Thursday, March 26, 2009

முற்பகல் மூன்று ......(2009 பயணம்: பகுதி 3)

முதல்லே போய் இறங்குன இடத்தில், எங்கே பார்த்தாலும் மஞ்சத் துண்டு!
கோவிலில் பராமரிப்பு வேலைகள் நடந்துக்கிட்டு இருக்கு. சாரங்கட்டின கோபுரத்துலே ஏறி வேலைபார்க்கும் பணியாளர்களும், கொட்டி வச்சுருக்கும் சரளைக்கல் குவியல்களின் மேல் ஒய்யாரமாய்ப் படுத்துத் தூங்கும் வெள்ளாடுகளுமா ஒரு பக்கம். தென்ன ஓலைகளுக்குள்ளே ஒளிஞ்சு கண்ணாமூச்சி காட்டும் குட்டிக்கோபுரங்கள். குருபகவான் அனுக்கிரகம் தேடி வந்த பக்தர்களின் கூட்டம் சந்நிதியில். அநேகமாக எல்லார் கைகளிலும் மஞ்சள் துணித் துண்டுகள். குருக்கள் அசராமல் எல்லாத்தையும் வாங்கிப் பூஜையில் வச்சுட்டு கற்பூர ஆரத்தி காமிச்சுக்கிட்டு இருக்கார். பரிகாரம் செஞ்சுக்கன்னு வந்தவங்க எல்லாரும் கம்பித் தடுப்புக்கு உட்பக்கம்.

நாங்கள் சாமி கும்பிட்டுட்டு, வெளிப்புறம் பிரகாரத்தைச் சுற்றிட்டு வெளியே போனோம். கோவில் குளம் ரெண்டு பகுதியாக இருக்கு. ராஜகோபுரம் பக்கம் இருக்கும் குளம் முழுக்க அழுக்கும் பாசியும் பாலித்லீன் பைகளுமா நிரம்பி வழியுது. ஆனாலும் அங்கங்கே அல்லிப்பூக்களும் கொஞ்சம் உண்டு. கிழக்கு கோபுரத்தைப் பார்த்து இருக்கும் குளத்தில் அவ்வளா அழுக்கு இல்லை. பூக்களும்(உண்மையானது) நிறைய.
இந்தப் பயணத்தில், கோயிலுக்குள்ளே தேங்காய்பழங்கள் எல்லாம் வாங்கிட்டுப் போகப்போறதில்லைன்னு முதல்லேயே முடிவு செஞ்சுக்கிட்டேன். சாமி பிரஸாதமுன்னு அவைகளை வெளியே போடவும் மனசாகலை, அதே சமயம் ஊரூராப் போகும்போது எங்கேன்னு தூக்கிட்டுப் போறது? அங்கங்கே கோயில் உண்டியலில் கொஞ்சம் காசு போட்டுக்கலாமுன்னு தீர்மானம் எடுத்துருந்தோம்.

முதல்முறையா இந்தப் பக்கங்களில் பயணம். எல்லாம் வினோத் கையில்ன்னு விட்டாச்சு. அடுத்த ஸ்டாப் திருநாகேஸ்வரம். ராகு பகவானுக்கு உள்ள ஸ்தலமாம். கோயிலுக்கு நுழையுமுன்னே வலப்பக்கமா ஒரு சுற்றுமதில் எல்லாம் கட்டுன பெரிய குளம். அப்பாடா..... அட்டகாசமா இருக்கு. ஒரு மூலையில் இருந்து படிகள் வழியாக இறங்கும் தண்ணீர் சலசலத்துப் பாய்ஞ்சுக்கிட்டு இருக்கு. ஏழெட்டுப்படிகள். பளிச்சுன்னு சுத்தமா இருப்பதைப் பார்ப்பதே பரவசம். குளத்தின் நடுப்பகுதிவரை யாரையும் போகவிடாமல் ஒரு கம்பித்தடுப்பு போட்டுருக்காங்க. ரொம்ப நல்லது.


கோவில் வாசலில் 55 வயசான அம்பிகா. குலுங்கும் மணி மாலையோடு! கோயிலின் உள்ளே நுழைஞ்சதும் ஒரு பெரிய படம் வச்சுருந்தாங்க. சாமிக்கு அபிஷேகம் செஞ்ச பால் 'பாம்பு தரையில் வளைஞ்சு வளைஞ்சு போகுமே' அதேபோல வழிஞ்சு ஓடுனதை. இது உண்மையாகவே அப்படி நடந்தப்ப எடுத்ததாம். ராகு பகவானுக்கு அபிஷேகம் செய்யும் பால் நீலநிறமா மாறுமுன்னும் ஒரு தகவல் இருந்துச்சு. அங்கே இருந்த டிக்கெட் கவுண்ட்டரில் இருந்தவர், ஒம்போதரை மணி அபிஷேகம் நடக்கப்போகுதுன்னார். இன்னும் அஞ்சு நிமிஷம்தான் இருக்கு. சரி, கலந்துக்கலாமுன்னு டிக்கெட் வாங்கிட்டுப் போனோம். 65 ரூபாய் ஒரு ஆளுக்கு. இதில் பத்து ரூபாய் கோவில் பராமரிப்பு, அஞ்சு ரூபாய் அன்னதானத் திட்டத்துக்கு. நாம் எதுவும் வாங்கிட்டுப் போகவேண்டாம். அர்ச்சனைப்பொருட்கள் அதுலே அடக்கமுன்னு சொன்னாங்க. நாந்தான் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமப்போனேன்னு சொன்னேன்லெ. வருவதை அப்படியே எடுத்துக்கணும்னு தீர்மானிச்சதும் ஒரு காரணம். இதுக்கும் நூறு ரூபாய் ஸ்பெஷல் டிக்கெட் இருக்கு. நமக்கு இந்த அறுபத்தியஞ்சே யதேஷ்டம் இல்லீங்களா?

