Tuesday, March 24, 2009

ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே.....(2009 பயணம்: பகுதி 2)

"தலையைக் குனிஞ்சுக் கொஞ்சம் அடக்கத்தோடு உள்ளே போகணும்". இல்லேன்னா? மண்டை இடிதான். இந்தப் பூட்டைப் பாரேன், லைட் ஸ்விட்ச் பாருங்க. குறிப்பெழுத சிலேட்டுப் பலகையும் சிலேட்டுக் குச்சியும். குடி தண்ணி வச்சுக்க செம்புச் சொம்பும், லோட்டாவும். கொசுவலை மாட்டிக்கத் தோதா நாலு பக்கமும் உசரமாக் கடைஞ்ச கம்பம். கட்டில் கால் & தலை மாட்டுலே படங்களும் கண்ணாடியும்! ( இதுலே சரோஜாதேவி படம் வேற! இந்திய மக்கள் தொகை, அளவுக்கு மேலே பெருகிவழியும் காரணங்களில் இதுவும் ஒன்னோ?) அலமாரி, மேசை, நாற்காலி, தொலைபேசின்னு எல்லாமே 'அந்தக் காலத்து' வகை. பாத்ரூமில் கூடப் பித்தளை வாளி, தண்ணி மொண்டு ஊத்திக்க பித்தளை ஜோடுதவலை / ஜோடுதாலை(பெயர் சரியான்னு யாராவது சொல்லுங்கப்பா. மறந்துபோச்சு எனக்கு) மொத்தத்தில் நவீன சாதனங்கள்னு சொன்னால் சூழ்நிலைக்குப் பொருந்தாமல் அங்கே இருக்கும் டிவியும், சின்ன ஃப்ரிட்ஜும், ஏர்க்கண்டிஷனரும். பாத்ரூமில் இருக்கும் கீஸரும், வெஸ்ட்டர்ன் டாய்லெட்டும் இதில் சேர்த்தி (ஆனா இருந்துப்போகட்டும். அப்பாடா!!! வாட் அ ரிலீஃப்:-)

( இதுலே நடுவே இருக்கும் சுழலும் பேனலுக்கு ஒரு புறம் கண்ணாடி, ஒரு புறம் இயற்கைக் காட்சி)

காலையில் எழுந்து கிராமத்தை'' ஒரு சுற்று சுத்தினேன். கூரைமேல் சேவல். மான் குட்டிகள் உறக்கம் நீங்கி முழிச்சுப் பார்க்குதுகள். கோழி அடைக்கும் கூட்டினுள்ளே ஏகப்பட்ட இரைச்சல். வெள்ளைநிற கூஸ் வாத்து வெளியில் வரத் துடிக்குது. பசுக்கொட்டிலில் மாடுகள் தங்கள் மக்களுடன். அய்யனார் சிலைகள், ஏழுகுதிரைகள் பூட்டிய தேரில் சூரியன், புள்ளையாரை மனமுருக வணங்கும் மூஞ்சூறு, வீட்டு எண்களைத் தன்மீது வரைந்துகொண்டு நிற்கும் மைல்கற்கள், வரவேற்பறை வாசலையே கண்காணித்துக்கொண்டு நிற்கும் ஆண்டி முருகன், கொட்டகையில் நிற்கும் மாட்டுவண்டி, தகப்பனின் மடியில் இருந்து உபதேசம் செய்துகொண்டிருப்பவர் முன்னே திறந்தவெளி அரங்கம், அதுக்குண்டான மேடை, கற்றூண்கள் வரிசையாக நிற்கும் மண்டபம், மரத்தடிப் பிள்ளையார், கம்பீரமாக நிற்கும் யானை. ஹைய்யோ......


