Sunday, March 22, 2009

காதலர் தினத்தில் வானத்தில் பறந்தோம்.(2009 பயணம்: பகுதி 1)

அச்சுஅசலா இதேமாதிரிதான் நாங்களும் காதலர் தினத்தில் வானத்தில் பறந்தோம். நம்பணும். இல்லேன்னா மைனஸ் மார்க் 10:-)
இங்கே உள்ளூரில் கடைகண்ணிகளைத் தவிர இந்த 'விசேஷ நாளுக்கான' பரபரப்பு ஒன்னுமே இல்லை. எங்கூர் விமானநிலையமும் இதையெல்லாம் கண்டுக்கலை. ஏறக்குறைய இதை மறந்தே போயிட்டேன். மேகங்களுக்கு மேலே போனதும் , தேவர்கள் நடமாட்டம் தெரியுதான்னு (வழக்கம்போல்) பார்த்தேன். ஊஹூம். ஆனால் கடவுளின் காலடிகள் கண்ணில் பட்டுச்சு!!

வாமன அவதாரத்தில் விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையில் உலகை அளக்க நின்னபோது பூமியில் அழுந்திய பாதங்கள். ஐயோ..... லட்டு மாதிரியான விஷயம். பேசாம இதே கதையைக் கொஞ்சம் இன்னும் நல்லாச் சொல்லி ஒரு கோயில் மட்டும் கட்டிவிட்டேன்னு வையுங்க, நம்ம பரம்பரையே காலத்துக்கும் 'இருந்து' சுகிக்கலாம். ஆனா...... காலடிகள் தடம் 'ஆஸி'யாப் போயிருச்சேன்னு......... விட்டுற முடியுதா? ஒரே ஒரு க்ளிக். இவ்வளோ உயரத்தில் இருந்தே இத்தாம்பெருசாத் தெரியுதே.....கிட்டப் பார்த்தால் .....அஞ்சாறு ஏக்கர் இருக்குமோ என்னவோ!!!! சொக்கா....எனக்கில்லே(-:

எதாவது சினிமாப் பார்த்தாவது பொழுதை ஓட்டலாமுன்னு தமிழ்ப் படங்கள் லிஸ்ட்டுலே கண்ணை மேயவிட்டேன். We shall forge the weapon, தூம்தாம். போச்சுரா....... கேம்ஸ் செக்ஷனும் ஆதிகாலத்து சமாச்சாரம். மொத்தத்துலே எது பெஸ்ட்டுன்னு பார்த்தா ஃப்ளைட் பாத்:-)

சிங்கையில் இறங்குனதும்தான் காதலர்தினம் (மறுபடியும்) கவனத்துக்கு வந்துச்சு. ஹெர்ஷே சாக்லேட்டுகளால் அலங்காரம் செஞ்ச மிகப்பெரிய இதயம் மேற்கூரையில் இருந்து தொங்குது. அடுத்த ஃப்ளைட்க்கு ரெண்டு மணிநேரம் இடைவெளி இருக்கு. புதுசா நமக்காக மூணாவது டெர்மினல் கட்டுனபிறகு இப்பத்தான் முதல்முறையா வர்றேன். எப்படி இருக்குன்னு பார்த்துட்டு வரலாமுன்னு போனேன். ஒரே சொல்லில் சொல்லணுமுன்னா.... 'பிரமாண்டம்'
சென்னையில் காலு குத்தும்போது 'ராம்சேனா'வின் கண்ணில் பட்டால் தேவலை'ன்னு ஒரு எண்ணம் மனசின் மூலையில் இருந்துச்சு. சாஸ்த்திரப் பிரகாரம் ஐயர் வச்சு மந்திரம் சொல்லிக் கலியாணம் செஞ்சு வைப்பாங்களாமே!!! ஊஹூம்......ஆசை நிறைவேறலை. மங்களூர் போய் இறங்கி இருக்கணுமோ என்னவோ!