ராகு பகவான் சந்நிதிக்கு முன்னாலே ஒரு கம்பித்தடுப்பு. அதுக்கு இந்தப்பக்கம் கொஞ்சம்பேர் உக்கார்ந்துருந்தாங்க. ஒரு பத்துப்பதினைஞ்சு பேர். நாங்கள் பின்னாலே போய் கொஞ்சம் அரையடி உசரமா இருந்த இடத்துலே உக்கார்ந்தோம். முழங்கால், முதுகுன்னு வலிகள் வேற இருக்கே எனக்கு எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்ஸ் போல. கொஞ்சம் செல்வந்தர்கள் போல் இருந்த இருவரைக் கூட்டிவந்து எல்லாருக்கும் முன்னாலே அந்தக் கம்பித் தடுப்புக்கும் முன்னாலே உக்காரவச்சார் ஒருத்தர். நூறா இருக்கும். போகட்டும்.

அபிஷேகம் ஆரம்பிச்சது. தண்ணீர், பன்னீர் னு ஆரம்பிச்சுப் பால் வந்தவுடன், நீலமா மாறுதான்னு உத்துப் பார்த்துக்கிட்டு இருந்தேன். என் ஓட்டைக் கண்ணுக்கு ஒன்னும் தெரியலை. அதுக்குப்பிறகு சந்தனக்காப்பு போட்டுத் திரையை மூடிட்டு அஞ்சே நிமிசத்தில் திரையைத் திறந்தாங்க. ஜிலு ஜிலு அலங்காரமுடன் ஆயிரம்விளக்குன்னு நான் சொல்லும் அடுக்கு விளக்குகளோடு தீபாராதனை ஆச்சு. அஞ்சு தீபம், குட ஆரத்தி, ஒற்றை தீபம்ன்னு வகைவகையா ஆரத்திகள். அது முடிஞ்சு வெளியே வந்ததும் ரெண்டு குருக்கள் ஒரு மண்டபத்தில் நின்னு எங்களை வரிசையில் வரச் சொல்லி பூ மாலைகள்,(ஆண்களுக்கு அவுங்களே போட்டுவிட்டு, பெண்களுக்குக் கையில் கொடுத்தாங்க) உடைச்ச தேங்காய் 2 மூடி, பழங்கள், விபூதி, குங்குமப் பிரசாதங்கள் உள்ள பை ஒன்னும் கொடுத்தாங்க. இன்னொருத்தர் இள நீலமா இருந்த அபிஷேகப்பாலை ஒவ்வொருவருக்கும் கையில் ஊத்துனார்!!!!
அம்பிகாவுக்கு எல்லாத்தையும் கொடுத்துட்டோம். அவளுக்கும் சந்தோஷம். 'கை' நீட்டி உடனே வாங்கிக்கிட்டாள். செல்லமா ஒரு பார்வையும் பார்த்தாள்:-)

வெளியே ஆடு ஒன்னு ஃப்ரீ ரைடுக்கு நிக்குது:-)


இந்தத் தலத்தில்தான், இறைவனில் பாதி வேணுமுன்னு பார்வதி கடுமையா தவம் புரிஞ்சாங்களாம். எதுக்கு? எல்லாம் இந்த ப்ருங்கி முனிவரின் அட்டகாசத்தால். அவர் சரியான ஆணாதிக்கம் புடிச்சவர் போல. இறைவனும் இறைவியும் ஒன்னா உக்கார்ந்திருக்கும்போதும் இறைவனை மட்டுமே வணங்கணுமுன்னு வண்டு உருவம் எடுத்துச் சிவபெருமானைச் சுத்திப் பறந்து வந்து வணங்குனாராம். அம்மாவுக்குக் கோவம் வந்துருச்சு. ரெண்டு உடல் இல்லாம ஒரே உடலா இருந்தா என்ன செய்வீர்ன்னு அர்த்தநாரீஸ்வர வடிவம் வேண்டுனாங்களாம். இங்கே சண்பக மரத்தடியில் கடுந்தவம். பெண்கள் போராடித்தான் உரிமையை வாங்கிக்கணுமுன்னு அப்பவே எடுத்துக்காட்டி இருக்காங்க. இன்னமும் 33 சதமானம் இட ஒதுக்கீடு கனவாவே இருக்கு. இத்தனைக்கும் நம்ம ஜனாதிபதியே ஒரு அம்மணிதான்.
திருநள்ளார் போயிறலாமுன்னு புறப்பட்டோம். பன்னெண்டு மணிக்குள்ளே போயிட்டோமுன்னா அதை முடிச்சுக்கிட்டு மாலை 4 மணிக்கு மற்ற கோயில்களைப் பார்த்துக்கலாமுன்னு வினோத் சொன்னார். கோயில்கள் இருக்கும் வரைபடத்தைப் பார்த்தால் கும்பகோணத்தைச் சுத்தியே எல்லாம் இருக்கு. பேசாம ஒரு ரிங் ரோடு போட்டுட்டால் சுலபமா ஒரே ரவுண்டில் எல்லாத்தையும் பார்க்கலாமுன்னு கோபால் சொன்னார். ஞாயமாத்தான் இருந்துச்சு. நடக்குற காரியமா? (நடந்தா நல்லாத்தான் இருக்கும்) அன்னிக்கு முழுக்கத் திரும்பத்திரும்ப ஒரே இடம்வழியாப் பயணப்பட்டமாதிரியே இருந்துச்சு. ஒரு சர்ச்சையும், ஒரு மசூதியின் மினாராவையும் திரும்பத் திரும்பப் பார்த்துக்கிட்டே இருந்தோம். அதுதான் எனக்கு அடையாளமாப் போச்சு.
சனீஸ்வரனைக் கும்பிட்டுக்கிட்டுக் காரைக்கால் போயிட்டோம். மூணுமணி நேரம் நடுவிலே இருக்கு. அங்கே போகும்வழியில் சாலை ரொம்ப நல்லா இருக்கு. பாண்டிச்சேரி மாவட்டமாம். பொதுப்பணித்துறை கொடுக்கும் காசை கொஞ்சம்(?) நல்லபடியாவே செலவழிச்சுருக்காங்க. யூனியன் பிரதேசமாச்சே. வீடுகளும், கடைத்தெருவும் நம்ம தமிழ்நாட்டைவிட நல்லாவே இருக்கு. பணநடமாட்டம் தெரியுது. நல்ல ஓட்டலுன்னு சொல்லி ஒரு இடத்துக்குக் கொண்டுபோனார் வினோத்.
'இட்லி' இருக்கான்னு கேட்டதும் சப்ளையர் அப்படியே நடுங்கிட்டார்.
காலையில் மட்டும் கிடைக்குமாம். மெனு கார்டு பூராவும் வட இந்திய உணவு வகைகளும், பத்தாக்குறைக்கு சீனச் சமையலும். நாம் எங்கியோ போய்க்கிட்டு இருக்கோம்(-: கோபாலுக்கும் வினோதுக்கும் தென் இந்திய சாப்பாடுத் தட்டு கிடைச்சது. எனக்குத்தான்...... எண்ணெய் இல்லாத 'நான் ரொட்டி' தரேன்னார். அப்புறம் பரோட்டாதான் செய்ய முடியுமுன்னு சொன்னார். கடைசியில் இது எல்லாமே இன்னும் அரைமணி கழிச்சுத்தான் கிடைக்குமுன்னு சொன்னார். இது என்ன வம்பாப் போச்சேன்னுட்டு வெறும் சாதம் மட்டும் வாங்கிக்கிட்டேன். தயிர் சாப்பிடவும் பயமா இருக்கு. சூடா இருக்கும் வெந்த சோத்தை மட்டும் நாலு டீஸ்பூன் தின்னு பகலுணவை முடிச்சுக்கிட்டேன்.

