Thursday, March 19, 2009

நோட்டீஸ் போர்டு

இன்று:

கலை, கலாச்சாரம், ஆன்மீகம், பதிவர் சந்திப்பு இப்படிக் கலந்துகட்டி ஊரெல்லாம் சுத்தியடிச்சுத் தேர் நிலைக்கு வந்து நின்னாச்சு. எதிர்பார்த்துப் போன இடங்கள், நினைச்சுப் பார்க்காமலேயே அதுவா வந்து ஆப்ட்டுக்கிட்ட விஷயங்கள், விதவிதமான மனிதர்கள், உணவுகள் இப்படி ஏகப்பட்டது இருக்கு உங்களோடு பகிர்ந்து கொள்ள.

டீச்சரைக் காணோம் என்ற மகிழ்ச்சியில் அங்கங்கே கூடி ஆனந்தக்கூத்தாடும் மாணவமணிகளே, வரும் திங்கள் முதல், வகுப்பு வழமைபோல.


படம்: கும்மோணத்துக் கூட்டம்

63 comments:

said...

வந்தனம்:)!

said...

உள்ளோம் மேடம்:)!

said...

ஆஹா டீச்சர்..

லீவு முடிஞ்சு வந்தாச்சா..?

கிளாஸை ஆரம்பிங்க.. காத்துக்கிட்டிருக்கோம்..!

said...

நானும் என் இடத்துல ஓடி வந்து உக்காந்துட்டேன் நல்ல பிள்ளையா....

said...

//எதிர்பார்த்துப் போன இடங்கள், நினைச்சுப் பார்க்காமலேயே அதுவா வந்து ஆப்ட்டுக்கிட்ட விஷயங்கள், விதவிதமான மனிதர்கள், உணவுகள் இப்படி ஏகப்பட்டது இருக்கு உங்களோடு பகிர்ந்து கொள்ள.
///


ரைட்டு வெயிட்டீஸ்! நல்லா ரெஸ்ட் எடுங்க முதல்ல....! :)

said...

ரீச்சர்,

எல்லாரும் நல்ல பிள்ளைகளாக சத்தம் போடாமல் அமைதியாக புத்தகம் படித்துக் கொண்டிருந்தார்கள்.

said...

/முத்துலெட்சுமி-கயல்விழி said...
நானும் என் இடத்துல ஓடி வந்து உக்காந்துட்டேன் நல்ல பிள்ளையா....
//

ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்!

பின்னே...!
மீ டூ லீவு முடிஞ்சு நல்ல பிள்ளையா வந்து கரீக்ட்டா திரும்ப பணிகளை ஆரம்பிச்சுட்டேனே! :))

said...

உற்சவரும், மூலவரும் சேர்ந்து ஒன்றாக கிளம்பிய தேர் !

ஒன்றாக பார்த்ததில் எங்களுக்கும் மகிழ்ச்சி.

said...

வாங்க வாங்க ரீச்சர்

(அடச்சே ரெஸ்ட் கூட எடுக்காம அதுக்குள்ள வந்துட்டாங்களே)


உள்ளேன்...

:)

said...

***டீச்சரைக் காணோம் என்ற மகிழ்ச்சியில் அங்கங்கே கூடி ஆனந்தக்கூத்தாடும் மாணவமணிகளே, வரும் திங்கள் முதல், வகுப்பு வழமைபோல.***

வாங்க டீச்சர்! :-)

said...

வாங்க டீச்சர் ...

இவ்ளோ நாள் லீவு எடுத்து நல்லா படிக்கற மாணவமணிகளை இப்படியா சோதிக்கறது ? சரி சரி வந்துட்டீங்க இல்ல இனிமே இப்படிலாம் லீவு போட்டுட்டு ஊர் சுத்தக் கூடாது. சீக்கிரம் ஆரம்பிங்க பாடத்தை.

said...

ரீச்சர் வந்துட்டேன்!

said...

வரவேணும்...

நாங்களும் வந்துட்டோம்மல்ல

said...

வாங்க வாங்க. எங்க வீட்ல ஒரு குட்டி உங்களைத் துல்சிப் பாட்டீனு கூப்பிடுகிறது.
அது கிட்டயும் கூட்டத்தைக் காண்பித்து விட்டேன்.:)

said...