அண்ணனுக்கு 'செல்' அடிச்சு, 'வந்து இறங்கியாச்சு. நாங்களே டாக்ஸி புடிச்சுக்கிட்டு வீட்டுக்கு வந்துவோ'முன்னு சொன்னோம். அதிசயமா பதினைஞ்சே நிமிசத்துலே நிலையத்தை விட்டு வெளியில் வந்தா........கம்பித் தடுப்புக்கு அப்பால் அண்ணனும் அண்ணியும். கதைகள் பேசி 'உண்டு, உறங்கி' மறுநாள் மலர்வனம், அலைகள், காற்றுவெளி, ஒலிக்கும் கணங்கள், நாச்சியார்களுடனும் மேற்படியினரின் ரங்கூஸ்களுடனும் சரவணபவனில் பகலுணவு. ஏறக்கொறைய எங்களைத் தூக்கி வெளியில் போடலாமான்னு சூப்பர்வைஸர் நினைச்ச தருணத்தில் மதிப்பாக நாங்களே கிளம்பினோம். வெய்யில் மண்டையைப் பிளக்குது. மலர்வனம் கொஞ்சம்கூட அசராமல் 'பீச்சுக்குப் போகலாமு'ன்னு சொன்னதைக்கேட்டு, கோபால் நடுங்கிட்டார். அடுத்த ஸ்டாப் எல்லோருமா நாச்சியார் வீட்டுக்குப் படையெடுத்தோம். அவுங்க வீட்டுத் தோட்டம் சூப்பரோ சூப்பர். தோட்டத்தில் நான்!!
ரங்கூஸ்கள் தனி மாநாடு போட்டுக் கடைசியில் ஒருவருக்கொருவர் உறவா ஆகிட்டாங்க. கல்லூரி, தொழில் இப்படி ஒரு ஏதோ ஒரு புள்ளியில் அப்படி ஒரு இணைப்பு. அதகளப்படுத்திட்டுத்தான் கிளம்பினோமுன்னு வையுங்க.
ரவிவர்மாவை அப்படியே முந்தாணையில் முடிஞ்சுக்கலாமாம். மெயில் அனுப்பி வேணுமான்னு கேட்டுருந்தாங்க. நேரில் வந்து பார்த்துட்டுச் சொல்றேன்னு பதில் அனுப்பினேன். கின்னஸ் புத்தகத்தில் கூட விவரம் வந்துச்சாம். சீச்சீ..... இந்தப் புடவை ரொம்பவே விலை மலிவா இருக்கு,வேணாமுன்னு போய்ச் சொல்லிட்டு வந்தேன். (39,31,627.00 in Indian rupees only)

தி.நகரில் மற்ற கடைகள் எல்லாம் அப்படியே இருக்கான்னு ஒரு நடை போய்ப் பார்த்துட்டுக் கொஞ்சம் துணிகள் எடுத்துத் தைக்கக் கொடுத்துட்டு, பனகல்பார்க் மேம்பாலத்தைப் பார்த்துட்டு வந்தோம். போக்குவரத்துக்கு வசதியா இருக்கும் அதே சமயம், நட்டநடுவில் நந்திபோல ...... சரி. இருந்துட்டுப்போகட்டும். பார்க்கிங் செய்யத் தோதா இருக்கே. ( இவ ஒருத்தி...கட்டுன பாலத்துக்குப் பழுது சொல்ல வந்துட்டா)
எங்கெங்கு காணினும் பாலங்கள். அதுலே இதுவும் ஒன்னு


பெண்கள் வெட்டிக் கதை பேசுவாங்கன்னு சொல்லும் சொல்லைப் பொய்யாக்கியப் பூக்காரம்மா.


ரதிமீனாவில் கும்பகோணத்துக்குப் பயணம். வழி எங்கும் வயல், சாலை என்ற பாகுபாடில்லாமல் பல வண்ணங்களில் பூக்களான பூக்கள். எமனின் வடிவம் என்ற உண்மையை அறியாமல் அவைகளை ஆர்வமாய்த் தின்னும் கோ மாதாக்களும் கோ பிதாக்களும். மனசு கலங்கித்தான் போச்சு. இதுக்கு ஒரு விடிவே கிடையாதா?