தொடரும்:-)

பி.கு: அநேகமா எல்லாக் கோயில்களிலும் புகைப்படம் எடுக்கத் தடை போட்டுருக்கு. வெளியே இருந்து எடுத்த படங்களும் கோபாலின் கைவண்ணத்தால் பலது நல்லா அமையலை.(அவரோட கேமெரா சரியில்லைப்பா) ஒரு தொகை வாங்கிக்கிட்டுப் படம் எடுக்க விட்டால் என்ன? கோயிலுக்கும் வருமானம்தானே? கூட்டம்கூட்டமாச் சினிமாக்காரர்கள் க்ரூப் டான்ஸ் எடுக்கும்போது போகாத புனிதம், கலைகளை ஆராதிக்கும் மக்கள் புகைப்படம் எடுத்தால் போயிருமா? என்னவோ போங்க(-:

60 comments:

said...

இதுதான் டீச்சர் எழுதினது மாதிரி இருக்கு!

ஆலங்குடி னு சொல்லாமால் விட்டுட்டீங்க போல் இருக்கு.....
குருவுக்கே........

said...

வாங்க சிஜி.

அப்ப....மத்ததெல்லாம் எழுதுனது 'கோஸ்ட் ரைட்டரா?'

நம்ம வகுப்பு மாணவர்களை என்னான்னு நினைச்சுக்கிட்டீங்க?

படத்துலே ஆலங்குடின்னு இருக்கேன்னுதான் சொல்லாம விட்டேன்

said...

பி.கு. கொஸ்டின் குட் கொஸ்டின் ;)

said...

//வருவதை அப்படியே எடுத்துக்கணும்னு தீர்மானிச்சதும் ஒரு காரணம்.//

டீச்சர், ரொம்ப நொந்து நூடில்ஸ் ஆயிட்டீங்களா?
அடிக்கடி லீவ் எடுத்துட்டு இந்தியாவுக்கு போகாதீங்கன்னு சொன்னா கேக்க மாட்டேங்கறீங்க.

//கூட்டம்கூட்டமாச் சினிமாக்காரர்கள் க்ரூப் டான்ஸ் எடுக்கும்போது போகாத புனிதம், கலைகளை ஆராதிக்கும் மக்கள் புகைப்படம் எடுத்தால் போயிருமா? //

அது....


மூலஸ்தானத்த தவிர மத்த எடங்கள்லே படம் எடுக்க அனுமதி குடுக்கனும்ணு நான் வேணா பந்த்,ஸ்ரைக் அப்படின்னு ஏதாவது ஆரம்பிக்கவா, டீச்சர்.

ஆனா கிளாஸ்க்கு வந்திருவேன்.

said...

எதேச்சையாக ரொம்ப நாட்களுக்குப் பின் வலைப்பூக்கள் பக்கம் நுழைந்தது நல்லதாகிவிட்டது! உங்கள் ஆன்மிக பயணம், நினைவு தெரிந்து நாளிலிருந்து
ஒரு 17 வருடம் நான் வாழ்ந்த நிலத்தில் நடந்துள்ளது கண்டு மிக்க மகிழ்ச்சி. 12 + வருடங்கள் உருண்டோடி விட்டன, அங்கு திரும்பச் சென்று.

மாற்றந்தாய் நாடான இந்தியாவிலிருக்கும் இந்த ஊர்களுக்கு இனிமேல் போக விருப்பமில்லை. ஆயினும் நீங்கள் எழுதியது ஒரு வகையான ஆறுதலாகவுள்ளது.
நன்றி.

வரைபடத்தில் இருக்கும் ஊர்களான பேரளம் (1/2) & சீர்காழி (1/2) எனது மரப்பணுக்கள் உதித்த ஊர்கள். பேரளத்திற்கு மேற்கே மேகநாதர் கோவில்
இருக்கும் திருமீயச்சூர் போனீர்களா..? அழகான பெரிய கோவில் மற்றும் எமன் பிறந்ததாகச் சொல்லப்படுகிற ஊர்-எனக்கும் சொந்த ஊர் ;((
மனது கனக்கத் தொடங்குகிறது..