உள்ளேன் ரீச்சர்....கும்மோணத்து படத்துல லக்ஷ்மணன், சீதை இடங்களை ஸ்வாப் பண்ணிட்டு ஒரு படம் எடுத்துப் போடுங்க...இன்னும் நல்லாயிருக்கும் :-)

said...

Present miss!

I was very good student and revised old portions mam :)

waiting for ur new classes, oops posts :)

welcome back

said...

அவ்வ்வ்வ்வவ்வ்வ்..டீச்சர்..டீச்சர் இந்த கிளாஸ்ரூம் எங்க இருக்கு!!!!! ? ;)

said...

வாங்க டீச்சர் வாங்க!!!

என்ன பண்றது...ஸ்டூடன்சை கூப்பிடற காலம் போய் டீச்சரை வாங்க வாங்கனு கூப்பிட வேண்டியதா போச்சு.

எப்பவும் போல கயல் பக்கத்திலே உட்கார்ந்துக்கறேன்...அப்ப தா நல்லா காப்பி அடிக்கமுடியும்.

said...

க்ர்ர்ர்ர்ர்ர் லீவு போட்டுட்டு ஊர் சுத்தப் போறேன்னு தகவலே கொடுக்கலை! :P:P:P
சரி, சரி, இனிமேல் ஒழுங்காய் பாடம் நடத்துங்க! :))))))))))

said...

நானும் ரொம்ப நாள் கழிச்சி திரும்பி வந்துட் டேன். இ னி ரெகுல ரா வருவேன் னு நினைக் கேன். டூர் எல் லாம் நல்லபடியா இருந்துதா?

said...

வகுப்புக்கு வந்திட்டேன் டீச்சர். ப்ரசண்ட் போட்டுக்கோங்க.

சிங்கப்பூர்ல பதிவர் சந்திப்பெல்லாம் நடந்துச்சாம்!!
எல்லோரையும் சந்திச்சதெல்லாம் சீக்கிரம் பதிவு போடுங்க.

வெயிட்டிங்.

said...

வாங்க ராமலக்ஷ்மி.

உள்ளோமுன்னு சொல்லி என் உள்ளத்தில் பால் வார்த்தீங்க:-)

அந்த ஓம், மொத்த வகுப்புக்கும்தானே?

said...

வாங்க உண்மைத் தமிழன்.

உங்களுக்குப் போட்டியா இல்லாமல் 'குட்டிக்குட்டி'ப் பதிவா போடலாமான்னு ஒரு யோசனை:-))))

said...

வாங்க கயலு.

நல்லபிள்ளைகளுக்கு 'ரோல்'மாடலா இருக்கீங்க:-)

said...

டீச்சர்..
'படம்: கும்மோணத்துக் கூட்டம்'
இதுக்கு என்ன அர்த்தம்?

said...

வாங்க ஆயில்யன்.

நமக்கு ரெஸ்ட்டே பதிவு எழுதுவதுதான்.(எழுத்து என் மூச்சு'ன்னு சொல்லிக்குவொம்ல)

சத்துணவே பின்'ஊட்டம்'தான்:-))))

said...

வாங்க கோவியாரே.

உங்க தயவாலே கூட்டமும் கூடுதலா ஆனதுக்கு நானல்லவா நன்றி சொல்லணும்.

வரலாறு காணாத வலைப்பதிவர் சந்திப்பு!!!

said...

வாங்க கொத்ஸ்.

கிளாஸ் லீடரே சொல்லும்போது நம்பத்தானே வேண்டி இருக்கு.
நம்பிருவொம்!!!!

said...

வாங்க தமிழன்-கறுப்பி.

'ஓய்ந்திருக்கலாகாது'ன்னு முண்டாசு சொன்னதை மறப்பேனா?

said...

வாங்க வருண்.

டீச்சருக்கு வரவேற்பா?

நல்லது.

said...

வாங்க மிஸஸ்.டவுட்.

//...........மாணவமணிகளை இப்படியா சோதிக்கறது ?//

'சோதிப்பது' டீச்சரின் கடமைகளில் ஒன்றல்லவா?:-)

said...

வாங்க அபி அப்பா.

வருகைப் பதிவேட்டில் பதிஞ்சாச்சு:-)

said...