அரியலூர் பாலம். காத்திருப்பு கூடுதல். கடந்தோம். பாலக்கரையில் இறங்கிடுங்கோ என்று 'உத்தரவாகி' இருந்துச்சு. அது இந்தப் பாலம் இல்லையாம். நகர்ப்பூங்காவுக்கு அருகில் இருக்கும் பாலமாம். கார் வந்து காத்துக்கிட்டு இருந்தது. போய்ச் சேர்ந்த இடம் காலங்களில் பின்னோக்கிய பயணம். வீட்டுவாசலில் அழகிய திண்ணைகள். பன்னீர், சந்தனம், குங்குமம், மலர்மாலைகள் தாம்பாளத்தில். 'தமிழரின் உடைகள்' அணிந்தவர்களின் வரவேற்பு. உள்ளே கூடத்தில் நான்கு விசாலமான திண்ணைகள். பவானி ஜமுக்காள விரிப்பு. பாதசேவை செய்யும் இளைஞர்களைப் பார்த்து மனசில் ஒரு பரிதாபம் தோன்றியதென்னவோ நிஜம். போகட்டும்...... என் மகன் வயசுதான் இருக்கும். ஆவி பிடிச்ச ஈரத்துணியால் துடைத்துவிட்டு, ஆயுர்வேத மூலிகை எண்ணெய் தேய்ச்சு பாதங்களை நன்றாக மசாஜ் செஞ்சு விரல்களில் சொடக்கு எடுத்து உருவிவிட்டபோது அலுப்பு குறைஞ்சு, ஒருவித புத்துணர்ச்சி.
வீட்டை நோக்கிப் போனோம். இடப்புறம் பெரிய திண்ணையில் ஒரு மும்முக(வி)நாயகர். அடுத்தச் சின்னத் திண்ணையின் சுவரில்........



ஐயோ...... இது என்ன விபரீதம்!!!!!!

காந்தியை.....சுட்டுட்டாங்களா?????????

தொடரும்:-)))

69 comments:

said...

ம்ம்ம்ம்...நான் எத்தனையாவதுன்னு தெரியல!!

டீச்சர் ட்ரெயலர் எல்லாம் நன்றாக உள்ளது. ;)

said...

ஆஹா .. இப்பதான் ஆரம்பமாகுதா...

வாங்க ... வாங்க ...

said...

காதலர்தினம் கொண்டாடியாச்சா?
ஏன் இப்படி அவசரமா எழுதுறீங்க?
கோபால் ஒண்ணும் உங்களை முந்திகிட்டு பதிவு போட்டுடமாட்டார்!
நிதானமா எழுதுங்க......

said...

வந்துட்டீங்களா ரீச்சர்! பயணமெல்லாம் சுகமாக இருந்ததா??!!! அங்க பதிவுபோட முடியலை. இப்ப நான் தான் முதல் பெஞ்சு!! அமக்களமா போட்டோஸ் போட்டு இருக்கீங்க. எனக்கு கும்மோணத்து கூட்டமும் பிடிச்சிருக்கு.

said...

உங்க பதிவுக்கு வந்துட்டேன் டீச்சர்ன்னு சொல்லிக்கிறேன்!

said...

சீன் 1

கட்

சீன் 2

கட்

சீன் 3

கட்

இப்போ இண்டர்வெல்.

என்னாது இது? எடிட்டருக்கு சம்பள பாக்கியா? இப்படி வெட்டித்தள்ளிட்டாரு?

said...

//தோட்டத்தில் "நான்"//

இதுதான் "உங்க" டச்:)!

said...

ஆரம்பாகிடுச்சா.. ம். கொஞ்சம் வேகம் தான் இருந்தாலும்..நல்லது..

என்ன காந்தி சுடப்பட்டாரா.. ஹே ராம்.. ம்...

said...

பொறுமையாக எழுதுங்க அம்மா

said...

நியூஸிலாந்தில் இருந்து இத்தனை சீக்கிரமாவா ஊர்களை கடக்க முடியும்..கொஞ்சம் ஸ்லோவா போங்க.. பாருங்க..ஓடி வந்து மூச்சு வாங்குது.

said...