மிக்க,மிக்க நன்றி பதிவுகளுக்கு.

said...

வாங்க கோபி.

கொஸ்டின் குட்டா இருந்து என்ன செய்யறது? பதில் கிடைக்கலையேப்பா(-:

said...

வாங்க பெருசு.

இந்தியாகூட நமக்கெல்லாம் ஒரு love & hate உறவு இருக்கு.

இங்கே இருக்கும்போது எப்படா ஊருக்குப்போகலாமுன்னு இருக்கும். அங்கே போனதும், அரசியல், ஊழல், அழுக்கு,அராஜகம், அக்கிரமம் இப்படியெல்லாத்தையும் பார்த்துட்டு ஒரே எரிச்சல்தான்.

விட்டுத் தொலைக்க முடியலையேப்பா.

said...

வாங்க வாசன்.

நலமா? ரொம்ப நாளாச்சே உங்களை இந்தப் பக்கம் பார்த்து!!!!

நவகிரக்கோயிலுன்னு சொன்னதும் 'கொக்குக்கு ஒன்றே மதி'ன்னு இடையில் உள்ள கோயில்களுக்குக் கூட்டிப்போகாமல் கிரகத்துக்கு மட்டுமே கொண்டுபோய் நிறுத்திட்டார் வினோத்.

மறுநாள்தான் கொஞ்சம் சுதாரிச்சுக்கிட்டு முடிஞ்சவரை கும்பகோணம் & சுத்துப்பட்டச் சில கோயில்களுக்குப் போனோம்.

எமனைத் தவறவிட்டுட்டேன்(-:
நேரம் வரலை போல!!!

said...

எங்கே சென்றாலும் ஐராவதங்கள் உங்க கண்ணுல பட்டுறுது.

பதிவுக்கு இன்னும் கமெண்டல, இது படத்துக்கு. படிச்சுட்டு வாரேன்

said...

அட்டகாசம்.

யுகாதியும் அதுவுமா நவக்கிரகங்கள் தரிசனம் எங்களுக்கு...

சூப்பர்..

said...

யானையைப் பார்த்துட்டு வந்தோமில்ல,

ம்ம்ம்ம் நவகிரஹக் கோயில்களுக்குப் போயிட்டு வந்தோம் 2 வருஷம் முன்னாடி, நீங்க எழுதப் போறீங்கனு அப்போவே சனீஸ்வரனும், சூரியனும் சேர்ந்து சொல்லிட்டாங்க, அதான் எழுதாம விட்டு வச்சேன். நல்லா இருக்கு தொடர்,
படம் எடுக்க இதே கஷ்டம் தான் எங்களுக்கும் இருந்தது, அப்போவே! :((((

said...

நானும் வரும் 10-11-ஆம் தேதிகளில் நவகிரகஸ்தலங்கள் போகப் போகிறோமே! மதுரையிலிருக்கும் நாத்தனார் கூட. உங்கள் பதிவு நல்ல உபயோகமாயிருக்கும்.

கோபுர தரிசனம் கோடிப் புண்யமானால்
மத்தக தரிசனம் எவ்வள்வு புண்ணியம்? போகுமிடமெல்லாம் ரெண்டும் கிடைக்கிறதே!!!

said...

நவகிரகங்களில் சிலகிரகங்கள் கோவில்கள் எல்லாம் சில வருடங்கள் முன்னால போனது. போன முறை எங்களோட வந்த ட்ரைவரும் சொல்லிப் பார்த்தாரு, 'நீங்க ரொம்ப நேரம் எடுத்துக்கறீங்க, காலையிலிருந்து மாலைக்குள் எல்லா நவகிரக கோயிலும் போயிடலாம்'னு. கூட வந்த பெரியவங்களால முடியலன்னுட்டு எல்லாத்துக்கும் போக முடியலை. அடுத்த முறையாவது போகணும்.

வரைபடம் ரொம்ப பயனுள்ளது! ரங்க்ஸ் கிட்ட காட்டினேன் (ரூட் மேப் பாத்துட்டு உடனே, "உங்க ஊர்ல தான் இப்படி ஏறுமாறா படம் வரைவீங்க. வடக்கு வலப்பக்கம் வச்சு..."ன்னு நோகடிச்ச்சிட்டாரு:-) அம்பிகா படம் சூப்பர்:-)

said...

ஆரம்பமே மிரட்டலா இருக்கே டீச்சர்

said...

\\வெளியே ஆடு ஒன்னு ஃப்ரீ ரைடுக்கு நிக்குது:-)\\

பக்குத்துலேயே சிவப்பு துண்டு இருக்கே

said...

எனக்கு தெரிஞ்சதே நீலக்கலர் சாமி..
:)
கோயில் வாசல்கள் தான் எடுக்கமுடியும்.. நம்மூரில்..
:(
ஒரு தரம் திருச்செந்தூர் தேர் சுத்தி வந்ததை போட்டோ எடுக்கபோனேன்.. நோ நோ அது வீடியோக்கேமிரா.. அதுல எடுக்காதீங்க.. ன்னு சொல்லிட்டு அவங்க போட்டோகிராபரை வச்சு வேணா எடுத்துட்டு காசு கொடுத்துடுங்கன்னாங்க..

said...

அது சரி, குழாயில தண்ணீர் பிடிக்கற அம்மா யாரைப் பார்த்து சண்டைக்கு வலிக்குது:)
அபிராமி அழகோ அழகு.

இட்லின்னு கேட்டதும் பயந்துட்டாரா:)))
வெறும் சோறா சாப்பிட்டீங்க.:(
ஆமாம் எதுக்கு வம்பு!!