வாங்க நரேன்,

இப்படி ஆர்வமுள்ள மாணவமணிகள் கிடைச்சது என் பாக்கியம்!

said...

வாங்க வல்லி.

குட்டி மட்டுமே பாட்டின்னு கூப்புடலாம்.ஆமா......

said...

வாங்க மதுரையம்பதி.

எல்லாருக்கும் ஒரு வழின்னா இடும்பிக்கு வேற வழி:-)

நம்ம வீட்டுலே அம்மாதான் ஐயாவுக்கு இடம் கொடுத்துவச்சுருக்கு. ஹனுமனும் அம்மா பக்கம்தான். அதான் லக்ஷ்மணனைவிட்டு இந்தப் பக்கம் தாவியாச்சு.

வீட்டுலே அண்ணனும் நீங்க சொன்னதுபோல சொன்னார். ஆனாலும்...........
நாங்க, மதுரை மாவட்டம்:-)

said...

வாங்க ஸ்ரீவத்ஸ்.

அரியர்ஸ் வைக்காத மாணவரா? பேஷ் பேஷ்.

உங்க ஆர்வம், எனக்கு மகிழ்ச்சி 'ஊட்டுகின்றது'!!!

said...

வாங்க கோபி.

தூக்கக்கலக்கமா? கண்ணைத் திறங்க. பார்க்கலாம்.

இது எத்தனை?

said...

வாங்க சிந்து.

ஈயெல்லாம் பிடிச்சு வைச்சாச்சா?

வேணுமுன்னா இங்கே இருந்து அனுப்பவா? ஆரோக்கியமானவைகளா இருக்கு.

said...

//வீட்டுலே அண்ணனும் நீங்க சொன்னதுபோல சொன்னார். ஆனாலும்...........
நாங்க, மதுரை மாவட்டம்:-)//

ஆஹா, ரீச்சர், நீங்களும் மதுரை மாவட்டமா?.. :-)

said...

வாங்க கீதா.

'குரங்காய்த்தான் ஆரம்பிச்சு'ன்னு பதிவெல்லாம் எழுதி லீவு விட்டேனே..... இப்படிப் பார்க்காம 'சிங்கங்களைத் தேடி அலைஞ்சீங்க' நீங்க.

மூணுவாரம் லீவுதான், கொஞ்சம் நாலரைவாரமா நீண்டுபோச்சு.

said...

வாங்க டிபிஆர்.

நலமா?

மீண்டு(ம்) வந்ததுக்கு மகிழ்ச்சி. உங்க வடிவேலு & பார்த்திபன் நகைச்சுவையை அப்பப்ப நினைச்சுச் சிரிச்சுகறது உண்டு:-))))

said...

வாங்க புதுகைத் தென்றல்.

ஆமாங்க. அடைமழையிலும் விடாமல் நடந்த பதிவர் சந்திப்பு சிங்கையில்.

அதுவும் வரலாறு காணாத கூட்டமாம்(எல்லாம் அங்கே நம்ம மக்கள்ஸ் சொல்லிக்கிட்டதுதான்)

said...

மதுரையம்பதி,

கோபால் அச்சு அசலா மதுரை மாவட்டம்(பழையது)

அதுதான் ...... அவருக்கே புரிஞ்சுபோய்......

எப்படியோ நல்லா இருந்தாச் சரி. இல்லீங்களா?:-))))

said...

அச்..அச்...அச்..
டீச்சர், ரொம்ப நாள் ஆனதால் பெஞ்ச் எல்லாம் தூசி .. அதான் துடைத்து விட்டு அமர்ந்தேன்..தும்மல் வந்து விட்டது. இனி நல்லபிள்ளையா கிளாஸுக்கு வந்துடுவோம்.

said...

ஆஹா!!!!! டீச்சர் வந்துட்டாங்களா? ம்ம்ம்...சாரி டீச்சர், லேட் (எப்பவும் போல தான்) ஆயிடுச்சி. கடசி பெஞ்ச் ஃபிரிதானே. இதோ வந்துட்டேன்.

said...

வாங்க வாழவந்தான்.