ம்மாட்டிக் கிட்டீங்களா.

துளசீன்னா
நீளமா பதிவு இருக்கணும். இப்ப்படியா பறக்கறது. ஒத்துக்கறேன் ...நிறையா ஏழுதணும்.அது ஒண்ணும் உங்களுக்குப் புதுசு இல்லயே.
சரி காது அடைப்பு போனதூம் நல்லா நிறைய எழுதுங்க::))0000))

said...

ஆகா....வெல்கம் பேக் டீச்சர். தாக்குதல் ஆரம்பமாகட்டும்

கடைசி மேட்டர் சூப்பர்

said...

நான் வகுப்பில் சேர்ந்தாச்சு..அடுத்த கிளாஸ் எப்ப டீச்சர்.

said...

வாங்க கோபி.

நீங்க ஒன்னாவது:-)))))

said...

வாங்க தருமி.

முன்னூறு போடப்போகும் மூத்த பதிவரே,
வருக வருக.

said...

வாங்க சிஜி.

கோபாலுக்குக் கலப்பை பிடிக்கச் சொல்லிக் கொடுத்துட்டேன். அந்த பயம்தான் இப்படி.......

ஹிஹி

said...

வாங்க இலா.

பயணம் நல்லாவே அமைஞ்சது. எதிர்பார்ப்பு ஒன்னும் இல்லாமல் போனேன்.

எல்லாரும் கடைசி பெஞ்சுக்குப் போட்டி. உங்களுக்கான முதல் பெஞ்சு ஃப்ரீதான்:-)))

said...

வாங்க நிஜமா நல்லவரே.

பதிவுக்கு வந்தால் மட்டும் போதாது. படிக்கணும் ஆமா. இது பரிட்சைக்கு வரும் பகுதி. சொல்லிட்டேன்.

said...

வாங்க கொத்ஸ்.

லீடரைக் காணோமே பார்த்தேன்.

சென்னையைப் பற்றிச் சொல்லணுமுன்னா......

கூட்டம் அழுக்கு, குப்பைன்னு சொல்லத்தானே வேணும். (நம்ம மக்க்ள்ஸ் கிட்டே) இடிபடவேணாமுன்னு தாண்டிப் போயிட்டேன்.

said...

வாங்க ராமலக்ஷ்மி.

டச் னு சொல்லி என் மனசை டச் பண்ணிப்புட்டீங்க:-))))

said...

வாங்க கயலு.

ஆமாம்ப்பா.... சுட்டுட்டாங்க. ஆனா நீங்க அப்போ பொறந்துருக்க வாய்ப்பில்லே..... அதான் தெரியாமப்போயிருச்சு(-:

said...

வாங்க காவேரி கணேஷ்.

புதியவரா இருக்கீங்க போல?

நல்வரவு.

உ.தமிழனுடன் போட்டி வேணாமுன்னு பார்க்கிறேன்:-)

said...

வாங்க தமிழ் பிரியன்.

விமானம் இப்பெல்லாம் கொஞ்சம் வேகமாத்தான் போகுது. க்ரௌண்ட் ஸ்பீடு 1058 கிலோமீட்டராம்.

said...

வாங்க வல்லி.

போதும் போதுமுன்னு சொல்லி நீங்கெல்லாம் அலறும்வரை......
விடப்போறதில்லை:-))))

said...

வாங்க நான் ஆதவன்.

கடைசி மேட்டர்....நானே ஷாக் ஆகிட்டேன் அன்னிக்கு!!!!!

said...

வாங்க தாமரை.

புதுமுகமா? நல்வரவு.

வாரம் 3 பதிவுகள். திங்கள், புதன் & வெள்ளி.

மறக்காமல் வந்துருவீங்கதானே?

said...

சிவஞானம் ஜீ சொன்ன மாதிரி தான் எனக்கும் தோனியது.இருக்கட்டும் இது பாகம் 1 தானே.

said...

Hello mam,

I didnot understand some of them, like the part you feel for the Koomadha and kopidha.. edhukku feel pannanum, avangalukku enna nalla dhaaney erukaanga, :P

sorry missed seeing you in singapore, next time for sure :)

said...