பால் நீலமாகும்னு நானும் காத்திருந்து பார்த்தேன். தம்பி சாதிப்பான் அது நீலம்தான்னு.

said...

அபிஷேகத்தில் நாங்களே கலந்து கொண்டது போல் ஒரு உணர்வு !
நன்றி டீச்சர் !

said...

ஒரு வாரமா பக்கத்து எமிரேட்டுக்கு போனதால பதிவை படிக்க மட்டும் தான் முடிஞ்சது டீச்சர்.

முதல் பகுதியில் முன்னுரை மாதிரி இருக்கேனு நினைச்சேன்..பார்த்தா ஏகப்பட்ட பின்னூட்டம் அதே மாதிரி இருந்துச்சு.

கிராமம் ரொம்பவே அழகு.டீச்சர் போற இடத்திலெல்லாம் எப்படியோ ஒரு யானை இருந்தே இருக்கு...ஏதாவது டைஅப் இருக்கா டீச்சர்?

இந்த டிரிப்பில கோபால்ஜிக்கு ஒரு கர்சீப்பாவது வாங்கி கொடுத்தீங்களா?
கோகி எப்படி இருக்கிறாங்க..இந்த தடவையும் விட்டுட்டு போன கோபம் இருக்கா?

said...

வாங்க கோவியாரே.

கண்ணுலே தட்டுப்படாம ஒளிஞ்சுக்கக் கூடியச் சின்ன உருவமா அது? :-))))

said...

வாங்க ச்சின்னப்பையன்.

ஹேப்பி உகாதி.

அடுத்தமாசம் வரும் *** விழாவுக்குத்தான் அரசு ஆட்டையைப் போட்டுருச்சு.

said...

வாங்க கீதா.

துவாரகா அகோபிலமுன்னு அடிச்சு ஆடிக்கிட்டு இருக்கீங்க! அங்கெல்லாம் போகணும் என்ற என் கனவை உங்க மூலம்தான் இப்போ நிறைவேத்திக்கிட்டு இருக்கேன்:-)))

இன்னும் உங்க பதிவு எல்லாம் ஆற அமர இன்னொருக்காப் படிக்கணும்.

said...

வாங்க நானானி.

எங்களைப்போல இல்லாமக் கொஞ்சம் ஆற அமரப் பார்த்துச் சேவிச்சுட்டு வாங்கப்பா.

said...

வாங்க கெக்கே பிக்குணி.

வரைபடம், கும்பகோணத்தை மையமா வச்சு அதன் சுத்துப்புறத்தைக் காமிக்குது.
அதான் உழக்குலே கிழக்கு மேற்காப்போச்சு:-)))))

ரெண்டு நாள் ஒதுக்குனா நல்லாவே பார்த்துறலாம் இடைப்பட்ட ஊர்களில் இருக்கும் மற்ற கோயில்களையும் சேர்த்து.

said...

வாங்க நட்புடன் ஜமால்.

அந்த ஒரு இடத்தில் மட்டும்தான் கோயில் வாசலுக்கும் நாம் இறங்கவேண்டிய இடத்துக்கும் ஒரு நூறு மீட்டர் தூரம் இருந்துசு. ரெண்டு பக்கமும் கடைகள். பயங்கரமா மஞ்சள் துண்டுகள் விற்பனை.

குரு( ஆசிரியர்/டீச்சர்) அருள் இருந்தால் எதையும் சமாளிச்சுறலாமாம்.:-))))


ஆடு இருக்குமிடம் வேற ஊர்!!!!அங்கத்துக் கலர் 'நீலம்'

said...

வாங்க கயலு.

நீலக்கலர் தெரிஞ்சதா?

அடடா....கண்ணாடியைக் கழட்டி வச்சுட்டுப் பார்த்துருப்பீங்க, இல்லே:-)))))

said...

வாங்க வல்லி.

வகுப்புலே கவனம் போறாது. பெஞ்சு மேலே ஏறி நிக்கச் சொல்லலாமான்னு யோசனையா இருக்கேன்:-)

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்.....

யார் அந்த அபிராமி???????

ஞானக்கண்ணுக்குத்தான் நீலம் தெரியும் போல.பாருங்க கயலுக்குத் தெரிஞ்சுருக்கு!!!!

said...

வாங்க அருவை பாஸ்கர்.

நலமா? எங்கே ஆளையே காணோம் நம்ம வீட்டுப் பக்கம்?

எல்லாக் கோயில்களிலும் பதிவர்களுக்காகவும் வேண்டிக்கிட்டேன்.

said...

வாங்க சிந்து.

கோபால்ஜி கைகுட்டை விலை கேட்டு அரண்டுபோயிட்டார்ப்பா. வாங்கலை:-)

கோகிக்குப் பயம் வந்துருச்சு மனசுலே. வந்ததுமுதல் இணைபிரியாமல் என்னோடவே இருக்கான்.

யானையைப் பார்த்தால் என் கால் டக்ன்னு நின்னுருதுப்பா.

said...

30th

said...

சாரி ரீச்சர் போன வாரம் முழுதா வர முடியலை.. :(

said...

ஊர்ல போன கோயில்களின் கூடவே இன்னும் பலதும் நினைப்பு வந்துடிச்சு...

said...

நான் இன்னிக்கு ஆன்டைம்..புதன் கிழமை அன்னிக்கு நான் எட்டிப்பார்த்துட்டு எஸ்கேப் ஆகிட்டேன்..(பக்கத்திலேயே என் வாத்தியார் நின்னுகிட்டு இருந்தார்..அதான் டீச்சர் கிட்ட அட்டண்டண்ஸ் குடுக்க முடியலை..)

சூப்பர் டூப்பர்..!!

said...

அம்பிகாவுக்கு வயசு 55 ஆஆஆஆஆ
பொய் சொல்லாதீங்க டீச்சர்
பாத்தா அப்படி தெரியலயே

said...