சின்னதா ஒரு அல்லிக்குளம். ஆஹா....ராத்திரி முழுசும் கேட்டுக்கிட்டு இருந்த தவளைச் சத்தம் இங்கே இருந்துதான் வந்துச்சா? நம்ம 'வீடு'வேற, தெருவின் ஆரம்பத்தில் இருக்கு. கார்னர் சைட்:-) ஜன்னல் வழியாப் பார்த்தால் திறந்தவெளி அரங்கம். கும்மோணத்துக் கொசுக்களுக்குப் பயந்து வலை அடிச்சு வச்சுருக்கு அங்கே. ரெண்டு வீடுதள்ளி ஒரு அருங்காட்சியகம்.
நேத்து ராத்திரி(?) வந்து இறங்குனதுமே தலைவலின்னு ஒரு காஃபி குடிக்க ரெஸ்டாரண்டுக்குப் போனோம். அங்கே நம்மைக் கவனிச்சுக்கிட்டவருக்கு நம்ம பாபுவின்( பூனா, சாரி மாமா மகன்)சாயல். மாமாவும் கும்மோணம்தான். ஒருவேளை ஊருக்கே ஒரு சாயலுன்னு இருக்கோ என்னவோ! இவர் பெயர் குமார். பலமான உபசரிப்பு. கும்மோணம் டிகிரிக் காப்பியின் சுவையே சுவை.ஆஹா..... இன்னும் நாலைஞ்சு வெள்ளைக்காரர்கள் வந்து தங்கி இருக்காங்க போல. அமைதியாத் தோசையைப் பிச்சுக்கிட்டு இருந்தாங்க.

டைனிங் ஹாலின் முகப்பில் வரவேற்க நிற்கும் தம்பதியரைக் கடந்து உள்ளே காலடி எடுத்துவச்சால்.....ரயில்கூஜா, வெந்நீர் பாய்லர், சேவை நாழி, கொழுக்கட்டை அச்சு. சின்னதா மரத்தேர். இந்தக் கூட்டத்தினிடையில் ஒரு அச்சு யந்திரம். இப்பப் புரிஞ்சுபோச்சு....... நம்ம திண்ணையில் இருக்கும் செய்தித்தாள் இதுலெதான் அச்சடிக்கப்பட்டிருக்குமோ? டைனிங் ஹாலை ஒட்டிய வெராந்தாவில் மூடு பல்லக்கு. இதில் 'நந்தினி' போவது மனதில் வந்துச்சு. கை ரிக்ஷா, ரெட்டை மாட்டு வில்வண்டி இத்யாதிகள். இதுகளுக்கிடையில் ஆளுயர அர்த்தநாரீஸ்வரர். ரெண்டுவகையான உலோகத்தில். நம்ம குமார்தான் நம்மைக்கூட்டிக்கிட்டுப்போய் ஒவ்வொன்னாகக் காமிச்சு விளக்கிக்கிட்டிருந்தார். அடுத்த ஒரு அறைக்கதவைத் திறந்தால் 'ஃபார்மலா பெரிய டைனிங் ஹால். கான்ஃப்ரன்ஸ் நடக்கும்போது பயன்படுத்துவாங்களாம். உள்நாட்டுலே இருக்கும் பெரிய நிறுவனங்கள் இந்தச் சாக்குலே ரெண்டு மூணு நாள் இங்கே வந்து தங்கிக் கூடிப்பேசுவாங்களாம். ஸர்.சி.வி.ராமனின் பெரிய படம் ஒன்னு வச்சுருந்தாங்க அங்கே.

அருங்காட்சியகம் பார்த்தீங்களான்னு கேட்டதும் ஆவலா எங்கே எங்கேன்னு பறந்தேன். உங்க வீட்டுக்கிட்டேதான்ன்னு சொல்லிக் கூட்டிப்போனார். 24 மணி நேரமும் திறந்துதான் இருக்குமாம். எந்தெந்த சினிமா இந்தக் கிராமத்தில் எடுத்தாங்க, அதுக்கு செட் எப்படி போட்டாங்கன்னு விவரிச்சுக்கிட்டே வந்தார்.

மூன்று பக்கமும் பெரிய கூடங்கள். நடுவில் முற்றம். எதிர்ச்சுவரில் சடைவிரிகுழலுடன் சிவன். ( அட! ஆமாம்....சினிமாக்களில் பார்த்திருக்கும் நினைவு. அர்ஜுன் நடிச்ச படம்?) நடுக்கூடத்தில் கலையழகோடு, வேலைப்பாடுகளுடன் மரச்சாமான்கள். படமெடுக்கும் பாம்பின் இருபக்கமும் கால்களைத் தொங்கப்போட்டுக்கொண்டு ஊஞ்சலாடும் குழந்தையைக் கற்பனை செஞ்சுக்க முடியுமா? முடியும்:-))))

அட! நம்ம பாரதியும் செல்லம்மாவும். இன்னொரு படத்தில் தீப்பெட்டி விளம்பரத்தில் யாருன்னு பாருங்க? நடிகைகள் விளம்பரத்தில் வருவது அப்பவே ஆரம்பிச்சுருச்சு!!

