கு வந்துட்டுப்போங்க.

said...

வாங்க தேவன்மயம்.

மருத்துவ வேலைக்கிடையிலும் மறக்காமல் வந்ததுக்கு நன்றிங்க.

said...

கோவியாரே,

//எனக்கென்னமோ சகோதரி உஷாவின் பின்னூட்டத்தைப் படித்த பிறகு 'வேலியில் போற ஒணானை...' தான் ஞாபகம் வருது.
:)//

நீங்க செய்யறதைத்தானே சொன்னீங்க?:-)))

said...

வாங்க கயலு.

நம்மூர்களில் கோவிலுக்காப் பஞ்சம். மொத்தத்தையும் பார்த்தவங்க எவருமே இருக்கமாட்டாங்க.

பருப்பெல்லாம் கூட ரேஷன் கடையிலேயே கிடைக்குதுப்பா.

said...

வாங்க மணியன்.

நலமா? ரொம்ப நாளா ஆளையே காணோமே.

உங்க யூகம் ரொம்பச் சரி.

Anonymous said...

//அதனால் நம் எல்லோருக்கும் இனி சுக்கிரதசைதான் போங்க//

உலகம் போறபோக்குல இப்படி யாராச்சும் நம்மளையெல்லாம் ஆசீர்வதிக்க மாட்டாங்களான்னு நினைச்சேன். நன்றி டீச்சர்

said...

//அங்கெல்லாம் சிவன், மூலவர் என்றாலும் கூட்டம் அம்முரதென்னமோ அந்தந்த ஸ்தலத்துக்கான கிரகத்தின் சந்நிதியில்தான்.//

சரியாச் சொன்னீங்க துள்சி! நாங்களும் அவசரம் கருதி அங்கங்கேதான் அம்மிட்டு வந்தோம்.

said...

// ஒரு ரூபா அரிசி 'பார்க்கணுமு'ன்னு சொன்னதும் ஒரு தட்டுலே கொஞ்சம் வாரி என் முன்னாலே வச்சார். நல்லாத்தான் இருக்கு இந்த அரிசி. அப்புறம் அம்பது ரூபாய்க்குப் பத்து மளிகைச் சாமான்கள்னு எழுதுனதைப் பார்த்துட்டு அதையும் காமிக்கச் சொன்னேன். மிளகாய்ப்பொடி, தனியாப்பொடி, மஞ்சத்தூள், கடுகு, வெந்தியம், சீரகம், மிளகு, இப்படித் தனித்தனியாப் பொதிஞ்சுவச்சுருக்கு ஒரு ட்ரேயில் . பார்க்க நல்லாத்தான் இருக்கு. பேசாம இந்தியாவுக்கே வந்துரலாம் போல இருக்கே!//

ரெம்ப ஆசையாத்தான் சாரிச்சு பாத்துட்டு வந்திருக்கீக...சேரீ...இதுக்காக இந்தியாவுக்கு, அதுவும் தமிழ்நாட்டுக்கு வந்தால் பையை தூக்கிக்கிட்டு ரேஷன் கடைக்கெல்லாம் போய் க்யூவில் நிற்பீர்களா?

அடுத்தமுறை நவதிருப்பதிகள்தான். ஒவ்வொரு முறையும் சொல்லிவிட்டு சொல்லிவிட்டு நேரமின்மையால் விட்டுவிடுவேன். வல்லி சொன்னாப் போல் பக்தி கொஞ்சம் முத்தித்தான் போச்சு!!எனக்கு.

said...

வாங்க நானானி.

நிதானமாப் பார்க்க நேரம் இல்லைன்னாலும், கூட வர்ற ரங்கூஸ் படுத்தும் பாடு இருக்கே......

இன்னுமா நீங்க நவதிருப்பதிகள் போகலை. உள்ளூர் சமாச்சரமுன்னதும் கொஞ்சம் அசட்டையாத்தான் இருந்துடறோமில்லை?