//எங்கே ஆளையே காணோம் நம்ம வீட்டுப் பக்கம்?//

எல்லா பதிவையும் படிச்சுடுகிறேன் !
கருத்து மட்டும் எப்பைய்யவது சொல்றேன் !

said...

//ஒரு சர்ச்சையும், ஒரு மசூதியின் மினாராவையும் திரும்பத் திரும்பப் பார்த்துக்கிட்டே இருந்தோம். //

எப்படியாவது ஒரு சர்ச்சை கிளப்பி விடணும். இப்போ இப்படி. என்சாய்! :))

said...

//
'இட்லி' இருக்கான்னு கேட்டதும் சப்ளையர் அப்படியே நடுங்கிட்டார்.
காலையில் மட்டும் கிடைக்குமாம். மெனு கார்டு பூராவும் வட இந்திய உணவு வகைகளும், பத்தாக்குறைக்கு சீனச் சமையலும். நாம் எங்கியோ போய்க்கிட்டு இருக்கோம்(-:
//

என்ன ஓட்டல் அது.. ஒரு இட்லி கூட கொடுக்க முடியவில்லை?

said...

//
எண்ணெய் இல்லாத 'நான் ரொட்டி' தரேன்னார். அப்புறம் பரோட்டாதான் செய்ய முடியுமுன்னு சொன்னார். கடைசியில் இது எல்லாமே இன்னும் அரைமணி கழிச்சுத்தான் கிடைக்குமுன்னு சொன்னார்
//

அரைமணியில் கிடைத்தால் ரொம்ப ஆச்சரியம் தான்.

said...

//
செல்வந்தர்கள் போல் இருந்த இருவரைக் கூட்டிவந்து எல்லாருக்கும் முன்னாலே அந்தக் கம்பித் தடுப்புக்கும் முன்னாலே உக்காரவச்சார் ஒருத்தர். நூறா இருக்கும். போகட்டும்.
//

இது மட்டும் மாறவே மாறாது போலிருக்கு.

said...

//'இட்லி' இருக்கான்னு கேட்டதும் சப்ளையர் அப்படியே நடுங்கிட்டார்.//

இது மிக உண்மை. உங்களுக்காவது பரவாயில்ல. நடுங்க மட்டும்தான் செஞ்சாரு.(டீச்சரு இல்ல!!!) நாங்களா இருந்தா இட்லி குண்டாவாலயே ஒரே மொத்துதான். ஏன் டீச்சர், அதே மாவுல தோசை ஊத்தினா 15 ருவா சார்ஜ் பண்ணலாம்றப்போ எதுக்கு இட்லிய ஊத்தி 2 ருவாய்க்கு தரணும். எல்லாம் பிசினஸு டாக்டிஸ்தான் டீச்சர்....

said...

தனியொரு டீச்சருக்கு இட்லியில்லையெனில் கொப்பரையை அழித்திடுவோம் என்று வலைப்பூக்களில் தொடர் பதிவிடுவோம். இட்டிலி என்ற தலைப்பில் பதிவிட்டு மூன்று பேரைக் கூப்பிட வேண்டும். இது எப்படி இருக்கு?

என்னது... பால் நீலமாகுமா? இப்பிடித்தான் கருநாடகாவுல ஒரு கோயில் இருக்கு. பேரு மறந்து போச்சு. அதுல சிவலிங்கத்தோட தலைல நெய்ய ஊத்தித் தடவுனா வெண்ணெய்யாயிரும்னு ஒரு நம்பிக்கையாம். அந்தூரு ஐயரும் லிங்கத்தோட தலைல தண்ணிய ஊத்தீட்டு... நெய்யையும் ஊத்தீட்டு அதத் தடவோ தடவுன்னு அழுத்தித் தடவுனாரு. கடைசியா... சிவலிங்க அழுக்கு..நெய்யு..ஐயர் கைல இருந்தது எல்லாம் தெரண்டு கெட்டியா ஒன்னு வந்துச்சு. அதை எல்லாருக்கும் துளித்துளி பிரசாதம்னு குடுத்தாங்க. யக்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்... நான் தொடவேயில்லை.

கோயில்ல போட்டோ எடுக்க விடனும்னு 2007ன் தொடக்கத்துலயே.... 2006ஆ? பதிவு போட்டாச்சு.

said...

//பி.கு: அநேகமா எல்லாக் கோயில்களிலும் புகைப்படம் எடுக்கத் தடை போட்டுருக்கு. வெளியே இருந்து எடுத்த படங்களும் கோபாலின் கைவண்ணத்தால் பலது நல்லா அமையலை.(அவரோட கேமெரா சரியில்லைப்பா) ஒரு தொகை வாங்கிக்கிட்டுப் படம் எடுக்க விட்டால் என்ன? கோயிலுக்கும் வருமானம்தானே? கூட்டம்கூட்டமாச் சினிமாக்காரர்கள் க்ரூப் டான்ஸ் எடுக்கும்போது போகாத புனிதம், கலைகளை ஆராதிக்கும் மக்கள் புகைப்படம் எடுத்தால் போயிருமா? என்னவோ போங்க(-://

வன்மையாக முன்மொழிகிறேன் ரீச்சர்..

நானும் இங்கிட்டெல்லாம் போய் ரவுண்டு அடிச்சு பார்க்கணும்னுதான் ஆசை..

நேரமும் கிடைக்கலை.. பர்ஸும் கனக்க மாட்டேங்குது..

பார்க்க வாடான்னு கூப்பிடுறவங்க இது ரெண்டையும் செஞ்சு கொடுத்தாத்தான மனுஷன் போக முடியும்..?

இதையும் செய்ய மாட்டேங்குறாங்க.. அதையும் செய்ய விட மாட்டேங்குறாங்க..

என்ன கிரகங்களோ தெரியல..!

said...