பாக்கியை நாளைப் பொழுது விடிஞ்சதும் பார்க்கலாமுன்னு 'வீட்டுக்கு' வந்துட்டோம். வந்த வேலையை முதல்லே பார்க்கலாம்.
வந்த வேலை என்னன்னா.... இங்கே கும்மோணத்தைச் சுற்றி இருக்கும் நவகிரகக் கோயில்களுக்கு போறதுதான். நேரா 'வரவேற்பு வீட்டுக்கு'ப்போய், கோயில் உலாவுக்கு என்ன மாதிரி வசதிகள் இருக்குன்னு விசாரிச்சோம். 'கார்த்திக்'ன்னு ஒரு இளைஞர். ஊட்டியாம் சொந்த ஊர். மூணுமாசமா இங்கே வேலை செய்யறாராம். கார் அவுங்களே ஏற்பாடு செஞ்சுருவாங்களாம்.

"என்ன வண்டி? இப்போ எங்களைக் கூப்பிட்டுவர கும்பகோணத்துக்கு அனுப்புன அம்பாஸிடரா?"

" ஆமாங்க. நல்லா வசதியான வண்டி அது"

" போச்சுரா. தேர் மேலே ஏறி உக்கார்ந்தாப்போல இருந்துச்சு. ஏ சி வேற இல்லை. ஏற்கெனவே அடிபட்ட முதுகு. லொங்குலொங்குன்னு இதுலே குதிச்சுக்கிட்டுப் பயணம் பண்ணாமாதிரிதான்..... ஊஹூம் இது சரிப்படாது. ஆமாம். இப்போ கூப்ட்டுவந்ததுக்கு எவ்வளோ காசு? "

கேட்டதும் மயக்கம் வராத குறை! 1200 ரூபாய். ஆறாரும் பன்னெண்டு கிலோ மீட்டருக்கு!!


தோழி ஒருத்தர் கொடுத்த தகவலின் படி 'செல்வி'க்குத் தொலைபேசினோம். நாங்க வருவோமுன்னு தோழி சொல்லிவச்சுருந்தாங்களாம். 'பரிகாரம்' எதாவது செய்யணுமான்னு கேட்டாங்க. 'அதெல்லாம் ஒன்னுமில்லைங்க. ச்சும்மாக் கோயில் போகணும் அவ்ளோதான்'. 'காலையில் ஏழரைக்கு வண்டி அனுப்பிடறேன். வினோத்னு ஒருத்தர் வருவார்'ன்னு சொல்லி நம்ம செல் நம்பரை வாங்கிக்கிட்டாங்க. கொஞ்ச நேரத்துலே அந்த வினோத், நம்மைக் கூப்பிட்டு உறுதிப்படுத்திக்கிட்டார். காலை 'ஏழரை.' நமக்கோ!!!


பொழுது எப்படா விடியுமுன்னு பார்த்துக்கிட்டே இருந்து, கிராமத்தைச் சுத்துனதுதான் இப்போ, இந்தக் காலை உலா. மூணாவது வீட்டுக்குப் போனேன்.
இன்னொரு முற்றத்தில் கிணறும், கூடத்து ஊஞ்சலும் இன்னபிற எளிய அலங்கார அமைப்புகளும், வீடுகளும்.......ஹூம்......... காலம் ரொம்பத்தான் மாறிப்போச்சு. நாகரிகம் என்ற பெயரில் எத்தனையோ அருமைகளை இழந்து நிக்கிறோம்(-:

சுற்றிலும் வாழை, தென்னை மரங்கள் அடர்ந்த தோப்புகள். மொத்தம் எட்டு ஏக்கராம். டெர்ரகோட்டாக் குதிரைகளும், காளைகளும், தீபஸ்தம்பமும், சிலைகளும் கொள்ளை அழகு. ராமாயணக் காட்சிகளுடன் இருந்த தூணில் பத்துத் தலை ராவணன், ஹனுமான், சீதையுடன் ராமலக்ஷ்மணர்கள்.

'வீடு' திரும்புனப்ப நம்ம வாசலில் தினமும் தண்ணீர் தெளித்துக் கோலமிடும் வசந்தா. நம்ம வீட்டுவாசலில் ஒரு நாகலிங்க மரம்கூட இருக்கு. அதுலே ப்ரவுண் நிறப் பந்துகளாத் தொங்குவது இதன் காய்களோ?சும்மாச் சொல்லக்கூடாது...... எல்லாம் பார்த்துப் பார்த்துதான் செஞ்சுருக்காங்க. ஆனா ஒரே 'ஒரு' ( சரி... சிலன்னு வச்சுகாலம்) விசயத்துல்லே கோட்டை விட்டுட்டாங்கப்பா.... இந்த சாவிக் கொத்தைப் பாருங்க. பிரிவினைக்குப் பின்னே இருக்கும் இந்தியா. இங்கே தீம் எல்லாம் சுதந்திரத்துக்கு முன்னாலே ஆச்சே!!!! அச்சச்சோ......