அப்படி ரேஷன் அரிசி வாங்க க்யூவில் நின்னாலும் நிப்பேன். ஒருமுறை அழகர் கோவிலில் இலவசச் சாப்பாட்டைக் கூட்டத்தில் நின்னு வாங்கினேன்,ஒரு பாட்டிக்குக் கொடுக்க.

கடைசியில் பாட்டிகிட்டே நீட்டுனப்ப, அவுங்க தன் பையைத் திறந்து காமிச்சு மூணு இருக்குன்னாங்க:-)

அப்புறம் சாப்பாடு பொட்டலத்துக்கு ஆள் தேடுனது தனிக்கதை:-))))

said...

மகரநெடுங்குழைக்காதன் சந்நிதியில்
நின்ற்பொழுது என்னிடம் என்மகன்
கேட்டது:"அப்பா, இப்போ எந்த பதிவர்
உங்க நினைவில் வருகின்றார்"

said...

மகரநெடுங்குழைக்காதன்,பெயரே பெரிதாக இருக்கிறதே.

எங்களுக்கும் தரிசனம் கிடைக்க வைத்ததற்கு நன்றி.

said...

டீச்சர் நான் திருநெல்வேலி இல்லை, அனால் எந்த ஊர்ன்னு சொல்ல ரொம்ப கஷ்டப்படனும் ( நாடோடி ....) திருநெல்வேலி ரொம்ப அழகான பிரதேசம், நான் இப்ப தான் ரெண்டாவது தடவை கொஞ்சம் சுற்றி பார்த்தேன், வயல், வான்வெளி, வானரங்கள், மலை, அருவி, ஏரி, மரங்கள், கோவில்கள், கோபுரங்கள். தாமிரபரணி, எல்லாமே ரொம்ப அழகு.

said...

I visit you blog on a regular basis. Enjoyed reading you travel section very much.

said...

//கடைசியில் பாட்டிகிட்டே நீட்டுனப்ப, அவுங்க தன் பையைத் திறந்து காமிச்சு மூணு இருக்குன்னாங்க:-)//

நொந்துட்டீங்க போல. இது போல சமயங்களில் சில பேர் ஒன்று கொடுத்தால் எங்க வீட்ல இன்னும் ரெண்டு பேர் இருக்காங்க என்று மூன்று வாங்கிக்கொண்டு விடுவார்கள். தானத்தில் சிறந்தது அன்னதானம் அல்லவா? அட்ஷயதிருதியைக்கு அன்னதானம் செய்யலாமென்றிருக்கிறேன். தங்கமெல்லாம்.......யப்பா!!!!!

said...

///பேசாம இந்தியாவுக்கே வந்துரலாம் போல இருக்கே!///
வந்தா பேசாமதான் இருக்கனும் டீச்சர். பேசினா உள்ள போட்டுறபோறாங்க.

said...

வாங்க சிஜி.

நான் சென்னைக்கு வந்த பிறகு 'நண்பர் பதிவர்'க்குப் போன் செஞ்சேன். நம்பர் மாறி இருக்கோ என்னவோ லைன் கிடைக்கலை!

said...

வாங்க மாதேவி.

பேர் மட்டுமா பெத்த பேரு?

அவர் புகழும்தான்!

said...

வாங்க அது ஒரு கனாக் காலம்.

என்னங்க இப்படி மகர நெடுங்குழைக்காதன் போல நீண்ட பெயர். கூப்புடன்னு பேரைச் சுருக்கணும்போல இருக்கே.

புரியுது உங்க நிலமை.நானும் ஒரு நாடோடிதான். சொந்த ஊர் எதுன்னு கேட்டா நடுங்கிருவேன்:-)

said...

வாங்க கே.

ஆதரவுக்கு நன்றி

(எலெக்ஷன் டைம்.அதான் இப்படி)

said...

நானானி,

இதைத்தான் செய்யணும்.சாப்பாடு போதுமுன்னு வாங்கறவங்களைச் சொல்ல வைக்கமுடியும்.

said...