வகுப்பில் பிராக்ஸி மூலமா (ராகவன்) படிச்சிக்கிட்டு தான் இருக்கேன் டீச்சர்! :)

//பேசாம ஒரு ரிங் ரோடு போட்டுட்டால் சுலபமா ஒரே ரவுண்டில் எல்லாத்தையும் பார்க்கலாமுன்னு கோபால் சொன்னார். ஞாயமாத்தான் இருந்துச்சு. நடக்குற காரியமா?//

ஹா ஹா ஹா!
நவக்கிரகங்களே எலிப்டிக்கல் ரிங்-குல தான் ஒவ்வொன்னும் சுத்துதுகள்!
இதுல ரிங்-ரோடு போட்டுச் சுத்தினா என்னவாம்? :)

//கொஞ்சம் செல்வந்தர்கள் போல் இருந்த இருவரைக் கூட்டிவந்து எல்லாருக்கும் முன்னாலே அந்தக் கம்பித் தடுப்புக்கும் முன்னாலே உக்காரவச்சார் ஒருத்தர்.

நூறா இருக்கும். போகட்டும்//

:))
டீச்சர் அப்பப்ப ஒத்தை வரில ஒலகத்தையே அளந்துடறாங்க! :)

said...

//முத்துலெட்சுமி-கயல்விழி said...
எனக்கு தெரிஞ்சதே நீலக்கலர் சாமி..
:)//

முத்தக்கா, அப்ப என்ன, எங்க டீச்சருக்கு ஞானக் கண் இல்லைங்கறீங்களா? :)
உங்களுக்குத் தெரிஞ்ச நீலக்கலர், முன் வரிசை மாமியின் நீலப் பட்டுப் புடைவை-ல உண்டான ஒளிச் சிதறலாக்கும்! :))

said...

டீச்சர், பை தி வே...
ராகு பகவான் மேல் பட்டு, பால் நீல நிறம் காட்டுதல் என்பது உண்மை தான்!

ராகுவின் கற்சிலை நீலகாந்தக் கல் என்பதால் ஆனது! அதிகம் காப்பர் சல்பேட் படிமங்கள் உள்ள ஒரு வகைக் கற்கள் அவை! Bluestone என்பார்கள்!

அதன் மேல் பால் ஊற்றும் போது, கல்லின் நிறத்தன்மையால், பாலில் ஒரு மெல்லிய நீல நிற Shade கிடைக்கும்! ரொம்ப கிட்டக்க இருந்து பார்த்தால் தான் தெரியும்!

தயிர், மோர் ஊற்றினாலும் இதே தான் :))
வெள்ளையா ஊத்தணும்! அம்புட்டு தான்!

ஆனால் பாலே நீல நிறமா ஆயிடாது! கல்லின் மீது ஓடும் வரைக்கும் தான் அந்த நீல நிறம் காட்டும்! அஷ்டே!

ராகு பகவான் நாக உருவம் என்பதாலும், விஷம் நீல நிறம் என்பதாலும், இப்படி ஒரு உருவ அமைப்பை முன்னோர்கள் பண்ணி வச்சாங்க! ஆனா பக்தி-ங்கிற பேர்ல இன்னிக்கி அதை மேஜிக் ஷோ கணக்கா ஆக்கி வச்சிட்டோம்!

பழனி ஆண்டவர் சிலையைப் பண்ணாப் போலே, இதையும் நீல நிற மேஜிக்-ன்னு வியாபாரம் ஆக்கி, ஷோ காட்டியே கரைக்காமல் இருந்தாச் சரி! :((

said...

வாங்க ஸ்ரீவத்ஸ்.

//Vanakkam Teacher

Romba nalladhu ella parigaaramum panittu vandheengala ? :P//

உங்க பின்னூட்டத்தில் தனிப்பட்ட முகவரி & விஷயங்கள் இருந்ததால் இப்போதைக்கு வெளியிடலை.

பரிகாரம் ஒன்னும் செய்யலை.

நான் போனதே ஒரு பரிகாரமுன்னு வச்சுக்கலாமுல்லே:-)))

said...

வாங்க தமிழன் -கறுப்பி.

30,31.32 நீங்கதான்.
நிதானமாத்தான் படிங்க. எங்கெ போயிறப்போகுது பதிவு?

ஊர் நினைவுதான் ரொம்பப் பொல்லாததுப்பா...... மனுசனை மேலே சிந்திக்க விடாது.
(ஆனால்...ஊர்லே எல்லாரும் மாறிட்டாங்க...நாம்தான் ஆத்துலே ஒருகால் சேத்துலே ஒரு கால்...)

said...

வாங்க தாமரை.

வாத்தியார் இல்லேன்னா டீச்சரா? :-))))

said...

வாங்க தீப்பெட்டி.

ஆமாங்க. என்னாலும்தான் நம்ப முடியலை. பார்த்தவங்களுக்கெல்லாம் 55, 46, 53ன்னு எல்லாம் சொல்லிக்கிட்டு இருந்தாங்க. வயசே தெரியலை பாருங்க.

பேசாம அடுத்த ஜென்மத்தில் பூனைக்குப் பதிலா யானையாப் பொறக்கலாமான்னு யோசனை வந்துருக்கு:-)

said...

அருவை பாஸ்கர்.

விடாமல் 'படிக்கறதே' மகிழ்ச்சிப்பா.

said...

வாங்க கொத்ஸ்.

சர்ச்சையைக் கிளப்பறதிலே உங்களை வெல்ல முடியுமா?

(வகுப்பு)தலைவனின் குணங்களில் இதுவும் 'அடக்கம்':-)

said...

வாங்க மெனெக்கெட்டு.

பரோட்டா, சப்பாத்திக்கு மாவெல்லாம் ரெடியா இருக்காம். சுட்டுத்தரத்தான் ஆள் இல்லையாம். பேசாம நானே போய் செஞ்சுக்கவான்னு கேட்டுருக்கலாம் இல்லை?

உங்க ப்ரொஃபைல் படம் பிரமாதம். அப்படியே எங்க Boony முகம்!

said...