ரீச்சர்..

இதென்ன அநியாயம்..?!

ஏக் தம்முல கண்டம் விட்டு கண்டம் தாண்டி வந்துட்டீங்க..!

நானா இருந்த அந்த வாமன அவதாரத்தையே 15 பக்கம் எழுதியிருப்பேன்..

கொஞ்சம் தயவு பண்ணி.. விரிவா எழுதுங்க ரீச்சர்..!

said...

//ரவிவர்மாவை அப்படியே முந்தாணையில் முடிஞ்சுக்கலாமாம். மெயில் அனுப்பி வேணுமான்னு கேட்டுருந்தாங்க. நேரில் வந்து பார்த்துட்டுச் சொல்றேன்னு பதில் அனுப்பினேன். கின்னஸ் புத்தகத்தில் கூட விவரம் வந்துச்சாம். சீச்சீ..... இந்தப் புடவை ரொம்பவே விலை மலிவா இருக்கு,வேணாமுன்னு போய்ச் சொல்லிட்டு வந்தேன். (39,31,627.00 in Indian rupees only)//

ரீச்சர்..

இது எந்தக் கடையில வைச்சிருக்காங்க.. அதைச் சொல்லவே இல்லையே..!?

said...

//மலர்வனம், அலைகள், காற்றுவெளி, ஒலிக்கும் கணங்கள், நாச்சியார்களுடனும் மேற்படியினரின் ரங்கூஸ்களுடனும் சரவணபவனில் பகலுணவு.//

புது பார்ட்டிக யாருக்கும் சத்தியமா இது புரியப் போறதில்லை..

ரீச்சர்.. எப்ப இருந்து நீங்க பி.ந.வீ.த்துக்கு டீச்சரானீங்க..!

said...

டீச்சர், இரண்டு வருத்தங்கள்:

1. பதிவு கொஞ்சமும் உங்கள் நடையில் இல்லவே இல்லை :(
2. சென்னைக்கு வந்தும் எங்களை சந்திக்காமல் சென்றது. ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் ஒரு பதிவர் சந்திப்பு ஏற்பாடு செய்திருப்போமே!! :((((

said...

வாங்க குமார்.

வந்தவுடன் சென்னையில் இருந்தது ரெண்டே நாட்கள்தான். அதுலே ஒரு நாள் பெண்பதிவர்களுடனான சந்திப்பு. அதால்தான் ஒன்னும் விரிவா எழுத முடியலை.

உள்நாட்டுலேயே ஒரு சின்னப்பயணம் முடிஞ்சு சென்னைக்கு வந்தபிறகு நிறைய சம்பவங்கள் இருக்கு. எழுதுவேன்:-)

said...

வாங்க ஸ்ரீவத்ஸ்.

அடுத்தமுறை சந்திச்சால் ஆச்சு:-)

உங்களுக்கு விளக்கம் தனிப் பதிவா இப்போ போட்டுருக்கேன்.

தமிழ்மணத்தில் இணைச்சாச்சு. ஆனா அது இன்னும் காமிக்கலை(-:

said...

வாங்க உண்மைத் தமிழன்.

கண்டம் விட்டுக் கண்டம் நானும் ஒரே நாளில் வந்துட்டேன். அதுதான் பதிவிலும் வந்துருச்சு:-)

புடவையைப் பற்றி மேலதிகத் தகவல் சொல்ல ஒரு புதுப்பதிவே போட்டுருக்கேன்:-)

புதியவர்களுக்குப் புரியாதுன்றது ஒரு நல்ல பாய்ண்ட். கேட்டதுக்கு நன்றி.


விளக்கமும் போட்டுருக்கு அந்தப் பதிவில்.

said...

வாங்க வெண்பூ.

நடை நடக்கலையேப்பா. ஓட்டமா ஓடிட்டேன்(-:

அடுத்தமுறை வரவை அறிவிக்கிறேன். இந்த முறை நேரம் வாகாய் அமையலை.

said...