காலை உணவை முடிச்சுக்கிடலாமுன்னு போனால்..... அப்பத்தான் மாடு கறக்க ஆள் போயிருக்கு. இட்டிலி தோசைக்கு இப்பத்தான் அடுப்புப் பத்த வச்சுருக்காங்க. வெண்பொங்கல் தயாரா இருக்கு. அதை நீங்க சாப்பிட்டுக்கிட்டே இருங்க. பாலைக் காய்ச்சிடறோம். டிகாக்ஷன் இறங்கியாச்சு. காபி கலந்து தரேன்னு சொன்னார் சமையலறை நிர்வாகி.
வெண்பொங்கலில் மினுமினுக்கும் மிளகுக் கண்கள். பத்து மிளகு இருந்தால் பகைவனின் வீட்டிலும் சாப்புடலாம் என்ற பழமொழி தேவையில்லாமல் மனசுக்குள்ளே வந்துச்சு. விடறதில்லைன்னு நறுக் நறுக்குன்னு அந்த மிளகுகளை (வழக்கத்துக்கு மாறா) கடிச்சுத் தின்னேன். பிடிச்சது ஏழரை. வயித்துலே லேசா ஒரு எரிச்சல். 'அபகடம் சம்பவிக்குமோன்னு சம்சயம்'. வம்பே வேணாமுன்னுட்டு 'டயாஸ்டாப்' மாத்திரைகள் ரெண்டை முழுங்கிட்டு, வயித்துக்குப் பூட்டுப்போட்டேன்.

தொடரும்:-)))))

48 comments:

said...

ஆகா பயணம் நல்லா இருக்கு..உண்மையிலே நிஜ யானையோன்னு நினைச்சேன்

said...

நான் ரெண்டு பகுதியும் படிச்சிட்டு நாளைக்கு வரேன் டீச்சர்.

நசரேயன் பின்னூட்டம் படம் மட்டும் பாத்து போட்டது. அதனால அது செல்லாது

said...

இது குடந்தை-தஞ்சை சாலையில்
தாராசுரத்திற்கு மேற்கே உள்ள ரிஸார்ட்டா?

யானையும் யானையும்
படம் படு ஜோர்!

said...

//
குடுகுடுப்பை said...

நான் ரெண்டு பகுதியும் படிச்சிட்டு நாளைக்கு வரேன் டீச்சர்.

நசரேயன் பின்னூட்டம் படம் மட்டும் பாத்து போட்டது. அதனால அது செல்லாது
//
யோவ் படிச்சிட்டு தான் போட்டேன்.. டீச்சர் போட்டு கொடுத்து அடி வாங்க வச்சிருவீங்க போல

said...

அப்படியே தஞ்சை, மாயரம், கும்மொனத்தை கண் முன்னாலே கொண்டு வந்துடீங்க. பயணம் சிறக்க வாழ்த்துக்கள்,

நவக்ரகங்கள் அருள் பாலிக்க வாழ்த்துக்கள்.

குப்பன்_யாஹூ

said...

***நசரேயன் said...
உண்மையிலே நிஜ யானையோன்னு நினைச்சேன்

3/25/2009 9:10 AM ***

நானும்தான்.

பாவம் யானை! டீச்சர் இந்தப்பாடு படுத்துறாங்களேனு நெனச்சேன்! :-)))

said...

//காலையில் எழுந்து கிராமத்தை'' ஒரு சுற்று சுத்தினேன்//--//கம்பீரமாக நிற்கும் யானை. ஹைய்யோ......//

டீச்சர் , என்ன ஆச்சு உங்களுக்கு.

எங்கள மட்டும் அதே வகுப்புலே விட்டுட்டு
நீங்க வேற யாருக்கோ கிளாஸ் எடுத்துகிட்டு
இருக்கீங்க.

எப்பவுமே வகுப்புலே ஒரு பாடத்தை படிச்சசோம்னா அன்னபூர்ணாவுலே நல்ல டிபன் சாப்டு ஒரு காப்பு குடிச்ச திருப்தி கிடைக்கும்.