வாங்க விஜய்.

ஆஹா.... இட்லி & தோசைக்கு இப்படி ஒரு ரகஸியம் இருக்கா!!!!!!

அப்போ.... தோசை இருக்குன்னாவது அவர் சொல்லி இருக்கலாம்.......
அடுப்புப் பத்தவைக்கும் ஆள் வரலை போல:-)

said...

வாங்க ஜீரா.

தொடர்பதிவு ஐடியா சூப்பர்:-))))

கோயில் பிரஸாதமுன்னு தரும் தீர்த்தம்கூட வாயில் போட்டுக்கப் பயம்தான் எனக்கு. பயபக்தியா வாங்கித் தலையில் தெளிச்சுக்குவேன்.

உங்க கோயிலில் படம் எடுக்கவிடணும் என்ற பதிவுக்கு 'அப்பவே' ஆதரவு தந்துட்டோமுல்லே!!!

பால் நீலமாகுதுன்னு முத்துக்கயலு சாதிக்கிறாங்களேப்பா.....

said...

வாங்க உண்மைத் தமிழன்.

எல்லாம் கிரகக்கோளாறுதான்......

அப்படித்தான் சொல்லிக்கிறாங்க.

கிடைக்குற நேரமும், கொடுக்கிற நேரமும், வாங்கிக்கும் நேரமும் வந்தால் அதை யாராலும் தடுத்து நிறுத்தமுடியாதாம்.

எல்லாத்தையும் வேறு எதன்மேலேயாவது போட்டுட்டால்....மனசு நிம்மதி ஆயிருது பாருங்களேன்!!!!

said...

வாங்க கே ஆர் எஸ்.

ராகுவின் பின்னால் ஒரு ஒளிவிளக்கு வச்சால் போதாதா? நீலநிறம் டால் அடிக்காது?

பிரசாதமாக் கையில் ஊத்துன பாலில் லேசா ஒரு நீலம்(விஷமா? இல்லே விஷமமா?)இருந்துச்சு. வழக்கம்போல் அதுவும் என் தலையில்(ஷாம்புதான் இருக்கே என்ற தைரியம்)

கயலுக்குத் தெரிஞ்சது, இந்த ஊனக்கண்ணுக்குத் தெரியலை(-:
தூரம் கூடுதலாப் போச்சு.

கடவுளே ஒரு மேஜிக், அவருக்காக இவுங்கெல்லாம் சேர்ந்து செய்வதும் மேஜிக். ஹூம்....

said...

//
நீலமா மாறுதான்னு உத்துப் பார்த்துக்கிட்டு இருந்தேன். என் ஓட்டைக் கண்ணுக்கு ஒன்னும் தெரியலை
//
மாறும் டீச்சர், ஆனா அத நூறு ரூபா குடுத்து முன்னாடி உக்காந்தாங்க இல்ல ரெண்டு பேரு அவங்களுக்கு தான் நல்லா தெரியும். நீலமா மாற அந்த கர்பகிரகத்தின் architecture தான் காரணம்னு நினைக்கிறேன். நான் பார்த்தே சில வருஷம் இருக்கும்

//
அன்னிக்கு முழுக்கத் திரும்பத்திரும்ப ஒரே இடம்வழியாப் பயணப்பட்டமாதிரியே இருந்துச்சு. ஒரு சர்ச்சையும், ஒரு மசூதியின் மினாராவையும் திரும்பத் திரும்பப் பார்த்துக்கிட்டே இருந்தோம்
//
ரொம்ப சரியா சொனீங்க. நவகிரக டூர் ரூட்டுல கும்பகோணத்துக்கு ரெண்டு மூணு டைம் backtrack பண்ண வேண்டியிருக்கும். கோபால் ஆசைப்பட்ட மாதிரி ஒரு சர்குலர் ரூட் கொஞ்சம் கிராமங்கள் வழியா போனா வரும். இந்த ரூட்டுலையும் கும்பகோணத்துக்கு ஒரு டைம் backtrack பண்ணனும்.

said...

வாங்க வாழவந்தான்.

அவ்ளோ கிட்டே எல்லாம் போகமுடியாது.
மேலும் 'காசு கொடுத்து சாமியைப் பார்க்காதே'ன்னு இங்கே நம்ம பதிவர் ஒருத்தர் மல்லுகட்டிக்கிட்டு இருக்கார்!
தேவையில்லாம இதெல்லாம் கூட நினைவுக்கு வந்து தொலைக்குது கோயிலுக்குள்ளே போகும்போது.

இங்கே அபிஷேகமுன்னு சொன்னதால் துணிஞ்சு டிக்கெட் எடுத்துட்டோம்:-)

பார்த்தவரை லாபம்தான்:-))

said...

அட எங்க ஊரை சுத்தி சுத்தி வந்த இந்த பதிவை எல்லாம் எப்படி நான் தவ்ற விட்டேன்! சரி ஏன் என் வீட்டுக்கு போகலை!நான் தானே (உதய) சூரியன் என்னை சுத்தி தானே எல்லா கெரகமும் இருக்கு! நம்ம வீட்டுக்கு வந்திருந்தா கிருஷ்ணா இல்லாட்டி அபி போன் பண்ணி சொன்னா போதுமே எல்லா கோவில்லயும் ராஜ உபசாரம் தானே! போங்க ரீச்சர்!

said...

வாங்க அபி அப்பா.

இந்தப் பயணத்துலேயும் மாயவரம் மிஸ்ஸிங்(-:

மயூரநாதர் எப்போக் கூப்புடுவாரோ?

சாமியைப் பார்க்கச் சிபாரிசு எதுக்குங்க?
அப்படி என்ன ஸ்பெஷல் நாங்க?

120 கோடியில் ரெண்டு.

ஆனாலும் உங்க வீட்டை விடறதா இல்லை அடுத்தமுறை!