தமிழ்மணம் ஏற்க மறுத்த(????) பதிவின் சுட்டி

http://thulasidhalam.blogspot.com/2009/03/blog-post_23.html

said...

யக்கா சென்னை வந்துட்டு என்னைப் பார்க்காமல் போன உங்கள இன்னா பண்ணலாம்????

உங்க கூட டூ...

:((

said...

பின்னூட்டம் போட்டுட்டு கவலைப்பட்டேன், ஏன் டீச்சருக்கே ஐடியா கொடுக்கும் குருஸ்வாமியா ஆயிட்டோம்னு....
பரவாயில்லே....பலர் என்னை வழிமொழிந்திருப்பதைப் பார்க்கத்
திருப்தியா இருக்கு!

said...

வணக்கம் அம்மா.. நல்லா இருகிங்களா?....

said...

வாங்கோ டீச்சர்..நல்லா இருக்கீங்களா? கோபால் அண்ணா எப்படியிருக்கிறார் ? அவர் அந்தப் பட்டுப்புடவை பார்த்து ஏதும் சொல்லலியா? பயணம் நல்லபடியா முடிஞ்சுதா? மாணவர்களுக்கு என்ன வாங்கிட்டு வந்தீங்க? :)

அடுத்த பகுதியை சீக்கிரம் போடுங்க..காத்திட்டிருக்கோம் :)

said...

ரீச்சர்..

விரைவான நடவடிக்கைக்கு எனது இதயங்கனிந்த நன்றி..!

அங்கிட்டும் பின்னூட்டம் போட்டாச்சு..!

said...

//ரீச்சர்..

இது எந்தக் கடையில வைச்சிருக்காங்க.. அதைச் சொல்லவே இல்லையே..!?//

எதுக்கு உண்மை தமிழன் சார், தங்கமணிய அந்த பக்கம் கூட்டின்னு போவாம இருக்கவா? :P

said...

டீச்சர்,

சென்னைல இவ்ளோ பெரிய சந்திப்பா? ரொம்ப பொறாமையா இருக்கே. ஒரு மாசம் லேட்டா வந்து இருக்க கூடாதா? ம்ம்...ம்..

said...

நல்லா இன்டெரஸ்டிங்கா எழுதிருக்கீங்க...
அன்புடன் அருணா

said...

சென்னை வந்தவுடன் எனக்கு ஏன் சொல்லலை? நானும் வல்லி வீட்டுக்கு வந்திருப்பேனல்லோ?

இது மாதிரிப் பதிவுதான் படிக்க இதமா, சுகமாயிருக்கு. அதாவது ஷார்ட் அண்ட் ஸ்வீட்!!!

said...

கோபால் காதலர் தினத்தில் உங்களை கண்டுகிட்டாரா?

Anonymous said...

:)

said...

அன்பின் துளசி

அருமையான ஜெட் வேகத் துவக்கம் - நல்லா இருக்கு - வழக்கமான விரிவான பதிவா இல்ல - எல்லோரும் சொல்லிட்டாங்க

சரி வாமன அவதாரம் - விரிவா எழுதி இருக்கலாம்

காதலர் தினம் சப்புன்னு இருக்கு

முன்னாலே சொல்லி இருந்தா ராம சேனை அரேஞ் பண்ணி இருக்கலாமே - ஆசைப்பட்டதெ நிறைவேற்றி இருக்கலாமே

மகளிர் அணி யா - பாவம் கோவாலு -

சென்னை சில்க்ஸ் - சூப்பர்

கோமாதா கோபிதா - துளசி டச்

தோட்டத்துலே நான் - சூப்பர்

கலப்பை ஒழுங்காப் பிடிச்சி ஆழ உழச் சொல்லுங்க - ஆமா


கும்மோணத்துக் கதய தனி மடல்லே சொல்லுங்க - நானும் போய்ப் பாக்கணும்

வர்ட்டா -

said...