இப்போ என்னன்னா, தமிழ்நாடு எக்ஸ்பிரஸ்லே ஏறி எங்க ரயில் நிக்குதோ, அங்கங்க பிளாட்பாரத்திலே கிடைக்குறத சாப்புடறத மாதிரி இருக்கு.

சாப்புடவும்
முடியலே
சாப்புடாமே
இருக்கவும்
முடியலே.//ஆனந்தம்
ஆனந்தம்
ஆனந்தமே//

செம தம் பார்ட்டியா மாறிட்டீங்க.

said...

ம்ம்ம்..ஏற்கனவே எங்கையோ இந்த இடத்தை படிச்ச நினைப்பு மறந்துட்டேன்.

;)

said...

சிஜி சார் இந்தக் குசும்பு ஆகாது:)

அழகோ அழகு. துளசி அங்க இருக்க என்ன சார்ஜ் பண்ணாங்கப்பா.

ஏன்னா டாக்ஸிக்கே இத்தனை சார்ஜுனா பயமா இருக்கே!!
அருமையோ அருமை படங்கள்.சொல்லுற அழகு. ம்ம். இதுக்காகவே நீங்க நிறைய சுத்தணூம்னு வேண்டிக்கறேன்:)

said...

டீச்சர், நான் ரீடர்ல ரீடிக்கிட்டே இருக்கேனே! ரொம்ப நாள் உங்களை பாக்கலை ‍ எனவே முந்தைய பதிவுகளுக்கு ஆஜர் சொல்ல விட்டுப் போச்சு!

ஆமா, இந்த ரிசார்ட்டு பேரு என்ன? தனிமயில்லயாவது கிடைக்குமா? ஊரு போனா கட்டாயம் கும்மோணம் ட்ரிப் உண்டு....

பெருசு சார், தம் மட்டுமல்ல, ரம்மும் (போன பதிவில பின்னூட்டம் பாருங்க).

said...

அன்பின் துளசி

ஆகா ஆகா - கும்மொணத்துப் பயணம் சூப்பர் - இவ்ளோ விசயம் கும்மோணத்துலே இருக்கா - தெரியாமப் போச்ச்சே - ம்ம்ம்ம்ம்ம்

நல்லா ரசிச்சிருக்கீங்க - படம் சுட்டுத் தள்ளிட்டீங்க - யானைய என்னங்க பண்றீங்க - பாவம்ங்க அது - வுட்டுடுங்க

எழுதுங்க எழுதுங்க எழுதிகிட்டே இருங்க

said...

ஆறு ஆறு கிலோ மீட்டருக்கு ஏசி இல்லாத ஓட்டை அம்பாசிட்டருக்கு ரூ1200ன்னா, துளசி அங்க தங்கி சாப்பிடதற்கு எம்புட்டு பில்லு? திக்கு திக்குன்னு இருக்கு :-)

said...

Super teacher , eppo pongal sapadum pola erukku :)

GM dietnnu eppo eduthuttu erukken teacher adhanala next week saptukaren.

Correctdhaan, unjal veedum, thinnayum, thulasi madam(adhaan neenga dhaan) appuram kollaila pasu madu + vazha maramum - engappa kanavu apdi oru veedu kattanumnu - chennaila 800 squarefeetla oru chinna flat vaanga mudinjadhu - ana manasula vachurukken apdi oru veedu kattanumnu. Pakkalam

Ungey taste ellamey nalla erukku, andha teracotala panna thoon - chance ellai.

Endha edam peru enna ? Engey ammavum thambiyum innikku angey poi erukaanga - to go to temple.
Namma family ellam koil archagar dhaan - kombakonam uppliyappan koil kuda yaro sondha karanga dhaan pakkaranga. Nammadhan Computer thattitu erukkom :)

said...

பாத்தீங்களா உங்கள மாதிரி வெளிநாட்டுக்காரங்களுக்குத்தான் ஏத்த இடம்ன்னு நாங்க எட்டிக்கூடப் பாக்கல..நீங்களே படம் போட்டு சுத்திக்காட்டிருங்க.. :)
ஆமா வெலை எவ்வள்வு ன்னு சொல்லிருங்க.. ..

said...

இது என்ன இடம் டீச்சர்?

said...

டீச்சர்
( இதுலே சரோஜாதேவி படம் வேற..