வாங்க தீப்பெட்டி.

அங்கே கொடுங்கோல் ஆட்சியா?

said...

நண்பனின் தந்தைக்கு இந்தப் பதிவை அனுப்பினேன். அவரிடம் இருந்து வந்த பதில்(நேற்றுதான் அவருக்கு தமிழில் எழுத பழகியிருக்கிறேன்)

In NALAYIRA DIVYA PRABANDHAM the hymns on Thenthirupppeerai are Nammmazhvar's
THIRUVOYMOZHI 3359 to 3369., The paadalgal on Aazhwaar Thirunagari are also sung by Nammaalwar in verses 3106 to 3116.These hymns hv excellent literary value soaked in Devotion.

said...

படிக்கிறதோட...பயணப்படவும் செய்கிறோம்

said...

வாங்க நாகு.

நண்பனின் தந்தை இனிமேல் நமக்கும் நண்பர்தான்:-)))


அவர் சொன்னது ரொம்பச் சரி.

இந்த நவதிருப்பதிகள் எல்லாமே ஆழ்வார்களால் மங்களசாஸனம் செய்யப்பட்டவைகள்தான்.

ரொம்ப நன்றி, இன்னொரு நண்பரைத் தமிழுக்கு இழுத்துவருவதுக்கு!

said...

நான் நரேந்திரன்.

பரிட்சைக்கு வரும் பகுதி இது:-))))

said...

இந்த விடுமுறைக்கு நவ திருப்தி போகனும்னு நினச்சுருந்தேன். உங்கள் பதிவை பார்த்ததில் ரெம்ப சந்தோசம். போய் பார்க்க ரெம்ப உதவியா இருக்கும். நன்றி. Timing Chart really very useful information - அருண்மொழி

said...

தும்பிக்கை ஆழ்வார் ரொம்ப பௌவ்வியமாக நிற்கிறார். நல்லாருக்கு.

said...

வாங்க அருண்மொழி.

டைமிங் சார்ட் அப்ப நல்ல டைம்லேதான் கொடுத்துருக்கேன்:-))))

போயிட்டுவந்து உங்க பார்வையில் பதிவு எழுத மறந்துறாதீங்க.

said...

வாங்க நானானி.

கோபம் வராத வரையில் பவ்யத்துக்கு என்ன குறைச்சல் தும்பிக்கை ஆழ்வாருக்கு:-)))))

said...

//இதுவே இந்தக் காலத்து மனுசங்ககிட்டேயோ, இல்லை அரசியல்வாதிங்ககிட்டேயோப் போய்ச் சேர்ந்திருந்தால், குபேரன் 'நிரந்தர தரித்திரவாசி'யாத்தான் இருப்பான். நிதிகள் எல்லாம் பினாமி பெயர்களில் ஸ்வாஹா ஆயிருக்காது. //

மனுசங்ககிட்டேயோ, இல்லை, அரசியல்வாதிங்ககிட்டேயோ என்றால் ?

அரசியல்வாதிங்க மனுசங்களே இல்லைன்னு முடிவுக்கு வந்துட்டீக ..

கரெக்ட்தான்.

இருந்தாலும் நமக்கேன் வம்பு ! அவங்களே அரக்கர்கள்னு சொல்லிபுட்டு வம்புலே மாட்டிகிடவேண்டாம்.

அவங்க எல்லாம் தேவர்ங்க. ஏஞ்சல்ஸ்.

சுப்பு ர‌த்தின‌ம்.

said...

வாங்க சுப்பு ரத்தினம்.

யாருமே இந்தப் பாராவைக் கவனிக்கலையேன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன்.
நீங்க ஒருத்தர்தான் நிலமையைப் புரிஞ்சுக்கிட்டீங்க:-)))))

இந்த வார நட்சத்திரம் அரசர்கள் எப்படி அரக்கர்கள் ஆனாங்கன்னு நம்ம தமிழ்மணத்துலே எழுதி இருக்கார்:-))))