அக்கா!!!
சென்னைக்கு வந்து நம்ம வீட்டுக்கு வராமல் போயிட்டீங்களே? அது போகட்டும் நம்ம ஊரு ரிசார்ட்டுக்கும் போயிருக்கிங்க, அப்போ சொல்லி இருக்கலாம்.உங்களுக்கு ராஜ மரியாதை னடந்து இருக்கும். பாடத்தை ஆரம்பிச்சாச்சு... ஆரம்பமே களை கட்டுதே!!!!

said...

வாங்க அப்துல்லா.

சந்திப்புக்குன்னு சரியான வார இறுதிகள் அமையாமல் போச்சு. அதான்.....

அடுத்தமுறை சந்திக்கலாம்.

said...

சிஜி,

மனத்திருப்திதான் வாழ்க்கையில் ரொம்ப முக்கியம்.

சதாஸ்து!!!!

said...

வாங்க ஞானசேகரம்.

நலமே! நலமா?

விசாரிப்புக்கு நன்றி

said...

ஞானசேகரன்,

ரம்முன்னு அடிச்சுட்டேன்.

மாப்பு.

ஞானசேகரன்
ஞானசேகரன்
ஞானசேகரன்
ஞானசேகரன்
ஞானசேகரன்

ரன் ரன் ரன்

said...

வாங்க ரிஷான்.

கோபால் அண்ணா நலம். அந்தப் புடவை வாங்கிதரேன்னு சொல்லி பிடிவாதம் பிடிக்கிறாருன்னா பாருங்க.

நாந்தான் வேணாமுன்னு சொல்லிச் சமாதானப்படுத்தப் பட்டப்பாடு இருக்கே.........:-)))ஐயோ...

said...

விஜய்,

போன முறை இன்னும் நிறையப்பேரைச் சந்திக்க முடிஞ்சது.

அடுத்த முறை நீங்களும் அங்கே வரும்போது முயற்சிக்கலாம்:-)

said...

வாங்க அன்புடன் அருணா.

நன்றிப்பா.

said...

வாங்க நானானி.

உங்க தொலைபேசி எண்களையெல்லாம் எழுதிவச்சுக்கிட்டத் தாளைத் தேடியே நாட்கள் விரயமாகிப்போச்சுப்பா. வீட்டுலே மட்டுமா பெட்டியிலும் கூட ஏதும் வச்ச இடத்துலே இருக்கறதில்லை(-:

அவசியமானது எப்படியோ காணாமல் போயிருது(-:

said...

வாங்க தூயா,
வருகைக்கு நன்றிப்பா.

said...

வாங்க சீனா.

கும்மோணத்துக் கதை(??) பதிவாவே வருது:-))))

எல்லாத்துக்கும் நன்றி:-)

said...

வாங்க ஸ்ரீவித்யா.

வா வா ன்னா எப்படிப்பா வர்றது? எங்கேன்னு வர்றது?

அடுத்தமுறை முன்னாலேயே தகவல் சொல்லிடறேன்.

ரெட் கார்பெட் இல்லேன்னா கோச்சுக்குவேன் ஆமா:-)))

said...

ஆனா நான் உங்க தொலைபேசி எண்ணை சமத்தா என் போன் டைரியில் குறிச்சு வச்சிருக்கேனே!!
அவசியமானதென்று.

said...

நானானி,

கவனமா இருக்கேன்னு கணினியில் குறிச்சுவச்சுக்கிட்டுத் தேவையானப்போ கிடைக்காம அவஸ்தைப்படுவதே வாடிக்கையாப் போச்சு.

டைரியை பயன்படுத்த ஆரம்பிக்கணும் இனி.

said...