வெஸ்ட்டர்ன் டாய்லெட்டும் இதில் சேர்த்தி (ஆனா இருந்துப்போகட்டும். அப்பாடா!!! வாட் அ ரிலீஃப்:-)

நடிகைகள் விளம்பரத்தில் வருவது அப்பவே ஆரம்பிச்சுருச்சு
..
'அபகடம் சம்பவிக்குமோன்னு சம்சயம்'. வம்பே வேணாமுன்னுட்டு 'டயாஸ்டாப்' மாத்திரைகள் ரெண்டை முழுங்கிட்டு, வயித்துக்குப் பூட்டுப்போட்டேன்..

மேற்கூறிய வரிகள் அத்தனையும் நான் ரசித்து வாசித்த இடங்கள்.
அழகாக அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.

said...

நல்லா இருக்கு டீச்சர் பயண அனுபவம்.

கும்மோணம் டிகிரிக் காப்பியின் சுவையே சுவை.ஆஹா.....
//

நானும் பீபெரி வாங்கி whole milk ல காபி போட்டு பார்க்கிறேன் சரியா வரமாட்டேங்குது.
ஸ்டார்பக்ஸ் multi region blend கொஞ்சம் நல்லா இருக்கு. ஆனா 5% சுவைதான் கு.டி.காப்பி முன்னாடி.

said...

வாங்க நசரேயன்.

உண்மையான யானைதாங்க அது. ஏதோ சாபத்தினால் 'கல்'லா மாறிடுச்சு!!!

said...

வாங்க குடுகுடுப்பை.

நல்ல காலம் பிறக்கட்டும்.

said...

வாங்க சிஜி.

இந்தக் கிழக்கும் மேற்கும் எல்லாம் உழக்குலே தேடுனமாதிரியா?

ஸ்வாமிமலையில் திம்மக்குடி என்ற இடத்தில் இருக்கு.

ஆனந்தம் ன்னு சொன்னாவே நிறையப்பேருக்குத் தெரிஞ்சுருக்கும்.

யானையும் சிங்கமும் படம்கூட இருக்கு. ஆனா 'குடும்பப்படம்' போடலைன்னு 'அண்ணன் நீங்க' கோச்சுக்கப் போறீங்கன்னுதான்.....

said...

நசரேயன்,

நம்ம வகுப்பிலே இந்த அடி உதை எல்லாம் இல்லைங்க. கண்ணை விட்டுட்டுத் தோலை மட்டும் உரிச்சுக்கலாமாம்.

said...

வாங்க குப்பன் யாஹூ.

நீங்களும் தஞ்சை மாவட்டமா?

வருகைக்கு நன்றிங்க

said...

வாங்க வருண்.

டீச்சரின் பலத்தை மாணவர்களுக்குக் குறிப்பால் உணர்த்த..... வேற வழி இல்லை:-))))

said...

வாங்க பெருசு.

கும்மோணத்துலே இருக்கும்போது கோவை அன்னபூரணா எதுக்கு?

அதது வரும்போது அப்படியப்படியே ஏத்துக்கணும் என்றதுதான் 'இப்போதைய'
வாழ்க்கைக் கல்வி.

வகுப்பு வேற யாருக்கும் இல்லை...உங்களுக்குத்தான்:-))))

said...

வாங்க கோபி.

ஒருமுறை அங்கே போய்ப் பார்த்துட்டு வாங்க. ஆயுசுக்கும் மறக்கமாட்டீங்க!
(குறைஞ்சபட்சம் 'பில்'லையாவது)

ச்சும்மா:-))))

said...

வாங்க வல்லி.

இந்தப் பயணத்தில் மட்டும் கிட்டத்தட்ட 6000 படங்கள் எடுத்துருக்கோம். ஆனா... தேறுவது ஒரு ஆயிரம் இருந்தால் கூடுதல்:-)

said...

வாங்க கெக்கே பிக்குணி.

ரிஸார்ட் பெயர் 'குறிச் சொற்களில்' இருக்கேப்பா.
கவனிக்கலையா?

பிள்ளைகளுக்கு 'அந்தக் காலம்' காமிக்க அருமையான இடம்!

said...

வாங்க சீனா.

நம்ம தமிழ்நாட்டுலேயே இன்னும் பார்க்காதது எக்கச்சக்கம். அதுதான் இனிமேல் சந்தர்ப்பம் கிடைக்கும்போது கொஞ்சம் கொஞ்சமாப் பார்க்கலாமுன்னு ஒரு முடிவு.