எங்க ஊருலே நாலு பேர் இருந்தாவே கூட்டம்தான். இதை மெய்ப்பிக்கும் விதமா, இன்னிக்கு இப்போக் கொஞ்ச நேரம் முந்தி மருந்து வாங்கப்போனப்ப,
காசு கட்டும் இடத்தில் இருந்தவங்க, இங்கே ரொம்பக் கஞ்ஜஸ்ட்டடா இருக்கு, அந்தப் பக்கத்துக் கௌண்ட்டருக்கு வாங்கன்னு சொல்லி வேற இடத்துக்குக் கூட்டிப்போனங்க. அவுங்ஹ்க சொன்ன அந்தக் 'கஞ்ஜஸ்ட்டட்' இடத்துலே ஏற்கெனவே இருந்தவங்க ரெண்டே பேர்தான்!!!!

நாங்க வேற மேலும் ரெண்டு பேர். மொத்தம் நாலு ஆச்சு. அதான் கூட்டம்:-))))))

said...

வாங்க தமிழ்பிரியன்.

உங்கமாதிரி 'நல்லநல்ல பிள்ளைகளை நம்பி'த்தான் நான் வகுப்பே நடத்துறேன்:-)

said...

வாங்க விஜய்.

கடைசி பெஞ்சு ஃப்ரீயா இல்லேன்னாதான் என்ன?

இன்னொரு புது பெஞ்சை அங்கே போட்டு அதைக் கடைசியா ஆக்கிருவொம்லெ:-)))

said...

அன்பின் துளசி

மிக்க மகிழ்ச்சி - மதுரை பதிவர் சந்திப்பில் தம்பதி சமேதராய்ச் சந்தித்ததில் மனம் மகிழ்ந்தோம். அருமையான சந்திப்பு - பலப்பல செய்திகள் பேசி மகிழ்ந்தோம். நேரமின்மை ...... ம்ம்ம்ம்ம்

பயணம் வெற்றிகரமாக முடிந்து தேர் நிலைக்குத் திரும்பியது நன்று.

இனி என்ன - கடகடன்னு பதிவுகள் பறக்கணுமே - சீக்கிரம் பசங்க எல்லாம் காத்துக் கிட்டு இருக்காங்க -கமான்

said...

துளசி

நியூ அட்மிஷன் - ஒரு வண்டு இன்று முதல் பள்ளியில் சேர்கிறது

வாழ்த்த வேண்டுகிறேன்

said...

இன்னிக்கு க்ளாஸ் எடுக்கலியா. :((

said...

வாங்க சீனா.

உங்கள் குடும்பத்தையும் சந்திச்சதில் எங்களுக்கும் ரொம்பவே மகிழ்ச்சி.

புது அட்மிஷன் கொண்டுவந்ததுக்கும் நன்றி. நம்ம வகுப்பில் ராகிங் இல்லை:-)))))

said...

வாங்க வல்லி.
இத்துனூண்டு பதிவு. அதையும் சரியாப் படிக்கலையா?

வகுப்பு திங்கள் அன்று(தான்) தொடங்கும்.

said...

ஹையா! டீச்சர நானும் சந்திச்சிட்டனே

said...

துளசியம்மா,
வந்துட்டீங்களா! sorry for late attendance. Vijayக்கு போடற கடைசி பென்ச்சில் எனக்கும் ஒரு இடம்.

said...

இல்ல டீச்சர், நான் உங்களுக்காக waiting! அலுவலகம் போம்போது உங்க பதிவுகள் நிணைவுக்கு வரும். சீக்கிரம் ஆரம்பம் ஆகட்டும்.

said...

வாங்க நட்புடன் ஜமால்.

சந்திப்பு மட்டும் போதுமா? அப்பப் படிப்பு?

said...

வாங்க பாண்டியன் புதல்வி.

கடைசி பெஞ்சு ஓவர் க்ரவுட்டடா இருக்கே:-)))

said...

வாங்க சுகுமார்.

பதிவுகள் போட ஆரம்பிச்சாச்சு.
முதல் பகுதி வந்துருக்கு பாருங்க.

said...

நானும் வந்துட்டேன் டீச்சர்.

said...

Present Madam

said...

வாங்க அமித்து அம்மா.

உங்களுடன் தொலைபேசுனது ஒரு இன்ப அதிர்ச்சி:-)

said...

வாங்க தமிழ்நெஞ்சம்.

எந்த பெஞ்சுன்னு முடிவு செஞ்சுட்டீங்களா? :-)