//
அரியலூர் பாலம். காத்திருப்பு கூடுதல். கடந்தோம்
//
ஐயோ டீச்சர் அது அரியலூர் பாலம் இல்ல, அணைகரை(lower anaicut) கொள்ளிடம் பாலம். அணைகரை பாலம் இப்ப தான் பழுதடைந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ட்ராக்டர் வெச்சு கார் போன்ற சிறிய வாகனங்களை கொள்ளிடத்துல இழுத்துட்டு போய் அக்கறைல விடுறாங்களாம், நேற்றிரவு ஊரில் இருந்தது வந்த உறவினர் தந்த தகவல்.
//
பாலக்கரையில் இறங்கிடுங்கோ என்று 'உத்தரவாகி' இருந்துச்சு. அது இந்தப் பாலம் இல்லையாம். நகர்ப்பூங்காவுக்கு அருகில் இருக்கும் பாலமாம். கார் வந்து காத்துக்கிட்டு இருந்தது
//
நகர பூங்காக்கு அருகில்னு சொல்றத விட பழைய மார்கட், அரசு ஆடவர் கல்லூரி, சங்கர மடம் இதன் அருகில் இருக்குன்னு சொல்லலாம். என்னடா இவளோ தெளிவா வழி சொல்லறான்னு யோசிக்காதீங்க, அது நான் பொறந்து வளந்த ஏரியா.
'கும்பகோணம் கூட்டம்' பதிவுல என் பின்னூட்டத்துக்கு பதில் தந்தபோதே ஊருக்கு போறேன்னு சொல்லிருக்க கூடாதா? கொஞ்சம் வழி, மற்ற தகவல் எல்லாம் சொல்லியிருப்பேனே! :-(

said...

வாங்க வாழவந்தான்.

அணைக்கரைப்பாலமா? அச்சச்சோ.... இருட்டுலே கண் தெரியலைப்பா!!!!


கும்மோணம் கூட்டமே அங்கே போனதால் கிடைச்சதுதானே. அப்ப எப்படி போறேன்னு சொல்ல முடியும்?

உள்ளூர்க்காரங்க ரவுசு தாங்க முடியலைப்பா:-)))))))))

said...

//
உள்ளூர்க்காரங்க ரவுசு தாங்க முடியலைப்பா:-)))))))))
//
நான் என்னபண்ணுறது? கும்பகோணம் குசும்பு குடவே பொறந்தது.
நீங்கதானே வேறொரு பின்னூட்டத்தில் உள்ளூர்காரங்க யாராவது தப்பு இருந்தா சொல்லுங்க திரித்திகறேன்னு சொன்னீங்க. அதான் வரலாற்றுல எங்க ஊரு பத்தி(வரலாற்றுல நம்ம பதிவெல்லாம் கூடவா!! அப்படீன்னு ஆச்சரியமா?) ஏதும் தப்பா வந்திரகூடாதில்ல அந்த அக்கறை தான் டீச்சர்.
எல்லாம் சரி ஆனா போகும் போது ஏன் அந்த பாலத்தை ஒடச்சுட்டு போயிடீங்க. இப்ப நான் எப்படி ஊருக்கு போறது?

said...

என்னங்க வாழவந்தான்,

என்னை வாழ விடமாட்டீங்க போல!

//எல்லாம் சரி ஆனா போகும் போது ஏன் அந்த பாலத்தை ஒடச்சுட்டு போயிடீங்க. இப்ப நான் எப்படி ஊருக்கு போறது?//

இதுக்கு ஒரு விசாரணைக் கமிஷன் வச்சாகணும்.

எப்ப என்னிக்கு எத்தனை மணிக்குப் பாலம் உடைஞ்சது?

நான் கடந்து போனது ஃபிப்ரவரி மாதம் 17 ஆம் தேதி மாலை 6.30க்கு.

said...

//
என்னை வாழ விடமாட்டீங்க போல!
//
ஐயையோ என்ன டீச்சர் இப்படி சொல்லீடீங்க!!:-(
நல்லபடியா வாழுங்க
(வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் -(தேர்தல் தந்த பலன் :-))

பாலம் இப்பதான் மார்ச் மாதம் உடைந்தது.
விசாரணை கமிஷன் எல்லாம் வேண்டாம். அதுல முறைகேடு நடக்கும் அப்பறம் அதுக்கு ஒரு கமிஷன்னு வளந்துகிட்டே போகும்.

said...

என்னங்க வாழவந்தான்,

//பாலம் இப்பதான் மார்ச் மாதம் உடைந்தது.//

இப்போதான் மனசு நிம்மதி ஆச்சு. எனக்குப்பின்னால் ஒரு மாசம் இருந்துருக்கு:-))))