உள்ளூர் என்பதால் கவனிக்காம அசட்டையாக் கோட்டை விட்டுட்டோம்.

said...

வாங்க உஷா.

இதுக்கெல்லாம் பயந்தால் ஆகுமா?

அந்த டாக்சி விஷயத்துலேதான் நம்மகிட்டே ஆட்டையைப் போட்டுட்டாங்க.

அப்புறம் நாமும் முழிச்சுக்கிட்டொம்.:-)))

said...

வாங்க ஸ்ரீவத்ஸ்.

காலம் போற போக்கில் இனி கிராமத்து வீடு எல்லாம் கனவுதான்.

கொஞ்சமாவது அந்த ஆசையை நிறைவேத்திக்கலாமுன்னுதான் இங்கே நியூஸியில் நம்ம வீட்டுலே ஊஞ்சல் போட்டுருக்கோம்.

ஆனாலும் முற்றமும், மாடமுமா இருக்கும் அழகே தனி....ஹூம்

ஆமாம். அது என்ன ஜிஎம் டயட்.
எடை குறையுதா? வெற்றின்னா அதைப் பத்தி இன்னும் கொஞ்சம் சொல்லுங்க.

said...

வாங்க கயலு.

இதென்ன இப்படிச் சொல்லிட்டீங்க. உங்க ஊர்லே தங்குன இடத்துலே இதைப்போல 4 மடங்கு கறந்துட்டாங்களேப்பா (-:

said...

வாங்க வெண்பூ.

வகுப்புலே 'சரியாப் படிக்கறதில்லை'.

'அங்கவஸ்த்திரத்தில் ஜரிகையாட்டம் ஓரமா' அந்தக் குறிச்சொற்களில் இருக்கு பாருங்க:-)))

said...

வாங்க கோமா.

'இடுக்கண் வருங்கால் நகுக'வைக் கெட்டியாப் புடிச்சுக்கிட்டேன்:-)

ரசிப்புக்கு நன்றிப்பா.

said...

வாங்க குடுகுடுப்பை.

ஓட்டல் காஃபியில் சிக்கரி கலக்குறாங்க. ஒரு 10 சதமானம் சரியான கலவைன்னு நரசூஸ் காஃபி கடைக்காரரே சொன்னார்.

இப்போ 'அலைவ்'ன்னு ஒரு காஃபிப் பொடி வந்துருக்கு. 30 % சிக்கரி கலந்தது. எப்படி இருக்குமுன்னு தெரியலை. வாங்கியாந்துருக்கேன். பார்க்கலாம்.

said...

ம்ம்ம் போன பதிவ விட கொஞ்சம் வேகம் கம்மி பண்ணிட்டீங்க.

பன்னெண்டு கிலோமீட்டருக்கு 1200ஆஆஆ

கஷ்டம் தான்

said...

ரொம்ப லேட்

ஆதாலால்

உள்ளே டீச்சர்

said...

என்னது? ஜோடுதலையா? எங்கூர்ல போகானீன்னு சொல்வோம்.

படிக்கிறப்பவே காப்பி குடிக்கனும்னு ஆசையாயிருக்கு. காப்புச்சீனோ காப்பூச்சீனோவாக் குடிச்சி நாக்கு நமத்துப் போச்சு. நல்ல காப்பி குடிக்கனும்.

டி.ஆர்.ராஜகுமாரிதானே அவங்க. சின்ன வயசுல பாண்டி பஜார்ல தியேட்டர் இருந்துச்சு.. Rajakumariல இருக்குற Raj இருக்காது. அக்குமாரி அக்குமாரின்னு சொன்ன நெனைவு இருக்கு.

ஆனை அடக்கிய அருந்தமிழ் டீச்சர் என்று ஒங்களுக்குப் பட்டம் குடுக்குறோம்.

அத்தோட... ஆனைத் தந்த கலைச்செல்விங்குற பட்டத்தையும் குடுக்குறோம். அந்தத் தந்தத்த எவ்வளவுக்கு வித்தீங்க?

said...

வாங்க நான் ஆதவன்.

ரோடு இருக்கும் நிலையைப் பொறுத்துத்தானே வேகம்?

அதேதான் பதிவுக்கும்:-)))

said...

வாங்க நட்புடன் ஜமால்.

உள்ளேன்னு சொல்லிட்டுப் பாடம் படிக்காமல் எஸ்கேப்பா?

பரிட்சைக்கு வரும் பகுதி. ஆமா


சொல்லிட்டேன்.:-)))

said...

வாங்க ராகவன்.

போகணியா? அப்படியும் கேள்விப்பட்ட ஞாபகம் வருது. டேங்கீஸ்

ராஜகுமாரி தியேட்டர் எல்லாம் இப்பப் போயேபோச்(-:

யானை எங்கேப்பா அடக்க விட்டது?

தந்தம் வேணாமுன்னு சொல்லிட்டேன்( இங்கே கொண்டுவரமுடியாது)

said...

//
1200 ரூபாய். ஆறாரும் பன்னெண்டு கிலோ மீட்டருக்கு!!
//
ஆறும் ஆறுமா?! ஐயோ துளசி டீச்சர் ரிடர்ன் போகுறதுக்கு வேற அந்த டாக்ஸிக்கு காசு குடுத்தீங்களா? ஸ்டேர்லிங் ரிசார்ட் அரேன்ஜ் பண்ணின டாக்ஸியா?.

சரி உள்ளூர்காரர்களிடம் வாங்கும் வாடகையை சொல்லி உங்கள கஷ்டப்படுத்த விரும்பல. ஆனால் இது ரொம்ப அதிகம்னு டூர் முடிவதற்குள் உங்களுக்கே தெரிந்துவிடும்

said...

என்னய மாதிரியே சில பேத்துக்கு ஒரு விசயம் படிச்சி முடிச்சதும் மத்ததெல்லாம் மனசில ஏறலைன்னு நினைக்கிறேன். ஆனாலும் பதில் சொல்லாமலே போனா எப்படி?

//1200 ரூபாய். ஆறாரும் பன்னெண்டு கிலோ மீட்டருக்கு!!//
அப்புறம் எம்புட்டு கொடுத்து அனுப்பிச்சீங்க... அம்புட்டுமா..? ( ஒரு டாக்சி அங்க ஓட்ட ஆரம்பிக்கலாம்ன்னு ஒரு நினப்பு வருது) உங்க பதில்லதான் இருக்கு என் முடிவு..

said...

வாங்க வாழவந்தான்.

எனக்கே இவுங்க 'ஆட்டையைப் போட்டுட்டாங்க'ன்னு தெரிஞ்சது. முதலில் எங்க திட்டப்படி, வைகையில் போய் திருச்சியில் இறங்கிக்கணும். அங்கிருந்து ரிஸார்ட் டாக்ஸி வந்து கூட்டிப்போகும் என்பதுதான். அதுக்கு ஏஸி வண்டிக்கு 2000 சொல்லி இருந்தாங்க.

ரயில் டிக்கெட் கிடைக்கலைன்னுதான் பஸ் எடுத்தோம்.

நம்ம மக்களிடம் 'நேர்மை' எதிர்பார்த்தது சிலசமயம் தவறோன்னு ஆகிருது(-:

said...

வாங்க தருமி.

ரிஸார்ட்டுக்கு மட்டும் டாக்ஸி ஓட்டுனாத்தான் உங்களுக்கு லாபம்.

பேசாம இங்கே வந்துருங்க. அஞ்சு கிலோமீட்டர்க்கு 40 டாலர் (ஒன்வே) கிடைக்கும்:-))))

said...

//
ரிஸார்ட்டுக்கு மட்டும் டாக்ஸி ஓட்டுனாத்தான் உங்களுக்கு லாபம்.
//
அந்த டிரைவருக்கு ரிசார்ட் நிர்வாகம் எவ்ளோ குடுத்தாங்களோ? அங்கயும் ஆட்டைய போட்டிருந்தா?

@ தருமி
சார் எங்க ஊருக்கு வந்து டாக்சி ஓட்டுறதுக்கு ஆட்டோ ஓட்டலாம்(ஆனால் உள்ளூர்காரனுக்கே மங்களம் பாடும் அளவு திறமை தேவை)

said...

வாங்க வாழவந்தான்.

//
அந்த டிரைவருக்கு ரிசார்ட் நிர்வாகம் எவ்ளோ குடுத்தாங்களோ? அங்கயும் ஆட்டைய போட்டிருந்தா?//

போட்டுட்டாங்கன்னுதான் நினைக்கிறேன்!

said...

அதிகமா ஆட்டைய போட்டிருக்கமாட்டாங்க. அந்த டிரைவருக்கு அதிகபட்சம் 500-600(குடுத்திருப்பாங்க)

said...

வாழவந்தான்,

போயிட்டுப்போகுது.

அதைவச்சு வீடா கட்டிக்கமுடியும்?